Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சுதந்திர தினமும் தமிழ் மக்களும் – பி.மாணிக்கவாசகம் February 6, 2019 நாடு ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று ஏழு தசாப்தங்களாகின்றன. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றதாக, 71 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் வெகு கோலாகலமாக கொழும்பில் கொண்டாடப்பட்டிருக்கின்றது. கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட பல்வகை ஊர்திகளும், படையினருடைய அணிவகுப்புக்களும், பாண்ட் வாத்திய அணி நடையும் பார்ப்போரைப் பரவசப்படுத்தியிருந்தன. ஆனால் இந்தப் பரவசம் நாடளாவிய ரீதியில் அனைத்து இலங்கையர்களுக்;கும் ஏற்பட்டிருக்கவில்லை. குறிப்பாக இந்த நாட்டின் பாரம்பரிய வரலாற்றுத் தாயக உரித்துடைய தமிழ் மக்களுக்கு இந்த சுதந்திர தினமும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களும் ப…

  2. சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவ வெற்றிடம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 பெப்ரவரி 06 புதன்கிழமை, மு.ப. 02:12 Comments - 0 இரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, அரசியல்வாதியாக இருக்கும் அவர், விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளை, தமிழ்த் தேசிய அரசியலில் முடிவுகளை எடுக்கும் தலைவராகக் கடந்திருக்கின்றார். அவர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளில், நல்லது, கெட்டது சார்ந்து, பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடோடும் இருக்கின்றார். இன்னொரு பக்கத்தில், சம்பந்தனால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வருடம் தன்னுடைய 79ஆவது பிறந்த தினத்தில், புதிய கட…

  3. தேசிய அரசாங்கம் மக்களை ஏமாற்றும் பொறிமுறை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 பெப்ரவரி 06 புதன்கிழமை, மு.ப. 01:35 Comments - 0 தேசிய அரசாங்கம் என்ற போர்வையில், அரசாங்கம் உண்மையிலேயே மேலும் பலருக்கு, அமைச்சர் பதவிகளை வழங்கவே போகிறது என்பது, பொதுவாக, நாட்டில் சகலரும் அறிந்த விடயமாகும். அது, எல்லோரும் அறிந்த விடயம் என்பதை, அரசாங்கமும் அறிந்த நிலையில், எல்லோருக்கும் அது தெரியும் என்பதை, தமக்குத் தெரியாது என்பதைப் போல் பாசாங்கு செய்து கொண்டு, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசாங்கம் முயல்கிறது. எல்லோரும் மோசமானது என அறிந்திருக்கும் ஒரு விடயத்தை, அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதைத் தாமும் அறிந்திருக்கச் செய்வதானது, வெட்கமின்மை தவிர வேறொன்றுமல்ல. தேச…

  4. தேசிய அரசாங்கம் தேவையா? முகம்மது தம்பி மரைக்கார் / 2019 பெப்ரவரி 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:32Comments - 0 Views - 0 தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இருந்தது. அதற்கு ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியுடன், தேசிய அரசாங்கம் இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உருவான மோதல், தேசிய அரசாங்கத்தை இல்லாமலாக்கியது. இப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தனிக் கட்சி அல்லது அணியொன்று அமைக்கும் ஆட்சியில், ஜனாதிபதி உள்ளடங்கலாக அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐத் தாண்ட…

  5. தொலைவாகும் தமிழர்கள்…!! பதிவேற்றிய காலம்: Feb 3, 2019 யாழ்ப்­பா­ணத் தமி­ழர் மத்­தி­யில் நில­வி­வ­ரும் அபிப்­பி­ரா­யங்­க­ளில் ஒன்று யாழ்ப்­பா­ணம் இலங்­கைத் தீவின் தலை என்­பது. தலைப் பகு­தி­யில் வாழ்­ப­வர்­கள் நாட்­டின் போக்­கைத் தீர்­மா­னிப்­பர் என்று தமி­ழர்­கள் நினைக்­கின்­ற­னர். இது சற்று அப­ரி­மி­த­மான கற்­பனை என்­ப­தைத்­தான் கடந்த 70ஆண்­டு­கள் நிரூ­பித்­துள்­ளன. யாழ்ப்­பா­ணத் தமி­ழ­ரின் 100வீதத் திற­மை­யை­யும் கொழும்­பு­டன் ஒப்­பி­டும்­போது 15வீத அடை­வு­கூட இல்லை. தென் னிந்­தி­யா­வில் இருந்து ஆரம்­பக் குடி­யி­ருப்­பு­கள் நிகழ்ந்­த­போது பூந­கரி, மன்­னார்ப் பகு­தி­க­ளுக்கு ஊடா­கவே மக்­கள் இலங்­கைத் தீவுக்­குள் நுழைந்­த­ தற்­கான ஆதா­ரங்­கள் உண்டு. ஆதி மக்­…

  6. தமிழ் மக்களும் இலங்கையின் சுதந்திர தினமும்…. February 4, 2019 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… இன்று இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாயாக அனுஷ்டிக்க வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியிருக்கிறது. தமது பூர்வீக நிலத்திற்காக 705 நாட்களை கடந்து, இராணுவ முகாமின் முன்னால் போராடும் கேப்பாபுலவு மக்களும் இன்றைய நாள் தமது துக்க தினம் என்றும் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இலங்கையின் சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கு – தமிழ் மக்கள் ஏன் புறக்கணிக்கின்றனர்? இலங்கையின் யதார்த்தத்தையும், பிரச்சினையின் உண்மையான காரணங்களுக்கும் இந்தக் கேள்வியே பதில் அளிக்கிறது. இன்று இலங்கையின் சுதந்திர தி…

  7. இரட்டை நிர்வாகத்தில் இலங்கைத்தீவு கே. சஞ்சயன் / 2019 பெப்ரவரி 03 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:50 Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபுறமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னொருபுறமும் அரச நிர்வாகத்தை முன்கொண்டுச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர், இப்படியொரு நிலை இருக்கவில்லை. கூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள், கிட்டத்தட்ட ஒருமித்த வகையிலேயே முன்னெடுக்கப்பட்டன. சில சமயங்களில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோதும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒருமித்த நிலை இருந்தது. எனினும், பிரதமர் ரணில், தன்னிச்சையாகச் செயற்பட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒக்டோபர் 26 ஆட்சிக் …

  8. ஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? நிலாந்தன் February 3, 2019 அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதையடுத்து அப்பொழுது வெளிவந்துகெண்டிருந்த ‘சரிநிகர்’ பத்திரிகை அதன் முன்பக்கத்தில் குகமூர்த்தி காணாமல் போய் இத்தனை நாட்களாயிற்று என்ற செய்தியைத் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தது. சில ஆண்டுகளின் பின் சரிநிகரும் நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின் குகமூர்த்தியைப் பற்றி ஆங்காங்கே யாராவது அவருடைய நண்பர்கள் அல்லது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஏதும் எழுதுவார்கள் அல்லது பேசுவார்கள். ஆனால் குகமூர்த்தியைத் தமிழ்ச்சமூகம் மறந்து இன்றோடு 19 ஆண்டுகளாகி விட்டது. க…

  9. ஏமாற்று அரசியல் – பி.மாணிக்கவாசகம் – GTN ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்தவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றானோ இல்லையோ, இலங்கையைப் பொருத்தமட்டில் அரசியலே எங்கும் வியாபித்திருக்கின்றது. எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்பதே நிலைமையாக உள்ளது. அதனை நிகழ்வுகளின் ஊடாகவும், நடவடிக்கைகளின் ஊடாகவும் தெளிவாகக் காணவும் உணரவும் முடிகின்றது. ஆயினும், இது நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அரசியலாகத் தெரியவில்லை. மாறாக நாட்டு மக்களைத் துண்டாடி, பல்வேறு பிரிவுகளாக்கி அவர்களை அழிவுசார்ந்ததோர் எதிர்காலத்தை நோக்கி நகர்…

  10. அரசியலமைப்பு சூழ்ச்சியில் கற்றுக்கொண்ட பாடங்கள் Maatram Translation on January 30, 2019 பட மூலம், Selvaraja Rajasegar “தனி மனிதன் ஒருவன் ஆட்சி செய்யும் பிரஜைகள் நகரம் எந்த வகையிலும் பிரஜைகள் நகரம் அல்ல” – சொபொக்லீஸ் (என்டிகனி) இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். இன்றிலிருந்து சுமார் ஒரு வருட காலப்பகுதிக்குள் அடுத்த நிறைவேற்று ஜனாதிபதியும் தெரிவு செய்யப்படவிருக்கிறார். கடந்த காலத்தில் செய்த தவறுகளை எதிர்காலத்தில் செய்யாதிருக்க எம்மால் முடியுமா? கடந்த காலத்தில் செய்த …

  11. புலிகளால் மத்திய வங்கி தாக்கப்பட்டு இன்றுடன் 23 வருடங்கள் பூர்த்தி! தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், இலங்கை மத்திய வங்கியின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி இன்றுடன் 23 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் காரணமாக சுமார் 91 பேரின் உயிர்களை காவுகொண்டதுடன், ஆயிரத்து 1400 பேருக்கு காயம் ஏற்படுத்தியிருந்தது. 1996 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகனால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றய தினம் முற்பகல் 10.45 அளவில் 200 கிலோகிராம் வெடிபொருட்களுடனான பாரவூர்தி இலங்கை மத்திய வங்கியின் கட்டிடத்திற்குள் நுழைந்து வெடிக்கச் செய்ய முயற்சிக்கப்பட்டது. எனினும், கட்டிடத்தின் வெளியில் உள்ள இரும்பு வேலிகள் காரணம…

  12. தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குத் தமிழ்த் தலைமைகளின் பதில் என்ன? Editorial / 2019 ஜனவரி 31 வியாழக்கிழமை, மு.ப. 01:49 Comments - 0 தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டம், புதிய கட்டத்தை அடைந்த போதும், சமரச அரசியல் அவர்களை இன்னொரு முறை ஏய்த்திருக்கிறது. அவர்களின் நியாயமான கோரிக்கைகள், ஆண்டாண்டுகளாக மறுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் மிக நீண்டகாலமாக ஒடுக்கப்படும் சமூகங்களில், மலையகத் தமிழர்கள் முதன்மையானவர்கள். வடக்கு-கிழக்கை மய்யமாகக் கொண்டியங்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தொடர்ந்து நடைபெறும் சம்பள உயர்வுப் போராட்டம் தொடர்பில், என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள், அவர்கள், யாருடைய பக்கம் நிற்கிறார்கள்? இவை கேட்க வேண்டிய வினா…

  13. விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி: போரின் புதிய களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 31 வியாழக்கிழமை, மு.ப. 01:37Comments - 0 மண்ணில் ஆடும் ஆட்டங்கள் போதாதென்று, விண்ணிலும் அதற்கான ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. மண்ணில் தனது ஆதிக்கத்தை இழப்போர், விண்ணிலாவது தமது ஆதிக்கத்தைத் தக்கவைக்க முனைகின்றனர். உலகம் பட்டினியில் தவிக்கையில், மிகுந்த பொருட்செலவில் விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி தொடங்கியுள்ளது. “மண்ணை வெற்றி கொண்ட மனிதன், விண்ணையும் வெற்றி கொள்வான்” என்ற பெருமைப் பேச்சுகளுடன், இந்தப் போட்டி அரங்கேறுகிறது. கேள்வி யாதெனில், நாம் மண்ணை வெற்றி கொண்டோமா என்பதுதான். இன்று, நாம் வாழும் பூமி, நமது எதிர்கால சந்ததியினர் வாழ இயலாத இடமாக மாறியிர…

  14. பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுமா? சர்வதேசம் தமிழ்த் தரப்புடன் பேச வேண்டும் என்ற கட்டாயச் சூழலை ஏற்படுத்தும் கொள்கை எது? வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிய விக்னேஸ்வரன் தற்போது அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் அவருடைய புதிய கட்சி…

    • 3 replies
    • 1k views
  15. தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா? - நிலாந்தன் January 27, 2019 நிலாந்தன்…. விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். ‘அவர் சம்பந்தரால் பரசூட் மூலம் அரசியலுக்குள் இறக்கப்பட்டவர். ஆனால் ஒரு கட்சியை பரசூட் மூலம் இறக்க முடியாது.’ என்று. இதே தொனிப்பட பல மாதங்களுக்கு முன்பு டாண் ரி.வியின் பணிப்பாளரும் என்னிடம் சொன்னார். ‘கொழும்பு மைய விக்னேஸ்வரனால் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தன்னோடு நிற்பவர்களுக்கு சம்பளத்தையும் கொடுத்து முழு நேரமாக ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா?’ என்று. விக்னேஸ்வரனின் ஐந்தாண்டுக…

  16. கஞ்சாக் கடத்தலும் வடக்கின் மனநிலையும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, மு.ப. 01:43 Comments - 0 கடந்த சில மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம்- கொழும்புக்கிடையில் அடிக்கடி பயணப்படும் நண்பரோடு, பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் போது, பேசிக் கொண்டிருந்தேன். அவரின் பயணப்பை முழுக்க, சிறிய பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது. பயணப்பையில் சில ஆடைகளைத் தவிர பெறுமதியான பொருட்கள் எதுவும் இருப்பது மாதிரித் தெரியவில்லை. அவ்வாறு இருக்க, இத்தனை பூட்டுகள் இந்த பயணப்பைக்கு ஏன் போட்டிருக்கிறார் என்று சந்தேகம்? அவரிடமே கேட்டேன். “...பாக்குக்குள் பெரிசாக ஒன்றும் இல்லை. சில உடுப்புகள்தான் இருக்கு. ஆனால், இப்ப வாகனங்களில் கஞ்சா கடத்திறாங்கள். அடிக்கடி பொ…

  17. தேர்தல்களைச் சந்திக்க அஞ்சும் அரசாங்கம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, மு.ப. 12:52 Comments - 0 கடந்த வருடம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த, அரசாங்கம் அஞ்சுகிறது என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஆனால், அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சியாக உண்மையிலேயே செயற்படும் ஒன்றிணைந்த எதிரணியினருக்கும், அத்தேர்தல்களை ஒத்திப் போடும் தேவை இருப்பதாக, அப்போது, உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய சபையின் தலைவராக இருந்த அசோக பீரிஸ் கூறியிருந்தார். அதேபோல், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப்போட, அரசாங்கம் முயற்சிப்பதாக, இப்போது மஹிந்த அணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் கடந்த வாரம், மாகாண ச…

  18. கவனிக்க வேண்டிய கணக்கெடுப்புகள் காரை துர்க்கா / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, மு.ப. 07:01 Comments - 0 தமிழர் பிரதேசங்களில் இறுதிப் போர் நடைபெற்று ஒரு தசாப்த காலத்தின் பின்னர், போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக் குழு ஆகிய இரண்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இப்பணியை மேற்கொள்ள உள்ளன. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கையில் உள்ளவர்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் தங்களிடமுள்ள விவரங்களை வழங்க வேண்டும் எனவும் இவ்விரு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. “ஆகக் குறைந்தது, இறந்தவர்களின் பெயர்களைச் சேகரிப்பதன…

  19. தனியே நிற்கும் விக்னேஸ்வரன் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 23 புதன்கிழமை, மு.ப. 01:03 Comments - 0 தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் விவரத்தை கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வாரம் வெளியிட்டிருக்கின்றார். ஓய்வுநிலைப் பேராசிரியர், பொறியாளர், முன்னாள் அதிபர் உள்ளிட்ட கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளையும் பெரும்பாலும் உள்ளடக்கியதாக, மத்திய குழு அமைந்திருக்கின்றது. மொத்தமுள்ள 22 பதவிகளில் இரண்டு மாத்திரமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் ‘மகளிர் அணி’ என்கிற விடயத்துக்காகவே அவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். விக்னேஸ்…

  20. ஓரு உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னரான அரசியல் தீர்வு முயற்சி ஏன் இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது? யதீந்திரா புதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைகள் ஒரு விடயத்தை தெளிவாக நிரூபித்துவிட்டது. அதாவது, அவ்வாறானதொரு அரசியல் யாப்பு ஒன்று வரப்போவதில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான நிபுனர் குழு அறிக்கையொன்று வெளியாகியிருக்கிறது. இதனை தாம் நிராகரிப்பதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியியான புளொட்டின் தலைவர் சித்தார்த்தனோ, பல்வேறு சந்தர்ப்பங்களில், புதிய …

  21. அமெரிக்கத் தளம்: நெருப்பில்லாமல் புகையுமா? கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:41 அமெரிக்க கடற்படை, தற்காலிக விநியோக வசதிக்கான மய்யமாக, இலங்கையை, மீண்டும் இந்த வாரம் முதல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு, நாட்டுக்கு ஆபத்தானது என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இலங்கையைத் தமது விநியோக தேவைக்காக, அமெரிக்க கடற்படை பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள், வெளிவந்திருக்கின்றன. இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பக்கத்தில், அரபிக் கடலில் நிலைகொண்டு, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள…

  22. இலங்கையில் நெருக்கடிக்குள்ளாகி வரும் சிங்கள அரசியல் கட்சிகள் - சந்திரிக்கா புதிய கட்சியை ஆரம்பிக்கின்றார்? பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளை நம்பி ராஜபக்ச குடும்பம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். தனது தந்தையான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான சந்திரிக்கா அந்தக் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிப்பார் என்றும் அது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தன்னுடன் ஒத்துழைக்கக் கூடிய மூத்த உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவுடன் ஏலவே மு…

    • 0 replies
    • 754 views
  23. கேப்பாபிலவு : 700 நாளின் பின்னர் தீவிரம் பெற்றுள்ள போராட்டம் Maatram Translation on January 23, 2019 பட மூலம், கட்டுரையாளர் “நாங்கள் எங்கள் நிலத்திலுள்ள சொந்த வீடு தோட்டத்தில் சமைப்பதற்கும் உண்பதற்கும் உறங்குவதற்கும் விரும்புகின்றோம்.” இராணுவ முகாமொன்றிற்கு வெளியே 700 நாட்கள் பகலும் இரவும் போராட்டம் என்பது மிக நீண்ட காலம். எனினும், இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவில் உள்ள கேப்பாபிலவு மக்கள் 2017 மார்ச் முதலாம் திகதி முதல் அதனையே செய்து வருகின்றனர். அவர்கள் இராணுவத்திடமிருந்தும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்தும் வரும் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதற்கு துணிச்சலுடன…

  24. உலக சமத்துவமின்மை அறிக்கை 2019: விடையில்லா வினாக்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 24 வியாழக்கிழமை, மு.ப. 01:25 உலகம் சமத்துவபுரமன்று. சமத்துவத்துக்கான போராட்டங்களே, உலக வரலாற்றில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், சமத்துவமின்மை தொடர்கிறது; அதற்கெதிரான போராட்டங்களும் தொடர்கின்றன. கடந்த இரண்டு தசாப்தகாலப் பகுதியில், செல்வம் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களும் இடையிலான இடைவெளி, தொடர்சியாக அதிகரித்து வந்துள்ளது. செல்வம் உள்ளவர்கள், மேலும் செல்வந்தர்களாக ஆகிறார்கள். ஏழைகள், மேலும் ஏழைகளாகிறார்கள். இதன் பரிமாணங்கள், அதிர்ச்சி அளிக்கத்தக்கன. நேற்று முன்தினம், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘ஒக்ஸ்பாம்’ நிறுவனம், 2019ஆம் ஆ…

  25. ஜனாதிபதித் தேர்தல்: பேரம் பேசும் சக்தியை இழந்த சிறுபான்மையினர் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 23 புதன்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 கடந்த வருடம் ஆரம்பத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வகையில் அரசியல் அநாதையாகி இருந்தார். அவரது எதிர்காலமே, பயங்கரமானதாகத் தென்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம், நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம், இது தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால், இன்று அவர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, அதுவும் மஹிந்த அணியின் ஆதரவுடன் போட்டியிடத் தயாராகும் நிலைக்குத் தமது நிலையைப் பலப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த வருடம் ஆரம்பத்தில், அவர் தம்மைப் பதவிக்குக் கொண்டு வந்த ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.