விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், ட்ரோய் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ட்ரோய் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, அஞ்சல் டி மரியா, கிறிஸ்டோபர் எனக்குங்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இப்போட்டியில் காயம் காரணமாக நேமர், கிலியான் மப்பே ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை. இதேவேளை, நேமருக்கு வெற்றிகரமாக நேற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நேமர் குணமடைய இரண்டரை தொடக்கம் மூன்று மாதங்கள் வரையில் செல்லும் என பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியின் வைத்தியர் றொட்றிகோ லஸ்மர் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 312 views
-
-
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூலை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட் மார்கஸ் ரஷ்போர்டின் சிறப்பான ஆட்டத்தால் லிபர்பூல் அணியை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட். #EPL #MUFC #LFC இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் அணிகள் மோதின. சுமார் 75 ஆயிர்கள் கூடியிருந்த ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் லூகாக்கு கொடுத்த பாஸை கோலாக மாற்றினார் மார்கஸ் ரஷ்போர்ட். …
-
- 1 reply
- 352 views
-
-
சம்பியனானது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான பிரெஞ்சு லீக் கிண்ணத் தொடரில் பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது. போர்டெக்ஸ் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில், பரிஸ் ஸா ஜெர்மைனின் நட்சத்திர முன்கள வீரரான கிலியான் மப்பே மொனாக்கோவின் கமில் கிலிக்கால் வீழ்த்தப்பட்டார். இதனையடுத்து, காணொளி உதவி மத்தியஸ்தருடன் மூன்று நிமிடங்களளவில் ஆலோசித்த கிளமன்ட் டுர்பின், பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு பெனால்டி வழங்குவதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், குறித்த பெனால்டியை பரிஸ் ஸா ஜெர்மைனின் இன்னொரு நட்சத்திர முன்கள வீரரான எடின்சன் கவானி கோலாக்க, போட்டியின் எட்டாவது நிமிடத்திலேய…
-
- 1 reply
- 695 views
-
-
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 கால்பந்தாட்டத் தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ராஸ்பேர்க் அணியுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, எடின்சன் கவானி இரண்டு கோல்களையும் ஜூலியன் ட்ரெக்ஸ்லர், நேமர், அஞ்சல் டி மரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஸ்ராஸ்பேர்க் சார்பாக, ஜீன் யூட்ஸ் அஹொலெள, ஸ்டெபனே பஹொகென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஐபாரை வென்றது பார்சிலோனா ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிக…
-
- 1 reply
- 338 views
-
-
பிரிமியர் லீக் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி! பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது. பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிமியர் லீக் போட்டி தரவரிசையில் புள்ளிகளின் அடிப்படையில் 2 ஆம் இடத்தில் உள்ள மான்செஸ்டா யுனைடெட் அணியும் ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணியும் மோதியுள்ளன. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. அதனை தொடர்ந்து இடம்பெற்ற இறுதி பாதி ஆட்டத்தில் 55 மற்றும் 68 ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் ய…
-
- 2 replies
- 390 views
-
-
அரையிறுதியில் யுனைட்டெட், டொட்டென்ஹாம் இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு மன்செஸ்டர் யுனைட்டெட்டும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் தகுதிபெற்றுள்ளன. இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இத்தொடரில், தமது காலிறுதிப் போட்டிகளில் முறையே பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன், சுவான்சீ சிற்றி ஆகியவற்றை வென்றே மன்செஸ்டர் யுனைட்டெட்டும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் அரையிறுதிப் போட்டிக்களுக்குத் தகுதிபெற்றுள்ளன. தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் 37ஆவது நிமிடத்தில் நெமஞா மட்டிக்கின் உதையை றொமேலு லுக்காக்கு கோலாக்க முன்னிலை பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெ…
-
- 0 replies
- 365 views
-
-
இந்தக் காரியத்தை செய்த ஜடேஜாவை முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது: ரோகித் சர்மா வெளியிட்ட ரகசியம் ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா : கோப்புப்படம் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது, ஜடேஜா செய்த காரியத்தைப் பார்த்து அவரை அடிக்க வேண்டும், முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் மிகவும் மென்மையானவர், களத்தில் அமைதியானவர், வெற்றியோ, தோல்வியோ அதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாதவர் என்ற பெயர் எடுத்தவர் ரோகித் சர்மா. அவரின் பேட்டிங்கில் ஆக்ரோஷமும், ஆவேசமும் இருக்…
-
- 0 replies
- 579 views
-
-
இந்தாண்டின் மிஸ் பண்ணியிருக்கவே கூடாத 10 டெஸ்ட் போட்டிகள்! #Top10Tests டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதோ என பலரும் கடந்த சில ஆண்டுகளாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அது இனி தேவையில்லை. டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் பெஸ்ட் கிரிக்கெட் தான், அதை கொண்டாடவும், வரவேற்கவும், ஆராதிக்கவும் கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதுமே தயாராக இருப்பார்கள் என்பதை இந்தாண்டு நிரூபித்தது. உலகம் முழுவதும் சுமார் 45 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. பல தொடர்களில் பல்வேறு ஆச்சர்ய முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் எதிரணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தன. அப்படி, இந்த ஆண்டு நடந்த தி…
-
- 0 replies
- 526 views
-
-
இந்தாண்டு பிரெஞ் கிண்ணத்தை கைப்பற்றுவேன் உலகின் முதல்தர வீரர் பெடரர் நம்பிக்கை [01 - March - 2008] இந்தாண்டு பிரேஞ் ஓப்பன் கிராண்ட்ஸ்லாமில் பட்டம் வெல்வேன் என `நம்பர் 1` வீரரான சுவிற்சர்லாந்தின் ரெஜர் பெடரர் தெரிவித்துள்ளார். சுவிற்சர்லாந்தின் ரெஜர் பெடரர் டெனிஸ் உலகின் `நம்பர்-1' வீரராக திகழ்ந்து வருகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பன், யு.எஸ். ஓப்பன், விம்பிள்டன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்று சாதித்த போதிலும் பிரெஞ் ஓப்பனை வெல்ல முடியாமல் தவித்து வருகிறார். ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலிடம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறார். இம்முறையும் பிரெஞ் ஒப்பன் தொடரில் நடாலிடம் பெடரர் தாக்குப்பிடிக்க இயலாது என பரவலாக பேசப்படுகிறது. இது தொடர்பாக பெடரர் அளித்த பேட்ட…
-
- 0 replies
- 763 views
-
-
இந்தி நடிகையை கரம் பிடித்தார் யுவராஜ்சிங் இந்திய கிரிக்கெட் வீரர் 34 வயதான யுவராஜ்சிங், மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை காதலித்து வந்தார். ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் நேற்று இல்வாழ்க்கையில் இணைந்தனர். யுவராஜ்சிங் - ஹாசல் கீச் திருமணம் பஞ்சாப் மாநிலம் சர்ஹிந்த் - சண்டிகார் ரோட்டில் உள்ள படேகர் சாஹிப் குருத்வாராவில், சீக்கிய மத சடங்குகளின்படி நேற்று நடந்தது. சீக்கிய மத தலைவர்களில் ஒருவரான பாபா ராம்சிங் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். இரு வீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ்சிங் மகனின் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை. ‘கடவுள் மீது நம்பிக…
-
- 1 reply
- 351 views
-
-
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். 108 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த புஜாரா 58 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் மூன்று பேரின் விக்கெட்டையும் ரபாடா எடுத்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திர…
-
- 0 replies
- 388 views
-
-
நான்காவது நாளாகிய இன்று ஆட்டத்தை தொடர்ந்த சேவாக் 319 ஓட்டங்களில் அவுட்டாகினார். ஆதைத்தொடர்ந்து வந்த சச்சின் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தற்பாதைய நிலவரம் இந்தியா 114 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 483 ஓட்டங்களை பெற்றுள்ளது. தற்போது டிராவிட் 72 ஓட்டங்களுடனும் கங்குலி 2 ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்
-
- 8 replies
- 2.1k views
-
-
இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இடம்பெறலாம் ! இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலோ அல்லது இலங்கையிலோ நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா, நடக்காதா என்று பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து இருநாட…
-
- 0 replies
- 541 views
-
-
இந்திய - மேற்கிந்திய தொடர் இன்று ஆரம்பம் இந்திய – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஒப் ஸ்பெய்னில் நடைபெறவுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு இருபதுக்கு 20 ஆட்டத்தில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் சென்றுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடிய இந்திய அணி லண்டனில் இருந்து அப்படியே மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டு சென்றது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் மிகவும் மோச…
-
- 6 replies
- 825 views
-
-
இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று! இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் ஆரம்பிப்பதற்கு 6 மாத காலம் உள்ள நிலையில், அதனை இலக்கு வைத்து இந்த தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமைத் தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/282103
-
- 25 replies
- 1.5k views
- 1 follower
-
-
இந்திய – மேற்கிந்திய இருபது20 தொடர் அமெரிக்காவில் நாளை ஆரம்பம் இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபது20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி அமெரிக்காவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரு போட்டிகள் இத்தொடரில் நடைபெறவுள்ளன. இவ்விரு போட்டிகளும் புளோரிடா மாநிலத்தின் ஃபோர்ட் லவ்டர்டேல் நகரிலுள்ள சென்ட்ரல் புரோவார்ட் ரீஜனல் பார்க் அரங்கில் சனி, ஞாயிறு தினங்களில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.30) மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரசித்தப்படுத்துவதற்கு இச்சுற்றுப்போட்டி உதவி…
-
- 8 replies
- 1.2k views
-
-
இந்திய ‘ஸ்டைல்’ மாறுமா * ரவி சாஸ்திரி விளக்கம் கொழும்பு: ‘‘முதல் டெஸ்டில் தோற்றாலும் இந்திய அணி தொடர்ந்து துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்த அணுகுமுறையில் மாற்றம் இருக்காது,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார். இலங்கை அணிக்கு எதிரான காலே டெஸ்டில் முதல் மூன்று நாட்கள் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, நான்காவது நாளில் பரிதாபமாக தோற்றது. இதுகுறித்து இந்திய அணி ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி கூறியது: மின்னல் இருமுறை தாக்காது என்று வேடிக்கையாக சொல்வர். இது போல இந்திய அணிக்கு தொடர்ந்து வீழ்ச்சி இருக்காது என்று நம்புவோம். எங்களது துணிச்சலான ஆட்டம் தொடரும். இதில் மாற்றம் இருக்காது. வீரர்களின் மனநிலை எப்போதும் போலத்தான் உள்ளது. முதல் டெஸ்டில் வெற்றியை நெருங்கிய நேரத்தில் சில த…
-
- 0 replies
- 443 views
-
-
இந்திய அணி இடைக்கால பயற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், அணியின் துணைப் பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் தொடருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாம்ப்வே தொடர் தொடங்கவுள்ள ஜூலை மாதத்துக்குள்ளாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழு நிர்வாகம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் எதிரொலியாக, இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அப்போதே பாங்கர், அருண், ஸ்ரீதர் ஆகியோர் துணைப் பயிற்ச…
-
- 0 replies
- 342 views
-
-
இந்திய அணி இன்று தேர்வு தென் ஆப்பிரிக்காவுக்கு எதி ரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளை யாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி பெங்களூரில் இன்று தேர்வு செய்யப்படுகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள தென் ஆப்பிரிக்க அணி, இந்தி யாவுக்கு எதிரான 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடர் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கவுள்ள நிலை யில், தேர்வுக் குழுவினர் பெங்களூரில் இன்று கூடி இந்திய அணியை தேர்வு செய்கின்றனர். டி20 தொடரில் விளை யாடும் அணியும், முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளை யாடும் அணியும் மட்டுமே இன்று தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதை க…
-
- 2 replies
- 283 views
-
-
இந்திய அணி தோனி தலைமையில் 2015ல் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை தோனி தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் ஒருநாள் போட்டி தொடர்களில் ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இந்திய கிரிக்கெட் அணியை பல்வேறு உச்சங்களுக்கு கொண்டு சென்ற தோனிக்கு இந்த ஆண்டு கடும் சோதனையாகவே அமைந்துள்ளது. 2007ல் டி20 உலககோப்பை, 2011ல் 50 ஓவர் உலககோப்பை ஆகியவற்றை தோனி தலைமையில் இந்திய அணி வென்றது. அதன் பின்னர் இந்திய அணிக்கு பல்வேறு ஏற்றங்கள் காணப்பட்டது. வெளிநாட்டு தொடர் களிலும் தோனி தலைமையில் இந் திய அணி பிரகாசிக்கத் தொடங் கியது. தோனி களத்தில் வகுக்கும் வியூகங்களுக்கு கைமேல் பலனும் கிடைத்து வந்தது. தோனியை அனைவரும் தலை யில் தூக்கி வைத்து கொண்டாடி னர். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எல்லாம் தலைகீழா…
-
- 1 reply
- 223 views
-
-
இந்திய அணி பயிற்சியாளரா? ஐ.பி.எல். ஆலோசகரா?: தவிப்புக்குள்ளான ராகுல் டிராவிட் உச்சநீதிமன்ற உத்தரவை பி.சி.சி.ஐ. அமல்படுத்த இருப்பதால் பிசிசிஐ அல்லது ஐ.பி.எல். ஆகிய இரண்டில் ஒன்றில் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளார் டிராவிட். பிசிசிஐ நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர லோதா தலைமையிலான கமிட்டி உச்சநீதிமன்றத்தில் தனது பரிந்துரைகளை சமர்பித்தது. இதில் பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் முக்கியமானது இரட…
-
- 0 replies
- 297 views
-
-
இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு சந்தீப் பாட்டீல் விண்ணப்பம் அனுராக் தாக்கூருடன், சந்தீப் பாட்டீல் (வலது). | கோப்புப் படம்: பிடிஐ. மேலேறி வந்து டிரைவ் ஆடும் சந்தீப் பாட்டீல். | படம்: இந்து ஆர்கைவ்ஸ். முன்னாள் அதிரடி வீரரும், நடப்பு அணித் தேர்வுக்குழுத் தலைவருமான சந்தீப் பாட்டீல், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். தேர்வுக்குழு தலைவர் பொறுப்பு அவருக்கு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே கென்யா, ஓமன் அணிகளுக்கும் பயிற்சியாளராக சந்தீப் பாட்டீல் இருந்துள்ளார். 199…
-
- 0 replies
- 362 views
-
-
இந்திய அணி வெற்றி பெற்றதும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டிய விராட் கோலி – காரணம் இதுதான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மேலும் முதல் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதவீத ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சிறப்பான வெற்றிக்குப…
-
- 0 replies
- 594 views
-
-
இந்திய அணிக் கப்டன் தோனிக்கு சிறந்த எதிர்காலமுள்ளதென்கிறார் சப்பல் [03 - October - 2007] [Font Size - A - A - A] இந்திய அணிக்கப்டன் தோனிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சப்பல் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சப்பல் உலகக் கிண்ணப் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் இந்திய அணிக்கு பயிற்சியாளர் இன்று வரை நியமிக்கப்படவில்லை. இராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் பியூச்சர் கிரிக்கெட் அக்கடமியின் ஆலோசகராக கிரேக் சப்பல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஜெய்ப்பூர் வந்தார். அப்போது கிரேக் சப்பல் நிருபர்கள…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்திய அணிக்கு அபராதம்! அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது. டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களே எடுத்தது. …
-
- 0 replies
- 586 views
-