விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
சமநிலையில் குரோஷியா – ஆர்மேனியா போட்டி ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான முன்னோட்டமான, குரோஷியாவில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்மேனியாவுக்கும் இடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை இவான் பெரிசிச் பெற்றதோடு, ஆர்மேனியா சார்பாகப் பெறப்பட்ட கோலை வெபேமர் அங்குலோ பெற்றிருந்தார். இதேவேளை, போலந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ரஷ்யாவுக்குமிடையிலான சிநேகபூர்வ போட்டியும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. போலந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜகுப் ஸ்வியெர்ஸ்ஸொக் பெற்றதோடு, ரஷ்யா …
-
- 0 replies
- 468 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடைபெறுவது 100 சதவீதம் உறுதி ஒலிம்பிக் போட்டிகள் திட்டபடி முன்னோக்கி செல்லும் என்ற 2020 டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர் சீகோ ஹாஷிமோடோ 100 சதவீதம் உறுதியாக கூறியுள்ளார். எனினும் கொவிட்-19 நிலைமகள் மேலும் மோசமானால் பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய அரங்கில் போட்டிகளை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் தொற்றுகள் ஜப்பான் அதிகரித்து வருகிவதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதி அவசரகால நிலையில் உள்ளது. அதேநேரம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை 23 அன்று திட்டமிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஒரு வருடம் தாமதமான பின்னர் விளையாட்டுக்கள் இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது மீண்டும் தள்ளி …
-
- 0 replies
- 389 views
-
-
பிரெஞ்சு ஓபனிலிருந்து விலகினார் ஒசாகா உலக நம்பர் டூ வீராங்கனையான நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை அறிவிக்கும் ஒரு டுவிட்டர் பதிவில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, 2018 ஆம் ஆண்டில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதிலிருந்து தான் நீண்டகால மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறினார். இந்த மன அழுத்தம் காரணாக ஒசாகா போட்டிக்கு பிந்தைய ஊடகவியலாளர் சந்திப்புக்களை புறக்கணித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோலண்ட் கரோஸ் போட்டியின்போது தனது முதல் சுற்று வெற்றியின் பின்னர் இடம்பெற்ற செய்தி மாநாட்டைத் தவிர்த்ததற்காக ஒசாக்காவிற்கு 15,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதேநேர் நான்கு கிராண…
-
- 0 replies
- 429 views
-
-
மிஸ்பா உல் ஹக்: பாகிஸ்தானின் மீட்பர்... சவால்களை எதிர்கொண்டு சரித்திரம் படைத்தவர்! அய்யப்பன் மிஸ்பா உல் ஹக் ( icc-cricket.com ) சாதிக்க வேண்டுமென்ற துடிப்பிருப்பவனுக்கு, வெற்றிக்கு வயதில்லை, வரம்புமில்லை என்பதை, ஓய்வறிக்க வேண்டிய நேரத்தில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி, வாழாத வாழ்வின் இன்னொரு அத்தியாயத்தை வரைந்தவர்தான் மிஸ்பா உல் ஹக். பேட்ஸ்மேன்களையும், பௌலர்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாய் பாகிஸ்தான் உருவெடுத்தாலும், இம்ரான் கானுக்குப் பிறகு, ஒரு நிலையான கேப்டன்கூட அங்கே தலைமையேற்கவில்லை, அவர்களது கிரிக்கெட் போர்டு அதற்கு இடமளிக்கவுமில்லை. வருடத்திற்கு ஒரு கேப்டன் என பந்தாடிக் கொண்டிருந்…
-
- 0 replies
- 559 views
-
-
என் கிரிக்கெட் வாழ்க்கையைச் செதுக்கியதில் ஷேன் பாண்டுக்கு முக்கியப் பங்குண்டு: பும்ரா! தனது கிரிக்கெட் வாழ்க்கையைச் செதுக்கியதில் முன்னாள் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்டுக்கு முக்கியப் பங்கிருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ஷேன் பாண்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தற்போது இருந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் தரப்பு சமீபத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் பும்ரா, “நான் இங்கு இல்லையென்றாலும், இந்திய அணியுடன் விளையாடும்போது ஷேன் பாண்டோடு பேச முயல்வேன். இது ஒரு நல்ல பயணமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவதைக் கற்று எனது பந்துவீச்…
-
- 1 reply
- 705 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வாய்ப்பு கிட்டியுள்ள மில்கா டி சில்வாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் கிரிஸ்புரோ இலங்கையின் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பளர்களான கிரிஸ்புரோ குழுமம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ள வீராங்கனை மில்கா டி சில்வாவிற்கு தமது அனலான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான உடற்தகுதியை அவர் அடைந்துள்ளதால், சர்வதேச ஜிம்னாஸ்டிக் மாநாட்டினால் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுவதை உறுதிப்படுத்தும். இதனால், ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது இலங்கை ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக மில்கா டி சில்வா உள்ளார். 18 வயதான மில்கா…
-
- 0 replies
- 566 views
-
-
சர்வதேச ஊடகங்களின் விமர்சனத்தால் இதயத்தில் ரத்தம் கசிகிறது; அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் அழிவை ஏற்படுத்தியதால் இந்தியா கடும் நெருக்கடியில் உள்ளது. இதன் விளைவாக, நாடு சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகளைப் பதிவு செய்து வருகிறது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து தினசரி சுமார் 4,000 எனும் அளவில் உள்ளது. இது தான் சமயம் எனக் காத்திருந்ததைப் போல், பல சர்வதேச ஊடகங்களும், இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில், மிக மோசமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்தியா கடந்து வரும் சோதனை நேரங்களில் இவ்வாறு மோசமாக சித்தரிக்கும்…
-
- 0 replies
- 659 views
-
-
11 கோடி நிதி திரட்டிய விராட் கோலி! இந்தியாவின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 11.39 கோடி நிதி திரட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.62 லட்சமாக உள்ளது. ஒரேநாளில் 4,120 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்கள் பலரும் நன்கொடை அளித்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்திய அணி தலைவர் விராட் கோலியும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக கேட்டோ அமைப்பின் வழியாக ரூ. 7 கோடி நிதி திரட்ட முடிவெடுத்தார்கள். இதன் முதற்கட்டமாக இருவரும் இணைந்து ரூ. 2 கோ…
-
- 0 replies
- 624 views
-
-
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது கடினம்... சர்வதேச ஆட்டங்கள் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியாமல் போகலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐப…
-
- 0 replies
- 601 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி 2 இலட்சம் கையொப்பங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரும் ஒரு இணையத்தள விருப்பம் கோரல் மனு கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட 2 இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள கோடை ஒலிம்பிக்கின் தொடக்கத்திற்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான கால அவகாசம் உள்ளன. டோக்கியோ உலகளாவிய நிகழ்வை எவ்வாறு நடத்தலாம் மற்றும் தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஜப்பானிய பொதுமக்களை கொவிட்-19 இலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்ற கேள்விகள் இன்னும் உள்ளன. இந் நிலையில் "டோக்கியோ ஒலிம்பிக்கை நிறுத்து" (Stop Tokyo Olympics) என்று இ…
-
- 1 reply
- 686 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா..! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியிலிருந்து இடைநடுவில் விலகியிருந்தார். கொரோனாவிற்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். மேலும், அஸ்வின் குடும்பத்தில், குழந்தைகள் உட்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் …
-
- 0 replies
- 804 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுப்போருக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கொவிட்-19 நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்க கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான “playbooks” என அழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, வருகை தரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஜப்பானில் முதல் மூன்று நாட்களுக்கு தினமும் சோதிக்கப்படுவார்கள். டோக்கியோவை அடைந்த பின்னர் முதல் இரண்டு வாரங்களுக்கு மற்ற விளையாட்டு அதிகாரிகளுடன் சாப்பிட அவர்களுக்கு அனுமதி இல்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்ட…
-
- 0 replies
- 489 views
-
-
12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 188 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்போது, இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். அதன்படி, திமுத் கருணாரத்ன 106 ஓட்டங்களுடன் லஹிரு திரிமான்ன 80 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர். 12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! (adaderana.lk)
-
- 0 replies
- 800 views
-
-
டி நடராஜனுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன். இடது கை பந்து வீச்சாளரான இவர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக, நெட் பவுலராக சென்று, அதன்பின் இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி முத்திரை படைத்தார். இங்கிலாந்து தொடரின்போது காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. கடைசி நேரத்தில் அணியில் இணைந்தார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். …
-
- 1 reply
- 930 views
-
-
ரோயல் - தோமஸ் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெறவிருந்த 142 வது கிரிக்கட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதம் 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் குறித்த போட்டி இடம்பெறவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. ரோயல் - தோமஸ் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு (adaderana.lk)
-
- 0 replies
- 504 views
-
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சம்: ஐ.பி.எல். தொடரிலிருந்து வெளியேறும் வீரர்கள்! இந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அச்சம் காரணமாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரிலிருந்து பல முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர். இதன்படி டெல்லி கெபிடல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிவந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான அஸ்வின், நடப்பு தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். இதேபோல றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்த அவுஸ்ரேலிய வீரர்களான ஆடம் செம்பா மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். மேலும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இடம்பிடித்த அவுஸ்ரேலிய வீரரான ஹென்ரிவ் டை த…
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கை ரீ-20 அணியில் இடம் பிடித்த யாழ். மைந்தன் வியாஸ்காந்த்! இலங்கை ரீ-20 கிரிக்கெட் குழாமில் யாழ். மைந்தன் வியாஸ்காந்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இலங்கை ஜாம்பவான்கள் அணிக்கும், இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான காட்சி கிரிக்கெட் போட்டி வரும் மே-04ஆம் திகதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த காட்சி போட்டிக்கான இலங்கை ரீ-20 கிரிக்கெட் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவன் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்திருந்த எல்.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்று சர்வதேச வீரர்களுக்கு எதிராக சிறப்பான பந்து வீச்சு திறமையை வெளிப்படுத்தியதன ;மூலம் அனைவரது கவனத்தையும் விஜயகாந்த் வியா…
-
- 3 replies
- 506 views
-
-
பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கண்டி, பல்லேகல மைதானத்தில் இந்த போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் (adaderana.lk)
-
- 0 replies
- 539 views
-
-
ஐரோப்பிய சூப்பர் லீக்கிலிருந்து விலகிய ஆறு அணிகள் ஐரோப்பிய சூப்பர் லீக் திட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆறு ஆங்கில கிளப்களும் ரசிகர்களின் பெரும் பின்னடைவைத் தொடர்ந்து வெறுக்கத்தக்க போட்டியில் இருந்து வியத்தகு முறையில் விலகியுள்ளன. அதன்படி மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், செல்சியா மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய 6 ஆங்கில கிளப்களே இவ்வாறு விலகியுள்ளன. ஐரோப்பாவில் உள்ள அனைத்து முன்னணி அணிகளும் சேர்ந்து அவர்களுக்கென அமைக்கப்படும் ஒரு லீக் போட்டிதான் ஐரோப்பிய சூப்பர் லீக். இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, ஆர்சேனல், டாட்டன்ஹாம், செல்சியா ஆகிய குழுக்களும் ஸ்பெயி…
-
- 0 replies
- 641 views
-
-
கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் கிளப்பை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்குள் நடைபெறும் கால்பந்து தொடர்களில் ஒன்று கோபா டெல் ரே. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் பார்சிலோனா- அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2 ஆவது பாதி நேர ஆட்டத்தில் பார்சிலோனா வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் கிரிஸ்மோன் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 3 நிமிடத்தில் டி ஜாங் ஒரு கோலும், மெஸ்சி 68 ஆவது மற்றும் 72 ஆவது நி…
-
- 0 replies
- 441 views
-
-
மாங்குளத்தில் சிறப்புற இடம்பெற்ற சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி! 8 Views முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி சிறப்புற இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பானது, வடக்கு கிழக்கில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் உள்வாங்கி தனது சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் உயிரிழை அமைப்பானது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரது வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு…
-
- 0 replies
- 569 views
-
-
முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதத்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று தான் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். …
-
- 0 replies
- 400 views
-
-
நடராஜனா கொக்கா.
-
- 7 replies
- 1.4k views
- 2 followers
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) ஐந்து தசாப்த கால சர்வதச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒவ்வொரு தசாப்தத்துக்குமான அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களாக ஐவரின் பெயர்களை உலக புகழ்பெற்ற விஸ்டன் சஞ்சிகை பெயரிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மூவரும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் அடங்குகின்றனர். மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் 1970 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டார். இந்தியாவுக்கு முதன் முதலாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் 1980 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெ…
-
- 0 replies
- 370 views
-
-
IPL 2021 : நீங்க அடிக்கணும்... நாங்க ரசிக்கணும்... கமான் கெயில்! #ChrisGayle கார்த்தி கிறிஸ் கெயில் 41 வயதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்று களமிறங்குகிறார் கிறிஸ் கெயில். ''பஞ்சாப் அணியில் நம்பர் 3 வீரராக களமிறங்குவார்'' என்கிற செய்தியை கெயில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏனென்றால் கிறிஸ் கெய்ல் இல்லையென்றால் IPL-ல் என்டர்டெய்ன்மென்ட் இல்லை. 132 போட்டிகளில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல்தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர். 6 சதங்கள் அடித்து கெயில் முதல் இடத்தில் இருக்க கோலி 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி, கெயிலை 61 போட்டிகள் கூடுதலாக விளையாடியும் சதங்கள் சாதனையை முந்தமுடியவில்லை.…
-
- 1 reply
- 775 views
- 1 follower
-