விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
நாடு திரும்பும் இலங்கை அணியின் அடுத்த மோதல் இங்கிலாந்துடன் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்குமிடையேயான இப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் முதலில் ஆரம்பமாகவுள்ள ஐந்து ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி (பகல் 2.30)தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் இரண்டாவது போட்டி 13 ஆம் த…
-
- 0 replies
- 526 views
-
-
பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் டயமன்ஸ் சம்பியன் கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டு நிகழ்வில், பெண்களுக்கான மென்பந்தாட்ட கிரிக்கெட் போட்டியில் வதிரி டயமன்ஸ் அணி சம்பியனாகியது. கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்குபற்றிய இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 6 பேர் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இமையாணன் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (08) நடைபெற்றது. இறுதிப்போட்டியில் அல்வாய் மனோகரா அணியும் வதிரி டயமன்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மனோகரா அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 5 ஓவர்களில் 43 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டயமன்ஸ் அணி, 4.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து…
-
- 3 replies
- 456 views
-
-
அடிலெய்ட் மைதானத்தில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நவம்பர் 27-ம் தேதி ஆஸி.-நியூஸி. அணிகள் மோதுகின்றன. | படம்: ராய்ட்டர்ஸ். கிரிக்கெட் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மீது ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் விதமாக பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட பரிசோதனை முயற்சியாக, இந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி, ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே முதன் முதலாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காகவென்றே ‘பிங்க்’ நிறப் பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் 3-வது…
-
- 0 replies
- 567 views
-
-
இந்திய அணிக் கப்டன் தோனிக்கு சிறந்த எதிர்காலமுள்ளதென்கிறார் சப்பல் [03 - October - 2007] [Font Size - A - A - A] இந்திய அணிக்கப்டன் தோனிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சப்பல் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சப்பல் உலகக் கிண்ணப் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் இந்திய அணிக்கு பயிற்சியாளர் இன்று வரை நியமிக்கப்படவில்லை. இராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் பியூச்சர் கிரிக்கெட் அக்கடமியின் ஆலோசகராக கிரேக் சப்பல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஜெய்ப்பூர் வந்தார். அப்போது கிரேக் சப்பல் நிருபர்கள…
-
- 2 replies
- 1.3k views
-
-
இமானே கெலிஃப்: பாரிஸ் ஒலிம்பிக்கின் பாலின தகுதிச் சோதனை - சர்ச்சை ஏன்? அறிவியல் சொல்வது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இமானே வெற்றி பெற்றபோது ஆயிரக்கணக்கான அல்ஜீரிய ரசிகர்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், சோஃபியா பெட்டிஸா பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட இமானே கெலிஃப், ஓராண்டு கழித்து தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிகளில் அதிகம் பேசப்பட்ட இந்த சர்ச்சையை கடந்து, அல்ஜீரிய வ…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
புதிய இலங்கைக்கான புதிய சவால் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜாம்பவான்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தனவின் பின்னரான புதிய அணியாக, இக்குழாமிலிருந்து தெரிவுசெய்யப்படவுள்ள அணி அமையவுள்ளது. அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், உப தலைவராக லஹிரு திரிமான்ன தொடர்ந்தும் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டியொன்றில் அவர் சதத்தைப் பெற்று இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆகியுள்ள போதிலும், அவரது இறுதி 26 இனிங்ஸ்களில் (13 டெஸ்ட்கள்) இரண்டே இரண்டு அரைச்சதங்களுடன் 19.13 என்ற சராசரியைக் கொண்டிருக்கின்ற போதிலும், அவர் மீதான நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. லஹிரு திர…
-
- 0 replies
- 252 views
-
-
இலங்கை அணியின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் மாலிங்க இலங்கை -பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (26) நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியுடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தனது 15 வருடகால சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் கால்பதித்த லசித் மலிங்க இதுவரை 226 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இலங்கை அணி சார்பில் தனது இறுதிப் போட்டியில் விளையாடிய லசித் மாலிங்க பங்களாதேஷ் அணியின் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.…
-
- 0 replies
- 406 views
-
-
காயம் காரணமாக சர்கர் விலகல் November 07, 2015 சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் பங்களாதேஸ் அணியின் நட்சத்திர வீரரான சர்கர். நடப்பு வருடத்தில் இதுவரை 672 ஓட்டங்களை குவித்துள்ள சர்கர் இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளை பங்களாதேஸ் வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்தவர். தற்போழுது சிம்பாப்வே அணி பங்களாதேஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரண்டு ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஒருநாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதற்காக சர்கர் நேற்றுமுன்தினம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்து வீசி பயிற்சி எடுக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக அவர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுக…
-
- 6 replies
- 998 views
-
-
தென்னாப்ரிக்கா சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செவ்வாய், 24 நவம்பர் 2015 (00:18 IST) தென்னாப்ரிக்காவின் சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்ரிக்காவில், இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தென்னாப்ரிக்காவின் சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தான் ரபடா அறிமுகம் ஆனார். ஆனால், அந்த போட்டியில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆநால் 6 விக்கெட்டுகள் அற்புதமாக வீழ்த்தினார். இதன் மூலம், அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற…
-
- 0 replies
- 639 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்: பெஷாவாரில் அப்ரிடி, லாகூரில் கெயில் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர் தெரிவு, இன்று இடம்பெற்றது. இதில், கராச்சி கிங்ஸ், லாகூர் கலான்டர்ஸ், பெஷாவார் ஸல்மி, இஸ்லாமாபாத் யுனைட்டட், குவேட்டா கிளாடியேற்றர்ஸ் ஆகிய 5 அணிகளும், தங்களுக்கான வீரர்களைத் தெரிவுசெய்தன. இதன்படி, பெஷாவார் அணி சார்பாக ஷகிட் அப்ரிடியும் லாகூர் அணி சார்பாக கிறிஸ் கெயிலும் குவேட்டா அணி சார்பாக கெவின் பீற்றர்சனும் இஸ்லாமாபாத் அணி சார்பாக ஷேன் வொற்சனும் தெரிவுசெய்யப்பட்டனர். தெரிவுசெய்யப்பட்ட ஏனைய வீரர்களின் விவரம்: கராச்சி கிங்ஸ்: ஷொய்ப் மலிக், ஷகிப் அல் ஹசன், சொஹைல் தன்வீர், இ…
-
- 4 replies
- 338 views
-
-
பார்சிலோனா, ரியல் மெட்ரிட் இலகு வெற்றி By Mohamed Shibly ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, ரியல் மெட்ரிட் எதிர் ஒசாசுனா ஒசாசுனா அணிக்கு எதிரான போட்டியை 4-1 என்ற கோல் கணக்கில் இலகுவாக வென்ற ரியல் மெட்ரிட் அணி லா லிகா புள்ளிப்பட்டியலில் 3 புள்ளி இடைவெளியுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. யுனை கார்சியா தலையால் முட்டிப் பெற்ற கோல் மூலம் ஒசாசுனா அணி 14 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற்றபோதும் ஐந்து நிமிட இடைவெளியில் இஸ்கோ மற்றும் …
-
- 0 replies
- 445 views
-
-
5 முறை கிராண்ட்ஸ்லாம்கள் வென்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். 32 வயதான இந்த ரஷ்ய வீராங்கனை, வாக் அண்ட் வேனிட்டி ஃபேர் இதழுக்காக எழுதியுள்ள கட்டுரையில், தனது உடல் காயங்கள் தனக்கு பெரும் கவனச் சிதறலை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக அவர் தோள்பட்டை காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரால் பல போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. தனது 17 வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர், நான்கு முக்கிய கிராண்ட்ஸ்லாம்களையும் வென்றுள்ளார். திறமையான ஆட்டம், அசத்த வைக்கும் சர்வ்கள், உடல் தகுதி தொடர்பான பிரச்சனைகள…
-
- 0 replies
- 723 views
-
-
இத்தாலி பகிரங்க டென்னிஸில் அண்டி மறே, செரீனா சம்பியன்கள்: 85 வருடங்களின் பின்னர் பிரித்தானிய ஆடவர் சம்பியன் இத்தாலி பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை அண்டி மறேயும் மகளிர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை செரீனா வில்லியம்ஸும் சுவீகரித்தனர். மட்றிட் பகிரங்க டென்னிஸ் போட்டியில் நொவாக் ஜோகோவிச்சிடம் அடைந்த தோல்வியை ரோம் பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் அண்டி மறே நிவர்த்தி செய்துகொண்டார். மழை காரணமாக டென்னிஸ் அரங்கு ஆபத்தைத் தோற்றுவிக்கலாம் என ஜோகோவிச் முறைப்பாடு செய்த போதிலும் போட்டியைத் தொடருமாறு மத்தியஸ்தர் ஸ்டெய்னர் கேட்டுக்கொண்டார்.…
-
- 0 replies
- 331 views
-
-
கிரிக்கெட் மட்டையின் அளவில் புதிய கட்டுபாடு வருமா? கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டையின் அளவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தொடர்பாக பல முன்னணி விளையாட்டு வீரர்களின் கோரிக்கைக்கு கிரிக்கெட் நிர்வாக அமைப்பான சர்வதேச கிரிகெட் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இலண்டனிலுள்ள லார்ட்ஸில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, இந்த விளையாட்டின் விதிகள் பற்றிய ஒட்டு மொத்த பொறுப்பையும் கொண்டிருக்கும் மார்லிபோன் கிரிக்கெட் கிளப் இந்த கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டுமென தான் விரும்புவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் மட்டையின் நீளம் மற்றும் அகலம் பற்றிய கட்டுபாடுகள் இருந்தாலும், அதனுடைய ஆழம் (…
-
- 0 replies
- 521 views
-
-
ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் : சிஎஸ்கே முடிவால் யாருக்கு லாபம்? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா 'ஐபிஎல் டிரேட்' உறுதியாகியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஜடேஜாவையும், ஆல்ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஏலத்தைத் தவிர்த்து 'டிரேட்' மூலமாகவும் வீரர்களை வாங்க முடியும். 2009ம் ஆண்டு முதலே ஐபிஎல் டிரேட்கள் நடந்துகொண்டுதான் இர…
-
- 10 replies
- 572 views
- 1 follower
-
-
இலங்கை நடுவர் குமார் தர்மசேனாவுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்! அலஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. வங்கதேச தொடரை அந்த அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதைத் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி எதிர்வரும் 2ம் திகதி இந்தியாவுக்கு செல்கிறது. அந்த அணி டாக்காவில் இருந்து இந்தியா புறப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தானை சேர்ந்த அலிம் தாரை நடுவராக ஐசிசி நியமித்திருந்தது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த இடத்திற்கு இலங்கை நடுவர் குமார் தர்மசே…
-
- 0 replies
- 408 views
-
-
-
'அரசியல் எங்கள் ஆட்டத்தின் நேர்த்தியை குறைக்காது' இலங்கை வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்காதது தங்களின் ஆட்டத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்று ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக ஏப்ரல் 3ஆம் தேதி துவங்க இருக்கும் 6வது ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் சென்னையில் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கை வீரர்கள் சென்னை போட்டிகளில் பங்கேற்க்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா, இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அரசியல் எங்களை சென…
-
- 21 replies
- 1.9k views
-
-
டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச் விடைபெற்றார்! செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான அனா இவனோவிச். டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் பெற்று, தரவரிசையில் முதலிடம் பெற்றார். 12 வாரங்கள் தொடர்ந்து நம்பர் 1 இடம் வகித்த இவர் 15 மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸில் அதிகம்பேர் ரசிக்கும் வீராங்கனை யார் என்று 2015ம் ஆண்டில் ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முதலிடத்தைப் பிடித்திருந்தார். முன்னணி வீராங்கனையாக விளங்கி வந்த அவர், சமீப காலமாக தொடர் தோல்விகளால் தரவரிசையில் பின் தங்கியிருந்தார். இந்த நிலையில் …
-
- 0 replies
- 346 views
-
-
-
செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளின் நான்காவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் ஜெர்மனியின் சபீன் லிசீக்கியிடம் 2-6, 6-1, 4-6 எனும் நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்தப் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே சபீன் லிசீக்கியின் ஆளுமை அதிகமாக இருந்தது. துவக்கம் முதலே அவரது ஆட்டம் அதிரடியாக இருந்தது என்று பிபிசிக்காக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் வர்ணனையைச் செய்து வரும் முன்னாள் சாம்பியன் ட்ரேஸி ஆஸ்டின் கூறுகிறார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை ஐந்து முறை வென்றவர் செரீனா வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வ…
-
- 0 replies
- 301 views
-
-
திசர பெரேரா அதிரடி : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி சிறந்த ஆரம்ப துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் குணதிலக ஆகியோர் அரைச்சதத்தை கடந்து முதல் விக்கட்டுக்காக 123 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் குசல் பெரேரா 59 ஓட்டங்களையும், குணதிலக 64 ஓட்டங்களைய…
-
- 0 replies
- 345 views
-
-
இந்திய கிரிக்கெட்டில், 'மும்பை லாபி ' வெகு பிரபலம். மும்பையைச் சேர்ந்த நான்கைந்து வீரர்கள் இந்திய அணியில் இருந்த காலமும் உண்டு. அணியில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். கவாஸ்கர் கேப்டனாக இருந்தால், மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார். ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார் போன்றோர் அப்படித்தான் இந்திய அணியில் கோலோச்சினர். அணி நிர்வாகமும் மும்பைவாசிகள் கையில்தான் இருந்தது. இந்த நிலை மாறியுள்ளதால், தற்போது சச்சினால் `மும்பை லாபி' மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகியுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் திடீரென பயிற்சியாளர் பதவிக்க…
-
- 1 reply
- 565 views
-
-
இலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு! மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, அங்கு ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது. ஆனால், டி-20 போட்டியில் தோல்வியடைந்தது. இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு, மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், இலங்கைத் தொடருக்கான டெஸ்ட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில், கருண் நாயருக்குப் பதிலாக ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக, முகமது சமிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்விலிருந்து கே.எல். ராகுல் அணிக்குத் திரும்பியுள்ளார். …
-
- 54 replies
- 5.4k views
-
-
இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை இங்கிலாந்து - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் தென் ஆப்ரிக்க அணி உள்ளது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், தென் ஆப்ரிக்க அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இங்கிலாந்து அணியும், தொடரை சமன்…
-
- 4 replies
- 616 views
-