விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
சேத்தன் கொரடா சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர். இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கெடுத்தார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கார் பந்தய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசும் சேத்தன், “எதையும் எளிதில் விட்டுக்கொடுத்து விடக்கூடாது. நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது கார் பந்தயங்கள் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன” எனத் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், “விடா முயற்சி வேண்டும். எது ஒன்றையும் முடிவெடுத்தால் விடக்கூடாது. எந்தவொரு எல்லைகளையும் மனதில் நிர்ணயித்துக் கொ…
-
-
- 1 reply
- 321 views
- 1 follower
-
-
'இந்திய டி20 அணியை வீழ்த்துவது சிரமம்!' - சொல்கிறார் ஆஸி. அணியின் ஆலோசகர்! டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து நாட்டு வீரர்களும் இந்தியாவில் எப்படி விளையாடுவது என தயாராகி வருகிறார்கள். அதில் ஆஸ்திரேலிய அணி ஒரு படி மேலே சென்று, இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீதரன் ஸ்ரீராமை ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக நியமித்துள்ளது. மைக் ஹஸ்ஸியுடன் இணைந்து, ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியளிப்பார். இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்த, ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியளிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஸ்ரீதரனிடம் பேசினேன்... ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகர் பதவி எப்படி கிடைத்தது? …
-
- 0 replies
- 571 views
-
-
இலங்கை பகிரங்க கோல்வ் போட்டிகளில் தங்கராஜாவுக்கு முதலாவது சம்பியன் பட்டம் (நெவில் அன்தனி) றோயல் கலம்போ கோல்வ் கழகத்தினால் நடத்தப்பட்ட பெலிஸ் இலங்கை பகிரங்க கோல்வ் போட்டிகளில் நடராஜா தங்கராஜா மூன்று நகர்வுகள் வித்தியாசத்தில் சம்பியனானார். 43 கோல்வ் வீரர்கள் பங்குபற்றிய இலங்கை பகிரங்க கோல்வ் போட்டிகள் கடந்த வாரம் றோயல் கோல்வ் கழக புல் தரையில் நடைபெற்றது. இந்த நான்கு நாள் போட்டியில் முதல் இரண்டு தினங்களும் குறைந்த நகர்வுகளுடன் தங்கராஜா முன்னிலையில் இருந்தார். ஆனால், மூன்றாம் நாளன்று 2015 சம்பியன் கந்தசாமி பிரபாகரன் முன்னிலை அடை…
-
- 0 replies
- 656 views
-
-
’’சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் ஒய்வு தோல்விக்கு காரணம் அல்ல’’ டில்ஷான் March 11, 2016 சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோர்களின் ஓய்வையே எப்போதும் தோல்விக்கு காரணம் காட்ட முடியாது என்று டில்ஷான் கூறியுள்ளார். டி20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் களைகட்ட தொடங்கியுள்ளது. இதற்காக இலங்கை அணி இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது. இந்நிலையில் உலகக்கிண்ண டி20 தொடர் குறித்து இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் கூறுகையில், ”எங்கள் அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் உள்ளனர். சமீபத்திய தொடர்களின் இருந்து அவர்கள் அதிக அனுபவம் பெற்றிருப்பார்கள். முன்னாள் வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே அணியில் இல்லை என்று எப்போதும் நாம் காரணம் காட்ட முடியாது. அனுபவ வீரர்களான சனத்…
-
- 0 replies
- 380 views
-
-
ஆரம்பமானது வடமாகாண விளையாட்டுப் போட்டி வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண பாடசாலைகளின் வீர, வீராங்கனைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (14) முதல் ஆரம்பமாகியது. இன்றை ஆரம்ப நிகழ்வு வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன் கலந்துகொண்டார். இந்த விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஐந்து நாட்களிலும் 258 மைதான மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட…
-
- 4 replies
- 1.7k views
-
-
கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது! இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – பாணந்துறை, ஹொரேத்துட்டுவ பகுதியில் இன்று அதிகாலை மென்டிஸ் பயணித்த கார் – சைக்கிளுடன் மாேதிய விபத்தில் ஒருவர் பலியானமை தாெடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த விபத்தில் 64 வயதுடைய ஒருவர் பலியானமை முறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கிரிக்கெட்-வீரர்-குசல்-ம/
-
- 0 replies
- 540 views
-
-
நியூஸிலாந்து - மும்பை மோதும் 3 நாள் கிரிக்கெட் இன்று தொடக்கம் நியூஸிலாந்து மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நியூஸிலாந்து வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். படம்: ஆர்.வி.மூர்த்தி நியூஸிலாந்து - மும்பை அணி களுக்கிடையேயான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட நியூஸிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிராக அந்த அணி 3 நாள் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளது. இப்போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மை…
-
- 0 replies
- 373 views
-
-
பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரீ தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகியதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் டென்னிஸ் சாம்பியன் ஆண்டி மர்ரீ ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கோப்புப்படம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அரையிறுதி ஆட்டத்திலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகினார். இதன் காரணமாக, தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதற்கு மர்ரீக்கு தேவைப்பட்ட வெற்றி கிடைத்தது. கடந்த திங்களன்று, புதிய பட்டியல் வெளியான போது, உலகத் தரவரிசையில் முதல் இடத்திலிருந்த நோவாக் ஜோகோவிச்சை ஆண்டி மர்ரீ முந்தியுள்ளார். 1973 ஆம் ஆண்டிலிருந்து கணினிமயமாக்கப்பட்ட தர…
-
- 0 replies
- 379 views
-
-
பொழுதுபோக்கு பெண்களை ஹோட்டல் அறைக்குள் அழைத்துவந்த இரு பங்களதேஷ் வீரர்களுக்கு அபராதம் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களான அல்- அமின் ஹுசைன் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோருக்கு ஒழுங்கு விதிகளை மீறிய குற்றசாட்டுக்காக 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளுக்குள் பொழுதுபோக்கு பெண் விருந்தினர்களை அழைத்துவந்துள்ளதால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களதேஷ் பிரிமியர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டுடிருக்கும் நிலையில், இவர்களுக்கு நேற்று குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பங்களதேஷ் கிரிக்கெட் சபை விடுத்த…
-
- 0 replies
- 318 views
-
-
வாரம் 96 லட்சம் - மைக்கேல் ஷூமேக்கர் மெடிக்கல் பில் இதுவரை ரூ.116 கோடி! ‘ஒரு தலைவலி, காய்ச்சல் என்றாலே 500 ரூவா காலியாகிடுதுப்பா” - இப்படிப் புலம்பாதவர்களே இருக்க முடியாது. மருத்துவச் செலவுகள் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்ட காலகட்டம் இது. எதிர்பாராதவிதமாய் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்ட கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மெடிக்கல் பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவரது மருத்துவச் செலவாக இதுவரை ரூ. 116 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேரந்த 45 வயதான பார்மூலா -1 கார் பந்தய வீரர் மைக்கல் ஷூமேக்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி, பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொ…
-
- 0 replies
- 414 views
-
-
மாகாண கூடைப்பந்தில் யாழ்ப்பாணம் சம்பியன் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டம் சம்பியனானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று மாலை நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அணியை எதிர்த்து மன்னார் மாவட்ட அணி மோதியது. 42:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட அணி வெற்றிபெற்று கிண்ணம் வென்றது. http://uthayandaily.com/story/2802.html
-
- 1 reply
- 330 views
-
-
Nadia Comaneci: ஒலிம்பிக் சரித்திரத்தை நிரந்தரமாக மாற்றி எழுதிய ஜிம்னாஸ்டிக் நாயகி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிக எடை தூக்கியது யார்? அதிக கோல் அடித்தது யார்? அதிக ரன்கள் எடுத்தது யார்? குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்தது யார், அதிக தூரம் வீசியது யார்? என எல்லா விளையாட்டுகளிலும் மிகத் தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஆனால் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சில விளையாட்டுகளில் முழுக்க முழுக்க நடுவர்களின் தனிப்பட்ட புள்ளிகளைப் பொறுத்து வெற்றியாளர் தீர்மனிக்கப்படுவார். அப்படிப்பட்ட விளையாட்டில், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக 10-க்கு 10 புள்ளிகளைப் பெற்று மொத்த உலகையும் வ…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
மகளிர் உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியான தோல்விகளை சந்திக்கும் இலங்கை Merissa Aguilleira's late cameo gave West Indies a late lift, West Indies v Sri Lanka, Women's World Cup, July 9, 2017 ©Getty Images இங்கிலாந்தில் நடைபெற்று வரும், மகளிர் உலகக் கிண்ணத்தில் இன்று (9) நடைபெற்று முடிந்திருக்கும் போட்டியொன்றில், இலங்கை மகளிர் அணியை மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 47 ஓட்டங்களால் வீழ்த்தி இத்தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெர்பி நகர கவுண்டி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை மகளிர் அணியின் தலைவி இனோக்கா ரணவீர முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை ஸ்டெபானி டெ…
-
- 0 replies
- 326 views
-
-
நாக்பூர்: 14 வயதுக்குட்டவர்களுக்கான அகில இந்திய டென்னிஸ் சங்க சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் வருண் வைகோ. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அரசியலில் கலக்கினால் பேரன் 'வருண் வைகோ' டென்னிஸில் கலக்குகிறார். தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறு டென்னிஸ் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வருகிறார் வருண் வைகோ. கடந்த ஞாயிறு அன்று நாக்பூரிலுள்ள சி.பி.டென்னிஸ் சென்டரில் நடந்த போட்டியில் அவர் தனது போட்டியாளரான மல்ஹர் பேகேவை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் மண்ணைக் கவ்வச் செய்து 14 வயதுக்குட்பட்டோர் போட்டியின் ஆண்கள் பிரிவில் கோப்பையை கைப்பற்றினார். வைகோ அவர்களின் பேரனான வருண் வைகோ தற்போது டென்னிஸ் தர வரிசையில் 6ஆவது இடத்தில…
-
- 3 replies
- 709 views
-
-
ஐசிசி மகளிர் உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா 27 மார்ச் 2022, 03:22 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகக் கோப்பை அரை இறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. தென்னாப்பிரிக்காவின் இறுதிக்கட்ட பேட்டிங்கின்போது, 48 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி, 6 விக்கெட்களை இழந்து, 261 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க, ஓவரின் ஒவ்வொரு பந்…
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
ஸ்வீடனிடம் தோல்வி எதிரொலி: உலகக்கோப்பைக் கால்பந்துக்கு இத்தாலி தகுதி பெறுவதில் நெருக்கடி இத்தாலியை வீழ்த்திய ஸ்வீடன் அணி கொண்டாடும் காட்சி. - படம். | கெட்டி இமேஜஸ். உலக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று பிளே ஆஃப் ஆட்டத்தில் ஸ்வீடனிடம் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியதையடுத்து 1958-க்குப் பிறகு உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன், சோல்னாவில் நடைபெற்ற இந்த பிளே ஆஃப் போட்டியில் ஸ்வீடன் பதிலி வீரர் ஜேகப் ஜொஹான்சன் கோல் அடித்தார், ஆனால் இத்தாலியினால் ஸ்வீடனின் வலுவான தடுப்பு வியூகத்தை ஒருமுறை கூட ஊடுருவ முடியவில்லை. இதனையடுத்து சான்சிரோவில் அடு…
-
- 0 replies
- 316 views
-
-
பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்தார் மெஸ்சி கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்சி பார்சிலோனா உடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்துள்ளார். அவரது டிரான்ஸ்பர் பீஸ் 835 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக திகழும் லயோனல் மெஸ்சி இந்த தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் ஆன பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். தனது ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த கிளப்பிற்காகத்தான் விளையாடி வருகிறார். தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தாலும் அவரது ஒப்பந்தம் குறிப்பிட…
-
- 0 replies
- 307 views
-
-
பணப் பிரச்சினையால் உகாண்டாவில் தவித்து வரும் பாகிஸ்தான் வீரர்கள் உகாண்டா கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டி20 கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டு பணப்பிரச்சினை ஏற்பட்டதால் 20 பாகிஸ்தான் வீரர்கள் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சயீத் அஜ்மல், யாசீர் அகமது, இம்ரான் பர்கத் உள்ளிட்ட 20 வீரர்கள் உகாண்டாவில் நடைபெறுவதாக இருந்த 20 ஓவர் லீக் தொடரில் பங்கேற்க சென்று இருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் உகாண்டாவில் உள்ள கம்பலாவுக்கு சென்றதும், பண வரவு செலவு பிரச்சினை காரணமாக 20 லீக் தொடர் ரத்து செ…
-
- 1 reply
- 368 views
-
-
இளையோர் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 9 ஆம் இடத்துக்கான கோப்பைப் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட இலங்கை இளையோர் அணி, விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்கவின் அபார சதத்தின் உதவியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த 13 ஆம் திகதி முதல் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதில் D பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் மற்றம் பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவி, காலிறுதியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டது. …
-
- 0 replies
- 487 views
-
-
ஈடன் கார்டன் மைதானத்துக்கு ஸ்டீவ் வாஹ் புகழாரம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டி யுள்ளார். இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட் டின் மெக்காவாகத் திகழ்கிறது. இந்த நிலையில் அந்த மைதானத்தோடு ஈடன் கார்டனை ஒப்பிட்டுள்ள ஸ்டீவ் வாஹ், “இந்தியாவில் நான் கடைசியாக சுற்றுப்பயணம் மேற் கொண்ட தொடரில் ஈடன் கார்டனில் விளையாடியபோது 5 நாட்களுமே 90 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அந்த மைதானம் நிரம்பி வழிந்தது. அந்த மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அது மிகவும் வியப்பான மைதானம் ஆகும். அங்கு சதமடித்த நான் அதிர்ஷ்…
-
- 0 replies
- 439 views
-
-
கிரிக்கெட்...கால்பந்து...ஹாக்கி! * ‘சகலகலா’ தோனி சாகசம் அக்டோபர் 25, 2014. ராஞ்சி: கிரிக்கெட்டில் சிகரங்களை தொட்ட தோனி, ஐ.எஸ்.எல்., தொடரில் சென்னை கால்பந்து அணியின் இணை உரிமையாளரானார். தற்போது ஹாக்கி அணியை வாங்கி தனது எல்லையில்லா விளையாட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி, 33. 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடர்களில் கோப்பை வென்றார். பைக் பிரியர்: கிரிக்கெட் போட்டி தவிர, பைக்குகள் மீது இவருக்கு ஆர்வம் அதிகம். 2013ல் ‘மகி ரேசிங் டீமை’ நடிகர் நாகார்ஜூனாவுடன் இணைந்து வாங்கினார். ‘சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப்’ பந்தயங்களில் இந்த அணி …
-
- 0 replies
- 573 views
-
-
எம்பாப்பே அடித்த சாதனை கோல்: ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரில் கோலியாத்தாக வலம் வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி லீக் ஆட்டம் ஒன்றில் எஃப்.சி. நான்ட் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் வரலாற்றில் நட்சத்திர வீரரான எம்பாப்பே புதிய சாதனை படைத்துள்ளார். பிரான்சின் லீக் 1 கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்கள் நிரம்பிய, பலம் வாய்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி எஃப்.சி.நான்ட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டம் பாரிசில் உள்ள பார்சி டெஸ் பிரின்ஸஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாரிஸ் செயின்ட் ஜெர…
-
- 0 replies
- 435 views
- 1 follower
-
-
செயலாளர் பதவியை வகிக்கும் முதலாவது தமிழன் -ஏ.தேவராஜா- "இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சர்வதேச ரீதியில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அணியாகத் திகழ்வதினால், எதிர்வரும் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டம் வரை இலங்கை முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது" இவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக்குழுவின் செயலாளர் கே.மதிவாணன் தினக்குரலுக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்தார். இப்பேட்டியில் அவர் முதலில் தன்னைப் பற்றி தெரிவிக்கையில்; எனது சொந்த இடம் பருத்தித்துறை. நான் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கல்வி கற்றேன். சிறுவயதில் இருந்து எனக்கு கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம். கல்லூரியின் கிரிக்கெட் அணியில் நான் சிறப்பாக விளையாடியதினால் யாழ். மாவட்ட…
-
- 0 replies
- 875 views
-
-
பந்து தாக்கியதில் பாக்., வீரர் மரணம் ஜனவரி 26, 2015. கராச்சி: பாகிஸ்தானில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், பந்து மார்பில் தாக்கியதில் இளம் வீரர் ஜீஷான் முகமது மரணமடைந்தார். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், நேற்று நடந்த கிளப் அணிகளுக்கு இடையிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் வீசிய பந்து, இளம் வீரர் ஜீஷான் முகமதுவின், 18, மார்பில் பலமாக தாக்கியது. இதனால் சுருண்டு விழுந்த இவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜீஷான் முகமது மரணமடைந்தார். இதுகுறித்து ஜீஷான் முகமதுவை பரிசோதித்த டாக்டர் சமாத் கூறுகையில், ‘‘ஜீஷான் முகமதுவின் மார்பு பகுதியில் தாக்கிய பந்து, அவரது இதயத்தை பல…
-
- 1 reply
- 474 views
-
-
உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சென்! உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில், நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சென், நான்காவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியனான மேக்னஸ் கார்ல்சென், அமெரிக்காவின் ஃபபியானோ கருணா இருவரும் சம்பியன் பட்டத்துக்காக மோதிக்கொண்டனர். இதில் மேக்னஸ் கார்ல்சென் நடப்பு சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனும், 26 வயதான கருணா, 1972ஆம் ஆண்டு பாபி ஃபிஷருக்குப் பிறகு உலக சம்பியன் பட்டம் வெல்லும் அமெரிக்க வீரர் என்கிற பெருமையை அடைய வேண்டுமென்ற வேட்டைகயுடனும் களமிறங்கினர். இருவரும் இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் மோதிய நில…
-
- 0 replies
- 448 views
-