அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
துணைவேந்தரின் வாக்குறுதியை நம்பத் தயாராக இல்லை – தமிழ் சிவில் சமூக அமையம் 32 Views “நினைவுத் தூபி அழிக்கப்பட்ட இடத்திலேயே மீள அதனை அமைப்பேன் எனச் சொல்லி “யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியிருப்பதை நாம் நம்பத் தயாராக இல்லை. இனப்படுகொலையை நினைவு கூரும் தூபியை நீக்கி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டது போல ‘சமாதானத்’ தூபியோ அல்லது யுத்த வெற்றி தூபியோ அமைக்கப்படலாம் என நாம் அஞ்சுகிறோம். நாம் எப்படி எவ்வாறு எதனை நினைவு கூர வேண்டும் என்பதனை நாமே தீர்மானிக்க வேண்டும்.” இவ்வாறு தெரிவித்திருக்கின்றது தமிழ் சிவில் சமூக அமையம். யாழ். பல்கலைக்கழக நிலைமை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அமையம் இ…
-
- 0 replies
- 477 views
-
-
அரசியலமைப்பாக்க சபையின் (Constitutional Assembly) வழிநடத்தல் குழு (Steering Committee) டிசம்பர் 10 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அறிக்கை பிற்போடப்பட்டது. அதற்குப் பதிலாக அன்றைய தினமே வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழிநடத்தல் குழுவின் ஒரு தற்காலிக உப குழு (adhoc sub-committee) ஒன்றின் அறிக்கையை தாக்கல் செய்தார். அரசியலமைப்பாக்க சபை மார்ச் 2016இல் உருவாக்கப்பட்ட போதே வழிநடத்தல் குழு ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு 6 உப குழுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. அவ்வுபகுழுக்களின் அறிக்கை 19 நவம்பர் 2016 அரசியலமைப்பாக்க சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது இப்படியிருக்க ஏன் முன்னர் அறிவிக்கப்படாத ஓர் உபகுழு திடீரென உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழு…
-
- 0 replies
- 468 views
-
-
கட்சிப் பெயர்களும் இனவாதமும் -என்.கே. அஷோக்பரன் இனம், மதம் ஆகியவற்றின் பெயர்களைத் தன்னகத்தே கொண்ட அரசியல் கட்சிகளை, இனிப் பதிவுசெய்ய மாட்டோம் என்று, இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு, அண்மையில் அறிவித்திருந்ததாகச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செய்வதற்குத் தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சட்ட அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இனவாதம் அல்லது மதவாதம் அல்லது இன-மைய அரசியலை மாற்றியமைக்க, கட்சியின் பெயரில் குறித்த இன, அல்லது மதப் பெயரை இல்லாதொழிப்பதுதான் முதற்படி என்ற சிந்தனை ஒன்றில், அறியாமையின் விளைவு; அல்லது, அது வேறுகாரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையில் பேரினவாதத்தைத் தோற்றுவித்த பெருந்தேசி…
-
- 0 replies
- 517 views
-
-
கடன் வலை: இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைப்பது சீனாவா? மேற்குலக நாடுகளா? ரங்க சிறிலால் பிபிசி சிங்கள மொழி செய்தியாளர், கொழும்பிலிருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீன் அதிபர் ஷி ஜின்பிங்: கோப்புப்படம் ராஜிய உறவு உலகில் அண்மை காலமாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக ''சீன கடன் பொறி" காணப்படுகின்றது. ''சீனாவின் கடன் பொறியில்" இலங்கை சிக்கியுள்ளதாக பல காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா, கடனை வழங்கி அந்நாடுகளின் பொருளாதார மையங்களை சீனா கையகப்படுத்துவதாக மே…
-
- 0 replies
- 454 views
- 1 follower
-
-
குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல் புதிய கட்சிகளின் உருவாக்கம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள், ஏட்டிக்குப் போட்டியான விமர்சனங்கள், எதிர்கால முதலமைச்சர் யார் என்ற அனுமானங்கள் போன்றவை, வடக்கின் அரசியல் களத்தை மீண்டும் சுவாரசியப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே கொள்கை, கோட்பாடுகளுக்கு அப்பால், எல்லாக் கட்சிகளும், அதற்குத் தயாராக வேண்டிய நிலையில் உள்ளன. ஜனவரி மாதம் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் முறையில், மாற்றங்கள் அறிமுகமாக இருப்பதாலும், மாகாண சபைத் தேர்தலும் கூட, தொகுதிவாரி முறையுடன் கூடியதாக நடக்க இருப்பத…
-
- 0 replies
- 661 views
-
-
காலிமுகத்திடல் போராட்டம் மேற்குலக வலை June 26, 2022 —- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—- 09.04.2022 அன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பெற்ற ‘கோட்டா கோ கோம்’ (GOTA GO HOME) போராட்டம் எழுபது நாட்களையும் தாண்டித் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இப்போராட்டம் ஒரு மக்கள் புரட்சியல்லவென்றும் மேற்குலகச் சக்திகளின் பின்னணியில் – தூண்டுதலில் கொழும்பு வாழ் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கச் சமூகத்தினரைப் பயன்படுத்தி அதாவது பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அதனை அரசியல் நெருக்கடியாக மடைமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையே இதுவென்றும் இப்போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே பல அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டன. இப்போராட்டத்தைத் தத்தம் அரசியல் நிகழ்ச்சி …
-
- 0 replies
- 362 views
-
-
குஜராத் இறுதி சுற்று: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கொடுத்த குஜராத் கௌரவம் அனல் பறக்கும் பிரசாரத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தல், இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால், 22 ஆண்டு கால பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு, குஜராத்தில் மிகப்பெரிய சவாலாக அமைந்து விட்டது. தேர்தல் கணிப்புகள் காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ‘குரல்வளையைப் பிடிக்கும்’ அளவுக்கு சரிக்குச்சமானமான போட்டி என்றாலும், பா.ஜ.க தரப்பில், பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விடலாம் என்றே இன்னும் கருதப்படுகிறது. …
-
- 0 replies
- 444 views
-
-
மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா? யதீந்திரா தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் மக்கள் ஆணையை கோரி நிற்கிறது. தமிழரசு கட்சியின் பிரச்சாரங்களை பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, தாங்கள் எதைச் சொன்னாலும் மக்கள் ஆட்டு மந்தைகள் போல் தலையை ஆட்டிக் கொண்டிருப்பர். எனவே தங்களால் மக்களை இலகுவாக ஏமாற்றிவிட முடியுமென்றே அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. சம்பந்தன் முன்னைய தேர்தல்களின் போது எதைச் சொன்னாரோ அதையே தற்போதும் சொல்லிவருகிறார். மக்கள் சுயநிர்ணய உரிமையை வ…
-
- 0 replies
- 273 views
-
-
திலீபன்: நேற்று இன்று நாளை! Kuna Kaviyalahan
-
- 0 replies
- 616 views
-
-
இனவாத தாக்குதல்கள்: முஸ்லிம்களின் தனித்துவங்கள் இதற்கு முன்னர், முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெற்ற நேரங்களைப் போலவே, கடந்த மாதம் அம்பாறையிலும் இம்மாத ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்களில், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் போவதாக, அரசாங்கம் கூறிவருகிறது. இம்முறை அரசாங்கம், ஒருபடி முன் சென்று, ‘பேஸ்புக்’, ‘வட்ஸ்அப்’, ‘வைபர்’ ஆகிய சமூக வலைத்தளங்களைத் தற்காலிகமாகத் தடை செய்தது. அத்தோடு, அதன் காரணமாக, இலங்கைக்கு விஜயம் செய்த ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் அதிகாரிகளோடு, ‘பேஸ்புக்’இல…
-
- 0 replies
- 850 views
-
-
இலங்கை பல்லின நாடா? பெரின நாடா? இலங்கையைப் போன்ற பலமத, பல்லின, பல்மொழி, பல கலாசார நாட்டில் ஒரு மத, ஒரு இன, ஒரு மொழி, ஒரு கலாசாரம் எனும் ரீதியில் முக்கியத்துவம் வழங்கப்படும் யாப்பு இயற்றப்படுமாயின் அது பல்லின தேசியத்துக்கும் பல்லின ஒற்றையாட்சிக்கும் பல்லின இறைமைக்கும் பல்லின சுயநிர்ணயத்துக்கும் பொருத்தமாக அமையாது. இதுவே ஆங்கிலேயர் இலங்கைக்குக் கடைசியாக வழங்கிய சேர் ஐவர் ஜெனிங்ஸின் சோல்பரி யாப்பு முன்வைத்த வடிவமாகும். எத்தனையோ நாடுகளை ஆட்சி புரிந்து அனுபவம் பெற்ற அவர்களின் கணிப்புதான் இது அரசியல் அறிவிலும் நிர்வாகத் தந்திரத்திலும் அவர்கள் நுட்பம் மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்கள் …
-
- 0 replies
- 818 views
-
-
பிச்சையெடுக்கச் சுதந்திரம்? - நிலாந்தன் “நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்” இப்படிப் பேசியிருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது. நாங்கள் சுதந்திரத்தை இழந்து விட்டோம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இதை எப்பொழுது கூறுகிறார்? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகளின் பின் கூறுகிறார். ஆயின்,2009 ஆம் ஆண்டு ராஜபக்ச சகோதரர்கள் வென்று கொடுத்த சுதந்திரம் எங்கே? அல்லது அது சுதந்திரமே இல்லையா? ராஜபக்சக்கள் யாருக்காக நாட்டை மீட்டுக் கொடுத்தார்களோ, அந்த மக்களே இப்பொழுது நாட்டை விட்டு வெளியேறிக் கொண்…
-
- 0 replies
- 763 views
-
-
ஆட்சி அதிகாரத்தில் தக்க வைக்கும் போராட்டத்தில் அழியும் மக்கள் by Dr. S. Jamunanantha படம் | TAMILGUARDIAN இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலைமை நிறைவேற்று அதிகாரத்தினை மூன்றாவது தடவைக்கு எடுத்து சர்வாதிகார ஆட்சியினை ஏற்படுத்துவது ஆகும் அல்லது நிறைவேற்று சர்வாதிகாரியினை இல்லாது செய்யும் மாற்றம் ஆகும். இதற்கு உலக நாடுகளில் நிகழ்ந்த உதாரணங்களை மேற்கோள் காட்டுதல் மிகவும் சுலபமாக விளங்கக்கூடியதாக அமையும். நிறைவேற்று சர்வாதிகாரியாக மூன்று தடவையும் தொடர்ந்தவரான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினன்ட் மார்க்பேகான், 1965 பதவிக்கு வந்து, 1969இல் இரண்டாவது தடவை போட்டியிட்டு வென்று, 1972 மூன்றாவது தடவை இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்து 1986 வரை ஆண்டு வந்தார். இவரி…
-
- 0 replies
- 415 views
-
-
2024: வெற்றி ஆண்டா? தோல்வி ஆண்டா? நிலாந்தன். December 31, 2023 கடந்த 24ஆம் திகதி இரவு பதினோரு மணிக்கு அதாவது நத்தார் பிறப்புக்கு முன், மட்டக்களப்பில் ஒரு சோகமான சம்பவம் இடம்பெற்றது. 42 வயதான ஒரு குடும்பஸ்தர் கல்லடி பாலத்தில் இருந்து வாவிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் நீரில் மூழ்கத் தொடங்கியதும் சாகப் பயந்து பாலத்தின் தூண் ஒன்றைப் பிடித்துக் கொண்டு தத்தளித்திருக்கிறார். படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றினார்கள். போலீஸ் அவரை தற்கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்திருக்கிறது. அவர் ஒரு ஏழை மேசன். ஐந்து பிள்ளைகளின் தந்தை. கட்டிடப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அவருக்கு தொழில் இல்லை. நத்தார் சீ…
-
- 0 replies
- 435 views
-
-
அரசியல் விடயங்களில், குறிப்பாக பேச்சுவார்த்தைகளில், இரகசியம் காப்பது சிலசந்தர்ப்பங்களில் முக்கியமாகின்றது. எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள் தமக்குள் ஒருஉடன்பாட்டைக் காண்பதற்கு முன்பு அவ்விடயங்கள் வெளியே தெரியப்படுத்தப்பட்டால், வெளிச்சக்திகள் வேறு காரணிகளை உட்புகுத்தி அதனைக் குழப்பிவிடும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. உடன்பாடு கண்டபின்போ ஏனையோர் அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. ஆயினும், அரசியலில் இரகசியம் காப்பது இன்னொருவகையில் பார்க்கப் போனால் ஆபத்து நிறைந்ததாகும். பொதுமக்களின் பார்வைக்கு அப்பால் பேரங்கள் பேசப்படும்போது, பேசுபவர் ஏதாவதொரு சன்மானத்திற்கு மயங்கி தனது நிலைப்பாட்டினை விட்டுக் கொடுக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அல்லது ஒருவர் மற்றக் கட்சித…
-
- 0 replies
- 382 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்; ஆட்சி மாற்றத்தை கேள்விக்குள்ளாக்குமா? யதீந்திரா படம் | COLOMBOTELEGRAPH மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடப்போகிறார் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் இறுதியில் போட்டியிலிருந்து விலகுவாரானால், அதில் ஏதோவொரு பலம்பொருந்திய சக்தியின் திருவிளையாடல் ஒழிந்திருக்கிறது என்றே நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அது தவிர அவர் போட்டியிடுவார் என்பது உறுதியாகிவிட்ட ஒன்றுதான். நான் மஹிந்தவின் மீள்வருகை தொடர்பில் எழுதிய முன்னைய பத்தியில் குறிப்பிட்டவாறு மஹிந்த தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான், அவர் மீண்டும் தன்னால் அரசியலில் நிமிர்ந்தெழ முடியுமென்று நம்புகிறார். அவரது நம்பிக்கை சரியென்று கூறுவதற்கும் அதனை பலப்ப…
-
- 0 replies
- 235 views
-
-
உறவுகளை தேடி 10 வருடங்களாக போராடும் மக்கள் தமது அன்புக்குரியவர்களை தொலைத்துவிட்டு அவர்களை மீட்டுத்தருமாறு கோரி போராடிக்கொண்டிருக்கும் காணாமல்போனவர்களின் உறவுகள் தற்போது பாரிய விரக்திநிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். தமது காணாமல்போன உறவுகளை மீண்டும் காணவே முடியாதா, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாதா, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இந்த மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். யுத்தகாலத்திலும் அதன் முடிவிலும் இவ்வாறு பலர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இவ்வாறு …
-
- 0 replies
- 578 views
-
-
கிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 12:17Comments - 0 காணிகளும் வீடுகளும் வாங்கி விற்கப்படுவது போல, நாடுகளும் வாங்கி விற்கப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவ்வாறு ஒரு நாட்டையோ, அதன் பகுதியையோ விலை பேசுவதும் விற்கச் சொல்லிக் கேட்பதும், அதற்காகத் தயாரித்திருக்கும் பேரமும் அபத்தமாகத் தெரியுமல்லவா? ஆனால், இன்றைய உலக அரங்கு, அபத்தமும் அவலமும் ஆபத்தும் கலந்த கலவையாய் இருக்கின்றது. இதை மெய்யாக்கும் கதை ஒன்றையே, நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். காணிகளையும் கட்டடங்களையும் வாங்கி விற்கும் வியாபாரி, தனது 19ஆம் நூற்றாண்டு நினைவுகளுடன் உலகின் பலம் பொருந்திய நாட்டின் ஜனாத…
-
- 0 replies
- 598 views
-
-
[size=4]சட்டமும் சனநாயகமும் [/size] [size=3][size=4]August 24, 2012[/size][/size] [size=2][size=4]சனநாயகத்தின் உண்மை வெளிப்பாடு சுதந்திரம் உரிமை சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றது நாடுகள்தோறும் அப்படி இருக்கையில் சனநாயகம் உள்ளதாக சொல்லப்படுவதை முழுதாக நம்ப முடியுமா?[/size][/size] [size=2][size=4]தமக்கு வேண்டாதவற்றை சட்டம் போட்டு தடை செய்துவிட்டு மிகுதி உள்ளதே சனநாயகம் என்று சொல்லுவது சனநாயகத்தின் பெயரில் நடத்தும் சர்வாதிகாரமே என்றால்மறுப்பவர் உண்டா?[/size][/size] [size=2][size=4]பாதிக்கப்படுவோரின் போராட்டங்களை சனநாயக வழியில் சந்திக்காது படைகளை ஏவி பாதிக்கப்பட்டோரை விரட்டுவது அடிப்பது சிறையிலடைப்பது கொலைசெய்வது போன்ற சர்வாதிகார வழியில் அரசு நடந்து க…
-
- 0 replies
- 520 views
-
-
முளையில் கிள்ளாததை வெட்டிவிடுதல் - லக்ஸ்மன் முளையிலேயே கிள்ளப்படாத விடயங்களான இனத்துவேசம், பேரினவாதம், பாரபட்சம், அடக்குமுறைகள், ஆதிக்கத்தன்மை போன்றவற்றினை நன்றாக வளர்ந்துவிட்ட பின்னர் சரிசெய்து விடலாம் என்று எண்ணங்கொள்வது சாத்தியத்துக்குட்படுத்த முடியாதது என்பதே யதார்த்தம். இந்த யதார்த்தத்தைக் கடந்து செல்ல நினைப்பது குதிரைக் கொம்பானது. இதனையே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்ய நினைக்கிறது. காலம் கடந்த பின்னர் அதனையும் பூசி மெழுக நினைப்பதல்ல, முனைவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்வது எந்த அடிப்படையில் நாட்டில் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதுதான் இந்த இடத்திலுள்ள கேள்வி. மக்கள் விடுதலை முன்னணியினர் இவ்வா…
-
- 0 replies
- 200 views
-
-
இழவு அரசியல்: மரணங்கள் புனிதமாக்கா... இலங்கை அரசியலில் இழவு அரசியலுக்கு ஒரு வரலாறு உண்டு. அது சில தருணங்களில் அதிகாரத்துக்கான அவாவாக வெளிப்பட்டுத் தொலைக்கும். அந்த அபத்தத்தை கடந்த வாரம் கண்டோம். ஒரு மரணத்தை முதலீட்டாக்கி, அரசியல் இலாபம் பார்க்கும் செயல், 'இலங்கை அரசியல்' அதன் அடியாளத்தில் தேக்கி வைத்திருப்பது, பேராசையையே என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டியது. "மலை சரிந்துவிட்டது" என்போர், கடந்த 20 ஆண்டுகளில் மலையக மக்களின் வாழ்வில், எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்பதை முதலில் சொல்லட்டும். அதன் பின்னர், சரிந்தது மலையா, வேறெதுவுமா என்பதைப் பற்றிப் பார்க்கலாம். மரணம் ஒருவரைப் புனிதனாக்கமாட்டா. உணர்வுபூர்வமான கதைகளும் அனுபவப் பகிர்வுகளும் பத்திரிகை…
-
- 0 replies
- 868 views
-
-
தெளிவான கொள்கைகளைக் கடைப்பிடித்தால் இன முறுகலை தவிர்க்கலாம் தமிழ் மக்களின் தேவைகள் அதிகமதிகம் உள்ளன. ஆகவே அதனைப் புறக்கணித்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான வாய்ப்புகளையும் நன்மைகளையும் தடுக்க எவரும் முற்படக் கூடாது. பாதிக்கப்பட்டுள்ள எவருக்கும் அநீதி இழைக்கப்பட்டு விடக் கூடாது. இவ்வாறான தெளிவான கொள்கைளைக் கடைப்பிடித்தால், இன முறுகல் வருவதை எந்த மட்டத்திலும் தவிர்த்துக் கொள்ளலாம். இந்த இடத்தில் மூன்றாம் தரப்பு உள்நுழைந்து, பிரச்சினைகளை ஊதிப் பெருப்பித்து அரசியல் தேவைக்குப் பயன்படுத்த சிறுபான்மை இனங்கள் இடமளித்து விடக்கூடாது. சிறுபான்மைச் சமூகங்களுக்கிடையிலான உள்ளக முரண்பாடுகளை, தாங்களே தீர்த்துக் கொள்ளும் வகையில் வழிப்படுத்த வேண்டும்” என்று, மட்டக்களப்பு ம…
-
- 0 replies
- 324 views
-
-
தமிழரசு கட்சியின் ஒன்று கூடலும் தவிர்க்கப்பட்ட இறுதி முடிவுகளும். பா.அரியநேந்திரன் | கே.வி. தவராசா
-
- 0 replies
- 318 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-01#page-17
-
- 0 replies
- 520 views
-
-
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பங்கரில் பிடித்து வைக்கப்பட்டுப் பின் கொல்லப்பட்டது தொடர்பாகச் சமீபத்தில் "சனல் 4' வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அனைத்துத் தரப்பினரும் இதைக் கண்டித்துள்ளனர். ஹிட்லரின் நாசி அழித்தொழிப்புகளுடன் இதை ஒப்பிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்கிற சட்ட மன்றத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்."சனல் 4' வெளியிட்டுள்ள இப்படங்கள் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பதைக் கருணாநிதி கண்டித்துள்ளார். இந்தியாவின் முக்கிய நாளிதழான"இந்து' வில் என்.ராம் ஆசிரியராக இருந்தவரை ராஜபக்ஷக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு…
-
- 0 replies
- 966 views
-