விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
பங்களாதேஷ் அணியுடனான தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரக்கெட் அணியுடன் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60629
-
- 0 replies
- 535 views
-
-
இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம் ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடங்களை பிடித்த அணிகள், பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது நிறைவடைந்துள்ள நிலையிலேயே மேற்படி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலில் இடத்திலும், துடுப்பாட்டத்தில் 886 புள்ளிகளுடன் விராட் கோலியும், பந்து வீச்சில் 809 புள்ளிகளுடன் பும்ரா முதலாவது இடத்திலும் உள்ளனர். * ஒருநாள் அணிப் பட்டியில் : 1. இங்கிலாந்து - 125 2. இந்தியா - 122 3. நியூஸிலாந்து - 122…
-
- 0 replies
- 563 views
-
-
2019 - உலகக் கிண்ணத் தொடரில் பதியப்பட்ட முக்கிய சுவடுகள் ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது கடந்த 31 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி நேற்றைய தினம் முடிவடைந்துள்ளது. மொத்தமாக 10 நாடுகள் கலந்துகொண்ட இத் தொடரின் இறுதிப் போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியை வீழ்த்தி முதன் முறையாக சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்த உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெற்ற முக்கிய பதிவுகள் பின்வருமாறு : 1. பரிசுத் தொகை * சம்பியன் - இங்கிலாந்து - 4,000,000 அமெரிக்க டொலர்கள் ( இந்திய ரூபாவில் 28 கோடி) * ரன்னர் அப் - நியூஸிலாந்து - 2,000,000 அமெரிக்க டொலர்கள் ( இந்திய ரூபாவில…
-
- 0 replies
- 913 views
-
-
2019 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் உலகக்கோப்பை அணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பரபரப்பான இறுதிப் போட்டியில் கடும் போராட்டத்திற்கு இடையே நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து முதல் முறையாக கோப்பையை வென்றது. இந்நிலையில் ஐசிசி அணியில் இந்தியாவை சேர்ந்த தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு: ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்: ஜேசன் ராய் ( இங்கிலாந்து) -443 ரன்கள் ரோகித் சர்மா ( இந்தியா) - 648 ரன்கள் கேன் வில்லியம்சன் ( நியூசிலாந்து) - 578 ரன்கள் ஷாகிப் அல் ஹசன் (வங்க தேசம்) - 606 ரன்கள் மற்றும் 11 …
-
- 0 replies
- 871 views
-
-
தர்ஜினி சிவலிங்கத்தின் சாதனையுடன் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளிவைத்தது இலங்கை! உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 50 – 88 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இலங்கை வலைபந்தாட்ட அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் ஜுலை 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை லிவர்பூலில் நடைபெற்று வருகின்றது. இதில் ஏ குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள அவுஸ்ரேலியா மற்றும் வட அயர்லாந்து, சிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய அணிகளுடன் இடம்பெற்ற தமது குழுநிலைப் போட்டிகள் மூன்றிலும் தோல்வியடைந்த காரணத்தினால் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் சந்த…
-
- 0 replies
- 600 views
-
-
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘சுப்பர் ப்ரொவென்ஷியல்’ கிரிக்கெட் போட்டித் தொடரில் தமிழ் பேசும் வீரர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆறு பேரில் இருவர் யாழ்ப்பாணத்திலிருந்தும் , மட்டக்களப்பு, கண்டி மற்றும் கொழும்பிலிருந்து தலா ஒருவருமாக அடங்குகின்றனர். யாழ் மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், கமலாராசா இயலரசன், யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் தெய்வேந்திரம் தினோசன் ஆகியோர் தம்புள்ளை அணிக்காகவும், கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் சமாஸ் கொழும்பு அணிக்காகவும், கண்டி திரித்துவ கல்லூரியின் அபிஷேக் ஆனந்த குமார், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் எஸ்.ஷகிர்தன் ஆகியோர் …
-
- 0 replies
- 691 views
-
-
படத்தின் காப்புரிமை Gareth Copley-IDI/IDI via Getty Images ஜுலை 14, 2019 - இனிவரும் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகம் எண்ணற்ற முறைகள் நினைவுகூரும் நாளாக அமைய ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பு மிகுந்த உலகக்கோப்பை இறுதி போட்டி டை ஆனதால், சூப்பர் ஓவர் முறையில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, 16 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் என்ற நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்…
-
- 0 replies
- 905 views
-
-
இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். 'மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் பென் ஸ்டோக்ஸ், அவரது பங்களிப்பு அளப்பரியது' என்று இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் புகழ்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த பாராட்டுகளை பரவலாக காணமுடிகிறது. பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதும், பல போட்டிகளில் அவர் இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார் என்பதும் பலரும் அறிந்த ஒன்றுதான் . ஆனால், கடந்த காலங்களில் ஏராளமான காயங்களையும், தோல்வி பழிகளையும் சுமந்துள்ள பென் ஸ்டோக்ஸ்க்குதான் தெரியும் இந்த வெற்றி எத்தனை இனிமையானது என…
-
- 0 replies
- 366 views
-
-
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. 13 ஆவது ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐ.சி.சி. தகவல் வெளியிட்டுள்ளது. இத் தொடரானது 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டியில் மும்பையில் இடம்பெறும். இந்தியா 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஆசிய அண்டை நாடுகளுடன் இணைந்து சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை நடத்தியிருந்தது. எனினும் இம்முறை ஏனைய நாடுகளுடன் கைகோர்க்காது தனியாக இத் தொடரை நடத்துவது இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60491
-
- 0 replies
- 371 views
-
-
44 வருடகால கனவை சூப்பர் ஓவரில் நனவாக்கிய இங்கிலாந்து ! நியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. 242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ஜோனி …
-
- 6 replies
- 1.5k views
-
-
ஞாயிறன்று நடந்த 2019 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடயேயான பரப்பரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டென் கூறியுள்ளார். தங்கள் நாட்டின் அணியைக் குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் ஆர்.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் நியூசிலாந்து அணி போட்டியில் தோற்றாலும் மக்கள் மனதை வென்றுள்ளதாக நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து இந்த போட்டியில் பவுண்டரி கணக்கின் அடிப்படையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. அனைத்து நியூசிலாந்து ரசிகர்களைப்போல நானும் ஆட்டத்தின் முடிவைக் கண்டு அதிர்…
-
- 0 replies
- 346 views
-
-
ரெனிஸ் விளையாட்டின் மூத்த அரங்கம் இங்கிலாந்தின் விம்பில்டன் போட்டிகள். 1877இல் முதல் களம் கண்ட போட்டி அரங்கம், இவ்வருடம் 133ஆவது போட்டிகளின் முடிவை எட்டியிருக்கிறது. இம்முறை இறுதிப் போட்டிகள் மேலும் புதிய சாதனைகளுக்கு வழிவகுக்குமா? என்பதிற்கான பதிலை சனி, ஞாயிறு பெண்கள் மற்றும் ஆண்கள் இறுதிப் போட்டிகள் வழங்கும். சனி காலை நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில், 10ஆவது தரவரிசையில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 7ஆவது தரவரிசையில் உள்ள ரூமேனியாவின் சிமோனா கெலப்புடன் மோதுகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பின், பிரென்ஜ் ஓப்பன், விம்புல்டன், அமெரிக்கன் ஓப்பின் எனப்படும் ரெனிசின் முதல தரப் போட்டிகளான கிராண்ட சிலாம்களில், இது செரீனாவின் 32ஆவது தடவையாக போட்டியிடும் இறுதிப்போட்டி.…
-
- 2 replies
- 806 views
-
-
முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் July 14, 2019 இன்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் களமிறங்கவுள்ளன. கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடாக இங்கிலாந்து புகழப்பட்டாலும் , 44 வருட உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒருமுறையேனும் கிண்ணத்தை சுவீகரிக்கவில்லை. அதிக சந்தர்ப்பங்களில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணியாக பதிவாகியுள்ள இங்கிலாந்து, 27 வருடங்களின் பின்னர் இவ்வருடம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேவேளை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தும் …
-
- 0 replies
- 288 views
-
-
''ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்று எங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாட அதிக வசதிகள் இல்லை. தேர்வு செய்வதற்கு என்று ஏராளமான வீரர்களும் இல்லை. எங்கள் நாட்டில் உள்ள இயல்பான விளையாட்டு ஆர்வம் மற்றும் உலக அரங்கில் நாட்டை ஜொலிக்க செய்யவேண்டும் என்ற வீரர்களின் உத்வேகமும் எங்கள் அணிக்கு வெற்றிகளை தருகிறது'' - இது மறைந்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியது. அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 49 லட்சம் மக்கள்தொகையை கொண்ட நியூசிலாந்து, அளவில் இந்தியாவைவிட 12 மடங்கு சிறிய நாடாகும். தனி தீவு நாடான நியூசிலாந்து அண்மைய காலங்களில் வெளிநாட்டினரை பெரிதும் கவர்ந்து வருகிறது. பொதுவாக வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 15 இடங்களில் இடம்…
-
- 2 replies
- 1.1k views
-
-
Afghanistan v West Indies - ICC Cricket World Cup 2019 2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய குல்பதின், தனது தலைமையில் ஒரு வெற்றியை கூட பெற்றுத்தர முடியாமல் தமது அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். இதனையடுத்து ஏமாற்றமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் வழிநடத்தி வந்த ஆல்ரவுண்டர் ரஷீத் கானை அனைத்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமனம் செய்தது. மேலும், குல்பதின் நயிப்புக்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி வந்த ஆஸ்கர் ஆஃப்கானை அனைத்து மூன்று தரப்பு போட்டிகளுக்கும் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இவரது தலைமையில் 9 போட்டிகளில் விளையாடிய …
-
- 0 replies
- 441 views
-
-
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த சில நாட்களிலேயே, அணிக்குள் பிளவு இருப்பது வெளியே தெரிய வந்துள்ளது. இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் கேப்டன் கோலிக்கு ஆதரவாக சில வீரர்கள் இருப்பதாகவும், ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தோல்விக்குப் பொறுப்பேற்று கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக ரோகித் சர்மாவை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இந்திய அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் சேர்ந்து கொண்டு அணியில் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுக்கிறார்கள் என்றும் கோலி மற்றும் சாஸ்திரி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தவறான முடிவுகளை எடுத்துள்ளனர் என்று…
-
- 0 replies
- 852 views
-
-
உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அயைிறுதி ஆட்டம் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கிடையிலும் இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். 224 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களான ஜோசன் ரோய் - ஜோனி பெயர்ஸ்டோ நல்லதொரு இணைப்பாட…
-
- 3 replies
- 1.4k views
-
-
டக்வொர்த் லூயிஸ் முறையை புரிந்து கொள்வது எப்படி? 9 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இணையத்தில் எப்போதும் கேலிக் கிண்டலுக்கு உள்ளாகக்கூடிய ஒரு விஷயம் டக்வொர்த் லூயிஸ் முறை. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால், சில கணக்கீடு முறையால், விநோதமான இலக்கு வைக்கப்படுகிறது என்ற ஒரு விமர்சனம் உள்ளது. டக்வொர்…
-
- 0 replies
- 812 views
- 1 follower
-
-
யூரோ 2020 காற்பந்து – நுழைவுச் சீட்டுகளுக்கான பதிவில் சாதனை! ‘யூரோ 2020’ காற்பந்துப் போட்டிகளுக்காக 14 மில்லியனுக்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகளுக்குப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த போட்டிகளை விட சாதனை படைத்துள்ளதாக UEFA எனும் ஐரோப்பியக் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது. விற்பனை ஆரம்பித்த முதல் மூன்று வாரங்களில் நுழைவுச் சீட்டுகளுக்கான பதிவு 14 மில்லியனை தாண்டியது. முதற்கட்ட விற்பனை கடந்த மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்ததுடன், 1.5 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்பனைக்கு விடப்பட்டன. ‘யூரோ 2020’ காற்பந்துப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி தொடங்கம் ஒரு மாதத்திற்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக ஐரோப்பாவின…
-
- 0 replies
- 631 views
-
-
சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் தொடரப்பட்டது. இன்றைய தினம் 211 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 240…
-
- 0 replies
- 491 views
-
-
பொண்டாட்டி கிட்ட அடி, ஆபீஸ்ல திட்டு.. மறுபடியும் வாங்க முடியாது.. கிரிக்கெட் ரசிகர்கள் அவதி.! உலகக்கோப்பை கிரிக்கெட்டா.. இல்லை மெகா சீரியலா.. என அரையிறுதிப் போட்டியை பார்த்து கடுப்பாகி இருக்கிறார்கள் சாமானிய கிரிக்கெட் ரசிகர்கள். இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்பு நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணி இன்னும் 23 பந்துகள் ஆடி இருந்தால், ஒரு இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்திருக்கும். எனினும், அதற்குள் மழை வந்து போட்டியை நிறுத்தியது. …
-
- 1 reply
- 917 views
-
-
நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட முதலாவது அரையிறுதி ஆட்டம்! இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று ஆரம்பமான முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. மார்டின் குப்டில் - ஹென்றி நிக்கோலஷ் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமறிங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 3.3 ஆவது ஓவரில் மார்டின் குப்டில் பும்ராவின் பந்து வீச…
-
- 0 replies
- 995 views
-
-
கால் இறுதியாட்டம் #1 பிரான்ஸ் - அமெரிக்கா கால் இறுதியாட்டம் #2 நோர்வே - இங்கிலாந்து கால் இறுதியாட்டம் #3 இத்தாலி - ஒல்லாந்து கால் இறுதியாட்டம் #4 ஜெர்மனி - சுவீடன்
-
- 4 replies
- 908 views
-
-
ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது தென்னாபிரிக்கா! அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி லீக் போட்டி நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் டுபிளசிஸிஸ் 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து 326 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ர…
-
- 0 replies
- 560 views
-
-
7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இடம்பெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் இந்தியா அணியை இலங்கை அணி எதிர்கொண்டது. முதலில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் திமுத் கருணரத்னே துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் 50 ஓவர்கள் நிறைவில் மேத்யூசின் அதிரடி சதத்தால் இந்திய அணிக்கு 265 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட், புவனேஸ்வர் குமார், பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர். இதனையடுத…
-
- 0 replies
- 699 views
-