அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
பல தடைகளையும் தாண்டி கிழக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் -தென்னகன் 56 Views தமிழர் தேசம் இன்று கண்ணீருடனும் மனக்குமுறலுடனும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. எங்களுக்காக போராடிய எங்கள் உறவுகளின் நினைவைக்கூட நினைவுகூரமுடியாத வகையில் சிங்கள தேசம் இன்று தமிழர்களின் குரல் வளையினை நசித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின் போராட்டம் என்பது வெறும் பயங்கரவாதப் போராட்டம் என்று கூறிக்கொண்டு அரசாங்கம் பல்வேறு வகையான பிரசாரங்களை முன்னெடுத்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் அந்த போராட்டமும் அதன் மூலம் ஏற்பட்ட இழப்புகளும் என்றும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. யுத்தம் மௌனிக்கப்பட்டு 11வருடங்களைக் கடந்துள்ள …
-
- 0 replies
- 355 views
-
-
கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு - காரை துர்க்கா இறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்களில் மனிதப் படைப்பு மகத்தானது. ஆனாலும் மனிதன் நற்பண்புகளை கொண்டிருப்பது போல, தீய பண்புகளையும் கொண்டிருப்பதால் அவனுக்குள் சண்டைகள், சச்சரவுகள் என ஏராளமான துன்பங்கள். நாடுகளுக்கிடையே பிணக்குகள்; ஒரு நாட்டு இனங்களுக்கிடையே பிணக்குகள். அவ்வகையிலேயே இலங்கைத் தீவில் அழுகிய பிணக்காக இனப்பிணக்கு பல தசாப்தங்களைக் கடந்து, நாறிக் கொண்டிருக்கின்றது. இந்த நாடு, இந்நாட்டு அனைத்து இனங்களுக்கும் சொந்தமானது. ஆனால், ஓர் இனம் தனக்கு மட்டுமே நாடு உரித்தானது என உரிமை பாராட்டியதால் ஏற்பட்ட பிணக்கே இப்பிணக்கு. அந்த…
-
- 0 replies
- 390 views
-
-
சிவில் சமூக அமைப்புகளை மக்கள் நம்பலாமா? February 13, 2021 — இரா.வி.ராஜ் — ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள்/அரசியல் தொடர் போராட்டம் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” #P2P சிறுபான்மையினர் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான பரிணாமம் எனலாம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பில் ஒரு விதமான செய்தியை மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு புகட்டினர். ஆனாலும் அச்சுறுத்தல், கொரோனா அச்சத்துக்கும் மத்தியிலும் இப்போராட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டதன் மூலம் சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் கூறியிருக்கும் செய்தி நாம் எச்சந்தர்ப்பத்திலும் போராட தயாரானவர்கள், எமது ஒற்றுமையே எமது பலம் என்பதாகவே இருக்கமுடியும். இப்போராட்…
-
- 0 replies
- 379 views
-
-
தொடரும் ஏமாற்றம் -செல்வரட்னம் சிறிதரன் நல்லாட்சிக்கான அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் சிறப்பாகக் குறிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகள் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் படிப்படியாகக் குறைந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும். நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்திற்கும், ஐக்கியத்திற்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, குறிப்பாக த…
-
- 0 replies
- 865 views
-
-
கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புகளும் நம்பியிருக்க, அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கவனம் பெறும் வகையிலான கலகக்குரல்களை எழுப்பியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த வரிசையில், இறுதியாக இணைந்தவர் சி.வி.விக்னேஸ்வரன். 2015 ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் அவரின் கலகக்குரல் சற்று பலமாகவே ஒலித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்…
-
- 0 replies
- 446 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : ஜனநாயகத்துக்கு தலைகுனிவு என்ன நடக்குமென்று எதிர்பார்க்கப்பட்டதோ அதுவே தற்போது தமிழகத்தில் நடந்திருக்கிறது. சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தல் இரத்துச் செய்யப்பட்டுவிட்டது. வாக்காளர்களுக்கு அதிகளவிலான பணம் விநியோகம் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இறுதி நேரத்தில் தேர்தல் ஆணையம் தேர்தலை இரத்துச் செய்துவிட்டது. இந்த விடயத்தைப் பற்றி கடந்த வாரம் இந்தப் பந்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆர்.கே. (ராதாகிருஷ்ணன்) நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு கடந்த 12 ஆம் திகதி (புதனன்…
-
- 0 replies
- 441 views
-
-
‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்களின் மரண ஓலம் மியன்மாரில் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இனரீதியான ஒடுக்குமுறைகளும் இனச்சுத்திகரிப்பும் ‘ரோஹிஞ்சா’க்களைத் தினமும் பலியெடுத்துக் கொண்டிருக்கின்றன. கட்டமைக்கப்பட்ட இந்த வன்முறைகளால் அவர்கள் படும்பாட்டைக் கண்டு, உலகெங்கிலுமுள்ள மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அதுபற்றிய புகைப்படங்கள், பத்திரிகைகளில் பிரசுரிக்கக் முடியாத விதத்தில், இதயம் பலவீனமானவர்களை, மோசமாகப் பாதிக்கக் கூடிய அளவுக்கு, மிகவும் கவலை தருவதாக இருக்கின்றன. ஆனால், மியன்மார் அரசாங்கத்தின் மாற்றாந்தாய் மனப்பாங்கும், உலகின் அதிகார மையங்கள் கண்டுகொள்ளாதிருப்பதும், ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?? வண. சோபித தேரர் அவர்கள் கடந்த வாரம் தினக்குரல் பத்திரிகைக்கு ஒரு விரிவான நேர்காணல் வழங்கி இருந்தார். அந்த நேர்காணல் தொடர்பான விடயங்கள் colombotelegraph.com உட்பட பல இணையத்தளங்களிலும் , சிங்கள , ஆங்கில ஊடகங்களிலும் வருவதுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் , எதிர்பார்ப்பினையும் ,அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவை தொடர்பான கருத்துக்களை இங்கு தொகுத்துள்ளதுடன், வண. சோபித தேரர் அவர்களின் முழு நேர்காணலும் , தமிழ்சூழலின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக இங்கு பதிவேற்றப்படுகிறது. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் (ஆசிரியர் குழு) …
-
- 0 replies
- 887 views
-
-
ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன? - கற்பனையும் யதார்த்தமும் தத்தர் பெருவல்லரசுகளும், வல்லரசுகளும் 21ஆம் நூற்றாண்டின் மத்தியின் பின்னான தமது எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுத்துள்ளன. சிங்கள அரசு ஈழத்தமிழினத்தை முற்றிலும் அடையாளம் அற்றவர்களாகவும், நாதியற்றவர்களாகவும் ஆக்குவதற்கான நீண்டகால திட்டங்களுடன் செயற்பட்டு வருகிறது. தற்போது ஈழத்தமிழர்கள் தன்நிலையை விருப்பு வெறுப்பின்றி காய்தல் உவர்த்தல் இன்றி சரிவர மதிப்பிட்டு எதிரிகளின் பிடிகளிலும் அழிப்புக்களிலும் இருந்து எப்படி தப்பிப்பிழைத்து முன்னேறுவது என்பதற்கான ஒரு நீண்டகால பார்வை கொண்ட திட்டத்தை வகுத்தாக வேண்டும். ஈழத்தமிழர்கள் புவிப்பரப்பில் அறியப்பட்ட அளவுக்கு அவர்களின் பிரச்சனைகளும் உரிமைகளும் இலட்சியங்களும் அறியப…
-
- 0 replies
- 684 views
-
-
நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழி? அனைத்துக் கட்சிகளின் மத்தியில் தாமதமின்றி கருத்தொருமைப்பாடு எட்டப்பட வேண்டும் __________________ விக்டர் ஐவன் __________________ இலங்கை இந்தத் தருணத்தில் தற்போது இருக்கும் நிலையிலிருந்து மிகவும் பயங்கரமான படுகுழியில் விழுந்துவிடும் விளிம்பில் உள்ளது. எனவே அது தற்போதைய பாதாளத்திலிருந்து மேலும் கீழிறங்குவதைத் தடுப்பதற்காக, பொருத்தமானதும் உடனடியானதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாடு தவிர்க்க முடியாமல் புராதன கால நிலையிலிருந்து மீள்வது எளிதானது அல்ல. ஆனால், அரசியல் அமைப்பு மற்றும் தற்போதைய ஆட்சியில் மாற்றம் வேண்டும்…
-
- 0 replies
- 670 views
-
-
புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிகள் உக்ரெய்ன் - ரசியப் போர் மற்றும் ஈழத்தமிழர் விவகாரங்களில் இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா கோரிக்கையை விட்டுக் கொடுக்காமலும், நியாயப்படுத்தியும் உரத்துச் சொல்லத் தயங்கும் தமிழ்த்தரப்பு ரசிய - உக்ரெய்ன் போரில் இதுவரை நாளும் மௌனமாக இருந்த இந்தியா தற்போது வாய்திறப்பது போன்று பாசாங்கு செய்கிறது. உக்ரெய்னில் கைப்பற்றப்பட்ட நான்கு பிராந்தியங்களில் கடந்த மாதம் வாக்கெடுப்பு நடத்திய ரசியா, அந்தப் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்கத் தீர்மானித்திருந்தது. இதன் பின்னரான சூழலிலேயே இந்தியாவுக்குப் பெரும் சோதனை …
-
- 0 replies
- 213 views
-
-
தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!! தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!! நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழிப்பதற்காக அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற, அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் பொறுப்பை ஜே. வி. பியின் தலைவர் அனுரகுமார திஸநாயக பொறுப்பேற்றுள்ளார். குறித்த பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ப் பட்டதும் தற்போதைய நாடாளுமன்றத்தை உ…
-
- 0 replies
- 474 views
-
-
முன்னணிக்கு எதிரான அச்சுறுத்தலும் இன்னும் சிலவும் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழுப்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து புதன்கிழமை காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறப்புரிமை விடயத்தை எழுப்பி உரையாற்ற இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமராட்சி கிழக்கிலுள்ள விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றை கடந்த இரண்டாம் திகதி பிற்பகலில், மருதங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடத்தினார். அப்போது அங்கு வந்த, தங்களை யார் என வெளிப்படுத்தாத நபர்கள் இருவர், சந்திப்புக்கு இடையூறு விளைவிக்கும்…
-
- 0 replies
- 449 views
-
-
மைத்திரியின் 100-நாள் ஆட்சியில் வடக்கு – ஒரு ஆய்வு எமது விசேட செய்தியாளர் ஜெரா 100 நாள் திட்டம் குறித்த விமர்சனங்கள் கொழும்பை மையப்படுத்திக் காரசாரமாகப் பேசப்படுகின்றன. விமர்சிக்கப்படுகின்றன. வடக்கில வாழும் தமிழர்களின் பெரும்பாலானவர்களுக்கு இந்தத் திட்டம் பற்றி அடிமுடி எதுவும் தெரியாது. காரணம் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் சாதாரணர்களை இலக்குவைத்தவை மிகச் சாதாரணம். அத்துடன் 100 நாள் திட்டத்தின் அனேக சாரங்கள் ஆட்சியியலுடனும், அதன் இருப்பைத் தக்கவைத்தலுடன் தொடர்புபட்டது. எனவேதான் தமிழ் புத்திஜீவிகளிடமிருந்து இந்த 100 நாள் திட்டம் பற்றியும் 100நாட்களின் ஆட்சி பற்றியும் கொழும்புமிரர் வினவ திட்டமிட்டது. இந்த ஆட்சி மாற்றம் இலங்கை மக்களால் கொண்டுவரப்பட்ட போதிலும், மேற…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழரசுக் கட்சியை அக்கட்சிக்காரர்களிடமிருந்தே காப்பாற்றுவது யார்? சில மாதங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பசுபதிப்பிள்ளை நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டடது. அதில் நினைவுரை ஆற்றிய இக்கட்டுரையாசிரியர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். இரண்டு தேர்தல்கள் நடந்தால் அவை தமிழ் மக்களின் தோல்வியை வெளிக் கொண்டுவரும் என்று. ஒன்று, தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் தேர்தல். இரண்டாவது,மாகாண சபைத் தேர்தல். அண்மையில், தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தல் தமிழ் அரசியலின் சீரழிவை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் கூறுவதுபோல,தமிழ்மக்கள் மத்தியில் கட்சிகள் கிடையாது, தேர்தலில் வாக்குக் கேட்கும் குழுக்கள்தான் உண்டு என்பது சரிய…
-
- 0 replies
- 355 views
-
-
பெண்களின் அரசியல் கோரிக்கையும் பருவகால வாக்குறுதிகளும் படம் | AP Photo/Eranga Jayawardena, FOXNEWS 2015 தேர்தல் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தளவில் கறைபடிந்த ஒரு தேர்தல் என்றே கூறவேண்டும். பெண்கள் அமைப்புகள் 40 பெண்களாவது இம்முறை அங்கம் வகிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். வேட்பாளர் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தேசியப் பட்டியலில் உள்ளடக்குவது போன்ற கோரிக்கைகளை நிர்பந்தித்து வந்தார்கள். 225 பேரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக 6,151 பேர் போட்டியிட்டனர். அதில் 556 பெண்வேட்பாளர்கள். அதாவது, இது மொத்த வேட்பாளர்களில் 9.2% வீதம். அதிக பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்த மாவட்டம் கொழும்பு. கொழும்பில் 147 ப…
-
- 0 replies
- 312 views
-
-
அரசியல் காரணங்களுக்காக பதற்ற நிலை மேலும் தொடரலாம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூன் 05 புதன்கிழமை, மு.ப. 02:59 Comments - 0 கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும் மேல் மாகாண ஆளுநராக இருந்த அஸாத் சாலியும் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 3) பதவி விலகாதிருந்தால் என்ன நடந்திருக்கும்? மேற்குறிப்பிட்ட இருவரினதும் மற்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனினதும் இராஜினாமாவை வலியுறுத்தி, அத்துரலியே ரத்ன தேரர் அதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர், கண்டி தலதா மாளிகை வளவில், உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அதனால், பௌத்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அந்த இடத்துக்குச் சென…
-
- 0 replies
- 616 views
-
-
மஹிந்தவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் பரப்பு அதிகரித்து வருகின்ற சூழலில் நாளை 11ஆம் திகதி வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பானது நாட்டின் தேசிய அரசியலில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளதாக மிகப்பரவலாக அந்தத் தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலிலேயே நாளை வெளியாக இருக்கின்ற இந்த அறிவிப்பானது மிக முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய அரசியல் சூழலில் இரண்டு பிரதான முகாம்களிலிருந்த…
-
- 0 replies
- 1k views
-
-
டைம்ஸ் ஓவ் இந்தியா தமிழில் ரஜீபன் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச முழுமையான வெள்ளை ஆடையில் நவம்பர் 18 ம் திகதி அனுராபுரத்தில் உள்ள ருவன்வெலிசயவில் உள்ள பௌத்த தூபியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவேளை வடக்குகிழக்கில் அச்சம் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்ற இடம்போன்று அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட சிங்களவர்கள் மாத்திரம் செய்தியும் முக்கியமானது என அதனை தொலைக்காட்சியில் பார்வையிட்ட தமிழர்கள் தெரிவித்தனர். செயற்பாட்டாளர்கள் மிகவும் அமைதியாக உள்ளனர்,அவர்கள் கட்டுரை எழுதுவதையும் அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திவிட்டனர்,அச்சம் வெளிப்படையாக தெரிகின்றது என யாழ்ப்பாணத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். நல்லாட்சிக்காக பிரச்சாரம் செய…
-
- 0 replies
- 316 views
-
-
கட்டப் பஞ்சாயத்து நடத்திய சர்வதேச ரவுடி டிரம்ப்! சாவித்திரி கண்ணன் வரலாற்றில் இப்படி ஒரு முன் உதாரணமே கிடையாது – ஒரு நாட்டு அதிபர் அவமானப்பட்டதற்கு! அராஜகம், அடாவடித்தனம், திமிர்த்தனம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக டிரம்ப் இந்த உரையாடலில் வெளிப்பட்டார். ‘நம்பியவர்களை நட்டாற்றில் விடுவது, தன்னலம் மட்டுமே பிரதானம்’ என்பதே டிரம்பின் தாரக மந்திரமோ..! அழைக்கப்பட்ட நாடு, ‘வெறும் மூன்றரை கோடி மக்களை கொண்ட சுண்டைக்கா நாடு தானே’ என்ற எண்ணமா? ‘நம்ம உதவியைக் கொண்டு தானே இத்தனை நாள் தாக்கு பிடித்தார்கள்.. எனவே, ஏன் நமக்கு கூழைக் கும்பிடு போட வேண்டியது தானே’ என்ற மனோபாவமா? ஆனால், யாரும் எதிர்பாரா வண்ணம் உலகறிய அனைத்து நாடுகளும் பார்க்கும் வண்ணம் நேரலை செய்யும் தொலைகாட்சி சேனல்களை …
-
- 0 replies
- 268 views
-
-
சமாதான காலத்தில் வன்னிக்கு சென்றவர்களுக்கு போரின் கதையையும் போர்ச் சூழலில் உள்ள பாடசாலைகளின் நிலவரங்களையும் இக்கட்டடம் எடுத்துச் சொன்னது. சமாதான காலத்தில் வன்னிக்கு சென்றவர்கள் பலரது கவனத்தை போர்வடு சுமந்த இக்கட்டடம் ஈர்த்தது. பலரும் இக்கட்டடத்தின் முன்பாக நின்று படம்பிடித்துச் சென்றுள்ளனர். இக்கட்டடத்தை போர் நினைவுச்சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்று பாடசாலை மாணவர்கள் தரப்பால் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறித்த கட்டடத்தை அழித்து புதிய கட்டடம் கட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனக் கூறப்படுகின்றபோதும் அதற்கு எதுவித நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என கவலை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை இடித்தழிப்பதற்காக மட்டும் கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டு அத…
-
- 0 replies
- 680 views
-
-
Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 11:23 AM Sakuna M. Gamage daily mirror கனேரு மரத்தின் கீழ் நீ கீழே விழுந்துகிடந்தாய் உன் மார்பிலிருந்து குருதி வழிந்தோடியது நான் உன்னை இழந்தேன் இந்த தேசத்திற்கு அது இழப்பில்லை ஆனால் பூமிக்கு... ' உன்னால் எழுந்திருக்க முடிந்தாலும் எழுந்திருக்காதே" நீதியே புதைக்கப்பட்டிருக்கும் போது மக்கள் உண்மையில் எங்கு செல்ல முடியும்? அவர்களுக்காக யார் பேசுவார்கள்? சொல்ல முடியாத போர்க் காலத்தில் ரத்ன ஸ்ரீ விஜேசிங்கே எழுதிய ஒரு சிங்களக் கவிதையில் எழுதிய இந்த வரிகள் இன்று இன்னும் அதிகளவில் மனதை வேதனைக்குட்படுத்தும் அதிர்வுடன் திரும்பி வருகின்றன. ஜூலை 2025 இல் செம்மணியில் இரண்டாம் கட்ட மறு அகழ்வாராய்ச்சியின் ஏழாவது நாளில், ஒரு குழந்தையின் எலும்புக…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
முக்கியக் காலமொன்றில் இனியும் ‘உக்கிய’ முடிவுதானா? -விரான்ஸ்கி அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் நாடளாவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கி இருக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருவதாக, மொத்தச் சனமும் ‘தொடைநடுங்கி’க் கொண்டிருக்கும் இந்தவேளையில், தேர்தல் வைரஸ்தான் இலங்கையை வீரியமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுதல், கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது வரையிலான பூர்வாங்க நடவடிக்கைகளில் எல்லாக் கட்சிகளும் மும்முரமாகி இருக்கின்றன. பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும், தத்தம…
-
- 0 replies
- 902 views
-
-
சிங்கங்களை இழக்கும் காடுகள் முகம்மது தம்பி மரைக்கார் / 2020 ஜூன் 02 அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், மலையகத் தமிழ் மக்களின் 'தலைவனாக' அவர் இருந்தார் என்பதை, மறுத்து விட முடியாது. தனது தாத்தாவின் வழியில், அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் இறந்து போனமை, இரட்டிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகனின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் நினைவுக்கு வந்தது. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மா…
-
- 0 replies
- 667 views
-
-
சிறுபான்மையினர் சுதந்திரமாக வாழ்வதற்கு ‘அரசாங்கத்துக்கு எதிரான ஆட்சி வேண்டும்’ -எஸ்.எம்.எம்.முர்ஷித் சிறுபான்மை மக்களும், சம உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டுமாக இருந்தால், இந்த அரசாங்கத்துக்கு எதிரான, ஓர் ஆட்சி வரவேண்டும். அதற்குப் பொருத்தமான தலைவர், இன்றைய நிலையில் சஜித் பிரேமதாஸதான் என, ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அப்துல் லத்தீப் தெரிவித்தார். இவர், ‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்சொன்னவாறு கூறினார். அவர் வழங்கிய செவ்வியின் விவரம் பின்வருமாறு: க…
-
- 0 replies
- 435 views
-