Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 22 NOV, 2023 | 08:14 PM (ஜே.ஜி.ஸ்டீபன்) பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டியொன்று பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று பிரேசிலின் மரகானா மைதானத்தில் இடம்பெற்றது. போட்டி ஆரம்பமாவதற்கு முன்பதாக பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகளின் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிரேசில் பொலிஸார் ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது இரத்தம் சொட்டச்சொட்ட கடுமையான தடியடித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் களேபரம் உருவானது. இதனால் சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி தடைப்பட்டதுடன் பார்வையாளர் அரங்கிலும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அத்துடன் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது. …

  2. இரவில் மாயமான வீரர் இலங்கை அணியுடன் மேற்கிந்திய தீவுகளிற்கு சென்றிருந்த சுழல்பந்துவீச்சாளர் மைக்கல் வன்டர்சே ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை தொடர்ந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இரண்டாவது டெஸ்ட் முடிவடைந்த பின்னர் வன்டர்சே இரவு விடுதிக்கு வேறு சில வீரர்களுடன் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்டர்சேயை ஹோட்டலில் காணாததன் காரணமாக அணி முகாமைத்துவம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னர் ஹோட்டலிற்கு திரும்பியுள்ள வன்டர்சே தான் சில வீரர்களுடன் இரவுவிடுதிக்கு சென்றதாகவும் பின்னர் அந்த வீரர்கள் தன்னை விட்டுவிட்டு ஹோட்டல் திரும்பிவிட்டனர் எனவும் தான் வழிதெரியாமல் தடுமாறியதாகவும் குறிப்பிட்டுள்…

  3. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர் நேற்று இரவு பாரில் ஏற்பட்ட அடிதடியில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தற்போது கோமாவில் உள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர்(28). அவர் மெரிவேல் என்ற இடத்தில் உள்ள பாருக்கு நேற்று இரவு சென்றார். அவரும் அவரது நண்பர்களும் பாரில் குடித்துவிட்டு வெளியே வந்தபோது யாரோ அவரை தாக்கியுள்ளனர். சுமார் 4 பேர் ரைடரை கடுமையாக தாக்கியதாக சம்பவத்தைப் பார்த்த ஒருவர் தெரிவித்தார். ஆனால் தாக்கியவர்கள் யார், எதற்காக தாக்கினர் என்று இன்னும் தெரியவில்லை. இந்திய நேரப்படி இரவு 12.44 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் ரைடரின் மண்டையோடு உடைந்தது. இதையடுத்து அவர் கிறைஸ்ட்சர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்…

  4. இரவு விடுதியில் ரசிகரை தாக்கியதால் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கதி!!! இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளித்த பின்னரே நியூஸிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியில் இணைய முடியும் என்று சகலதுறை ஆட்டவீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 28 வயதான பென் ஸ்டோக்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் பிறிஸ்ரோல் இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகளுக்கு முகம்கொடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி விளக்கமளிப்பதற்காக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் பென் ஸ்டொக்ஸ் ஆஜராகவுள்ளார். இந்நிலையில் "நீதிமன்றில் அஜராகும் வரை அணியின்…

  5. Afghanistan v West Indies - ICC Cricket World Cup 2019 2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய குல்பதின், தனது தலைமையில் ஒரு வெற்றியை கூட பெற்றுத்தர முடியாமல் தமது அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். இதனையடுத்து ஏமாற்றமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் வழிநடத்தி வந்த ஆல்ரவுண்டர் ரஷீத் கானை அனைத்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமனம் செய்தது. மேலும், குல்பதின் நயிப்புக்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி வந்த ஆஸ்கர் ஆஃப்கானை அனைத்து மூன்று தரப்பு போட்டிகளுக்கும் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இவரது தலைமையில் 9 போட்டிகளில் விளையாடிய …

    • 0 replies
    • 437 views
  6. இராகுலன், உத்தமனால் சம்பியனாகிய கே.சி.சி.சி -குணசேகரன் சுரேன் கருணாமூர்த்தி இராகுலன் மற்றும் சிவகுருநாதன் உத்தமன் ஆகியோரின் இணைப்பாட்டம் மூலம் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகம் நடத்திய முக்கோண வெற்றிக்கிண்ணத்தை கொக்குவில் மத்திய சனசமூக நிலைய (கே.சி.சி.சி) அணி கைப்பற்றியது. சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் ஜோர்ஜ் வெப்ஸ்ரர் தரவரிசையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற அணிகள் 50 ஓவர்கள் கொண்ட இந்த முக்கோண வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியில் பங்குபற்றும். அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தரவரிசையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் ஜொலிஸ்ரார்ஸ் அணி ஆகியன அ…

  7. இராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி மீது நடவடிக்கை வேண்டும் – பாகிஸ்தான் கோரிக்கை அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி ஐ.சி.சி.யிடம் இன்று (சனிக்கிழமை) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இந்தியா-அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் இராணுவத் தொப்பியுடன் களமிறங்க இந்திய அணி முடிவு செய்தது. இதன்படி வீரர்கள் இராணுவத் தொப்பியுடன் விளையாடினர். இந்நிலையில், இராணுவ தொப்ப…

  8. இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேராவுக்கு இலங்கை இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி திசர பெரேரா இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாடும் பெரேரா கஜாபா படையணியில் ஒரு மேஜர் பதவியில் பணியாற்றுவார். முன்னாள் தேசிய கிரிக்கெட் கப்டன் தினேஷ் சந்திமலும் இந்த ஆண்டு இலங்கை இராணுவ தன்னார்வப் தொண்டர் படையணியில் இணைந்து இராணுவத்தின் கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/72086

  9. இரானுக்கு எதிராக 2-வது கோலை சிரியா அடித்த போது உணர்ச்சிவசப்பட்டு அழுத சிரியா வர்ணனையாளர் சிரியா நாட்டு கால்பந்து ரசிகர்கள். - படம். | ஏ.எஃப்.பி. உலகக்கோப்பை 2018-க்கான தகுதிச்சுற்றுக் கால்பந்து போட்டியில் 93-வது நிமிடத்தில் ஈரானுக்கு எதிராக அந்த 2-வது கோலை சிரியா அடித்து சமன் செய்த தருணத்தில் சிரியா நாட்டைச் சேர்ந்த வர்ணனையாளர் உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சி வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சுமார் 10 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது இவரது உணரர்ச்சிகரம். சிரியா வீரர் அல் சோமா 93-வது நிமிடத்தில் அடித்த கோலால் இரானுக்கு எதிராக 2-2 என்று டிரா சாத்தியமானதோடு, ஆசிய பிளே ஆஃப் சுற்றுக்கும்…

  10. இரு கைகளிலும் அசுர வேகத்தில் பந்துவீசும் பவுலர்! (வீடியோ) வாசிம் அக்ரமையும், வக்கார் யுனிஸையும் மிக்ஸ் செய்து இன்னுமொரு ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்ஸை பாய விட்டிருக்கிறது பாகிஸ்தான். வலது கையில் பந்து வீசினால் 145 கி.மீ. வேகம், இடது கையில் வீசினால் 135 கி.மீ. வேகம் எனப் பின்னி பெடலெடுக்கிறார் யஸிர் ஜான். சிவாஜி படத்தில் ரஜினி ‛இரண்டு கைகளால்’ எழுதுவது போல, யாஸிர் ஜான் இரு கைகளிலும் வேகமாக பந்துவீசுவதுதான் பாகிஸ்தானில் ஹாட் டாபிக். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் பகுதியைச் சேர்ந்தவர் யாஸிர் ஜான். தந்தை காய்கறி வியாபாரி. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த யாஸிர், 2003 உலக கோப்பையில் வாசி…

  11. இரு கையாலும் ஸ்பின் வீசும் பந்துவீச்சாளர்: புலம்பும் வர்ணணையாளர்கள்! (வீடியோ) ஒரு பந்துவீச்சாளர் பந்துவீச வருகிறார். இவர் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் என வர்ணணை சொல்லப்படுகிறது. வந்தவர் 4 பந்து இடது கையில வீசுகிறார். 5வது பந்தை வலது கையில் வீசினால் என்ன செய்வீர்கள். இப்படியும் ஒருத்தர் இலங்கை அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இலங்கை அணியில் 19 வயதுக்குட்பட்ட அணியில் உள்ள கமிண்டு மெண்டிஸ்தான் இப்படி ஒரு காரியத்தை செய்து பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைக்கிறார். அதாவது வலது கை பேட்ஸ்மேன் என்றால் இடது கையாலும் இடது கை பேட்ஸ்மேன் என்றால் வலது கையாலும் பந்துவீசி கமிண்டு அசத்துகிறார். ஏன்யா இப்படினு கேட்டால் ''கிரிக்கெட்டில் வலது கை பேட்ஸ்மேன் திடீரென்று இடத…

  12. இரு பிரிவுகளிலும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் சம்பியன் கொழும்பு சென். ஜோசப் கல்லூரி நாடு பூராகவும் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தி 5 பேர் கொண்ட “வுட்செல்” (Futsal) கால்ப்பந்தாட்டப் போட்டியில் 17 வயதுப் பிரிவு மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் வெற்றிபெற்று 2017 ஆம் ஆண்டுக்கான கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டன. இப் போட்டித் தொடர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி கைதானத்தில் இடம்பெற்றது. 17 வயதுப் பிரிவு போட்டியின் அரையிறுதிப் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி தேசிய சம்பியனான மருதானை ஸாகிரா கல்லூரி அணியைவெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. …

  13. இரு வேறு கலாசாரங்கள் சந்தித்த ஒலிம்பிக் கடற்கரை கரப்பந்தாட்டம்; ஹிஜாப் அணிந்து களமிறங்கினார் எகிப்தின் தோவா எல்போபஷி பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் நடைபெறும் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் கடற்கரை கரப்பந்தாட்டப் (பீச்வொலிபோல்) போட்டி யொன்றில் எகிப்திய, ஜேர்மனிய அணிகளுக்கு இடையிலான சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தோவா எல்­போ­பஷி, நடா மீவாட் இவ்விரு அணியினரும் முற்றிலும் மாறுபட்ட வகையிலான ஆடைகளுடன் இப்போட்டியில் மோதினர். பொதுவாக கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டி களில் விளையாடும் வீராங்கனைகள் பிகினி எனும் நீச்சலுடையுடனே விளையாடுவர். ஆனால் எகிப்திய வீராங்கனை களான தோவா எல்போபஷியும் …

  14. இருதயக் கோளாறு: 26 வயதிலேயே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஓய்வு இருதயக் கோளாறினால் 26 வயதிலேயே ஓய்வு பெற்றார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லர். | கெட்டி இமேஜஸ். இருதயக் கோளாறுகள் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மென், நாட்டிங்கம்ஷயர் வீரர் ஜேம்ஸ் டெய்லர் தனது 26-வது வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற நேரிட்டுள்ளது. இருதயத்தின் வலது அறையில் தசை சுருங்கி விரிவதில் இவருக்கு தீவிர பிரச்சினைகள் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இருதய தசை சுருங்கி விரிவதில் பிரச்சினைகள் இருந்தால் அது மாரடைப்பில் போய் முடியும். இந்நிலையில் அவர் ஓய்வு அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 2012-ல் கால்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா இதே …

  15. இருபது வருடங்களின் பின் சாதிக்குமா பாகிஸ்தான் அணி? வியாழக்கிழமை, 30 ஒக்டோபர் 2014 1994இல் பாகிஸ்தானில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சலிம் மலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. அதன் பின்னர், டெஸ்ட் தொடர் ஒன்றில் அவுஸ்திரேலிய அணியை வெல்வது என்பது, பாகிஸ்தான் அணிக்கு வெறும் கனவாகவே இருந்துவந்தது. 1999இல் ஆரம்பித்து 2010 வரையில், அவுஸ்திரேலியாவுடன் விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, 2010 இல் லீட்ஸ் இல் இடம்பெற்ற போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றிபெற்று தொடர்ச்சியான தோல்விக்கு இடைவெளி விட்டது. அதனை அடுத்து நான்கு வருடங்கள் கழித்து, கடந்த 22ஆம…

  16. இருபதுக்கு - 20 அணிக்கு சந்திமல் தலைவர் ; இலங்கை குழாம் அறிவிப்பு பங்களாதேஷ் அணிக்கெதிரான இரபதுக்கு - 20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு டினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணிக்கு எதிராக 2 இருபதுக்கு - 20 போட்டித் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதியும் 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. …

  17. இருபதுக்கு - 20 ஆக மாறிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வருடத்திலிருந்து 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியாக இடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ணப் போட்டி அடுத்தவருடம் இருபதுக்கு-20 போட்டித் தொடராக இடம்பெறவுள்ளதாக ஆசிய சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 30 ஓவர்கள் நீக்கப்பட்டு இருபதுக்கு-20 போட்டிகளாக இடம்பெறவுள்ளது. எனினும் அடுத்தவருடம் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடருக்கு முன்னாயத்தமாகவே இந்த போட்டித் தொடர் …

  18. இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனாகுவதற்கு முயற்சி - இலங்கை மகளிர் அணித் தலைவி By DIGITAL DESK 5 28 SEP, 2022 | 03:00 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி சம்பியனாவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து தெரிவித்தார். பங்களாதேஷில் அக்டோபர் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மகளிர் இருவது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து இன்று புதன்கிழமை (28) அதிகாலை புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார…

  19. இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு எவ்வாறு அணிகள் தகுதி பெற்றன ? By VISHNU 06 OCT, 2022 | 11:48 AM (என்.வீ.ஏ.) அவுஸ்திரேலியாவில் முதல் சுற்றுடன் இம் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை ஸ்பரிசிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 16 நாடுகள் பங்குபற்றவுள்ளன. இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதல் சுற்று, சுப்பர் 12 சுற்று என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதுடன் முதல் சுற்றில் 8 நாடுகள் இரண்டு குழுக்களில் தலா 4 நாடுகள் வீதம் லீக் அடிப்படையில் மோதவுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் சுப்…

  20. இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் இரத்தாகிறதாம் முன்­னணி அணி­க­ளுக்கு அதிக அளவில் போட்­டிகள் இருப்­பதால் அடுத்த வருடம் நடத்­தப்­ப­ட­வி­ருந்த இரு­ப­துக்கு - 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. கிரிக்கெட் ரசி­கர்­க­ளுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்­டிகள் மீதான ஆர்வம் படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கி­றது. இரு­ப­துக்கு - 20 கிரிக்கெட் போட்­டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடு­வ­தாலும், அதிக அளவில் சுவா­ரஸ்யம் இருப்­ப­தாலும் ஐ.சி.சி. இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்­ணத்தை இரண்டு வரு­டங்களுக்கு ஒரு­முறை நடத்த முடிவு செய்­தது. அதன்­படி தென்­னா­பி­ரிக்கா (2007), இங்­கி­லாந்து (2009), மேற்­கிந்­தியத்…

  21. Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 02:06 PM இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே, மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்று, சர்வதேச இருபதுக்கு - 20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராகக் களமிறங்கிய, பில் சால்ட், 60 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 141 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் அடித…

  22. இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவராக அப்ரிடி நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தொடர்களில் அப்ரிடி தலைவராக செயற்படவுள்ளார். இந்­தி­யாவில் 2016 இல் நடை­பெ­ற­வுள்ள உலக இரு­ப­துக்கு 20 கிரிக்கட் போட்­டி­வரை பாகிஸ்­தானின் இரு­ப­துக்கு 20 கிரிக்கட் அணித் தலைவர் பத­வியை அவர் வகிப்பார் என அந் நாட்டு கிரிக்கட் கட்­டுப்­பாட்டுச் சபை தெரி­வித்­துள்­ளது. பங்­க­ள­தேஷில் இவ் வருடம் நடை­பெற்ற உலக இரு­ப­துக்கு 20 கிரிக்கட் போட்­டி­களின் முதல் சுற்­றுடன் பாகிஸ்தான் வெளி­யே­றி­யதை அடுத்து மொஹமட் ஹபீஸ் அணித் தலைவர் பத­வியைத் துறந்­தி­ருந்தார். அ…

  23. [size=4]பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி அரையிறுதிப் போட்டிக்கு துடுப்பாட்டத்துக்கு மிகப் பாதகமாக ஆடுகளத்தை தயாரித்திருந்ததான அதிகாரிகளை பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் கண்டித்துள்ளார். 16 ஓட்டங்களினால் இலங்கை அணி பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்த இந்த ஆடுகளம் துடுப்பாட முடியாததாக அமைந்திருந்தது என அறிவிப்பாளராக கொழும்பு வந்திருந்த வசீம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடுகளத்தில் 140 ஓட்டங்களை முந்துவது 180 ஓட்டங்களை முந்துவது போலாகும் என அவர் கூறினார். இப்படியான முக்கியத்தும்மிக்க ஒரு போட்டிக்கு இவ்வாறாக ஆடுகளம் அமைத்தது எவ்வாறு என அவர் வினவினார். பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியும் இந்த…

    • 0 replies
    • 410 views
  24. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்காக இந்தியா வர பாகிஸ்தான் வீரர்கள் மறுக்கலாம் ! மும்­பையில் நடை­பெற இருந்த இந்­திய –- பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான பேச்­சு­வார்த்தை சிவ­சேனா போராட்­டத்தால் ரத்து செய்­யப்­பட்­டது. மேலும், சிவ­சேனா மிரட்­டலால் ஐ.சி.சி. தங்­க­ளது நடு­வ­ரான அலீம் தாரை திரும்­பப்­பெற்­றது. இந்த செயல்­களால் பி.சி.சி.ஐ. தர்­ம­சங்­க­டத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் அடுத்த வருடம் இந்­தி­யாவில் நடை­பெ­ற­வி­ருக்கும் இரு­ப­துக்கு 20 உலகக்கிண்ணப் போட்­டியில் விளை­யாட வர­வி­ருக்கும் பாகிஸ்தான் வீரர் கள் மறுப்பு தெரி­விக்க வாய்ப்பு உள்­ள­தாக ஐ.சி.சி. தலை­வர்­களில் ஒரு­வரும்இ பாகிஸ்தான் முன்னாள் வீர­ரு­மான ஸாஹிர் அப்பாஸ் தெரி­வித்த…

  25. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் 20 அணிகளை தெரிவு செய்ய ஐ,சி,சி, தீர்மானித்துள்ளது. அதன்படி, 12 அணிகள் நேரடியாகத் தகுதிபெறும், மேலும் 8 அணிகள் தகுதிச் சுற்றுப்போட்டியின் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும். இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளான மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். மேலும், மீதமுள்ள இரு அணிகளும் இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடும். உலகக் கிண்ண இருபதுக்கு 2…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.