அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா? வேல் தர்மா இஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு ரஷ்யா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது. இஸ்ரேலை எதிர்த்து நின்ற இந்தியா பல துறைகளிலும் அதனுடன் இணைந்து செயற்படுகின்றது. சவூதி அரேபியா உட்பட பல அரபு நாடுகள் இஸ்ரேலுடன் இரகசியமாக ஒத்துழைக்கின்றன. இஸ்ரேலில் தன்னிலும் பார்க்க பல மடங்கு மக்கள் தொகையைக் கொண்ட அயல் நாடுகளுடன் பகையான நாடாக இருக்கின்றது. அவற்றில் நிலங்களை அபகரித்து வைத்திருக்கின்றது. அயல்நாடுகளிலும் பார்க்க இஸ்ரேலில் வித்தியாசமான கலாசாரம், வித்தியாசமான ஆட்சி முறை இருந்தும் இஸ்ர…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 709 views
-
-
இரு பிரதான கட்சிகளும் இனிமேலும் ஆட்சியில் இணைந்து செயற்படுவதென்பது வெறும் பாசாங்கு அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களையடுத்து புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டம் காட்டியதற்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டரசாங்கத்தில் தொடர்ந்தும் சேர்ந்து செயற்படுவதென்பது உண்மையிலேயே ஒரு பாசாங்கு என்பதைத் தவிர வேறு ஒன்றுமாக இருக்கமுடியாது. இரு தரப்புகளுமே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.அதனால் 2015 ஜனவரியில் நிலவிய உற்சாகமான நாட்கள் ஒரு முடிந்த கதையாகிப்போய்விட்டன. …
-
- 0 replies
- 448 views
-
-
சீனாவின் பொருளாதாரம் அதன் ஏற்றுமதி யில் பெரிதும் தங்கியுள்ளது. சீனாவின் முக்கிய ஏற்றுமதி நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடு களும் வட அமெரிக்க நாடுகளும் பொருளா தாரப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக் கையிலும் சீனா தனது உள்நாட்டு மக்களின் கொள்வனவை அதிகரிக்க முடியாத நிலையி லும் புதிதாக ஏற்றுமதிச் சந்தைகளை சீனா தேடிக்கொண்டிருக்கின்றது. சீனாவின் உள் நாட்டு வேதனம் மற்றும் கொள்வனவு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 56 விμக்காடாக 1983-ம் ஆண்டு இருந்தது. அது பின்னர் 36 விμக் காடாகக் குறைந்து விட்டது. ஏற்றுமதியில் தங்கியிருக்கும் தனது பொரு ளாதாரத்தை உலக நெருக்கடிகள் பாதிக்காமல் இருக்க சீனா ஒரு கடல் வழிப்பட்டுப்பாதையை உருவாக்கியதுடன் மாற்றுப் பாதையாக மத்திய ஆசியாவினூடாக ஒரு தரைவழிப்பட்டுப் …
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த நாள் தொடக்கம் இலங்கை அராஜகநிலையை நோக்கிவிரைந்துகொண்டிருக்கிறது. அபாயகரமான நிலைவரம் ஒன்று உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. புதிதாக நியமிக்கப்பட்ட தரப்பினர் பாராளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதென்பதை நிரூபிக்கும்வரை சபைக்குள் அக்டோபர் 26 க்கு முன்னர் இருந்த நிலைவரத்தையே அங்கீகரிப்பதற்கு தான் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த திங்கடகிழமை வெளியிட்ட அறிக்கை பதற்றத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது. புதிதாக நியமிக்கப்பட்…
-
- 0 replies
- 528 views
-
-
காந்திய தேசத்திலிருந்து கிடைத்த உயிர்ப்பலிச் செய்தி மனிதாபிமானமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தீவிரவாதம், மிதவாதம் என்பதற்கு அப்பால் காந்தீயவாதம் என்ற அஹிம்சாவழிக்கொள்கை சக்தியுடையதாகவும் உயிர்ச்சேதமற்றதாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் உள்ளது. ‘கோபம் வேண்டாம் - மன்னித்துவிடு’, ‘அஹிம்சையின் உன்னதம் அதனை அடையும்போது தெரியும்’ என்றெல்லாம் போதிக்கிறது காந்தீயவாதம். துப்பாக்கி முனையில் நிற்கும்போதும் மௌனம் ஆயிரம் மடங்கு பலத்தினைக் கொண்டிருக்கும் எனப் போதிக்கப்பட்டு காந்தீயவாதம் முளைவிட்டு உயிர்பெற்ற இந்திய தேசத்திலிருந்தா இச்செய்தி வந்திருக்கிறது என்பதை எண்ணுகையில் உள்ளம் பதைபதைக்கத்தான் செய்கிறது. ஆம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்த…
-
- 0 replies
- 815 views
-
-
போரினை நினைவுகூருதலும் அதன் அரசியல்களும் மகேந்திரன் திருவரங்கன் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில், இலங்கையின் முப்பதாண்டு கால சிவில் யுத்தம் பொது மக்கள், விடுதலைப் போராளிகள், இராணுவத்தினர், அரசியற் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பட்ட, ஆயிரக்கணக்கானோரினைப் பலியெடுத்ததன் பின்னர் ஓய்ந்தது. போரின்போது கொல்லப்பட்ட அனைத்து உயிர்களும் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும், அரசியல் ரீதியிலான சமூகங்களுக்கும் மிகவும் முக்கியமானவர்கள். மனித உயிர்கள் யாவும் பெறுமதி மிக்கவை. எனவே போர் எமது சமூகங்களிலே விட்டுச் சென்றுள்ள இழப்புக்களை நாம் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்ற அதேவேளை, எமது நினைவுகூரற் செயன்முறைகள் மீளவும் ஒரு முறை இவ்வாறான இழப்புக்கள் நேராதபடி எமது சமூகங்களி…
-
- 0 replies
- 933 views
-
-
ரணிலின் அழைப்பை எதிர்க் கட்சிகள் நிராகரிக்கும் போது சுமந்திரன் மட்டும் எப்படி பங்கு கொண்டார்?
-
- 0 replies
- 483 views
- 1 follower
-
-
"சாணக்கியரின் நேர்மை!" [ஊழல் செய்யும் அரசியல் அதிகரிகளுக்கும் , மந்திரிகளுக்கும்] இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர். ஒருநாள் அரசவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாணக்கியர் தலைமை அமைச்சர் என்ற முறையில் எழுந்து, ``மன்னா! நம் மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்'' என்றார். "தலைமை அமைச்சர் அவர்களே! தங்கள் கருத்தை வரவேற்கிறேன். எல்லா ஏழை எளிய மக்களுக்கும் கம்பளிப் போர்வை வழங்க ஏற்ப…
-
- 0 replies
- 490 views
-
-
இஸ்ரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா Editorial / 2019 மே 06 திங்கட்கிழமை, மு.ப. 08:00 Comments - 0 ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படை, ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மிகவும் கூடுதலான இராணுவ நடவடிக்கையை பேண வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல் ஐக்கிய நாடுகளைக் கேட்டுள்ளமை, லெபனானின் அண்மைக்காலத்தில் ஐக்கிய நாடுகளின் தனது பிரசன்னத்தை லெபனாலில் வைத்திருத்தல் - அதன் பிரதிபலிப்புக்களில் மேலதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று பின்னணியின் அடைப்படையில், 1978ஆம் ஆண்டு, இஸ்ரேல் தெற்கு லெபனானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, பலஸ்தீனர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கினர். இந்நிலையில் குறித்த தாக்குதல்களைத் தடுக்கும் முகமாகவும் விடையிறுக்கும…
-
- 0 replies
- 857 views
-
-
ஆள்வதற்கான விருப்பமும் மகிழ்வதற்கான விருப்பமும் காரை துர்க்கா / 2019 மே 28 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:21 Comments - 0 நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முல்லைத்தீவு, வற்றாப்பளை அம்மனைத் தரிசித்தால் எமது நெருக்கடிகள் தீரும் என்ற அளப்பரிய நம்பிக்கையுடன், அம்பாளின் வைகாசிப் பொங்கலுக்கு (மே20) சென்றிருந்தோம். அன்னையிடம் மக்கள் தங்களது ஆற்றொனாத் துன்பங்களைக் கொட்டிக் கதறி வழிபட்டனர். மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆதங்கங்களை, ஆற்றாமைகளை இவ்வாறாகக் கொட்டுவது ஒருவித உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆகும். அன்றைய போக்குவரத்தில், பலரோடு பலவித எண்ணங்களைப் பகிரும் சந்தர்ப்பங்கள் நிறையவே ஏற்பட்டன. அதில் ஒருவர், ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்; மற்றையவர் வணிகம் செய்பவ…
-
- 0 replies
- 563 views
-
-
NEWS & ANALYSIS செய்திகள் 19வது திருத்த ஒழிப்பு | அமெரிக்கப் படை வரவு | கூட்டமைப்பின் திரிசங்கு நிலை – ஒரு பார்வை சிவதாசன் சிறீசேனவின் குத்துக்கரணம் தொடர்கிறது, 19 வது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டுமாம்! தேர்தல் அண்மிக்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் கோமாளி உடைகளை மீண்டும் ஒருதடவை அணியப்போகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி முன்னுதாரணமாகத் தானே உடைகளை மாற்றிக்கொண்டு விட்டார். தமிழர் தரப்பு மிகத் தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் நம்பிக்கொண்டிருந்த, தமிழர்களுக்கு விடிவுகாலம் வரப்போகின்றது என்று திரு. சம்பந்தன் அவர்களால் மீண்டும் மீண்டும் உறுதியாக அறிக்கைகளை விடுமளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்த, அந்த 19ம் சட்டத் திருத்தத்தை ஒழித்…
-
- 0 replies
- 713 views
-
-
இனப்பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையானால் புதிய அரசியல் கலாசாரம் வெற்றுச் சுலோகமே October 21, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகிறது. இந்த ஒருமாத காலத்தில் அவரும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தி பெரமுனயின் (ஜே.வி.பி. ) முக்கிய தலைவர்களும் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இலங்கை அரசியல் நிலக்காட்சியில் காணப்படக்கூடியதாக இருக்கும் மாறுதல்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள். பல அரசியல்வாதிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விடுவதற்கு தீர்மானித்ததை ஜே. வி.பி.யின் தலைவர்கள் பெரிய ஒரு மாறுதலாக குறிப்பிடுகிறார்க…
-
- 0 replies
- 262 views
-
-
வேட்பாளர் நியமன நெருக்கடி மொஹமட் பாதுஷா நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், நேற்று ஆரம்பமாகி இருக்கின்றது. இருப்பினும் தனித்தும் கூட்டாகவும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்ற முஸ்லிம் கட்சிகள், அரசியல் அணி சார்பாக யார், யாரை வேட்பாளராகக் களமிறக்குவது, எவ்வாறான தந்திரோபாயங்களைக் கையாள்வது தொடர்பில், இன்னும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை என்றே தெரிகின்றது. எந்தப் பக்கத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும், இந்தத் தேர்தலானது, மிகவும் சவாலான ஒரு தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பெரும்பாலான முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவை ஆத…
-
- 0 replies
- 516 views
-
-
அறுதிப் பெரும்பான்மையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம் மொஹமட் பாதுஷா / 2020 ஓகஸ்ட் 18 சுதந்திர இலங்கையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றிலிரண்டு அறுதிப் பெரும்பான்மையுடனான ஆட்சியை இம்முறை, பொதுஜன பெரமுன நிறுவிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பலம், ஆட்சியாளர்களுக்குத் தாம் நினைத்ததைச் செய்யக் கூடிய இயலுமையை வழங்கும். இதற்காகவே, படாதபாடுபட்டு 150 ஆசனங்களைப் பொதுஜன பெரமுன பெற்றிருக்கின்றது. ஆனால், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அடுத்துவரும் ஐந்து வருடங்களில் வசந்தகாலம் நிலவுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்துதான் விடை காண வேண்டும். தேர்தல் முடிவுகளை ஆழமாக அலசுகின்றவர்கள், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றி என்பதற்கு அப்பால், மேலும் பல விடயங்களைப் …
-
- 0 replies
- 428 views
-
-
யாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி அரசியற்சட்ட யாப்பில் 19 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு 20 ஆவது திருத்தத்தைப் புகுத்தி இறுதியில் ஒரு புதிய யாப்பையே உருவாக்கும் முயற்சி நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் மிகத்துரிதமாக நடைபெறுகின்றது. இந்தத் திருத்தங்களின் இன்னோர் அங்கமாக, சிறுபான்மை இனங்களின் நலன்கருதி இந்தியா கொடுத்த அழுத்தங்களினால் நுழைக்கப்பட்ட 13ஆவது திருத்தமும் ஒரு சாறற்ற சக்கையாக மாற்றப்படுவது உறுதி. ஆனாலும், 20 ஆவது திருத்தம் சட்டமாதவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதிலே சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் எதிரணியில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளின் அங்கத்தவர்கள் இம்மாற்…
-
- 0 replies
- 243 views
-
-
ஏமார்ந்து போன முதல் தலைவரின் நினைவு நேற்று! (09.01.17) தமிழருக்கான தனி அரசியற் பாதையின் ஆரம்பப் புள்ளி அவரே . எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து :- சிங்களத் தலைவர்களை நம்பி ஏமார்ந்து முதன் முதல் “ஏமார்ந்த தமிழ்த் தலைமை” என்ற சாதனையை நிலைநாட்டிய சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நினைவு நாள் நேற்றாகும். (பிறப்பு செப்டம்பர் 14, 1853 – ஜனவரி 9, 1924, மறைவு சனவரி 9, 1924 :அகவை 70)) இலங்கைக்குச் சுதந்திரம் கிடைப்பதில் முதன்மை வகித்த இவர் தமிழர் என்பதால் வழமைபோலவே முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறார். தமிழருக்கு என்று ஒரு அரசி…
-
- 0 replies
- 939 views
-
-
ஹூத்திகள்மீது அமெரிக்காவின் பயங்கரவாத முத்திரை – தமிழில் ஜெயந்திரன் 2 Views கடந்த ஜனவரி 10ம் திகதி, அமெரிக்காவின் அன்றைய இராசாங்க அமைச்சரான மைக் பொம்பெயோ (Mike Pompeo) வடயேமனை (North Yemen) தமது கட்டுப்பாட்டில் வைத்து, நடைமுறை அரசை (de facto state) நடத்தி வருகின்ற ஹ_த்தி (houthi) இனத்தைச் சார்ந்த இயக்கமாகிய அன்சார் அல்லா (Ansar Allah) தன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்னும் நோக்கத்தோடு அதனை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியது போன்று, யேமனில் ஏற்கனவே நிலவுகின்ற மிக மோசமான மனிதாய நிலைமைகளை இந்த அறிவிப்பு மேலும் சிக்கலுக்குள்ளாக்கி, தற்போது அந்த நாட்டுக்கு …
-
- 0 replies
- 419 views
-
-
விஸ்வரூபமெடுத்த உண்ணாவிரதம் ! இரண்டு வார காலப்பகுதியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அளித்துள்ள உறுதிமொழிக்கு அமைவாக எத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கத் தரப்பினர் எடுக்கப் போகின்றார்கள்? சிக்கல்கள் நிறைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வு காணப்படும் என்பது தெரியவில்லை. ஆயினும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய கடினமானதோர் அரசியல் நிலைமையை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள நிலையில் சாகும் வரையிலான வவுனியா உண்ணாவிரதம் மிக முக்கியமானதொரு நிகழ்வாக நடந்தேறியிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என வீதிகள…
-
- 0 replies
- 364 views
-
-
அடக்கு முறைகளுக்கு அஞ்சாது மக்கள் எழுச்சி பெற வேண்டும் – -மட்டு.நகரான் 86 Views இலங்கையில் தமிழ்பேசும் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள், வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் நடைபெற்று 20தினங்களை கடந்துள்ள நிலையில், அது தொடர்பிலான பல்வேறு சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டமானது பல்வேறு இடறுபாடுகள், அடக்குமுறைகளை மீறி நடைபெற்றதானது தெற்கிலும், சர்வதேசத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உரக்கச்சொல்லியிருக்கின்றதே உண்மையான வ…
-
- 0 replies
- 781 views
-
-
இலங்கை சிறைகளும் தமிழ் அரசியல் கைதிகளும் பல வருடங்களாக எந்த நீதி விசாரணைகளுமின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பேரினவாத அரசும், தமிழ் தேசியமும் கண்டுகொள்வது கிடையாது. இன்று குறைந்தபட்சம் 17 சிறைகளில், 954 பேர் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 40 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்கள். மிகுதி அனைவரும் நீண்ட பல வருடமாக விசாரணைகள் எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இனப்பிரச்சனைக்கான தீர்வு போல் தான், கைதிகள் விவகாரமும். பேரினவாத அரச நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோதமாக சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அதே நேரம், இவர்களை தீண்டத்தகாதவராகவே தமிழ் தேசியம் அணுகுகின்றது. தமிழ் கைதிகள் தமிழ் தேசிய பிழைப்புவாத அரசியலுக்கு பயன்படாதவர்களாகிவிட்…
-
- 0 replies
- 540 views
-
-
கண்காணிப்பு அரசியல்: குழலூதும் கண்ணன்கள் உங்கள் படுக்கையறைகள் உளவுபார்க்கப்படும் போது, நீங்கள் என்ன உணர்வீர்கள்? அந்தரங்கம் என்றவொன்றே இல்லை என்பதை அறியும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு எவ்விதத்திலும் உறவற்ற ஒருவனோ, ஒருத்தியோ உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்திருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? இன்றைய காலகட்டத்தில், இவை எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். கண்காணிப்பு என்பது சர்வவியாபகமாய் மாறிவிட்ட உலகில், யாருமே விதிவிலக்கல்ல என்ற உண்மை, எமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைச் சொன்னது எந்த அமைப்போ, நிறுவனமோ, அரசோ அல்ல. தமது உயிரைத் துச்சமாக மதித்த…
-
- 0 replies
- 386 views
-
-
வடமாகாண சபையின் நீதி:- நிலாந்தன்:- ‘என்ன சார், தனிநாடு கேட்டீர்களே, ஒரு மாகாணசபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையா?’ என்று லங்காதீப செய்தியாளர் அமைச்சர் மனோ கணேசனிடம் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். இது இப்பொழுது வடமாகாண சபை தொடர்பில் தெற்கில் உருவாகி வரும் கருத்தோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவந்;த பின் விக்கினேஸ்வரனை எதிர்க்கும் பலரும் அப்படித்தான் கேட்டு வருகிறார்கள். விக்னேஸ்வரனுக்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லை. அல்லது அவருக்கு தலைமைத்துவப் பண்புகள் போதாது என்ற தொனிப்படவே அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். வடமாகா…
-
- 0 replies
- 429 views
-
-
தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரே கட்சியாவது சாத்தியமா? துரைசாமி நடராஜா மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்பில் நீண்டகாலமாகவே விமர்சனங் கள் இருந்து வருகின்றமை தெரிந்த விடயமாகும். மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளுக்கு இடையிலான முரண்பாட்டுத் தன்மையானது மக்களின் உரிமைகள் பறிபோவதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளதாகவும் விசனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஐக்கியத்தின் அவசியமும் உணர்த்தப்பட்டிருக்கின்றது. இதனிடையே தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும், அமைச்சருமான பி.திகாம்பரம் கூட்டணி ஒரே கட்சியாகவும், தொழிற்சங்கங்கள் ஒரே சங்கமாகவும் செயற்பட வேண்டிய அடுத்தக…
-
- 0 replies
- 470 views
-
-
சர்வதேச அழுத்தங்களை குறைக்க தேர்தல் வெற்றியை காண்பிக்க முயற்சி:- -அ.நிக்ஸன்- 06 ஜனவரி 2014 எதிர்க்கட்சிகளில் செல்வாக்கு உள்ளவர்களை அரசாங்கத்த்தின் பக்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தீவிரம். அமரர் ஜே.ஆர்.ஜயவாத்தன இனப்பிரச்சினையை மையாகக் கொண்டு இனரீதியான கண்ணேட்டத்தில் சட்டங்களை உருவாக்கினார். ஆனால் அந்த சட்டங்கள் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கும் தற்போது இடையூறாக மாறிவிட்டது. அதனை எதிர்த்து வெகுஜன போராட்டங்களை ஆரம்;பிக்கும் தகுதியை இடதுசாரிகளும் இழந்துவிட்டன. தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் அது அரசாங்கத்துக்கு வாய்ப்பாக அமை…
-
- 0 replies
- 491 views
-