விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கெய்ல்: 2 வருடத்திற்குப் பிறகு இடம் பிடித்தார் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். 37 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம்பிடித்ததில்லை. கடைசியாக ஆஸ்திரேலியாவில் 2015-ல் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக…
-
- 0 replies
- 361 views
-
-
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு 'விண்டீஸ்' எனப் பெயர் மாற்றம்! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பெயர், 'விண்டீஸ்' (Windies) என்று மாற்றப்பட்டுள்ளது. நேற்று, இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 91-வது ஆண்டு விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து, பேசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜானி கிரேவ்ஸ் கூறுகையில், 'இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் முன்னேற்றத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் சில வருடங்களுக்கு, விளையாட்டு வீரர்களுடன் நெருக்கமாக இண…
-
- 0 replies
- 532 views
-
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 106 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பிரிட்ஜ்டவுனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பிரிட்ஜ் டவுன்: பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 312 ரன்னும், பாகிஸ்தான் 393 ரன்னும் எடுத்தன. யாசிர்ஷாவன் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் தினறியது. 4-வது …
-
- 0 replies
- 222 views
-
-
வெஸ்ட் இண்டீஸ், வங்க தேச அணிகளின் எழுச்சி... புத்துயிர் பெறும் டெஸ்ட் கிரிக்கெட்! 2008-ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் அறிமுகமான ஏப்ரல் மாதம் இப்போது இருப்பதுபோல் அப்போது ஐபிஎல்-க்குப் பின்னால் 8, 9 என்றெல்லாம் எழுதாத காலம். ஷாருக் கான், மல்லையா, அம்பானி, சீனிவாசன் என்று பெரும் பணக்காரர்கள் பல கோடி முதலீட்டில் உதயமான அந்த கிரிக்கெட் திருவிழாவின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் மெக்கலம் 73 பந்துகளுக்கு 158 ரன்கள் எடுத்து ஐபிஎல்-ன் முதல் சதத்தைப் பதிவுசெய்தார். 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டிராவிட் தலைமையிலான பெங்களூரு அணி, 82 ரன்களுக்கு மண்ணைக் கவ்வியது. அப்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச அணிகள் விளையாட ஆரம்பித்து சில ஆ…
-
- 0 replies
- 416 views
-
-
வெஸ்ட் ஹாமை வென்று கிண்ணத்தை நெருங்கும் லிவர்பூல் By Mohamed Shibly நீண்ட காலத்திற்குப் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்ல காத்திருக்கும் லிவர்பூல் அணி வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று அந்த இலக்கை மேலும் நெருங்கியுள்ளது. தனது சொந்த மைதானமான அன்பீல்டில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் முதலிடத்தில் இருக்கும் லவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ள நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 22 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ல…
-
- 0 replies
- 797 views
-
-
வெஸ்ட் ஹாம், செல்சி போட்டியில் இரசிகர்கள் இரகளை வெஸ்ட் ஹாம் யுனைட்டெட், செல்சி ஆகிய அணிகளுக்கிடையில், இரசிகர்களின் இரகளையுடன் வெஸ்ட் ஹாம் கழக இலண்டன் அரங்கத்தில் இடம்பெற்ற, ஈ.எஃப்.எல் கிண்ண நான்காவது சுற்றுப் போட்டியில், செல்சியை வெஸ்ட் ஹாம் வென்றபோதும், பொலிஸாரினால் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் வென்ற இப்போட்டியின்போது, நூற்றுக்கணக்கான இரசிகர்கள் மோதி, கலமடக்கும் பொலிஸார் சனத்திரளினுள் நுழைந்த நிலையில், பிளாஸ்டிக் போத்தல்கள், இருக்கைகைகள், நாணயக் குற்றிகள் எறியப்பட்டிருந்தன. இப்பருவ காலத்திலேயே, புதிய அரங்குக்கு வெஸ்ட் ஹாம் நகர்ந்த நிலையில், கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற மிடில்ஸ்பேர்க் அணியுடனான போட்…
-
- 0 replies
- 214 views
-
-
வெஸ்லி ஹாலுக்கு ‘ஐ.சி.சி. பிரபலம்’ அந்தஸ்து வழங்கி கௌரவிப்பு அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடையே கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் வெஸ்லி ஹால் ‘ஐ.சி.சி. பிரபலம்’ அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த ஆண்டில் ஐ.சி.சி. பிரபலமாக அங்கீகரிக்கப்படும் 4ஆவது வீரர் ஹால் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பெட்டி வில்சன்இ அனில் கும்ளேஇ மார்டின் குரோவ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக மொத்தம் 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஹால் 192 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். 81…
-
- 0 replies
- 365 views
-
-
வேகப்பந்து வீச்சாளர் எரங்க இங்கிலாந்து வைத்தியசாலையில் வேகப்பந்து வீச்சாளரான ஷமிந்த எரங்க, இங்கிலாந்திலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய நோய் தொடர்பில் சிகிச்சை பெறுவதற்கே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/175040/வ-கப-பந-த-வ-ச-ச-ளர-எரங-க-இங-க-ல-ந-த-வ-த-த-யச-ல-ய-ல-#sthash.BH1F6LD8.dpuf
-
- 1 reply
- 391 views
-
-
வேகப்பந்து வீச்சாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தடை விதிக்கக்கூடாது: அக்தர் ஏராளமான விதிமுறைகளை கொண்டு வந்து வேகப்பந்து வீச்சாளர்களின் உற்சாக உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுக்கக்கூடாது என்று அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், மைதானத்தில் பேட்ஸ்மேன்களை தனது வேகப்பந்தால் அச்சுறுத்துவதில் வல்லவர். 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் அக்தர், நீண்ட தூரத்தில் இருந்து ஓடி வந்து பந்து வீசக்கூடியவர். விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் இரண்டு கைக…
-
- 0 replies
- 426 views
-
-
வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவதற்கு நவீன பயிற்சியாளர்களே காரணம்: ஆன்டி ராபர்ட்ஸ் சாடல் ஆன்டி ராபர்ட்ஸ். | படம்: விஜய் பேட். வலைப்பயிற்சியில் 30 பந்துகளுக்கு மேல் வேகப்பந்து வீச்சாளர்களை வீச அனுமதிக்காத நவீன பயிற்சியாளர்களே பவுலர்கள் காயமடைவதற்குக் காரணம் என்று மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராபர்ட்ஸ் சாடியுள்ளார். மும்பையில் சச்சின் பஜாஜின் குளோபல் கிரிக்கெட் ஸ்கூல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராபர்ட்ஸ் அங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் உட்பட பல்வேறு கிரிக்கெட் தொடர்பான ருசிகரங்களை பகிர்ந்து கொண்டார். "நவீன கிரிக்கெட் பயிற்சியாளர்கள் முதலில் கிரிக்கெட் ஆடியுள்ளனரா? அல்லது இவர்கள் வேகமாகத்தான் பந்து வீசியதுண்டா? ஏன…
-
- 0 replies
- 546 views
-
-
வேகப்பந்து வீச்சு ஆட்டக்களங்களில் இந்திய வீரர்கள் சமாதானக் கொடியை தூக்கிப் பிடிப்பர்: ஸ்டுவர்ட் கிளார்க் கேலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் தோனி விளையாட முடியாததை அடுத்து இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரில் அக்கறை இல்லை என்ற தொனியில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சாடியுள்ளது. சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஒரு பத்தியில் இந்தியா உலகக் கோப்பையையே எதிர் நோக்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிக நாட்டம் காட்டுவதில்லை என்று அந்தப் பத்தியில் இந்திய அணியைப் பற்றி சாடப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் நடப்பது பிரிஸ்பன் மைதானத்தில், இந்த மைதானம் உலகிலேயே அதிவேக ஆட்டக்களம் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். இதில் 26 ஆண்டுகளுக்கு முன்ப…
-
- 1 reply
- 371 views
-
-
வேகப்பந்து வீச்சு பயிற்றுநராக நுவான் சொய்ஸா இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில் காணப்பட்ட சமிந்த வாஸ், சில மாதங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே, தற்போது நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள அவரது ஒப்பந்தம், ஒரு வருடத்துக் செல்லுபடியாகும் என, இலங்கை கிரிக்கெட் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சார்பாக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நுவான் சொய்ஸா, 64 விக்கெட்டுகளையும், 95 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 108 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 359 views
-
-
வேகப்பந்துவீச்சாளர்களின் தொடர் உபாதையும், ஹத்துருசிங்கவின் புதிய வியூகமும் சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி, இவ்வருடம் முதல் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிகளைப் பெற்றுக்கொண்டது. எனினும், இலங்கை வீரர்களின் தொடர் உபாதைகள் இலங்கை அணியின் வெற்றிக்கும், எதிர்கால வியூகத்துக்கும் மிகப் பெரிய தடங்கலாக இருந்து வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மை. இந்நிலையில், சுமார் 2 மாதகால ஓய்வின் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்…
-
- 0 replies
- 349 views
-
-
வேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த குஷல் இலங்கை அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குஷல் மென்டிஸ் சிம்பாப்வே அணிக்கெதிராக 28 ஓட்டங்களைப்பெற்றபோது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப்பெற்றார். காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டியிலேயே குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை 28 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். இதேவேளை, இதற்கு முன்னர் ரோய் டயஸ் 27 இன்னிங்களிலும் உபுல் தரங்க 28 இன்னிங்களிலும் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்திருந்த நிலையில் குஷல் மென்டிஸ் 28 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்ளை…
-
- 0 replies
- 257 views
-
-
உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயர்பெற்ற ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயதான ஜெஸிகா, ஜெட் விமானத்தின் இயந்திரத்தைப் பொருத்தி கார் ஓட்டுவதில் சிறந்தவராக உள்ளார். இதன் காரணமாகவே உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயரெடுத்தவர். கடந்த 2013ஆம் ஆண்டு மணிக்கு 641 கிலோ மீற்றர் (398 mph) வேகத்தில் காரை ஓட்டி சாதனை செய்தார். இதனைத் தொர்ந்து 824 கிலோ மீற்றர் (512 mph) வேகத்தில் காரை இயக்கி தனது சாதனையை தானே முறியடித்தார். இந்நிலையில் இந்தச் சாதனையையும் முறியடிக்க அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக தென்மேற்கு ஓரேகான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானதில் ஜெஸிகா உயிரிழந்ததாகத…
-
- 0 replies
- 665 views
-
-
வேகமான 200 விக்கெட் சாதனை நோக்கி அஸ்வின். வேகமான 200 விக்கெட் சாதனை நோக்கி அஸ்வின். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ,வேகமான 200 டெஸ்ட் விக்கெட் சாதனை நோக்கி காத்திருக்கிறார். எதிர்வரும் 22 ம் திகதி கான்பூர் மைதானத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இந்தியாவின் 500 வது டெஸ்ட் என்பதோடு மாத்திரமல்லாமல் , ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைக்காகவும் இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 193 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.அண்மையில் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் அணியுடனான த…
-
- 0 replies
- 336 views
-
-
. வேண்டும் என்றே 'நோ பால்'- ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம் தம்புல்லா: இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியின் போது வேண்டும் என்றே நோபால் வீசியதற்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவும், இலங்கை கிரிக்கெட் போர்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளனர். இலங்கையில் நடந்து வரும் முத்தரப்புத் தொடரில் முதல் போட்டியில் இந்தியா , நியூசிலாந்திடம் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் நேற்று நடந்த 2வது போட்டியில் அது இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடியது. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசினர். இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. இதனால் 46.1 ஓவர்களில் அனைத்து விக்க…
-
- 16 replies
- 1.8k views
-
-
விளையாட்டை பூரணமாக அனுபவித்து அதில் வெற்றியடைந்தவர்களில் ”வேதா” என அன்புடன் அழைக்கப்படுபவர் D.M. வேதாபரணம். உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய இரண்டும் அவருடைய இரண்டு கண்கள் போன்றவை. சமகாலத்தில் உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய இரண்டு விளையாட்டுக்களிலும் தடம் பதித்து சாதனை செய்தவர். கரப்பந்தாட்டமும் இவரின் கரங்களுக்குக் கட்டுப்பட்டது. டானியல் முருகேசு, நகுலாம்புசம் தம்பதியின் மூத்த புதல்வனாக கரவெட்டியில் பிறந்தார். விபுலானந்தன், கற்பநாயகம்,வித்தியாதரன், மலர் தேவநாயகம், தேவாபரணம், தேவநேசன் ஆகியோர் இவரின் சகோதரர்களாவர். வேதாபரணத்தைப் போன்றே அவரது சகோதரர்களும் தடகளம்,உதைபந்தாட்டம்,கிறிக்கெற்,கரப்பந்தாட்டம் ஆகியவற்றில் சாதித்தவர்கள். பாடசாலை சார்பாகவும், ஊர் கழக அணி சார்பாகவும் விளைய…
-
- 0 replies
- 843 views
-
-
வேயன் ஸ்மித்தின் கனவைத் தகர்த்த இந்தியா...! டெல்லி: நீதிமன்றம் கண்டிராத விசித்திரம் இது என்று பராசக்தியில் வசனம் வரும். அப்படித்தான் ஆகியுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர் வேயன் ஸ்மித்தின் நிலையும். கடந்த 10 வருடமாக அவர் கிரிக்கெட் ஆடி வருகிறார். 92 ஒரு நாள் போட்டிகளில் ஆடி விட்டார். ஆனால் இதுவரை ஒரு சதம் கூட போட்டதில்லை. நேற்று டெல்லியில் நடந்த இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் பிரமாதமாக ஆடிய ஸ்மித், 97 ரன்களில் பரிதாபமாக அவுட்டாகி விட்டார். அவரது 10 வருட சதக் கனவு நேற்றும் கை கூடாமல் போய் விட்டது. நேற்று ஸ்மித் ஆடியது அவரது 93வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை ஒரு சதம் கூட போடாமல் கிட்டத்தட்ட 100 ஒரு நாள் போட்டிகளை நெருங…
-
- 1 reply
- 820 views
-
-
வேர்ணன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்திய காட்சி ஒளிபரப்பப்படுவதை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 2014-07-22 12:04:55 தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் வேர்னன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்தியமை தொடர்பான வீடியோ காட்சியை, அச்சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின்பின் ஒளிபரப்பு செய்யப்படுவதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 3 ஆம் நாள் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான குறிப்பிட்ட காட்சியை ஒளிபரப்ப வேண்டாம் என ஒளிபரப்பாளர்களான டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு தென் ஆபிரிக்க அணி அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சம்பவம் குறித்து தென் ஆபிரிக்க அணி எவ்வித கருத்தையும் வெளியிட மறுத்துவ…
-
- 1 reply
- 563 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வைபவ் சூர்யவன்ஷி என்ற பெயர் நேற்று முதல் விளையாட்டுச் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்து வருகிறது. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, நேற்று (ஏப்ரல் 28) நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 101 ரன்கள் (11 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தக் காரணமாக இருந்தது சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம். இந்நிலையில், அவருக்கு கிரிக்கெட் உலகின் பிரபல ஜாம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 'அச…
-
- 3 replies
- 363 views
- 1 follower
-
-
வைரலாகும் மெஸ்சி - ரொனால்டோவின் அந்தப் படம்! களை கட்டும் எல் கிளாசிகோ மோதல் கிளப் கால்பந்து போட்டியின் உச்சக்கட்ட மோதலாகக் கருதப்படும் 'எல் கிளாசிகோ' நாளை நடைபெறுகிறது. ரசிகர்களிடையே மோதலைத் தவிர்க்கும் வகையில் மெஸ்சியும் ரொனால்டோவும் முத்தம் பரிமாறிக் கொள்ளும் புகைப்படங்கள் பார்சிலோனா நகரில் ஒட்டப்பட்டுள்ளன. ஸ்பானீஷ் லீக் தொடரில், 23ம் தேதி இரவு பர்சிலோனா- ரியல்மாட்ரிட் அணிகள் மோதும் 'எல்கிளாசிகோ' மோதல் நடைபெறவுள்ளது. உலகம் முழுக்க 70 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டுகளிப்பார்கள். 'எல் கிளாசிகோ' மோதலின் போது ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், பார்சிலோனா நகரங்களில் ஒரு வித பதற்றம் காணப்படும். இரு நகரங்களிலும் …
-
- 5 replies
- 514 views
-
-
கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போது இலங்கைஅணி வீரர்களுடன் கைகுலுக்கப்போவதில்லை என இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இரண்டு டெஸ்ட் தொடரிற்காக இங்கிலாந்து அணி இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னதாக ஜோ ரூட்டிடம் கொரோனா வைரஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அணி வீரர்களுடன் இங்கிலாந்து வீரர்கள் கைகுலுக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது எங்கள் வீரர்கள் பலர் உடல்நலப்பாதிப்பிற்குள்ளானதை கருத்தில்கொள்ளும்போது உடல்ரீதீயான தொடுகையை குறைந்தளவிற்கே வைத்துக்கொள்வதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 320 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான இரண்டு நார்ம்கள் பெற்ற வைஷாலி, மூன்றாவது நார்ம் விரைவில் பெறும் நம்பிக்கையில் உள்ளார் வைஷாலி. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி ரமேஷ்பாபு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார். ஸ்பெயினில் நடைபெற்றுவரும் செஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் அவர், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் 2,500 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
வொஷிங்டன் சுந்தரா? பெயருக்கு பின்னால் உருக்கமான காரணம் : நன்றி மறவாத தந்தை உண்மையை வெளிப்படுத்தினார் ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான தகுதிகான் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இவ்வருட ஐ.பி.எல் தொடரில் எதிரணிகளுக்கு சவாலாக திகழ்ந்த மும்பை அணி, புனே அணியை இலகுவாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் புனே அணியின் வீரர்களான மஹேந்திரசிங் டோனி மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் மும்பையின் வெற்றிக் கனவை தகர்த்து, புனே அணியை இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைக்க உதவினர். டோனியின் துடுப்பாட்டமும் வொஷிங்டன் சுந்தரின் அதிரடி பந்து வீச்சுமே புனே அணியின் வெற்றிக்கு மு…
-
- 1 reply
- 673 views
-