அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சொற்களில் சூட்சுமம் ஆயினும் சுயநிர்ணய உரிமை, பகிரப்பட்ட இறையாண்மை, பகிர்ந்தளிக்கப்படுகின்ற அதியுச்ச அதிகாரங்களைக் கொண்ட சமஷ்டி ஆட்சி முறை என்பவற்றை உள்ளடக்கியதாகவே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்று மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது. அரைகுறையான தீர்வை ஏற்றுக் கொள்ளமாட்டோம். அந்த வகையில் தமிழ் மக்களை ஏமாற்றமாட்டோம். தமிழ் மக்களை விற்கவும் மாட்டோம். அரைகுறை தீர்வை ஏற்றுக்கொண்டு யாருக்கும் விலைபோகவும் மாட்டோம் என்று கூட்டமைப்பின் தலைமையும், தமிழரசுக் கட்சியும் மக்கள் மத்தியில் சூளுரைத்து வருகின்றது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியானது சொற்களில் சிக்கித் …
-
- 0 replies
- 482 views
-
-
மீண்டும் ரணில் - என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan இவன் முடிந்துவிட்டான் என்று நினைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் ஓர் அசகாயசூரனாக, ரணில் விக்ரமசிங்ஹ மீண்டுமொருமுறை பிரதமராக பதவியேற்றிருக்கிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பில் போட்டியிட்ட ரணில், ஐக்கிய தேசியக் கட்சி ஆசனம் எதனையும் வெல்லாத நிலையில் தோல்வியடைந்திருந்தார். தனது அரசியல் வரலாற்றில் பாராளுமன்றம் செல்லாது ரணில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பம். அதோடு ரணில் ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு, அவர்கள் நாடு பூராகவும் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்தது. அதற்கு யாரை நியமிப்ப…
-
- 0 replies
- 386 views
-
-
-
- 0 replies
- 688 views
-
-
வாக்காளர்களர்கள் என்ன செய்ய வேண்டும்? உள்ளூராட்சிமன்றத் தேர்தல் என்பது ஆட்சிமாற்றத்தை உடனடியாக ஏற்படுத்தக்கூடிய தேர்தல் அல்ல. ஆனால் ஆட்சியில் இருக்கின்ற கட்சிகளுக்கு தாம் எந்த இடத்தில் இருக்கின்றோம். கடந்த மூன்று வருடங்களாக தாம் முன்னெடுத்துவந்த திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா? இல்லையா என்பது தொடர்பான மதிப்பீட்டை கட்சிகள் செய்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி எதிர்த்தரப்பில் இருக்கின்ற அரசியல் கட்சிகளும் தாம் முன்னெடுத்து வருகின்ற அரசியல் செயற்பாடுகள், ஆர்ப்பாட் டங்கள், எதிர்ப்பு போராட்டங்கள் என்பவற்றை பொதுமக்கள் ஏற்றுக்கொள்கின்றனரா? இல்லையா என்பது தொடர் பான ஒரு மதிப்பீட்டை …
-
- 0 replies
- 561 views
-
-
அரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய் “இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல், பொருளாதார விவகார அமைச்சின் ஊடாக, தலா 20 மில்லியன் ரூபாய் நிதி இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த குற்றச்சாட்டே இதன் அடிப்படை. வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு. அண்மையில், …
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும் சிவப்புக் குறிப்புகள் சுதந்திர இலங்கையின் வயது, 70 ஆண்டுகளை அடைந்துள்ள நிலையில், சுய விமர்சனங்களின்றி, தன்னைத் தானே அது மீளக்கட்டியெழுப்ப முடியாது. சிங்கள - பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என, இரண்டு சக்திகளுக்கு நடுவில் நாம் வாழும் நிலையில், அவ்வாறான சுய விமர்சனத்துக்கான தூண்டல், எங்கிருந்து வரும்? தமிழ் இடதுசாரிகளின் பிரதிபலிப்பான எழுத்துகள் எழுச்சியடைவதைக் கண்டு நான், சிறிய நம்பிக்கையொன்றைக் காண்கிறேன். ஜனநாயக அரசாங்க மாற்றமொன்று, 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பின்னர், பல்வேறான நல்லிணக்க முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டாலும், கடந்த காலம் பற்ற…
-
- 0 replies
- 558 views
-
-
சந்தேகங்கள் நிலவும் வரை நல்லிணக்கம் ஏற்பட வழியில்லை. அதனால் நல்லிணக்கம், நல்லுறவுக்கு நிலவும் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். தமிழ்பேசும் மக்களான தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மத்தியிலே இணக்கத்திற்கு தடையாயிருப்பது ஒருசாரார் மீது மறுசாரார் கொண்டுள்ள சந்தேகமே. ஒருசாராரது உரிமைகளை மறுசாரார் பறித்து விடுவார்களோ, தடுத்து விடுவார்களோ, ஏமாற்றி விடுவார்களோ, நம்பிக்கைத்துரோகம் செய்து விடுவார்களோ என்ற சந்தேகமே இன்று உறவுக்குத் தடையாயிருக்கின்றது. கடந்த கால நிகழ்வுகள் இவ்வாறான சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கின்றன. இவ்வாறான சந்தேகங்கள் நிலவிவருவது வரலாற்று நிகழ்வுகளைத் தெளிவாக அறியாமையே என்பது கண்டறியப்படுகின்றது. இனங்களுக்கிடையே நல்லுறவு ஏற்பட்டால் நாட்டில், சமூகத்தில் நல்லுறவு மட்ட…
-
- 0 replies
- 553 views
-
-
வெடுக்குநாறி மலையும் தையிட்டி விகாரையும்! நிலாந்தன்! வெடுக்குநாறி மலையில் மீண்டும் பூசைகள் தொடங்கியுள்ளன.இது நீதிமன்றத்தில் சுமந்திரனுக்கு கிடைத்த வெற்றியாக அவருடைய ஆதரவாளர்களால் கொண்டாடப்படுகின்றது.அதேசமயம் அவருடைய அரசியலை விமர்சிப்பவர்கள் அதை வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றார்கள். “ஒரு வழக்கில் எதிரி தரப்பு ஆட்சேபனை இல்லை என்றால் அந்த வழக்கில் வழக்காளி தரப்பு தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெறுவது சட்டத்தரணியின் திறமையினால் அல்ல.வெடுக்குநாறி மலையில் தொல்பொருள் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்காதபோது அதற்காக ஆணையைப் பெற்றதை சிலர் வெற்றியாக காட்ட முனைகின்றார்கள். அந்த திணைக்களத்திற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அது சரி, திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கர…
-
- 0 replies
- 836 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எதிரான சக்திகளை மேலும் வலுப்படுத்தும் ஜனாதிபதியின் அணுகுமுறைகள் Veeragathy Thanabalasingham on August 17, 2023 Photo, THE TIMES OF INDIA இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கு அது நடைமுறையில் இருந்துவரும் நான்கரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட இருபதுக்கும் அதிகமான திருத்தங்களில் வேறு எதுவும் 13ஆவது திருத்தம் போன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியது இல்லை என்று இந்தப் பத்தியில் ஏற்கெனவே சில தடவைகள் குறிப்பிட்டிருந்தோம். கடந்த வருடம் நடுப்பகுதியில் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வைக் காணப்போவதாகக் கூறிக்கொண்டு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப…
-
- 0 replies
- 267 views
-
-
இலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை Ahilan Kadirgamar / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, பி.ப. 04:00 Comments - 0 இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா? அல்லது இருபெரும் கட்சிகளுக்கிடையிலான மோதலா? அல்லது ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான சட்டரீதியான குழப்பமா? நான் இந்த நெருக்கடியை ஒரு வரலாற்று ரீதியிலான அரசியல், பொருளாதார காரணிகளின் விளைவாகப் பார்க்கின்றேன். சோகக்கதையும் கேலிக்கூத்தும் மாக்ஸினுடைய பலவிதமான எழுத்துகள் மத்தியில், அரசியல் சம்பந்தமான மிகவும் முக்கியமான படைப்பாக The Eighteenth Brumaire of Louis Bonaparte (லூயி போனபார்ட்டினுடைய பதினெட்டா…
-
- 0 replies
- 740 views
-
-
இனப்படுகொலை: சர்வதேச சட்டமும் அதன் பொருந்துத்தன்மையும் Editorial / 2019 மே 13 திங்கட்கிழமை, மு.ப. 07:00 Comments - 0 ஜனகன் முத்துகுமார் சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகள், இனப்படுகொலை என்பது ஒரு இன, மொழி, மத சார்பான மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கவேண்டி, அவ்வாறாக அழிக்கும் நோக்கத்துடன் கட்டவிழ்க்கப்படுகின்ற வன்முறை என விளிக்கின்றன. இனப்படுகொலை தொடர்பான எண்ணக்கரு முதல் முதலில் 1944 இல் ராபியேல் லெம்கின் Axis Rule in Occupied Europe எனும் நூலில் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக இது இரண்டாம் உலகப்போரின் போதான ஹோலோகாஸ்ட் (Holocaust) இனப்படுகொலையை சித்தரிக்க பயன்பட்டிருந்தது. லெம்கின் இனப்படுகொலையை தனத…
-
- 0 replies
- 1k views
-
-
ரணிலின் நகர்வுகள்? - யதீந்திரா இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கான வீட்டுவேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதன் முதல்கட்டமாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் இறுதிக்கட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு மற்றும் நிசங்க உடலகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள் அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்பித்திருக்கின்றார். இங்கு பேசிய ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. மேற்படி அறிக்கைகளை சமர்பித்து பேசுகின்ற போது, முன்னாள் ஜனாதிபதி மகிந…
-
- 0 replies
- 386 views
-
-
அண்மையில் அறுகம் குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது. இந்நிலையில், அறுகம் குடா உள்ளிட்ட பல உல்லாச பயணிகளுக்கான விடுதிகளுக்கும் கூட தற்போது பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானமானது பெருமளவு உல்லாச பயணிகளின் வருகையிலேயே தங்கியிருக்கின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில சுற்றுலா தளங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் டொலரின் வருமானம் பாதிப்புக்குள்ளாகுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறிருக்கையில், அரசாங்கத்திலுள்ள அதிகாரிகளுக்கு குறித்த அச்சுறுத்தல…
-
- 0 replies
- 478 views
- 1 follower
-
-
எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு sudumanalNovember 13, 2023 கீழைத்தேய பண்பாட்டு கட்டமைவுள் உணர்வுசார் அல்லது உணர்ச்சி சார் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிவதுண்டு. அது மனிதப் பெறுமதி கொண்ட பண்பாற்றலாகும். அதேநேரம் இது அரசியல் தளத்தில் உணர்ச்சிவாத அரசியலுக்கு (emotional politic) சாதகமானதாக அமைந்து, அறிவை பின்னுக்குத் தள்ளுகிற செயற்பாட்டை நிகழ்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் 70 களிலிருந்து இதற்குள் அகப்பட்டு சுழன்றிருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது. எமது அறிவை மீறி இன்றைய என்பிபி அலையினுள் எமது உணர்ச்சிவாத அரசியல் மூழ்கிப் போயிருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பருண்மையாக இங்கு சிங்கள மக்கள், வடக்க கிழக்க…
-
- 0 replies
- 349 views
-
-
சிங்கள தேசம் தனக்கான தலைவரை தேடும் தேர்தல் பரிட்சையில் இறங்கிவிட்டது. இதனை தேர்தல் போட்டி என்று கூறாமல் பரிட்சை என்று கூறுவதற்கும் ஒரு தெளிவான காரணமுண்டு. தமிழர்கள்தான் ஜனாதிபதி தேர்தலை ஒரு போட்டியாக கருதுகின்றனர். ஆனால் சிங்கள தேசமோ ஒவ்வொரு முறையும் தான் எதிர்கொண்டிருக்கின்ற புதிய சவால்களை வெற்றிகொள்ளுவதற்கான ஒரு உபாயமாகவே ஜனாதிபதி தேர்தல்களை பயன்படுத்திக்கொள்கின்றது. தங்களுக்கென ஒரு புதிய முகத்தை தெரிவு செய்வதன் ஊடாக, அதுவரை தாங்கள் எதிர்கொண்டுவந்த சவால்கள் அனைத்தையும் ஓரு பாய்ச்சலில் வெற்றிகொள்ளுகின்றது. வெளித்தோற்றத்தில் இது போட்டியாகவே தெரியும் ஆனால் உண்மையில் இது ஒரு போட்டியல்ல மாறாக, ஒரு சிங்கள ஆளும் வர்க்கத்தின் அஞ்சல்ஓட்டப் போட்டி. ஆனால் இந்த அஞ்சல் ஓட்டத்தின் தன…
-
- 0 replies
- 508 views
-
-
தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் அநேகமாக இந்தப் பத்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலொன்றுக்கான தினத்தை அறிவிக்கும் வர்த்தமானி வெளியாகி இருக்கக்கூடும். இல்லா விட்டாலும், அடுத்து வரும் நாள்களில் அது நடக்கும். ‘ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் அணிதான், அடுத்து அமையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும்’ என்கிற பொதுவான நம்பிக்கையொன்று இருக்கத்தக்கதாக, ‘பொதுத்தேர்தல்’ எனும் போட்டியில் களமிறங்குவதற்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்…
-
- 0 replies
- 518 views
-
-
பேனா போராளிகள் மரணிப்பதில்லை; விதைக்கப்படுகின்றனர்; மீண்டும் எழுவர்! நடேசா நீ இன்று எம்மிடம் இல்லை. 2004 மே 31ஆம் திகதி நீ மரணித்து விட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் நீ மரணித்ததாக நானோ உன்னை நேசிக்கின்ற நண்பர்களோ நம்புவதற்குத் தயாராக இல்லை. நீ இன்னும் எம்முடன் இருப்பதாகவே நினைக்கின்றோம். உணர்கின்றோம். ஆனால் நெஞ்சு கனக்கின்றது. மீண்டும் துயில் எழுந்து வர மாட்டாயா என மனம் ஏங்குகின்றது. உன்னுடன் பழகிய நாட்கள் பசு மரத்தாணி போல் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ளது. ஆனால் அந்த இறுதிக் கணம். நீ என்னைச் சந்தித்தது இன்னும் என் கண் முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றது. இறுதியாக நான் உன்னைச் சந்தித்த போது உன்னில் காணும் வழமையான கலகலப்பு பேச்சு இவை அனைத்தையும் தொலைத்து விட்டு …
-
- 0 replies
- 464 views
-
-
உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்? அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை. சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் அபிலாஷைகளுக்கும்…
-
- 0 replies
- 351 views
-
-
பான் கீ மூன்: செயற்கரிய செய்யார் பெரியர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ திக்விஜயங்கள் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்களுக்காக நிகழ்வதில்லை. ஆனால், அவை பெறும்; கவனமும் ஊடக ஒளியும் அவற்றை முக்கியப்படுத்துகின்றன. நிகழும் அனைத்து விஜயங்களும் திக்விஜயங்கள் அல்ல என இங்கு நினைவுறுத்தல் தகும். கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் இலங்கை வருகை சர்வதேச கவனத்தைப் பெற்றது. தனது நீண்ட ஆசியப் பயணத்தின் ஓர் அங்கமாக அவர் இலங்கைக்கு வந்தது தற்செயலல்ல. எவ்வாறாயினும் உலகளாவிய பெருமன்றமாகிய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் என்ற வகையில் அவரது ஆசிய சுற்றுப்பயணத்தை திக்விஜயமாகவே கொள்ளத் தகும்;. இவ்வாண்டுடன் தனது பதவிக் காலம்…
-
- 0 replies
- 546 views
-
-
உரிமைப் போராட்டப் பாதையில் தமிழ் கட்சிகளின் ஐக்கியம்.! - நா.யோகேந்திரநாதன் தியாகி திலீபனின் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டமை உட்படத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடந்த 28ஆம் நாளன்று தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்திய உண்ணாவிரதப் போராட்டம், ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் அழைப்பை ஏற்று 28ஆம் திகதி வடக்குக் கிழக்கெங்கும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான ஹர்த்தால் என்பன மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்நடவடிக்கைகளையடுத்து தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றுகூடி அடுத்த கட்ட நகர்வு பற்றி ஆலோசனை நடத்தியதுடன் தொடர்ந்த…
-
- 0 replies
- 382 views
-
-
பறிபோகும் நம்பிக்கை நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக் கொள்கின்ற மைத்திரிபால சிறிசேன- –ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம், இரண்டு ஆண்டுகாலப் பதவிக்காலத்தில் உச்சக்கட்ட சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. யாருடைய ஆதரவுடன் இந்த அரசாங்கம் ஆட்சியில் ஏற்றப்பட்டதோ, அவர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது. முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டவை எவையெல்லாம் தவறு என்று சொல்லிக் கொண்டார்களோ அதையெல்லாம் தான் இந்த அரசாங்கமும் செய்கின்றது. இதுதான் அரசாங்கத்தின் இப்போதைய பரிதாப நிலைக்குக் காரணம். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற போது, நல்லா…
-
- 0 replies
- 423 views
-
-
உலகின் மகா கூட்டு ! (அமெரிக்கா + இந்தியா OUT) அ. நிக்ஸன்
-
- 0 replies
- 751 views
-
-
எதிர்பார்ப்பு நிறைவேறுமா ? இலங்கை தேசியத் தலைமைகள் ஒரு நிரந்தரமான முடிவைக் காணவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் அவர்கள் முன்னே கொண்டு வரப்பட்டிருக்கிறது தேசியப் பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் பொறிமுறை எவ்வாறு அமையப் போகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டிய கால நெருக்கடியொன்று உருவாகியுள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றமுறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நாம் ஒன்று நினைக்க அரசாங்கம் ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறதே என்ற சொற் போரிலேயே இன்று அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் நகர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசியல் சாசனம் தமிழ் மக்களு…
-
- 0 replies
- 316 views
-
-
எம்.சி.சி. ஒப்பந்தம் ரத்தானது ஏன்? வேறொரு வடிவில் அல்லது இலங்கை கேட்கின்ற வேறு விடயதானங்களுக்கு அமெரிக்கா விட்டுக் கொடுக்கக்கூடிய ஏது நிலையும் உண்டு 0 அ.நிக்ஸன் திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு செய்யவிருந்த ஒப்பந்தத்தைக் கடந்தவாரம் ரத்துச் செய்துள்ளது. 480 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையோடு இணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியா…
-
- 0 replies
- 1k views
-
-
நல்லிணக்கப் பொறிமுறை நம்பகம் பெறுமா? நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவிருந்த போதிலும், கடைசி நேரத்தில் அந்த நிகழ்வு பிற்போடப்பட்டது. இந்த அறிக்கை ஜனவரி 3ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும், அதற்கான வாய்ப்புக் கிடைக்காது போனால், ஜனவரி முதல்வாரத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணி கூறியிருக்கிறது. கலாநிதி மனோகரி முத்தெட்டுவேகமவை தலைவராகவும், கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்துவை செயலாளராகவும் கொண்ட- மூவினங்களையும் பிரத…
-
- 0 replies
- 350 views
-