விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
UEFA Champions League குழு A Atletico Madrid, Juventus Turin, Piräus, Malmö FF குழு B Real Madrid, FC Basel,FC Livepool, Ludogorez Rasgrad குழு C Bayer Leverkusen, Benfica Lissabon, Zenit St. Petersburg, AS Monaco குழு D Borussia Dortmund, FC Arsenal, Galatasaray Istanbul, RSC Anderlecht குழு E FC Bayern München, Manchester City, ZSKA Moskau, AS Rom குழு F FC Barcelona, Paris St. Germain, Ajax Amsterdam, Apoel Nikosia குழு G FC Schalke 04, FC Chelsea, Sporting Lissabon, NK Maribor குழு H FC Porto, Schachtjor Donezk, Bilbao, BATE Borisow
-
- 1 reply
- 413 views
-
-
அணியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார் ரவி சாஸ்திரி: சுரேஷ் ரெய்னா இங்கிலாந்துக்கு எதிராக 75 பந்துகளில் சதம் எடுத்த சுரேஷ் ரெய்னா அணியின் வெற்றிக்கு ரவி சாஸ்திரி போட்டிக்கு முன்னால் அணியினரிடத்தில் ஏற்படுத்திய தன்னம்பிக்கையே காரணம் என்று கூறியுள்ளார். "போட்டிக்கு முன்பாக அணி வீரர்கள் கூட்டத்திற்கு வந்த இயக்குனர் ரவி சாஸ்திரி சிறிய உரையாற்றினார். அது மிகவும் உத்வேகமூட்டுவதாக அமைந்தது. மேலும் ஸ்டேடியத்திற்கு பேருந்தில் வரும்போது அவர் என்னருகில் அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் ‘தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்து’ என்றார். மேலும் ஒரு முன்னாள் வீரரிடம் பேசும்போது வித்தியாசமான ஒரு சவுகரியம் ஏற்படுகிறது. மற்ற பயிற்சியாளர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்தாலும், ரவி சாஸ்திரியி…
-
- 0 replies
- 332 views
-
-
ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆடிவிட்டால் நாம் உடனே பீடத்தில் அமர்த்திவிடுகிறோம்: தோனி இங்கிலாந்துக்கு எதிரான ரெய்னாவின் சதம் அற்புதமானது என்று வருணித்துள்ள கேப்டன் தோனி, அவர் சோபிக்காது போயிருந்தால் கேள்விகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் என்றார். நேற்றைய வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் தோனி கூறியதாவது: “ரெய்னாவின் இன்னிங்ஸ் அற்புதமானது, 30வது ஓவர் முடியும் போது கூட நாங்கள் நிறைய ரன்களை எடுத்திருக்கவில்லை. எனவே ரெய்னா நிற்பது அவசியம் என்றானது. ஏனெனில் அவர்தான் நேற்று மிகவும் அனாயசமாக ஆடினார். நாங்கள் இருவரும் நின்றால், நிச்சயம் நிறைய ரன்களை இந்தப் பிட்சில் குவிக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ரெய்னா மிகவேகமாக ரன் குவிக்கு ஒரு பேட்ஸ்மென், ம…
-
- 0 replies
- 565 views
-
-
கிளார்க் மன்னிப்பு கேட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறேன்: ஏ.பி.டிவிலியர்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் எதிரணியினரை நோக்கி வசைச்சொற்களைப் பயன்படுத்தும் போது பல தருணங்களில் அது விரும்பத் தகாத தனிநபர் தாக்குதலாக அமைகிறது என்று தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் சாடியுள்ளார். ஜிம்பாவேயில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக வழக்கம் போல் இரு அணிகளும் வார்த்தைப்போரில் ஈடுபட்டன. அப்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணியை ஆஸ்திரேலியா 2-1 என்று வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லை கடந்து வசைச் சொற்களைப் பய…
-
- 0 replies
- 523 views
-
-
விளையாட்டு வினையாக முடிய ஜிம்பாவே கிரிக்கெட் வீரர் பன்யாங்கரா நீக்கம் ஜிம்பாவே அணியின் வீரர் பன்யாங்கரா விளையாட்டுத் தனமாக மிட்செல் ஜான்சன் தொடர்பான ஒரு வீடியோவை தன் அணி சகாக்களிடம் பகிர்ந்து கொள்ள அவர் அணியிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் முதல் போட்டியில் ஜிம்பாவேயைச் சந்திக்கும் முன்னர் இதனை பன்யாங்கரா செய்தது பெரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு இட்டுச் சென்றது. இதனால் ஒரு போட்டித் தொகையையும் இழந்த அவர், முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவர் என்ன வீடியோவைப் பகிர்ந்து கொண்டார் என்பதுதான் வேடிக்கை. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் யூ டியூப் சானலிலிருந்து ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சன் இங்கிலாந்து வீ…
-
- 0 replies
- 531 views
-
-
ராகுல் திராவிட் ஆலோசனை மறக்க முடியாதது: முரளி விஜய் சிறப்புப் பேட்டி இங்கிலாந்தின் பிட்ச் மற்றும் தட்பவெப்ப நிலைகளில் தொடக்க வீரர் என்ற கடினமான பணியைத் திருப்தியளிக்கும் விதமாகச் செய்த முரளி விஜய் ஆஸ்திரேலியா தொடரில் இந்த இளம் இந்திய அணி எழுச்சிபெறும் என்று நம்பிக்கை கூறியுள்ளார். இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 402 ரன்களை 40.20 என்ற சராசரியில் எடுத்த முரளி விஜய் 'தி இந்து' (ஆங்கிலம்) இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் தமிழ் வடிவம் வருமாறு: டெஸ்ட் தொடரை சிறப்பாகத் தொடங்கி விட்டு பிறகு சவால் அளிக்காமல் தோல்வியடைந்தது உங்களை எப்படி ஏமாற்றமடையச் செய்தது? குறிப்பாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் 4 மணி நேர ஆட்டத்திலேயே இந்திய அணியின் கையை விட்டுச் சென்றதே? இ…
-
- 0 replies
- 693 views
-
-
வங்கதேசத்தை மூழ்கடித்த ராம்தின், டேரன் பிராவோ சாதனை சதங்கள் செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வதும், இறுதியுமான ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணியின் பேட்டிங் வங்கதேசத்தை மூழ்கடித்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் விளாச, வங்கதேசம் 247 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி தழுவியது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது வங்கதேசம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தினேஷ் ராம்தின், டேரன் பிராவோ இணைந்து 3வது விக்கெட்டுக்காக 258 ரன்கள் சேர்த்தது. புதிய ஒருநாள் சாதனையாகும். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க ஜோடி ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவிலியர்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 238 ரன்களே உலக சாதனைய…
-
- 0 replies
- 887 views
-
-
தொடர்ந்து செயலற்ற கேப்டனாக இருக்கிறார் தோனி: இயன் சாப்பல் 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இழந்த பிறகு தற்போது 3-1 என்று தோல்வி தழுவியதற்கு தோனியின் செயலற்ற கேப்டன்சியும் பெரிதளவு பங்களிப்பு செய்தது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் எழுத்தாளர் மார்டின் ஜான்சன் என்பவர் இங்கிலாந்தின் தொடர் தோல்விகளை வர்ணிக்கும் போது “இங்கி்லாந்து அணியிடத்தில் 3 விஷயங்கள் தவறு. அவர்களால் பேட் செய்ய முடியாது, பந்து வீச முடியாது, பீல்ட் செய்ய முடியாது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை இப்போது தோனி தலைமையிலான இந்திய அணிக்கும் குறிப்ப…
-
- 0 replies
- 436 views
-
-
கிளென் மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியா 350 ரன்கள் குவிப்பு முத்தர்ப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் ஜிம்பாவேயிற்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ரன்களைக் குவித்தது. ஜிம்பாவே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று ஹராரேயில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாவே கேப்டன் எல்டன் சிகும்பரா ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டிங் பற்றி அறியாமல் முதலில் பேட் செய்ய அழைத்தார். பிராட் ஹேடின், ஆரோன் ஃபின்ச் ஜோடி அதிரடியாகத் தொடங்கி 18 ஓவர்களில் 98 ரன்கள் சேர்த்து அபாரத் தொடக்கம் கண்டனர். பன்யாங்கரா, மற்றும் சடரா என்ற பவுலர்கள் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டனர். 48 ரன்களில் 2 பவுண்டரி …
-
- 10 replies
- 653 views
-
-
பிளெட்சர் பற்றிய தோனியின் கருத்திற்கு பிசிசிஐ கடும் அதிருப்தி ரவிசாஸ்திரி அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்றாலும் பிளெட்சர்தான் எங்கள் பாஸ், அவர் 2015 உலகக் கோப்பையிலும் எங்களை வழிநடத்திச் செல்வார் என்று தோனி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் கூறியுள்ளார். இது குறித்து தனியார் சானலுக்கு அவர் கூறும்போது, “நான் தோனியிடம் இதுபற்றிப் பேசவில்லை, பிசிசிஐ அவரது கருத்துக்கு வினையாற்றாது. தோனி பிளெட்சர் பற்றிக் கூறியது அவரது சொந்தக் கருத்தே” என்று கூறிய அவர், கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளை அவரது கருத்துக் கட்டுப்படுத்தாது என்று தெளிவுபடுத்தினார். இது குறித்து பிசிசிஐயின் முக்கிய அதிகாரி ஒருவர் பெயரைக் குறிப்பிடாமல் செய்தி நிறுவனம…
-
- 1 reply
- 561 views
-
-
தோனியுடன் மிஸ்பாவை ஒப்பிடலாமா: சோயப் மாலிக் கோபம் ஆகஸ்ட் 23, 2014. கராச்சி: ‘‘ஐ.சி.சி., யின் பல்வேறு தொடர்களில் கோப்பை வென்று தந்தவர் தோனி. இவரை பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாவுடன் ஒப்பிடுவது தவறு,’’ என, சோயப் மாலிக் தெரிவித்தார். இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. அதேபோல, இலங்கை சென்ற பாகிஸ்தான் அணி 0–2 என, டெஸ்ட் தொடரை கோட்டை விட்டது. இதனால், இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் தோனி, மிஸ்பா உல் ஹக் பதவி விலக வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணி வீரரும், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் கணவருமான சோயப் மாலிக் கூறியது: ஒவ்வொரு கேப்டன்களுக்கும் மோசமான தொடர்கள் அமைவது உண்டு. இந்த தோல்விகளை ஒப்பிட்டு பார்த்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பதிலடி கொடுக்க இளம் படை ரெடி: ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் ஆகஸ்ட் 23, 2014. பிரிஸ்டல்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், குல்கர்னி, கரண் சர்மா போன்ற இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர். இவர்கள், டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து, ஒருநாள் தொடரில் பயிற்சியாளர் பிளட்சருக்கு உதவ, சஞ்சய் பங்கர், பாரத் அருண் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இவர்கள் பணியை மேற்பார்வை செய்யவுள்ள ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி, நேற்று அணியினருடன் இணைந்தார். இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டலில் …
-
- 15 replies
- 1k views
-
-
அதிர்ச்சியில் விராட் கோலி இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாக்கும் காதல் என்று நீண்ட நாட்களாக செய்தி வந்துக்கொண்டே இருந்தது. அதேபோல் தான் விளையாட போகும் அனைத்து நாட்டிற்கும், இவரையும் தன்னுடன் அழைத்து சென்றார் கோலி. தற்போது இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக ஓர் அறிக்கை வந்துள்ளது. அனுஷ்காவின் உதவியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆன்லைனில் அனுஷ்கா சர்மாவின் திருமணம் பற்றி நிறைய செய்திகள் உலாவருகின்றன. நான் ஒன்றைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், இந்தச் செய்திகள் வெறும் வதந்திகளே. அதில் உண்மையில்லை. ஆகவே இது போன்ற விஷயங்களை இனி எழுதவேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 670 views
-
-
13 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் படுதோல்வி; தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் செயிண்ட் ஜார்ஜில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தை 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 247/7 என்று முடிய, வங்கதேசம் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். கிறிஸ் கெய்ல் தனது அனாயாச மட்டைச் சுழற்றலில் இறங்கினார். ஆனால் கர்க் எட்வர்ட்ஸ் அல் அமின் ஹுசைன் பந்தில் ஸ்டம்ப்களை இழந்தார். டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல் இணைந்து 2வத…
-
- 0 replies
- 273 views
-
-
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான் 2014-08-23 19:01:13 இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 65 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பெண்டரிகள் உட்பட 89ஓட்டங்களைம் மஹேல ஜயவர்தன 66 பந்துகளில் 63 ஓட்டங்களையும் பெற்றனர். அஷான் பிரியஞ்சன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 40 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர். …
-
- 6 replies
- 602 views
-
-
ஐபிஎல் அணியைத் தேர்வு செய்யும் அயல்நாட்டு வீரர்கள்: சாம்பியன்ஸ் லீக் அணிகளும் வீரர்களும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய சேவாக் பந்தை அடிக்கும் காட்சி. | படம்: கே.ஆர். தீபக். இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட தங்கள் நாட்டு அணியை விடுத்து ஐபிஎல் அணியை வீர்ர்கள் சிலர் தேர்ந்தெடுத்துள்ளனர். கெய்ரன் போலார்ட், அதிரடி நியூசி.இடது கை ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன், லஷித் மலிங்கா ஆகியோர் தங்கள் நாட்டு 20 ஓவர் அணி தகுதி பெற்றும் கூட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளனர். அதே போல் ஆச்சரியம் தரும் விதத்தில் ஆஸ்திரேலிய வீரர்களான ஜார்ஜ் பெய்லி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் முற…
-
- 2 replies
- 3.2k views
-
-
வங்கதேசத்தை வென்றது மே.இ.தீவுகள் கிரனாடாவின் செயின்ட் ஜார்ஜ்ஸில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது மேற்கிந்தியத் தீவுகள். முதலில் பேட் செய்த வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் அனாமுல் 138 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் டுவைன் பிராவோ 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 218 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணியில் கெயில் (3 ரன்கள்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு வந்த ராம்தின்-ப…
-
- 0 replies
- 499 views
-
-
இந்திய அணிக்கெதிராக களமிறங்கவுள்ள இங்கிலாந்து அணி அறிவிப்பு இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றுள்ளார். அணித் தலைவர் அலிஸ்டர் குக்குடன் இணைந்து அலெக்ஸ் ஹேல்ஸ் ஆரம்ப ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ் இதுவரை 32 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளபோதும் ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இப்போதுதான் பெற்றுள்ளார். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவட் பிரோட் முழங்கால் ஏற்பட்டுள்ள உபாதையால் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் அணியில் இடம் பெற்றுள்ளார…
-
- 0 replies
- 343 views
-
-
பாக்.கிற்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிப்பு பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை 15 பேர்கொண்ட வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையல் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டி 23 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையிலும் 2 ஆவது போட்டி 27 ஆம் திகதி கொழும்பில் பகலிரவு போட்டியாகவும் 3 ஆவது போட்டி 30 திகதி தம்புள்ளையிலும் இடம்பெறவுள்ளன. அஞ்சலோ மெத்தியூஸ் அணித் தலைவராக செயற்படுகின்றார். உபதலைவராக லகிரு திரிமன்னே கடமையாற்றுகின்றார். திலகரட்ண டில்சான், உபுல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, தினேஸ் சண்டிமல், அசான் பி…
-
- 0 replies
- 472 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் 4 ஆம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெற்றுக் கொண்ட வெற்றியையடுத்து இலங்கையணி டெஸ்ட் தரவரிசையில் 04 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து 04 ஆம் இடத்திலிருந்த பாகிஸ்தான் அணியின் 6 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலிலேயே இத் தகவல் வெளியிட்டுள்ளது. தென்னாபிரிக்க அணி முதலாம் இடத்திலும், அவுஸ்ரேலியா 2 ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணி 03 ஆம் இடத்திலும் இந்திய அணி 05 ஆம் இடத்திலும் உள்ளன. இதேவேளை, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் இலங்கையணியின் அஞ்சலோ மெத்தியூஸ் 5 ஆம் இடத்திலிருந்து 03 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்…
-
- 2 replies
- 560 views
-
-
சென்ற வாரம் நடைபெற்ற ஜரோப்பிய தடகளப் போட்டியில் சுவிஸ் நாட்டிற்காக ஒரு தமிழர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்றுள்ளார். இறுதிச் சுற்றில் சில விநாடிகளால் 3ஆம் இடத்தை நழுவிட்டுள்ளார்கள். http://www.youtube.com/watch?v=RMqSS0ZlPFQ
-
- 2 replies
- 585 views
-
-
மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன்: உதவிபுரிந்த சகலருக்கும் தலை வணங்குகின்றேன்: மஹேல *உதவியஅனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கின்றேன்.. *கடினமான நேரத்தில் சரியான தீர்மானம் *நல்ல மனிதர்களில் நண்பன் குமார் சங்கக்காரவும் ஒருவர் *தொப்பிக்கு வீட்டில் ஓர் இடம்! *உலக கிண்ணத்துக்கு தயாராக வேண்டும் *கடந்த வந்த பாதையும் சாதனைகளும் *அரசியலுக்குள் பிரவேசித்தால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன் மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன. எனக்கு பல வழிகளிலும் உதவி ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், மனைவி, எனது கிரிக்கெட் ரசிகர்கள், இலங்கை கிரிக்கெட் சபை, எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கழகம், பாடசாலை, பாடசாலை நண்பர்கள், பயிற்சியாளர்…
-
- 2 replies
- 757 views
-
-
இலங்கை அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி மஹேலவை வழியனுப்பியது பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2-0 என தொடரை தன் வசமாக்கியது. இதன்மூலம் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் முன்னாள் அணித் தலைவருமான மஹேல ஜெயவர்தனவுக்கு சிறந்ததொரு பிரியாவிடை வழியனுப்புதலையும் இலங்கை அணி அளித்துள்ளது. இங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்…
-
- 0 replies
- 795 views
-
-
எனக்கு சாந்தியைத் தெரியாது! விஜய் விக்கி “தன் வீட்டில் தொலைக்காட்சி வசதி இல்லாத செளந்திரராஜன், ஊரில் வழக்கமாகத் தொலைக்காட்சி பார்க்கும் அந்த வீட்டின் வாசலில் மறுகியபடி நின்றிருந்தார். மிகுந்த தயக்கத்திற்குப் பின் அங்கு நாடகம் பார்த்துக்கொண்டிருந்த வீட்டுக்காரரிடம் ‘எம்மக இன்னைக்கு ஓட்டப்பந்தயம் ஓடுறா, டிவி’ல காட்டுவாகளாம்… ஒரு அஞ்சு நிமிஷம் பாக்கனும்பா…’ என்றதும் சீரியல் பார்த்த பொதுஜனங்கள் கோபத்தில் சீறத்தொடங்கினார்கள். யாரோ ஒரு நல்ல மனிதரின் கரிசனத்தின் விளைவால், பலபேரின் ‘உச்’களுக்கு மத்தியில் விளையாட்டு சேனல் மாற்றப்பட்டது. சில நிமிடங்களில் தன் மகள் ஓடும் அந்தப் போட்டி திரையில் பளிச்சிட்டது. பல சாதனைகள் புரிந்த வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு மத்தியில் தன் மகள் கொ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இருமுறை 300 ரன்கள் அடித்தும் எனக்கு மதிப்பில்லை: கிறிஸ் கெய்ல் காட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருமுறை 300 ரன்களை எடுத்திருந்த போதும், ஜமைக்காவிற்காக நிறைய செய்தும் அந்த அரசு தன்னை மதிக்கவில்லை என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் கடுமையாகச் சாடியுள்ளார். வரிவிலக்கு கேட்டிருக்கிறார் கிறிஸ் கெய்ல், ஆனால் ஜமைக்கா அரசு தொடர்ந்து அந்த கோரிக்கையை நிராகரித்து வருகிறது என்று அவர் 'தி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். “ஜமைக்கா அரசு மீது நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். நான் கேட்பதெல்லாம் கொஞ்சம் நாகரிகம், சிறு அங்கீகாரம் அவ்வளவே. 2 முறை முச்சதங்கள் அடித்துள்ளேன், ஆனால் விமான நிலையத்தில் ஒரு கேமரா கூட என்னை புகைப்படம் எடுக்க வரவில்…
-
- 0 replies
- 354 views
-