Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அமெரிக்காவில் அனைத்து உதவிகளையும் எதிர்வீரசிங்கமே செய்து தருகின்றார் -சுசந்திகா [09 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] `சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு விளையாட்டுத்துறை மூலம் புகழ்தேடித்தந்த வீரர்கள் வரிசையில் சுசந்திகா ஜெயசிங்கவே முதலிடத்தில் இருக்கின்றார். இதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்' இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஜப்பானின் ஒசாக்கா மாநிலத்தில் நடைபெற்ற 11 ஆவது உலகமெய்வல்லுநர் சாம்பியன் போட்டியில் பெண்களுக்கான 200 மீற்றர் ஒட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்ற சுசந்திகாவுக்கு விளையாட்டு அமைச்சரின் தலைமையில் விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் அமைச்சர் காமினி லொக்குகே…

    • 0 replies
    • 1.1k views
  2. இலங்கை அணி 231 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு இலங்கை – தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடும்படி அழைத்தது. தென் ஆபிரிக்க அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் மற்றும் லுங்கி எங்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். 232 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தென் ஆபிரிக்கா அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது. http://www.dailyceylon.com/178699

  3. இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இறுதி இருபதுக்கு இருபது போட்டி இன்று! இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. ஜொஹன்னஸ்பேர்கில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளதுடன், தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிராக 2 ஆவது போட்டியில் களமிறங்கிய தென்னாபிரிக்க குழாத்தினரே இன்றைய போட்டியிலும் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இலங்கை அணியின் சதீர சமரவிக்ரம மற்றும் ஹசித பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய போட்டிக்காக அழைக்கப்பட…

  4. வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசைன் அணியிலிருந்து நீக்கம் வீட்டில் வேலைபார்த்த சிறுமியை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வங்கதேச கிரிக்கட் வீரர் ஷஹாதத் ஹுசைனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. வங்கதேச கிரிக்கட் வீரர் ஷஹாதத் ஹுசைனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹுசைனும் அவரது மனைவியும் அவர்களின் வீட்டில் வேலைபார்த்துவந்த 11 வயது சிறுமியை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்தே கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தலைமறைவாகியுள்ள ஷஹாதத் ஹுசைனை தேடிவருவதாக காவல்துறை கூறுகின்றது. அவர் துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சிறுமி மருத்துவமனையில் …

  5. தென்னபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 02 ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் ஆர்பமானது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. மயங்க் அகர்வால் 215 ஓட்டம் எடுத்தார். ரோகித் சர்மா 176 ஓட்டம் எடுத்தார். இதன்பின்னர் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. எல்கர் 160 ஓட்டங்களையும், டீகொக் 111 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 7 விக்கெட்டுக்களை சாய்த்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 வ…

    • 0 replies
    • 432 views
  6. ’’டோனியை எதிர்கொள்வது கஸ்டம்’’ ஜடேஜா December 17, 2015 டோனிக்கு பந்து வீசுவது சவாலான விடயம் என்று ராஜ்கோட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜடேஜா தெரிவித்துள்ளார். ஐபிஎல் புதிய அணிகளான புனேவுக்கு டோனியும், ராஜ்கோட்டுக்கு டோனியும் ஒப்பந்தமாகியுள்ளனர். இதனால் டோனியும், ஜடேஜாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி ஜடேஜா கூறுகையில், “குறுகிய நேர கிரிக்கெட்டில் டோனியை கட்டுப்படுத்துவது மிக கடினம். அவருக்கு பந்துவீசுவது என்பது மிகப் பெரிய சவால். அவர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை படைத்தவர் என்பதை அடிக்கடி நிரூபித்துள்ளார். இருப்பினும் அவரது சவால்களை முழுத் திறமையுடன் எதிர்கொள்ள முயற்சிப்பேன்” என்று தெரிவித்…

  7. சல்யூட் சார்... பதான்கோட் மோதலில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீரர் வீர மரணம் ! பதான்கோட் விமானப்படைத் தளத்தில் ஜெய்ஸ்- இ - முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடியில் விமானப்படைத் தளத்துக்குள் நுழைந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் , 7 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். அதில் காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பதேக் சிங்கும் ஒருவர். கடந்த 1995ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர். அந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் அணியில் மூத்த வீ…

  8. Sports News In Tamil Aus Vs Pak Imam Ul Haq Fielding Video David Warner யப்பா என்னா டைவ்..! பாகிஸ்தானில் இப்படி ஒரு ஃபீல்டரா? வியந்த ஆஸ்திரேலியா (வீடியோ) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி, இன்று (நவ.8) மூன்றாவது டி20 போட்டியில் விளையாடியது. இதில், ஆஸி., 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்று, டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டும் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலி…

  9. மரடோனா மீது பீலே கடும் தாக்கு! 1991ஆம் ஆண்டு கொகெய்ன் போதை மருந்து எடுத்துக் கொண்டதாக, 1994ஆம் ஆண்டு ஸ்டெராய்ட்களை பயன்படுத்தியதாக தடை செய்யப்பட்ட அர்ஜென்டீன நட்சத்திரம் மரடோனாவின் சாதனைகளை பறிமுதல் செய்யவேன்டும் என்று பிரபல கால்பந்து நட்சத்திரம் பீலே கூறியுள்ளார். போதை மருந்து எடுத்துக் கொண்ட ஏமாற்றுக்காரரான மரடோனாவின் அனைத்துக் கால்பந்து சாதனைகளைக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் பீலே. "ஒலிம்பிக் வீரர்கள் போதை மருந்து எடுத்துக் கொண்டது தெரிய வந்தால் அவர்களது பதக்கங்கள் பறிமுதல் செய்யப்படும்போது இவர் மட்டும் என்ன விதி விலக்கா? என்று பீலே கேள்வி எழுப்பியுள்ளார். பிரேசில் செய்தித் தாள் ஒன்றிற்கு பீலே அளித்த பேட்டியில் "மரடோனா…

    • 0 replies
    • 1.1k views
  10. செய்தித்துளிகள் சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரான்ஸின் ஜெர்மி ஷார்டி ஜோடி 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிரேஸிலின் மார்செல்லோ, கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியிடம் தோல்வியடைந்தது. ----------------------------------- இம் மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எம்சிஎல் டி 20 தொடரின் ஜெமினி அரேபியன்ஸ் அணிக்கு சேவாக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் இயக்குநராகவும் அவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ----------------------------------- ஐபிஎல் புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அணியின் பயிற்சியாளராக தோனியுடன் செயல்பட்ட அவ…

  11. நாக்அவுட் நாயகன் முகமது அலி ஒலிம்பிக் தங்க பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்? களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகின் பிதாமகன் முகமது அலியின் பிறந்த தினம் இன்று. தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் முகமது அலி, அடிப்படையில் அமைதியை விரும்புவர். வியட்நாம் போரை எதிர்த்ததற்காக தடை செய்யப்பட்டாலும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாதவர். மருத்துவர்களே கைவிட்டாலும் தனது மனோபலத்தால் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரது வாழ்வில் நடந்த சில ருசிகர சம்பவங்கள் இங்கே சைக்கிள் திருடனால் குத்துச்சண்டை வீரராக மாறியவர் 1942ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அமெரிக…

  12. பார்சிலோனா, ரியல் மெட்ரிட் முதலிடத்திற்கு கடும் போட்டி By Mohamed Shibly - குளிர்கால இடைவெளிக்குப் பின்னர் ஆரம்பாகி இருக்கும் ஸ்பெயின் லா லிகா தொடரின் முக்கிய இரு போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (05) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, பார்சிலோனா எதிர் எஸ்பான்யோல் சீன முன்கள வீரர் வூ லீ கடைசி நேரத்தில் போட்ட கோல் மூலம் ஸ்பெயின் லா லிகாவில் கடைசி இடத்தில் இருக்கும் எஸ்பான்யோல் அணி முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவுக்கு இடையிலான போட்டியை 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்தது. தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டேவிட் லோபா…

    • 0 replies
    • 582 views
  13. வில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ A மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, அஸ்டன் வில்லா எதிர் மான்செஸ்டர் சிட்டி செர்கியோ அகுவேராவின் ஹட்ரிக் கோல் மூலம் அஸ்டன் வில்லா அணிக்கு எதிரான போட்டியில் கோல் மழை பொழிந்த மான்செஸ்டர் சிட்டி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. ஆர்ஜன்டீனாவின் முன்கள வீரரான அகுவேராவின் 12 ஆவது ஹட்ரிக் கோல் இதுவென்பதோடு ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்ற வெளிநாட்டு வீரர் எனவும் …

    • 0 replies
    • 485 views
  14. இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் இரத்து By Mohamed Azarudeen - கொரோனா வைரஸ் பீதியானது உலகினை அச்சுறுத்தி வரும் நிலையில், அது கிரிக்கெட் விளையாட்டினையும் தொடர்ந்து பாதித்து வருகின்றது. அந்தவகையில், கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகில் பல சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையும் (SLC) இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தினையும் மறு அறிவித்தல் ஒன்று வரும் வரையில் இடை நிறுத்தியிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது. …

    • 0 replies
    • 595 views
  15. சிகிச்சையின் பின்னர் 100 மீற்றரை 10 செக்கன்களுக்குள் ஓடிய போல்ட் செக். குடியரசின் ஒஸ்ட்ராவாவில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் மெய்வல்லுநர் போட்டியில் ஆறு தடவைகள் ஒலிம்பிக் சம்பியனான யூசெய்ன் போல்ட் 100 மீற்றரை 9.98 செக்கன்களில் ஓடி வெற்றிபெற்றார். தொடை தசையில் ஏற்பட்ட உபாதைக்கு ஜேர்மனியில் சிகிச்சை பெற்ற பின்னர் பங்குபற்றிய போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றார். இவ் வருடம் அவர் பதிவு செய்த அதி சிறந்த நேரப் பெறுதி இதுவாகும். ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற கேமன் அழைப்பு மெய்வல்லுநர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 29 வயதான போல்ட் 10.05 செக்கன்களில் ஓடி வெற்றிபெற்…

  16. தோனி ஏன் ’தல’ தெரியுமா? - ஒரு ரசிக வெறியனின் டைரி * ஏப்ரல் 2005. எப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு சென்று, ஸ்கூலுக்கு திரும்புவது வழக்கம். அன்று இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் வேறு. வேகமாக வீட்டிற்கு ஓடினால் கரன்ட் இல்லை. சோகமாக சாப்பிட்டுவிட்டு வரும்போது எதிரில் வந்தார் ஆனந்த் அண்ணன். ஸ்கூல் சீனியர். 'ஸ்கோர் எவ்ளோண்ணே?' என்றேன். 'வெளுத்துட்டானுகடா... 356' என்றார். அந்தக் காலகட்டத்தில் 300-ஐ தொட்டாலே புருவங்கள் உயரும். 'எப்படிண்ணே?' என்றேன். 'புதுசா ஒரு சடையன் வந்துருக்கான்ல..... காட்டான் மாதிரி அடிக்கிறான்' என ஊர் மணத்தோடு ஒரு 'வார்த்தையைச்' சேர்த்துப் பெருமையாகச் சொன்னார். தோனி எனக்கு அறிமுகமானது சடையனாகவும், காட்டானாகவும்தான். …

  17. ரவி சாஸ்திரி சாதனை சமன் இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2 முதல் தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒரு போட்டியில் கிளாமோர்கன் - டெர்பி ஷையர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கிளாமோர்கன் அணியின் பேட்ஸ்மேன் அனேயுரின் டொனால்டு 123 பந்தில் இரட்டை சதம் விளாசினார். 80 பந்தில் சதம் கடந்த அவர், அடுத்த 43 பந்தில் இரட்டை சதம் அடித்தார். 100, 150 மற்றும் 200 ரன்களை அனேரியுன் சிக்ஸ் அடித்து நிறைவு செய்தார். அவர் 136 பந்தில் 26 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 234 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி 1985-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முதல் தர போட்டியில் 123 பந்தில் இரட்டை சதம் அடித்தார். இது…

  18. ஜெர்மனி கால்பந்து கிளப்பில் சென்னை மாணவன் பி.ஜே.ரெக்ஸ். சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பி.ஜே.ரெக்ஸ். 18 வயது கால்பந்து வீரரான இவர் பள்ளியில் பயிலும்போது பல்வேறு கிளப் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் இடம் பெற்ற எஸ்பிஓஏ பள்ளி அணி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில், பெங்களூருவில் நடைபெற்ற தேசிய இளைஞர் கால்பந்து போட்டியில் பட்டம் வென்றது. இந்த தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 40 பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரை கர்நாடகா மாநில கால்பந்து சங்கத்தால் அங்கீ கரிக்கப்பட்ட கோவா கால்பந்து கிளப் நடத்தியது. இதே ஆண்டில் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் 26 நாடுகள் பங்கேற்ற கால்பந்து போட…

  19. சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது இலங்கை இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கு. சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது இலங்கை இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கு. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய ,இந்தாண்டின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை இலங்கை இளையோர் கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலங்கா பெற்றுக் கொண்டார். நேற்று கொழும்பு, காலதாரி விருந்தகத்தில் இடம்பெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியான 2 வது வருடமாகவும் சரித் அசலாங்க தனதாக்கினார். இவருக்கான விருதை ,இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன வழங்கி வைத்தார். காலி ரிச்மன்ட் கல்லூரியின் வீரராகவும், இலங்கை 19 வயத…

  20. பாக்.எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா திணறல் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. பிரிஸ்பென்: ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னிலும், கேப்டன் சுமித் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கிறிஸ்லீன் (16), ஹேட் (39), மிஷ்சேல் மார்ஷ் (4) ஆகியோர் அ…

  21. தமிழக கிரிக்கெட்டில் சாதி... அஷ்வின் சர்ச்சை ட்வீட்! அஷ்வின் ரவிச்சந்திரன் தமிழகத்தின் பெருமை. டெஸ்ட் உலக அரங்கில் நம்பர் 1 இடம் பிடித்த இந்திய பவுலர். தற்போது ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பல காலம் தொடர்ந்து ஆல்ரவுண்டர் வரிசையிலும் அஷ்வின் தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தவர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடித்தும், புதிய பல சாதனைகளையும் படைத்து வருகிறார் அஷ்வின். ஐசிசி, பிசிசிஐ என பல தரப்பிடம் இருந்தும் இப்போது விருதுகளாக குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் அஷ்வின் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். ஜூன் மாதம் நடக்கும் ச…

  22. அரவிந்தவை நாடுகிறது இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளிலிருந்து வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வாவை நாடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகளுக்கான பொறுப்பு, அரவிந்தவுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி, அப்போட்டிகளின் பயிற்றுவிப்புப் பணியில் ஈடுபடும் அனைவரும், அரவிந்தவுக்குக் கீழ் பணியாற்றும்படி செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் பணி, இவருக்கு ஒப்படைக்கப்படவுள்ளது. அரவிந்த டி சில்வா, ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் அணி…

  23. பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது. அணியின் முன்னாள் கேப்டன்களான யூசப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால தடையும், மாலிக் மற்றும் ராணா ஆகியோருக்கு ஓராண்டு தடையுடன் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அதிரடி வீரர் அப்ரிடி மற்றும் அக்மல் சகோதர்கள் கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்துகளை சேதப்படுத்தியது, அணிக்கு எதிரான செயல்பாடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பா…

  24. முல்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சங்கா, பொல்லார்ட், மலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படவுள்ள 3ஆவது பாகிஸ்தான்சுப்பர் லீக் (PSL) போட்டிகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த 5 அணிகளும், தமது அணியில் விளையாடியிருந்த உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களுகளின்விடுவிப்பு தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட வீரர்களில், 4 பிரிவுகளிலிருந்து தமது அணிக்கான முக்கிய 9 வீரர்களை நேற்று (10) இடம்பெற்ற விசேட ஏலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளபோட்டித் தொடரில் 6ஆவது அணியாக களமிறங்கவுள்ள முல…

  25. புறக்கணிக்கும் தேர்வாளர்கள்: ரஞ்சி தொடரில் இரட்டை சதமடித்து அசத்திய ஜடேஜா! ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் சௌராஷ்ட்ரா அணி வீரர் ஜடேஜா இரட்டை சதமடித்து அசத்தினார். முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடர், ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடர் மற்றும் விரைவில் தொடங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஜடேஜாவுடன், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினும் சேர்க்கப்படவில்லை. இதனால், அவர்கள் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். அஷ்வின் தமிழக அணிக்காகவும், ஜடேஜா ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.