விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகும் இலங்கை 2018 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி பல கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக இலங்கை அணி எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 2 டி20 மற்றும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இதனையடுத்து இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்பு டி20 போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தை எதிர்வரும் மே…
-
- 0 replies
- 316 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது. tamilmirror
-
- 1 reply
- 471 views
-
-
2020 T20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியாவில்! 2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான T20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதை, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பெண்களுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரையிலும் ஆண்களுக்கான தொடர் அதே ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையும் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முதலாவது உலகக் கிண்ண T20 போட்டித் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் எட்டு நகரங்களில் உள்ள பதின்மூன்று விளையாட்டு அரங்கங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. http://www.virakesari.lk/article…
-
- 0 replies
- 294 views
-
-
ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி : இராணுவ வீரரான புவிதரன் கோலூன்றிப் பாய்தலில் சாதனை By T YUWARAJ 18 SEP, 2022 | 10:18 PM (நெவில் அன்தனி) ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இராணுவ வீரர் ஏ. புவிதரன் 5.15 உயரம் தாவி புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்துள்ளார். தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றுக்கான திறன்காண் மெய்வல்லுநர் போட்டியிலேயே சாவகச்சேரி இந்து கல்லூரியின் முன்னாள் பழைய மாணவன் புவிதரன் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார். விமானப்படை வீரர் இஷார சந்தருவன் 2017ஆம் ஆண்டு நிலைநாட்டிய 5.11 மீற்றர் என்ற முந்தைய த…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
பறந்து வந்த காதலி நவம்பர் 09, 2014. காதலி சொரஜாவை அழைத்து வர தனி ‘ஜெட்’ விமானத்தை அனுப்பி அசத்தினார் பிரேசில் வீரர் நெய்மர். பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர், 22. களத்தில் மட்டுமல்ல, காதல் விளையாட்டிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், காயம் காரணமாக காலிறுதியுடன் வெளியேறினார். அப்போது இவருடன் பிரேசில் நடிகை புருனா மார்குயிஜின், 19, என்ற பெண், ‘தோழியாக’ இருந்தார். கடந்த ஆக., மாதம் இருவரும் ஸ்பெயினின் இபிஜா என்ற தீவுக்கு சென்றனர். முதல் சந்திப்பு: இருவருக்கும் என்ன பிரச்னை ஏற்பட்டது எனத் தெரியவில்லை. நெய்மர் புருனாவை பிரிந்தார். இங்கு வைத்து, தன்னை விட 6 வயது மூத்தவரான செர்பிய அழகி சொரஜாவை, 28, நெய்மர் சந்தித்துள்ளார்…
-
- 2 replies
- 736 views
-
-
சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல் புகுத்தினார் மெஸி Published By: SETHU 29 MAR, 2023 | 11:35 AM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி, தனது 100 ஆவது சர்வதேச கோலைப் புகுத்தியுள்ளார். கியூராசாவ் - ஆர்ஜென்டீன அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியில் தனது 100 கோலை மெஜி புகுத்தினார். ஆர்ஜென்டீனாவின் சான்டியாகோ டெல் எஸ்டேரோ நகரில் செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று காலை) நடைபெற்ற இப்போட்டியில் 7-0 கோல்களால் ஆர்ஜென்டீனா வென்றது. இப்போட்டியில் லயனல் மெஸி ஹெட்ரிக் கோல்களைப் புகுத்தினார். போட்டியின் 20, 33, 37 ஆவது நிமிடங்களில் அவர் புகுத்தினார் இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் …
-
- 0 replies
- 356 views
- 1 follower
-
-
தாய் மண்ணில் இறுதிக் களம்காணும் சாதனை நாயகர்கள்: இன்று உணர்ச்சிவசப்படலாம் என்கிறார் மஹேல இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச இன்று நடைபெறவுள்ள ஏழாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியானது இலங்கையின் முன்னாள் தலைவர்களும் சாதனை நடசத்திரங்களுமான மஹேல ஜயவர்த்ன, குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்சான் ஆகியோர் தமது சொந்த மண்ணில் பங்கேற்கும் இறுதி சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியாகும். இரு அணிகளுக்குமிடையிலான ஏழு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 4-2 என கைப்பற்றியுள்ள நிலையில் இன்றை தினம் களமிறங்குகின்றது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் புதிய அத்தியாத்தை ஏற்படுத்திய சர்வதேச அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்த நட்சத்திர வீரர்கள…
-
- 3 replies
- 709 views
-
-
-
Published By: VISHNU 21 JUN, 2023 | 10:22 PM (நெவில் அன்தனி) இந்த மாணவி கொட்டிலில் வாழ்ந்துவருபவர். வீட்டுப் பாடங்களை, மீட்டல்களை வீதி விளக்கு வெளிச்சத்திலேயே நிறைவேற்றிவருகிறார். அல்லது வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் கற்றுவருறார். இத்தனை குறைகளுக்கு மத்தியிலும் கல்வியில் சிறந்து விளங்கும் இவர் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையில் தங்கப் பதுமையாக வலம்வருகிறார். அண்மைக்காலமாக ஐபிஎல்லில் அசத்தியவர்கள் சிலரைப்பற்றி உள்நாட்டு ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டுவந்த நிலையில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து விளையாட்டுத்துறையில் அசத்திவரும் நம் நாட்டின் அதுவும் நம் இனத்தவரின் சோகக் கதையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது பொருத்த…
-
- 5 replies
- 799 views
- 1 follower
-
-
சிக்கன பந்துவீச்சில் வெலகெதர புதிய சாதனை முதல்தர இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 4 ஓவர்களைப் பூர்த்தி செய்த பந்துவீச்சாளர்களில் அதி சிறந்த (0.50) சிக்கன பந்துவீச்சுப் பெறுதிக்கான (அதாவது ஓவருக்கு 0.5 ஒட்ட வீதம்) புதிய சாதனையை இலங்கையின் சானக்க வெலகெதர நிலைநாட்டியுள்ளார். எஸ். எஸ். சி. அணிக்கு எதிராக கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்தலட்டிக் கழகம் சார்பாக பந்து வீசிய சானக்க வெலகெதர 2 கன்னி ஓவர்கள் அடங்கலாக 4 ஓவர்கள் பந்துவீசி 2 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் பலனாக தமிழ் யூனியன் க…
-
- 0 replies
- 550 views
-
-
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் பாலியல் இலஞ்சம் பெறப்பட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் போது, இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் நிர்வாகிகள் சிலர் பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இந்த அமைச்சு கூறியுள்ளது. http://www.tamilmirror.lk/146567#sthash.k7WMmZeX.dpuf
-
- 24 replies
- 3.3k views
-
-
இந்திய முன்னாள் கப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடிக்கு எதிராக 750 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக இலங்கையின் சுழற்பந்து வீச் சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ள அதேநேரம், முரளிதரனை நீதிமன்றில் சந்திக்கத் தயாரென பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். முரளியின் பந்துவீச்சு முறை குறித்து பிஷன் சிங் பேடி அவ்வப்போது குறைகூறி வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரரென்ற சாதனையை அடுத்த இரு மாதங்களில் முரளிதரன் முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகையில் முரளியின் பந்துவீச்சு முறையை பேடி மிக மோசமாகக் குறைகூறியுள்ளார். முரளி பந்தை எறிவதாகவும் அவரது பந்துவீச்சு முறையானது ஈட்டி எறிவது போன்றும் குண்டெறிவது போன்றுமிரு…
-
- 2 replies
- 1.5k views
-
-
சங்கக்கார அதிசிறந்த தொழில்சார் கிரிக்கெட் வீரர் - ஃபார்ப்ரேஸ் புகழாரம் 2015-08-19 10:30:36 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிசிறந்த தொழில் கிரிக்கெட் வீரர் இலங்கையின் குமார் சங்கக்கார என இலங்கையின் முன்னாள் உதவி பயிற்றுநர் போல் ஃபார்ப்ரேஸ் புகழாரம் சூடியுள்ளார். ''பயிற்சிகளின்போது ஒரு முதிர்ச்சிபெற்ற தொழில்சார் வீரராக அவரை நான் பார்த்தேன். நான் ஒரு சிறந்த பயிற்றுநராவதற்கும் அவர் நிறைய உதவியுள்ளார்'' என ஃபார்ப்ரேஸ் கூறினார். இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தற்போதைய உதவி பயிற்றுநராக பணிபுரியும் ஃபார்ப்ரேஸ் 2007 முதல் 2009வரை இலங்கையின் உதவி பயிற்றுநராகவும் பின்னர் 2014இல் குறுகிய கால பிரதம பயிற்றுநராகவும் கடமையாற்றினார். …
-
- 0 replies
- 222 views
-
-
19வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட அணியில் இரண்டு யாழ். வீரர்கள் ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட 43ஆவது சர்வதேச கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் சீனாவில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதிமுதல் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை நடைபெறும் இப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி நேற்றுமுன்தினம் சீனாவுக்கு பயணமானது. சீனா சென்ற 19வயதிற்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியில் யாழ். ஹென்றிக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் மன்னார் சேவியர் கல்லூரியின் மாணவரும் இடம்பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் செபமாலைநாயகம் யூட்சுபன் மற்றும் அமலதாஸ் மதுஸ்ரன் ஆகிய இரு மாணவர்களுமே யாழ். மாவட்டத்தில…
-
- 4 replies
- 1k views
-
-
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலிய அணிக்கு இலகு வெற்றி! நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டி நேற்று(சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியாவும் நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்டன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த அவுஸ்ரேலிய அணி சார்பில், வோர்னரும், பின்ஞ்சும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலேயே அவுஸ்ரேலிய அணி, தடுமாற்றமான துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தது. உஸ்மான் கவாஜா 88 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். இதன…
-
- 0 replies
- 384 views
-
-
18 SEP, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கும் சகாப்தம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியுடன் உதயமாகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்த மாநாட்டில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிலேயே இருபாலாருக்கும் சம பரிசுத் தொகையை வழங்குவதென ஐசிசி முடிவுசெய்திருந்தது. ஆனால் இப்போது 6 வருடங்களுக்கு முன்னரே அந்தத் தீர்மானத்தை அமுல்படுத்துவதென ஐசிசி முடிவுசெய்துள்ளது. இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒட்டுமொத்த பணப்பரிசாக 7.95 மில்லியன் அமெரி…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியது மகாஜனக்கல்லூரி October 13, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய் வன்மைப் போட்டிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 15வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனக்கல்லூரியின் மாணவி ச.செரீனா 1.49மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். http://www.onlineuthayan.com/sports/?p=2025
-
- 1 reply
- 339 views
-
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் நவம்பர் 29இல் ஆரம்பம் (நெவில் அன்தனி) ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி துபாயிலும் ஷார்ஜாவிலும் நடைபெறவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்துடைய ஐந்து நாடுகள் உட்பட 8 நாடுகள் இப் போட்டியில் பங்குபற்றவுள்ளன. நடப்பு சம்பியன் பங்களாதேஷுடன் இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியன பி குழுவில் இடம்பெறுகின்றன. பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. அந்த இரண்டு நாடுகளுடன் ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் ஆகியனவும் இக் குழுவில் இடம்பெறுகின்றன. ஐக்கிய …
-
-
- 18 replies
- 867 views
- 1 follower
-
-
வெற்றிக்கு வழிவகுக்காமல் 55 ரன்கள் சராசரி வைத்திருந்து என்ன பயன்?: விராட்(கோலி) விளாசல் விராட் கோலி. | படம்: அகிலேஷ் குமார். நாக்பூர், மொஹாலி பிட்ச்கள் பற்றிய விமர்சனங்கள் பெரிய அளவில் எழுந்ததையடுத்து விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். பிட்ச்கள் பற்றி நாங்கள் முன்னாள் புகார் எழுப்பியதில்லை, எதிர்காலத்திலும் புகார் எழுப்ப மாட்டோம் என்று கூறினார் கோலி. 9 ஆண்டுகளாக அயல்நாட்டில் டெஸ்ட் தொடரை இழக்காமல் சாதித்து வந்த தென் ஆப்பிரிக்கா இந்திய ‘குழி பிட்ச்களில்’ சிக்கி சுழலில் சின்னாபின்னமாகி தொடரை இழந்தது. இதனையடுத்து நாக்பூர் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியிருப்பதாவது: …
-
- 0 replies
- 727 views
-
-
ரியல் மெட்ரிட்டுக்கு இலகு வெற்றி: ஜுவன்டஸை மீட்டார் ரொனால்டோ By Mohamed Shibly - ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A தொடர்களில் முக்கிய போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (31) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு ரியல் மெட்ரிட் எதிர் லெகெனஸ் லெகெனசுக்கு எதிரான போட்டியில் 5-0 என இலகு வெற்றியீட்டிய ரியல் மெட்ரிட் அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவை விடவும் ஒரு புள்ளி இடைவெளியில் இரண்டாவது இடத்திற்கு முன்னெற்றம் கண்டது. பிரேசில் பதின்ம வயது வீரர் ரொட்ரிகோ பெற்ற கோல் மூலம் 7ஆவது நிமிடத்தில் …
-
- 0 replies
- 538 views
-
-
விளையாட்டு முகப்பு >செய்திகள் >விளையாட்டு நியூசியின் மிரட்டல் பந்து வீச்சு; தடுமாறிய இந்திய அணி; மழையால் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம் 2020-02-21@ 10:28:13 வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் 55 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. அதன்படி இந்திய அணி ஆட்டநேர முடிவில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. …
-
- 2 replies
- 532 views
- 1 follower
-
-
செய்தித் துளிகள்... ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு நியமிக்கப் பட்டுள்ளார். --------------------------------- ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் காயம் காரணமாக விலகிய மலிங்காவுக்கு பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜெரோம் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார். --------------------------------- ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு இம்முறை வைல்டுகார்டு கிடையாது என இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் தங்களது தரவரிசை அடிப்படையில் தான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. --------------------------------- …
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கை-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 2ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப்;பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகூடிய ஓட்டங்களாக மஹேல ஜயவர்த்தன ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணிக்கு மஹேல - ஜீவன் மெண்டிஸ் (25) ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டம் கைகொடுக்க 16ஆவது ஓவரில் 100 ஓட…
-
- 6 replies
- 875 views
-
-
கோலூன்றிப் பாய்தலில் மீண்டும் சாதனை படைத்த யாழ் மாணவி அனித்தா யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி ஜே.அனித்தா , கோலூன்றிப் பாய்தலில் புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார். அனித்தா சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் படைத்திருந்த தேசிய சாதனையை தானே முறியடித்துள்ளார். இவர் சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து சாதனை நிலைநாட்டியிருந்த நிலையில், இன்று ஆரம்பமான 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் 3.41 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/11920
-
- 4 replies
- 795 views
-
-
மேற்கிந்தியத்தீவுகள்: கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு - 1 2012 இருபதுக்கு இருபது உலகக்கிண்ண இறுதிப்போட்டி. போட்டிகளை நடத்துகிற இலங்கை அணியை இறுதிப்போட்டியிற் தோற்கடித்துக் கிண்ணத்தைக் கைப்பற்றுகிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 2016 இல் போட்டியை நடாத்திய இந்திய அணியை அரையிறுதியிலும், இங்கிலாந்து அணியை இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி உலகக்கிண்ணத்தை வெல்கிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி. இரு சந்தர்ப்பங்களிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வீரர்களோடு சேர்ந்து தம் அணிகளை வெறித்தனமாக ஆதரிக்கும் இலங்கை மற்றும் இந்திய அணி இரசிகர்களும் களிப்பாக நடனமாடி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். 2016 இறுதியாட்டத்தின் கொண்டாட்டங்களின் மத்தியிலும் மேற்கிந்தியத்தீவுக…
-
- 7 replies
- 821 views
-