விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
முப்பரிமாண மின் பொம்மலாட்ட கிரிக்கெட் வலைதளஒளிபரப்பு www.cricinfo.com வலைதளத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பின் வர்ணனையாளரின் வர்ணனையினை உடனடியாக அதற்கேற்ற அசைவுகளுடன் முப்பரிமாண மின் பொம்மலாட்டமாக மாற்றி படியடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் ( simulated Players) நேரடியாக ஒளிபரப்பில் பார்ப்பது போல் மின்பொம்மலாட்ட கிரிக்கெட்டியினை 30-4-0 வினாடிகள் காலதாமதத்தில் வலைதள பொம்மலாட்ட ஒளிபரப்பில் காட்ட ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்ற இந்திய –இலங்கை கிரிக்கெட் போட்டி வலைதள பொம்மலாட்டமாக வலைதள ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் விளையாட்டு அரங்கின் எந்த பக்கத்திலிருந்து நாம் பார்க்க விரும்புகிறோமோ அந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
* முதலிடத்தை இழந்துவிடும் அபாயம் அவுஸ்திரேலிய - நியூஸிலாந்து அணிகளிடையே நியூஸிலாந்தின் வெலிங்டனின் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி பத்து விக்கெட்டுகளால் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிவடைந்த முக்கோண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் கடைசி இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து இங்கிலாந்திடம் வெற்றிக் கிண்ணத்தை பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி நேற்று நியூஸிலாந்துடன் தோல்வியுற்றதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டித் தரவரிசையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தும் முதலிடத்திலிருந்து வரும் நிலையில் நேற்றைய தோல்வியின் மூலம் அவு…
-
- 3 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலிய கப்டன் கூறுகிறார் நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதலாவது ஒரு நாள் போட்டியில் நேற்று மோதியது. சப்பல் - ஹாட்லி தொடருக்காக அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி விளையாடுகிறது. உலக கிண்ணத்தை கருத்தில் கொண்டு அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கிபொண்டிங், துணை கப்டன் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயத்தால் சைமண்ட்ஸும் அணியில் இடம்பெறவில்லை. இதையடுத்து இந்தத் தொடருக்கான கப்டனாக மைக்கேல் ஹஸி நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை வெலிங்டனில் நடந்தது. சமீபத…
-
- 3 replies
- 954 views
-
-
உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் சகல துறை வீரர் ரஸல் ஆர்னோல்டும் மிதவேகப் பந்துவீச்சாளர் நுவான் குலசேகரவும் சேர்க்கப்பட்டுள்ளனர். உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 பேரைக் கொண்ட இறுதி அணியை தெரிவு செய்யும் இறுதிநாள் நேற்று திங்கட்கிழமையாகும். இந்த நிலையில் உலகக் கிண்ணத்துக்கான இறுதி அணியை தேர்வுக் குழு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்தது. இதற்கமைய இந்த அணியில் எட்டு துடுப்பாட்ட வீரர்கள், இரு சுழற்பந்து வீச்சாளர்கள், ஐந்து நடுத்தர வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்குவர். இதற்காக, கடந்த பல மாதங்களாகக் அணியில் இடம்பெறாத ரஸல் ஆர்னோல்டும் நுவான் குலசேகரவும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தவும், பந்துவீச்சு பலத்தை அதிகர…
-
- 0 replies
- 1k views
-
-
அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெற் போட்டிகள். அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடையேயான முத்தரப்பு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெற் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. அவுஸ்ரேலியா மெல்போன் கிரிக்கெற் மைதானத்தில் மதியம் 2-15 க்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் அவுஸ்ரேலியா அணியும் இங்கிலாந்து அணியும் மோதவுள்ளன. உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக Ashes Test போட்டிகளில் பங்குபற்றாத இங்கிலாந்து அணித்தலைவர் Michael Vaughan இந்த முத்தரப்பு போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. Australia v England - Melbourne - 12 Jan Australia v New Zealand - Hobart - 14 Jan En…
-
- 13 replies
- 2.2k views
-
-
செயலாளர் பதவியை வகிக்கும் முதலாவது தமிழன் -ஏ.தேவராஜா- "இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சர்வதேச ரீதியில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அணியாகத் திகழ்வதினால், எதிர்வரும் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டம் வரை இலங்கை முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது" இவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக்குழுவின் செயலாளர் கே.மதிவாணன் தினக்குரலுக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்தார். இப்பேட்டியில் அவர் முதலில் தன்னைப் பற்றி தெரிவிக்கையில்; எனது சொந்த இடம் பருத்தித்துறை. நான் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கல்வி கற்றேன். சிறுவயதில் இருந்து எனக்கு கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம். கல்லூரியின் கிரிக்கெட் அணியில் நான் சிறப்பாக விளையாடியதினால் யாழ். மாவட்ட…
-
- 0 replies
- 870 views
-
-
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையான ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகள் இந்தியாவில் ஆரம்பம். இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையேயான நான்கு ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகளை உள்ளடக்கிய போட்டித் தொடர் இன்று இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. இன்று Nagpur துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. முதலில் துடுப்பாடிய இந்தியா அணி மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெற்றுக்களை மாத்திரம் இழந்து 338 ஓட்டங்களை எடுத்திருந்தனர். Sourav Ganguly 98 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார், Gautam Gambhir 69 ஓட்டங்களையும், Dhoni 62 ஓட்டங்களையும், Rahul Dravid 54 ஓட்டங்களையும் பெற்றன…
-
- 1 reply
- 882 views
-
-
புதிய சாதனைக்கு காத்திருக்கும் சச்சின் [27 - January - 2007] [Font Size - A - A - A] ஒருநாள் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திவரும் சச்சின் டெண்டுல்கர் விரைவில் புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார். இந்திய வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிகமுறை டக் அவுட் ஆனவர் என்ற சாதனை தான் அதுவாகும். 376 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் இதுவரை 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். (ஓட்டம் ஏதும் எடுக்காமல்) இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜவஹல் ஷ்ரீநாத் 19 முறையும், கும்பிளே 18 முறையும் `டக் அவுட்' ஆகியுள்ளனர். தற்போது சச்சின் 3 ஆம் இடத்தில் உள்ளார். டக் அவுட் சாதனை படைப்பாரா அல்லது சென்னையில் இன்று நடக்கும் போட்டியில் சதம் அடிப்பாரா என்று பொறுத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தான் - தென் ஆபிரிக்கா இடையே நடைபெற்ற முதலாவது Test போட்டியில் தென் ஆபிரிக்கா 7 விக்கெற்றுக்களால் வெற்றி. தென் ஆபிரிக்காவின் Centurion துடுப்பாட்ட மைதானத்தில் பாகிஸ்தான் - தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது Test போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 7 விக்கெற்றுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது பந்துத் தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தென் ஆபிரிக்கா அணி வீரர் Herschelle Gibbs களத்தில் துடுப்பாடிக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி வீரர்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்த காரணத்துக்காக Herschelle Gibbs க்கு அடுத்து நடைபெறும் இரண்டு Test போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விக்கெற்றில் பொருத…
-
- 0 replies
- 952 views
-
-
86 வருடங்களுக்குப் பின் ஐந்து Ashes Test போட்டிகளிலும் வெற்றி பெற்று (5:0) சாதனை படைத்தது அவுஸ்ரேலியா. Sydney துடுப்பாட்ட மைதானத்தில் 2 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்ற ஐந்தாவதும் கடைசியுமான Ashes Test போட்டியில் அவுஸ்ரேலியா அணி இங்கிலாந்து அணியை 10 விக்கெற்றுக்களால் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அவுஸ்ரேலியா அணி Ashes வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. ஆட்டத்தின் நாயகனாக Stuart Clark தெரிவு செய்யப்பட்டார் தொடர் ஆட்ட நாயகனாக அவுஸ்ரேலியா அணித்தலைவர் Ponting தெரிவு செய்யப்பட்டார். Ashes Test போட்டி வரலாற்றில் 86 வருடங்களுக்கு பின் "நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்று (5:0) சாதனை படைத்துள்ளது என்பது கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
நான்காவது Ashes Test போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தியது அவுஸ்ரேலியா! 26 ஆம் திகதி அவுஸ்ரேலியாவின் மெல்போன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிய நான்காவது Ashes Test போட்டியில் அவுஸ்ரேலியா அணி இங்கிலாந்து அணியை ஒரு இனிங்ஸ் மற்றும் 99 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் தமது அணி முதலில் துடுப்பெடுத்து ஆடுவதாக தீர்மானித்தார் அதன் படி களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர் Shane Warne இன் சுழல் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 74.2 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்கு சகல விக்கெற்றுக்களையும் இழந்தனர் இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் Strauss - 50 ஓட்டங்களை பெற்றார் அவுஸ்ரேலியா அணி சார்பில் Shane Warne -…
-
- 1 reply
- 1.1k views
-
-
சாதனை பந்து வீச்சாளர்களான ஷேன் வோர்ன், மெக்ராத் ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச அரங்கில் முடிசூடா மன்னர்களாக நடைபோட்டு வரும் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஷேன்வோர்ன் (37 வயது), மெக்ராத் (36 வயது). இருவரும் இணைந்து சுமார் 1200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை சமீபத்தில் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக இவர்கள் இருவரும் இத்தொடருடன் ஓய்வுபெறப்போவதாக புகழ்பெற்ற அவுஸ்திரேலிய `ரி.வி.' `சனல் நைன்' தகவல் வெளியிட்டுள்ளது. பேர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்டின்போது, விரைவில் ஓய்வு பெறப்போவதாக வோர்ன், சூசகமாக தெரிவித்தார். ஆனால், மெக்ராத்தும் தற்போது இணைந்துள்ளது அவுஸ்…
-
- 2 replies
- 1.5k views
-
-
டர்பன்: தென் ஆப்பிரிக்காவும், இந்தியாவும் மோதிய 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க மு¬டியாமல் 91 ரன்களில் சுருண்டு, 157 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமான தோல்வியை சந்தித்தது இந்தியா. இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே தற்போது ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்கியுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அப்போட்டி கைவிடப்பட்டது. இந் நிலையில் டர்பன் நகரில் 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய தொடக்கப் பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசியதால் தென் ஆப…
-
- 2 replies
- 1.1k views
-
-
15 வது ஆசிய விளையாட்டு நான்கு வருடத்திற்கொருமுறை நடக்கும் இப்போட்டி தற்போது கத்தார் தலைநகரமான டோஹா வில் மிக கோலாகலமாக 1-12-2006 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது அதில் 45 நாடுகளுக்கும் மேல் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து நடை பெறும் இப்போட்டி 15 நாட்கள் வரை நீடிக்கும். விரும்பியவர்கள் இந்த இடத்திற்கு சென்று எந்த நாடு என்ன மெடல்களைப் பெற்றுள்ளது என்பதைக் கண்டறியலாம் http://www.dohaasiangames.org/gis/me...InfoMedal.aspx
-
- 0 replies
- 1k views
-
-
பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் முகமட் யூசுபின் சாதனை மேற்கிந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் 124 ஒட்டங்கள் பெற்றார். இவர் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் 102 ஒட்டங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒருவருடத்தில் அதிக ஒட்டங்கள் பெற்றவர் என்ற 30 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த மேற்கிந்திய அணியின் விவிலியன் ரிச்சாட்டின் சாதனையினை இவர் முறியடித்தார். விவிலியன் ரிச்சாட் 1976ல் 11 போட்டிகளில் 1710 ஒட்டங்கள் பெற்றிருந்தார். முகமட் யூசுப் 11 போட்டிகளில் இந்த வருடம் 1788 ஒட்டங்கள் பெற்றார். இவரது இன்னொரு சாதனை- ஒரு வருடத்தில் அதிக 100 ஒட்டங்கள் பெற்றவர் என்ற சாதனையினை இவர் பெற்றுள்ளார். இவர் இந்த வருடம் 9முறை 100 ஒட்டங…
-
- 1 reply
- 1.4k views
-
-
கிரிக்கெட்டில் இந்தியப் பள்ளி மாணவர்கள் உலக சாதனை கிரிகெட்டில் உலக சாதனைப் படைத்த இந்திய மாணவர்கள் இந்தியப் பள்ளி மாணவர்கள் இருவர் கிரிக்கெட் விளையாட்டில் உலக சாதனைப் படைத்துள்ளார்கள். முஹமது ஷைபாஸ் தும்பி மற்றும் மனோஜ் குமார் ஜோடி செகந்தராபாதில் 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கானப் போட்டியில் நாற்பது ஓவர்களில் 721 ஓட்டங்களை எடுத்து இந்தச் சாதனையை படைத்துள்ளனர். உலக அளவில், ஒரு நாள் போட்டிகளில் ஜோடியாக எடுத்த ஓட்டங்களிலும் சரி, மிகப்பெரிய அளிவில் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதிலும் சரி, இது தான் மிக அதிகமானது என கிரிக்கெட் விளையாட்டின் புள்ளி விபர நிபுணர்கள் கூறியுள்ளார்கள். இவர்கள் இவ்வாறு எடுத்த ஓட்டங்களை கண்ட எதிர் அணியினர் 21 ஓட்டங்கள…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிட்னி: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மாண்டி பனீசார் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இனவெறி கருத்துக்களை வெளியிட்டு அவமதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா வந்துள்ளது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி சில பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் பனீசரும், தென் ஆப்பிரிக்காவில் பிறந்த வெள்ளையரான கெவின் பீட்டர்சனும் இடம் பெற்றுள்ளனர். பனீசர் ஒரு சீக்கியர் ஆவார். கான்பெர்ரா நகரில் நியூ சௌத் வேல்ஸ் அணியுடன் நடந்…
-
- 7 replies
- 1.6k views
-
-
மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவின்போது மத்திய அமைச்சரும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான சரத் பவாரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தோள்பட்டையைப் பிடித்து தள்ளி விட்டது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் என்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்த ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் கோப்பையை பரிசாக வழங்கினார். கோப்பையைப்…
-
- 0 replies
- 957 views
-
-
மினி உலகக் கிண்ணப் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் திகதி ஆரம்பம் 8 நாடுகள் பங்கேற்கும் மினி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் திகதி இந்தியாவில் தொடங்குகிறது. 8 நாடுகள் பங்கேற்கும் மினி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (ஐ.சி.சி. சம்பியன் கிண்ணம்) அடுத்த மாதம் (அக்டோபர்) 15 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 5 ஆம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்திய அணி `ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இது மட்டுமல்லாமல் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளாகும். `பி' பிரிவில் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. 6 அணிகள் இந்தப் போட்டியில் ஆட நேரடியாக தகுதி பெற்று விட்டன. மேலும் இரண்டு அணிகள் தக…
-
- 38 replies
- 4.8k views
-
-
-
- 0 replies
- 941 views
-
-
களத்தில் அதிரடியாக ஆடும் ஹெர்ஷல் கிப்ஸ், கிரிக்கெட் சூதாட்ட விசாரணையின் போது மிரண்டு போயுள்ளார். டில்லி பொலிஸார் இவரிடம் 100க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு மடக்கியுள்ளனர். மிகுந்த பதற்றமாக இருந்த கிப்ஸ், சில கேள்விகளுக்கு `மறந்து விட்டேன்', `நினைவுக்கு வரவில்லை' என்று கூறி சமாளித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்க அணி இந்தியா வந்த போது கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதில் அப்போதைய கப்டன் குரோஞ்ஞே, கிப்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நிக்கி போஜே சிக்கினர். குரோஞ்ஞே மரணமடைய, மற்ற இருவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்படும் அபாயம் இருந்ததால் இந்தியப் பயணத்தை கிப்ஸ் தவிர்த்து வந்தார். இந்தச் சூழலில் இவர் மினி உலகக் கிண்ணத் தொடரில…
-
- 0 replies
- 986 views
-
-
கிரம்னிக் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ----------------------------------------------------------------- 14 அக்டோபர் 2006 ரஷ்யாவின் எலிஸ்டாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டிகளில் ரஷ்ய வீரர் விளாடிமிர் கிரம்னிக் (Vladimir Kramnik), பல்கேரியாவின் வாசலின் டோபலோவை (Vasline Topolov) டைபிரேக்கர் முறையில் வீழ்த்தி சாம்பியன் ஆனார். இதன் மூலம் கடந்த 1993ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சாம்பியனாக கிரம்னிக் வெற்றிபெற்றுள்ளார். கிராம்னிக் தனது சிப்பாய் ஒருவரை முன்னகர்த்திய பின் (10. e4 ) இறுதி நாளன்று மிகவும் சீக்கிரமாக (rapid games) நடைபெற்ற, குறிப்பிட்ட நேரத்திலான ஆட்டத்தில் கிரம்னிக் 8.5 - 7.5 என்ற ஸ்கோருடன் இந்த வெற்றியை …
-
- 4 replies
- 1.8k views
-
-
25 வருடகால தமிழ் - சிங்கள பகையை தீர்ப்பது மிகக் கடினம்" *மனம் திறந்து பேசுகிறார் சாதனை நாயகன் முரளி தமிழ்க் குழந்தைகளுக்கு கணினி மற்றும் ஆங்கில பாடங்களை கற்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள உலக சாதனையாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரன், இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலுள்ளது 25 வருடகால நீண்ட பகையெனவும் இந்த இடைவெளியை குறைப்பது மிகக் கடினமெனவும் தெரிவித்துள்ளார். `இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸின் தலைமை ஆசிரியர் சேகர் குப்தா என்.டீ.ரீ.வியின் `வோக் த ரோக்' நிகழ்ச்சிக்காக முரளிதரனை நேர்கண்டிருந்தார். அந்த நேர்காணலில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்தும் அதனால் தனது பெற்றோர் எதிர்நோக்…
-
- 0 replies
- 1k views
-
-
லாலம்பூர்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக கோலாலம்பூரில் இன்று நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்தார். இது அவருக்கு 40வது ஒரு நாள் சதமாகும். இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியை அபாரமாக தோற்கடித்தது. இன்று இந்தியாவுக்கும்,மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிராவிடும், சச்சின் டெண்டுல்கரும் களம் இறங்கினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் களம் இறங்கியதால் ர…
-
- 5 replies
- 2.1k views
-
-
தரையில் விழுந்து வந்த பந்தை பிடித்து அவுட் கேட்டதால் பாகிஸ்தான் கப்டன் இன்சமாம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தான் அணி கப்டன் இன்சமாம் ஒவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானார். இந்த விவகாரம் தொடர்பாக இன்சமாமிடம் சர்வதேச கிரிக்கெட் சபை ஒழுங்கு நடவடிக்கை குழு 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலண்டனில் விசாரணை நடத்த விருக்கிறது. இந்த நிலையில் இன்சமாம் இன்னொரு புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையேயான 4 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நொட்டிங்காமில் நடந்தது. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இங்கிலாந்து கப்டன் ஸ்டாரஸ் அடித்த பந்தை சிலிப்பில் நின்ற இ…
-
- 13 replies
- 2.3k views
-