விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
சாம்பியன்ஸ் லீகில் இலங்கை அணியைப் புறக்கணித்து மும்பை இந்தியன்ஸ் அணியைத் தேர்வு செய்தார் மலிங்கா செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளார். இலங்கை அணியான சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்கு விளையாடப்போவதில்லை என்று மலிங்கா அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியச் செயலர் நிஷந்த ரணதுங்கா இது பற்றிக் கூறும் போது, “நாங்கள் அவர் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்கு விளையாடுவதை விரும்பினோம் ஆனால் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடப்போவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் இடையேயான ஒப்பந்தத…
-
- 0 replies
- 360 views
-
-
ரவீந்திர ஜடேஜாவைக் கேள்விக்குறியாக்கிய தோனி ரவீந்திர ஜடேஜாவை ஆல்ரவுண்டர் என்று ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் கூறலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் குறிப்பாக அயல்நாடுகளில் அவரது பந்து வீச்சு கடும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 2 விதமான பார்வை உள்ளது. ஒன்று தோனி அவரை வேகப்பந்து வீச்சிற்கு ஆதரவான ஆட்டக்களங்கள் அல்லது முழுதும் பேட்டிங் சாதக ஆட்டக் களங்களில் ஸ்ட்ரைக் பவுலராக பயன்படுத்தாமல் வெட்டியாக ரன் கட்டுப்படுத்தும் பவுலராக பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு கடுமையாக எழுப்பப்பட்டு வருகிறது. இன்னொரு புறம் அவர் ஒரு மெதுவான இடது கை ஸ்பின்னர், கொஞ்சம் பேட்டிங் செய்பவர், எனவே அயல்நாட்டு டெஸ்ட் போட்டி ஆட்டக்களங்களில் அவரது …
-
- 0 replies
- 502 views
-
-
ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று வேலூர் வீரர் சதீஷ்குமார் சாதனை படைத்துள்ளார். 71 நாடுகள் கலந்து கொண்ட 20 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வருகிறன. இதில் வேலூர் சத்துவாச்சாரி புது தெருவைச் சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் தெய்வானை. சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கமும் பளுதூக்கும் வீரர். இவர் 1985 முதல் 87 வரை நடந்த தேசிய பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர…
-
- 12 replies
- 791 views
-
-
2018 உலகக் கிண்ணம் ரஷ்யாவில்தான்:ஃபிஃபா அடுத்த நான்கு ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது போல ரஷ்யாவில் நடத்தப்படும் என்று அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் உரிமையை ரஷ்யாவிடமிருந்து பறிப்பது முறையாகாது என்று ஃபிஃபா கூறியுள்ளது. அண்மையில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் 298 பேர் மாண்டனர். இந்நிலையில், உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி ரஷ்யாவில் நடத்தப்படக்கூடாது என்று ஜெர்மனியின் மூத…
-
- 3 replies
- 577 views
-
-
இலங்கை - தென்னாபிரிக்க முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் : தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாடுகின்றது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில் இன்று இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியது. ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என வெற்றி கொண்டிருந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொ…
-
- 17 replies
- 736 views
-
-
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அபினவ் இறுதிச்சுற்றில் 205.3 புள்ளிகள் பெற்றார். 202.1 புள்ளிகள் பெற்ற வங்காளதேச வீரர் பாகி வெள்ளிப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா இது தனக்கு கடைசி காமன்வெல்த் போட்டி என்று கூறியது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை ஹீனா சித்து, மலைக்கா கோயல் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் மலைக்கா கோயல் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹீனா சித்து 7-வது இடத்திற்கு பின்த…
-
- 2 replies
- 542 views
-
-
ஜெயவர்தனா அசத்தல் சதம் ஜூலை 24, 2014. கொழும்பு: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஜெயவர்தனா சதம் விளாசினார். இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் நேற்று கொழும்புவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ஜெயவர்தனா சதம்: இலங்கை அணிக்கு தரங்கா (11) நிலைக்கவில்லை. குசல் சில்வா அரை சத (44) வாய்ப்பை இழந்தார். ஸ்டைன் வேகத்தில் சங்ககரா ‘டக்’ அவுட்டானார். பின் ஜெயவர்தனா, மாத்யூஸ் ஜோடி பொறுப்புணர்ந்து விளையாடியது. ஸ்டைன் பந்துவீச்சில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். சிறப்பா…
-
- 0 replies
- 533 views
-
-
விக்கெட் காப்பில் டோனி போர்மில் இல்லை: கிர்மானி வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014 இந்திய அணித்தலைவர் டோனி விக்கெட் காப்பில் போதியளவு திறமையாக செயற்படவில்லை என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் சைட் கிர்மானி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் விக்கெட் காப்பாளர் என பெயர்பெற்றவர் சைட் கிர்மானி. 88 டெஸ்ட் போட்டிகளில் 160 பிடிகளையும் 38 ஸ்டம்ப் ஆட்டமிளப்புக்களையும் ஏற்ப்படுத்தியவர் கிர்மானி. தெரிவுக்குழுவின் தலைவராகவும் கிர்மானி இருந்துள்ளார். டோனி விக்கெட் காப்பில் போர்மை இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். வீரர்கள் ஓய்வு எடுக்கக் வேண்டும்.இதன் மூலமே தங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் தற்போது வீரர்களுக்கு அதற்க்கு நேரமில்லை. டோனிக்கும் அதுவே நடந்துள்…
-
- 0 replies
- 755 views
-
-
இறுதி டெஸ்ட் போட்டி: டோனி வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014 08:25 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் காலம் அண்மித்து வருகின்றது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். லோர்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற போட்டியே லோர்ட்ஸ் மைதானத்தில் தான் விளையாடிய இறுதிப் போட்டி என 33 வயதான டோனி கூறியுள்ளார். லோர்ட்ஸ் வெற்றி பற்றிக் கூறும் வேளையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த வெற்றி பற்றிக் கூற தனக்கு வார்த்தைகள் இல்லை. இறுக்கமான போட்டி ஒன்று என்று கூறிய டோனி, 2007ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் ஸ்ரீஷாந்துடன் இணைந்து போதிய வெளிச்சமில்லாமல் போட்டி நிறுத்தப்படும் வேளையில் சமநிலையில் நிறைவு செய்தமை மறக்க முடியாத ஒரு போட்டி எனவும் கூறியுள்ளார…
-
- 0 replies
- 997 views
-
-
ரஷ்யாவில் 2018 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் நிச்சயம் கிண்ணத்தை வெல்லும் என நெய்மர் கூறியுள்ளார். பிரேசிலில் சமீபத்தில் நடந்த உலகக்கிண்ணத் தொடரில் கொலம்பியா அணிக்கெதிரான ஆட்டத்தில் காயமடைந்த நெய்மர் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் பிரேசில் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால் உலகக்கிண்ண போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி அரையிறுதியில் 1-7 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. இந்நிலையில் அடுத்த உலகக்கிண்ணத்தை பற்றி பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கூறுகையில் பிரேசில் கால்பந்து பின்னடைவை சந்தித்து இருப்பதாக நான் கருதுகிறேன். ஜேர்மனி ஸ்பெயின் ஆகிய நாடுகளை விட பின…
-
- 3 replies
- 1.8k views
-
-
பார்ஸிலோனா ரசிகர்களால் சூழப்பட்ட சுவாரெஸ் 2014-07-21 18:45:33 உருகுவேயின் சர்ச்சைக்குரிய கால்பந்தாட்ட நட்சத்திரமான லூயிஸ் சுவாரெஸும் அவரின் மனைவியும் ஸ்பெய்னின் பார்ஸிலோனா நகரில் ரசிகர்களால் சுற்றிவளைக்கப்பட்டதால் சங்கடத்துக்குள்ளாகினர். இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்துக்காக விளையாடி வந்த சுவாரெஸ் தற்போது பார்ஸிலோனா கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் பார்ஸிலோனா நகருக்கு தனது மனைவி சோபியாவுடன் சென்ற லூயிஸ் சுவரெஸ் சென்றபோது ரசிகர்கள் பலரால் சுற்றிவளைக்கப்பட்டார். அங்கிருந்து நழுவிச்செல்வதற்கு சுவாரெஸும் அவரின் மனைவியும் பெரும்பாடு பட்டனர். பார்ஸிலோ அணி வீரரான ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸியின் பெயர் பொறித்த அங்கியொன்றை அணிந்திருந்த ரசிகருக்கு சுவாரெஸ் 'ஆட்…
-
- 1 reply
- 563 views
-
-
வேர்ணன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்திய காட்சி ஒளிபரப்பப்படுவதை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 2014-07-22 12:04:55 தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் வேர்னன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்தியமை தொடர்பான வீடியோ காட்சியை, அச்சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின்பின் ஒளிபரப்பு செய்யப்படுவதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 3 ஆம் நாள் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான குறிப்பிட்ட காட்சியை ஒளிபரப்ப வேண்டாம் என ஒளிபரப்பாளர்களான டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு தென் ஆபிரிக்க அணி அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சம்பவம் குறித்து தென் ஆபிரிக்க அணி எவ்வித கருத்தையும் வெளியிட மறுத்துவ…
-
- 1 reply
- 564 views
-
-
பேய்! பீதியால் தடுமாறும் இங்கிலாந்து வீரர்கள் Mon, 07/21/2014 - 16:04 இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லண்டனில் உள்ள லாங்காம் 5 நட்சத்திர விடுதியில் பேய் நடமாடுவதாக இங்கிலாந்து வீரர்கள் சிலர் அச்சம் தெரிவித்ததோடு, உடனடியாக விடுதியை மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடுதி 1865 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இப்போது அது மர்ம நடமாட்டம் இருக்கும் விடுதியாக மாறிவிட்டது இனி இங்கு தங்க முடியாது என்று கிரிக்கெட் வீரர்களின் மனைவி, மற்றும் பெண் ஸ்னேகிதிகள் உட்பட வீரர்கள் சிலரே இரவு நேரங்களில் மர்ம நிகழ்வுகள் நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஸ்டூவர்ட் பிரோட் வெளிப்படையாக தனது அச்சத்தைத் தெரிவித்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங…
-
- 1 reply
- 734 views
-
-
ரியல் மெட்ரிட்டில் இணைந்தார் குரூஸ் உலகக்கிண்ண அதிரடி இரட்டைக் கோல் வீரர் ஜேர்மனியின் டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் கிளப் அணிக்காக 6 ஆண்டுகாலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பேயர்ன்மியூனிச் அணிக்காக விளையாடி வந்த நிலையிலேயே அவருக்கு இப்புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது. பிரேஸிலில் நடைபெற்று முடிந்துள்ள உலகக்கிண்ண தொடரில் பிரேஸில் அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் 24 வயதான குரூஸ் இரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு கோல்களைப்போட்டு அதிரவைத்தார். அப்போட்டியில் ஜேர்மனிஇ பிரேஸிலை 7–-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டிருந்தது. இந்நிலையிலேயே உலகக்கிண்ண தொடரின் குரூஸின் சிறப்பான திறமை வெளிப்பாடு காரணமாக ரியல் மெ…
-
- 2 replies
- 461 views
-
-
2014 உலகக் கிண்ண போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட 11 புதிய சாதனைகளின் விபரம்: 2014-07-18 12:07:06 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் ஜேர்மன் அணி வீரர் மிரஸ்லோவ் குளோஸ் தனது 16 ஆவது கோலை அடித்து புதிய சாதனை படைத்தமை தெரியும். ஆனால், 2014 உலகக் கிண்ண போட்டிகளின்போது நிகழ்த்தப்பட்ட ஒரே புதிய சாதனை இதுவல்ல. கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களின் தகவல்களின்படி இத்தொடரில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் பலவற்றின் விபரம்: 1) ஜேர்மன் வீரர் மிரஸ்லோவ் குளோஸ் 16 ஆவது கோலை அடித்து உலக கிண்ண போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரரானார். 2) இம்முறை இறுதிப்போட்டியில் விளையாடிய ஜேர்மன் அணி, அதிகக் எண்ணிக்கை உலக கிண்ண இறுதிப்போட்டியில் (8) விளையாடிய அணியாக சாதனை படைத்தது. 3) பெல்ஜி…
-
- 2 replies
- 417 views
-
-
இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் கால்பந்தை மறந்து குடும்ப பொறுப்பில் கலக்கி வருகிறார். கால்பந்தில் கலக்கி வந்த பெக்காம் குடும்ப பொறுப்பில் அனைவரின் மனம் கவர்ந்த வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தனது மனைவி விக்டோரியா தன்னுடைய பேஷன் வாழ்க்கையில் பிஸியாக இருப்பதால் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பெக்காம் பார்த்து வருகிறார். வீட்டுக்கு தேவையான காய்கறி வாங்கி வருவது குழந்தைகளை பள்ளியில் விடுவது என அனைத்தையும் முழு நிறைவுடன் செய்து வருகிறார் பெக்காம். இது பற்றி பெக்காம் கூறுகையில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறது. இந்த விடயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். காலையில் கு…
-
- 1 reply
- 527 views
-
-
ஜெர்மனி கேப்டன் ஓய்வு ஜூலை 18, 2014. பெர்லின்: ஜெர்மனி கால்பந்து அணி கேப்டன் பிலிப் லாம், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில், ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இத்தொடரில் ஜெர்மனி அணியின் கேப்டனாக பிலிப் லாம், 30, செயல்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென இவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக, இவரது ஏஜென்ட் ரோமன் கிரில் தெரிவித்தார். சிறந்த தற்காப்பு ஆட்டக்காரரான இவர், ஜெர்மனிக்காக இதுவரை 113 போட்டிகளில் பங்கேற்று 5 கோல் அடித்துள்ளார். பேயர்ன் முனிக் அணியுடனான இவரது ஒப்பந்தம் வரும் 2018ம் ஆண்டு வரை உள்ளதால்…
-
- 1 reply
- 543 views
-
-
உலக கால்பந்தாட்ட தரவரிசையில் ஜேர்மன் அணி 20 வருடங்களின் பின் மீண்டும் முதலிடம் 2014-07-18 10:09:03 உலக கிண்ணத்தை வென்ற பிலிப் லாஹ்ம் தலைமையிலான ஜேர்மன் கால்பந்தாட்ட அணி சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது. 1990 ஆம் ஆண்டின்பின்னர் உலக கிண்ணத்தை வென்ற ஜேர்மன் அணி கடந்த 20 வருடங்களில் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றமை இதுவே முதல் தடவையாகும். முன்னாள் சம்பியனும் இதுவரை முதலிடத்தில் இருந்த அணியுமான ஸ்பெய்ன் தற்போது 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா 5 ஆவது இடத்திலிருந்து 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து 3 ஆம் இடத்தையும் கொலம்பியா 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. பெல்ஜியம் 12 ஆவது இடத்திலிருந்த…
-
- 1 reply
- 450 views
-
-
உலகப் புகழ்பெற்ற பாடகியான ரிஹானா, உலக கிண்ண கால்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை தனது கைகளால் தொட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரின் மரக்கானா அரங்கில் கடந்த ஞாயிறன்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை தோற்கடித்து சம்பியனான ஜேர்மன் அணியினருடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டார் பாடகி ரிஹானா. இதன்போது, ஜேர்மனி அணி வீரர்களின் கைகளிலிருந்து உலக கிண்ண கிண்ணத்தை ரிஹானாவும் தொட்டுப்பார்த்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களும் ஊடகங்களின் வெளியாகின. ஆனால், பாடகி ரிஹானா உலக கிண்ணத்தை தொட்டமை சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்மேளனத்தின் விதிகளின்படி, உலக…
-
- 4 replies
- 968 views
-
-
தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்… அரசியலில் தமக்கு நாட்டமில்லை எனவும், அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாயற்ற முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு தாம் சேவ…
-
- 4 replies
- 1.6k views
-
-
உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் ஆனி மாதம் 12 ம் திகதி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க உள்ளது. இறுதி ஆட்டம் 13 ம் திகதி ஆடி மாதம் ரியோ டெ ஜெனீரோ நகரில் நடைபெறும். பிரேசில் நாட்டின் 12 நகரங்களில் விளையாட்டுக்கள் நடைபெற உள்ளன. பிரேசில் உதைபந்தாட்டச் சம்மேளனம் தனது நூற்றாண்டு விழாவைக் காணூம் நிலையில் இரண்டாவது முறையாக பிரேசிலில் நடைபெறும் உலகக் கிணத்திற்கான போட்டிகளுக்கு சகல நாடுகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தன. தென் அமெரிக்காவில் இது ஐந்தாவது முறையாக நடைபெறுகின்றது. 1978 ஆம் ஆண்டில் ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்றது. இம்முறை நடைபெறும் போட்டிகளில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. நடைபெறும் விளையாட்டுக்கள் அனைத்திலும் கோல…
-
- 561 replies
- 31k views
-
-
தங்கபந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை: மரடோனா ரியோடி ஜெனீரோ, ஜூலை 15– உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான தங்க பந்து (கோல்டன் பால்) விருது அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது. அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்லாததால் அவரும் ஆர்வம் இல்லாமல் ஏமாற்றத்துடனதான் இந்த விருதை பெற்றார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்சி இந்த போட்டித் தொடரில் 4 கோல்கள் அடித்து இருந்தார். 4 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்று இருந்தார். இறுதிப்போட்டியில் அவர் கோல் அடிக்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே. இதற்கிடையே தங்க பந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை என்று அர்ஜென்டினாவை சேர்ந்த முன்னாள் பிரபல வீரர் டிகோ மரடோனா கூறியுள்ளார். இது குறித்து அவர…
-
- 1 reply
- 453 views
-
-
கோப்பை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வேதனை உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது. அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:– நான் பெற்ற பரிசு (தங்க பந்து) பற்றி நினைக்கவில்லை. எதையும் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. விருதுகள் என்னை ஆறுதல் படுத்தாது. கோப்பையை இழந்ததை மறக்க முடியவில்லை. அர்ஜென்டினா மக்களுக்க…
-
- 0 replies
- 417 views
-
-
பிரேசிலுக்கு தீராத் துயரம்: நெதர்லாந்துக்கு உலகக் கோப்பை 3-ம் இடம் அரையிறுதிப் படுதோல்வி நினைவுகளும், காயங்களுமே மறையாதிருக்கும் வேளையில், பிரேசில் அணி அடுத்த அடியைச் சந்தித்தது. உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரின் 3ஆம் இடத்திற்கான ஆட்டத்திலும் பிரேசில் அணி படுதோல்வியைச் சந்தித்தது. பிரேசிலியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை ஊதித் தள்ளியது. இந்த முறை அந்த நாட்டின் கால்பந்து ஹீரோ நெய்மார் ஆட்டத்தைப் பார்க்க மைதானத்திற்கு வந்தார். அவர் கண்ணெதிரே இந்த அவலத் தோல்வி ஏற்பட்டுள்ளது பிரேசில் அணிக்கு. அன்று டிஃபென்சில் ஏற்பட்ட இடைவெளி இன்னும் மறையவில்லை. ஆட்டம் தொடங்கி 3-வது நிமிடத்திற்குள் நெதர்லாந்து அபாய வீரர் வான் பெர்சி ப…
-
- 4 replies
- 962 views
-
-
வாழ்த்துகள் ஜெர்மனி! எல்லோரும் எதிர்பார்த்ததைப் போலவே ஜெர்மனி அணி உலகக் கோப்பையை வென்றுவிட்டது. பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில், கோல் மழை பொழிந்து 7-1 என்ற கணக்கில் எப்போது அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்ததோ அப்போதே ஜெர்மனியின் வெற்றி உறுதியாகிவிட்டது. இறுதிப் போட்டியில் அது எதிர்கொண்ட அணி அர்ஜென்டினா என்பதால், ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. அர்ஜென்டினா சாமானியமான அணி அல்ல என்றாலும், ஜெர்மனியைப் பணிய வைக்கும் அளவுக்கு அதனிடம் உத்தி இல்லை என்பது இறுதி ஆட்டத்தில் வெளிப்பட்டுவிட்டது. உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் கோல் மழையை எதிர்பார்த்திருந்த காலங்களெல்லாம் போய்விட்டன. ஆனால், பிரேசிலுக்கு எதிரான ஜெர்மனியின் அசாதாரண ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு, கொஞ்சம…
-
- 1 reply
- 423 views
-