விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
மினி உலகக்கிண்ணம்: இந்தியாவின் வெற்றியும், இலங்கை மீதான கவனயீர்ப்பு போரும்… : – சாய்பிரசாத் By சாய்பிரசாத் 2013ன் மினி உலக கிண்ணதொடர் ஒரு சில முக்கிய சம்பவங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா கிண்ணம் வென்றிருக்கிறது. இது இந்தியாவிற்கு இன்னொரு மைல்கல்.டோனியின் அணி, இரண்டாயிரங்களில் இருந்த வலிமை மிக்க அவுஸ்ரேலிய அணியினை நினைவுபடுத்துகிறது. கொஞ்சம் பந்துவீச்சினை மெருகேற்றினால் போதும் அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. பெரும்பாலான போட்டிகளில் மழை குறுக்கிட்டு கொண்டிருந்தது. இலங்கையின் போட்டிகளில் மழையுடன், ஈழத்தமிழர்களும் குறுக்கிட்டார்கள். இலங்கை வீரர் டில்சானின் முன்னால் தனது எதிர்ப்பு அட்டையுடன் நிற்கும் ஈழத்தமிழனின் …
-
- 1 reply
- 712 views
-
-
மின்னலின் மகன் ஓய்வு... நன்றி உசேன் போல்ட்! #ThankYouBolt ஆகஸ்ட் 5, 2012. 50-ம் ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறது ஜமைக்கா. உலகை ஆண்ட இங்கிலாந்திடமிருந்து 6-8-1962-ம் ஆண்டில் சுதந்திரம் அடைகிறது அந்தக் குட்டிக் கரீபியத் தீவு. வெறுமனே பள்ளிகளிலும் அரசு அலுவலகங்களிலும் மட்டும் கொடியேற்றினால் சுதந்திரத்துக்கு அர்த்தம் சேர்ந்துவிடுமா? தன் நாட்டு மக்களுக்கு சுதந்திர தினப் பரிசை வேறுவிதமாகக் கொடுக்க விரும்பினான் போல்ட். லண்டன், 30-வது ஒலிம்பிக் போட்டித் தொடர். தான் முன்பு பதக்கம் வென்றிருந்த 100 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் ஒலிம்பிக் சாதனையோடு தங்கம் வெல்கிறான் போல்ட். தங்களை ஆண்ட ஆங்கிலேயர்களின் தலைநகரில், ஆங்கிலேய மக்களின் ம…
-
- 2 replies
- 1.7k views
-
-
மின்னல் வேகத்தில் 5 கோல்கள் : கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது லெவோண்டஸ்கி சாதனை! கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜெர்மன் பந்தஸ்லீகா தொடரில், பேயர்ன்மியூனிச்- வுல்ஸ்பர்க் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய பேயர்ன்மியூனிச் அணியின் போலந்து ஸ்டிரைக்கர் ராபர்ட் லெவோண்டஸ்கி களமிறங்கிய 9 நிமிடங்களுக்குள் 5 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். அதாவது 3.22 வினாடிகளுக்குள் ஹாட்ரிக் கோல் அடித்தும், 5 நிமிடம் 42 வினாடிகளுக்குள் 4 கோல்கள் அடித்தும் 8 நிமிடம் 59 வினாடிகளில் 5 கோல்கள் அடித்தும் புதிய சாதனை படைத்தார். அதோடு மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 5 கோல்கள் அடித்ததும் புதிய சாதனை ஆகும். இந்த சாதனைகள் அனைத்தும் க…
-
- 0 replies
- 892 views
-
-
மியாமி டென்னிஸ் - ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்ச்ர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்ச்ர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெட…
-
- 0 replies
- 394 views
-
-
மியாமி டென்னிஸ்: ஹிங்கிஸ் இணையை வென்று இறுதிச்சுற்றில் சானியா இணை! மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில்... மகளிருக்கான இரட்டையர் பிரிவில், சானியா- ஸ்ட்ரைகோவா இணை, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடைபெற்றுவரும் மியாமி ஓப்பன் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா- செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா இணை, அரையிறுதிப் போட்டியில் சான்- ஹிங்கிஸ் இணையரை எதிர்த்து விளையாடியது. இதில், சானியா இணை முதல் செட்டை 6-7 எனத் தோற்றாலும், அடுத்தடுத்த செட்களில் 6-1, 10-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. http://www.vikatan.com/news/sports/85103-sania-strycova-in-miami-fina…
-
- 0 replies
- 231 views
-
-
மிரட்டல் மெக்குல்லம் ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா? அதிரடியாக கிரிக்கெட் ஆடுபவர்களை காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். ஆனால் உண்மையிலுமே காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடக்கூடியவர் மெக்கல்லம். லகான் படத்தில் ஒருவர் மட்டையை நெட்டுக்குத்தாகப் பிடித்து வித்தியாசமான முறையில் கிரிக்கெட் ஆடுவது போன்ற காட்சி இடம் பிடித்திருக்கும், இதனை பார்த்த பலர் இப்படியெல்லாம் படத்தில் தான் கிரிக்கெட் ஆடுவார்கள் என்றபோது, நிஜத்திலும் இப்படி கிரிக்கெட் ஆட முடியும் என அனாயாச சிக்சர்களை பறக்கவிட்டு மாஸ் காட்டியவர் மெக்கல்லம். அவர் வரும் பிப்ரவரியில் ஓய்வு பெற போகிறாராம். அவரை கிரிக்கெட் உலகம் கட்டாயம் மிஸ் செய்யும். ஏன்? அந்த போட்டியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந…
-
- 1 reply
- 939 views
-
-
லண்டன்: ஜூன் 29ம் தேதி லண்டனில் துவங்கவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பிரிட்டனில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 1990களுக்குப் பிறகு உலகப் புகழ் பெற்றது. கடைசியாக் இரண்டாம் உலகப் போரின்போது விம்பிள்டன் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தற்போதுதான் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஜெர்மன் டென்னிஸ் பெடரேஷன் துணை பிரஸிடண்ட் டிர்க் ஹார்டோர்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜூன் 29 1945ம் தேதி நடக்க இருந்த கிராண்ட் ஸ்லாம் போட்டி இரண்டாம் உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டபோது டென்னிஸ் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இதழுக்கு பேட்டி அளித்த விம்பிள்டன் நிர்வாகிகள், அடு…
-
- 0 replies
- 652 views
-
-
மிரண்டது இங்கிலாந்து : வொன்டர் கிட் உலகம் முழுக்க சூப்பர் ஹிட்...! இந்தியவை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் ஒரே இன்னிங்சில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் அனைத்து செய்தி தாள்களிலும், விளையாட்டு பக்கங்களை பிரணவ் செய்தி ஆக்கிரமித்துள்ள நிலையில், கிரிக்கெட் ஆடி வரும் பிற நாடுகளிலும் அனைத்து பத்திரிகைகளும் பிரணவின் சாதனை குறித்து செய்தி வெளியிட்டு, அவரது திறமையை மெச்சியுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த மெயில் ஆன்லைன் பதிப்பில், '' 1009 நாட் அவுட்... பிரிட்டன் வீரரின் 116 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது" என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அங்கீகரிக்கப்ட்ட போட்டிகளில் பிரிட்டனை சேர்ந்த ஏ.ஈ.ஜே. கோலின்ஸ் அடித்திருந்த 628 ரன்கள்தான…
-
- 3 replies
- 773 views
-
-
மிரண்டது இந்தியா! வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! by G. PragasJanuary 14, 20200713 SHARE1 சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று (14) மும்பையில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் அவுஸ்ரேலிய அணி, இந்திய அணியின் வெற்றி இலக்கான 256 ஓட்டங்கள் என்ற இலக்கை வெறும் 37.4 ஓவர்களில் விரட்டியடித்து எந்தவிதமான விக்கெட் இழப்புமின்றி வரலாற்று வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் சிகார்த் தவான் 74 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ராக் 3…
-
- 3 replies
- 2k views
- 1 follower
-
-
மிஸ்டர் .ஸ்மித் நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்தானா? கேள்வி கேட்கும் ஷேன் வார்ன்! இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி படு கேவலத்தை சந்தித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதனால் 331 ரன்கள் பின்தங்கியிருந்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இதில் ரோஜர்சும் டேவிட் வார்னரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். இரண்டாவது இன்னிங்சில் ரோஜர்ஸ் 52 ரன்னிலும் வார்னர் 64 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.ஆனால் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்மித் வெறும் 5 ரன்னில் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணியின் தோல்வியை நோக்கி அழைத்து செல்ல காரணமாக அமைந்து விட்டது. உலகின் நம்பர் …
-
- 0 replies
- 266 views
-
-
மிஸ்டர் ஐ.பி.எல் தினேஷ் கார்த்திக்… இந்திய அணிக்கு திரும்புவாரா? 2018-2019 காலகட்டத்தில் இந்தியாவுக்கு 6 ஆவது ஆர்டரில் களத்தில் இறங்கி 56.5 சராசரியை வைத்திருந்தவர் தினேஷ் கார்த்திக். ஸ்டிரைக் ரேட் 161.4 வைத்திருந்தார். witter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களித்து வருகிறார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வ…
-
- 0 replies
- 285 views
-
-
மிஸ்பா உல் ஹக்: பாகிஸ்தானின் மீட்பர்... சவால்களை எதிர்கொண்டு சரித்திரம் படைத்தவர்! அய்யப்பன் மிஸ்பா உல் ஹக் ( icc-cricket.com ) சாதிக்க வேண்டுமென்ற துடிப்பிருப்பவனுக்கு, வெற்றிக்கு வயதில்லை, வரம்புமில்லை என்பதை, ஓய்வறிக்க வேண்டிய நேரத்தில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி, வாழாத வாழ்வின் இன்னொரு அத்தியாயத்தை வரைந்தவர்தான் மிஸ்பா உல் ஹக். பேட்ஸ்மேன்களையும், பௌலர்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாய் பாகிஸ்தான் உருவெடுத்தாலும், இம்ரான் கானுக்குப் பிறகு, ஒரு நிலையான கேப்டன்கூட அங்கே தலைமையேற்கவில்லை, அவர்களது கிரிக்கெட் போர்டு அதற்கு இடமளிக்கவுமில்லை. வருடத்திற்கு ஒரு கேப்டன் என பந்தாடிக் கொண்டிருந்…
-
- 0 replies
- 554 views
-
-
மீண்டு வந்த அனிதா தங்கம் வென்றார் Published by J Anojan on 2019-10-25 13:32:47 (பதுளையிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்) 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாணத்திற்கான வீராங்கைன அனிதா ஜெகதீஸ்வரன் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப் பதக்கம் வெவன்று சாதைனப் படைத்துளளார். பதுளையில் நடைப்பெற்றுவரும் 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று காலை நடைப்பெற்ற மகளிருக்கான கோளூன்றி பாய்தலிலேயே அனிதா இந்தத் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தார், இவர் 3,30 உயரம் தாண்டியே தங்கத்தை தனதாக்கிக் கொண்டார், இதில் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீராங்கைன உதேனி வென்றார், இவர் 3,10 மீற்றர் உயரம் தாண்டினார், வெண்கலப் பதக்கத்தை 3,00 மீற்றர் உயர் …
-
- 0 replies
- 551 views
-
-
மீண்டுமொரு சாதனை : ரங்கன ஹேரத் இலங்கை அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்; 2016இல் 50 விக்கட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கட்டுகளை வீழ்த்திய சாதனையின் பின்னர், இச் சாதனையை ரங்கன ஹேரத்; எட்டியுள்ளார் சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளை மீண்டும் இவர் வீழ்த்தியதன் மூலம் இந்த இலக்கை எட்டியுள்ளார். வெற்றியின் விளிம்பிலிருக்கும் இலங்கை அணி இறுதி நாளான இன்று வெற்றியடைய அதிக வாய்ப்பிருக்கின்றது. 7 விக…
-
- 0 replies
- 310 views
-
-
மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர் Tamil மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர் இவ்வாண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் 20 வயதின் கீழ் பெண்களுக்கான பிரிவின் சம்பியன் பட்டத்தை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் சுவீகரித்துள்ளனர். 2017ஆம் ஆண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் முதற்கட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் உதைபந்தாட்டப் போட்டிகள் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளை…
-
- 0 replies
- 552 views
-
-
மீண்டும் அணியில் இணைந்தார் மலிங்க : உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவராக மலிங்க தெரிவுசெய்யப்படுவதற்கான தகுதியும் அவரிடம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/16421
-
- 1 reply
- 367 views
-
-
மீண்டும் ஆட வாருங்கள் ஜோன்சனுக்கு அழைப்பு November 25, 2015 அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்புயல் மிட்சல் ஜோன்சனை, அணியின் முதன்மைப் பயிற்சியாளரான டரன் லேமன் மீண்டும் விளையாட அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்ரேலிய அணியின் வேகப் புயல் மிட்சல் ஜோன்சன், எதிரணித் துடுப்பாட்டக்காரர்களைத் தனத் தனித்துவமான பந்து வீச்சால் அச்சுறுத்தி வந்தவர். இதனிடையே தமக்கு விளையாட்டின் மீது இருந்த ஈடுபாடு குறைந்து விட்டது என்ற காரணம் கூறி திடீரென அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் மிட்சல் ஜோன்சன். ஆனால் ஸ்டார்க், ஹசல் வுட் போன்ற அனுபவமில்லாத வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி தீவிர ஆலோசனையில் உள்ளது. இதனையடுத்து, மிட்சல் ஜோன்சனைத்…
-
- 0 replies
- 469 views
-
-
மீண்டும் இணைந்த டோனி, பிளெமிங் புனேயின் பயிற்சியாளராகவும் நியமனம் January 13, 2016 இந்த வருடத்துக்கான ஐ.பி.எல். தொடரில் புதிதாக இணைக்கப்பட்ட புனே அணியின் பயிற்சியாளராக பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. அப்போது பிளெமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். அதன்பின் தொடரில் இருந்து விலகி அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். டோனியுடன் இணைந்து அந்த அணியில் 8 வருடங்கள் செயலாற்றினார். ஆனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கூட்டணி உடையும் நிலை இருந்தது. ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட…
-
- 0 replies
- 384 views
-
-
மீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா By Akeel Shihab - சுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய டி20 குழாம் நேற்று (12) தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்தினால் வெளியிடப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியானது இம்மாத இறுதியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் பங்கேற்கவுள்ளது. …
-
- 0 replies
- 831 views
-
-
மீண்டும் இருபது-20 போட்டிகளில் டில்சான் ஹொங்கொங்கில் இடம்பெறவுள்ள ஹொங்கொங் இருபது-20 பிலிட்ஸ் தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரரான திலகரட்ன டில்சான் விளையாடவுள்ளார். இந்த தொடரில் சிட்டி கைட்ஸ் அணிக்காக டில்சான் விளையாடவுள்ளார். இதேவேளை ஹொங்கொங் இருபது 20 பிலிட்ஸ் தொடரில் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார டெரன் சமி மற்றும் அப்ரிடி ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்சான் ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 449 views
-
-
மீண்டும் இலங்கை அணியுடன் இணைகிறார் சமிந்த வாஸ் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸை வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். சமிந்த வாஸ் இந்த மாத இறுதிக்குள் அணியுடன் இணைந்தக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இன்று (10) இலங்கை கிரிக்கட் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். சமிந்த வாஸ் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி, இலங்கை ஏ அணி, மற்றும் பிராந்திய அணிகள் என்பவற்றுக்கு வேகப்பந்து பயிற்சி வழங்குவதுடன், தேசிய கிரிக்கட் அணி உட்பட இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கிரிக்கட்…
-
- 0 replies
- 322 views
-
-
மீண்டும் எட்டி பார்க்கிறது டெக்கான் சார்ஜர்ஸ்? ஐ.பி.எல்.தொடரில் விளையாடி வந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி மீண்டும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் 5 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கடந்த 2009 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் வென்றது. டெக்கான் கிரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி. வெங்கட்ராம ரெட்டி, அவரது மகள் காயத்ரி ரெட்டி ஆகியோர்தான் இந்த அணியை நிர்வகித்து வந்தனர். கடந்த 2012ஆம் ஆண்டுவாக்கில் பல்வேறு நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனம், வங்கி கியாரண்டித் தொகையை செலுத்த தவறியது. இதை காரணமாக காட்டி டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் அங்கீகாரத்தை பி.சி.சி.ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தை மையமாக கொண்டு ச…
-
- 0 replies
- 387 views
-
-
மீண்டும் ஏறுமுகத்தில் றியல் மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட், இப்பருவகாலத்தில் மோசமான ஆரம்பத்தைக் கொண்டிருந்தமையைத் தொடர்ந்து தற்போதே தமது உண்மையான திறமையான வெளிப்பாட்டைக் காண்பிக்கின்றது. இறுதியாக இடம்பெற்ற தமது 11 லா லிகா போட்டிகளிலிருந்து பெறக்கூடிய 33 புள்ளிகளில் 28 புள்ளிகளை றியல் மட்ரிட் பெற்றுள்ளது. லா லிகாவின் தத்தமது 11 இறுதிப் போட்டிகளில் ஓரணி பெற்ற அதிக புள்ளிகள் இதுவேயாகும். றியல் மட்ரிட்டுக்கு அடுத்ததாக பார்சிலோனா தமது 11 லா லிகா இறுதிப் போட்டிகளில் 24 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், அத்லெட்டிகோ மட்ரி…
-
- 0 replies
- 301 views
-
-
மீண்டும் ஒரு வீரரை பதம் பார்த்த பெளன்சர்...கிரிக்கெட் ரசிகர்கள் கலக்கம்! (வீடியோ) ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்து வரும், ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா அணிகள் மோதின. ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடிய ஆடம் வோஜ்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளார். அடிலெய்டில் நடக்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்கும் வகையில், உள்ளூர் போட்டியில் அவர் முத்திரை பதிக்கும் முனைப்பில் இருந்தார். முதல்நாள் ஆட்டம் இன்று நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக, டாஸ்மேனியா வேகப்பந்து வீச்சாளர் கேம்ரூன் ஸ்டீவன்சன் வீசிய பவுன்சர், ஆடம் வோஜ்ஸ் ஹெல்மட்ட…
-
- 0 replies
- 290 views
-
-
மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே எனது இலக்கு – அனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே தமது இலக்கு என வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் அவர் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (23) ஆரம்பமானது. 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.40 மீற்றருக்கு தாவிய யாழ். மாவட்டத்தின் அனிதா ஜெகதீஸ்வரன் போட்டி சாதனையை புதுப்பித்தார். இதேவேளை 20 வயதிற்குட்ப…
-
- 0 replies
- 243 views
-