Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஷரபோவா வெற்றி ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை தோற்கடித்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார். மாட்ரிட் : மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. ஊக்கமருந்து சர்ச்சையால் 15 மாத கால தடையை அனுபவித்த ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, இந்த போட்டியில் ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் பங்கேற்றுள்ளார். முதல் சுற்றில் குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை எதிர்கொண்டார். பரபரப்பான இ…

  2. மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ-யின் நிதியை நிறுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு லோதா கமிட்டி சீர்த்திருத்தங்களுக்கு உடன்படுவதாக தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ நிதியளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிசிசிஐ-யின் கீழ் இயங்கும் 25 மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அளிக்கும் நிதியை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, பிசிசிஐ செப்டம்பர் 30-ம் தேதியன்று சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுத்த 13 மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு தலா ரூ.16.73 கோடி அளிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து…

  3. மானிப்பாய் இந்து கல்லூரி அணி சம்பியன் வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014 யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்;பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக மானிப்பாய் இந்து கல்லூரி அணி சம்பியனாகியது. யாழ் மாவட்டப் பாடசாலைகள் விளையாட்டு சங்கம், பிரித்தானியா நாட்டின் இலங்கை தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் ஆதரவுடன் வருடாந்தம் நடத்தும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையிலாக கால்ப்பந்தாட்ட போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்து கல்லூரி மைதானங்களில் இடம்பெற்றது. முதற்சுற்றுப்போட்டிகள் முடிவடைந்து இறுதிப்போட்டி வியாழக்கிழமை (06) யாழப்பாணம் மத்திய கல்லூரி ம…

  4. (ஆதவன்) வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைக்ளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் முதலாம் இடம்பெற்று மானிப்பாய் மகளிர் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கியுள்ளது. இரண்டாமிடத்தை மகாஜனக் கல்லூரியும், மூன்றாம் இடத்தை ஸ்கந்தவரோதயக் கல்லூரியும், நான்காம் இடத்தை இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன. (ச) மானிப்பாய் மகளிர் சதுரங்கத்தில் சாதனை (newuthayan.com)

  5. மான்செஸ்டர் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும்: ஜோஸ் மவுரினோ நம்பிக்கை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பாக விளையாடும் என பயிற்சியாளர் மவுரினோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். போர்ச்சுக்கலை சேர்ந்த ரோஸ் மவுரினோ கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை, ஐரோப்பா லீக் ஆகிய கோப்பைகளை கைப்பற்றியது. ஆனால், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் 6-வது இடத்தையே பிடித்தது. இந்த முறை மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து…

  6. மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்தார் ரூனே மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து முன்னாள் ஜாம்பவான் பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்துள்ளார் வெயின் ரூனே. இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரர் வெயின் ரூனே. 31 வயதாகும் ரூனே அந்நாட்டின் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். எஃ.ப்.ஏ. கோப்பைக்கான 3-வது சுற்றில் மான்செஸ்டர் அணி இன்று ரீடிங் அணியை எதிர்கொண்டது. அப்போது ஆட்டம் தொடங…

  7. மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளராக பெப் கார்டியாலோ பேயர்ன், பார்சிலோனா அணிகளின் முன்னாள் பயிற்சியாளர் பெப் கார்டியாலா பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார். இதுவரை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த மனுவேல் பெல்கிரினியின் ஒப்பந்தம் இந்த ஜுன் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து உலகின் பணக்கார கால்பந்து அணிகளுல் ஒன்றான மான்செஸ்டர் சிட்டி, கார்டியாலா கைக்கு வருகிறது. இந்த அணிக்காக பெப் கார்டியாலா 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பார்சிலோன அணிக்காக பெப் 4 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்த போது அந்த அணி 14 கோப்பைகளை வென்றது. இதில் 3 ஸ்பானீஷ் லீக் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள…

  8. மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி எப்ஏ கோப்பையை கைப்பற்றியது செல்சி அணி எப்.ஏ. கோப்பை இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி அணி எப்.ஏ. கோப்பையை கைப்பற்றியது. #ChelseaFC #ManchesterUnited #FACup லண்டன்: 2018-19ம் சீசன் யுயெஃபா யுரோப்பா கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந…

  9. மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ்மான் அட்லெடிகோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்மான் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்மான். இவர் ஸ்பெயின் நாடடின் முன்னணி கால்பந்து கிளப்பான அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசன் முடிந்த பிறகு இங்கிலாந்து நாட்டின் தலைசிறந்த கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறுவார் என்ற செய்தி வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ‘‘மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்ல 60 சதவீதம…

  10. மான்செஸ்டர் யுனைடெட்டின் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் அமெரிக்கா கிளப் செல்கிறார் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ஜெர்மனியைச் சேர்ந்த பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ ஃபையர் அணிக்குச் செல்கிறார். ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர். பிரேசில் நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை ஜெர்மனி அணி வாங்க முக்கிய காரணமாக இருந்தவர். இவர் கடந்த வருடம் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 32 வயதாகும் இவர் கிளப் போட்டிகளில் விளையாடி …

  11. காற்பந்து போட்டியின் இடைநடுவே மாரடைப்பினால் நிலைகுலைந்து வீழ்ந்த பிரபல இங்கிலாந்து காற்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். போல்டன் வாண்டேர்ஸ் காற்பந்து அணியின் மிட்ஃபீல்டராக களமிறங்கும் 23 வயது இளம் வீரர்... பாப்ரிஸ் மும்பா (Fabrice Mumba). நேற்று FA Cup ற்கான காலிறுதி போட்டியில் டொடென்ஹாமுடன் மோதியது போல்டன் வாண்டர்ஸ். போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடை நடுவே மைதானத்தில் திடீரென சுருண்டுவீழ்ந்தார் மும்பா. உடனடியாக களத்தில் நுழைந்த மருத்துவர்கள் மும்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்தனர். முதலுதவியாக மைதானத்தில் வைத்து அவருக்கு அளிக்கபப்ட்ட சிகிச்சை பலனின்றி போக, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்…

    • 11 replies
    • 1.3k views
  12. சென்னையில் இளைஞர் மரணம்: மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாரத்தான் ஒன்றில் கலந்து கொண்ட 24 வயது இளைஞர் போட்டியின்போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கோட்டூர்புரம் அருகே நடைபெற்ற இந்த மாரத்தானில் பங்கேற்ற, தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான பரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டனர். மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனை இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்…

  13. மாரின் சிலிச் சாம்பியன்: கிராண்ட் ஸ்லாம் சாதனை வாய்ப்பைக் கோட்டைவிட்ட நிஷிகோரி அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் குரேசிய வீரர் மாரின் சிலிச், ஜப்பான் வீரர் நிஷிகோரியை நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்க ஓபன் பட்டம் வெல்லும் முதல் ஆசிய டென்னிஸ் வீரர் என்ற சாதனையை ஜப்பான் வீரர் நிஷிகோரி நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ 1 மணி 54 நிமிட ஆட்டத்தில் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். கோரான் இவானிசவிச் என்ற ஒரு அபாரமான குரேசிய வீரர் அப்போது சாம்ப்ராஸ், அகாஸி உள்ளிட்ட பெரிய வீரர்களுக்கு இணையாக, சில சமயங்களில் அவர்களுக்கு அச்சுறுத்தலையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ…

  14. மாரிஸ் ஸ்டெல்லாவை வீழ்த்தி தேசிய சம்பியனாகிய யாழ் புனித ஹென்ரியரசர் Tamil மாரிஸ் ஸ்டெல்லாவை வீழ்த்தி தேசிய சம்பியனாகிய யாழ் புனித ஹென்ரியரசர் By Mohamed Arshad - October 6, 2017 236 அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கால்பந்தாட்டப் போட்டிகளில் 20 வயதின் கீழ் பிரிவில் யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி வெற்றி பெற்று சம்பிய…

  15. மார்லனுக்கு பந்து வீசத் தடை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான மார்லன் சேமுவேலுக்கு 12 மாதத்திற்கு பந்து வீச சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. 2013 டிசம்பர் முதல் இதுவரையில் இரண்டு தடவை அவரின் பந்துவீச்சில் ஏற்பட்ட சந்தேகத்தில் சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் இந்த தடையை விதித்துள்ளது. சர்வேதச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைக்கு மாறாக 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்துப் பந்து வீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/1006

  16. மாறுவேடத்தில் சென்று கங்குலி ருசித்த கபாப்: தனியே செல்லாதீர்கள், அன்புடன் கண்டித்த பர்வேஸ் முஷாரப் சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் - கோப்புப் படம் பாகிஸ்தானில், மாறுவேடத்தில் சென்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கபாப், பிரியாணி சாப்பிட்டுள்ளார். தனியாக செல்லாதீர்கள் என்று முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தொலைபேசியில் கங்குலியை அழைத்து கண்டித்துள்ள ஸ்வரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தனது சுயசரிசையை எழுதியுள்ளார். “ ஏ சென்சுரி இஸ் நாட் எனப்” என்ற தலைப்பில் அந்த நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த …

  17. மாறுவேடத்தில் தெருவில் விளையாடிய கால்பந்து ஜாம்பவான்! (வீடியோ) நம்ம ஊரில் பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் தனியாக தெருக்களில் நடந்து சென்றால் தேனீக்கள் போல் தொற்றி கொள்வார்கள் ரசிகர்கள். அதுவும், பிரபல கால்பந்து ஜாம்பவான் தனியாக தெருவில் விளையாடியால் விட்டு வைப்பார்களா ரசிகர்கள். போர்ச்சுக்கல்லை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னை யாரும் அடையாளம் தெரியாமல் இருக்க மாறுவேடத்தில் ஸ்பெயினில் உள்ள தெருவில் கால்பந்து விளையாடி அசத்தியுள்ளார். கடைசி வரை யாரும் அவரை அடையாளம் காணமுடியவில்லை. இறுதியாக சிறுவன் ஒருவனிடம் விளையாடிய ரொனால்டோ, தனது மாறுவேடத்தை கலைத்துவிட்டார். அவர் தனது வேஷத்தை கலைத்ததுதான் மிச்சம். ரசிகர்கள் அவரை சூழ்ந்து கெ…

  18. மாற்றம்... முன்னேற்றம்... கிரிக்கெட்... களம் இறங்கும் பெண் நடுவர்கள்! கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் நடுவர்களை நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது ஐ.சி.சி. இன்று முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை, தாய்லாந்தில் நடக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு, இந்நால்வரும் நடுவர்களாக செயல்படவுள்ளனர். உள்ளூர் மகளிர் போட்டிகளில் மட்டும் அதிகப்படியாக பெண் நடுவர்கள் செயல்பட்டு வந்த நிலையில், ஒரு சர்வதேச தொடருக்கு நான்கு பெண் நடுவர்களை ஐ.சி.சி நியமிப்பது இதுவே முதல் முறையாகும். இவங்கதான் அந்த நாலு பேரு நியூசிலாந்தைச் சார்ந்த கேத்தி கிராஸ், ஆஸ்திரேலியாவின் க்ளேர் பொலோசக், இங்கிலாந்தின் சுயூ ரெட்ஃபெர்ன் மற்…

  19. மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 9 நிமிடங்களில் 5 கோல்கள் அடித்த லெவோண்டஸ்கி (வீடியோ) ஜெர்மனி பந்தஸ்லிகா(bundesliga) தொடரில் நேற்று பேயர்ன் மியூனிச் அணி, வுல்ஸ்பர்க் அணியிடம் மோதியது. இந்த போட்டியில் பேயர்ன் அணியின் 27 வயது இளம் வீரரான ராபர்ட் லெவோண்டஸ்கி, முதல் 11 பேர் கொண்ட அணியில் களம் இறக்கப்படவில்லை. பயிற்சியாளர் பெப் கார்டியாலா அவரை பெஞ்சில் வைத்து விட்டார். இந்த ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் வுல்ஸ்பர்க் அணி, ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. முதல் பாதியில் பேயர்னால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. பிற்பாதியில் 50வது நிமிடத்தில்தான் லெவான்டோஸ்கி மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். களமிறங்கிய அடுத்த நிமிடமே, லெவோண்டஸ்கி ஒரு கோல் அடித்து ஆ…

  20. மாலிங்க இறுதிப்போட்டியில் விளையாடலாம்: மைக்கேல் டி சொய்சா நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விளையாட கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாகவும் எனினும் அதனை உறுதியாக கூறமுடியாது எனவும் அணியின் மேலாளர் மைக்கேல் டி சொய்சா தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், லசித் மாலிங்க வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் பயிற்சி போட்டிகளில் விளையாடுவார். இதேவேளை 29 ஆம் திகதி வெலிங்கடனில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாட கூடிய சாத்தியகூறுகள் உள்ளன. எனினும் அவரை நாங்கள் தொந்தரவு செய்யமாட்டோம். மேலும் அவர் விரைவாக சுகம் பெறுவதற்க…

  21. மாலிங்க ஓய்வு பற்றி சூசகம் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து நட்சத்திரம் லசித் மாலிங்கவின் ஐ.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தான் மனநிறைவு பெற்றிருப்பதாக தனது ஓய்வு பற்றி மாலிங்க சூசகமாக குறிப்பிட்டுள்ளார். மாலிங்க கடந்த ஒரு தசாப்தமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 157 போட்டிகளில் 110இல் மாலிங்க ஆடி அந்த அணிக்கு கௌரவத்தை சேர்த்துள்ளார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக மாலிங்க வியாழக்கிழமை (08) நியமிக்கப்பட்டார். “கிரிக்கெட் ஆடியது போதும் என்ற மனநிலை…

  22. மாலிங்க தயாராகிடுவார்: மஹேல உறுதியான நம்பிக்கை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகிடுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது என இலங்கை அணியின் சிரேஷ் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்ட இணையத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னரே பந்து வீச ஆரம்பித்து விட்டார். இதுவரையில் அவருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்குவதற்கு முன்னர் விளையாட முடியுமா என நூறு வீதம் உறுதிப்படுத்திகொள்ள வேண்டும். ஆனால் அவர் உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்க தயாராகிடுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது என்றார். கட…

  23. இலங்கை அணி கடந்த போட்டிகளில் அடைந்த தோல்­விகள் குறித்தும் அப் போட்டிகளில் தலைமையேற்ற தலை­வர்கள் குறித்தும் எந்த சிந்­த­னையும் இல்லை. நடை­பெ­ற­வுள்ள இன்­றைய போட்­டி­கு­றித்தே அனைத்துக் கவ­னமும் இருக்­கி­றது என்று இலங்கை அணியின் புதிய தலைவர் லசித் மாலிங்க தெரி­வித்துள்ளார். இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–0 என்ற கணக்கில் ஏற்­க­னவே இந்­தியா கைப்­பற்­றி­யுள்ள நிலையில் இன்று நான்­கா­வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது. இந்­திய அணியின் வெற்றி இந்த ஆட்­டத்­திலும் நீடிக்­குமா? அல்லது மாலிங்க தலைமையிலான இளம் இலங்கை அணி வெற்றி பெற்று தமக்கு விருந்தள…

    • 0 replies
    • 548 views
  24. மாலிங்கவின் ஆட்டம் குறித்து நிக் போத்தாஸ் மற்றும் கோஹ்லி ஆகியோரின் கருத்து அண்மைய காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருக்கும் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிக் போத்தாஸ் மற்றும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் வெளிப்படையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். மாலிங்க பற்றி பேசியிருந்த போத்தாஸ், இந்த வருடம் அவரின் பந்து வீச்சு மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்த 9 பிடியெடுப்புக்கள்த வறவிடப்பட்டிருந்ததையும், அவர் ஒரு நாள் அணிக்கு நீண்ட கால ஓய்வின் பின்னர் திரும்பி 7 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தியிருந்த…

  25. மாலிங்கவுக்கு இடது காலில் சத்திரசிகிச்சை சனிக்கிழமை, 20 செப்டெம்பர் 2014 இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லலித் மாலிங்க தனது இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சத்திரசிகிச்சை செய்து கொள்வதற்காக அவர், அவுஸ்திரேலியாவுக்கு இன்று பயணமாகிறார். இந்தநிலையில் அவரால் 16 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 2015 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே அவரால் பயிற்சிகளில் ஈடுபட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் ஆரம்பமாகின்றன. எனவே உலக கிண்ணப்போட்டிகளில் மாலிங்கவின் பங்களிப்பு குறித்து சந்தேகம் வெளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.