அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வாக்குப் பொறுக்குவதற்காக பயன்படுத்தும் சின்னம்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வடக்குக் கிழக்கில் ஒரு தேசம் இரு நாடு என்ற முழக்கத்தை முன்வைத்து வாக்குக் கேட்கிறது. ஒற்றையாட்சி முறைக்குள் உள்ள சிங்கள பௌத்த பேரினவாதிகளின் பாராளுமன்றத்தில் குறைந்தபட்ச உரிமைகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஒரு நாடு இரு தேசம் என்ற சுலோகம் வெறும் வாக்கு வேட்டைக்காகவே முன்வைக்கப்படுகிறது. அந்த சுலோகம் வாக்குச் சேகரிக்க்ப் பயன்படுகிறது என்று மட்டும் அனுமானித்துக்கொள்ள முடியாது. மலையகத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவர்களை அரசின் பக்கம் சேர்க்கும் சதி இதன் பின்புலத்தில் உளடங்கியிருக்கிறதா என்ற சந்தேகங்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
உள்ளக விசாரணையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை விசாரணை செய்ய சர்வதேச விசாரணை நடாத்தப்படும் என்றுதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், அது உள்ளக விசாரணையாக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவும் அதனை உறுதி செய்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசின் மீது அவ்வளவு நம்பிக்கை வந்து விட்டது என்பதையே இது எடுக்காட்டுகின்றது. மாற்றங்களை எற்படுத்தினார்களா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடனான உறவிலும் மாற்றங்களை எற்படுத்தியிர…
-
- 0 replies
- 325 views
-
-
ஜம்மு - காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, பி.ப. 07:16Comments - 0 உரிமைப் போராட்டங்கள், காலக்கெடு வைத்து நடத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள், விடுதலைப் போராட்டங்களை முன்னரிலும் பார்க்க வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள், ஏன் எழுகின்றது என்பதை, அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை. அதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை, ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள், பலத்தின் குறியீடல்ல; பலவீனத்தின் குறியீடு. திங்கட்கிழமை (05) இந்திய மத்திய அரசாங்கம், ஜம்மு - காஷ்மிர் மாநிலத்துக்கு அரசமைப்பு ரீதியாக, இருந்து வந்த தன்னாட்சி அதிகாரத்தை, இரத்துச் செ…
-
- 0 replies
- 496 views
-
-
காஷ்மீரின் நிலை: ஒரு மக்கள் தொகுதியைக் காணாமலடிக்கும் முறை செப்டம்பர் 2019 - அஷ்வக் மசூதி · கட்டுரை ஆக்கிரமிப்பு நிலை நிலையின்மை இல்லாமல் காஷ்மீரில் வாழ்வதென்பது, வசந்த காலத்தில் மலராத மரங்களைப் போலாகும். மரணங்கள் இல்லாத நாட்கள் ஆச்சரியமளிப்பவை. ஆகவே, எதால், எப்பொழுது, யாரால் கீழே தள்ளப்படுவோம் என்று தெரியாமலேயே மலையுச்சியின் விளிம்பில் வாழப் பழகிவிட்டோம். ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலே வதந்திகள் உலா வந்தன. காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளைத் தரும் சட்டப்பிரிவு 370ம் வெளி மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க தடை விதிக்கும் பிரிவு 35கி’வும் ரத்து செய்யப்படும் என்று ஒரு செய்தி உலாவியது. தீவிரவாததுக்கு எதிராக ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலர் எச்சரித…
-
- 0 replies
- 513 views
-
-
தேர்தல் விஞ்ஞாபனங்கள் எங்கே? தேர்தல்கள் நெருங்கிவிட்டன. ஆனால் பிரதான தமிழ்க் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களை இன்னும் காணவில்லை. இந்தப் பத்தி எழுதப்படும் கணம் வரை குறிப்பாக வடக்கில் மையங்கொண்டுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் எவையும் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடவில்லை. இது மிக முக்கியமாக வினாவொன்றை எழுப்புகின்றது. இது இன்றைய காலப்பகுதியில் கட்டாயம் பேசப்பட வேண்டியது. இன்னும் மூன்று வாரங்களுக்குக் குறைவான காலப்பகுதியே உள்ளது. ஆனால் எதை மய்யப்படுத்தி தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள் என்பதை மூன்று முக்கிய தமிழ்த் தேசிய கட்சிகளும் சொல்லக் காணோம். தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிந்த நிலையின் வெளிப்பாடு இது என்பதை உறுதிபடச் சொல்லலாம். கடந்த ஜனா…
-
- 0 replies
- 417 views
-
-
சுமந்திரனின் திரிபுக்கு உருத்திரகுமாரன் மறுப்பு.! 1) கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கேட்காத கேள்வியை திரு. உருத்திரகுமாரன் ஏன் தம்மிடம் கேட்பதாக சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். குறிப்பாகப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழீழத்தை எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்று பேச்சு நடத்தவில்லை. எல்லைக் கோட்டை எங்கே வரைய வேண்டும் என்று பேச்சு நடத்தவில்லை. மாறாக ஒரு நாட்டுக்குள் எப்படி அதிகாரத்தைப் பகிர்வது என்பது குறித்தே பேசினார்கள் என சுமந்திரன் குறிப்பிடுகின்றார். தாங்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தவர் என்ற வகையில் உண்மைதான் என்ன? பேச்சுவார்த்தை என்பது போராட்டத்தை வேறு வழிகளில் தொடர்வதாகும். அகக் காரணிகள் அல்லது புறக் காரணிகளால் அல்லது…
-
- 0 replies
- 642 views
-
-
ஈழத் தமிழர்கள் மீதான அடுத்த பெரும் தாக்குதல்! எந்த ஒரு பிரச்சினையையும் அதன் தொடக்கத்தில் தீர்க்காமல், அது புண்ணாகி, புரையோடி, பாதிக்கப்பட்ட உறுப்பையே எடுத்தால்தான் உயிரையே காப்பாற்ற முடியும் என்கிற அளவுக்குக் கொண்டு போய்விட்டு, அதன் பின் களிம்பு பூசுவதில் வல்லவர்கள் இந்திய அரசியலாளர்கள். அதன் பிறகு, அந்தக் களிம்பு தடவியதையே பெரிய சாதனையாகப் பேசி வாக்குக் கேட்டு வருவார்கள். உறுப்பையே எடுக்க வேண்டிய நேரத்தில் மருந்து பூசுவது உதவியில்லை, உயிர்க்கொலை என்பதைப் புரிந்து கொள்ளாத நம் மக்களும் இளித்துக் கொண்டே வாக்கை அள்ளித் தருவார்கள். எல்லாத் தேர்தல்களிலும் காலங்காலமாக நடக்கும் இந்த அரசியல் விரச நாடகத்தை இந்த முறை பன்னாட்டு அளவில் பிரம்மாண்டமாக அரங்கேற்ற இந்திய அரசு எடுத்து…
-
- 0 replies
- 839 views
-
-
மீறப்படும் கூட்டு ஒப்பந்த சட்டவிதிகள் நீண்ட இழுபறியின் பின்னர் கூட்டு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டமை தெரிந்த விடயமாகும். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரும் இன்னும் இது குறித்த அதிர்வலைகள் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன. இதற்கிடையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட சட்ட விதிகளை மீறி தொழிலாளர்களை அடக்கு முறைக்குள் தோட்ட நிர்வாகங்கள் கொண்டுவர முனைவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக மேலெழுந்து வருகின்றன. இத்தகைய தோட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பேரணியுடன் போராட்டம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு ஒன்றி…
-
- 0 replies
- 490 views
-
-
குடியெழுப்பப்படும் குருந்துமலை ஐயனார்.! - நா.யோகேந்திரநாதன் அண்மையில் ராஜாங்க அமைச்சர் விதுல விக்கிரம தலைமையில் இராணுவத்தினரின் உதவியுடன் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் சில நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு காலங்காலமாக அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வந்த ஐயனார் சூலம் பிடுங்கி எறியப்பட்டு எங்கிருந்தோ இவர்களால் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை புத்த பிக்குகளின் பிரித் ஓதலுடன் அங்கு வைக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் அங்கு "குருந்தசேவ" என்றொரு விகாரை அமைந்திருந்ததாக 1932ம் ஆண்டு வெளிவந்த வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் படைக் கல்லு என்ற இடத்தில் கல்யாணபுர என்ற பௌத்த விகாரையும், பௌத்த துறவிகள் தங்குமிடமும் இருந்ததாகவ…
-
- 0 replies
- 445 views
-
-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள் பற்றி அடிக்கடி பேசுகிறோம். மூன்றாம் உலகப் போருக்கான அறைகூவலாக, பல நிகழ்ச்சிகள் கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை மூன்றாம் உலகப் போர் என்றவொன்று நிகழவில்லை என ஆறுதலடைகிறோம். “மூன்றாம் உலகப் போரில் என்ன நிகழுமென்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்றாம் உலகப் போரொன்று நடந்தால் அதில் என்ன நிகழுமென்று சொல்லவியலாது. ஆனால், அவ்வாறு நிகழுமிடத்து, நான்காம் உலகப் போரென்பது தடிகளாலும் பொல்லுகளாலுமே நடக்கும் என உறுதிபடச் சொல்லவியலும்” என்ற, அல்பேட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்று மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. இவ்வா…
-
- 0 replies
- 514 views
-
-
-
- 0 replies
- 925 views
-
-
சர்வதேச ஆதரவும் அனுதாபமும் ஹரிகரன் சர்வதேச சமூகத்தை சம்பந்தன் அதிகளவில் நம்புகிறார், அவர்களின் வழிநடத்தல் படியே செயற்படுகிறார் என்ற பொதுவான குற்றச்சாட்டு அண்மைக்காலமாக கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவும், இந்தியாவும் கூறுகிறபடி நடந்து கொள்கிறார்கள் என்ற விமர்சனம், சம்பந்தன், மீதும் சுமந்திரன் மீதும் அதிகமாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த விமர்சனங்கள் தனியே, கூட்டமைப்பின் அரசியல் போட்டியாளர்களால் முன்வைக்கப்படுபவை மாத்திரமல்ல, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கூட அண்மையில் இதனை நாசூக்காக குறிப்பிட்டிருந்தார். …
-
- 0 replies
- 262 views
-
-
× முரண்படும் தமிழ் தலைமைகள்! மாகாண சபை தேர்தலை இலக்குவைத்து மாற்று அணியொன்றை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவொன்று இரகசிய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக ஆச்சரியப்படும் தகவலொன்று கசிந்துள்ளது. வட,கிழக்கின் அரசியல்போக்கு பற்றி அக்கறைகொள்கின்றவர்கள் கவனம் செலுத்தும் விவகாரங்களில் இவ்வாரம் முக்கியம் பெற்ற செய்தியாகக் காணப்படுகின்றது. வடக்கு முதலமைச்சர் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றாரா? இல்லையா? இச்செய்தியில் உண்மையுள்ளதா? இல்லையா என்பது பற்றி கர…
-
- 0 replies
- 718 views
-
-
இந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்பது வியப்பாக இருக்கிறது! குடியானவனுக்குப் பேய் பிடித்தால் பூசாரியைக்கொண்டு வேப்பிலை அடிக்கலாம். ஆனால் பூசாரிக்கே பேய் பிடித்தால் என்ன செய்யலாம்? வட மாகாண சபையின் நிருவாகம் கடந்த ஒரு மாதகாலமாக பேரளவு முடங்கிப் போய்க் கிடக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். அமைச்சரவை கூடவில்லை. அமைச்சரவையைத் தனது ஒப்புதலின்றி கூட்டக் கூடாது என முதலமைச்சருக்கு ஆளுநர் கூரே எழுத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்குக் கனதியான காரணம் இருக்கிறது. முதலமைச்சர் உட்பட அமைச்சரவையின் எண்ணிக்கை 5 யை மேவக் கூடாது என்பது சட்டம். ஆறுஅமைச்சர்களைக் கொண்ட…
-
- 0 replies
- 549 views
-
-
மோசமான பொருளாதாரம், சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில் வல்லரசுகளின் முறுகல் நிலை, தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் மோதல் நிலை, தொடரும் படைக்கலன்கள் பெருக்கும் போட்டி ஆகியவற்றுடன் 2014-ம் ஆண்டு முடிவடைந்தது. இவை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகள் 2014-ம் ஆண்டில் இருந்து 2015 ஆண்டிற்கு முதிசமாகக் கிடைத்துள்ளன. ஆனாலும் ஓர் ஒளிக் கீற்றாக குறைவடைந்த எரிபொருள் விலை தோன்றியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகெங்கும் புவிசார் அரசியலிலும் 2015-ம் ஆண்டில் பெரும் மாற்றத்தை எரிபொருள் விலையே ஏற்படுத்தப் போகின்றது. 2015-ம் ஆண்டு பல நாடுகள் குடிவரவிற்கு எதிரான கடுமை…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.தே.க தான் எமக்கான தீர்வா? Gopikrishna Kanagalingam / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, மு.ப. 02:06 இலங்கையில் காணப்பட்டுவந்த அரசியல் நெருக்கடி, மேலோட்டமாகத் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கும்வரை, இப்பிரச்சினை தொடருமென்பது வெளிப்படையாக உள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், நிலையானவை என்று அர்த்தப்படுத்த முடியாது. ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து காணப்பட்ட தேசிய அரசாங்கம், சு.கவின் வெளியேற்றத்தால் உடைந்து போனாலும், அவ்வாறு உடைவதற்கு முன்னரே, அவ்வரசாங்கம் மீது அதிகபட்சமான விமர்சனங்கள் காணப்பட்டன. ஒக்டோபர் …
-
- 0 replies
- 429 views
-
-
தமிழருக்கு நல்ல எதிர்காலத்தை வரைந்து செல்லும் 2011 ரூனீசியாவில் புறப்பட்ட புரட்சிகரமான புது நதி அநீதிகளை எல்லாம் அழிக்கும் என்ற புது நம்பிக்கையை ஏற்படுத்திய பொன்னான ஆண்டு. 1948 ம் ஆண்டு இலங்கை அடைந்த போலிச் சுதந்திரத்திற்கு பின்னர் பெரும் துயரடைந்த ஈழத் தமிழர் வாழ்வில் 2011 ம் ஆண்டு பொன்னான ஆண்டு மட்டுமல்ல பொற்காலத்திற்கு பாதை வரைந்து விடைபெறும் புதுமை ஆண்டாகவும் அமைந்திருக்கிறது. ஏன் 2011 பொன்னான ஆண்டு இதோ காரணங்கள் : 01. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் காரணமாக வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை சிங்கள இனவாத அரசு கொன்றொழித்துள்ளது. அவர்களுடைய வீடுகள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் யாவும் அழிக்கப்பட்டன. இந்த ஆண்டு அந்த மரணங்களும…
-
- 0 replies
- 633 views
-
-
தி.மு.க - பா.ஜ.க உறவு எதிர்காலக் கூட்டணிக்கு முன்னோட்டமா? எம். காசிநாதன் / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 03:04 Comments - 0 நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதித்துவம் ஆக்கபூர்வமானதாகக் காணப்படுகிறது. சென்ற முறை, அ.தி.மு.கவுக்கு 37 எம்.பி.க்கள் இருந்தார்கள். மாநிலத்திலும் அ.தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தின் உரிமைகள் தொடர்பாக, பெரிய அளவில் சாதிக்க இயலவில்லை. முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருந்த போது, சாதித்த ஜல்லிக்கட்டு விவகாரம் போல் கூட, ‘நீட்’ பரீட்சை உள்ளிட்ட மாநிலத்தின் உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நிகழ்விலும் சாதனை புரிய இயலவில்லை. அ.தி.மு.கவின் ஆட்சியை நடத்துவது மட்டுமே முன்னுரிமை என்ற நி…
-
- 0 replies
- 411 views
-
-
புதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும் Editorial / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, பி.ப. 07:24 Comments - 0 2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும். ‘நல்லாட்சி அரசாங்கம்’ நல்லாட்சியைத் தராவிட்டாலும், தமிழர்களுக்கு நல்வாழ்வைத் தருவார்கள் என்று, தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். ‘தீபாவளிக்குள் தீர்வு, ‘பொங்கலுக்குள் புதிய அரசமைப்பு’ என்று ‘புலுடா’க்கள் தொடர்ந்தன. இன்று, புதிய அரசமைப்புக்கான வாய்ப்பு, முழுமையாக இல்லாது போய்விட்டது. புதிய அரசமைப்பின் சாத்தியமின்மையை, இலங்கை அரசியலைப் புரிந்தவர்கள், இலகுவாக அறிந்து கொள்வர். நல்ல…
-
- 0 replies
- 442 views
-
-
கானல் நீரில் தாகம் தீர்த்தல்! -நஜீப் பின் கபூர்- முதலில் 2025ம் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை நமது வாசகர்களுக்கு கூறிக்கொண்டு கானல் நீரில் தாகம் தீர்த்தல் தொடர்பான கதையையும், கடந்து போன நூறு நாட்களில் நாட்டில் நடந்த மாற்றங்கள் பற்றியும் இங்கு பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னர் நாம் கடந்த ஆண்டில் துல்லியமாக வாசகர்களுக்கு வழங்கி இருந்த தகவல்களை மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்த விரும்புகின்றோம். இதற்கு முன்னரும் இப்படியான வார்த்தைகளை நாம் உச்சரித்திருந்தாலும் அதனை கூறியது கூறலாக நமது வாசகர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று நாம் நம்புகின்றோம். அனுரவுடன் மோதுவதாக இருந்தால் மெகா கூட்டணி போட்டுக் கொள்ளுங்கள் என்று எதிரணிகளுக்கு சொல்லி இருந்தோ…
-
- 0 replies
- 299 views
-
-
புலிகளின் தலைவர் ஆகச் சிறந்த மேதை தான்..! சரத் பொன்சேகாவிற்கு மறுப்பு ..! 21 - ம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான புலிகளின் தலைவர் மிகச் சிறந்த மேதை என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம். புலிகளின் தலைவருக்கு நிகராக உலகில் யாரை சொல்வீர்கள்..? ஒழுக்கமும் மிகச் சிறந்த அறநெறியும் கொண்ட புலிகளின் தலைவர் ஒரு ஒப்பற்றவர் என்று ஐ.நா.வின் தருஷ்மன் அறிக்கை ஒப்புக் கொண்டுள்ளதே ஒரு சான்று தான். மிகவும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் உலகில் வேறு எங்கும் கிடையாது என்று சொன்னதே இந்த கமிட்டியின் அறிக்கை. தமிழ் ஈழ அரசு அமைத்து அந்த அரசில் ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாமல் ஒரு அரசு நடத்திட முடியுமா இன்றைய உலகில்..? ஒரு சிறு…
-
- 0 replies
- 692 views
-
-
கார்ணியின் மந்திரிசபைசிவதாசன்கனடிய மத்திய அரசைக் கைப்பற்றி லிபரல் கட்சியின் தலைவர் கார்ணி மந்திரிசபையை இவ்வாரம் அறிவித்திருக்கிறார். அதில் இரு தமிழர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. துர்ப்பாக்கியமாக அமைச்சர் கெரி ஆனந்தசங்கரியுடன் நான் எடுத்துக்கொண்ட படம் எதுவும் கைவசம் இல்லாமையால் அதை இக்கட்டுரையில் இணைத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தலுக்குப் பின் சற்றே ஒதுங்கியிருந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பொய்லியேவ் கார்ணியின் மந்திரிசபை அறிவிக்கப்பட்டதும் மீண்டும் முனக ஆரம்பித்திருப்பது பரிதாபமாகவிருக்கிறது. பாவம், பின்னாலிருந்து முதுகில் இடி விழுகிறது போல; ஏதாவது சொல்லியாகவேண்டும் என்பதற்காகச் சொல்கிறார் போலிருக்கிறது. “இந்த மந்திரிசபையில் பலர் ட்றூடோவின் அ…
-
- 0 replies
- 276 views
-
-
கொரோனா: இருமுனை ஆயுதம் கே. சஞ்சயன் / 2020 மார்ச் 13 கொரோனா வைரஸ், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு, ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குச் சவாலான ஒன்றாக உருவெடுத்து வருகிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள், இலங்கை அரசியலின் போக்கை அடியோடு திசை திருப்பியிருந்தன. அன்றைய ஆளும்கட்சியான ஐ.தே.கவுக்கு மரண அடி கொடுத்த அந்தத் தாக்குதல்கள், அப்போதைய அரசாங்கத்தின் இயலாமையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. அதுவே, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கும், முக்கிய காரணமாக அமைந்தது. மறுபுறத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ பெற்ற வெற்றியைக் கொண்டு, தற்போதைய அர…
-
- 0 replies
- 750 views
-
-
ஹிலாரி வீசிய தூண்டிலில் மாட்டிய ட்ரம்ப் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முக்கியமான கட்டம் வந்திருக்கிறது. பிரதான இரு கட்சிகளினதும் தேசிய மாநாடுகள் இடம்பெற்று, தங்கள் கட்சிகளின் சார்பில் முன்னிலை வகித்த வேட்பாளர்கள், உத்தியோகபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலமாக, அரசியல் கேலிக்கூத்தானது, முடிவுக்கு வந்திருப்பதாக ஒரு தரப்பினரும், இனிமேல் தான் உண்மையான கேலிக்கூத்து ஆரம்பிக்கவுள்ளதாக மற்றைய தரப்பினரும் தெரிவிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் அதன் முடிவுகளும், அமெரிக்காவை மாத்திரமல்லாது, லிபியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை இலக்குவைத்த தாக்குதல்களை அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த…
-
- 0 replies
- 506 views
-
-
யேமன்: சவூதி அரேபியாவின் கொலைக்களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சமகாலத்தில் நிகழ்வனவற்றில் சில கவனத்தைப் பெற்றுவிடுகின்றன; பல கவனம் பெறுவதில்லை. நிகழ்வின் தன்மையை மட்டும் வைத்துக்கொண்டு கவனம் பெறுபவை எவை என்பதைத் தீர்மானிக்க முடியாது. மாறாக அதனுடன் தொடர்புள்ள அரங்காடிகளும் அந்நிகழ்வு வேண்டி நிற்கும் உலகத்தின் கவனமும் அதைப் பெரிதும் தீர்மானிக்கின்றன. எனவே உலகத்தின் கவனிப்பற்று, ஒரு மூலையில் நடைபெறும் கொடுமைகள், பொதுக் கவனத்தை எட்டுவதில்லை. யேமன் மீது சவூதி அரேபிய ஆக்கிரமிப்பு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் தொடக்கம் சவூதி தலைமையிலான கூட்டணி யேமனில் விடாது போரிடுகின்றது. இதனால் மத்திய கிழக்கெங்கும் விரி…
-
- 0 replies
- 663 views
-