விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேராவுக்கு இலங்கை இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி திசர பெரேரா இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாடும் பெரேரா கஜாபா படையணியில் ஒரு மேஜர் பதவியில் பணியாற்றுவார். முன்னாள் தேசிய கிரிக்கெட் கப்டன் தினேஷ் சந்திமலும் இந்த ஆண்டு இலங்கை இராணுவ தன்னார்வப் தொண்டர் படையணியில் இணைந்து இராணுவத்தின் கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/72086
-
- 6 replies
- 1.2k views
-
-
இருபத்து ஓராம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தமானது நேற்றுடன் முடிவடைந்து இன்று 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பிக்கையில், விளையாட்டில் கடந்தாண்டில் பிரகாசித்த நாயகர்களை இக்கட்டுரை நோக்குகிறது. அந்தவகையில் பார்க்கப்போனால் அனைத்து விளையாட்டுக்களின் நாயகர்களையும் இந்த ஒரு கட்டுரைக்குள் உள்ளடக்குவது கடினமானதென்ற நிலையில், கிரிக்கெட், கால்பந்தாட்டம், டென்னிஸ், தடகளம், போர்மியுலா வண்ணின் நாயகர்களை இக்கட்டுரையில் பார்ப்போம். இங்கிலாந்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கிரிக்கெட்டே எமது தெற்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தானில் சுதேசிய விளையாட்டுக்களை விட அதிகம் பேரை தன்னை நோக்கி ஈர்த்த விளையாட்டாக இருக்கின்ற நிலையில் அதிலிருந்து கடந்தாண்டின் நாயகர்கள…
-
- 0 replies
- 772 views
-
-
இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தோல்விகளுக்கு முடிவுகட்டிய தென்னாபிரிக்கா By Mohamed Shibly - இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 107 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் தோல்விகளுக்குப் பின் முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. இதன்மூலம் உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரில் தென்னாபிரிக்க அணி முதல் புள்ளியை பெற்றுக் கொண்டது. சென்சூரியன் சுப்பர்பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சாதனை இலக்கான 376 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி கடந்த சனிக்கிழமை மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவின்போது 121 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை…
-
- 0 replies
- 820 views
-
-
தோல்வியுறாத அணியாக ஆண்டை பூர்த்தி செய்த லிவர்பூல் By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, லிவர்பூல் எதிர் வெல்வர்ஹம்ப்டன் வொன்டரர்ஸ் அன்பீல்டில் நடைபெற்ற போட்டியில் சர்ச்சைக்குரிய வீடியோ நடுவர் உதவிக்கு (VAR) மத்தியில் வொல்வஸ் அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய லிவர்பூல் அணி 13 புள்ளிகள் முன்னிலையுடன் ப்ரீமியர் லீக்கில் முதலிடத்துடன் இந்த ஆண்டை பூர்த்தி செய்தது. லிவர்பூல் அணிக்காக தனது 150 ஆவது போட்டியில் களமிறங்கிய சாடியோ மானே முதல் பாதி …
-
- 1 reply
- 903 views
-
-
நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்ட வில் சமர்வில் By A.Pradhap - அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான குழாத்தில் ட்ரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் வில் சமர்வில் நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். சுற்றுலா நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான குழாத்தில் இரண்டு அணிகளும் சுழல் பந்துவீச்சாளர்களை உள்ளடக்குவதற்கு எதிர்பார்த்து வருகின்றன. இதில், அவுஸ்திரேலிய அணியில் மிச்சல் ஸ்வெப்சன் …
-
- 0 replies
- 375 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பாகிஸ்தானின் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா ஓர் இந்து என்பதால் சக கிரிக்கெட் வீரர்களால் அவர் நியாயமற்ற முறையில் பாரபட்சமாக நடத்தப்பட்டார் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 'Game on Hai' என்ற கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோயப் அக்தர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். டேனிஷ் கனேரியாவின் அபாரமான பந்துவீச்சுக்காக உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சோயப் அக்தர், 2005ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் வெல்ல டேனிஷ்தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும், "ஒருவரை மதம் அல்லது இடம் சார்ந்தோ பாரபட்சம் காட்டும்போது…
-
- 2 replies
- 420 views
-
-
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடைரை தனதாக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பேர்த்தில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296 ஓட்டங்களினால் வெற்றிபெற்று, தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந் நிலையில் இரு அணிகளுக்கிடையேயான இரணடாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு நியூஸிலாந்து அணி 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 319 ஓட்டங்களினால் …
-
- 0 replies
- 384 views
-
-
நான்கு ஆண்டுகளுக்குப்பின் இலங்கை அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் By Mohamed Shibly - ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துடன் இலங்கை அணி அதிக போட்டிகள் கொண்ட ஆண்டாக 2020 ஆம் ஆண்டை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி இலங்கை அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடருக்கு இலங்கை அணி தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (27) அறிவித்தது. புத்தாண்டை ஆரம்பித்து இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்தப் போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 5 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அந்த…
-
- 1 reply
- 569 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிரான ரி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. பவுலிங் யூனிட்டில் அதிரடி மாற்றங்கள். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ரி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் வென்ற நிலையில், அடுத்ததாக இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர், அதற்கடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. இலங்கை இந்தியாவிற்கு வந்து 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் ஆடுகிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடர் ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 5, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முறையே கவுஹாத்தி, இந்தூர் மற்றும் புனே ஆகிய இடங்களில் மூன்று ரி20 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு முழுவதும், ஒர…
-
- 1 reply
- 525 views
- 1 follower
-
-
2020 இலிருந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை நீக்க தீர்மானம் By Mohammed Rishad - நேபாளத்தில் நிறைவுக்கு வந்த 10ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) பங்கேற்ற இலங்கை வீரர்கள் பெரும்பாலான போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியதையடுத்து எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் என்பன தீர்மானித்துள்ளது. 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால இலக்கு என்பவை குறித்து தெளிவுபடுத்துகின்ற விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (24) விளைய…
-
- 0 replies
- 412 views
-
-
நியுசிலாந்திற்கு எதிராக மெல்பேர்னில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடுவரின் தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலியஅணியின் முன்னாள் தலைவர்ஸ்டீவ்ஸமித் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முதல் டெஸ்டின் 26 வது ஓவரில் நெய்ல் வாக்னரின் சோர்ட் பிச் பந்தினை விளையாட முயலாத ஸ்மித் ஆனால் லெக்பையினை பெறுவதற்காக ஓட முயன்றார். எனினும் அந்த பந்தை டெட்போல் என அறிவித்த நடுவர் நைஜல் லோங் ஸ்மித்தினை அங்கேயே நிற்குமாறு கேட்டுக்கொண்டார். எனினும் மதியநேர இடைவேளைக்காக அணியினர் ஓய்வறைகளிற்கு திரும்பிக்கொண்டிந்தவேளை ஸ்மித் நடுவருடன் கடும்வாக்குவாதத்தில்ஈடுபட்டார். ஸ்டீவ் ஸமித்தின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்த…
-
- 0 replies
- 495 views
-
-
(பாகிஸ்தான், கராச்சியிலிருந்து நெவில் அன்தனி) தமது சொந்த மண்ணில் பத்து வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியினர் வெற்றியீட்டி தமது தேச மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இலங்கைக்கு எதிராக கராச்சியில் இன்று நிறைவுபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 263 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. வல்லவர் தொடர்களை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தனதாக்கிக் கொண்டது. போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 212 ஒட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 16 பந்துகளில் மேலதிக ஓட்டம் எதுவும் பெறாமல் தனது எஞ்சிய 3 விக்கெட்களை இழந்து தோல்வ…
-
- 0 replies
- 466 views
-
-
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்களை எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் பூரான் 89, பொல்லார்ட் 74 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து 122 ரன்கள் அடித்தனர். இதில் ரோகித் சர்மா 63 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இத…
-
- 1 reply
- 398 views
-
-
தமிழீழம் உதைபந்தாட்ட அணி வெற்றி சொந்தமாக நாடுகள் இல்லாத தேசங்களுக்கிடையிலான சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகள் தற்பொழுது நெதர்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. CONIFA (Confederation of Independent Football Associations) என்று அழைக்கப்படுகின்ற இந்த சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழ அணியும் பங்குபற்றுவது வழக்கம். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் இளைஞர்களைக் கொண்ட அணி இன்றைய தினம் நெதர்லாந்தில் மேற்கு பப்புவா அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் மேற்கு பப்புவா அணியை 10 இற்கு 2 என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி இலகுவாக வெற்றியீட்டியது. http://www.battinaatham.net/description.php?a…
-
- 5 replies
- 832 views
-
-
டெஸ்ட கிரிக்கெட் வரலாற்றில் முதல் நான்கு வீரர்கள் சதம் குவித்து சாதனை (பாகிஸ்தானிலிருந்து நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவதும் தீர்மானமிக்கதுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் சதங்கள் குவித்து பாகிஸ்தானுக்கான டெஸ்ட் கிரிக்கெட் சாதனை ஒன்றை நிலைநாட்டினர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானின் முதல் நான்கு வீரர்கள் சதம் குவித்தமை இதுவே முதல் தடவையாகும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷுக்கு எதிராக டாக்காவில் 2007 இல் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முதல் நான்கு வீரர்களான தினேஷ் கார்த்திக் (129), வசிம் …
-
- 0 replies
- 599 views
-
-
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ரூ.15.5 கோடிக்கு ஏலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்று வரும் ஏலத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் பதினைந்தரை கோடி ரூபாய்க்கும், இன்னொரு ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நிலவிய கடும் போட்டிக்கு பிறகு, இங்கிலாந்து வீரர் இயன் மோர்கனை 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச்சை ஏலம் எடுப்பது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலன்ஜர்ஸ் இடையே நீண்ட நேரம் போட்டி நிலவியது. முடிவில்…
-
- 6 replies
- 1.6k views
-
-
சென் தோமஸ் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற சென் ஜோன்ஸ் By Jegan - சிங்கர் நிறுவன அனுசரணையில் இடம்பெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அகில இலங்கை ரீதியான பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடரில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரி அணிக்கு எதிராக யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லுரி இன்னிங்ஸ் மற்றும் 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பிரிவு 2 இல் சி குழுவுக்காக இடம்பெற்ற இந்த போட்டியில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரியும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியும் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தின. நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பை தீர்மானித்த சென் ஜோன்ஸ் அணிக்கு கைமேல் பலன் கிடைத்தது. எதிரண…
-
- 0 replies
- 871 views
-
-
இலங்கை இளையோர் அணிக்கு அடுத்த தோல்வி By Mohamed Azarudeen - மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று (19) இங்கிலாந்தின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினை எதிர்கொண்ட இலங்கை இளையோர் அணியினர் 44 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளனர். மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி அங்கே இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரில் ஆடிவருகின்றது. இந்த முத்தரப்பு தொடரில் தாம் விளையாடிய கடைசிப் போட்டியிலும் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கையின் இளம் வீரர்கள் மீண்டும் அவர…
-
- 0 replies
- 909 views
-
-
அடுத்த SAGஇல் இந்தியாவை வீழ்த்துவோம் – கபடி வீரர் SINOTHARAN By Admin - நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா (SAG) ஆண்களுக்கான கபடியில் முதல்தடவையாக வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்த இலங்கை கபடி அணியின் நட்சத்திர வீரர் கணேசராஜா சினோரதனுக்கு விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டதுடன், தனது வெற்றி குறித்து The Papare.com இற்கு தெரிவித்த கருத்தை இந்த காணொளியில் பார்க்கலாம். http://www.thepapare.com/video-eastern-kabaddi-star-sinotharans-arrival-the-sag-2019-tamil/
-
- 1 reply
- 545 views
-
-
ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் இலங்கை! By A.Pradhap - கராச்சியில் ஆரம்பமாகியுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டதுடன், போட்டி சமனிலையில் முடிவடைந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் ஆரம்பமாகவும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது. இன்றைய போட்டிக்கான அணியின் மாற்றங்களை பொருத்தவரை, இலங்கை அணியானது ஒரு மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. கசுன் ராஜிதவு…
-
- 0 replies
- 683 views
-
-
இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது. சென்னை நடந்த முதல் போட்டியில் கீரோன் பொல்லார்ட் தலைமையிலான அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/live-scores/india-vs-west-indies-2nd-odi-visakhapatnam-inwi12182019190938?pfrom=insidearticle
-
- 3 replies
- 854 views
-
-
சங்கக்கார தலைமையில் பாகிஸ்தான் செல்லும் எம்.சி.சி. Published by J Anojan on 2019-12-18 16:35:53 மெர்லிபோன் கிரிக்கெட் கிளப் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. குமார் சங்கக்கார தலைமையில் எம்.சி.சி. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது விசேட அம்சமாகும். எம்.சி.சி. தலைமையில் ஓர் அணி பாகிஸ்தானுக்கு இதன்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்கு லாகூரில் இடம்பெறும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானின் கிரிக்கெடானது பெருமளவு வீழ்ச்சியடைந்திரு…
-
- 0 replies
- 520 views
-
-
சென்னையில் நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுடன் கே எல் ராகுல் களமிறங்கினார். 6 ரன் எடுத்திருந்தபோது, கே.எல். ராகுல் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் காட்ரல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம்புகுந்த கேப்டன் விராட் கோலியும் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், காட்ரல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மாவுடன், சிரேயாஸ் ஐயர் கரம் கோர்த்தார். இருவரும் நித…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
CONIFA உலக உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான தேர்வுப் போட்டியில் பங்கெடுத்திருக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணி, கிழக்கு துர்கிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றிவாகை பெறும் நம்பிக்கையோடு தமிழர்கள் காத்திருக்கின்றனர். சனிக்கிழமை (14 – 12 – 2019) பிரான்சில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணி வெற்றிகொள்ளும் பட்சத்தில் இறுதிச்சுற்றுக்கு தேர்வாவதோடு, வெற்றிக்கிண்ணத்துக்கான இறுதியாட்டம் மசிடோனியா நாட்டில் இடம்பெற இருக்கின்றது. தற்போது பிரான்சில் நிலைகொண்டுள்ள தமிழீழ உதைபந்தாட்ட அணி, தேர்வுச்சுற்றுக்கான பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், உதைபந்தாட்ட இரசிகர்கள், சமூக-அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் அணிக்கு தோழமையினை தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ…
-
- 0 replies
- 440 views
-
-
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பேர்த்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா: 416/10 (துடுப்பாட்டம்: மர்னுஷ் லபுஷைன் 143, ட்ரெவிஸ் ஹெட் 39, டேவிட் வோணர் 43, ஸ்டீவ் ஸ்மித் 43, டிம் பெய்ன் 39, மிற்செல் ஸ்டார்க் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 4/92, டிம் செளதி 4/93, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/37, ஜீட் றாவல் 1/33) நியூசிலாந்து: 166/10 (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் 80, கேன் வில்லியம்சன் 34, கொலின் டி கிரான்ட்ஹொம் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 5/52, நேதன் லையன் 2/48, பற் க…
-
- 0 replies
- 387 views
-