Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பெலருஸ் ஒலிம்பிக் வீராங்கனை சிமானுஸ்காயாவுக்கு போலாந்தின் மனிதாபிமான விசா பெலருஸ் ஒலிம்பிக் வீராங்கனை கிரிஸ்டினா சிமானுஸ்காயாவுக்கு போலாந்து அரசாங்கத்தினால் மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் திங்களன்று உறுதிபடுத்தினார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய பயிற்சியாளர் ஊழியர்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து தனது அணியின் விருப்பத்திற்கு மாறாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 24 வயதான சிமானுஸ்காயா ஞாயிற்றுக்கிழமை டோக்கியோவிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார். பெலருஸுக்குத் திரும்பினால் தன் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அவர் பின்னர் ஜப்பானிய காவல்துறையின் பாதுகாப்பை ந…

  2. இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை இங்கிலாந்து - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் தென் ஆப்ரிக்க அணி உள்ளது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், தென் ஆப்ரிக்க அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இங்கிலாந்து அணியும், தொடரை சமன்…

  3. தினம், தினம் நரக வேதனை: ஸ்ரீசாந்த் புலம்பல் டிசம்பர் 07, 2014. ‘‘கிரிக்கெட் சூதாட்ட புகாரின் பேரில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஐந்து நிமிடத்தில் பி.சி.சி.ஐ., முடித்து விட்டது’’ என, புலம்பியுள்ளார் ஸ்ரீசாந்த். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பங்கேற்றார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், 31. இவர் ‘பிக்சிங்’ செய்தது அம்பலமாக, டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. அதேநேரம், சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் தனியாக விசாரிக்கிறது. தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 பேர் மீது புகார் உள்ளதாக தெரிகிறது. தவிர, சென்னை அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தானின் ரா…

  4. வென்றார் லூயிஸ் ஹமில்டன் பெல்ஜியம் கிரான்ட் பிறிக்ஸ் வாகன ஓட்டப் போட்டியை, மேர்சிடீஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன் வெற்றிகொண்டுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இப்போட்டியில், ஃபெராரியின் செபஸ்டியன் வெட்டலை முந்திக் கொண்டே, ஹமில்டன் வெற்றிபெற்றார். 3ஆவது இடத்தை, றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டானியல் றிக்கார்டோ வென்றார். ஹமில்டனின் இந்த வெற்றி, அவரது வாகன ஓட்டுநர் வரலாற்றில், அவர் வெற்றிகொண்ட 58ஆவது கிரான்ட் பிறிக்ஸ் பட்டமாகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்துக்கான வரிசையில், முதலிடத்தில் காணப்படும் வெட்டலுக்கும் தனக்குமிடையிலான புள…

  5. தன் நடத்தையை விமர்சித்தவர்களுக்கு கிறிஸ் கெயில் பதிலடி கிறிஸ் கெய்ல். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். ஆஸ்திரேலிய சேனல் ஒன்றின் பெண் நிருபரிடம் தகாத வார்த்தைகளைக் கூறியதற்காக கெய்ல் மீது கண்டனங்கள் குவிந்த நிலையில் அவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். கடந்த பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சேனல் 10 பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசியதற்காக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து கிறிஸ் கெயில் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சானல் 10 பெண் நிருபரான மெல் மெக்லாஃப்லின் கெயிலை அன்றைய தினம் பேட்டிக்காக அணுகிய போது, don't blush baby என்று கூறியது கிரிக்கெட் உலகில் கடும் சர்ச்சைக்குள்ளானது, கெயிலுக்கு அவர் ஆடிய கிளப்…

  6. அடுத்த இலக்கு, ஒலிம்பிக்கில் தங்கம்: அசத்தும் அபூர்வி சண்டேலா இந்தியாவின் ஒலிம்பிக் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் போட்டிகள் பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் அம்பு எய்தல். தற்போது தோன்றியிருக்கும் நம்பிக்கை நட்சத்திரம்தான் அபூர்வி சண்டேலா, 10 மீட்டர் ஏர் ரைஃபல் என்ற போட்டியில் 2012 முதல் பங்கேற்று வருகிறார். தான் பங்கேற்ற முதல் தேசிய அளவிலான சீனியர் போட்டியிலேயே தங்கம் வென்றார். பின்னர் 2014-ல் ஹேக் இன்டெர்ஷூட் போட்டிகளில் தனி நபர், குழு என பல போட்டிகளில் பங்கேற்று 4 மெடல்கள் குவித்தார். அதே வருடம் கிளாஸ்கௌவில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் 206.7 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றது மட்டும் அல்லாமல் புது ரெக்கார்டும் உருவாக்கினார். …

  7. இலங்கை வலைப்பந்து அணிக்கு பயிற்சியளிப்பதற்கான சவாலை ஏற்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி தெரிவித்துள்ளார். இதற்காக தம்மிடம் ஏற்கனவே உள்ள நிலை 01 சான்றிதழுக்கு அப்பால், விரைவில் நிலை 02 மற்றும் நிலை 03 பயிற்சி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நான்கு வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண மற்றும் ஐந்து ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி, 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த கேப் டவுன் உலகக் கிண்ணத்துக்கு பிறகு தேசிய அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் தர்ஜினி தனது இந்திய கணவர் ஆர்.பிரசாத்துடன் பெங்களூரில் நடந்த 13ஆவது ஆசிய நில…

  8. முகமது சாலா : அரபு கால்பந்து உலகத்தை ஊக்குவிக்கும் "எகிப்திய மன்னர்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES லிவர்பூல் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா (மோ சாலா என்றும் அழைக்கப்படுகிறார்), தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை எகிப்தைச் சேர்ந்த சமூக வலைத்தள பயனர்கள் பெருமையுடன் உற்சாக…

  9. Boxing Day Tests: மூன்று டெஸ்ட் போட்டிகள் ஒரு பார்வை 25-12-2014 04 நத்தார் தினத்துக்கு அடுத்த நாளான Boxing Dayஇல் இடம்பெறும் பெருமைக்குரிய டெஸ்ட் போட்டிகள் இம்முறை உலகின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது சிறப்பு. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அவுஸ்திரேலியா - இந்தியா மூன்றாவது டெஸ்ட். தென் ஆபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது டெஸ்ட். இந்த இரண்டு தொடர்களிலும் முதல் போட்டிகளில் சொந்த மண் அணிகள் (Home teams) ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெற்றிகளைப் பெற்று நாளைய போட்டியிலும் வெற்றிபெறும் தாக்கம் செலுத்தக்கூடிய மனநிலையில் இருக்கின்றன. ஆனால், கிரைச்ட்சேர்ச்சில் நாளை ஆரம்பமாகவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான இலங்கையின…

  10. கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டைகர் வூட்ஸுக்கு காலில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "கலிபோர்னியாவில் இன்று (செவ்வாய்) காலை டைகர் வூட்ஸ் ஒரு கார் விபத்தில் சிக்குண்டார். விபத்தினால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது அறுவை சிகிச்சையில் உள்ளார், உங்கள் தனியுரிமை மற்றும் ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார். பெப்ரவரி 23 காலை 7:12 மணியளவில் லாஸ் ஏஞ…

    • 1 reply
    • 617 views
  11. 2016 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்டக்காரர் யார்..? 2016 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா விருது போர்ச்சுகல் அணியின் முன்னணி கால்பந்து வீரரான ரோனால்டோவிற்கு வழங்கப் பட இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் சிறந்து விளங்கும் கால்பந்தாட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.அதன் படி 2016 ஆண்டிற்கான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற கவுரவத்தை பெற்றிருக்கிறார் ரோனால்டோ. சிறந்த வீரருக்கான வாக்கெடுப்பில் ரோனால்டோ 34.54 சதவிகிதம் பெற்று முதலிடமும், அர்ஜெண்டினாவை சேர்ந்த மெஸ்ஸி 26.42 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடமும் பிடித்தனர்.பெரும் எதிபார்ப்புக்கு இடையில் ரோனால்டோ தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77411…

  12. இந்த 35 வயதிலும்... எதை நிரூபிக்க ஃபெடரர் இன்னும் போராடுகிறார்? ஆஸ்திரேலிய ஓபன், இந்தியன் வெல்ஸ், மியாமி ஓபன் என இந்த ஆண்டு மட்டுமே ரோஜர் ஃபெடரர் வென்றது மூன்று பட்டங்கள். கடந்த ஆண்டு ஆறு மாத இஞ்சுரியால் முடங்கிக் கிடந்த ஃபெடரருக்கு இது அமர்க்கள சீசன். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தோற்றதால், ‘வயசாயிடுச்சு, இனிமே இவரால ஜெயிக்கமுடியாது' என்று கழித்துக்கட்டப்பட்ட ஒருவருக்காக, சமீபத்தில் உலகமே பிரார்த்தனைசெய்தது. அவர் ஜெயித்துவிடமாட்டாரா என ஏங்கியது. ஜெயித்ததும் சத்தமாகக் கத்தவில்லை; கொண்டாடவில்லை; கண்ணீர்விட்டு அழுதது; மறுகணம், 'அண்ணனோட அடுத்தபோட்டி எப்போ?' என்று ஆவலுடன் எதிர்பார்க்கத்தொடங்கிவிட்டது. இந்த அதிசயம்…

  13. குப்திலை முந்திய டில்ஷான் சர்­வ­தேச இருபதுக்கு 20 போட்­டி­களில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்­டி­யலில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் 2ஆவது இடத்­துக்கு (1676 ஓட்டங்கள்) முன்­னேறியுள்ளார். நியூ­ஸி­லாந்து வீரர்கள் பிரெண்டன் மெக்­கல்லம் (2140 ஓட்டங்கள்) முத­லி­டத்­திலும், மார்டின் குப்தில் (1666 ஓட்டங்கள்) 3ஆவது இடத்­திலும் உள்­ளனர். மேலும், இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் அதிக பவுண்­ட­ரிகள் அடித்­த­வர்­களின் வரி­சையில் முத­லி­டத்தில் உள்ள மெக்­க­லத்தை (199 பவுண்­ட­ரிகள்) டில்ஷான் சமன் செய் துள்ளார். இந்த ஆண்டில் விளை­யா­டி­யுள்ள 7 இருபதுக்கு 20 இன்­னிங்ஸ்களில் டில்­ஷானின் சரா­சரி ஓட்டக் குவிப்பு 12.28 ம…

  14. நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி FIFA தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இன்று (16) புதுப்பிக்கப்பட்ட FIFA உலக தரவரிசையில் நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக சர்வதேச அளவில் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் மற்றும் நட்புறவு போட்டிகளின் முடிவுகள் அடிப்படையிலேயே தரவரிசையில் புதிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் உலக தரவரிசையின் முதல் ஆறு இடங்களிலும் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. ஜெர்மனிக்கு அடுத்து பிரேசில், போர்த்துக்கல், ஆர்ஜன்டீனா, பெல்ஜியம் மற்றும் போலந்து அணிகள் முறையே 2 முதல் 6 ஆவது இடம் வரை நீடிக்கின்றன. அடுத்த உல…

  15. நல்ல பந்தில் அவுட் ஆவது என்றால் என்ன? இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய பேட்டிங் போராட்டமின்றி சரணாகதி அடைவதற்கு பல காரணங்களில் பிரதானமாகக் கூறப்படுவது நல்ல பந்து வீசப்படுகிறது என்பதும் கூறப்படுகிறது. விராட் கோலி, புஜாராவை முன் வைத்து இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலில் நல்ல பந்து ஏன் வீச அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வியை நாம் ஒரு புறம் வைத்துக் கொள்வோம். கிரிக்கெட்டில் ஆடமுடியாத, மிகச்சிறந்த பந்துகளுக்கு எப்போதும் அவ்வளவாக விக்கெட்டுகள் விழுவதில்லை. குறிப்பாக வேகப்பந்துக்குச் சாதகமான ஆட்டங்களில் பந்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் பந்து மட்டையைக் கடந்து நூலிழையில் எட்ஜைத் தவறவிட்டுச் செல்லும்போது அது குட் பால் என்று கூறப்படுகிறது. ஆனால் …

  16. கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசைனுக்கு எதிராக சித்ரவதை குற்றப் பத்திரிகை தயார் வங்கதேசத்தின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷஹாதத் ஹுசைன் மற்றும் அவர் மனைவி ஜாஸ்மின் ஜஹான் ஆகியோர் தமது வீட்டில் வேலை செய்த பதினொரு வயது சிறுமியை சித்ரவதை செய்ததாக அவர்களுக்கு எதிராக முறைப்படி குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. இக்குற்றம் உறுதிசெய்யப்படுமானால், இருவருக்கும் ஏழு முதல் பதினான்கு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மஹ்ஃபூஸா அக்தர் என்ற அச்சிறுமி கடந்த செப்டம்பரில், உடலில் பல காயங்களுடனும் கால் உடைந்த நிலையிலும் வீதியில் கைவிடப்பட்டிருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரும் சிறையிலிருந்து இம்மாதத்தின் முற்பகுதியில் பிணையில…

  17. அம்மாடியோவ்... 50 ஓவரில் 485 ரன்கள்! - இளம் இந்திய அணி அசத்தல் ஆட்டம்! ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளை தடுத்து நிறுத்தி, அதன் மண்ணிலேயே அந்த அணியை 329 ரன்களை சேஸ் செய்தது, 6 இந்திய வீரர்கள் சென்சுரி அடித்தது உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது சீனியர் அணி. அதே போல இன்று 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் மெகா சாதனை நிகழ்த்தியிருக்கிறது. யுவராஜ் , விராட் கோலி என பல வீரர்கள் இந்திய அணியில் நுழைந்தது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையில் பிரகாசித்ததன் மூலம்தான். தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார். வருங்காலத்தில் சீனியர் இந்திய அணி, உலக அரங்கில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக இப்போதே இளம் வீரர்களை பட்டை தீட…

  18. சதத்தில் சச்சின் சாதனையை முறியடித்த கோலி! ஒருநாள் போட்டியில் சேஸ் செய்யும் போது அடிக்கப்பட்ட சதங்களில் சச்சினை முந்தி கோலி புதிய சாதனை படைத்தார். இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் இந்திய அணியின் கேப்டன் கோலியின் கேப்டன்ஷிப் மீது பல விமர்சனங்கள் மற்றும் மாற்று கருத்து இருந்தாலும் அவரது பேட்டிங் திறமை மீது இதுவரை விமர்சனங்கள் வந்தது இல்லை. அதனால்தான், சச்சின் சாதனைகளை முறியடிக்கும் திறன் கோலியிடம் இருப்பதாகக் கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள். நேற்று சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய கோலி, தனது 28 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஒருநாள்…

  19. மீண்டும் மலிங்க? இலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்­து­ வீச்­சாளர் லசித் மலிங்க எமது அவ­தா­னிப்­பில்தான் இருக்­கிறார் என்று இலங்கையின் துடுப்­பாட்டப் பயிற்­சி­யாளர் திலான் சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். ஆனால் அவர் எதிர்­வரும் போட்­டி­களில் விளை­யா­டு­வாரா, இல்­லையா என்­பதை நான் தீர்­மா­னிக்க முடி­யாது என்றும் அநே­க­மாக தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 போட்­டியில் லசித் மலிங்க கள­மி­றங்க வாய்ப்­புள்­ள­தா­கவும் திலான் சம­ர­வீர குறிப்­பிட்டார். நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான லசித் மலிங்க அணி­யி­லி­ருந்து கடந்த சில கால­ங்களாக ஓரம் ­கட்­டப்­பட்டே வரு­கிறார். ஆனாலும் அவரும் சளைக்­காமல் தன் திற­மை­க…

  20. என்ன செய்தார் கேப்டன் விராட் கோலி! ஒரு வருட கேப்டன்ஸி ரிப்போர்ட் கார்டு! விராட் கோலி அதிகாரப்பூர்வமாக இந்திய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டது சென்ற வருடம் இதே தேதியில் தான். தோனி போன்ற லெஜெண்ட் இடத்தை கோலி நிரப்புவது கடினம், அனுஷ்கா சர்மாவுடன் சுற்றும் இவர் இந்தியாவை இன்னும் கீழே கொண்டு செல்வார் என்ற வார்த்தைகள் தான் கோலியின் கேப்டன் பதவிக்கு அளிக்கப்பட்ட இன்ஸ்டெண்ட் பரிசுகள். இந்த ஒரு வருடத்தில் கோலி தன் மீதான விமர்சனங்களை சிக்சர் விளாசினாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். கேப்டனாக என்ன செய்தார்? கேப்டன் தோனி மெல்பேர்ன் டெஸ்ட் முடிந்தவுடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது ஓய்வை அறிவித்தார். அந்த தொடரில் முதல் போட்டியில் கேப்ட…

  21. 104 நாடுகளுக்கு இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க முடிவு இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆண்கள் அணிகளுக்கு, இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. கொல்கத்தாவில் நடந்து வருகின்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயற்குழுக் கூட்டத்தில், கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 12 முழுநேர உறுப்பு நாடுகளைத் தவிர, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து, ஹொங்கொங், ஐக்கிய அரபு ராச்சியம் , ஓமான், நேபாளம் என, 18 நாடுகளுக்கு இருபதுக்கு…

  22. விராட் கோலி தலை வணங்கியதற்கான காரணம் வெளியானது..! ஐசிசி இருபது - 20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. விராட் கோலியின் அபார ஆட்டம் மூலம் வெற்றியை இந்திய வசமாக்கி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்தார். பாகிஸ்தான் முதலில் நிர்ணயம் செய்த 119 ஓட்ட இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்கம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ரோகித் சர்மா 10 ஓடடங்களுடனும், ஷிகர் தவான் 6 ஓட்டங்களுடனும், சுரேஷ் ரெய்னா ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து விராட் கோலியும், யுவராஜ்சிங்கும் கைகோர்த்து அணியை சரிவில் இரு…

  23. சல்யூட் சார்... பதான்கோட் மோதலில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீரர் வீர மரணம் ! பதான்கோட் விமானப்படைத் தளத்தில் ஜெய்ஸ்- இ - முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடியில் விமானப்படைத் தளத்துக்குள் நுழைந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் , 7 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். அதில் காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பதேக் சிங்கும் ஒருவர். கடந்த 1995ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர். அந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் அணியில் மூத்த வீ…

  24. யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழக்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டித் தொடரில் ஒர்அங்கமான இருபாலருக்குமான கபடிப் போட்டியில் பெண்கள் பிரிவில் காலநிதி விளையாட்டுக்கழக அணியும், ஆண்கள் பிரிவில் ஒளிச்சுடர் விளையாட்டுக்கழக அணியும் கிண்ணம் வென்றன. கடந்த திங்கட்கிழமை கரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில் இறுதியாட்டங்கள் இடம் பெற்றன. முதலில் இடம் பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் ஒளிச்சுடர் விளையாட்டு கழக அணியை எதிர்த்து காரை சலைஞ்சஸ் விளையாட்டு கழக அணி மோதியது. 43:26 என்ற புள்ளி அடிப்படையில் ஒளிச்சுடர் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்றது. …

  25. 'இனிமேல் இப்படி ஒரு கேள்வியை கேட்கமாட்டேன்'- சானியாவிடம் மன்னிப்பு கேட்ட ராஜ்தீப் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, அடிக்கடி ஏதாவது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். ஆனால் கடந்த ஒரு வருடமாக அமைதியாகவே இருந்து வந்தார். ‘Ace Against Odds’ என்ற சானியாவின் சுய சரிதை புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. இது குறித்து பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சானியா. இந்த நிகழ்ச்சிக்கு, பிரபல தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் நெறியாளராக செயல்பட்டார். நிகழ்ச்சியின்போது எடுத்தவுடனேயே ஒரு கேள்வியை கையில் எடுத்த ராஜ்தீப், சானியா அளித்த பதிலால் மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். " என்ன சானியா ஓய்வு பெறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.