விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
சன் கண்டுபிடித்த ஆப்கன் மன்னன்! கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக ‘ஹைதராபாத் சன் ரைசர்ஸ்’ அணி, நாலு கோடி ரூபாய் கொடுத்து ஊர் பேர் தெரியாத ஒரு பதினெட்டு வயது வீரரை ஏலம் எடுத்தபோது அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். போயும் போயும் கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணியின் சின்னப்பயலையா இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனால், சன் ரைசர்ஸின் கணக்கு என்றுமே தப்பாது. சொல்லி அடித்த கில்லியாக ஐபிஎல்லில் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டிலும் இன்று ஒப்பற்ற சாதனை மன்னன் வேறு யாருமல்ல, ரஷித்கான்தான். ஆப்கானிஸ்தான் அணியின் மாயாஜால வலதுகை சுழல்பந்து மன்னன். ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்று நெம்பர் ஒன்…
-
- 0 replies
- 466 views
-
-
பிடிவாத அலிஸ்டர் குக்கை நீக்க வேண்டும்: மைக்கேல் வான் காட்டம் அலிஸ்டர் குக் இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பை உதற மறுத்தால் அவரை நீக்குவதுதான் ஒரே வழி என்று முன்னாள் ஈகேப்டன் மைக்கேல் வான் காட்டமாகக் கூறியுள்ளார். "ஒருநாள் கிரிக்கெட் வித்தியாசமானது. அலிஸ்டர் குக் கேப்டன் பதவியிலிருந்து இறங்க மறுத்தால் அவரை நீக்குவதுதான் சிறந்தது. அவர் ராஜினாமா செய்யவில்லை, ஜேம்ஸ் விடேகர், பால் டவுண்டன் போன்ற வாரிய நிர்வாகிகளும் மாற்றம் வேண்டும் என்பதை உணரவில்லையெனில் இங்கிலாந்து கிரிக்கெட்டின் எதிர்கால நன்மை குறித்த இவர்களது நோக்கத்தை நான் சீரியசாகக் கேள்வி கேட்க நேரிடும். டெஸ்ட் தொடரை வென்று அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்…
-
- 0 replies
- 366 views
-
-
கிரம்னிக் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ----------------------------------------------------------------- 14 அக்டோபர் 2006 ரஷ்யாவின் எலிஸ்டாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டிகளில் ரஷ்ய வீரர் விளாடிமிர் கிரம்னிக் (Vladimir Kramnik), பல்கேரியாவின் வாசலின் டோபலோவை (Vasline Topolov) டைபிரேக்கர் முறையில் வீழ்த்தி சாம்பியன் ஆனார். இதன் மூலம் கடந்த 1993ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சாம்பியனாக கிரம்னிக் வெற்றிபெற்றுள்ளார். கிராம்னிக் தனது சிப்பாய் ஒருவரை முன்னகர்த்திய பின் (10. e4 ) இறுதி நாளன்று மிகவும் சீக்கிரமாக (rapid games) நடைபெற்ற, குறிப்பிட்ட நேரத்திலான ஆட்டத்தில் கிரம்னிக் 8.5 - 7.5 என்ற ஸ்கோருடன் இந்த வெற்றியை …
-
- 4 replies
- 1.8k views
-
-
வறுமையின் பிடியிலும் திறமையால் பிரகாசிக்கும் வீராங்கனை
-
- 2 replies
- 688 views
-
-
தென் ஆப்ரிக்க அணி வெற்றி: டிவிலியர்ஸ், டுமினி அசத்தல் அக்டோபர் 21, 2014. பே ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டிவிலியர்ஸ், டுமினி ஜோடி மிரட்ட தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பே ஓவலில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். நழுவிய சதம்: நியூசிலாந்து அணிக்கு கப்டில் (5), நீசம் (16) மோசமான துவக்கம் தந்தனர். பின் வந்த பிரவுன்லி (24), கேப்டன் பிரண்டன் மெக்கலம் (16) நீடிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோரி ஆண்டர்சன் ‘டக்–அவுட்’ ஆனார். அடுத்து லதாம் (29…
-
- 2 replies
- 584 views
-
-
சாம்பியன்ஸ் டிராபியை இங்கிலாந்தில்தானே ஆடினோம்... வங்கதேசத்தில் இல்லையே?- விராட் கோலியின் விகடம் இங்கிலாந்து தொடருக்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பில் சாஸ்திரி, விராட் கோலி. இங்கிலாந்தில் மிக நீண்ட தொடருக்குச் செல்லும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடப்போயிருந்தால் கூட நான் இவ்வளவு ஃபிட் ஆக இருந்திருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி 2014 தொடரில் ஒரு அரைசதம் கூட எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையாக அவரிடமே விக்கெட்டைப் பறிகொடுத்தது பற்றி மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்ப கொஞ்சம் சீரியசாக ஆனால் நிறைய விகடத்துடன் பதிலளித்தார் விராட் க…
-
- 0 replies
- 668 views
-
-
காத்திருந்து சாதனை படைத்த கோலி: தோனி புதிய மைல்கல்; இன்னும் சுவாரஸ்ய தகவல்கள் இந்தியஅணியின் கேப்டன் விராட் கோலி : கோப்புப்படம் ஓல்டுடிராபோர்டு நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதலாவது, டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அதில் கேப்டன் விராட் கோலியும், தோனியும் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர். இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி ஓல்டு டிராபோர்டு நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சே…
-
- 0 replies
- 383 views
-
-
சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கும் சங்கா? இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வரும் சங்கக்காரா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை ஆங்கில ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் சங்கக்காரா ஓய்வு பெறும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்…
-
- 3 replies
- 505 views
-
-
தோனி மீதான அதிருப்தியை என் தந்தை பகிரங்கப்படுத்தியது ஏன்?- யுவராஜ் சிங் விளக்கம் உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படாததற்கு தோனியே காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியதற்கு யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார். இது குறித்து யுவராஜின் தந்தையும் முன்னாள் இந்திய வீரருமான யோக்ராஜ் சிங் கூறும்போது, “என் மகனுடன் தோனிக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? கடவுள் நீதியளிப்பார். உங்கள் கேப்டன் பொறுப்பில் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரார்த்திக்கிறேன். ஆனால் இது போன்று நீங்கள் (தோனி) நடந்து கொண்டதை விடவும் வேறு வருத்தங்கள் இருக்க முடியாது.” என்றார். ஆனால், தன் ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங், தனது தந்தை…
-
- 0 replies
- 876 views
-
-
மொராக்கோ ஓப்பன் டெனிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஆர்ஜென்டீனா வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். மொராக்கோவில் சர்வதேச பெண்கள் ஓப்பன் டெனிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 51 ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 213 ஆவது இடத்தில் உள்ள ஆர்ஜென்டீனா வீராங்கனை எமிலியா மா சாலெர்னியை எதிர்கொண்டார். காயம் காரணமாக 2 மாதத்துக்கு மேலாக ஓய்விலிருந்து களம் திரும்பிய சானியாவால் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறிய ஆர்ஜென்டீனா வீராங்கனைக்கு முதல் செட்டில் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. ஆனால், 2 ஆவது மற்றும் கடைசி செட்டில் சானிய…
-
- 5 replies
- 1.3k views
-
-
178 ஓட்டத்துக்குள் சுருண்டது நியூஸிலாந்து hare1 இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது. நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்ப…
-
- 1 reply
- 524 views
-
-
Published By: DIGITAL DESK 3 25 NOV, 2023 | 12:04 PM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (இலங்கை நாணய மதிப்பில் 330 கோடி ரூபா) ஏலம் விடப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது அணிந்திருந்த ஆறு ஜேர்சிகள் ஏலம் விடப்படவுள்ளது. அதில், பிரான்சுக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது அவர் அணிந்திருந்த ஜேர்சியும் அடங்கும். குறித்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கும் அதிகமாக ஏலம் போகலாம் என சோத்பிஸ் ஏல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 36 வயதான லயனல் மெஸ்ஸி ஏலம் தொடர்ப…
-
- 0 replies
- 462 views
- 1 follower
-
-
பிரிமியர் கிரிக்கெட்: முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் அவசர கூட்டத்தில் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் தடை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. ஆறாவது (2013) பிரிமியர் தொடர் சூதாட்டம் காரணமாக சென்னை அணியை வைத்திருந்த பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவி பறிபோனது. இதன் பின், உச்சநீதிமன்றம் அமைத்த லோதா குழு தீர்ப்பு காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உரிமையாளர்கள் குருநாத் (சென்னை), ராஜ் குந்த்ராவுக்கு (ராஜஸ்தான்) வாழ்நாள் தடை விதிக்கப்பட்டன. இதனிடையே பிரிமியர் தொடரின் நிர்வாக கவுன்சிலின் அவசர கூட்டம் ராஜிவ் சுக்லா தலைமையில் மும்பையில் நடக்கிறது. இதில் இரு அணிகளின் தடை குறித்து ம…
-
- 2 replies
- 245 views
-
-
நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி 604/7 இந்தியா 112/5 தென்னாஸ்திரேலிய நகரான அடிலெயிட்டில் நடைபெற்றுவரும் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 604 ஓட்டங்களைப் பெற்று தனது அட்டத்தினை நிறுத்திக்கொண்டது. இதில் அவ்வணியில் தலைவர் கிளாக் 210 ஓட்டங்களையும் அவ்வணியின் முன்னால்த் தலைவர் பொண்டிங் 220 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத் தக்கது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்களை மட்டுமே இதுவரை பெற்றிருக்கிறது.இதில் இந்தியாவின் நட்சத்திரத் துடுப்பாட்டக்காரரும், தனது நூறாவது சத்தத்தைப் பெற்றுக்கொள்வார் என்று இத்தொடர் ஆரம்பமாகிய நா…
-
- 1 reply
- 803 views
-
-
செல்சி, ஆர்சனல் தோல்வி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், இன்றைய போட்டிகளில் ஆர்சனல், செல்சி அணிகள் தோல்வியடைந்தன. பார்சிலோனா அணி வெற்றிபெற்றது. ஒலிம்பியாகொஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் ஆர்சனல் அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 33ஆவது நிமிடத்தில் ஒலிம்பியாகொஸின் பெலிப் பார்டோ பெற்ற கோலுக்கு, உடனடியாகப் பதிலடி வழங்கிய ஆர்சனலின் தியோ வொல்கொட், 1-1 என்ற கணக்கில் கோல் நிலையை மாற்றிய போதிலும், 40ஆவது நிமிடத்தில் டேவிட் ஒஸ்பினாவின் 'ஒவ்ண் கோல்" காரணமாக, ஒலிம்பியாகொஸ் அணி, 2-1 என முன்னிலை வகித்தது. 65ஆவத நிமிடத்தில் அலெக்ஸிஸ் சன்செஸ் கோலொன்றைப் பெற்று, ஆர்சனலுக்கு 2-2 என் சமநிலையை வழங்கிய போதிலும், அடுத்த நிமிடத்தில் அர்பிரட் பின்பொகாசொன் பெற்ற …
-
- 0 replies
- 448 views
-
-
அனுபவித்து விளையாட விரும்புகிறேன் ஓய்வுபெறுவது பற்றி சிந்திக்கவில்லை [25 - January - 2008] [Font Size - A - A - A] * டெண்டுல்கர் தெரிவிப்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் சிந்திக்கவில்லை என்று டெண்டுல்கர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான டெண்டுல்கர் 1989 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடந்த 18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் அவர் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வருகிறார். 34 வயதான டெண்டுல்கருக்கு அடிலெய்டில் நேற்று தொடங்கிய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 146 ஆவது போட்டியாகும். டெண்டுல்கர் இன்னும் சில ஆண்டுகளில…
-
- 3 replies
- 1.5k views
-
-
மேற்கிந்தியத்தீவுகளை 'வைட் வோஷ்' செய்த இந்தியா! இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி நேற்றைய தினம் கயானவில் இடம்பெற்றது. தொடரில் ஏற்கனேவ கைப்பற்றிய நிலையில் இப் போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதுடன், கலீல் அகமதுவும் நீக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், சகோதரர்கள் தீபக் சாஹர், ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டனர். இதில் சுழற்பந்து வீச்சாளரான 20 வயதான ராஜஸ்தானைச் சேர்ந்த ராகுல் சாஹருக்கு இதுவே முதல் சர்வதேச போட்டியாகும். மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் 1 மணி 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இதன் பின்னர் போட்டியில் நா…
-
- 0 replies
- 715 views
-
-
ரஞ்சி கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்து வாசிம் ஜாபர் சாதனை! ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் பெற்றுள்ளார். கொல்கத்தாவில் மேற்கு வங்க - விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் மேற்கு வங்க அணி 334 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து விதர்பா அணி பேட் செய்யத் தொடங்கியது. இந்த போட்டியில் விதர்பா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வாசிம் ஜாபர் 7 ரன்கள் எடுத்த போது, ரஞ்சி டிராபியில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ரஞ்சி டிராபியை பொறுத்த வரை 126 போட்டிகளில் 196 இன்னிங்ஸ்களில் விளையாடி …
-
- 0 replies
- 202 views
-
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஃபார்மில் இல்லாதபோதும் கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக விராட் கோலி இந்த ஆண்டில் டெஸ்டில் மொத்தமாக 250 ரன்கள் சேர்த்து 22 சராசரி மட்டுமே வைத்துள்ளார். இந்நிலையில், மோசமான ஃபார்மில் இருந்தும், அவர் பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டாடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி, தோனி போன்ற பல முக்கியமான வீரர்களை இந்திய கிரிக்கெட் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் விராட் கோலியும் கவனிக்கப்படுக…
-
-
- 106 replies
- 6.4k views
- 1 follower
-
-
கைகுலுக்கல் விவகாரம் கௌதம் கம்பீர் காட்டம் December 30, 2015 இந்தியாவின் உள்ளூர் ஆட்டத்தில் (விஜய் ஹசாரே கிண்ணம்) டெல்லி அணியின் தலைவர் கம்பீர், ஜார்கன்ட் அணியின் வீரரான டோனிக்கு கைகுலுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று பரவியது. இந்த வீடியோவில் டோனி அனைவருக்கும் கைகுலுக்கும் போது கம்பீர் மட்டும் கைகுலுக்காமல் போவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இதற்கு கம்பீர், டோனியுடன் கைலுக்குவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு முகப்புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளார். ‘விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நானும், டோனியும் கைகுலுக்கி கொண்ட புகைப்படம் இது தான். இந்த கைகுலுக்கல் விவகாரம் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நாவஸ் செரிப் பேச்சுவார்த்தையை விட பெ…
-
- 0 replies
- 681 views
-
-
லாராவின் சாதனையை எட்ட 86 ரன்களே தேவை : சங்கடத்துடன் விடைபெற்றார் சந்தர்பால் ! மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஷிவ்நாராயண் சந்தர்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். சுமார் 22 வருடங்கள் கிரிக்கெட்டுடன் பயணித்த அவருக்கும் பெரும்பாலான கிரிக்கெட்டர்களை போல, ஓய்வு பெறும் தருணம் இனிப்பாக இல்லை. கடந்த 1994-ம் ஆண்டு சந்தர்பால், கினியாவில் நடந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக களம் இறங்கினார். இந்த போட்டியில் சந்தர்பால் அரை சதம் அடித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில், 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவரது இறுதி டெஸ்ட் போட்டியும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே அ…
-
- 1 reply
- 462 views
-
-
மைதானத்தில் ஆடுவதை விட கிரிக்கெட் ஆட்டம் டிவி-யில் பார்க்க சுலபமானது: தோனி ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி. | படம்: ஏ.எஃப்.பி. மற்றெந்த விவகாரங்களை விடவும் கிரிக்கெட்டை பற்றி கருத்து தெரிவிப்பதில் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் மிகவும் தாராளமாக செயல்படுகிறது என்று ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்தியாவில் ஒவ்வொருவரும் கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிக்க விரும்புகின்றனர் என்றே நான் கருதுகிறேன். கருத்துச் சுதந்திரம் உள்ளது, அதனால் ஒவ்வொருவருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது. அதாவது இப்படிச் செய், அப்படிச் செய், இப்படி விளையாடு, அப்படி விளையாடு என்று கூறப்படுக…
-
- 0 replies
- 419 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தினேஷ் அகிரா பதவி, கிரிக்கெட் நிபுணர் 25 மே 2025, 12:03 GMT தோனி ஓய்வுபெற வலியுறுத்தும் ரசிகர்களின் கருத்துக்கள் உண்மையில் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகின்றன. தோனியை நன்றாக அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல, வழக்கமான தோனி நகர்வுதான் என்பது எளிதாக புரிந்துவிடும். தோனியின் ஓய்வறிவிப்புகளுக்கு என்று ஒரு தனித்த பாணி உண்டு. திடீர் முடிவுகள் போல தோற்றம் அளித்தாலும், ஒரு ஃபார்முலாவின் படிதான் அவை எப்போதும் அமைந்துள்ளன. அது என்ன ஃபார்முலா? தனது தலைமைத்துவமோ ஆட்டத்திறனோ கேள்விக்குள்ளாக்கப்படும் போது தோனி முதலில் அமைதிகாப்பார், விமர்சனங்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்வார்; சமயங்களில் சற்று ஆக்ரோஷத்துடன். அடுத்ததாக தனது செயல்பாடுகள…
-
- 1 reply
- 211 views
- 1 follower
-
-
ஒவ்வொரு அணியின் ப்ளஸ், மைனஸ் என்ன..? - டி20 உலகக் கோப்பை உணர்த்திய உண்மைகள்! முன்னணி அணிகளை துவம்சம் செய்து யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இங்கிலாந்து - வெஸ்ட் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெற, பைனலில் கடைசி ஓவரில் நம்பமுடியாத ஷாக் தந்து, கோப்பையை கைப்பற்றி 'சாம்பியன்' டான்ஸ் போட்டார்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். கோப்பையை வெல்லும் அணிகள் என கருதப்பட்ட இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா சறுக்கியது எப்படி? அரையிறுதியில் நியூசிலாந்துக்கு ஏன் அதிர்ச்சி தோல்வி? இங்கிலாந்து எப்படி ஃபைனலுக்கு வந்தது? ஆப்கானிஸ்தான் விஸ்வரூபம் எடுத்தது எப்படி? ஒவ்வொரு அணியின் பிளஸ் -மைனஸ் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.... 1. வங்கதேசம் பிளஸ் : இந்த உலகக்கோப்பையில…
-
- 0 replies
- 575 views
-
-
<p>Your browser does not support iframes.</p> 500-வது கோல் அடித்து சாதனை படைத்த வீரர் ஸ்பெயின் கிளப் போட்டியான லாலிகா தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. முடிவு ஏமாற்றம் அளித்தாலும், தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டம் மெஸ்சிக்கு தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் மெஸ்சி 63-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளில் 500 கோல்களை அவர் எட்டியிருக்கிறார். 28 வயதான மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 450 கோல்களும், அர்ஜென்டினாவுக்காக 50 கோல்களும் அடித்திருக்கிறார். மெஸ்சி இடது காலால் 406 கோல்களும்,…
-
- 5 replies
- 662 views
- 1 follower
-