விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
Published By: VISHNU 13 JUN, 2025 | 12:04 AM (நெவில் அன்தனி) தியகம, விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதலாம் நாளான வியாழக்கிழமை (12) 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய யாழ். வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். அத்துடன் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் வரலாற்றி; இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலயத்திற்கு முதல் தடவையாக பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. அதேவேளை, முதல் நாளன்று 3 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. கோலூன்றிப் பாய்தலில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி வீராங்கனை ஜெயரூபன் ரூபிக்கா 2.60 மீற்றர் உயரத்தை…
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
விந்தைமிகு தருணத்தில் உத்தியோகபூர்வ க்ளாஸ்கோ 2026 சின்னம் ஃபின்னி அறிமுகப்படுத்தப்பட்டது 24 JUL, 2025 | 05:00 PM (நெவில் அன்தனி) ஐக்கிய இராச்சியத்தின் க்ளோஸ்கோவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 23ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ ஃபின்னி சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2026 ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவின் 23ஆவது அத்தியாயம் க்ளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா என அழைக்கப்படுகிறது. இந்த விழா ஆரம்பமாவதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது விசேட அம்சமாகும். தூய்மை, அப்பாவித்தனம், ஆண்மை மற்றும் சக்தியைப் பிரதிபலிக்கும் பெருமைமிகு க்ளாஸ்வேஜியன் யுனிகோன் ஃபின்னி என அழைக்கப்படும் இந்த சின்னம், ஜூலை…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
என்னதான் நடக்குது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில்? “ஊருக்குள்ள சக்கரவர்த்தி, ஆனால் உண்மையில்ல மெழுகுவர்த்தி” – இந்தப் பாடல்தான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்களின் தற்போதைய ரிங் டோனாக இருக்கும். 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை, மகளிர் டி20 உலகக்கோப்பை, ஆண்கள் டி20 உலகக்கோப்பை என அனைத்தும் அவர்கள் வசம்தான். ஆனால் என்ன செய்ய...? உள்ளுக்குள்ள ஆயிரம் களேபரம். வீரர்களுக்கு ஊதியம் ஒழுங்காகத் தருவதில்லை என வீரர்கள் போர்க்கொடி தூக்க, வழக்கம் போல் மௌனம் சாதிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சங்கத்திற்கும் வீரர்களுக்கும் பிரச்னை நடப்பது இது முதல் முறை அல்ல. 2014 -ம் ஆண்டே ஊதியப் பிரச்னையில் உடன்பாடு ஏற…
-
- 0 replies
- 553 views
-
-
முத்தரப்புத் தொடராகின்றன டெஸ்ட் போட்டிகள்? சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன கொண்ட தொடரில் டெஸ்ட் போட்டிகள், முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடராக மாறுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொடர், ஒக்டோபரிலும் நவம்பரிலும் இடம்பெறவிருந்த நிலையிலேயே, இலங்கையும் சிம்பாப்வேயும் மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடும் முத்தரப்புத் தொடராக மாற்றப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் மூலமாகக் கிடைக்கும் வருமானம், போதுமானளவில் இருக்காது என்பதால், டெஸ்ட் தொடரை விளையாடும் எண்ணத்தை, சிம்பாப்…
-
- 0 replies
- 319 views
-
-
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இன்று ஆரம்பம் ஆடவர், மகளிர் சம்பியன்களுக்கு தலா 52 கோடி ரூபா 2016-08-29 09:50:51 சர்வதேச டென்னிஸ் அரங்கில் நொவாக் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்திவருவது சகலரும் அறிந்த விடயம். 2010 முதல் இவர்கள் இருவரும் தலா 11 மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் சம்பியன் பட்டங்களை தமதாக்கிக்கொண்டுள்ளனர். ஆனால், ஐக்கிய அமெரிக்க (யூ.எஸ்) பகிரங்க டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இருவரின தும் தேகாரோக்கியம், மனோநிலை, போட்டிக்கான தயார்நிலை ஆகிய விடயங்கள் தொடர்பில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. …
-
- 6 replies
- 667 views
-
-
மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்காலம் குறைப்பு. மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்காலம் குறைப்பு. ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த இரணடு வருட கால போட்டித் தடை 15 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஊக்கமருத்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டிற்காக மரியா ஷரபோவாவிற்கு இரணடு வருட கால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்கு எதிராக மரியா ஷரபோவா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டை அடுத்து அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமை அவர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் போட்டிகளில் பங்குப…
-
- 0 replies
- 290 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனுக்கு தங்கம் 32 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றார். இன்றைய தினத்தில் இரண்டு போட்டி சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன. கடந்த வியாழக்கிழமை கண்டி போகம்பரை மைதானத்தில் ஆரம்பமான விளையாட்டு விழாவின் 04 வது நாளான இன்று போட்டிகள் உரிய நேரத்திற்கு முன் நிறைவு செய்யப்பட்டிருந்ததுடன் போட்டிக் கால அட்டவணையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன . யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றா…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஒரு காலை இழந்தும் ஃபீல்டிங் செய்த கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மாற்றுத் திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த லியம் தாமஸ் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அவரது செயற்கை கால் தனியாக விழுந்துவிட்டது. அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ச்சியாக பந்தை தடுத்து கீப்பரிடம் த்ரோ செய்தார். செயற்கை கால் இழந்தாலும், விளையாட்டில் முழு ஈடுபாடு காண்பித்த அவரது செயல் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. இது பற்றி முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் பால் காலிங்வுட்டும் அவரது ட்விட்டர் பக்கத்தில், பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். http://www.vikatan…
-
- 0 replies
- 436 views
-
-
ஐபிஎல் போட்டிகளில் ஆடி காயமடைய வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை ஆஸ்திரேலிய வீரர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார். 2016 ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் காயமடைந்ததை அடுத்து மைக்கேல் கிளார்க் கூறும்போது, “வீரர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது ஐபிஎல். இதனால் ஓய்வு இன்றி கடுமையான களைப்பு ஏற்படுகிறது. சாதகமான அம்சம் பணம் வருகிறது என்பதுதான். ஆனால் அதற்கு கொடுக்கும் விலை அதிகமாக உள்ளது. களைப்பு, ஓய்வின்மை. நமக்கு சிறந்த…
-
- 0 replies
- 259 views
-
-
ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இரு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. இன்று மூன்றாவது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். இன்று முதன்முதலாக இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் களமிறங்கியிருக்கும் நடராஜனுக்கு பல விக்கட்டுக்களை வீழ்த்தி மேன்மேலும் புகழ் சேர வேண்டுகிறேன். BATSMEN R B 4s 6s SR TOTAL (5.4 Ov, RR: 4.58) 26/0 Yet to bat: V Kohli (c), SS Iyer, KL Rahul †, HH Pandya, RA Jadeja, SN Thakur, Kuldeep Yadav, JJ Bumrah, T Natarajan S Dhawan …
-
- 111 replies
- 10k views
- 2 followers
-
-
கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்தார் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார். கெளரவத்தை நிராகரித்தார் தற்போது இந்த கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதை விட , தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். பெங்களூருவில் வளர்ந்த ராகுல் டிராவிட், தனது கல்லூரி படிப்பை இந்நகரத்தில்தான் நிறைவு செய்தார். இந்நிலையில், வரும் ஐனவரி 27-ஆம் தேதியன்று நடக்கவுள்ள தனது 52-ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், ரா…
-
- 0 replies
- 382 views
-
-
சாதனை நிலைநாட்டிய ஜொய்சனின் குதிக்காலில் ஐந்து தையல்கள் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனை நிலைநாட்டிய அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன், குதிக்காலில் ஏற்பட்ட காயத்திற்காக ஐந்து தையல்கள் போட நேர்ந்தது. இப் போட்டியில் 4.61 மீற்றர் உயரம் தாவி போட்டிக்கான புதிய சாதனையை நிலைநாட்டிய ஜொய்சன், 4.76 மீற்றர் உயரத்தைத் தாவ முயற்சித்தபோது மெத்தையில் சிக்குண்டு குதிக்காலில் காயத்திற்குள்ளானதாக அவரது பயிற்றுநர் பாகீஸ்வரன் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 438 views
-
-
பெண்கள் கிரிக்கெட்: இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனை பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வானி பெற்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் நான்கு மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி 7.3 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம…
-
- 1 reply
- 700 views
-
-
கோஹ்லி ஏன் சொதப்புகிறார்? சார்லஸ் சாம்பியன்ஸ் டிராஃபி தோல்வி, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலகல், கோஹ்லியின் கேப்டன்ஸி மீதான நம்பிக்கையின்மை என மீண்டும் சர்ச்சைகளுக்குள் வந்து விழுந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. பயிற்சியாளரான ஒரே ஆண்டில் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் அனில் கும்ப்ளே. ‘`என்னுடைய ‘ஸ்டைலில்’, நான் பயிற்சியாளராகத் தொடர்வதில் கேப்டனுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பதாக பிசிசிஐ என்னிடம் சொல்லி யிருக்கிறது. முரண்பாடுகளைக் களைய பிசிசிஐ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டநிலையில் நான் பதவி விலகுகிறேன்’’ என அறிவித்திருக்கிறார் கும்ப்ளே. இதே கும்ப்ளே கடந்த ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்…
-
- 1 reply
- 552 views
-
-
பிரிமா கிண்ணத்திற்கான மோதலுக்கு வடக்கு, கிழக்கு அணிகளும் தயார் பிரிமா கிண்ணத்திற்கான மோதலுக்கு வடக்கு, கிழக்கு அணிகளும் தயார் பாடசாலை மட்ட கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தேசிய மட்டத்திற்கு சிறந்த வீரர்களை உருவாக்கும் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பூரண ஒத்துழைப்புடன் 11ஆவது தடவையாக நடைபெறவுள்ள 15 வயதிற்குட்பட்ட பிரிமா கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மாகாண மட்டப் போட்டிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாடளாவிய …
-
- 0 replies
- 334 views
-
-
கிரிக்கெட் சாதனைகள் தெரியும்... வீரர்களுக்கு நடந்த சோதனைகள் தெரியுமா? #FunnyWickets கிரிக்கெட்... வியர்க்க விறுவிறுக்க கடைசிப் பந்து வரை போராடி வெற்றிபெற்ற அனுபவங்கள் எல்லா அணிகளுக்கும் இருக்கும். அதேபோல் எல்லா அணிகளிலுமே `அடப் பாவத்த' என்ற ரகத்தில் சில விக்கெட்டுகளும் விழுந்திருக்கும். அவற்றைப் பற்றிய ஓர் அலசல்! பாகிஸ்தானின் மிக முக்கியமான வீரர் இன்சமாமுக்கும் இப்படியொரு நிலை இருமுறை ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தொடரின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2006-ம் ஆண்டு நடந்தது. `களமிறங்கிக் கலக்கலாம்!' என்ற எண்ணத்தில், 19 ரன்களைக் கடந்துவிடுவார் இன்சமாம். அந்த நேரத்தில் `ரவுண்டாக 20 ஆக்கிவிடல…
-
- 0 replies
- 915 views
-
-
கோப்பை வெல்ல 10 பாயின்ட் தியரி..! கோலி படைக்கு வாழ்த்துகள் #IndVsNz கிரிக்கெட்டை நன்கு கவனித்து வரும் கடைக்கோடி ரசிகன் முதல், கிரிக்கெட்டையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் நிபுணர்கள் வரை அனைவரிடத்திலும் இருக்கும் ஒரே கேள்வி, "தற்போதுள்ள அணியை வைத்து, 2019-ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையை, கோலி தலைமையிலான இந்திய அணியால் வென்றுவிட முடியுமா?" இரண்டு வருடங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையின், அரையிறுதியில், தொடரை நடத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்று, நாடு திரும்பியது தோனி தலைமையிலான இந்திய அணி . அதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிகளிலும் (முத்தரப்பு தொடர்) இந்தியா, ஃபைனலுக்குத் தகுதி பெறவில்லை. நல்ல ஓப்பனர்கள், அனுபவ மிடில் ஆர்டர் பே…
-
- 0 replies
- 469 views
-
-
’தோனிக்கும் எனக்கும் இடையே பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுகிறார்கள்’ - மனம் திறந்த கோலி தோனிக்கும் தனக்கும் இடையில் பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுவதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் தோனி இடையிலான உறவுகுறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பாக கேப்டன் கோலி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ’பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற வெப் சீரிஸில் இதுகுறித்துப் பேசியுள்ள கோலி, ‘எனக்கும் தோனிக்கும் இடையில் பிரச்னை இருப்பதாகப் பலரும் கதைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அதுபோன்ற கதைகளை நானோ, தோனியோ படிப்பதில்லை என்பதுதான். எங்கள் இருவரையும் …
-
- 0 replies
- 405 views
-
-
17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணம் 17 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணமடைந்தார். அவருக்கு வயது 49. செக்குடியரசு நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா. முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான இவர், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 49 வயதான இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பெண்கள் டென்னிஸ் அசோசியேசன் செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டையர் பிரிவில் கொடிகட்டிப் பற…
-
- 0 replies
- 434 views
-
-
ஆசிய கோப்பை: கிரிக்கெட்டை விட இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் போட்டி அப்துல் ரஷீத் ஷக்கூர் பிபிசி செய்தியாளர், கராச்சி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் நடந்து வருகின்றன. சனத் ஜெயசூர்யாவின் ஆக்ரோஷமான பேட்டிங், முரளிதரன் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரின் மாயாஜால பந்துவீச்சு மற்றும் அனைத்திற்கும் மேலாக உலகையே மெய்சிலிர்க்க வைக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரபரப்பான பந்தயம். கிரிக்கெட்டின் இந்த இரண்டு பாரம்பரிய போட்டியாளர்களும் இந்த மா…
-
- 3 replies
- 642 views
- 1 follower
-
-
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் 7 ஆண்டு சிறைத்தண்டனை: நியூசிலாந்தில் புதிய சட்ட மசோதா அறிமுகம் வெலிங்டன், ஜூலை 31- நியூசிலாந்தில் விளையாட்டு வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. மேட்ச் பிக்சிங் மசோதா பாராளுமன்றத்தில் இன்று அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக முன்னதாக இந்த புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. ‘மேட்ச் பிக்சிங் சர்வதேச அளவில் வளர்…
-
- 0 replies
- 372 views
-
-
வலைப்பயிற்சியில் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் சாதித்த சச்சின் – ராகுல் புகழாரம்! 2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொடர் முழுதும் வலைப்பயிற்சியில் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல் சச்சின் டெண்டுல்கர் சாதித்துக் காட்டினார் என்று ராகுல் திராவிட் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்தது இன்று வரை உலக சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. பொதுவாக சச்சின் என்றாலே பயிற்சி மேலும் பயிற்சி மேன்மேலும் பயிற்சி என்பதுதான் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் திராவிட் கூறியிருப்பது உண்மையில் ஒரு ஆச்சரியமான தகவலே. “அவரது தயாரிப்பு அவ்வப்போது மாறுபடும். 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொட…
-
- 0 replies
- 554 views
-
-
அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர்: ஸ்மித்தை எச்சரித்த மைக்கேல் கிளார்க் சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் மைக்கேல் கிளார்க் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் ஆடி வந்த போது, பேட்ஸ்மென் அசார் அலியுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஏதோ உரையாடியுள்ளார். அதனைத் தவறாகப் புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஸ்மித்தை அழைத்து, ‘அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர். களத்தில் நட்பு தேவையில்லை’ என்று எச்சரித்ததாக ஆஸ்திரேலிய ஊடகச் செய்தி ஒன்று கூறியுள்ளது. கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது செய்கையை தவறாகப் புரிந்து கொண்டார் என்று ஸ்மித் பெர்த் நகரில் செ…
-
- 0 replies
- 451 views
-
-
-
- 0 replies
- 395 views
-
-
பேட்டிங் தடுமாற்றங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காவிட்டால் அயல்நாடுகளில் நாம் தொடரை ஒரு போதும் வெல்ல முடியாது: ரவிசாஸ்திரியை விளாசிய கங்குலி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்து தோல்வி அடைந்ததற்கு தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் த…
-
- 4 replies
- 514 views
-