விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
ஐரோப்பியன் கோல்டு ஷூவை 4-வது முறையாக கைப்பற்றினார் மெஸ்சி ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளில் விளையாடிய வீரர்களில் அதிக கோல்கள் அடித்து மெஸ்சி 4-வது முறையாக கோல்டன் ஷூவை பெற்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கிளப்புகளுக்கு இடையே ‘லா லிகா’ தொடர் நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கிளப்புகளுக்கிடையே ‘லீக் 1’ நடைபெறுகிறது. இதேபோன்று இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கு ‘ஐரோப்பியன் கோல்டன் ஷூ’ வழங…
-
- 0 replies
- 251 views
-
-
விமர்சனங்களை கணக்கில் எடுக்காதீர்கள்: அரவிந்த ஆலோசனை அண்மைக்காலமாகத் தோல்விகளைச் சந்தித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், சமூக ஊடக இணையத்தளங்களிலும் ஏனைய இணையத்தளங்களிலும் வெளிவரும் கேலிகளைப் பொருட்படுத்தக் கூடாது என, அணியின் வழிகாட்டியும் முன்னாள் தலைவருமான அரவிந்த டி சில்வா, அவ்வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. முதலாவது போட்டியில், 304 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதான கலந்துரையாடல் ஒன்று, இலங்கை கிரிக்கெட் சபையில், ந…
-
- 1 reply
- 404 views
-
-
பீலேவை விஞ்சிய ரொனால்டோ! சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் தேசிய அணிக்காக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் பீலேவை முந்தினார் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரஷ்யாவில் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடக்க உள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல், ஃபரோ தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி, போர்ச்சுகல் நாட்டின் போர்டோவில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல்கள் அடித்து உதவ, 5-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல், அந்தக் குட்டித் தீவை வீழ்த்தியது. ரொனால்டோ ஹ…
-
- 0 replies
- 245 views
-
-
ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உறுதிசெய்தது நீதிமன்றம் வாழ்நாள் போட்டித் தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்த மனு மீதான விசாரணையில் தோல்வியைத் தழுவிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது ஆற்றாமையை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். ‘இந்தியன் ப்ரீமியர் லீக்’ இ20 போட்டித் தொடரின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைத்து வித சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் சபை வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் மேன்முறையீடு செய்ததையடுத்து, அது குறித்த வழக்கு கேரள நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீசாந்த் ம…
-
- 0 replies
- 298 views
-
-
நான் ஒன்றும் ரோபோ இல்லை, எனக்கும் ஓய்வு வேண்டும் - விராட் கோலி வீரர்களுக்கு ஓய்வு அளிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி நான் ஒன்றும் ரோபோ இல்லை, எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என பதிலளித்துள்ளார். கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டு மட்டும் 7 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 10 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய பிரிமீயர் லீக்கின் 10-வது சீசனிலும் 10 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தாண்டு அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் வி…
-
- 5 replies
- 643 views
-
-
வியக்க வைக்கும் விராட் கோலி! 'கேப்டன் கூல்' என்றழைக்கப்பட்ட எம்.எஸ்.தோனிக்கு நேர் எதிரானவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. ஆட்டத்தின்போது பரபரப்பான நிமிடங்களில் பதற்றமான உணர்ச்சியை இவர் வெளிப்படுத்துவார். சில சமயங்களில் கோபமும் கொள்வார். இதனால், ரசிகர்களில் சிலருக்கு இவர் மீது வருத்தம் உண்டு. ஆனாலும், தனது அபார ஆட்டத் திறனால் அணியின் ஸ்கோரை சரசரவென இவர் உயர்த்திவிடுவதாலும், வெற்றிக்காக கடும் உழைப்பை செலுத்தி வருவதாலும் கோலி மீது வருத்தம் கொள்ளும் ரசிகர்களும் அவரைப் பாராட்டி பின்தொடர்ந்து வருபவர்களாக மாறிவிடுகின்றனர். அப்படி, கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையிலும்…
-
- 0 replies
- 592 views
-
-
தோனியுடன் மிஸ்பாவை ஒப்பிடலாமா: சோயப் மாலிக் கோபம் ஆகஸ்ட் 23, 2014. கராச்சி: ‘‘ஐ.சி.சி., யின் பல்வேறு தொடர்களில் கோப்பை வென்று தந்தவர் தோனி. இவரை பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாவுடன் ஒப்பிடுவது தவறு,’’ என, சோயப் மாலிக் தெரிவித்தார். இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. அதேபோல, இலங்கை சென்ற பாகிஸ்தான் அணி 0–2 என, டெஸ்ட் தொடரை கோட்டை விட்டது. இதனால், இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் தோனி, மிஸ்பா உல் ஹக் பதவி விலக வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணி வீரரும், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் கணவருமான சோயப் மாலிக் கூறியது: ஒவ்வொரு கேப்டன்களுக்கும் மோசமான தொடர்கள் அமைவது உண்டு. இந்த தோல்விகளை ஒப்பிட்டு பார்த்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்து அணியின் புதிய தலைவர் ரூனி 2014-08-29 10:22:49 இங்கிலாந்தின் புதிய அணித் தலைவராக மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் முன்கள வீரர் வெய்ன் ரூனியை பயிற்றுநர் ரோய் ஹொஜ்சன் நியமித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளின் முதலாம் சுற்றுடன் இங்கிலாந்து அணி வெளியேற்றப்பட்ட பின்னர் அணித் தலைவர் ஸ்டீவன் ஜெரார்ட் ஓய்வு பெற்றதை அடுத்து தலைவர் பதவியை 28 வயதான ரூனி பொறுப்பேற்றுள்ளார். 95 சர்வதேச போட்டிகளில் 40 கோல்களைப் போட்டுள்ள வெய்ன் ரூனியை மென்செஸ்டர் யுனைட்டட் அணியின் தலைவராக அதன் புதிய பயிற்றுநர் லூயி வன் கால் இம் மாத முற்பகுதியில் நியமித்திருந்தார். இங்கிலாந்துக்கும் நோர்வேக்கும் இடையில் செப்டெம்பர் 3ஆம் திகதி சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி வெம்ப்ளி விளையாட்டர…
-
- 0 replies
- 397 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயீட் அஜ்மல் இடைநிறுத்தம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னிலை சுழற்பந்துவீச்சாளரான சயீட் அஜ்மல் சர்வதேச போட்டிகளிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) இன்று அறிவித்துள்ளது. சயீட் அஜ்மலின் பந்துவீச்சுப் பாணி விதிகளுக்கு முரணானது என கண்டறியப்பட்டதையடுத்து அவர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6772#sthash.SXUY3STC.dpuf
-
- 4 replies
- 643 views
-
-
மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது பிஎஸ்ஜி லீக்-1 கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து பிஎஸ்ஜி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. #PSG இங்கிலாந்தில் பிரீமியர் லீக், ஸ்பெயினில் லா லிகா தொடர் நடைபெறுவதுபோல் பிரான்சில் லீக்-1 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. 2017-18 சீசனில் நடப்பு சாம்பியனான மோனாகோவிற்கும், தலைசிறந்த அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. நேற்றிரவு இந்த இரண்டு அணிகளும் பலப்ரீட்சை …
-
- 0 replies
- 339 views
-
-
இந்தியா Vs ஆஸ்திரேலியா: இந்தியாவின் டெஸ்ட் தொடர் வரலாற்றை மாற்றி எழுதுமா ஆஸ்திரேலியா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது, ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை வெல்வதைக் காட்டிலும் பெரிய விஷயமாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. ஐசிசியின் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது ஆனால் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா 2012ஆம் ஆண…
-
- 93 replies
- 4.4k views
- 1 follower
-
-
இடது கை வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சரில் அடிபட்டு மயக்கமடைந்தார். | படம்: ஏ.எஃப்.பி. மயங்கிய நிலையில் மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லபப்டும் பிலிப் ஹியூஸ். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆடிய பில் ஹியூஸ், பவுன்சர் ஒன்று தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் பின்னால் இடம்பெறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக 63 ரன்களில் ஆடி வந்த பில் ஹியூஸ், நியூசவுத் வேல்ஸ் பவுலர் ஷான் அபோட் வீசிய பயங்கர பவுன்சர், இடது காதையொட்டி…
-
- 33 replies
- 2.5k views
-
-
உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க 2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “2019 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நான் விளையாடுவேன். அதுவே எனது இறுதி உலக கிண்ணமாகயிருக்கும். எனின…
-
- 0 replies
- 320 views
-
-
4 ஆவது போட்டியிலும் வெற்றி : இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்தியது இங்கிலாந்து! இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி18 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று (சனிக்கிழமை) அரம்பமானது. கண்டி, பல்லேகல மைதானத்தில் அரம்பமான இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தலைமை தங்கியிருந்தனர். போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன் படி இலங்கை அணி முதலில் களமிறங…
-
- 0 replies
- 296 views
-
-
மத்தியூஸ், மென்டிஸின் சதங்களோடு போராடுகிறது இலங்கை Editorial / 2018 டிசெம்பர் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:49 Comments - 0 நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய நான்காவது நாள் முடிவில், முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், குசல் மென்டிஸின் சதங்களோடு இலங்கை போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இலங்கை: 282/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 83, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 80, திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 6/68, நீல் வக்னர் 2/75, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, ட்ரெண்ட் போல்ட் 1/83…
-
- 0 replies
- 773 views
-
-
மைக்கேல் கிளார்க் 66666... அது என்ன? டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 66 ஆயிரத்து 666வது விக்கெட்டாக ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் அவுட் ஆகியுள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடருக்கான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 566 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், 7 ரன்கள் எடுத்த நிலையில் வுட் பந்துவீச்சில் பல்லான்சிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 66 ஆயிரத்து 666வது விக்கெட்டாக மைக்கேல் கிளார்க் அவுட் ஆனதுதான் சிறப்பம்சம். இந்த போட்டியில் 2வது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்களை இழந்து தடுமாறி வருகிறது. http://…
-
- 1 reply
- 316 views
-
-
யூரோ 2016க்கு தகுதி பெற்றது இத்தாலி அஸார்பைஜானுக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி அணி, குழு எச் இலிருந்து யூரோ 2016க்கு நேரடியாக தானாக தகுதிபெறும் ஒரு அணியாக மாறியுள்ளது. 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற யூரோ கிண்ணத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற இத்தாலி அணி, குழுநிலைப்போட்டிகளில் ஒரு தோல்வியையும் தளுவாது, தனது ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றியும், மூன்று போட்டிகளில் சமநிலையாகவும் முடித்துக் கொண்டது. இந்நிலையில் இத்தாலி அணி 21 புள்ளிகளையும், நோர்வே 19 புள்ளிகளையும், குரோஷியா 14 புள்ளியகளையும் பெற்றிருந்தன. - See more at: http://www.tamilmirror.lk/156250#sthash.GpgsYaql.dpuf
-
- 0 replies
- 390 views
-
-
மூன்று போட்டிகளையும் முழுமையாக கைப்பற்றிய இலங்கை ; வெறுங் கையுடன் வீடு திரும்பும் பங்களாதேஷ் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 122 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியிலும் வெற்றியை தவறவிட்டது பங்களாதேஷ். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஓருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.இந்த தொடரின் மூன்றாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, வீரர்களின் சிறப்…
-
- 0 replies
- 488 views
-
-
சிட்டகாங் டெஸ்ட்: ஸ்மித் இரட்டை சதம் சிட்டகாங் நகரில் நடந்து வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில், தென்ஆப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 405 ரன் குவித்துள்ளது. கிரேம் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மித், நீல் மெக்கன்ஸி களமிறங்கினர். துவக்க முதலே இருவரும் சிறப்பாக விளையாடியதால், பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். குறிப்பாக ஸ்மித்தின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. 127 பந்துகளை மட்டுமே சந்தித்து தனது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ம…
-
- 0 replies
- 958 views
-
-
போட்டியின்போது காயமடைந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மரணம்! போட்டியின்போது காயமடைந்த அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரரான ஜான் கூனி சிகிச்சை பலனின்றி தனது 28 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த 1-ம் திகதி நடைபெற்ற பெதர்வெயிட் பட்டத்திற்கான போட்டியின் 9-வது சுற்றில் சக போட்டியாளர் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜான் கூனி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில் அவருக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வார காலம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குத்துச்சண்டை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://athav…
-
-
- 2 replies
- 331 views
- 1 follower
-
-
இலங்கை கால்பந்து சம்மேளன துணைத் தலைவர் மரணம் By Mohamed Azarudeen - இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) துணைத் தலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த NT. பாரூக் அவர்கள் தீடிரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக திங்கட்கிழமை (18) காலை தனது 60ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். தனது ஆரம்ப கட்ட கால்பந்தை அக்கரைப்பற்று இளைஞர் விளையாட்டுக் கழகத்துடன் ஆரம்பித்த பாரூக், ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி, தேசிய மட்டத்திலும் முன்னணி கோல் காப்பாளராக திகழ்ந்தார். இன்னும் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் கால்பந்து போட்டிகளுக்கான தேசிய நடுவராகவும் இவர் கட…
-
- 0 replies
- 531 views
-
-
வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர் 02 Dec, 2025 | 03:11 PM (நெவில் அன்தனி) சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் உலக சம்பியன்களான மொண்டோ டுப்லான்டிஸ் மற்றும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் ஆகிய இருவரும் இந்த வருடம் நிலைநாட்டிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் இருவரையும் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) தெரிவுசெய்து உயர் விருதுகளை வழங்கியது. மொனோக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விhழவின்போது இந்த உயர் விருதுகளுடன் இன்னும் சில விருதுகள் வழங்கப்பட்டன. சுவடு, மைதானம், மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலா…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் அணி உதவிப் பயிற்றுநர்களாக முஷ்தாக் அஹ்மத், அஸ்ஹர் மஹ்மூத் 2016-06-16 12:02:38 பாகிஸ்தானின் பந்துவீச்சைப் பலப்படுத்தும் வகையில் அணியின் உதவிப் பயிற்றுநராக முஷ்தாக் அஹ்மதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளரான முஷ்தாக் அஹ்மத் தற்போது தேசிய கிரிக்கெட் கல்வியத்தின் (அக்கடமி) தலைமைப் பயிற்றுநராக பதவி வகிக்கின்றார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கவனத்தில் கொண்டே இவர் உதவிப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 380 views
-
-
தடிப்பான துடுப்புகளுக்கு வருகிறது ஆப்பு கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் துடுப்புகளின் அளவை மட்டுப்படுத்துவதற்கான விதிகளை, கிரிக்கெட்டின் விதிகளில் ஏற்படுத்த வேண்டுமென, கிரிக்கெட் விதிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) உலக கிரிக்கெட் செயற்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கிரிக்கெட்டில் துடுப்பாட்டம், பந்துவீச்சை அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது எனத் தெரிவித்துள்ள அக்குழு, துடுப்புகளின் தடிப்பம் குறித்தும் அவற்றின் எடை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது. அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், எம்.சி.சி-இன் விதிகள் தொடர்பான இறுதி முடிவில் அதிகளவில் மதிக்கப்படும் சுயாதீனமான இந்தக் குழுவில், சர்வ…
-
- 0 replies
- 455 views
-
-
சோதனைக்கு மத்தியிலும் உலக சாதனை படைத்த M.S.டோனி சோதனைக்கு மத்தியிலும் உலக சாதனை படைத்த M.S.டோனி அமெரிக்காவின் கிரிக்கெடடை வளர்ப்பதன் நோக்கமாக கொண்டு புளோரிடாவில் இடம்பெற்றுவரும் இந்திய,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் டோனி ஓர் உலக சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் இளம் வீரர் லோகேஷ் ராஹுலின் அசத்தல் சதம் வீணாகிப்போக பரபரப்பான நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவை 1 ஓட்டத்தால் வெற்றிகொண்டது உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகள். நேற்றைய போட்டியில் இறுதி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவையான நிலையில்,இறுதி ஓவரை மிக துல்லியமாக வீசிய பிராவோ,இறுதி பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார், …
-
- 0 replies
- 829 views
-