விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
ஆஸ்திரேலியா 62 ரன் Friday, 25 January, 2008 09:44 AM . அடிலெய்டு, ஜன.25: அடிலெய்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்துள்ளது. அடிலெய்டு டெஸ்ட்டில் நேற்று முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்திருந்தது. . இன்று காலை ஆட்டம் தொடங்கிய நிலையில் 16 ரன்கள் எடுத்திருந்த டோனி, ஜான்சன் பந்துவீச்சில் சைமன்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கருடன் கேப்டன் அனில் கும்ப்ளே ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 359 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரெட் லீ பந்துவீச்சில் ஹாக்கிடம் பிடிகொடுத்து சச்சின் டெண்டுல்கர் 153 ரன்கள…
-
- 1 reply
- 946 views
-
-
பொண்டிங் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் மாறிவிட்டதென்கின்றன அவுஸ்திரேலிய பத்திரிகைகள் [22 - January - 2008] [Font Size - A - A - A] பெர்த் டெஸ்டில் வெற்றி வாகை சூடிய இளம் இந்திய அணியை அவுஸ்திரேலிய பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியுள்ளன. இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் தந்த இமாலய வெற்றி என பாராட்டியுள்ளன. அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா வெல்ல, முக்கியமான மூன்றாவது டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. இப்போட்டியில் இர்பான் பதான், ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா ஆகியோர் அடங்கிய `வேகக் கூட்டணி' சாதித்துக் காட்டியது. இவர்களது அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி, அவுஸ்திரேலியாவை 72 ஓட்டங்கள் …
-
- 1 reply
- 1.3k views
-
-
கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெற்ற முத்தையா முரளிதரனின் செவ்வி முக்கியமாக முரளிக்கு தமிழே தெரியாது அவர் தமழில் உரையாடுவதில்லையென சிலர் யாழ்க் களத்தில் முன்பு வாதம் செய்தார்கள். அவர்கள் பார்வைக்காகவே இதனை விசேடமாக இங்கு இணைக்கின்றேன். http://www.veoh.com/videos/v2818736cdEnTJ2...urce=embedVideo நன்றிகள் சோழியான்
-
- 14 replies
- 3.5k views
-
-
மேற்கிந்தியாவுடனான ஒருநாள் போட்டி தென் ஆபிரிக்கா 6 விக்கெட்டால் வெற்றி [23 - January - 2008] [Font Size - A - A - A] மேற்கிந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. தென் ஆபிரிக்கா -மேற்கிந்திய அணிகளிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமானது. இதனால், ஆட்டம் 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நாணயச் சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி, மேற்கிந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. முதலில் ஆடிய மேற்கிந்திய அணி, தென் ஆபிரிக்க வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாம…
-
- 0 replies
- 683 views
-
-
120 கோடி மக்களை திருப்திப்படுத்த முடியாது சானியா மிர்ஸா இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களையும் என்னால் திருப்திப்படுத்த முடியாது என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் பேர்த்தில் நடந்த ஹோப்மன் டென்னிஸ் போட்டியின்போது தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் சானியா மிர்ஸா அமர்ந்திருந்ததாக போபால்,திருப்பதி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குட்டை பாவாடை,ஹைதராபாத் மசூதியில் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த சர்ச்சை போன்ற புகார்களில் இருந்து விடுபட்ட நிலையில் தற்போது தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் சிக்கியுள்ளார். இந்த பிரச்சினை சானியா மனதை ஆழமாக பாதித்துள்ளது. டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்பது குறித்து கூட அவரை சிந்…
-
- 1 reply
- 1.4k views
-
-
பெர்த் டெஸ்ட் மூலம் அவுஸ்திரேலியா பல்வேறு சிறப்புக்களையும் இழந்தது [21 - January - 2008] [Font Size - A - A - A] பெர்த் டெஸ்டின் 3 ஆவது நாளில் அவுஸ்திரேலியா குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 2 ஓவர்கள் வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து அந்த அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அபராதம் விதித்துள்ளது. கப்டன் என்ற முறையில் பொண்டிங்குக்கு 20 சதவீதமும் மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் போட்டிக் கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. பறிபோன சிறப்புகள் பெர்த் டெஸ்டில் தோல்வியடைந்ததன் மூலம் அவுஸ்திரேலியா நீண்ட காலம் தக்க வைத்திருந்த பல அரிய சிறப்புகளை இழந்திருக்கிறது. * பெர்த் மைதானத்தில் 10 ஆண்டுகளுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெர்த் டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலிய அணிக்கு 413 ஓட்டங்கள் இலக்கு [19 - January - 2008] [Font Size - A - A - A] * 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இந்திய அணியுடனான பெர்த் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 413 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலிய அணி தனது 2 ஆவது இனிங்ஸில் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. இந்திய அணி தனது 2 ஆவது இனிங்ஸில் 294 ஓட்டங்களைப் பெற்றதுடன் முதல் இனிங்ஸில் கூடுதலாக 118 ஓட்டங்களையும் பெற்றிருந்தது. இந்திய - அவுஸ்திரேலிய அணிகளிடையே 3 ஆவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இனிங்ஸில் இந்தியா 330 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில்…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஷோன் பொலொக் ஓய்வு பெறுகிறார் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷோன் பொலொக் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித் துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட் டியே தனது கடைசிப் போட்டி எனவும் அவர் தெரிவித்துள்ளார். 35 வயதான பொலொக், ஒரு நாள் 387 சர்வதேச போட்டி களில் விக்கெட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுகளையும் வீழ்த்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. ""12 வருடகாலமாக எனது நாட்டை பிரதிநிதித்துவப் படுத்து வதற்கு வாய்ப்பளித் தமைக்காக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு நான் நன்றிகூறுகிறேன். மிகச்சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடக் கிடைத் தமை எனது அதிஷ்டமாகும்,, என பொலொக் தெரிவித்துள் ளார். மேற்கிந்திய அணியுடனான மூன்ற…
-
- 1 reply
- 1k views
-
-
சிட்னி டெஸ்டில் ஏற்பட்ட சர்ச்சையால் எனது பெற்றோருக்கு தொலைபேசி மிரட்டல் [12 - January - 2008] [Font Size - A - A - A] * கப்டன் பொண்டிங் கூறுகிறார் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து தனது பெற்றோருக்கு, பல மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக அவுஸ்திரேலிய அணிக்கப்டன் ரிக்கி பொண்டிங் குற்றம் சாட்டியுள்ளார். கப்டன் ரிக்கி பொண்டிங் அங்குள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; "சிட்னி டெஸ்ட் போட்டி வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் எனது பெற்றோரின் வீட்டுக்கு கடந்த சில நாட்களாக மர்மத் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசியவர்கள் என்னையும் அணியினரையும் வசைபாடியிருக்கிறார்கள். இது எனக்கு வருத்தமளிக்கிறது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு 16 ஆவது தொடர் வெற்றி இந்தியாவுடன?985; இரண்டாவது டெஸ்ட் போட்டியை 122 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக 16 போட்டிகளை வென்று தனது சொந்த உலக சாதனையை சமன்செய்தது. 1999 முதல் 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்டீவ் வோக் தலை?90;யிலான அவுஸ்திரேலிய அணி 16 டெஸ்ட் போட்டிகளில் தெடர்ச்சியாக வென்று படைத்திருந்த உலக சாதனையையே தற்போது பொன்டிங் தலைமையிலான ஆஸி.அணி சமன்செய்துள்ளது. சிட்னி மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி கடைசி நேரத்தில் 210 ஓட்டங்களுக்கே சுருண்டது.இதன்போது 7 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலை…
-
- 23 replies
- 3.7k views
-
-
தொடர்ந்தும் தவறிழைக்கும் நடுவர்கள் 3 தடவைகள் சைமண்ட்சை காப்பாற்றினர் [04 - January - 2008] [Font Size - A - A - A] சிட்னி டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய வீரர்கள் முதல் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆர்.பி.சிங், ஹர்பஜன்சிங் ஆகியோர் தொடக்கத்தில் மிரட்ட, 134 ஓட்டங்களுடன் 6 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அவுஸ்திரேலியா இழந்தது. ஆனால், சைமண்ட்சின் சதம் அவுஸ்திரேலியாவை நிமிர வைத்துவிட்டது. அவர் 137 ஓட்டங்கள் குவிக்க நடுவர்கள் கொடுத்த தவறான முடிவுகளே காரணமாகும். நடுவர்களின் `கருணை'யால் சைமண்ட்ஸ் மொத்தம் 3 தடவை ஆட்டமிழப்பிலிருந்து தப்பினார். 30 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்த நிலையில், …
-
- 10 replies
- 2.7k views
-
-
தற்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை முரளிதரனே எனக்கு முன்னுதாரணம் [03 - January - 2008] [Font Size - A - A - A] *கில்கிறிஸ்ட் கூறுகிறார் `பொக்சிங் தின டெஸ்ட் போட்டிதான் (மெல்போர்ன் டெஸ்ட்) எனது கடைசி டெஸ்ட்டாக இருக்கும்..."இப்படி ஒரு வருடத்திற்கு முன் கூறியவர் `கில்லி' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கில்கிறிஸ்ட். இன்றோ தலைகீழ் மாற்றம். `ஓய்வைப் பற்றி இப்போது நினைக்கவே இல்லை'என்கிறார் அவர். 36 வயதாகும் கில்கிறிஸ்ட்,உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரராகக் கருதப்படுபவர். அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தின் அதிரடி மையமாக இருப்பவர். ஆனால், `உங்களுக்கு வயதாகிறதே... எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள்?' என்ற கேள்வி `கில்லி'யை தொட…
-
- 0 replies
- 1.3k views
-
-
டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் சங்ககார முதலிடத்தில் [02 - January - 2008] [Font Size - A - A - A] டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை வீரர் குமார் சங்ககார மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்ட தரவரிசையில் அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் முதலிடத்திலிருந்து வந்தார். தென்னாபிரிக்க வீரர் கலிஸ் 2 ஆவது இடத்திலும், குமார் சங்ககாரா 3 ஆவது இடத்திலுமிருந்தனர். நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஐ.சி.சி.தரவரிசைப் பட்டியலில் மீண்டும் குமார் சங்ககார (933 புள்ளிகள்) முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முடிவில் முதலிடம் பிடித்த சங்ககார பின்னர் அதனை இழந்தார். இந்தியாவுக்கு எதிரான முத…
-
- 0 replies
- 1.6k views
-
-
பொண்டிங் படை' மகத்தான சாதனையை நெருங்குகிறது தடுத்து நிறுத்த முயல்வார்களா [01 - January - 2008] [Font Size - A - A - A] இந்திய வீரர்கள்டெஸ்ட் போட்டிகளிலும் உலக சம்பியன் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை அசைக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் வென்ற உற்சாகத்தில் இருக்கும் `பொண்டிங் படை' மகத்தான சாதனையை நெருங்குகிறது. நாளை 2 ஆம் திகதி சிட்னியில் தொடங்கும் இரண்டாவது போட்டியில் அசத்தினால், தொடர்ந்து 16 டெஸ்களில் வென்ற ஸ்ரீவோவின் சாதனையை சமன் செய்யலாம். இந்தச் சாதனைக்கு இந்திய வீரர்கள் முட்டுக் கட்டை போடுவார்களா? ஷேன் வோர்ன் (708 விக்.), மெக்ராத் (563 விக்.), ஜஸ்ரின் லாங்கார் (7,696 ஓட்டங்கள்), டேமியன் மார்ட்டின் (4,406 ஓட்டங்கள்) போன்ற அனுபவ வீரர்கள்…
-
- 0 replies
- 967 views
-
-
இந்தியாவின் வீழ்ச்சியும் மேற்கிந்தியாவின் எழுச்சியும். இன்று நடைபெற்று முடிந்த இந்தியா எதிர் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் முதலாவது டெஸ்டில் இந்தியா மிக இலகுவாக தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு முக்கியகாரணம் இந்தியாவின் முன்னணி சாதனை வீரர்கள் என்றால் மிகையாகாது. 343 என்ற சொற்ப ஓட்டங்களில்(அவுஸ்திரேலியாவை
-
- 1 reply
- 1.5k views
-
-
நாவாந்துறை சென்.நீக்கிலஸ் கழகம் உதைபந்தாட்டச் சாம்பியன் [30 - December - 2007] [Font Size - A - A - A] யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக், விளையாட்டுக் கழகங்களிடையே நடாத்திய 5 வீரர்கள் பங்குபற்றிய உதைபந்தாட்ட நொக்கவுட் போட்டியில், நாவாந்துறை சென்.நீக்கிலஸ் கழகம் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. பாஷையூர் சென். அன்ரனிஸ் கழகம் மைதானத்தில் நடாத்தப்பட்ட இப்போட்டியில் 10 இற்கும் மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றின. இறுதி ஆட்டத்தில் நாவாந்துறை சென். நீக்கிலஸ் கழகமும் குருநகர் பாடும்மீன் கழகமும் போட்டியிட்டன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென். நீக்கிலஸ் கழகம் 4-2 கோல்களினால் வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இப்போட்டிகளுக்கு அஜந்தன், டீன…
-
- 0 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவை சரித்தார் கும்பிளே 9 விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்கள் [27 - December - 2007] [Font Size - A - A - A] இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்றுப் புதன்கிழமை மெல்போர்னில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணி வலுவான நிலையைப் பெறத் தவறிவிட்டது. இந்திய அணிக் கப்டன் அனில் கும்பிளேயின் சுழல் பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி தடுமாறிப்போயுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். அவரது தெரிவுக்கேற்ப அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான பில் ஜக்ஸும் மத்யூ ஹைடனும் மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரட்லீயின் பந்துவீச்சை அடித்து நொருக்குவோம் 100 ஆவது டெஸ்டில் விளையாடும் கங்குலி கூறுகிறார் [26 - December - 2007] [Font Size - A - A - A] மெல்போர்ன் டெஸ்டில் பிரட்லீயின் பந்துவீச்சை அடித்து நொருக்குவோம். இன்று தொடங்கும் டெஸ்ட் தொடர் சுவாரஷ்யம் நிறைந்ததாக இருக்கும் என 100 ஆவது டெஸ்டில் விளையாடவிருக்கும் இந்திய வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் முக்கோண ஒரு நாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இது இந்திய வீரர் கங்குலிக்கு 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். கடந்த முறை டெஸ்ட் தொடரை `டிரா' செய்த இந்தியா இம்முறை சொந்த மண்ணில் அவுஸ்திர…
-
- 0 replies
- 930 views
-
-
லாராவுக்கு பந்து வீசுவதே கடினமாயிருந்தது சச்சினை களத்தில் சந்தித்தது குறைவென்கிறார் முரளி [25 - December - 2007] [Font Size - A - A - A] தான் சந்தித்த துடுப்பாட்ட வீரர்களில் லாராவுக்கு பந்து வீசுவதே கடினமாக இருந்ததாக முரளிதரன் கூறியிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சமீபத்தில் தனது சொந்த ஊரான கண்டியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷேன் வோர்னின் அதிக டெஸ்ட் விக்கெட் (708 விக்கெட்) சாதனையை முறியடித்து புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரரானார். முரளிதரன் இதுவரை 118 டெஸ்ட் விளையாடி 723 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் 35 வயதான முரளிதரன் சென்னையைச்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தடைகளை தாண்டி சாதிப்பாரா சேவக் அவுஸ்திரேலிய ஓபின் எனக்கு தான் ஜொலிக்க தவறிய நட்சத்திரங்கள் ஆகிய செய்திகளுக்கு http://www.dinamalar.com/2007dec21sportsmalar/index.asp
-
- 0 replies
- 995 views
-
-
அவுஸ்திரேலிய தொடரில் வரிகழித்த பின்பே இந்திய வீரர்களுக்கு போட்டிக் கட்டணம் [22 - December - 2007] [Font Size - A - A - A] அவுஸ்திரேலியத் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு வரிகழித்த பின்பே போட்டிக் கட்டணம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வரி விதிப்புச் சட்டத்தில் செய்துள்ள திருத்தப்படி அங்கு விளையாடச் சென்றுள்ள இந்திய வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும். புதிய வரி குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் சபைக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனைப் பெற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட்சபை சமீபத்தில் மும்பையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியது. அப்போது அந்த விவகாரத்தைக…
-
- 1 reply
- 1.2k views
-
-
25 ஆவது சதமடித்த ரிக்கி பொண்டிங் சதச் சாதனையில் 2 ஆவது இடத்தில் [21 - December - 2007] [Font Size - A - A - A] அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் ஒரு நாள் போட்டிகளில் 25 ஆவது சதத்தை அடித்து, சதச் சாதனையில் 2 ஆவது இடம்பிடித்துள்ளார். சர்வதேச ஒரு நாள்போட்டியில் 41 சதம் அடித்து இந்திய வீரர் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக இலங்கை வீரர் சனத்ஜெயசூரிய 25 சதம் அடித்து 2 ஆவது இடத்தில் இருந்தார். அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் 24 சதம் அடித்து 3 ஆவது இடத்திலிருந்தார். தற்போது நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் சதம் அடித்து ரிக்கி பொண்டிங் 24 சதத…
-
- 5 replies
- 1.8k views
-
-
அவுஸ்திரேலிய மண்ணில் இம்முறையாவது இந்திய அணி தொடரைக் கைப்பற்றுமா? [19 - December - 2007] [Font Size - A - A - A] இதுவரை அவுஸ்திரேலியாவில் பெறாத டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெறுவதற்காக கும்பிளே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மும்பையிலிருந்து திங்கட்கிழமை மெல்போர்ன் சென்றது. மிக வேகமாக பந்துகளை வீசக்கூடிய வல்லமை கொண்ட வீரர்களை உள்ளடக்கிய அவுஸ்திரேலிய அணியை, பந்து அதிகளவில் எழும்பும் தன்மையுடைய ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் எப்படி சமாளிக்கப் போகின்றார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளோம் என கப்டன் கும்பிளே இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகளி…
-
- 7 replies
- 1.7k views
-
-
உலக தலைசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை -------------------------------------------------------------------------------- cri உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு நவம்பர் 30ம் நாள் ஸ்விட்சர்லாந்தின் Zurich நகரில் கால் பந்தில், 2007ம் ஆண்டின் உலக தலைசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது பெறுவோர் வேட்பாளரின் பட்டியலை வெளியிட்டது. ஆடவர் துறையில், இவ்விருது பெற போர்ச்சிக்கல் வீரர் Cristiano Ronaldo, பிரேசில் வீரர் Kaka, அர்ஜென்டீன வீரர் Lionel Messi ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மகளிர் துறையில், ஜெர்மன் வீராங்கனை BirgitPrinz, பிரேசில் வீராங்கனை Marta, Cristiane ஆகியோர் இவ்விருது பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு டிசம்பர் …
-
- 1 reply
- 1.2k views
-