Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மூடி இல்லாத முகங்கள் கேட்டோம்... -காரை துர்க்கா அமர்க்களம், படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்..’ என்ற பாடல், 1999 ஆம் ஆண்டு காலப் பகுதியில், பட்டிதொட்டி எங்கும் ஓங்கி ஒலித்தது. இந்தப் பாடல் தனித்துவமானது. ‘அமர்க்களம்’ படத்தையே, சமர்க்களம் ஆக்கியது எனலாம். அதாவது, கதாநாயகன் எவற்றை எல்லாம் விரும்பிக் (நியாயமாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய வேண்டுதல்கள்) கேட்டார் என, ஒவ்வொரு வரிகளும் எடுத்து இயம்புகின்றன. அந்தப் பாடலின் ஒரு வரியே, ‘மூடி இல்லாத முகங்கள் கேட்டேன்’ என்பதாகும். …

    • 0 replies
    • 401 views
  2. கொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை. ஆசிரியர் தலையங்கம் 43 0 சிறீலங்காவின் எந்தச் சட்டமும் எந்தத் தீர்ப்பும் தமிழருக்கு நீதியை வழங்காதென்பதின் ஆகப்பிந்திய எடுத்துக்காட்டாக மிருசுவில் படுகொலையாளனான சுனில் ரத்நாயக்காவின் விடுதலை சுட்டிநிற்கின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்டதொரு முன்னேற்றகரமான நீதி நடவடிக்கையாகக் கொள்ளப்பட்ட மிருசுவிலில் 20.12.2000ஆம் ஆண்டு குழந்தை மற்றும் பராயமடையாத சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரைக் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த படையினர்கள் இனங்கானப்பட்டு 2015 விசாரணைக்கெடுக்கப்பட்டு போதிய ஆதாரங்கள் இல்லையென்று நான்குபேரை விடுதலை செய்த சிறீலங்காவின் நீதித்துறை சுனில் ரத்னாயக்கா என்ற படுகொலையாளனுக்கு சாவொறுப்ப…

    • 0 replies
    • 755 views
  3. உலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் : பிரபாத் பட்னாயக் – தமிழில்: ஆர். விஜயசங்கர் March 31, 2020 - admin · அரசியல் கொரோனோ ஒரு நெருக்கடியான காலத்தில் எல்லோருமே சோஷலிஸ்டுகளாகிறார்கள் என்று சொல்வார்கள். சுதந்திர சந்தை பின்னே சென்று உழைக்கும் மக்களுக்கு பலனளிக்கும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில் அனைவருக்கும் ரேஷன் வழங்கப்பட்டது. இதனால் ஒரு சராசரித் தொழிலாளி முன்னெப்போதையும் விட ஊட்டம் பெற்றார். தனியார் நிறுவனங்கள் போருக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென்று ஆணையிடப் பட்டது. இது திட்டமிட்ட பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வந்ததற்கு ஒப்பாகும். உலகளாவிய நோய்ப் பேரிடரின் தாக்கத்தில் இன்று உலகம் இருக்கும் நேரத்தில், அது போன்ற ம…

  4. கொரோனா- தீண்டத்தகாதது - நிலாந்தன் இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். பூமி முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஒன்றில் ஊரடங்கு சட்டம் அல்லது சனங்கள் தாங்களாகவே தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொள்ளும் ஒரு நிலை. நோயில் வாடும் ஒருவருக்கு மருந்து மட்டும் போதாது. அருகிலிருந்து அன்பாக யாராவது கவனிக்க வேண்டும் அருகில் இருப்பவரின் அன்பான அரவணைப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.அன்பைத் தவிர வேறு அருமருந்து கிடையாது. ஆனால் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் உங்களுக்கு எவ்வளவு…

  5. நாட்டின் எதிர்காலம் கொரோனாவின் கையில் மொஹமட் பாதுஷா / 2020 மார்ச் 27 நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தபோது, “அப்படியென்றால், வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?” என்று, ஊடகவியலாளர் தரப்பில் வினாத் தொடுக்கப்பட்டது. அப்போது அவர், “தேர்தல் எப்போது நடக்க வேண்டும் என்பதைக் கொரோனா வைரஸ்தான் தீர்மானிக்கும்” என்று சொல்லியிருந்தார். சுருக்கமாகச் சொன்னால், இதுதான் இந்த நாட்டினது நிலைமையாகும். கொரோனா என்ற, கண்ணுக்குப் புலப்படாத வைரஸ்தான் நமது அரசியல், பொருளாதார, சமூக ஸ்திரத் தன்மையையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றது என்பதில் இருவேறு நிலைப்பாடுகள் இல்லை. …

    • 1 reply
    • 617 views
  6. கொரோனா முகமூடிக்குள் கோழைத்தனம் கே. சஞ்சயன் / 2020 மார்ச் 27 நாடு முழுவதும் கொரோனா பீதியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ. ஜனாதிபதியிடம் இருந்து நேற்றுமுன்தினம் விடுக்கப்பட்ட உத்தரவை அடுத்து, சுனில் ரத்நாயக்க, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நேற்று (26) விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கொரோனா பீதிக்கு மத்தியில், நாடு கலங்கிப் போயிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த முடிவை எடுத்திருக்கிறா…

    • 3 replies
    • 1k views
  7. கொரோனா வைரசும் ஒரு போதகரும் -நிலாந்தன்.. March 28, 2020 ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகலில் யாழ் நகருக்குச் சென்றேன். அங்கே முகவுறை அணியாமல் நகருக்குள் வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்ற தொனிப்பட போலீசார் அறிவித்துக் கொண்டு சென்றார்கள். கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் ஓராண்டுக்கு முன் நாட்டில் முகத்தை மூடி முஸ்லிம் பெண்கள் முக்காடு இடுவது குற்றமாக கருதப்பட்டது. முக்காடு மட்டுமில்லை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அணியும் தலைக் கவசங்களும் சோதிக்கப்பட்டன. முற்றாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்கள் தடை செய்யப்பட்டன. அல்லது முகக் கவசங்களில் கருப்புநிற கண்ணாடி இருந்தால் அது தடுக்கப்பட்டது. கார்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந…

    • 6 replies
    • 1.3k views
  8. ஊர்கூடித் தேரிழுப்போம் கொரோனா வைரஸ் அச்சம், இலங்கையெங்கும் பரவியுள்ளது. அச்சத்துக்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால், இன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில், உண்மை குறைவாகவும் பொய் அதிகமாகவும் உள்ளன. எதை நம்புவது, எதை நம்பக் கூடாது என்பதைப் பிரித்தறியும் வாய்பற்ற நிலையே தொடருகிறது. ஏராளமான தவறான தகவல்கள் குறிப்பாக, எமது அலைபேசிகளை நிறைக்கின்றன. இவை, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்குகின்றன. முதலாவது, கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்தும் தொற்றுக்கான தீர்வு குறித்தும் பரப்பப்படும் செய்திகள், அறிவியலுக்கு மு…

    • 1 reply
    • 986 views
  9. அரசாங்கம் + கொரோனா = மக்கள் -இலட்சுமணன் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடர்பாக, அரசாங்கம் மிகமுக்கியமான வேலைத்திட்டங்களை முன்னேற்றகரமாக எடுத்துள்ள போதும், அவற்றை விளங்கிக் கொண்ட விதமும் நடந்து கொள்ளும் ஒழுங்குகளும், அரசாங்கத்துக்கு மிகச் சவாலாகவே அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமும் அதை மீறுகின்ற மக்களின் செயற்பாடுகளும், சட்டத்தை மதிக்காத தன்மையின் வெளிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில், தேவையற்ற விதத்திலான மக்களின் நடமாட்டமும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளும் கைதுகளும் 2,000க்கும் மேற்பட்டு இருப்பதும் சட்டத்தை மீறியதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

  10. கொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 மார்ச் 26 இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத, பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணம் உடையவை. எந்த உலக ஒழுங்கு, உலகைக் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆட்சிசெய்தோ அது, இன்று அவலப்பட்டு நிற்கின்றது. அது அமைத்த விதிகள், நெறிமுறைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்ள யாருக்கும் நேரமில்லை. இன்று ஏதாவதொரு வழியில், தீர்வுகளை நோக்கியே எல்லா அரசாங்கங்களும் ஓடுகின்றன. உயிரிழப்புகளைத் தவிர்ப்பதும் நோய்த்தொற்றைக் குறைப்பதுமே பிரதான நோக்காக உள்ளன. பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள், நடைமுறையி…

  11. கொரோனா – தொட்டுவிடும் தூரத்தில் மரணம் - யதீந்திரா கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மனிதரின் வாழ்வு நிர்மூலமாகவிடலாம் என்னும் ஒரு துயரநிலை தோன்றியிருக்கின்றது. மனிதர்களின் வாழ்வு இவ்வளவுதனா என்னும் கேள்விதான் ஒவ்வொருரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு வளம்நிறைந்த நாடு – இத்தாலி – செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றது. எல்லா இடங்களிலும் மரண ஓலம். கடவுள் மீதான மனித நம்பிக்கை அவர்களின் கண் முன்னாலேயே சிதைந்து கொண்டிருக்கின்றது. கடவுளின் இடங்களுக்கே செல்வது பாதுகாப்பில்லை என்னும் போது, இதுவரை அந்த இடங்கள் தொடர்பில் மனிதர்களுக்கு இருந்த நம்பிக்கையின் அர்த்தம் என்ன என்னும் கேள்வி எழலாம். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 24000தை தாண்டிவிட்டது.…

  12. கொரோனாவுக்கு எதிராகக் கை கோர்ப்போம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மார்ச் 25 கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, நாடு முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. நாடு பூராவும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம், இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை, சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் தளர்த்தப்படுகின்றது. அதுவும், உணவுப்பொருள்கள் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் மட்டுமேயாகும். இவ்வாறான நிலை, இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என்று தெரிகிறது. ஒரு சில நாடுகளைத் தவிர, உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உயிரிழப்புகள், தற்போது இத்தாலியைப் படுபயங்கரமாக உலுக்கிக் க…

  13. நாட்டுக்குள் எவ்வாறு வைரஸ் புகுந்தது? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 மார்ச் 25 இலங்கை ஒரு தீவு. இங்கிருந்து வெளியே செல்லவும் உள்ளே வரவும், ஒரே ஒரு பிரதான வழி தான் இருக்கிறது. அது தான் கட்டுநாயக்க விமான நிலையம். தவிர, மத்தல, யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்கள், கப்பல்கள் வரும் சில துறைமுகங்கள் ஆகியன இருந்த போதிலும், இவற்றின் மூலம் மிகச் சிலர் மட்டுமே வருகின்றனர். இவற்றையும் கணக்கில் எடுத்தாலும், பொதுவாக நாட்டுக்குள் நுழைவதற்காக மிகச் சில வாயில்களே இருக்கின்றன. எனவே, வருபவர்களை மிக இலகுவாகக் கண்காணிக்கலாம். ஆனால், வேறு நாடுகளுடனான நில எல்லைகள் இருக்கும் நாடுகளில், அவ்வாறு நாட்டுக்குள் வருபவர்களைக் கண்காணிப்பது மிகவும் கடினமாகும். உதாரணமாக, நேபாளத்திலிருந்து வெளிய…

    • 2 replies
    • 988 views
  14. கடலுணவுகளைக் கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை, கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினூடாகக் கொள்வனவு செய்வதற்கான அனுமதியை, அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில், நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தால் கடற்றொழிலாளர்கள் தாம் பிடிக்கும் கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்து வருவதைக் கருத்திற்கொண்டு, இது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில், இன்று(25) தாக்கல் செய்தார். க…

  15. அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலம் மக்களுக்கு…..!மா.பாஸ்கரன் யேர்மனி Posted on March 18, 2020 by சிறிரவி 49 0 தமிழருக்கானதொரு தலையமற்ற வெற்றிடத்தில் எவரும் சவாரி செய்யலாம் என்றதொரு நிலையிற் கடந்த பத்தாண்டுகளைக் கடந்து செல்லும் தமிழரது அரசியலில் மூன்று அரசுத்தலைவருக்கான தேர்தலையும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்துள்ள சூழலில் மீண்டுமொரு நாடாளுமன்றத் தேர்தலை ஈழத்தமிழினம் எதிர்கொண்டு நிற்கும் இவ்வேளையில் கடந்தகாலத்திற் பதவிக்கு வந்த அரசுகளும் தமிழ்க்கட்சிகளும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினவா அல்லது குறைந்தபட்சம் ஏதாவது முனைப்புகளை மேற்கொண்டனவா என்றால் எம்மிடம் இருப்பது வெறும் சுழியமேயாகும். இந்தச் சுழியத்துள் சுற்றியவாறு அழி…

  16. அநியாயமோ, அறியாமையோ? ஆனால், அடக்கப்பட வேண்டியது காரை துர்க்கா கொரோனா! கொரோனா!! இந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை. அடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ். இவ்வாறாக, முழு உலகத்தையுமே கொரோனா வைரஸ் உரு(புர)ட்டிப் போட்டு விட்டிருக்கின்றது. அறிவியல் ரீதியாகப் பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்கார நாடுகள், இன்று கண்டுபிடிக்க முடியாத, கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மல்லுக்கட்டி வருகின்றன. புதிய சட்டங்கள், புதி…

    • 0 replies
    • 918 views
  17. அதாவுல்லாஹ்வுக்கு விழுந்த அடிமேல் அடி முகம்மது தம்பி மரைக்கார் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலொன்று, ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதோர் அனுபவத்தை, நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம், மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளதால், அரசியல் பற்றிய பேச்சுகள் அமுங்கிப் போய் கிடக்கின்றன. ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நம்பிக்கை, மக்களுக்கு இருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை விடவும், பெரிய அழிவுகளையெல்…

    • 0 replies
    • 1k views
  18. கொரோனா: ராஜபக்சக்களுக்கு விழுந்த லொத்தர்? - நிலாந்தன் தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியை பிற்போட்டிருக்கிறார். இயற்கை அனர்த்தச் சூழல், அசாதாரண நிலைமை, அவசரகால நிலைமை போன்றவற்றைக் காட்டித் தேர்தல் திகதியை மேலும் பிற்போடலாம். ஆனால் அரசாங்கம் அந்தத் திகதியை அதிக காலம் பிற்போட விரும்பாது. கொரோனா வைரஸை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தவே அரசாங்கம் முயலும். எனவே கொரோனாவை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என்பதைத் தீர்மானிக்கும். ராஜபக்சக்கள் ராணுவக் கரம் கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்துவார்கள். ஏற்கனவே யுத்தத்தை வெற்றி கொண்டது போல அவர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் ஏறக்குறை…

    • 6 replies
    • 1.4k views
  19. கொரோனா அல்லது சீன வைரஸ் உலக ஒழுங்கை மாற்றியமைக்குமா? - யதீந்திரா கொரோனா – இன்றைய சூழலில் பாரபட்சமில்லாமல் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெயர். முதல் பார்வையில் இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதே அனைவருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இலங்கை அரசாங்கம் இதனை கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றது. இதில் இராணுவம் பிரதான பங்கு வகித்துவருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கை இராணுவம் மனிதநேயப் பணியில் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்திருக்கின்றது. எந்த இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோ, அந்த இராணுவமே இன்று கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் முற்றிலுமாக தன்னை ஈடுபடுத்தியி…

  20. கொரோனாவுக்கு முடிவு கட்டுமா இலங்கை? கே. சஞ்சயன் / 2020 மார்ச் 20 நவீன உலகில் மனித குலத்துக்கு மாபெரும் சவாலாகவும் மனித இனத்தின் இருப்புக்கான பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது கொரோனா வைரஸ். குணப்படுத்த முடியாத உயிர்க் கொல்லி நோயாக இல்லாவிட்டாலும், இது பரவுகின்ற முறையும் வேகம்மும் உலகத்துக்கான பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. போக்குவரத்து, தொடர்பாடல் வசதிகளால் இன்றைய உலகம் சுருங்கி விட்டுள்ள நிலையில் இந்த நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தவதற்கான வழிமுறைகள் தெரியாமல், நாடுகளின் அரசாங்கங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. பொருளாதார ரீதியாக வல்லமை வாய்ந்த அரசாங்கங்கள் கூட, என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. சீ…

    • 1 reply
    • 578 views
  21. தமிழ்த் தேசியமும் கொரோனா வைரஸும் -இலட்சுமணன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டச் செல்நெறியில், தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை நோக்கும்போது, வெறும் சுயநல அரசியல் போக்கையே காணமுடிகின்றது. இந்தத் தமிழ்க் கட்சிகள், விடுதலைப் போராட்டம் தொடர்பான கொள்கைகளால், தமக்குள் முரண்பாடுகள், பிரிவுகளை வளர்த்துக் கொண்டதாகக் காணமுடியவில்லை. அவை, கடைந்தெடுத்த சுயலாபம் கருதிய நடத்தைகளாலேயே தமக்குள் முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் தோற்றுவித்து உள்ளன. இத்தகைய பிற்போக்குத் தனமான நடத்தைகளால் உருவான அரசியல் சூழ்நிலைகளானது, தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான, நீண்ட கால அபிலாசைகளைப் புறந்தள்ளி, நாடாளுமன்றப் பிரதிநித்துவத்தை இல்லாமல் ஆக்கிவிடும் ஆபத்துகள் நிறைந்தவையாகும்…

    • 1 reply
    • 1.1k views
  22. கொரோனா வைரஸ்: இலாபமா? மனிதாபிமானமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 மார்ச் 19 இன்றைய தவிர்க்க இயலாத பேசுபொருள், கொரோனா வைரஸ் ஆகும். மனிதகுலத்தின் பெரும்பகுதி, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில், தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும் ஒரு கூட்டம், அச்சத்தை விதைத்து, அதில் இலாபம் பார்க்கிறது. இன்னொரு கூட்டம், இதை எப்படிக் காசாக்கலாம் என்று யோசிக்கிறது. மனித மனம் எவ்வளவு விந்தையானது? இன்று எம்முன் உள்ள கேள்வி, எமக்கு வேண்டியது இலாபமா, மனிதாபிமானமா என்பதேயாகும். இந்தப் பத்தியை இரண்டு நிகழ்வுகளுடன் தொடங்க விரும்புகிறேன்: 1. ஒரு பிரபல விளையாட்டு வீரர், தனது சொந்த ஹோட்டல்களை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நோ…

    • 1 reply
    • 850 views
  23. கொரோனா – நவீன பஸ்மாசுரன்? – நிலாந்தன் March 21, 2020 இந்து புராணங்களில் பஸ்மாசுரன் என்று ஓர் அசுரன் உண்டு. தான் தொட்டதெல்லாம் பஸ்பமாக வேண்டும் என்று பஸ்மாசுரன் சிவபெருமானிடம் வரம் கேட்கிறான். வரம் கிடைத்ததும் எதிர்ப்படும் எல்லாரின் தலையிலும் கைவைக்க தொடங்குகிறான். அவன் தொட்டதெல்லாம் சாம்பல் ஆகிறது. அவனைக் கண்டதும் மூவுலகதவரும் ஓடத் தொடங்குகிறார்கள். சிவபெருமானும் ஓட வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் மகாவிஷ்ணு ஓரழகிய மோகினியாக மாறி பஸ்மாசுரனை மயக்கி அவன் தலையில் அவன் கையை வைக்க செய்கிறார். சீன அதிபர் கொரோனா வைரஸை ஓர் அரக்கன் என்று வர்ணித்தார். கொரோனா வைரஸிலிருந்து தப்புவது என்று சொன்னால் பஸ்மாசுரனிடமிருந்து தப்புவது போல ஒருவர் மற்ற…

  24. பொறுப்பை மறந்தால் முழு நாட்டையும் வைரஸ் தாக்கும் எம்.எஸ்.எம். ஐயூப் கொவிட்-19 எனப்படும், தற்போது உலகை உலுக்கும் நோயின் மரண வீதம், ஆபிரிக்காக் கண்டத்தின் சில நாடுகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரவிய, ‘எபோலா’ எனப்படும் நோயின் மரண வீதத்தைப் பார்க்கிலும், மிகவும் குறைவானதாகும். ‘எபோலா’ தொற்றியவர்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதமானவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால், ‘கொவிட்-19’ தொற்றிவர்களில் மூன்று சதவீதமானவர்களே மரணமடைகின்றனர். ஆனால், ‘கொவிட்-19’ பரவும் வேகத்தைப் பார்க்கிலும், உலகளாவிய ரீதியில், அதைப் பற்றிய பீதி பரவும் வேகம், மிகவும் அதிக…

    • 0 replies
    • 729 views
  25. அரசியல் அறம் மறந்த மாவை புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மார்ச் 18 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கவீந்திரன் கோடீஸ்வரன், அவர் சார்ந்திருந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (டெலோ) விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் தமிழரசுக் கட்சியில் இணைந்திருக்கிறார். அவர் இம்முறை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் கூட்டத்தின் போதே, இந்த விடயம் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு மாவட்டத்தின் தலைமை வேட்பாளர், அதுவும் கடந்த பொதுத் தேர்தலில் தன்னை முன்னிறுத்திய கட்சிக்கு இறுதிவரை அறிவிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.