Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பிசிசிஐ தடையையும் மீறி சிட்னியில் கோஹ்லியுடன் சுற்றும் நடிகை அனுஷ்கா சிட்னி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் சிட்னியில் உள்ள டார்லிங் ஹார்பருக்கு சென்று வந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்ற பிறகு தான் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. காதலிகளுக்கு தடை கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் ஆஸ்திரேலியா செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்…

  2. முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லாம போச்சே! சென்னை: தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று தொடக்க போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி ரன் குவித்த தமிழகத்தின் முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய தேர்வாளர்கள் மறுத்துள்ளனர். விராத் கோஹ்லி போல முரளி விஜய்யும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடி வந்தார். சதம், அரை சதம் என்று இவரும் தன் பங்குக்கு ரன் குவித்தார். அதை விட முக்கியமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக விளையாடும் இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு. முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லா…

  3. ரஷ்ய கால்பந்தாட்ட வீரர் சுட்டுக்கொலை ரஷ்யாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கசான் மகோமெதோவ், இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வடக்கு காகசஸின் டாஜெஸ் பகுதியில் உள்ள அன்ஷி மகா செக்கலா தேசிய கால்பந்தாட்ட லீக்கில் விளையாடி வந்தார். இந்நிலையில் மகோமெதோவ் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/01/06/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%…

  4. 6 விக்கெட்டுகளால் சென்.ஜோன்ஸ் வெற்றி பி.துவாரகசீலனின் சகலதுறை ஆட்டத்தின் காரணமாக சென்.ஜோன்ஸ் கல்லூரி 6 விக்கெட்களால் ஜா – எல கிறிஸ்ட் கிங் கல்லூரி அணியை வெற்றிபெற்றது. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப்பிரிவு பிரிவு 3 அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த சுற்றுப்போட்டியின் போட்டியொன்று சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் ஜா – எல கிறிஸ்ட் கிங் கல்லூரி அணிக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை (02) மற்றும் சனிக்கிழமை (04) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 60.4 ஓவர்களில் அ…

  5. கடந்த வருட கிரிக்கெட்டில் 2014ஆம் ஆண்டில் மொத்தம் 42 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் அவுஸ்ரேலியா, நியூஸ்சிலாந்து மற்றும் இலங்கை அணிகள் அதிகமான வெற்றிகளை பெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டில் நிறைய தோல்விகளை சந்தித்த அணி என்றால் இந்தியா தான். 10 டெஸ்டில் விளையாடி ஒன்றில் வெற்றியும், ஆறில் தோல்வியும், மூன்றில் வெற்றி தோல்வி இன்றி முடித்துள்ளது. அந்த ஒரு வெற்றி, லண்டன் லார்ட்சில் இங்கிலாந்துக்கு எதிராக கிடைத்தவை ஆகும். டெஸ்டில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள முதல் 10 துடுப்பாட்ட வீரர்களில் இலங்கை அணியினைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்திய வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் வீரரான சங்கக்கார பங்களாதேஷ்சிற்கு எதிராக 319 ஓட்டங்களையும், நியூசிலாந்து அண…

  6. உலக கிரிக்கெட்டின் மன்னன் விராட் கோஹ்லி: ஆஸி. மாஜி வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் சிட்னி: விராட் கோஹ்லி உலக கிரிக்கெட்டின் ராஜாவாகிவிட்டதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரும், வர்ணணையாளருமான டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த டோணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து புதிய கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறியதாவது: விளையாட்டு உலகிலேயே கஷ்டமான விஷயம் என்றால், அது இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருப்பதாகத்தான் இருக்கும். உலக கிரிக்கெட்டின் மன்னன் விராட் கோஹ்லி: ஆஸி. மாஜி வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் உலக கிரிக்கெட்டில், பலம் வாய்ந்த நாடு இந்தியா. பணக்கார கிரிக்கெட் வாரிய…

  7. கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்கள் கடந்து சங்ககரா சாதனை! வெலிங்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் எடுத்து இலங்கையின் சங்ககரா சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான சங்ககரா உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். 37-வயதான அவர் கடந்த மாதம் ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்னை கடந்து 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்கள் கடந்து சங்ககரா சாதனை! இந்த நிலையில் சங்ககரா இன்று டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்னை தொட்டு சாதனை புரிந்தார். நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட…

  8. விராட் கோலி அதிகம் உணர்ச்சிவயப்படுகிறார்: ஷாகித் அப்ரீடி இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராட் கோலி அதிகம் உணர்ச்சிவசப்படுவராகத் திகழ்கிறார். கேப்டன் பொறுப்பை கையாள அவருக்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார். தோனி விட்டுச் சென்ற வெற்றிடத்தை கோலி நிரப்ப இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும் என்று தொலைக்காட்சி சானல் ஒன்றில் அப்ரீடி தெரிவித்துள்ளார். “தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்ததை கேள்விப்பட்டு கடும் ஏமாற்றமடைந்தேன், ஏனெனில் அவர் ஒரு போராடும் குணம் படைத்தவர், இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய தலைவராக அவர் திகழ்ந்துள்ளார். அந்த அணியை பலமுறை முன்னே நின்று வழிநடத்திச் சென்றுள்ளார்…

  9. இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நாளை ஆரம்பமாகும் 2 ஆவது டெஸ்ட் போட்டி இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டியாக கிரிக்கெட் நாட்காட்டியில் இடம்பெறவுள்ளது. இப் போட்டி நாளை 3 ஆம் திகதி சனிக்கிழமை நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது. அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையில் இலங்கை அணியில் கௌஷால் சில்வா, திமுத்து கருணாரத்ன, குமார் சங்கக்காரஈ லஹிரு திரிமன்னே, நிரோஷன் திக்வெல்ல, பிரசன்ன ஜயவர்தன, தரிந்து கௌஷால், தம்மிக்க பிரசாத், எரங்க, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, தினேஷ் சந்திமல், நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர். நியூசிலாந்து அணியில் பிரட்டன் மெக்கலம்- டொம் லெதம்- ஹமீஷ் ருத…

  10. டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு : முதல் மூன்று இடங்களுக்குள் சங்கா, ஹேரத் சர்­வ­தேச கிரிக்கெட் சபை­யினால் டெஸ்ட் துடுப்­பாட்ட மற்றும் பந்­து­வீச்சு வீரர்­க­ளுக்­கான புதிய தர­வ­ரி­சைப்­பட்­டியல் வெளியி­டப்­பட்­டுள்­ளது. இலங்கை அணி வீரர் குமார் சங்கக்­கார இரண்டாம் இடத்தை பெற்­றுள்ளார். இப்­பட்­டி­யலில் தென் ஆபி­ரிக்க அணி வீரர் ஏ.பி.டி.வில்­லி­யர்ஸ் முத­லி­டத்தில் உள் ளார். மூன்றாம் இடத்தில் தென் ஆபி­ரிக்க டெஸ்ட் அணித்­த­லைவர் ஹசிம் அம்லா தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். அவுஸ்தி­ரே­லிய அணியின் தற்­கா­லிக தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இந்த பட்­டி­யலில் 5 ஆவது இடத்தில் காணப்­ப­டு­கின்றார். இந்த பட்­டி­யலில் இந்­திய டெஸ்ட் அணி யின் புதிய தலைவர் விராட் கோலி 15 ஆவது இடத்தை பெற்…

  11. இந்திய-அஸ்திரேலிய வீரர்களுக்கு ஆஸி. பிரதமர் டோனி அபாட் புத்தாண்டு தேநீர் விருந்து ஆஸி.பிரதமர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள். | படம்: சிறப்பு ஏற்பாடு. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தனது சிட்னி இல்லத்தில் இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புத்தாண்டு தினமான இன்று தேநீர் விருந்து அளித்தார். இரு அணி வீரர்களும் பிறகு பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் டீம் இந்தியா டி-சர்ட் மற்றும் கால்சட்டைகளுடன் இந்திய வீரர்கள் சாதாரண உடையில் பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அணி வீரர்களுடன் புகைப்படம் எடு…

  12. நான் இங்கு கோலியைப் பற்றி பேச வரவில்லை: ஹேடின் தோனியின் ஓய்வு பற்றியும் அவரது கிரிக்கெட் பற்றியும் கூறிய ஆஸி.விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின், கோலி பற்றிய கேள்விக்கு தவிர்ப்பு மனோபாவத்தில் பதில் அளித்தார். பிராட் ஹேடின் கூறியதாவது: “தோனி கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு உண்மையான ஜெண்டில்மேன். தோனியிடம் மிகப்பெரிய விஷயம் என்னவெனில் அவரது பொறுமை. ஆட்டம் எந்ததிசை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றி கவலைப்படமாட்டார். என்ன சூழ்நிலையிலும் ஒரேமாதிரியான தலைமை உத்தி மிக்கவர். இதனால்தான் அவரால் இவ்வளவு போட்டிகளில் 3 வடிவங்களிலும் கேப்டனாக் நீடிக்க முடிந்துள்ளது. அவர் ஓய்வு அறிவித்தவுடன் நான் ஆச்சரியமடைந்தேன். இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய சேவகர் தோனி. அவர் சூழ்நிலைக…

  13. மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளராக்க தோனி பரிந்துரை? இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸியை பரிசீலிக்கலாம் என்று ஓய்வு பெற்ற டெஸ்ட் கேப்டன் தோனி பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்ததாக தெரிகிறது. இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்ட பத்தி ஒன்றை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய ஊடகம் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: டன்கன் பிளெட்சருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியவருமான மைக் ஹஸ்ஸி பெயரை தோனி பரிந்துரை செய்துள்ளதாக அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் முதன்மை அதிகாரிகளுக்கு மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளர் பொறுப்பிற்கு தோனி பரிந்துரை செய்துள…

  14. இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் இம்மாதம் நடைபெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு 31 வீரர்கள் கொண்ட இலங்கையின் முன்னோடி கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கனிஷ்ட தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள இக் குழாமில் வட பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பரமானந்தம் துவாரகசீலன், செபமாலைப்பிள்ளை ப்ளெமின் ஆகிய இருவருரே வட பகுதியிலிருந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளவர்களாவர். வட பகுதியிலிருந்து கிரிக்கெட் வீரர்களை தேசிய அணியில் விளையாட வைப்பதற்கான முயற்சிகளை இலங்கை கிரிக்கெட் நிறு…

  15. இன்னும் ஓராண்டில் இந்த இந்திய அணி திறமைகளை எங்கும் நிரூபிக்கும்: ரவி சாஸ்திரி இந்த இளம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த ஓராண்டில் பலமாக எழுச்சியுறும் என்று அணி இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் கூறியதாவது: ”2-0 என்று தொடரை இழந்தது பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்த அணி வெளிப்படுத்திய ஆட்டத்திறமைதான். கடந்த காலங்களில் நாம் வீழ்ந்திருக்கிறோம், நெருக்கடியில் எந்த வித சவாலையும் அளிக்காமல் தோற்றிருக்கிறோம். ஆனால் தற்போது எதிரணியினரிடம் தாக்குதல் ஆட்டத்தை கொண்டு சென்றுள்ளோம். இந்த அணி வீரர்களின் சராசரி வயது 26. ஆனால், இது தோல்விக்கான சாக்குபோக்கு அல்ல. இந்த அணிக்கு நான் முன்னமே கூறியது போல் இன்னும் 12 மாதங்கள் கொடுங்கள்,…

  16. சாய்ந்தது "தல".... டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு "குட்பை" சொன்னார் டோணி...கோஹ்லி புது கேப்டன்! மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோணி அறிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி இந்தியாவுக்கு தலைமையேற்பார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. காயம் காரணமாக முதல் போட்டியில் டோணி களமிறங்காததால் விராட் கோஹ்லி தலைமையில் இந்தியா களம் கண்டது. ஆனால் போராடி தோற்றது. 2வது மற்றும் இன்று நிறைவடைந்த மூன்றாவது டெஸ்டில் டோணி கேப்டனாக செயல்பட்டார். 2…

  17.  2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணிகளில் சென்றலைட்ஸ் முதலிடம் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளை தரப்படுத்தும், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் தரப்படுத்தலில் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியாக 131.04 புள்ளிகளைப் பெற்ற சென்றலைட்ஸ் அணி பெற்றுக்கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அணிகளின் தரவரிசை நிலைமைகளை சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் யாழ்ப்பாண துடுப்பாட்டச் சங்க செயலாளருமான எஸ்.விமலதாஸ், திங்கட்கிழமை (29) வெளியிட்டார். இந்த தரவரிசை இருபதுக்கு 20, 30, 40, 50 ஓவர்கள் போட்டிகளை மையமாக வைத்து கணிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 2 புள்ளிகளும், 30 ஓவர்க…

  18. தடைகளை தகர்த்தெறிந்த கே.சி.சி.சியின் வெற்றிப்பாதை யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்ட கழகங்களின் தரப்படுத்தலில் ஆதிக்கம் செலுத்தி வரும் கே.சி.சி.சி என்று அழைக்கப்படும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டு கழகம், பலரின் அர்ப்பணிப்புக்கு மத்தியில் தன்னை தானே வளர்த்து கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்கின்றது. கே.சி.சி.சி கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை வீரர்களுக்காகவோ அல்லது பயிற்சியாளருக்காகவோ வெளிக் கழகங்களை நாடிச்சென்றதில்லை. கொக்குவில் இந்து கல்லூரியிலிருந்து வெளியேறிய, பாடசாலை அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களை தன்னகத்தில் வைத்து, தனது பயணத்துக்கான பாதையை அமைத்துக்கொண்டது. இந்நிலை தற்போதும் தொடர்கின்றது. 1981ஆம் ஆண்டு கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் ஆரம்…

  19. சிம்பாப்வேயின் துடுப்பாட்ட பயிற்சியாளராக வட்மோர் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார். பங்காளதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை சிம்பாப்வே அணி இழந்ததால் பயிற்சியாளராக பதயேற்ற 5 ஆவது மாத்திலேயே ஸ்டீபன் மான்கோனோ நீக்கப்பட்டார். உலகக்கிண்ண போட்டி இடம்பெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பயிற்சியாளரை நீக்கியதால், அந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்யும் விதமாக அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வட்மோரை புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமித்துள்ளது. பந்து வீச்சுப் பயிற்சியாளரான டக்ளஸ் ஹோண்டா உலகக்கிண்ண போட்டி வரை வட்மோருக்கு துணையாக இருப்பதற்காக அவரது பதவ…

  20. கனடாவின் பிரபல டெனிஸ் வீராங்கனையான யூஜீன் பூஷார்ட் (Eugine Bouchard) 2014ம் ஆண்டுக்கான சிறந்த பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றார். இந்தப் பெருமையின் மூலமாக பொபி றோசென்ஃபெல்ட் (Bobbie Rosenfeld) விருது குபெக்கைச் சேர்ந்த யூஜீனுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் தொடர்ந்து இரண்டாவது வருடமாக அவர் இந்த விருதைப் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாடளாவிய ரீதியில், விளையாட்டுச் செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் நடத்திய வாக்களிப்பில், 74 வாக்குகளைப் பெற்று யூஜீன் இந்த விருதிற்காகத் தெரிவு செய்யப்பட்டார். 20 வயதான பூஷார்ட், உலக டெனிஸ் வரிழைசயில் 32வது இடத்திலிருந்து, பின்னர் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி, வருட இறுதியில் ஏழாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்…

  21. சங்கா தவறவிட்ட சாதனை 28-12-2014 ஒரு வருடத்தில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை 21 ஓட்டங்களால் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தவறவிட்டுள்ளார். குறித்த சாதனை தற்சமயம் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங்கிடம் இருக்கிறது. ஒரு வருடத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் 2,833 ஓட்டங்களை 2005ஆம் ஆண்டு ரிக்கி பொன்டிங் பெற்றுக்கொண்டமையே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை குமார் சங்கக்கார முறியடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2,813 ஓட்டங்களை இதுவரை சங்கக்கார பெற்றுள்ளார். இன்னமும் 21 ஓட்டங்கள் பெற்றிருந்தால் பொன்டிங்கின் சாதனையை சங்கக்கார முறியடித்திருப்பார். இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடைய…

  22. எவரெஸ்ட் மலையில் வைக்கப்படும் பிலிப் ஹியூக்ஸின் துடுப்பாட்ட மட்டை அவுஸ்திரேலிய சர்வதேச கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை பலரும் அறிந்ததே. பல்வேறு வழிகளில் அவருக்கு அவுஸ்திரேலியா தரப்பிலும் உலக அளவிலும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிலிப் ஹியூக்ஸ்க்கு வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தும் விதமாக அவர் பயன்படுத்திய துடுப்பாட்ட மட்டையொன்றை உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி நேபாள…

  23. மெல்போர்ன் ப்ளாஷ்பேக்: 1981 சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார் கவாஸ்கர் 1981-ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் ஆஸி. வீரர்களின் வாய்ப் பேச்சுக்குப் பதிலடியாக மறுமுனையில் இருந்த பேட்ஸ் மேனையும் அழைத்துக்கொண்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறிய சம்பவத்துக்கு முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். 1981-ல், இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த கவாஸ்கர், டென்னிஸ் லில்லி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். பந்து முதலில் பேட்டில் பட்டு பிறகு கால்காப்பில் பட்டதாக கவாஸ்கர் நினைத்தார். ஆனால் நடுவர் ரெக்ஸ் ஒயிட்ஹெட…

    • 1 reply
    • 1.1k views
  24. பிரக்யான் ஓஜாவுக்கு தடை டிசம்பர் 27, 2014. புதுடில்லி: ஐ.சி.சி., நிர்ணயித்த விதிமுறையை மீறி பந்துவீசிய பிரக்யான் ஓஜாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்திய அணியின் சிறந்த ‘ஸ்பின்னர்’ பிரக்யான் ஓஜா, 28. டெஸ்ட் போட்டிகளில் மிக விரைவாக 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டியவர். இவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) நிர்ணயித்த 15 டிகிரி அளவுக்கு கூடுதலாக முழங்கையை வளைத்து பந்துவீசுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னையில் உள்ள சோதனை மையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், இவரது தவறு உறுதியானது. இதையடுத்து போட்டிகளில் பங்கேற்க இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தடை விதித்தது. இவர் விளையாடி வரும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு(எச்.சி.ஏ.,) தகவல் அனுப்…

  25. தன்னம்பிக்கை மிகுந்த ஆக்ரோஷமான கேப்டன் தேவை: தோனி மீது கங்குலி விமர்சனம் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் நல்ல நிலையிலிருந்து மோசமான நிலைக்கு இந்திய அணி செல்வதற்கு தோனியின் கேப்டன்சி அணுகுமுறையே காரணம் என்று பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுவாக தோனியை பாராட்டும் இயன் சாப்பல், ஆஸ்திரேலியாவை 216/5 என்ற நிலையிலிருந்து 530 ரன்கள் எடுக்க விட்டதற்கு காரணம் தோனியே என்று கூறியுள்ளார். கடந்த டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சனுக்கு ஷாட் பிட்ச் பந்துகளை வீசி பல்பு வாங்கிய இந்திய அணி இன்று பிராட் ஹேடின், ரயான் ஹேரிஸ் ஆகியோரிடம் மீண்டும் பல்பு வாங்கியது. களத்தில் தோனியின் எந்த வித நோக்கமுமற்ற தோனியின் கேப்டன்சியினால் இந்திய அணி காயப்பட்டுள்ளது என்று கூறிய இயன் சாப்பல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.