அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
-
- 0 replies
- 986 views
-
-
டிரம்ப் மீது 2வது தடவையாக குற்றப்பிரேரணை தீர்மானம்
-
- 0 replies
- 418 views
-
-
நினைவுத்தூபி அழிப்பு: அறத்தின் மீதான ஆக்கிரமிப்பு -புருஜோத்தமன் தங்கமயில் போர் வெற்றி வாதத்துக்கு எதிராக முளைக்கும் சிறிய புல்லைக்கூட, விட்டு வைத்துவிடக் கூடாது என்பது ராஜபக்ஷர்களின் ஒரே நிலைப்பாடு. அதுபோல, பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும் எந்தவோர் அம்சத்தையும், நாட்டின் எந்தப் பாகத்திலும் அனுமதித்துவிடக் கூடாது என்பது, தென் இலங்கையின் குறிக்கோள். அப்படியான நிலையில், இறுதிப் போர் கொடூரங்களை நினைவுறுத்திக் கொண்டு நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி(கள்), தென் இலங்கையின் கண்ணில் விழுந்த பெரிய துரு(க்கள்). அந்தத் துருக்களை அகற்றிவிட வேண்டும் என்பதற்காக சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும், தென் இலங்கையும் அதன் ஆட்சியாள…
-
- 0 replies
- 753 views
-
-
இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதை தேடும் இலங்கை அரசாங்கம் 33 Views இந்திய நாட்டுக்கும், உலகின் பல நாடுகளுக்கும், இடையில் நடைபெறும் கொள்கலன் மூலமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் வருமானத்தால்தான், கொழும்பு துறைமுகம் இலாப வருமானம் பெறுகிறது. பல பத்தாண்டுகளாக, பெரிதும் வெளிவராத, உண்மை கதை இதுவாகும். கொழும்பு துறைமுகத்தில் சுமார் 70%க்கு குறையாத கொள்கலன் பரிமாற்றம் இந்திய நாட்டுக்கு போவதும், வருவதும்தான். பெரும் கொள்கலன்களை சுமந்து வரும் பெரிய கப்பல்கள் பொதுவாக தமது பயணத்தில் ஒருசில துறைமுகங்களுக்குதான் போகும். எல்லா துறைமுகங்களிலும் நின்று போவது, வர்த்தக ரீதியாக பெரிய கப்பல்களுக்கு சரிபட்டு வராது…
-
- 0 replies
- 664 views
-
-
ஜெய்ஷங்கரின் உரை மிரட்டலா? -எம்.எஸ்.எம். ஐயூப் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயம், தமிழ் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் எதிர்பார்ப்பை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இலங்கை வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் வௌியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், கடந்த ஆறாம் திகதி கொழும்பில் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பாக, மீண்டும் வலியுறுத்தியமையே அதற்குக் காரணமாகும். இந்தியத் தலைவர்களின் இந்த வலியுறுத்தல், ஏதும் புதிய விடயமல்ல; இலங்கைத் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்தாலோ, இந்தியத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தாலோ, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் …
-
- 0 replies
- 684 views
-
-
அரச தூண்டுதலினால் உருவாகும் இனவாதம் மற்றும் பயங்கரவாதத்தினை எதிர்க்குமாறு இலங்கை மக்களை வேண்டுகிறோம்-விடுதலை இயக்கம் இன்னுமொரு முறைவழியான இனவாத மற்றும் ஒடுக்குமுறையின் வெளிப்பாடாக சிவில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவுத் தூபியை அழிக்கும் செயலுக்கு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்நினைவுச்ச்சின்னமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்டது. ஜனவரி 8 அன்றிரவு அழிபாடுகளை நிரவல் எந்திரத்தின் மூலம் கொண்டுசெல்வதை புகைப்படங்களில் காணமுடிகின்றது. இறந்தவர்களுக்கான நினைவினை மேற்கொள்ளும் தமிழ் மக்களின் உரிமையை தற்போதைய மற்றும் முன்னைய அரசாங்க…
-
- 1 reply
- 565 views
-
-
“இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்கப்படாமை மிகப்பாரதூரமான விடயமாகும்” முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டாயிற்று. இலங்கையை ஆட்சி செய்த காலணித்துவ ஆட்சியாளர்கள் காலம் முதல் தற்போது வரைக்கும் அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் அரசியல், மதத் தலைவர்கள் மிகவும் புத்திசாதுரியமாகவும், அறிவுபூர்வமாகவும் கையாண்டு வெற்றி கொண்டு வந்துள்ளார்கள். பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பொறாமையினாலேயே ஏற்பட்டுள்ளன. அத்தோடு பள்ளிவாசல்…
-
- 1 reply
- 425 views
-
-
மட்டு. மேய்ச்சல் தரைப் பிரச்சினை: சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய இறுதித் தருணம் – மட்டு.நகரான் 110 Views கால்நடையை நம்பித்தான் எங்கள் குடும்பம் இருக்கின்றது. இதுதான் எங்கள் தொழில், எங்கள் வாழ்க்கை, எங்கள் உலகம். இதனை இல்லாமல் செய்வதன் மூலம் எங்களை அழித்து விடலாம் என சிங்களவர்கள் நினைக்கின்றார்களா? என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர். கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக பேசப்பட்டு வரும் விடயமே மேய்ச்சல்தரைப் பிரச்சினையாகும். இந்த மேய்ச்சல் தரை பிரச்சினையானது, சர்வதேசம் வரையில் பேசுபொருளாக இருந்தது. அரசியல் கட்சிகளின் அரசியல் பொருளாகவும் இருந்தது. ஆன…
-
- 0 replies
- 520 views
-
-
தாயகம் – தமிழகம் – புலம் ஒன்றுபட்ட ஒலித்த நீதிக்கான கண்டனக்குரல்கள் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழர் தாயகம் – தமிழகம் – புலம் என மூன்று தளங்களில் இருந்து ஒன்றிணைந்து நீதிக்காக குரல் எழுப்பும் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. தமிழர் தாயகத்தில் இடம்பெற்றிருந்த கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், இணையவழி இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்பு கண்டன நிகழ்வு இடம்பெற்றிருந்தது. தமிழர் தாயகத்தில் இருந்து யாழ் பல்கலைக்கழக ஒன்றிய பிரதிநிதிகள், கலைப்பீட ஒன்றிய பிரதிநிதிகள், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் விட…
-
- 0 replies
- 612 views
-
-
அன்று மொழியோடு போர் இன்று நினைவுகளோடு போர் - கவிஞர் தீபசெல்வன் 1974ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் மொழியோடு படுகொலைப் போர் புரிந்த அரசு, இன்று இனத்தின் நினைவுகளோடு போர் செய்கிறது. தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1964 ஜனவர…
-
- 2 replies
- 618 views
-
-
-
இலங்கையின் வெளியுறவுத்துறையும் அது சார்ந்த அமைப்புகளும் அண்மை காலங்களில் மிக சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் கொள்கை ஆய்வாளர்களையும் சந்திக்கும் வெளியுறவு அதிகாரிகள் இலங்கை ஒரு சிறிய நாடு என்பதை கூறுவதற்கு தவறுவதில்லை. குறிப்பாக அதிகார பரவலாக்கம் குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கும் பொழுது இலங்கை ஒரு சிறிய தேசம் இந்தச் சிறியதேசத்தில் ஒன்பது அதிகார சபைகளை அமைப்பதுவும் ஒன்பது பொலிஸ் பிரிவுகளை உருவாக்குவதுவும் ஒன்பது காணி அதிகார சபைகளை உருவாக்குவதுவும் மிகவும் கடினம், செலவும் அதிகம் என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் கருத்துக்களின் பின்னணியில் தமிழ் மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க முடியாது என்ற விடயமே உள்ளடங்கி உள்ளது. அதேவேளை இந்திய தென்பி…
-
- 0 replies
- 449 views
-
-
மாகாண சபைத் தேர்தலும் இந்தியாவும் -மொஹமட் பாதுஷா நாட்டில் மாகாண சபைத் தேர்தல், நீண்டகாலமாக இழுபறியாக உள்ள நிலையில், மாகாண சபை முறைமையே இல்லாதொழிக்கப்பட்டு விடுமோ என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதற்கிடையில், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை, முறையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இந்தியா அதிகப்படியான அழுத்தம் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றது. ‘இப்போதைக்கு தேர்தலொன்றை நடத்துவதில்லை' என்று அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய நிலையிலேயே, முதலாவதும் இரண்டாவதும் அலைகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டமை கவனிப்புக்குரியது. அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை, எந்த எல்லை வ…
-
- 0 replies
- 788 views
-
-
துணைவேந்தரின் வாக்குறுதியை நம்பத் தயாராக இல்லை – தமிழ் சிவில் சமூக அமையம் 32 Views “நினைவுத் தூபி அழிக்கப்பட்ட இடத்திலேயே மீள அதனை அமைப்பேன் எனச் சொல்லி “யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியிருப்பதை நாம் நம்பத் தயாராக இல்லை. இனப்படுகொலையை நினைவு கூரும் தூபியை நீக்கி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டது போல ‘சமாதானத்’ தூபியோ அல்லது யுத்த வெற்றி தூபியோ அமைக்கப்படலாம் என நாம் அஞ்சுகிறோம். நாம் எப்படி எவ்வாறு எதனை நினைவு கூர வேண்டும் என்பதனை நாமே தீர்மானிக்க வேண்டும்.” இவ்வாறு தெரிவித்திருக்கின்றது தமிழ் சிவில் சமூக அமையம். யாழ். பல்கலைக்கழக நிலைமை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அமையம் இ…
-
- 0 replies
- 477 views
-
-
மெல்லச் சாகும் சிவில் நிர்வாகம் – பி.மாணிக்கவாசகம் 44 Views ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகின்ற ஆட்சி முறைமை. இது நியாயமான விட்டுக்கொடுப்புகளையும் நீதியான சகிப்புத் தன்மையையும் கொண்டிருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. சிறுபான்மை இன மக்களின் உரிமைகள், வாழ்வியல் இருப்புகள் என்பன பன்மைத்தன்மையின் அடிப்படையில் பெரும்பான்மையினரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். இது ஜனநாயகத்தின் கோட்பாடு. ஆசிய பிராந்தியத்தில் நீண்ட மரபைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்ற இலங்கையின் ஜனநாயகம் நேர் முரணான நிலையிலேயே காணப்படுகின்றது. ஆங்கிலேயரிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலாக ஜனநாயகத்தி…
-
- 0 replies
- 352 views
-
-
பெரும்பான்மை இனத்தின் பாதுகாப்பின்மை உணர்வு -என்.கே. அஷோக்பரன் இலங்கையின் புகழ்பூத்த வரலாற்றியல் ஆய்வாளர்களில் ஒருவர் கே.எம். டி சில்வா. 1998ஆம் ஆண்டு பிரசுரமான, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலொன்றில், ‘இலங்கையின் இனப்பிரச்சினையானது, சிறுபான்மை மனநிலையையுடைய பெரும்பான்மைக்கும், பெரும்பான்மை மனநிலையையுடைய சிறுபான்மைக்கும் இடையிலான மோதல் என்று விளிக்கிறார். இதில் இரண்டு விடயங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. முதலாவது, ‘சிறுபான்மை மனநிலையையுடைய பெரும்பான்மை’. இரண்டாவது, ‘பெரும்பான்மை மனநிலையையுடைய சிறுபான்மை’. இரண்டாவது விடயம், கொஞ்சம் சிக்கலானது. இலங்கைத் தமிழர்கள் கொலனித்துவக் காலத்தில், ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக்கொண்டு, அவர்களது இனவி…
-
- 1 reply
- 664 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தின் கரிநாள்! மாற்று வடிவங்களில் தொடரும் இனவழிப்பு - ஜெரா இலங்கையானது விநோதமான முறைகளில் எல்லாம் இனவழிப்பு செய்யும் நாடாக அறிமுகப்பட்டிருக்கிறது. ஓரினத்தை முற்றாக அழிப்பதற்குத் திட்டமிடும் அரசுகள், பல்வேறு படிமுறைகளை செயற்படுத்துகின்றன. தரப்படுத்தல் மாதிரியான வடிகட்டல் முறைமைகளை நடைமுறைப்படுத்துவது, கலவரங்களை ஏற்படுத்தி சொத்தழிப்பு செய்வது, பொருளாதார ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்துவது, அச்சுறுத்தலை ஏற்படுத்தி தாய்நிலத்தை விட்டுப் புலம்பெயரச் செய்வது, குறித்தவோர் இனத்தை எல்லாவகையிலும் நலிவுறச் செய்தபின்னர், குண்டுகளை வீசி கொன்றொழிப்பது, அதிலும் ஆண்களை இலக்கு வைத்து அந்த இனக்குழுமத்தின் ஆண்களை இல்லாமல் செய்வது போன்ற நடவடிக்கைகள் இனவழிப்புச் செயற்ப…
-
- 0 replies
- 669 views
-
-
வெளிப்படையான இனத்துடைப்பு உலகம் என்ன செய்யப்போகிறது? 129 Views ஈழத் தமிழர்கள் மீதான முள்ளிவாய்க்கால் இனஅழிப்புச் செயற்பாட்டின் 12ஆவது ஆண்டு தொடக்கம் பெற்றதும் பெறாததுமாக 08.01.2021 இல் இன்றைய சிறீலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் 2018 முதல் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டு எல்லாத் தமிழர்களதும் போற்றுதலுக்குரியதாகத் திகழ்ந்து வந்த முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுத்தூபியை தனது ஏவலாளார்களான யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் இன்றைய துணை வேந்தரதும் நிர்வாகக் குழுவினதும் துணை கொண்டு இடித்துத் தள்ளி இனத்துடைப்புச் செய்துள்ளது. 10.01.1974இல் நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை வன்முறைப்படுத்தி ஈழத்தமிழ் மக்கள் மீது பண்பா…
-
- 0 replies
- 392 views
-
-
-
- 0 replies
- 817 views
-
-
இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு அரசியல்- இந்தியாவும் 13 ஆவது திருத்தச் சட்டமும் இலங்கை அரசுக்கு ஈழத்தமிழர்கள் தொல்லை கொடுக்கக் கூடாதென்பது இந்தியாவின் நிலைப்பாடு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு (Maritime Domain Awareness--MDA) நடவடிக்கைகளை சில நாட்களுக்குள் இலங்கை ஆரம்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கின்றார். இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சனைக்குத் தீர்வாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட 1…
-
- 0 replies
- 476 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பு –சிங்கள பௌத்த அரசு தனது நிகழ்ச்சி நிரலில் இருந்து மாறவில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது-தமிழர் மரபுரிமை பேரவை Digital News Team சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி, பல்கலைக்கழக நிர்வாகம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை ஜனவரி 8ம் திகதி இரவோடிரவாக இடித்து அழித்துள்ளது”. பின்முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுத் தளத்தில் சிங்கள அரசியல் சொல்லாடலை பயங்கரவாதத்தின் மீதான வெற்றி என்று கூறி தமிழினப் படுகொலையை மறுத்து வந்துள்ளது. இன்று பதினொரு வருடங்கள் முடிந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்றுவதென்பது அரசின் ஒத்த அரசியல் சொல்லாடலை தக்க வைப்பதோடு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைய…
-
- 0 replies
- 387 views
-
-
கட்சிகள் பிணக்குறும் இன அழிப்புக்கான விசாரணைக் கோரிக்கைகள் இரண்டும் முரண்பாடானவையா ஒத்திசைவானவையா? 23 Views எதிர்வரும் மனித உரிமைச் சபையின் அமர்வை நோக்கித் தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் எவ்வாறு முன்வைக்கப்படவேண்டும் என்ற விடயம் குறித்துத் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களின் உந்துதலில் தேர்தல் அரசியலில் தமிழ்த்தேசிய நிலைப்பாடு கொண்டவையாகத் தம்மை வெளிப்படுத்தும் மூன்று அணிகளும் அவற்றில் பங்குபெறும் கட்சிகளும் ஒன்றிணைந்து கோரிக்கைகளைத் தயாரிப்பதற்கான பேச்சுக்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. முதலாவதாக, இன அழிப்புக்கான விசாரணை என்பது தமிழர் தரப்பால் கோரப்படவேண்டும் அல்லது அதுவே அனைத்துக்குற்றங்களுக்குள்ளும் முக்கியத்துவப…
-
- 0 replies
- 615 views
-
-
ஜேர்மனியின் வீழ்ச்சிக்கு பிறகு பதைபதைக்க வைக்கும் செய்திகள் பல ஒவ்வொன்றாக வெளிவந்தன. வதை முகாம்கள் பற்றி. இறைந்து கிடக்கும் யூதர்களி்ன் சடலங்கள் பற்றி. சிறைகளில் எலும்பும் தோலுமாக கிட்டத்தட்ட விலங்குகளைப் போல் சுருண்டு படுத்திருந்த யூத கைதிகள் பற்றி, யூத இனவொழிப்பு பற்றி. அதுவரை யூத ஒழிப்பை ஜேர்மனியின் உள்நாட்டு பிரச்சனைகளில் ஒன்றாகவே மேற்குலகம் கருதி வந்தது. ஜுலை 23,1944 அன்று சோவியத் போலந்தில் உள்ள Majdanek என்னும் வதை முகாமை முதல் முதலாக கண்டுபிடித்தபோது அதிர்ச்சியடைந்தது ஐரோப்பா. பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் படைகள் மேலும் சில முகாம்களை பின்னர் விடுவித்தனர். ஹிட்லரின் இனவழிப்பு பற்றி ஐரோப்பா முழுமையாக தெரிந்து கொண்டது. இவரையா ரைம் பத்திரிகை 1938ன் தலைசிறந்த மனிதரா…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழரசுக் கட்சி இடறிய இடத்தில் வெற்றிபெற்ற மணிவண்ணன் -புருஜோத்தமன் தங்கமயில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக, விஸ்வலிங்கம் மணிவண்ணன், டிசெம்பர் 30ஆம் திகதி தெரிவானார். மேயருக்கான போட்டியில், முன்னாள் மேயரான இம்மானுவேல் ஆர்னோல்டை, ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்திருந்தார். 2020ஆம் ஆண்டின் இறுதியில், அப்போதைய மேயர் ஆர்னோல்ட் சமர்ப்பித்த 2021ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம், இரண்டு தடவைகளும் தோற்கடிக்கப்பட்டது. அதனால், அவர் பதவியிழக்க வேண்டி வந்தது. குறிப்பாக, வரவு-செலவுத் திட்டத்தின் குறைநிறைகள் தாண்டி, ஆர்னோல்ட் மேயர் பதவிக்குத் தகுதியானராகத் தன்னை, கடந்த மூன்று ஆண்டுகளிலும் நிரூபிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே, தமிழ்த் தேசிய ம…
-
- 0 replies
- 573 views
-
-
ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்பமிட்ட வணிக இணக்கப்பாடு: இதன் உள்ளடக்கம் என்ன? – தமிழில் ஜெயந்திரன் 112 Views இருபத்தேழு நாடுகளைக் கொண்டதும் பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாகவும் விளங்குகின்ற ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னதாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்புகளையும் சார்ந்த பிரதிநிதிகள் இறுதியாக ஒரு வணிக ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டிருக்கிறார்கள். இவ்வாறாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்த காலத்துடன் ஒப்பிடும் போது, வணிகச் செயற்பாடுகள் உரிய…
-
- 0 replies
- 925 views
-