அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம், பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பெண்கள,; குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாயிரம் பேரை கொன்று குவித்தது. பல நூற்றுக்கணக்கான பெண்களை கற்பழித்தது. பெண்கள் கற்புடன் இருப்பதும், வயோதிபர்கள் குழந்தைகள் உயிருடன் இருப்பதும் இந்தியப்படையின் கண்ணோட்டத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது. உண்மையில் இலங்கையில் இந்தியப்படை இரு…
-
- 1 reply
- 1k views
-
-
உண்ணாவிரதம் இருந்தால் மாத்திரமே அறியப்படும் இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது என முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நான்கு வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தமை அனைவருக்கும் ஞாபகமிருக்கலாம். மேலும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கைதிகள் ஈடுபட்டால் அது குறித்து அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதி அமைச்சுக்கு இதில் நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றுமேயில்லை என்றும் அவர் அச்சந்தர்ப்பத்தில் கூறியிருந்தமை முக்கிய விடயம். இந்நிலையில் பல தடவைகள் உணவு தவிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்க் கைதிகளுக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் பிரதிநிதிகளால் வழங்கப்பட்டு வருவது என்னவோ ஆறுதல் வார்த்தைகளும் நம்பிக்கைகளும் மட்டும…
-
- 0 replies
- 417 views
-
-
பேயும் பிசாசும் - - துரைசாமி நடராஜா ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இலங்கையின் வரலாற்றில் முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இக்கட்சிகள் மாறி மாறி ஆட்சி பீட மேறி இருக்கின்றன. இந்நிலையில் இக்கட்சிகளின் செயற்பாடுகள் மற்றும் போக்குகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. கட்சிகள் நாட்டின் அபிவிருத்திக்கு உரியவாறு வலு சேர்க்கவில்லை. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்கிற பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் இவ்விரு பெரும்பான்மைக் கட்சிகளுக்க…
-
- 0 replies
- 818 views
-
-
இணக்கப்பாட்டின் அவசியம் - - பி.மாணிக்கவாசகம் இந்து சமுத்திரத்தின் முத்தாகத் திகழ்கின்ற இலங்கைத் தீவில் இனக்குழுமங்களும், சமயம் சார்ந்த சமூகத்தினரும், மொழிவாரியான மக்களும் தீவுகளாகவே வாழ்கின்றனர். அவர்களுக்கிடையில் காலங்காலமாக நிலவி வந்த நல்லுறவும் நல்லிணக்கமும், ஐக்கியமும் படிப் படியாகத் தேய்ந்துள்ளமையே இதற்குக் காரணம். இனப்பிரச்சினை காரணமாக எழுந்த ஆயுதப் போராட்டத்தின்போது இனவாத அரசியல் கொள்கைகள் அளவுக்கு மீறிய வகையில் கடைப்பிடிக்கப்பட்டு, தமிழ் மக்கள் அனைவரையுமே பயங்கரவாதி களாக நோக்கும் ஒரு நிலைமை உருவாகியிருந்தது. இதனால் சிங்கள, தமிழ்மக்களுக்கிடையில் சமூக ரீதியாக இருந்து வந்த பிணைப…
-
- 0 replies
- 508 views
-
-
83 ஜூலை : இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவு – நிலாந்தன்… July 27, 2019 83 ஜூலை தொடர்பில் பசில் பெர்னாண்டோ கொழும்பு டெலிகிராப்பில் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் அந்த இன அழிப்புக்கு சூத்திரதாரி அப்போது இருந்த அரசுத் தலைவர் ஜெயவர்தனவே என்று குற்றம் சாட்டியுள்ளார்.கொல்லப்பட்ட 13 ராணுவத்தினரின் உடல்களை கொழும்புக்கு கொண்டு வந்து கூட்டாகத் இறுதிக் கிரியைகளை செய்ய வேண்டும் என்று படைத் தரப்பும் ஏனைய சில தரப்புக்களும் கேட்ட பொழுது ஜெயவர்த்தனா அதற்கு சம்மதித்தார். ஆனால் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அருகருகே வாழும் கொழும்பில் அவ்வாறு கூட்டாக இறுதிக் கிரியைகளை செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று அப்போதிருந்த கொழும்பு நகர …
-
- 0 replies
- 663 views
-
-
தளர்ந்து வரும் மஹிந்தவின் ‘பிடி’ கே. சஞ்சயன் / 2019 ஜூலை 26 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:01 Comments - 0 ‘ஆடி போய் ஆவணி பிறந்தால், நல்லது நடக்கும்’ என்று சோதிடர்கள் கூறுவது வழக்கம். அதுபோல, ஆடி மாதம் முடிந்து, ஆவணி மாதம் எப்போது பிறக்கும் என்று, பிரதான அரசியல் கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில், ஐ.தே.க வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, தனது புதிய கூட்டணியை அறிவிக்கப் போகிறது. அதை ஒட்டியதாக, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஐ.தே.க பெரும்பாலும், சஜித் பிரேமதாஸவை முன்னிறுத்தும் வாய்ப்புகள் தென்படுகின்றன. கட்சிக்குள் அதற்கு முரணான கருத்துகள், நிலைப்பாடுகள் இருந்தாலும், சஜித்தை மு…
-
- 1 reply
- 875 views
-
-
சுடு தேநீரும் சுடலை ஞானமும் Editorial / 2019 ஜூலை 25 வியாழக்கிழமை, பி.ப. 06:46 Comments - 0 பௌத்த பேரினவாதம், இந்து மக்களிடம் கோரிய ஒற்றுமை, எத்தகையது என்பதைக் கடந்த வாரம், கன்னியா நிகழ்வுகள் உணர்த்தி இருக்க வேண்டும். காலச்சக்கரம் மெதுமெதுவாக நகர்ந்து, கல்முனையில் இருந்து கன்னியா நோக்கி வந்துள்ளது. கல்முனையில் களமாடியவர்களே, கன்னியாவிலும் களமாடினார்கள். கல்முனையில் பேசிய அதே குரல்கள்தான், கன்னியாவிலும் பேசின. சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை, மதமுரண்பாடுகளாக மாற்றி, அதிலிருந்து பலன் அடையலாம் எனக் கனவு கண்டவர்கள் இருக்கிறார்கள். கல்முனையில் பௌத்த, இந்து ஒற்றுமை பற்றிப் பேசப்பட்டபோது, அதைச் சிலாகித்துப் போற்றியவர்கள் இருக்கிறார்கள…
-
- 0 replies
- 784 views
-
-
உலகளாவிய கோப்பி நெருக்கடி: எனது குருதியே, உனது கோப்பி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 25 வியாழக்கிழமை, பி.ப. 06:24Comments - 0 நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள், எவ்வாறு எம்மை வந்தடைகின்றன என்பதை, பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதில்லை. பெட்டிக்கடைகள் இருந்த காலம் போய், இன்று மாபெரும் பல்பொருள் அங்காடிகளில், பொருள்களை வகைவகையாகப் பிரித்து, அடுக்கி வைத்திருப்பவற்றில் இருந்து, தெரிந்து வாங்குவது வழக்கமாகிவிட்ட நிலையில், பொருள்கள் குறித்த சிந்தனைகளும் அது பற்றிய சிந்தனை முறைகளும் எம்மிடம் மாற்றமடைந்து விட்டன. ஊரில் உள்ள பெட்டிக் கடைக்காரரிடம், ஒரு பொருளை வாங்கும் போது, அவருடனான உரையாடல், எமக்கு அந்தப் பொருள் பற்றியும் அந்தப் பொருளை அவர் எங்கிருந்…
-
- 0 replies
- 693 views
-
-
கிழக்கின் அரசியலைப் புரிந்து கொள்ளல் Editorial / 2019 ஜூலை 25 வியாழக்கிழமை, பி.ப. 05:41 -இலட்சுமணன் தமிழர் பிரச்சினையை, சிங்கள தேசத்துக்கு விளக்க முனைவது, பயனற்ற செயலென்று, அமரர் டி. சிவராம், 2004ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஒரு கட்டுரையை வரைந்திருந்தார். இப்போதைய வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியல் நிலைமையைப் பார்த்தால், தமிழ் அரசியல்வாதிகளுக்குக்கூட தமிழர்களுடைய நிலைமையைப் புரிய வைக்க முயல்வது, பயனற்ற செயல் என்று தான் எண்ணத் தேன்றுகிறது. ‘தேர்தல் திருவிழா’ என்பது எம்மிடையே உள்ள அனைத்துக் கீழ்த்தரமான குணங்களையும் பிரிவினைகளையும் வெளிக்கொணர்வதற்கான களமாக அமைந்துவிடுகிறது. இந்த நச்சுச் சூழலிலிருந்து நாம் விடுபட வேண்டும். தனி நபர்களை மற…
-
- 0 replies
- 756 views
-
-
நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர். பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஆவார் அமித்ஷா. இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். அமித் சா 1964 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு தொழில் அதிபர் ஆவார். பயோவேதியியலில் இளையர் பட்டம் பெற்றார். சிலகாலம் பங்குச் சந்தைத் தொழிலில் ஈடுபட்டார். குசராத்து மாநில நிதிக் குழுமத்தில் தலைவராகவும் ஆமதாபாது மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணி செய்தார். 2014 இந்திய பொதுத் தேர்தல் ஜூன் 2013 இல் உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அமர்த்தப்பட்டார். ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் …
-
- 7 replies
- 1.9k views
-
-
ஜூலைக் கலவரம் தந்த பயன்களும் வீணாகிவிட்டன எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 24 புதன்கிழமை, பி.ப. 10:18 Comments - 0 நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்த ‘கறுப்பு ஜூலை’ என்று பொதுவாக அழைக்கப்படும், தமிழர்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற கலவரங்கள் ஆரம்பித்து, இன்றோடு 36 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால், அந்தக் கொடுமைக்கு மூலகாரணமாக அமைந்த இனப் பிரச்சினைக்கு, நிலையான தீர்வொன்று இன்னமும் காணப்படவில்லை. கடந்த வாரம், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் 125ஆம்…
-
- 0 replies
- 621 views
-
-
கறுப்பு ஜூலைகளுக்கு முகம்கொடுத்தல் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 24 புதன்கிழமை, மு.ப. 06:49 Comments - 0 தென் இலங்கை திட்டமிட்டு அரங்கேற்றிய ‘கறுப்பு ஜூலை’ வெறியாட்டத்தை, தமிழ் மக்கள் எதிர்கொண்டு 36 ஆண்டுகளாகின்றன. அன்றைய ஜே.ஆர் அரசாங்கத்தின் குண்டர்கள், தமிழ் மக்களை வீடு வீடாகத் தேடி வேட்டையாடினார்கள்; அம்மணமாக்கித் தீயில் எறிந்தார்கள்; இறந்த உடல்களின் மீதேறி நின்று, வெற்றிக் கோஷமெழுப்பினார்கள்; அந்தக் கோர ஒலியின் அதிர்வு, இன்னமும் குறைந்துவிடவில்லை. இந்த நாட்டில், தமிழ் மக்கள் கொண்டிருக்கிற பாரம்பரிய உரிமையையும் அதுசார் இறைமையையும் சூழ்சிகளாலும் காடைத்தனத்தாலும் வெற்றிகொண்டுவிட முடியும் என்று, தென் இலங்கை தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றது…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியல்வாதிகளின் அபிவிருத்தி அரசியல்: பறிபோகும் தமிழர் நிலங்கள் Editorial / 2019 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:05 Comments - 0 -க. அகரன் ‘காற்று இடைவெளிகளை நிரப்பும்; தேசம் தன் தலைவர்களை உருவாக்கும்’ என்பது அறிஞர் அண்ணாவின் வாக்காக காணப்பட்டிருந்தது. இவ் வார்த்தை, சொல்வதற்கு உணர்வுபூர்வமானதாகவும் தத்துவார்த்தமானதாக இருந்தாலும் கூட, அதன் உள்ளார்ந்தக் கருத்தை நுட்பமாகப் பார்த்தல் காலத்தின் தேவையாகும். வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு அல்லது சிறுபான்மை இனங்களைக் கொண்ட தேசங்களுக்கு, மேற்குறிப்பிட்ட வாக்கு, வலுவான கருத்தைப் போதிப்பதாகவே இருக்கின்றது. வளர்ச்சி அடையும் நாடொன்றில், தற்போதைய விஞ்ஞானத் தொழில்நுட்ப, நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, தனத…
-
- 4 replies
- 924 views
-
-
வரலாற்றின் திருப்புமுனையில் வரலாறு படைப்போம் காரை துர்க்கா / 2019 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:51 Comments - 0 ஈழத்தமிழர் வரலாற்றில் ஜூலை மாதம், கறைகள் படிந்த கறுப்பு மாதமாகவே, கடந்து செல்கின்றது. இவ்வருட ஜூலை மாதமும் இரத்தக்களரியை நோக்கிச் செல்கின்றதா என்ற பயமும் பதற்றமும் தமிழர் மனங்களில் குடிகொண்டு உள்ளது. தமிழர் தேசம் மீது, இரண்டு வகையான போர்கள், பேரினவாத அரசாங்கங்களால் ஏககாலத்தில் தொடுக்கப்பட்டு உள்ளன. முதலாவது, சிங்கள - தமிழ் இனப்பிணக்குத் தொடர்பான தீர்வுத் திட்டங்களைத் திட்டமிட்டவாறு, நொண்டிச் சாட்டுகளைக் கொண்டு காலம் கடத்திச் செல்வது. அதேநேரம், அக்காலப் பகுதியில் வடக்குக் கிழக்கின் தமிழர் இனப்பரம்பலை விரைவாக மாற்றி, அவர்களைப் பலம் கு…
-
- 1 reply
- 1.3k views
-
-
' நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ' - வீ.தனபாலசிங்கம் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் சரியாக மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமென்றால், அதற்கு பிறகு இலங்கை அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்ற வெறுப்பூட்டும் போக்குகளுக்கு சிங்கள - பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இருக்கிறது. கடந்த மூன்று மாதகாலத்தில் அரசியல் விவாதங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான காரணிகளில் சிங்கள - பௌத்த மேலாண்மைவாதம் முதல்நிலை வகித்துவருகிறது. அதன் முன்னரங்க சேனைகளாக பிக்குமார் விளங்குகிறார்கள். அரசியலில் பிக்குமாரின் ஆதிக்கம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் வளர்…
-
- 0 replies
- 724 views
-
-
கறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்! உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள். ஈழத்தமிழர்களுக்கு வருடங்கள் வன்முறைகளால், மாதங்கள் படுகொலைகளின் எண்ணிக்கைகளாலும் ஆனவை. இத்தனை ஆண்டுகால ஈழத்தமிழர்களின் வாழ்வில், தமிழர்கள் கடந்து வந்த பாதையினை மீட்டிப்பார்த்தால், எல்லா மாதங்களுமே, எதோவோர் வன்முறையினாலோ அல்லது வன்முறைகளினாலோ சூழப்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரிகிறது. இவையெல்லாவற்றையும் இலங்கையின் பெரும்பான்மை அரசு எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றியதோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் இதுபோன்ற துயர வரலாறுகள் அழிக்கப்பட…
-
- 3 replies
- 975 views
- 1 follower
-
-
கல்முனையும் கன்னியாவும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 04:21 Comments - 0 கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழுமையான அதிகாரங்களுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தல் என்பது, அப்பிரதேச தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த விடயம் தொடர்பில், அப்பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களிடையே அபிப்பிராய பேதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அண்மையில் இந்த விடயம் சூடுபிடித்தது. இது, இன்று நேற்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையோ, இன்று நேற்று உருவான பிரச்சினையோ அல்ல. 1989ஆம் ஆண்டிலிருந்து மிக நீண்ட காலமாக அப்பிரதேச தமிழ் மக்களாலும் தலைமைகளாலும் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கையாகும். இதுவரை காலமும் பதவிக்கு வந்த எந்த அரசாங்கமும் இதனைக் கண்ட…
-
- 0 replies
- 465 views
-
-
தி.மு.க - பா.ஜ.க உறவு எதிர்காலக் கூட்டணிக்கு முன்னோட்டமா? எம். காசிநாதன் / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 03:04 Comments - 0 நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதித்துவம் ஆக்கபூர்வமானதாகக் காணப்படுகிறது. சென்ற முறை, அ.தி.மு.கவுக்கு 37 எம்.பி.க்கள் இருந்தார்கள். மாநிலத்திலும் அ.தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தின் உரிமைகள் தொடர்பாக, பெரிய அளவில் சாதிக்க இயலவில்லை. முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருந்த போது, சாதித்த ஜல்லிக்கட்டு விவகாரம் போல் கூட, ‘நீட்’ பரீட்சை உள்ளிட்ட மாநிலத்தின் உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நிகழ்விலும் சாதனை புரிய இயலவில்லை. அ.தி.மு.கவின் ஆட்சியை நடத்துவது மட்டுமே முன்னுரிமை என்ற நி…
-
- 0 replies
- 411 views
-
-
பல தசாப்தங்களாக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் பல தசாப்தங்களாகவே திட்டமிட்டு இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்ட இந்த குடியேற்றங்கள், இத்தனை தசாப்தங்களான பரிணாம வளர்ச்சி பெற்று தமிழரின் இனப்பரம்பலை மாற்றியமைத்துள்ளதாக பேரவையின் இணைத் தலைவர் வி.நவனீதன் வரலாற்று ரீதியாக சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும்’ எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தா…
-
- 3 replies
- 549 views
-
-
தமிழர் பிரதேசங்களில் பௌத்த கொடியை ஏற்றுவது எதை வெற்றிகொண்டதன் கொண்டாட்டம்? இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனதில் இன்னும் மாறாத ரணமாய் இருக்கும் கறுப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று 36 வருடங்கள் கடந்து விட்டன. ஜூலை கலவரத்தால் உயிர் மற்றும் பொருளாதார சேதங்களுக்கு முகங்கொடுத்த தமிழ் மக்களில் பலர் நாட்டின் பல பாகங்களுக்கு இடம்பெயர்ந்த அதே வேளை, பலர் குடும்பங்களுடன் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து விட்டனர். கறுப்பு ஜூலை கலவரங்களில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதமாக்கப்பட்ட அதேவேளை சிங்கள காடையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் பூரணமாக வெளிவரவில்லை. இக்கலவரத்தில் சிறைக்குள் இருந்த தமிழ்க் கைதிகளும் கொடூரமாகக் கொல…
-
- 1 reply
- 681 views
-
-
மாறத்தொடங்கியுள்ள காட்சிகள் அரசியலில் எப்போதும் எதிர்பாராத விடயங்கள், எதிர்பார்க்காத சந்தர்ப்பங்களில் இடம்பெறும் என்பதே யதார்த்தம். அப்படித்தான் வரலாறு முழுவதும் நடந்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலிலும் அவ்வாறான எதிர்பார்க்காத விடயங்கள், எதிர்பாராதபோது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் தற்போதைய சூழலில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்ற பின்னணியில் அரசியலில் ஆங்காங்கே காட்சிகள் மாற ஆரம்பித்திருப்பதைக் காண முடிகின்றது. ஜனாதிபதி தேர்தலை நோக்கிய ராஜதந்திர நகர்வுகளும் காய்நகர்த்தல்களும் ஆரம்பித்துள்ள நிலையிலேயே இவ்வாறு காட்சிகள் மாற ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முட…
-
- 0 replies
- 633 views
-
-
மென்வலு யுத்தம்! - பி.மாணிக்கவாசகம் விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகின்றன. ஆனால் உண்மையில் யுத்தம் முடிவுக்கு வரவில்லை. அது மறுவடிவத்தில் சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ்மக்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதையே உணர முடிகின்றது. ஆனால், இது ஆயுதமேந்திய யுத்தமல்ல. பதிலாக மென்வலு சார்ந்த யுத்தம். ரத்தம் சிந்தாதது. எனினும் மோசமானது. இன அழிப்பை அப்பட்டமான நோக்கமாகக் கொண்டது. அந்த வகையில் பௌத்த மதத்தைத் திணிக்கவும், தமிழ்மக்களின் தாயக மண்ணைக் கபளீகரம் செய்வதற்காகவும் இந்த மென்வலு யுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. …
-
- 0 replies
- 908 views
-
-
கன்னியா: சிவபுராணம் எதிர் இராணுவம்? நிலாந்தன்.. July 21, 2019 கன்னியா வெந்நீரூற்றில் தமது மரபுரிமைச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டாயிரம் மக்கள் திரண்டிருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை தென்கயிலை ஆதீனமும், கன்னியா மரபுரிமை அமைப்பும் மேற்படி திரட்சியை ஒழுங்குபடுத்தியிருந்தன. ஒரு வழிபாடாக தேவாரங்களைப் பாடிக்கொண்டு கன்னியாப் பிரதேசத்திற்குச் செல்வது இத்திரட்சியின் நோக்கமாகும். முகநூலில் விடுக்கப்பட்ட அழைப்பு மற்றும் கைபேசிச் செயலிகளின் வலையமைப்பு போன்றவற்றிற்கூடாக மக்கள் திரட்டப்பட்டிருக்கிறார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கே க…
-
- 0 replies
- 462 views
-
-
THANKS DEAR HAARISநன்றி அன்புள்ள ஹாரீஸ் அவர்களே. - வ.ஐ.ச.ஜெயபாலன்.பெருமதிப்புக்குரிய இளம் தலைவர் ஹாரிஸ் அவர்களுக்கு, நீங்கள் எனக்கு எழுதிய பதில் அறிக்கைக்கு நன்றிகள்.. நீங்கள் துணிச்சலுள்ள தீவிரமான செயற்பாட்டாளர், நேர்மையானவர் என்பதை அறிவேன்.கல்முனை போன்ற பிரச்சினைகளில் உங்களை உள்ளடக்கி உங்களோடு பேசி ஒரு முடிவெடுத்தால் அது தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் நிரந்தரமான உறவுக்கும் நன்மைகளுக்கும் வழிவகுக்கும் என்பதை எப்போதும் உணர்ந்தே இருந்தேன், கடினமானது எனினும் கிழக்கின் நலன்கருதி நீங்களும் கோடீஸ்வரனும் வியாழேந்திரனும் புதிய சூழலில் சந்தித்துப் பேசவேண்டுமென்றும் தொடர்ந்து தொடர்பாலலை பராமரிக்க வேண்டுமென்றும் எப்பவும் விரும்புகிறேன் . அன்று நீங்கள் பதவி துறந்தமை முஸ்லிம் மக்கள…
-
- 3 replies
- 1.2k views
-
-
யூதர்கள் மீதான இனவழிப்பு விஷவாயுத் தாக்குதலிலிருந்தா ஆரம்பமானது? on July 15, 2019 பட மூலம், Motherhoodandmore பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனைத்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை ஊட்டுபவையாகத்தான் இருந்து வருகின்றன. ஆனால், இந்த அச்சத்தைப் பரப்பி வருபவர்கள் அந்தக் குழுக்களை இஸ்லாம் மதத்துடன் சம்பந்தப்படுத்தி பேசும் கணத்தில், அவர்கள் மிகவும் அழிவுகரமான பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரில்…
-
- 0 replies
- 507 views
-