Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரசியல் பேய்க்காட்டல் பெரும்பாலான அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தம்மை அதீத புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி, தாங்கள் முற்றுமுழுதாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று காட்டிக் கொள்ளவும் முனைகின்றனர். இந்த அதிமேதாவித்தனம், அநேக சந்தர்ப்பங்களில் வேண்டாத விளைவுகளுக்கு இட்டுச் சென்று விடுகின்றன. தமது பிழையான நகர்வுகளையும் முட்டாள்தனமான முடிவுகளையும் எவ்வாறு நியாயப்படுத்தலாம்? மக்களை எவ்வாறு பேய்க்காட்ட முடியும்? எனத் தெரிந்து வைத்திருப்பதுதான், இன்றைய நிலையில் உயர்ந்தபட்ச அரசியல் சாணக்கியமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. முஸ்லிம், தமிழ் அரசியலில் மட்டுமன்றி, பெருந்தேசிய அரசியலிலும் இதுதான் நிதர்சனமாக இருக்கின்றது. தேர்தல் காலத்தில், …

  2. யாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி அரசியற்சட்ட யாப்பில் 19 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு 20 ஆவது திருத்தத்தைப் புகுத்தி இறுதியில் ஒரு புதிய யாப்பையே உருவாக்கும் முயற்சி நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் மிகத்துரிதமாக நடைபெறுகின்றது. இந்தத் திருத்தங்களின் இன்னோர் அங்கமாக, சிறுபான்மை இனங்களின் நலன்கருதி இந்தியா கொடுத்த அழுத்தங்களினால் நுழைக்கப்பட்ட 13ஆவது திருத்தமும் ஒரு சாறற்ற சக்கையாக மாற்றப்படுவது உறுதி. ஆனாலும், 20 ஆவது திருத்தம் சட்டமாதவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதிலே சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் எதிரணியில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளின் அங்கத்தவர்கள் இம்மாற்…

  3. தமிழர் இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும்.! உலகமக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலகமக்கள் தொகையானது 7,024,000,000 அதாவது ஏழு பில்லியன் பேர் என்று ஐக்கியநாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு உலகமக்கள் தொகை 7,716,834,712. கடந்த பத்து ஆண்டுகளில் 700 மில்லியன் கூடி இருக்கிறது. 2050ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன்வரை கூடிச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகின் பிறப்புக்கள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்தது. 2010ஆம் ஆண்டுகளில் 140 மில்லியன் என்ற அளவில் குறைந்து இருக்கிறது. மக்கள் தொ…

  4. தமிழர்களும் ‘மலசலகூட’ அரசியலும் தனது டுவிட்டர் ஊடகக் கணக்கினூடாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் மலசலகூடங்களை அமைப்பதற்கான நிதியுதவி கோரி காணொளியொன்றை அண்மையில் வௌியிட்டிருந்தார். அந்த கிராமத்துக்கே வெறும் இரண்டே இரண்டு மலசலகூடங்களே இருப்பதால் அம்மக்கள் பெரும் அவதிக்கும், சுகாதார சீர்கேட்டுக்கும் முகங்கொடுப்பதாக கோடிகாட்டிய அவர், குறைந்தது 10 புதிய மலசலகூடங்கள் கட்டுவதற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியைக் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை அவர் வைத்ததன் பின்னர், இதற்கான எதிர்வினைகள் பல்வேறுபட்டனவாக இருந்தன. சிலர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக “நல்லாட்சி அரசாங்கத்துக்…

  5. அரசின் வாக்குறுதியை நம்பத் தயாரில்லை : விரக்தியின் விளிம்பில் சர்வதேசம்! -கார்வண்ணன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு பிரதான அனுசரணை வழங்கிய நாடுகள், அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறைகளின் மீது நம்பிக்கையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டன. கடந்தவாரம் தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடரில், நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த தமது அறிக்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரும் அதே கருத்தை தான் வெளியிட்டிருந்தார். இலங்கை தொடர்பாக, புதிய கவனத்தை செலுத்த வேண்டும் என்று அவர் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரியிருந்தார். அதற்குப் பின்னரே, இணை அனுசரணை நாடுகளின் சார்பில் உரையாற்றிய…

  6. இறுகும் இராணுவப் பிடி..! -சுபத்ரா வடக்கை மீண்டும் இராணுவப் பிடிக்குள் கொண்டு வரும் அடுத்த கட்டத்துக்குள் அரசாங்கம் நகர்ந்திருக்கிறது. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் ஓரளவுக்கு திறக்கப்பட்ட ஜனநாயக வெளியை மீண்டும் அடைப்பதற்கான நகர்வாகவே இது அமைந்துள்ளது. தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களின் மூலம் பொலிசார் தடை உத்தரவுகளைப் பெற்று, நிகழ்வுகளை முழுமையாகத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு இதுபோன்ற இறுக்கமான கெடுபிடிகளைக் கையாளுவது ஒன்றும் புதிய விடயமில்லை. 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங…

  7. விக்கினேஸ்வரன் வழங்க வேண்டிய தலைமைத்துவம்? - யதீந்திரா தமிழ் அரசியல் சூழலைப் பொறுத்தவரையில் இப்போது அதிகம் பேசப்படும் ஒரு அரசியல் தலைவராக விக்கினேஸ்வரன் தெரிகின்றார். வழமையாக ஊடகங்கள் மத்தியில் அடிக்கடி பேசப்பட்ட சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் சற்று பின்னுக்கு சென்றுவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து சுமந்திரன் அதிகமாகப் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஒரு வேளை தான் அதிகம் பேசியதால்தான் தேவையில்லாத சர்ச்சைகளுக்குள் அகப்படவேண்டியேற்பட்டது என்பதை அவர் உணர்ந்திருக்கலாம் – அல்லது, இப்போது பேசுவதற்கு எதுமில்லையென்றும் சுமந்திரன் கருதியிருக்கலாம். ஏனெனில் சுமந்திரனின் அரசியல் அணுகுமுறைகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. சுமந்திரனின் தோல்வியெ…

  8. ராஜபக்ஷக்கள் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் அளித்திருந்த உறுதிமொழிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; சுமந்திரன் நேர்காணல் போருக்குப் பின்னரான தசாப்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களை பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஆறு இடங்களை இழந்திருக்கிறது. பாராளுமன்றில் கூட்டமைப்பின் இருப்பு பலவீனமடைந்து, ராஜபக்ஷக்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள நிலையில், அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகால கோரிக்கைக்கான வாய்ப்புகள் என்ன? கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யுமான…

  9. லியோ நிரோஷ தர்ஷன்) "மனித உரிமைகளுக்கான மதிப்பு, ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிப்பதை இலக்காக் கொண்ட முயற்சிகளுக்கு ஒத்தழைத்தல் என்பதன் பின்னணியிலேயே இலங்கையுடனான எமது பாதுகாப்பு உறவை முகாமைத்துவம் செய்கிறோம். " இந்தோ-பசுபிக் பிராந்திய உறவில் இலங்கையின் இருப்பிடத்தை பிரதிபலிக்கும் மற்றும் இந்த தனித்துவமான நிலை வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் இலங்கையின் பிராந்திய தொடர்புக்கான தமது நோக்கத்தை இலங்கை தலைவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசிய பொது இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதி செயலர் ஹெனிக் ஜொனதன் தெரிவித்தார். பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு பங்களிப்புச் செய்வதற்…

  10. “சீனாவின் உலகளாவிய விரிவாக்கமும் - இலங்கையின் வெளியுறவில் ஏற்பட்டுள்ள சவாலும்” சீனாவின் அரசியல் பொருளாதார இராணுவ பலம் பற்றிய அமெரிக்காவின் அறிக்கையிடல் அதிக நெருக்கடியான உலக அரசியல் தளத்தை தந்துள்ளது. அமெரிக்க உலக நாடுகளை நோக்கி சீனா இராணுவ கட்டமைப்பினை ஏற்படுத்துவதென்பது அமெரிக்காவுக்கு எதிரான முனையங்களை நோக்கியதாகவே தெரிவதாக குறிப்பிட்டுள்ளது. பென்டகனின் அறிக்கையிடல் உலகளாவிய அரசியல் ஒழுங்கின் மீதான அமெரிக்காவின் அக்கறையைக் காட்டுவதுடன் சோவியத் யூனியனுக்கு பின்பு அமெரிக்காவுக்கு எதிரான உலக ஒழுங்கினை எப்படித் தடுப்பதென்ற உத்தியுடன் அமைக்கப்படுவதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் சீன அமெரிக்க் மோதல் அதிகரிக்கும் போது இலங்கை சீன உறவு எத்தகைய போக்கினையு எதிர் கொள்ளும்' என்…

  11. சிறுபான்மையினரை துண்டாடும் சதி! -சத்ரியன் நாடாளுமன்றத்தில் பெற்றுக் கொண்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, தலைகால் புரியாமல் ஆடத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம். மாகாணசபைகளை இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி நிரல் அதில் முதலாவது. தற்போதுள்ள மாகாண சபைகளுக்குப் பதிலாக புதியதொரு நிர்வாக அமைப்பை உருவாக்க முனைவது இரண்டாவது. இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அடையாளம், தனித்துவத்தை முற்றாக இல்லாதொழிப்பதில், சிங்கள பௌத்த பேரினவாதம் மிக சூட்சுமமாகத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. காலத்துக்குக் காலம் ஒவ்வொரு தரப்புகள் அதற்கென தலையெடுக்கின்றன. தலைமை தாங்குகின்றன. தமிழரின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதில், சிங்கள பௌத்த பேரினவாதிகள் ஒன்றுபட்டு செ…

  12. முன்னணிக்குள் வந்த முட்டுப்பாடு - கபில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் அண்மையில் நடந்து வரும் சம்பவங்கள், பொதுத் தேர்தலில் கிடைத்த இரண்டு ஆசனங்கள், அந்தக் கட்சிக்கு வெற்றியாக அமைந்திருக்கிறதா அல்லது குழப்பத்தைக் கொடுத்திருக்கிறதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், கட்சிக்குள் கலகம் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளில் இருந்த சட்டத்தரணி மணிவண்ணன், முதலில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர், அவரது உறுப்புரிமையும…

  13. பிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன? – நஜீப் பின் கபூர் இந்தக் கட்டுரையை நாம் எழுதி நிறைவு செய்கின்ற நேரத்தில் 20 தொடர்பில் புதிய பல அதிரடித் தீர்மானங்களுக்கு அரசு வந்திருக்கின்றது. அதனால் பிரதமர் நியமித்த குழுவால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அவர்களது எந்த சிபார்சுகளும் அதில் உள்வாங்கப்படவில்லை. அது எப்படி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதோ அதே போன்று தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது என்று ஆளும் தரப்பினர் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்கள். எனவே ஜனாதிபதி விரும்பியவாறுதான் அது தற்போது பாராளுமன்றத்துக்கு விரைவில் வருகின்றது. திருத்தங்கள் இருப்பின் அங்கே பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி கடும் தெனியில் கட்டளை போட்டதால் பிரதமர் …

  14. விழிப்புடன் செயற்படும் சிங்களத் தலைவர்களும் உறங்கியபடி கனவுகாணும் தமிழ்த் தலைவர்களும் – மு.திருநாவுக்கரசு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் உள்நாட்டுரீதியாகவும் , அண்டை நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய அரசியல் ரீதியாகவும் பாரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கம் கடைப்பிடிக்க உள்ள உள்நாட்டு — வெளிநாட்டு கொள்கைகள், மற்றும் அவர்கள் மேற்கொள்ளவுள்ள நிலைப்பாடுகள் என்பன இலங்கை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. இப்பின்னணியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாக இறுக்கமான நிலைப்பாடுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் துல்லியமாக உள்ளன. இலங்கை — சீனா — பாகிஸ…

  15. சண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம கலாநிதி சரத் அமுனுகம கம்யூனிஸ்ட் தலைவரும் தத்துவவாதியும் தொழிற்சங்கவாதியுமான என்.சண்முகதாசனின் பிறந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு அவரின் வாழ்வு மற்றும் பணிகள் மீது கவனத்தை ஈர்த்தமைக்காக “சண்டே ஐலண்ட்” பத்திரிகையின் வாசகர்கள் கலாநிதி தயான் ஜயதிலகவிற்கும் அதன் பிரதம ஆசிரியர் மெனிக் டி சில்வாவிற்கும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனது அனுபவத்தில் நான்கு தமிழ் மார்க்ஸியவாதிகள், சிறுபான்மைச்சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்றாலும்கூட அவர்கள் அங்கம் வகித்த மார்க்ஸிய கட்சிகளினால் அவற்றின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்திற்கு உரியவர்களானார்கள். ஆனால், அவர்களது இறுதியான அரசியல்கதி 1950 க…

  16. அரசைக் குழப்பும் ”20” – தாயகன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் கோத்தபாய-மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அரசு ,தமது முதல் இலக்கான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மிக இலகுவாக நிறைவேற்றிவிடலாமென்ற நினைப்பில் அவசர,அவசரமாக அதனை தம் விருப்பப்படி தயாரித்து வர்த்தமானியில் வெளியிட்டுவிட்டு இப்போது அந்த 20 ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களுக்கு வரும் எதிர்ப்புக்களையும் தவறுகளையும் பார்த்து ”ஆப்பிழுத்தகுரங்கின்” நிலையில் தடுமாறுகின்றது. இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்யும் அரசுகள் தமது அரசை பலப்படுத்தும் விதத்திலும் தமது பதவிகளை தக்கவைக்கும் ,நீடிக்கும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருவ…

  17. திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது – நிலாந்தன் BharatiSeptember 19, 2020 நிலாந்தன் அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக் கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் அதிகம் கவனிப்பைப் பெற்ற ஒளிப்படம் ஒன்று உண்டு. அதில் அரைக் கால்சட்டை அணிந்த ஒரு போலீசார் வீதியில் விழுந்து கிடக்கும் ஒரு சத்தியாகிரகியின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் காணப்படும் சத்தியாகிரகி அரசையாதான். அவரை 1990களின் தொடக்கத்தில் ஒரு தேவைக்காக நான் சந்தித்தேன். அப்போது கேட்டேன் “தமிழரசுக்கட்சி உண்மையாகவே சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதா? காந்தி …

  18. “எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு” என்று ஒரு பலமொழியை தமிழ் பேச்சுவழக்கில் பல இடங்களில் உபயோகிப்பதைக் கண்டிருப்போம். அது தமிழில் மட்டுமல்ல ஆய்வுத்துறையில் இந்த பழமொழியின் உள்ளடக்கத்தை சகலரும் இதனை மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்துவார்கள். குறிப்பாக வர்த்தகம், வியாபாரம், முகாமைத்துவம் சார் கற்கைகளில் இதனை அதிகம் அறிந்துவைத்திருப்பார்கள். எதுவுமே நிலையில்லை. சகலதும் ஒரே சீராக இயங்குவதில்லை. மேலும் கீழுமாக “zigzag pattern” இல் ஏறி இறங்கி, இன்னும் ஏறி, இன்னும் இறங்கி என்று ஒரு அலையாகவே அனைத்தின் வளர்ச்சியும் பண்பாக இருக்கும். இவற்றை இன்னும் சொல்லபோனால் “peak” என்கிற உச்சத்தைக் கூட எதுவும் அடையும். ஆனால் அந்த “உச்சமும்” நிலையாக அங்கே தங்கி விடுவதில்லை. அது மீண்டும் இ…

  19. தமிழரசு, முன்னணி, கொள்கை(?)யளவில் இணக்கம்.? தமிழ்த் தேசியம் குறித்தும்,புலிகளின் தியாகங்களைப் பற்றியும் வாய் ஓயாமல் பேசிவரும் தமிழரசுக்கட்சியும், தமிழ்த் தேசிய முன்னணியும் முன்னாள் போராளிகளின் அரசியல் அந்தஸ்து பற்றியவிடயத்தில் மட்டும் ஒத்த கருத்துடன் உள்ளன.தங்களது நிலையை மேம்படுத்த முன்னாள் போராளிகள் ஏணியாக இருக்கவேண்டும் என்பது இரு கட்சியினரதும் முதலாவது நிலைப்பாடு.இரண்டாவது தங்கள் தேவைக்கு முன்னாள் போராளிகள் பயன்படவேண்டும்; உழைக்க வேண்டும்; அதுவும் செருப்புப்போலத் தேயத் தயாராக இருக்கவேண்டும். அவ்வளவுதான். அதாவது காலைப்பாதுகாப்பது மட்டுமே செருப்பின் வேலை. அந்த வேலை முடிந்ததும் வாயிலிலேயே நிற்கவேண்டும். கால் பூசை அறைக்குள் போகும். ஆனால் செருப்பு போகமுடியாது. அ…

  20. ஆட்சி மாற்றத்துக்காக வேலை செய்யும் மேற்கு நாடுகள் எமது விவகாரத்தை கைவிட்டுவிடக் கூடிய ஆபத்து உள்ளது; தமிழர் இயக்கம் – காணொளி நேர்காணல் “ஆட்சி மாற்றத்துக்காக வேலை செய்யும் மேற்கு நாடுகள், அதன் பின்னர் எமது விவகாரத்தை கைவிட்டுவிடக் கூடிய ஆபத்தான நிலை உள்ளது. இதனை உணர்ந்து நாங்கள் செயற்பட வேண்டும்” எனக் கூறுகின்றார் ஜெனீவாவில் செயற்படும் தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத போதிலும், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது உரை, இலங்கை குறித்த பிரதான நாடுகளின் அறிக்கை…

  21. சுனில் கில்னானி வரலாற்றாசிரியர் பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள பெண்களையெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக கருதிக்கொள்வோம். இந்திய பெண்கள் குடியரசு என அதனை அழைப்போம். 60 கோடி பேரை கொண்டிருக்கும் அந்த நாடு, உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். 2014ஆம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைக் குறியீட்டு தரவரிசையின்படி அந்த நாடு மியான்மருக்கும், ருவாண்டாவுக்கும் இடையில் இருக்கும். இந்திய பெண்கள் குடியரசில் குழந்தைகள் சராசரியாக 3.2 ஆண்டுகளே பள்ளிக்குச் செல்வார்கள். கிட்டத்தட்ட மொசாம்பிக் நாட்டின் நிலைதான் இருக்கும். தனிநபர் வரு…

  22. சீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா? வேல்ஸ் இல் இருந்து அருஸ் இந்தியா – சீனா எல்லைப் பகுதியான கல்வான் பகுதியில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இந்தியா சீனாவுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதான தோற்றப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. அதனை உறுதிப்படுத்துவது போல இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகளும் பலப்பட்டு வருவது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, அமெரிக்கா, யப்பான் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டான படை ஒத்திகை, அமெரிக்கா தனது பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடத்தை இந்து – பசுபிக் கட்டளை மையமாக மாற்றியது போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். அது மட்டுமல்லாது, இந்தியாவுக்கான ஆயுதங்களை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.