விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
கால்பந்து ரசிகர்களுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் தேவையில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக ஆட்சிபுரியும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பெரிய ஆனந்தம் என்ன இருந்துவிடப் போகிறது? உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே, அதுவும் ஸ்பெயினுக்கு எதிராக, தான் யார் என்பதை நிரூபித்துள்ளார் ரொனால்டோ! இந்த ஆட்டத்தை போர்ச்சுகல் vs ஸ்பெயின் என்று ஃபிஃபாவின் ரெக்கார்டுகள் சொல்லும். ஆனால், இதை ரொனால்டோ vs ஸ்பெயின் என்றுதான் வரலாறு சொல்லும். உலகக் கோப்பை அட்டவணை அறிவ…
-
- 0 replies
- 743 views
-
-
உலகக் கிண்ணத்தை நடத்துகிறது வட அமெரிக்கா 2026ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை, ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் நடாத்துவதற்கு, மொராக்கோவைத் தோற்கடித்து தெரிவாகியுள்ளன. http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/உலகக்-கிண்ணத்தை-நடத்துகிறது-வட-அமெரிக்கா/44-217678
-
- 1 reply
- 464 views
-
-
கே.சி.சி.சி. வெற்றிக் கிண்ணம் ஸ்கந்தாஸ்ரார் அணி வெற்றி கே.சி.சி.சி வெற்றிக் கிண்ண வெள்ளி விழா தொடரின் 4 ஆவது போட்டி 7.04. 2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது ஸ்க ந்தாஸ்ரார் அணி, ஹாட்லி யைற்ஸ் அணியை 5 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லியைற்ஸ் அணி 26.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றனர். சாகித்தியன்-14, மணி மாறன்-33, சதீஸ்-13, பிரசாந்-16, பிரதீப்-28, புருசோத்மன்-17 ஓட்டங்களைப் பெற் றனர். களத்தடுப்பில் ஸ்கந்தா ஸ்ரார் அணிசார்பாக புருசோ த்மன், சோபிதன், தரணிதரன், அஜின் தலா ஒரு இலக்கி னைய…
-
- 0 replies
- 523 views
-
-
ரஷ்யாவில் 2018 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்குகிறது. படத்தின் காப்புரிமை Getty Images ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள லூஸ்நிக்கி மைதானத்தில் நடக்கும் கோலாகல தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டியில் ரஷ்யாவுடன் செளதி அரேபியா மோதுகிறது. இன்று தொடங்கும் கால்பந்து திருவிழாவில், நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. 32 நாட்களுக்கு மேல் நடக்கவுள்ள இந்த தொடரில், 64 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த போட்டிகள் ரஷ்யாவில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கவுள்ளன. …
-
- 2 replies
- 950 views
-
-
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கேலிக்கூத்தானது - அண்டர்சன் இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணை கேலிக் கூத்தானதென இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ் அணியுடன் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் முதலில் இருபதுக்கு - 20 போட்டித் தொடரும், அதன்பின் ஒருநாள் போட்டித் தொடரும், இறுதியில் டெஸ்ட் போட்டித் தொடரும் இடம்பெறவுள்ளது. இருபதுக்கு - 20 போட்டித் தொடர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஒருநாள் தொடர் ஜூ…
-
- 0 replies
- 720 views
-
-
செம்மண் கோர்ட் ராஜாவான நடால் 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்றார் 7-ம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார் ரபெல் நடால். #FrenchOpen கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி இன்று மாலை நடந்தது. இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம்…
-
- 2 replies
- 1.1k views
-
-
மெஸ்சி சாதனையை சமன் செய்த சுனில் சேத்ரி அ-அ+ இண்டர்காண்டினெண்டல் கால்பந்து கோப்பையில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் மெஸ்சி சாதனையை சமன் செய்துள்ளார் சுனில் சேத்ரி. #SunilChhetri #Messi மும்பை: கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின. தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. …
-
- 0 replies
- 489 views
-
-
வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா?-அப்ரிடி பதில் அப்ரிடி வீட்டில் வளர்க்கும் சிங்கத்துடன் அவரின் மகள், தனதுவீட்டில் வளர்க்கும் மானுக்கு பாலூட்டும் அப்ரிடி - படம் உதவி: ட்விட்டர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா என்பது குறித்து பதில் அளித்துள்ளார். பாகிஸ்தானின் அதிரடி ஆட்டக்காரரும், ‘லெக் ஸ்பின்னருமான’ ஷாகித் அப்ரிடியை அந்நாட்டு ரசிகர்கள் செல்லமாக ‘பாகிஸ்தான் லயன்’(பாகிஸ்தான் சிங்கம்) என்று அழைப்பார்கள். ஆனால், அதற்கான காரணம் அவரின் வீட்டில் உண்மையான சிங்கம் வளர்த்ததால்தான் அப்படி அழைத்தார்களா என்பது இப்போதுதான் தெரிந்துள்ளது. கடந்த …
-
- 0 replies
- 842 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 371 ரன் குவித்தது ஸ்காட்லாந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. #SCOTvENG ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டி இன்று விளையாடி வருகிறது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வ…
-
- 1 reply
- 506 views
-
-
இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம் அ-அ+ இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று தொடங்குகிறது. #westindies #srilanka #test போர்ட் ஆப் ஸ்பெயின்: தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட்…
-
- 7 replies
- 893 views
-
-
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: 6 முறை சாம்பியனான இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் கோலாலம்பூரில் நடந்த மகளிருக்கான ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனும், 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக கோப்பையை வென்றது வங்கதேச அணி. கோலாலம்பூரில் உள்ள கின்ராரா அகாடெமி ஓவல் மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக ஆசியக்கோப்பை டி20 போட்டி நடந்து வந்தது. இன்று நடந்த இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணியை எதிர்கொண்டது வங்கதேச அணி. டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 …
-
- 0 replies
- 345 views
-
-
வெற்றியின் போதெல்லாம் எதிரணியினரைப் பகடி செய்யும் வ.தேச அணியின் பாம்பு டான்ஸ்: கோப்பை எங்கே? வெற்றிகள் எங்கே? எங்கே நாகின் டான்ஸ்? | படம்: ட்விட்டர். வங்கதேச அணி குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் ஒரு அச்சுறுத்தலாக எழுந்தது, ஆனால் அதன் புகழ் குறுகிய காலத்திற்கானது. காரணம் சமீபமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என்று ஒயிட்வாஷ் உதை வாங்கியது வங்கதேசம். வெற்றி பெற்ற குஷியில் ஆப்கான் விக்கெட் கீப்பர் ஷஜாத் வங்கதேசத்தைப் பகடி செய்யும் பாம்பு டான்ஸ் அல்லது நாகின் முத்திரையைக் காட்டில் நடனம் ஆடி வெறுப்பேற்றினார். 2007 உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்திய பிறகே உள்ளூர் பத்…
-
- 0 replies
- 498 views
-
-
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றார் ஹெலப் பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ருமேனியாவின் ஷிமோனா ஹெலப் அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens பாரீஸ்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடந்தது. இதில் உலகின் முத…
-
- 0 replies
- 397 views
-
-
சேவாக் அணிக்கு வந்த புதிதில் என்னுடன் பேசமாட்டார்: சச்சின் ருசிகரப் பதிவு படம். | விபின் பவார். இப்போது ட்விட்டரில் கலக்கி வரும் அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் உண்மையில் ஒரு கூச்ச சுபாவமான மனிதர், அதிகம் பேச மாட்டார் என்று கூறினால் அது இப்போது நம்பும்படியாக இருக்காது, ஆனால் கூட இருந்த சச்சின் சேவாக் பேசமாட்டார் என்பதை தற்போது வெளியிட்டுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின், சேவாக் இருவரும் தங்களது கால பழக்கங்களை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டுள்ளனர். தொடக்க வீரர்கள் களத்தில் மட்டுமல்ல களத்துக்கு வெளியேயும் தங்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வது வழக்கம், இதே போல்…
-
- 0 replies
- 452 views
-
-
எங்களிடம் இந்திய அணியைக் காட்டிலும் சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர்: ஆப்கான் கேப்டன் நம்பிக்கை YouTube வங்கதேசத்துக்கு டி20 ஒயிட் வாஷ் கொடுத்து கோப்பையை உயர்த்திப் பிடிக்கும் ஆப்கான் கேப்டன் ஸ்டானிக்சாய். - படம். | ஏ.எஃப்.பி. டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் நுழையும் குழந்தையான ஆப்கான் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியாவை வரலாற்று முதல் டெஸ்ட் போட்டியில் சந்திக்கிறது. குழந்தையைத்தான் அனைவரும் சீண்டிப்பார்த்திருக்கிறோம், ஆனால் குழந்தை பெரியவர்களைச் சீண்டுவதை இப்போது ஆப்கான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் மூலம் பார்க்கிறோம். டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் 4 மற்றும் 5ம் இடத்தில் உள்ள ஜடேஜா, அஸ்வினை விடவும் …
-
- 0 replies
- 413 views
-
-
சிஎஸ்கே-யால் ஒருபோதும் காவிரி நீரைக் கொண்டு வர முடியாது கோப்பையைக் கொண்டு வர முடியும்: வெற்றி விழாவில் தோனி பேசியது 2018 ஐபிஎல் டி20 சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் சாம்பியன்ஷிப் வெற்றியை சென்னையில் கொண்டாடினர். அதில் தோனி மிகவும் உற்சாகமாகப் பல விஷயங்களைப் பற்றி பேசினார். அப்போது “அடுத்த ஆண்டு சென்னையில் வென்ற கோப்பையை மீண்டும் தக்கவைப்போம் என்று நம்புகிறேன். விஷயம் என்னவெனில் சிஎஸ்கேவினால் ஒரு போதும் காவிரியை இங்கு கொண்டு வர முடியாது. ஆம் வழியேயில்லை. ஆனாலும் நாங்கள் குறிவைக்கப்பட்டோம், நியாயமானதுதான், இப்படி எப்போதும் நடக்கக் கூடியதுதான். ஆனால் நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் வெல்ல…
-
- 0 replies
- 530 views
-
-
சச்சின் டெண்டுல்கரின் மகன் இலங்கைக்கெதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலித்தில் உள்ளார். இந்தநிலையில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல…
-
- 1 reply
- 524 views
-
-
`64 பவுண்டரிகள்; 7 சிக்ஸர்கள்!’ - ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 490 ரன்கள் குவித்த நியூசிலாந்து அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. Photo Credit: Twitter/ICC அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸை கேப்டன் சூஸே பேட்ஸ் மற்றும் ஜெஸ் வாட்கின் ஆகியோர் தொடங்கினர். அயர்லாந்து பந்துவீச்சாளர்களை ஆரம்பம் முதலே பதம்பார்த்த இந்த இணை, முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்தது. வாட்கின் 59 பந்துகளில…
-
- 0 replies
- 517 views
-
-
முதலாவது T20 சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 45 ஓட்டங்களால் வெற்றி. முதலாவது T20 சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 45 ஓட்டங்களால் வெற்றி. போட்டியின் சிறப்பாட்டக்காரர் ரஷீத் கான். https://www.facebook.com/SooriyanFMSriLanka/
-
- 5 replies
- 957 views
-
-
2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து மிதாலி ராஜ் சாதனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச இருபதுக்கு- 20 போட்டிகளில் 2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். மிதாலி ராஜ், இந்திய மகளிர் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவியாக செயற்பட்டு வருகின்றார். மிதாலி ராஜ், அனைத்த வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் சிறந்த மகளிர் துப்பாட்ட வீராங்கனையாக கருதப்படுகின்றார். இந்நிலையில், மிதாலி ராஜ் புதிய சாதனையொன்றை தற்போது படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிர் ஆகியக் கிண்ண லீக் போட்டியில் மிதாலி ராஜ் 23ஓட்டங்களை பெற்றபோது, சர்வதேச டஇருபதுக்கு - 20 போட்டிகளில் 2 ஆயி…
-
- 0 replies
- 735 views
-
-
இந்தக் காரியத்தை செய்த ஜடேஜாவை முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது: ரோகித் சர்மா வெளியிட்ட ரகசியம் ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா : கோப்புப்படம் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது, ஜடேஜா செய்த காரியத்தைப் பார்த்து அவரை அடிக்க வேண்டும், முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் மிகவும் மென்மையானவர், களத்தில் அமைதியானவர், வெற்றியோ, தோல்வியோ அதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாதவர் என்ற பெயர் எடுத்தவர் ரோகித் சர்மா. அவரின் பேட்டிங்கில் ஆக்ரோஷமும், ஆவேசமும் இருக்…
-
- 0 replies
- 579 views
-
-
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லி உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரேயொரு கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இடம்பெற்றுள்ளதாக ‘போர்ப்ஸ்’ (Forbes) பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உலகின் அதிக சம்பளம் பெறும் வீரராக உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரரும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான ப்ளோய்ட் மேவெதர் (Floyd Mayweather) முதலிடத்தையும், கால்பந்து உலகின் நட்சத்திர ஜாம்பவான்களான லியோனல் மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் உலகில் அதிக…
-
- 0 replies
- 625 views
-
-
ஏ.பி.டிவில்லியர்ஸ் வைத்திருக்கும் ஓர் அரிய, தனித்துவ டெஸ்ட் சாதனை விக்கெட் கீப்பராக டிவில்லியர்ஸின் அரிய சாதனை. - படம். | வீடியோவிலிருந்து பிடித்தது. ஏ.பி.டிவில்லியர்ஸ் வைத்திருக்கும் ஓர் அரிய டெஸ்ட் சாதனை சாதனைகள் ஒருவரின் திறமையை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்று கூறப்படுவதுண்டு, ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்றவர்கள் டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் போன்று சாதனைகளை நிகழ்த்தாவிட்டாலும் அவரது பன்முகத்திறமைக்கு இன்று நிகரான வீரர்கள் ஒருவரும் இல்லை என்றே கூற வேண்டும். ஓய்வு பெறும் வரையும் கூட திகைக்க வைக்கும் கேட்ச்கள், பீல்டிங்குகளைச் செய்துள்ளார், தன் அணிக்காக விக்கெட் கீப்பிங்கில் …
-
- 0 replies
- 446 views
-
-
இனி பந்தின் நிறம் பற்றிய கவலையில்லை: டெஸ்ட் பேட்டிங் வெற்றி குறித்து ஐபிஎல்-க்கு பெருமை சேர்க்கும் ஜோஸ் பட்லர் ஜோஸ் பட்லர். | படம். | ஏ.பி. ஐபிஎல் 2018 போட்டித் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஜோஸ் பட்லர் தனது அதிரடி பேட்டிங் மூலம் ராயல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்ததோடு, இங்கிலாந்து டெஸ்ட் அணியிலும் அவர் மீண்டும் அழைக்கப்பட காரணமாக அமைந்தது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்தைப் பந்தாடினாலும் ஜோஸ் பட்லர் 67 ரன்களை எடுத்தார், 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து பழிதீர்ப்பு பதிலடி கொடுத்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடி முறையில் 8…
-
- 0 replies
- 383 views
-
-
டெஸ்ட்டில் வெற்றி கேப்டன் யார்? ரிக்கி பாண்டிங்கா? கிரேம் ஸ்மித்தா? ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித், ராபின் பீட்டர்சன், ஹஷிம் ஆம்லா. - படம். | ராய்ட்டர்ஸ். டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை அதிகம் குவித்த கேப்டன்கள் யார் என்பது கிரிக்கெட்டில் ஒரு சுவாரசியமான கேள்வி. கிரிக்கெட் ஆட்டத்தில் மிகச்சிறந்த கேப்டன்கள் இருந்துள்ளனர், இவர்களில் பலரை வெற்றிகளை வைத்து தீர்மானிக்க முடியாது. ஆனால் கிரிக்கெட் ஆகட்டும் எந்த ஒரு விளையாட்டாகட்டும் வெற்றிதானே பேசும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் யார் என்று பார்த்தோமானால், புள்ளிவிவரங்கள் கூறுவது என்னவென்பதைப் பார்ப்போம்: தென் ஆப்பிரிக்காவின் கி…
-
- 0 replies
- 332 views
-