அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
கொரோனா அல்லது சீன வைரஸ் உலக ஒழுங்கை மாற்றியமைக்குமா? - யதீந்திரா கொரோனா – இன்றைய சூழலில் பாரபட்சமில்லாமல் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெயர். முதல் பார்வையில் இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதே அனைவருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இலங்கை அரசாங்கம் இதனை கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றது. இதில் இராணுவம் பிரதான பங்கு வகித்துவருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கை இராணுவம் மனிதநேயப் பணியில் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்திருக்கின்றது. எந்த இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோ, அந்த இராணுவமே இன்று கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் முற்றிலுமாக தன்னை ஈடுபடுத்தியி…
-
- 0 replies
- 505 views
-
-
நஜீப் பின் கபூர் பரினாம வளர்ச்சிப்படிகளின் ஒர் கட்டம் மனிதன். இப்படிக் கடவுள் கொள்கைக்கு சவால்விட்டு ஒரு போட்டை போட்டார்கள் உயிரியல் விஞ்ஞானிகள். ஆனால் உலகிலுள்ள அனைத்து மதங்களும்-மனிதர்களும் பொதுவாக இந்தப் பரினாம கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை. அவற்றை ஏற்றுக் கொள்ளவுமில்லை. எனவே தான் உலகில் எல்லா நாடுகளிலும் தேவாலயங்கள் மசூதிகள் கோயில்கள் விகாரைகள் இன்னும் வலுவாக இருந்து வருகின்றன. உயிரியல் வாதிகளின் இந்த சேட்டைகளை சீண்டல்களைக் கண்ட இறைவன் எப்போதுமே அதற்காக கோபப்படவில்லை. என்னதான் விஞ்ஞானத்தின் உச்சப்படிகளில் நாங்கள்தான் நின்று கொண்டிருக்கின்றோம் என்று கடவுளை மறந்து சொல்லிக் கொண்டாலும் வல்லரசுகள் தங்களை விட்டால் ஆள்கிடையாது தங்களால் எதை வேண்டுமானாலும் சாதித்துக் காட்ட…
-
- 0 replies
- 470 views
-
-
கொரோனா கட்டுப்பாடுகளும் குளறுபடிகளும் -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலம், மக்களை நாளாந்தம் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 3,000 என்கிற அளவைத் தொட்டிருக்கின்றது; உயிரிழப்புகளும் 30 என்கிற அளவில் ஒவ்வொரு நாளும் பதிவாகின்றது. உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு அப்பால், தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, இன்னும் அதிகமிருக்கலாம் என்பது, சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட தரப்புகளின் அச்சமாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகள், கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் அமலுக்கு வந்திருக்கின்றன. மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையோடு ஆரம்பித்த கட்டுப்பாடுகள், தற்போது வீடுக…
-
- 1 reply
- 563 views
-
-
கொரோனா காட்டுகின்ற ஓட்டைகள் பூமிப்பந்து என்றும்போல உருண்டுகொண்டிருக்கின்றது. சூரியன் காலையில் உதிக்கின்றது. மாலையில் மறைகின்றது. இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. கடல் அலைகள் உல்லாசமாக கரையில் மோதிவிட்டுக் கடலுக்குள் ஓடுகின்றன. ஆனால் இருபத்தியோராம் நூற்றாண்டின் அதிசயமாக மனிதவர்க்கம் முடக்கப்பட்டிருக்கின்றது. மனித வர்க்கத்தின் இயக்கத்தை கண்ணுக்குத்தெரியாத நுண்கிருமி பெருமளவில் கட்டிப் போட்டிருக்கின்றது. ஒன்றன்பின் ஒன்றாக நாடுகள் எல்லைகளை மூடின. நாடுகளுக்கு உள்ளே குறுநிலப்பரப்புக்களும் எல்லைகளை மூடிக்கொண்டன. நாலு சுவர்களுக்குள் மனிதர்கள் முடக்கப்பட்டனர். அதனால் அத்தியாவசியம் தவிர்ந்த நுகர்வுத் தேவைகள் முடங்கின. வர்த்தகப் பரிவர்த்தனைகள் தடைப்பட்டன. …
-
- 0 replies
- 681 views
-
-
சிறப்புக் கட்டுரை: கொரோனா காலம் - ஏற்றத்தாழ்வும் ஏழ்மையும்! மின்னம்பலம் ராஜன் குறை பொருளாதார ஏற்றத்தாழ்வு சிறிதும் அற்ற நிலை என்பது சமூகத்தில் சாத்தியமா என்பது ஐயம்தான். பொதுவுடமை சமூகமாக இருந்தாலும்கூட, அவரவர்கள் பணிகள், பொறுப்புகள் சார்ந்து சில கூடுதல் வசதிகள், சலுகைகள் தவிர்க்கவியலாதவை. ஓரளவாவது ஊக்கப்படுத்த தனிச் சொத்துரிமையை அனுமதிப்பதும், அதன் மூலம் ஏற்றத்தாழ்வு உருவாவதும் இன்றியமையாதது. சமூகம் முழுமையும் ஒருபடித்தான நிலையில் வாழ்வது என்பது ஆதிவாசி வேட்டைச் சமூகங்களில்கூட சாத்தியமாக இருந்ததா என்பது கேள்விக்குறிதான். அங்கேயும் சில அதிகார சமமின்மைகள், ஏதோவொரு வகையிலான ஏற்றத்தாழ்வு தோன்றியதை மானுடவியல் பிரதிகள் விவாதித்துள்ளன. ஏற்றத்தாழ்வுக…
-
- 0 replies
- 512 views
-
-
கொரோனா தொற்றின் பின்புலத்தில் இலங்கையின் நெடுங்கால ஜனநாயக குறைபாடு பற்றிய ஒரு நோக்கு - அம்பிகா சற்குணநாதன் கொவிட் - 19 தொற்றுநோய் ஒரு 'சமத்துவவாதி' என்று ஒரு மாயை நிலவுகிறது. கொவிட்டையும் இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மீதான அதன் தாக்கத்தையும் பற்றி ஆராய்வதற்கு முன்னதாக இந்த ஆபத்தான மாயையை கலையவேண்டியிருக்கிறது. சமூக - பொருளாதார அந்தஸ்து, இனம், மதம் என்று எதையும் பொருட்படுத்தாமல் வைரஸ் சகலரையும் தாக்குகிறது என்கின்ற அதேவேளைரூபவ் சகலரையும் ஒரே விதமாக அது பாதிக்கவில்லை. ஒருவரின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரம், வைரஸ் தொற்றுக்குள்ளாவதில் ஒருவருக்கு இருக்கும் வாய்ப்பு, தொற்றிலிருந்து குணமடைதல் மற்றும் உயிர்பிழைத்தல் எல்லாமே அவரின் சமூக - பொருளாதார நிலையிலு…
-
- 0 replies
- 784 views
-
-
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நெருங்கிவரும் அரசியலமைப்பு நெருக்கடி “கொரோனா பொதுச்சுகாதார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியும் அவரது இராணுவமும் மருத்துவ ஆலோசகர்களும் இதுவரையில் நடைமுறைப்படுத்திய தந்திரோபாயத்தின் மீது விமர்சன அடிப்படையிலான ஒரு பார்வையை செலுத்தவேண்டிய நேரம் இது” பொதுச்சுகாதாரம், அரசியலமைப்பு, அரசியல் என்று இலங்கை முகங்கொடுக்கின்ற மும்முனை நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது.முன்னரங்கக் கடமையில் ஈடுபட்டிருந்த வெலிசறை மற்றும் சீதுவை முகாம்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களிலும் விசேட அதிரடிப்படை வீரர்களிலும் பலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.அதேவேளை, கொழும்பு மற்றும் கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் ப…
-
- 1 reply
- 555 views
-
-
கொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம் 31 Views கோவிட்-19 கொள்ளை நோய் தீவிரமடைந்துள்ளது. அதன் தொற்றுப் பரவலைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்த முடியாமல் இலங்கை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இராணுவத்தை முதன்மை நிலையில் பயன்படுத்தி கடந்த மார்ச் மாதம் ஏற்பட்டிருந்த நோய்த்தொற்றின் முதலாவது அலையை அரசு வெற்றிகரமாகக் கையாண்டிருந்தது. அது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியானது என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டி இருந்தது. இதனால் சினிமா கதாநாயகனைப் போன்று, ஜனாதிபதி கோத்தாபாய அரசு இறுமாப்புடன் கொலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. குறிப்பாக ஒக்டோபர் மாதத்தில் கொரோனா …
-
- 0 replies
- 369 views
-
-
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய் April 6, 2020 “வைரலாகிவிட்டது” என்ற வார்த்தையை சிறிதேனும் அச்சமின்றி நாம் யாரேனும் இனி பயன்படுத்த இயலுமா? நம்முடைய நுரையீரல்களைக் கவ்விக் கொள்ளக் காத்திருக்கின்ற, கண்ணுக்குப் புலப்படாத, செத்துப் போகாத ஆனால் உயிரும் இல்லாத சின்னஞ்சிறிய உறிஞ்சு குமிழ்கள், படைபடையாக அப்பிக் கொண்டிருக்குமோ என்றெண்ணி பீதியடையாமல், ஒரு கதவின் கைப்பிடியையோ, ஒரு அட்டைப்பெட்டியையோ, ஒரு காய்கறிப் பையையோ இனிமேலும் நம்மால் தொட முடியுமா? அறிமுகமில்லாத ஒருவரை முத்தமிடலாம் என்றோ, பேருந்தில் தாவி ஏறலாமென்றோ, குழந்தையை பள்ளிக்கு அனுப்பலாமென்றோ, அச்சம் சிறிதுமின்றி நம்மால் இனி யோசிக்க முடியுமா? சின்னச் சின்ன சந்தோசங்களாகக் கூட இருக்கட்டும்…
-
- 0 replies
- 555 views
-
-
கொரோனா முகமூடிக்குள் கோழைத்தனம் கே. சஞ்சயன் / 2020 மார்ச் 27 நாடு முழுவதும் கொரோனா பீதியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. ஜனாதிபதியிடம் இருந்து நேற்றுமுன்தினம் விடுக்கப்பட்ட உத்தரவை அடுத்து, சுனில் ரத்நாயக்க, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நேற்று (26) விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கொரோனா பீதிக்கு மத்தியில், நாடு கலங்கிப் போயிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்திருக்கிறா…
-
- 3 replies
- 1k views
-
-
கொரோனா வைரசும் ஒரு போதகரும் -நிலாந்தன்.. March 28, 2020 ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகலில் யாழ் நகருக்குச் சென்றேன். அங்கே முகவுறை அணியாமல் நகருக்குள் வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்ற தொனிப்பட போலீசார் அறிவித்துக் கொண்டு சென்றார்கள். கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் ஓராண்டுக்கு முன் நாட்டில் முகத்தை மூடி முஸ்லிம் பெண்கள் முக்காடு இடுவது குற்றமாக கருதப்பட்டது. முக்காடு மட்டுமில்லை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அணியும் தலைக் கவசங்களும் சோதிக்கப்பட்டன. முற்றாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்கள் தடை செய்யப்பட்டன. அல்லது முகக் கவசங்களில் கருப்புநிற கண்ணாடி இருந்தால் அது தடுக்கப்பட்டது. கார்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந…
-
- 6 replies
- 1.3k views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக செயற்படும் நாடாளுமன்றம் இல்லாத நிலையில் இலங்கை Rajeevan Arasaratnam May 29, 2020 கொரோனா வைரஸ் காரணமாக செயற்படும் நாடாளுமன்றம் இல்லாத நிலையில் இலங்கை2020-05-29T21:28:26+00:00அரசியல் களம் டி.டபில்யூ இலங்கை செவ்வாய்கிழமை கொரோனா வைரசிஸ் முடக்கலை தளர்த்தியது, கொழும்பு கம்பஹாவில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் நடவடிக்கை தொடர்பில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது. இலங்கை தற்போது ராஜபக்சவின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதற்கான நாடாளுமன்றம இல்லாமல் செயற்படுகின்றது. அரசமைப்பு செயற்பாட்டாளர்கள் கூடிய விரைவில் தேர்தல் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர…
-
- 0 replies
- 413 views
-
-
கொரோனா வைரஸ் மனிதர்களின் ஆழ்மனதில் உண்டாக்கியுள்ள மாற்றம் என்ன? Getty Images தொற்றும் தன்மையுடைய இந்த நோயின் அச்சம் சாதாரண உரையாடல்களில் நமது உளவியல் ரீதியிலான செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்பாராத வழிகளில் செயல்பட வைக்கும் என்று அறிவியல் எழுத்தாளர் டேவிட் ராப்சன் கூறியுள்ளார். இவர் மனித மூளை, உடல் மற்றும் நடத்தை போக்கு பற்றி தீவிரமாக கவனித்து வருபவர். ஒரு நோயைப் பற்றிய அச்சம் நமது சிந்தனையை அபூர்வமாகத்தான் இந்த அளவுக்குப் பாதிக்கும். கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு செய்தித்தாள்களிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து முன்பக்கத்தில் செய்திகள் வருகின்றன; வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து, சமீபத்திய மரண எண்ணிக்கை குறித்து செய்திகள் சொ…
-
- 0 replies
- 679 views
-
-
கொரோனா வைரஸ் மீது போர்தொடுத்தல் -ஏகலைவா சிவில் நிர்வாகத்துக்கும் இராணுவ நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் பாரியன. போர்க்கால அடிப்படையில் செயற்படுவதற்கும் போர் போன்று செயற்படுவதற்கும் இடையிலான வேறுபாடுகள் முக்கியமானவை. ஆனால், இவை குறித்துக் கவனம் செலுத்தும் மனநிலையில், இலங்கை இல்லை என்பதை, அண்மைய நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கை மிகுந்த நெருக்கடியான காலப்பகுதியிலும் சிவில் நிர்வாகத்தால் ஆளப்பட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் அரசாங்கத்தின் சிவில் நிர்வாகம் இயங்கியது. அது, நாடு முழுவதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது என்பதையும் முழு நிலப்பரப்பின் இறைமையும் இலங்கை அரசிடமே உள்ளது என்பதையும் சான்றுப்படுத்துவதற்கு …
-
- 0 replies
- 753 views
-
-
கொரோனா வைரஸ்: இலாபமா? மனிதாபிமானமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 மார்ச் 19 இன்றைய தவிர்க்க இயலாத பேசுபொருள், கொரோனா வைரஸ் ஆகும். மனிதகுலத்தின் பெரும்பகுதி, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில், தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும் ஒரு கூட்டம், அச்சத்தை விதைத்து, அதில் இலாபம் பார்க்கிறது. இன்னொரு கூட்டம், இதை எப்படிக் காசாக்கலாம் என்று யோசிக்கிறது. மனித மனம் எவ்வளவு விந்தையானது? இன்று எம்முன் உள்ள கேள்வி, எமக்கு வேண்டியது இலாபமா, மனிதாபிமானமா என்பதேயாகும். இந்தப் பத்தியை இரண்டு நிகழ்வுகளுடன் தொடங்க விரும்புகிறேன்: 1. ஒரு பிரபல விளையாட்டு வீரர், தனது சொந்த ஹோட்டல்களை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நோ…
-
- 1 reply
- 850 views
-
-
கொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா? ஒரு நோய்த்தொற்று, உலகையே திகிலிலும் திக்குமுக்காட்டத்திலும் விட்டிருக்கிறது. அதன் பெயரைக் கேட்டாலே, எல்லோரும் பதறுகிறார்கள். சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடுகிறார்கள். பரவுமா, பரவாதா என்ற வினாவுக்கு, பதிலளிக்க இயலாமல், அரசாங்கங்கள் திணறுகின்றன. உலகத்தின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது. கொரோனா வைரஸ் (உலக சுகாதார நிறுவனம் சூட்டிய பொதுப்பெயர் Covid-19 ஆகும்) குறித்து, வெளிவரும் செய்திகளில் உண்மை பாதியாகவும் பொய் மீதியாகவும் இருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சீனா மீதான குரோதம், புதிய வழிகளில் வெளிப்படுகிறது. அறிவியல் ரீதியாக, தன்னை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மனிதகுலம், விக்கித்து நிற…
-
- 1 reply
- 549 views
-
-
கொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் என்.கே. அஷோக்பரன் / 2020 மார்ச் 31 உலகமே வீட்டுக்குள் முடங்கிப்போய், பதறிக்கொண்டிருக்கிறது. இராஜ பரம்பரை முதல், வீடற்று இருப்பவர்கள் வரை, பாரபட்சமில்லாது மனிதர்களைத் தீண்டி, பற்றிப் பரவிக்கொண்டிருக்கிறது ‘கொவிட்-19’ எனும் கொள்ளை நோய். ‘இன்றுளார் நாளையில்லை’ எனும் நிலையாமையை, முழு உலகமுமே கண்முன்னே கண்டுகொண்டிருக்கும் இந்த நிலையின் காரணகர்த்தா, கொரோனா எனும் வைரஸ் ஆகும். சுவாச நோயைத் தரும் கொரோனா வைரஸ், உலகைப் பதறவைப்பது, இது முதன்முறையல்ல. 2003இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, ‘சார்ஸ்’ நோயை ஏற்படுத்தி, ஆசியாவையும் உலகத்தையும் பதறவைத்தது. 2012இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, ‘மேர்ஸ்’ நோயை ஏற்பட…
-
- 0 replies
- 492 views
-
-
கொரோனா- தீண்டத்தகாதது - நிலாந்தன் இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். பூமி முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஒன்றில் ஊரடங்கு சட்டம் அல்லது சனங்கள் தாங்களாகவே தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொள்ளும் ஒரு நிலை. நோயில் வாடும் ஒருவருக்கு மருந்து மட்டும் போதாது. அருகிலிருந்து அன்பாக யாராவது கவனிக்க வேண்டும் அருகில் இருப்பவரின் அன்பான அரவணைப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.அன்பைத் தவிர வேறு அருமருந்து கிடையாது. ஆனால் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் உங்களுக்கு எவ்வளவு…
-
- 1 reply
- 848 views
-
-
கொரோனா: இருமுனை ஆயுதம் கே. சஞ்சயன் / 2020 மார்ச் 13 கொரோனா வைரஸ், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு, ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குச் சவாலான ஒன்றாக உருவெடுத்து வருகிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள், இலங்கை அரசியலின் போக்கை அடியோடு திசை திருப்பியிருந்தன. அன்றைய ஆளும்கட்சியான ஐ.தே.கவுக்கு மரண அடி கொடுத்த அந்தத் தாக்குதல்கள், அப்போதைய அரசாங்கத்தின் இயலாமையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. அதுவே, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கும், முக்கிய காரணமாக அமைந்தது. மறுபுறத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ பெற்ற வெற்றியைக் கொண்டு, தற்போதைய அர…
-
- 0 replies
- 751 views
-
-
கொரோனா: ராஜபக்சக்களுக்கு விழுந்த லொத்தர்? - நிலாந்தன் தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியை பிற்போட்டிருக்கிறார். இயற்கை அனர்த்தச் சூழல், அசாதாரண நிலைமை, அவசரகால நிலைமை போன்றவற்றைக் காட்டித் தேர்தல் திகதியை மேலும் பிற்போடலாம். ஆனால் அரசாங்கம் அந்தத் திகதியை அதிக காலம் பிற்போட விரும்பாது. கொரோனா வைரஸை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தவே அரசாங்கம் முயலும். எனவே கொரோனாவை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என்பதைத் தீர்மானிக்கும். ராஜபக்சக்கள் ராணுவக் கரம் கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்துவார்கள். ஏற்கனவே யுத்தத்தை வெற்றி கொண்டது போல அவர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் ஏறக்குறை…
-
- 6 replies
- 1.4k views
-
-
கொரோனாக் கவரேஜ் – நிலாந்தன்… April 25, 2020 இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழரும் ஆவணப்பட இயக்குனருமாகிய சோமிதரன் சில கிழமைகளுக்கு முன் தனது முகநூலில் ஒரு குறிப்பை போட்டிருந்தார்.யுத்த காலங்களில் ஊடகங்களில் வரும் நியூஸ் அப்டேட் போலவே கொரோனா அப்டேட்டும் இருக்கிறது என்ற பொருள்பட அவருடைய பதிவு அமைந்திருந்தது. யுத்த காலங்களில் வரும் செய்திகளில் கொல்லப்பட்ட படைவீரர்கள் எத்தனை பேர் விடுதலைப்புலிகள் எத்தனை பேர் காயப்பட்டவர்கள் எத்தனை பேர் கைப்பற்றிய ஆயுதங்களின் எண்ணிக்கை எத்தனை போன்ற விவரங்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில் வரும். அப்படித்தான் இப்போதும் கொரோனா அப்டேட் எனப்படுவது எத்தனை பேர் சாவு எத்தனை பேருக்கு நோய்த் தொற்று எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டு இர…
-
- 0 replies
- 737 views
-
-
சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது. இலங்கையில் கொரொணா நிலைமையினைச் சமாளிப்பதற்காக அரசும், அரசினுடைய வெவ்வேறு கட்டமைப்புக்களும் பல்வேறு நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவத் துறையினைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் இருந்து இந்நோய்த் தொற்றினைக் கண்டறியும் பணியில் இருந்து, நோயுற்றோரினைக் குணப்படுத்தும் பணி வரை தமது கடமைகளை மிகவும் இடரான சூழலிலே முன்னெடுக்கிறார்கள். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையிலே பொலிஸார் சட்டம்…
-
- 1 reply
- 491 views
-
-
கொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்? – நிலாந்தன்… April 4, 2020 கொரோனாவைரஸ் ஓர் உலகப் பொதுஆபத்தாக மாறிய போது நாடுகள் தமது தேசிய எல்லைகளை மூடத் தொடங்கிக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஓர் அறிவிப்பைவெளியிட்டார. உலகம் முழுவதிலும் போரில் ஈடுபடும் தரப்புகள் தங்களுக்கிடையே யுத்த நிறுத்தத்துக்குப் போக வேண்டும் என்று அந்த அறிவிப்பு கேட்டிருந்தது. ஆனால் உலகப் பேரரசான ஐக்கிய அமெரிக்கா ஏற்கெனவே ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரின் தளங்களின் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அறிவிப்பை போரில் ஈடுபடும் தரப்புக்கள் பெருமளவுக்கு பொருட்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்? - நிலாந்தன் கோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா?ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை பற்றி எரியச் செய்திருக்கிறது. சுமந்திரனும் தவராசாவும் பகிரங்கமாக ஊடகங்களில் மோதும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. தவராசாவுக்கு முன்னரே சரவணபவனுக்கும் சுமந்திரனுக்கு இடையில் விரிசல் உண்டாக்கியது. ஏற்கனவே சரவணபவனுக்கும் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒரு தொகுதி கட்சி உறுப்பினர்களுக்கும் நெருக்கம் அதிகம்.இதே உறுப்பினர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த தவராசாவுக்கும் நெருக்கம் .எனவே தவராசாவை சுமந்திரன் ப…
-
- 0 replies
- 667 views
-
-
கொரோனாக் காலத்தில் வன்முறை கொரோனாத் தொற்றினை அடுத்து நாட்டிலே பல்வேறு விதமான வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கி வருகின்றன. ஊரடங்கின் போது உணவுப் பொருட்களை வாங்கவும், குடி தண்ணீர் அள்ளவும் சென்ற, தமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்பட்டவர்களும், பொலிஸாரின் வன்முறைக்கு இலக்காகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமர்சனக் கருத்துக்களை முன்வைப்போர் அச்சுறுத்தப்படுகிறார்கள். அல்லது அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் திட்டமிட்ட முறையிலே பரப்பப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களிலே ஒரு சிலர் தாம் எதிர்கொண்ட வன்முறை குறித்து மனித உரிமை அமைப்புக்களுக்கு முறையிட்டுள்ளதாகவும் சில செய்தி அறிக்கைகளிலே சொல்லப்பட்டுள்ளது. மறுபுறத்தில் பெண்கள், சிறுவர் மீதான வீட்டு வன்முறையும், ச…
-
- 0 replies
- 707 views
-