விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
மன்செஸ்டர் யுனைட்டெட்டை வென்றது செல்சி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில் இடம்பெற்ற போட்டியொன்றில், மன்செஸ்டர் யுனைட்டெட்டை, நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சி வென்றுள்ளது. இப்போட்டியின் முதலாவது பாதியில் கோலெதுவும் பெறப்படாத நிலையில், இரண்டாவது பாதியில், சீஸர் அத்பிலிகுவாட்டாவிடமிருந்து பெற்ற பந்தை, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்கள வீரர்களின் கவனிப்புகளிலிருந்து விடுபட்டு, கோல் காப்பாளர் டேவிட் டி கியாவைத் தாண்டி, போட்டியின் 55ஆவது நிமிடத்தில் அல்வரோ மொராட்டா பெற்ற கோலின் மூலமாக 1-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் செல்சி வெற்றிபெற்றது. …
-
- 4 replies
- 671 views
-
-
இலங்கை அணி ரசிகர்களுக்கு மஹேலவின் வேண்டுகோள் ! இலங்கை அணியை சிக்கலில் இருந்து ரசிகர்களாகிய நாம் முன்னோக்கிக்கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜெயவர்தன டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இடம்பெற்றுவரும் ஆசியக் கிண்ணத் தொடர்ரில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடமும் ஆப்கானிஸ்தான் அணியிடமும் படு மோசமாக தோல்வியடைந்தது. இந்நிலையில் இலங்கை அணி மீதும் வீரர்கள் மீதும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மிக மோசமாக விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திரவீரருமான மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்க…
-
- 0 replies
- 671 views
-
-
வெற்றி பெற்ற பிறகும் கேப்டன்சியில் தடுமாறும் தோனி ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நேற்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. கேரி பாலன்ஸ் 104 ரன்களுடனும், இயன் பெல் 16 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர், இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கும் முன் முதல் நாள் ஆட்டத்தில் தோனி கேப்டன்சியின் சில வினோதங்களைப் பார்ப்போம். இஷாந்த் சர்மா காயத்தினால் விளையாடவில்லை என்ற போதே தோனி நிச்சயம் தனது பாதுகாப்பு உத்திகளுக்கே செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கக் கூடும். அதுதான் நடந்தது. டெஸ்ட் போட்டியை ஆட்டம் தொடங்கிய 2 மணி நேரத்திலேயே அலுப்பூட்டுவதாக மாற்றி விடுகிறார் தோனி. அணித் தேர்வில் மீண்ட…
-
- 0 replies
- 671 views
-
-
ஐ.பி.எல். அணியை வாங்கும் முயற்சியில் செட்டிநாடு சிமெண்ட்! சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், அந்த அணிகள் 2 சீசன்களில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சீசனுக்கு மேலும் 2 ஐ.பி.எல். அணிகளை உருவாக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த அணிகள் எந்த நகரை மையமாக வைத்து உருவாக்கப்பட வேண்டுமென்பதில் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே புதிய அணிகளை வாங்குவதற்கு 21 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதில் சென்னையை சேர்ந்த செட்டிநாடு சிமெண்ட் நிறுவனமும் ஒன்று. 50 வருடங்கள் பழமையான இந்த நிறுவனம், அனேகமாக சென்னையை வைத்து அணி உருவாக்கப்பட்டால், புதிய அணியை வாங்கி விடவேண்டுமென்பதில் உறுதியாக…
-
- 0 replies
- 671 views
-
-
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இன்று ஆரம்பம் ஆடவர், மகளிர் சம்பியன்களுக்கு தலா 52 கோடி ரூபா 2016-08-29 09:50:51 சர்வதேச டென்னிஸ் அரங்கில் நொவாக் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்திவருவது சகலரும் அறிந்த விடயம். 2010 முதல் இவர்கள் இருவரும் தலா 11 மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் சம்பியன் பட்டங்களை தமதாக்கிக்கொண்டுள்ளனர். ஆனால், ஐக்கிய அமெரிக்க (யூ.எஸ்) பகிரங்க டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இருவரின தும் தேகாரோக்கியம், மனோநிலை, போட்டிக்கான தயார்நிலை ஆகிய விடயங்கள் தொடர்பில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. …
-
- 6 replies
- 671 views
-
-
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27ம் தேதியன்று லண்டனில் துவங்க உள்ளதை அடுத்து கிரீசின் ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. நவீன ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டதன் நினைவாக ஒலிம்பிக் விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பியாவில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ஒலிம்பிக் ஜோதி பல நாடுகள் வழியாக 78 நாட்களில் லண்டனை வந்தடையும். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 671 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: டி நடராஜன் விளையாடுவது சந்தேகம் இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது. பதிவு: மார்ச் 10, 2021 09:08 AM அகமதாபாத், இந்தியா - இங்கிலாந்து இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் டி நடராஜன், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடராஜன் தோள் பட்டை மற்றும் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய உடற் தகுதியை உறுதி செய்ய பய…
-
- 0 replies
- 671 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ராஜினாமா! இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். இதையடுத்து இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றது. ஆனால் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்பட்டது. மேலும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், கும்ப்ளேவின் பயிற்சி மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகு…
-
- 3 replies
- 670 views
-
-
இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் சூழ்ச்சி ; இலங்கை அணிக்கு நடந்த அநீதி (வீடியோ இணைப்பு) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியின் போது நாணய சுழற்சியில் இலங்கை அணியே வெற்றிப் பெற்றதாகவும், அதை இந்திய அணிக்கு வழங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் வர்ணனையாளர் முரளி கார்த்திக்கால் இந்த நாணய சுழற்சி மேற்கொள்ளப்பட்ட போது,உபுல் தரங்க நாயணத்தை சுழற்றிய வேளையில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி தலையென (HEAD) என கோரினார். பின்னர், போட்டி தீர்மானிப்பாளரான ஹேன்ட் பிக்ரொப்ட் பூ (TRAIL) என அறிவித்து உபுல் தரங்கவை நோக்கி கையை காட்டினார்.எனினும், மீண்டும…
-
- 6 replies
- 670 views
-
-
மீண்டும் குடும்ப ரகசியத்தை வெளிப்படுத்திய வில்லியம்ஸ் சகோதரி: இம்முறை வீனஸ் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் கூறுவது சரியாக இருந்தால், செரீனா பெண் குழந்தையைத்தான் பெற்றெடுப்பார். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image caption'செரீனாவின் கருவில் பெண் குழந்தை' ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பங்கேற்றுவரும் வீனஸ் வில்லியம்ஸ், தனது போட்டிக்கு பிறகு அளித்த தொலைக்காட்சி பேட்டியில் இந்த தகவலை எதேச்சையாக தெரிவித்துள்ளார். தனது தங்கைக்கு பிறக்கப்போகும் குழந்தையை 'அவள்' என்று குறிப்பிட்ட வீனஸ் வில்லியம்ஸ், தங்கையின் மகளுக்கு வைப்பதற்கென சில பெண் பெயர்கள…
-
- 0 replies
- 670 views
-
-
'தெறிமாஸ்' காட்டுமா வெஸ்ட் இண்டீஸ் - சிக்ஸர் பீவர் (மினி தொடர் -5) உலகில் நடக்கும் ஐ.பி.எல் முதலான அத்தனை டி20 லீக்களிலும் 'தெறிமாஸ்' காட்டும் சிறுத்தைகள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தான் இருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு உலககோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது. கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத டானாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அதன் பின்னர் இறங்குமுகத்தையே சந்தித்தது. லாரா, கூப்பர், கெய்ல் என பல்வேறு சிறந்த வீரர்கள் அணிக்கு வந்தாலும் உலககோப்பையில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறமுடியாமல் பரிதாபமாக வெளியேறிக்கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2012 உலககோப்பையில் திடீரென விஸ்வரூபம் எடுத்தது வெஸ்ட் இண்டீ…
-
- 0 replies
- 670 views
-
-
கிரிக்கெட்டும் பெண்களும் கிறிஸ் கெயிலும் அவதூறுகளும் Comments ஆரம்பகாலத்திலிருந்தே, ஆண்களின் விளையாட்டாகக் கருதப்பட்டுவந்த கிரிக்கெட் போட்டிகள், பெண்களைத் தம்பக்கம் இழுப்பதற்குத் தடுமாறியே வந்திருக்கிறது. கிரிக்கெட்டின் விவரிப்பே, 'கனவான்களின் விளையாட்டு" என, ஆண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. எனினும், அண்மைக்காலத்தில் பெண்களின் கிரிக்கெட் போட்டிகள் அதிகரித்திருக்கின்றன. பெண் பார்வையாளர்களும் அதிகரித்திருக்கிறார்கள். இதன் விளைவாக, பெண்கள் உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறுவதோடு, பெண்களுக்கான பிக் பாஷ் லீக் தொடரொன்று ஆரம்பிக்குமளவுக்கு, முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது. ஆனால்,…
-
- 0 replies
- 670 views
-
-
பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே சட்டோகிராமில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த ஒற்றை டெஸ்ட்டை ஆப்கானிஸ்தான் இன்று வென்றது. இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்: 342/10 (துடுப்பாட்டம்: ரஹ்மட் ஷா 102, அஸ்கர் ஆப்கான் 92, ரஷீட் கான் 51, அஃப்ஸர் ஸஸாய் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/116, ஷகிப் அல் ஹஸன் 2/64, நயீம் ஹஸன் 2/43) பங்களாதேஷ்: 205/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 52, மொஷாடெக் ஹொஸைன் ஆ.இ 48, லிட்டன் தாஸ் 33 ஓட்டங்கள…
-
- 2 replies
- 670 views
-
-
ஷிகர் தவானை எச்சரிக்கிறாரா கெளதம் காம்பீர்..? டெஸ்ட் போட்டிகளில் சீராக ஆடுவதில்லை. ஒருநாள் போட்டிகளிலும் அதே நிலை. டி20 களில் சொல்லவே வேண்டாம் உச்சகட்ட சொதப்பல். நாம் பேசிக்கொண்டிருப்பது இந்திய அணியின் துவக்க வீரர் தவான் பற்றி தான். 2013ம் ஆண்டு அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை அலற விட்டு அசத்தலாக கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய தவான், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கி நம்பிக்கை தந்தார். போகப்போக, கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் 41 ரன்கள் மட்டுமே எடுக்க அரையிறுதிப் போட்டியில் அவரை வெளியில் அமர்த்தினார் தோனி. சரி கூடிய விரைவில் தவானிற்…
-
- 0 replies
- 670 views
-
-
அதிர்ச்சியில் விராட் கோலி இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாக்கும் காதல் என்று நீண்ட நாட்களாக செய்தி வந்துக்கொண்டே இருந்தது. அதேபோல் தான் விளையாட போகும் அனைத்து நாட்டிற்கும், இவரையும் தன்னுடன் அழைத்து சென்றார் கோலி. தற்போது இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக ஓர் அறிக்கை வந்துள்ளது. அனுஷ்காவின் உதவியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆன்லைனில் அனுஷ்கா சர்மாவின் திருமணம் பற்றி நிறைய செய்திகள் உலாவருகின்றன. நான் ஒன்றைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், இந்தச் செய்திகள் வெறும் வதந்திகளே. அதில் உண்மையில்லை. ஆகவே இது போன்ற விஷயங்களை இனி எழுதவேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 670 views
-
-
இரண்டு கேப்டன் இந்தியாவிற்கு ஒத்து வராது: டோனி இரண்டு கேப்டன் முறை இந்திய கிரிக்கெட்டிற்கு ஒத்து வராது என்று கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் முதன்முதலாக மகேந்திரசிங் டோனி அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தார். ஓய்வு அறிவிற்குப்பின் இன்று முதன்முதலாக டோனி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இரண்டு கேப்டன் (டெஸ்ட் அணி, ஒருநாள் அணி) இந்த…
-
- 3 replies
- 670 views
-
-
100 புள்ளிகளுடன் பிறீமியர் லீக்கை முடித்தது சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் 100 புள்ளிகளுடன் நடப்பு பிறீமியர் லீக் பருவகாலத்தை சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முடித்துக் கொண்டது. செளதாம்டன் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில், கப்ரியல் ஜெஸுஸின் கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் சிற்றி, இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலமொன்றில் அணியொன்று அடைந்த அதிகூடிய புள்ளிகளான 100 புள்ளிகளை அடைந்ததோடு, பருவகாலமொன்றின் அதிகூடிய வெற்றிகளான 32 வெற்றிகளையும் பெற்றுக் கொண்டது. இதேவேளை, தமது மைதானத்த…
-
- 0 replies
- 669 views
-
-
டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் சங்கக்காரா, மேத்யூஸ், ஹேராத் சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் போட்டிகள் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள்:- சங்கக்காரா (இலங்கை) 909 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா 2வது, 3வது இடங்களில் உள்ளனர். சுமித் (அவுஸ்திரேலியா), மேத்யூஸ் (இலங்கை), யூனுஸ்கான் (பாகிஸ்தான்), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), வார்னர் (அவுஸ்திரேலியா), விராட் கோஹ்லி ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளனர். பந்துவீச்சாளர்கள்:- ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஹாரீஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். பவுல்ட் …
-
- 7 replies
- 669 views
-
-
செஞ்சூரியன் டெஸ்ட் – 223 ஓட்டங்களுக்குள் அட்டமிழந்தது தென் ஆபிரிக்கா! செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகிய முதல் டெஸ்டில் முதலாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 223 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் புதன்கிழமை ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 181 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா 3 ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா…
-
- 0 replies
- 669 views
-
-
உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயர்பெற்ற ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயதான ஜெஸிகா, ஜெட் விமானத்தின் இயந்திரத்தைப் பொருத்தி கார் ஓட்டுவதில் சிறந்தவராக உள்ளார். இதன் காரணமாகவே உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயரெடுத்தவர். கடந்த 2013ஆம் ஆண்டு மணிக்கு 641 கிலோ மீற்றர் (398 mph) வேகத்தில் காரை ஓட்டி சாதனை செய்தார். இதனைத் தொர்ந்து 824 கிலோ மீற்றர் (512 mph) வேகத்தில் காரை இயக்கி தனது சாதனையை தானே முறியடித்தார். இந்நிலையில் இந்தச் சாதனையையும் முறியடிக்க அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக தென்மேற்கு ஓரேகான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானதில் ஜெஸிகா உயிரிழந்ததாகத…
-
- 0 replies
- 669 views
-
-
கோலியின் பிரச்சனை என்ன? விராத் கோலி பற்றிய கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்தது அஷ்வினுடையதே. அவர் கோலி கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாகவே நன்றாக மட்டையாடி வருவதாகக் கூறி இருக்கிறார். இது சரி தான். ஒரு மட்டையாளர் தன ஆட்டநிலையை இழக்கும் போது மூன்று விசயங்கள் நடக்கும்: 1) தொழில்நுட்ப பிரச்சனை ஒன்று அம்பலமாகி அதில் இருந்து வெளிவரத் தெரியாமல் தவிப்பார்கள். (காம்ப்ளி, லஷ்மண், திராவிட், ஸ்டீவ் வாஹில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் வரை ) 2) உடற்தகுதியின்மை ஏற்படும். (கங்குலி, சச்சின்) 3) பந்து விழும் நீளத்தை கணிக்க முடியாமல் போகும் - சிலருக்கு பார்வைக் குறைபாட்டினாலும் வேறு சிலருக்கு தசைகளுக்கும் நர…
-
- 0 replies
- 669 views
- 1 follower
-
-
152 ஓட்டங்களுடன் சுருண்டது தென் ஆபிரிக்கா By SETHU 17 DEC, 2022 | 06:37 PM அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று இப்போட்டி ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி வீரர்களில் கைல் வெரெய்ன் மாத்திரை அரைச்சதம் (64) குவித்தார். அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் நேதன் லியோன் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஸ்கொட் போலன்ட் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும பட் கம்மின்ஸ் 35 ஓட…
-
- 1 reply
- 669 views
- 1 follower
-
-
டோக்கியோ ஒலிம்பிக் ; 50% பார்வையாளர்களை அனுமதிக்க பரிசீலனை கொவிட்-19 பரவல் அச்சம் காரணமாக பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிளுக்கு 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க ஜப்பான் பரிசீலித்து வருவதாக சங்கீ செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பெரிய அரங்குகளில் பார்வையாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை 20 ஆயிரமாக நிர்ணயிக்கப்படலாம். எனினும் தொற்று நிலைமை கட்டுப்பாடு மேலும் முன்னேற்றம் அளித்தால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் சாங்கீ தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான முடிவினை ஜப்பானின் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அடுத்த மாதம் அறிவிக்கும். புதிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்த கவலைக…
-
- 0 replies
- 669 views
-
-
ஹாசிம் ஆம்லா இந்த 3 காரணங்களுக்காகதான் பதவி விலகினாரா? டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக விளங்கிய தென்னாப்பிரிக்க அணி, சமீபத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் ஹாசிம் ஆம்லா, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். டெஸ்ட் கேப்டனான ஆம்லா, திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலக 3 காரணங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. தொடர் தோல்விகள்! அசைக்க முடியாத அணியாக இருந்த தென்னாப்பிரிக்க அணி, ஒன்பது ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இழக்காமல் கெத்தான அணியாக வலம் வந்தது. இந்தியாவில் ஒருநாள், டி20 தொடரை வென்று டெஸ்ட்டை வெல்லும் முனைப்போடு களமிறங்கியது. கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கி…
-
- 0 replies
- 669 views
-
-
இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு 20 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போன்றதே.", என்று விராட் கோலி பதிலளித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய இந்த கருத்தை 'விதிவிலக்காக' எடுத்துக் கொள்ளலாம். சுமார் 28 மாதங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும்…
-
- 2 replies
- 669 views
- 1 follower
-