விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
மலிங்கவும் சர்வதேச கிரிக்கெட் பயணமும் ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த டி-20 பந்து வீச்சாளராக கருதப்படும் லசித் மலிங்க, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லசித் மலிங்க தனது யூடியூப் அலைவரிசை மூலமாக இந்த அறிவிப்பினை நேற்று அறிவித்தார். மலிங்கா இலங்கைக்காக 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி-20 போட்டிகளில் விளையாடி 546 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2004 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான மலிங்க, குறுகிய காலத்திலேயே இலங்கை அணியின் அனைத்து சர்வதேச சுற்றுப் பயணங்களிலும் இடம்பிடித்தார். புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மலிங்க, இலங்கை அணி…
-
- 0 replies
- 445 views
-
-
மலிங்கவை இலங்கை வருமாறு அழைப்பு இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட விஷேட மருத்துவக் குழுவின் முன் எதிர்வரும் புதன்கிழமை ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/5271
-
- 4 replies
- 661 views
-
-
மலிங்கவை முந்த ஆசை: பிரசாத் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மாறியிருக்கும் தம்மிக்க பிரசாத், டெஸ்ட் போட்டிகளில் இலங்கை சார்பாக இரண்டாவது அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக மாறுவதற்கு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் சமிந்த வாஸ், 355 விக்கெட்டுகளுடன் முதலாவது இடத்தையும் லசித் மலிங்க 101, டில்ஹார பெர்ணான்டோ 100, பிரமோதய விக்கிரமசிங்க 85, றுமேஷ் ரத்நாயக்க 73 விக்கெட்டுகளுடன் ஏனையோர் அடுத்த இடங்களிலும் காணப்படுகின்றனர். ஆறாவது இடத்தில், 70 விக்கெட்டுகளுடன் தம்மிக்க பிரசாத் காணப்படுகின்றார். தம்மிக்க பிரசாத்தின் ஒட்டுமொத்த சராசரி 37.51ஆகக் காணப்படுகின்ற போதிலும், கட…
-
- 0 replies
- 320 views
-
-
மலிங்கா வீட்டில் வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்கள் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து மலிங்கா அளித்த விருந்தில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தது. சொந்த மண்ணில் இலங்கையை புரட்டியெடுத்து வரும் இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் முறையே 9 விக்கெட், 3 விக்கெட், 6 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. …
-
- 0 replies
- 492 views
-
-
மலிங்காவிற்கு வைரஸ் காய்ச்சல்: ஜிம்பாப்வேக்கு எதிரான நாளைய போட்டியில் இருந்து விலகல் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது போட்டியில் இடம்பெறமாட்டார். ஜிம்பாப்வே அணி இலங்கையில சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதல் போட்டியில் 300-க்கும் அதிகமான ரன்னை சேஸிங் செய்து ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 51 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரே…
-
- 0 replies
- 213 views
-
-
மலிங்காவுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓராண்டு தடை; ஒப்பந்தத்தை மீறியதால் நடவடிக்கை படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த தண்டனை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருமானத்திலிருந்து 50 சதவீதத்தை அவர் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அறிவித்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, இரண்டு முறை லசித் மலிங்க, ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாகவும், ஊடகங்களுக்கு அதிகாரிகளின் அனுமதியி…
-
- 3 replies
- 534 views
-
-
மலேசிய பைக் பந்தயத்தில் விபத்தில் இத்தாலி வீரர் பலி. மலேசியாவில் நடந்த பைக் பந்தய விபத்தில் இத்தாலி வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏராளமான ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலேசியாவின் செபாங்க் நகரில் மலேசியன் கிராண்ட் பிரிக்ஸ் பைக் பந்தயம் நேற்று(ஞாயிறு) நடந்தது. உலகின் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்றனர். போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் அரங்கத்தில் கூடியிருந்தனர். 21 சுற்றுகள் கொண்ட இப்போட்டி விறுவிறுப்புடன் தொடங்கியது. வீரர்கள் அசுர வேகத்தில் பைக்கில் பறந்தனர். 2ஆவது சுற்றின் போது, இத்தாலி வீரரான ஹோண்டா அணியின் சைமன்செல்லி, யமஹா அணியின் காலின் எட்வர்ட்ஸ், வலன்டினோ ரோஸி ஆகியோரை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிர…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பக் கலை கடந்த சில ஆண்டுகளாக மலேசிய தமிழர்களிடம் பிரபலமடைந்து வருகிறது. இவர்கள் சிலம்பக் கலையை கற்பது ஏன்? என்ன சொல்கிறார்கள்?
-
- 0 replies
- 701 views
-
-
மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை சுவீகரித்த யாழ்ப்பாண இளைஞன்! (மாதவன்) மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 (Asian Classic Powerlifting Championship 2023) போட்டியில் இலங்கை தேசிய பளுத்தூக்கல் அணிசார்பாக பங்குபற்றிய புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த புசாந்தன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை சுவீகரித்த யாழ்ப்பாண இளைஞன்! (newuthayan.com)
-
- 0 replies
- 313 views
-
-
மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றும் கனவுகளுடன் காத்திருக்கும் தர்ஷிகா திறமைக்கு வறுமை தடையல்ல...
-
- 0 replies
- 715 views
-
-
-
- 0 replies
- 746 views
-
-
மலையக மண் பெற்றெடுத்த பிரபல கால் பந்தாட்ட வீரர் மோகன் ராம் https://www.facebook.com/nadarajah.kuruparan.33/videos/451620016240627
-
- 0 replies
- 602 views
-
-
உலக சிலம்பம் சம்பியன்ஸிப் போட்டி இந்தியா பெங்களூரில் மே 12ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, சுவீட்சர்லாந்து, இங்கிலாந்து, மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், பெல்ஜியம், இத்தாலி, துபாய் ஆகிய பத்து நாடுகள் பங்குப்பற்றின. சிலம்பத்தின் பகுதிகளான நெடுகம்பு வீச்சு, இரட்டை நடுகம்பு வீச்சு, வேல்கம்பு ஆகிய போட்டிகளுக்காக மலையகத்திலிருந்து சென்ற 19 வீரர்கள் 69 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். இவ்வீரர்களுக்கு பயிற்சியை திவாகரன்,ராம்குமார்,தினேஸ்குமார் ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/254363
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
மலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன. இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் மலையக பெண்களும் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ என்ற சிங்க பெண் தற்போது நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெங்கல பதக்கத்தை வென்று வெற்றியை …
-
- 0 replies
- 1k views
-
-
மழை காரணமாக 2 ஆவது ஒருநாள் போட்டி 47 ஓவர்களாக குறைப்பு! சுற்றுலா தென்னாபிரிக்கா அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் போட்டி பாதிக்கப்பட்டது. அதன்படி, போட்டியை 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/n…
-
- 0 replies
- 578 views
-
-
மழையால் இந்தியா-மே.இ.தீவுகள் டெஸ்ட் டிரா: நம்பர் 1 நிலைக்கு முன்னேறியது பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை டிரா செய்த மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணி. | படம்: ஏ.பி. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனதை அடுத்து இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றாலும் டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் நம்பர் 1 நிலைக்கு முதன் முறையாக முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிராக தொடரை 2-2 என்று டிரா செய்த பாகிஸ்தான் கடந்த வாரம் 2-ம் நிலையில் இருந்தது, இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தால் பாகிஸ்தான் அதிலேயே நீடித்திருக்கும், ஆனால் மழை இந்தியாவின் முதல் நிலையைத் தக்கவைப்பில் புகுந்து விளையாடி விட்டது. மே.இ.தீவுகளுக்கு எதிரா…
-
- 0 replies
- 226 views
-
-
மழையால் பாதிப்பு- முதலாவது ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது இலங்கை இங்கிலாந்து அணிகளிற்கு இடையில் இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக முதலில் பந்து வீசுபவர்களிற்கு வாய்ப்புகள் அதிகம் என கருதியே பந்துவீச தீர்மானித்தாக இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்தார். எனினும் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் எவ்வித சிரமமும் இன்றி இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டனர் இங்கிலாந்து அணி 49 ஓட்டங்களை ப…
-
- 0 replies
- 363 views
-
-
மஸ்ரபீ முர்தஷாவுக்கு போட்டித் தடை விதித்தது ஐ.சி.சி! பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபீ முர்தஷாவுக்கு ஒருநாள் போட்டியொன்றில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியின் போது, பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டமைக்காகவே குறித்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவரது போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 70 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk…
-
- 0 replies
- 294 views
-
-
மஹானாமவின் பதவி ரிச்சி ரிச்சார்ட்சன் வசம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரோஷான் மஹானாம ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். அவரது பதவிக்காலம் இந்த வருடத்தின் இறுதியில் முடிவடைகிறது. இதனால், அவருக்குப் பதிலான ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் ரிச்சி ரிச்சார்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தற்போது ரிச்சார்ட்சன் மேற்கிந்திய தீவுகள் அணியின் மானேஜர் பதவியில் இருக்கிறார். இந்த பதவி அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெறும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் முடிவடைகிறது. அதன்பின் ஐ.சி.சி.யின் நடுவர் பதவியை ஏற்றுக்கொள்வார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 312 views
-
-
இலங்கை-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 2ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப்;பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகூடிய ஓட்டங்களாக மஹேல ஜயவர்த்தன ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணிக்கு மஹேல - ஜீவன் மெண்டிஸ் (25) ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டம் கைகொடுக்க 16ஆவது ஓவரில் 100 ஓட…
-
- 6 replies
- 869 views
-
-
மஹேல எதிர்ப்பு பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்துவதால் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரிய மரபுகள் மீறப்படுவதாக தெரிவித்திருக்கிறார் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட ஜாம்பவானுமாகிய மஹேல ஜயவர்தன. கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டியை காணமைதானத்திற்கு ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்கும் வகையில், சில கவர்ச்சியான அம்சங்களை புகுத்த பல ஆண்டு காலமாக ஐ.சி.சி. முனைந்து வந்தது. பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது இதில் முக்கியமானது. பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசித்து வந்தது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சே…
-
- 0 replies
- 287 views
-
-
அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் அணித் தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார். ஏற்கனவே இருபதுக்கு 20 போட்டியின் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகிய மஹேல ஜயவர்தன தற்போது ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். இதேவேளை இலங்கை அணியின் தலைவராக ஏஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்படலாம் எனவும் தெரிய வருகின்றது. http://www.virakesari.lk/article/sports.php?vid=368
-
- 3 replies
- 460 views
-
-
மஹேல தாய் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார் : திலங்க குற்றசாட்டு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹே ஜயவர்தன இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயற்படுவது சிறப்பான ஒரு விடயம் அல்ல என இலங்கை கிரிக்கைட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட மஹேல ஜெயவர்தன கிரிக்கெட்டிருந்து ஓய்வுபெற்று ஒரு சில மாதங்களே ஆகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக செயற்படும் அவர் சொந்த நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார். இந்தச் செயல் எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார் கிரிக்கெட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெர…
-
- 4 replies
- 1.1k views
-
-
மஹேல, சங்கா இருவரும் தலா 11,493 டெஸ்ட் ஓட்டங்களுடன் ; நண்பர்களின் மற்றொரு ஆச்சரிய ஒற்றுமை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களான மஹேல ஜயவர்தனவும் குமார் சங்கக்காரவும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்குத் தெரியும். தற்போது அவ்விருவரும் டெஸ்ட் போட்டிகளில் சம எண்ணிக்கையான (11,493) ஓட்டங்களுடன் உள்ளனர் என்பது வியக்கத்தக்க ஓர் ஒற்றுமையாகும். தற்போது நடைபெறும் இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டிக்கு முன் மஹேல ஜயவர்தன 11,392 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 11,359 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டியில்; மஹேல ஜயவர்தன முதல் இன்னிங்ஸில் 22 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 79 ஓட்டங்களையும் பெற்றார். அதேவேளை குமார் சங்கக்கார முதல் இன்ன…
-
- 1 reply
- 526 views
-
-
மஹேல, சங்கா மற்றும் கெயில் பாகிஸ்தான் செல்ல மறுப்பு! பாகிஸ்தான் சுப்பர் லீக் தற்சமயம் டுபாயில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாக். சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டியை பாகிஸ்தானின் லாஹுர் மைதானத்தில் நடத்துவதற்கு பாக். சுப்பர் லீக் நிர்வாகம் மற்றும் அணி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாகிஸ்தான் செல்வதற்கு பல வீரர்கள் ஆதரவளித்துள்ள போதும், முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தான் செல்வதற்கு இவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 417 views
-