Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கம்சாயினி குணரத்தினத்தின் மட்டக்களப்பு வருகைய வரவேற்கிறேன் I WELCOME OSLO DEPUTY MAYOR KAMSHAJINI'S BATTICALOA VISIT. .ஓஸ்லோ பிரதி அமைச்சர் கம்சாயினி குணரத்தினத்தின் மட்டக்களப்பு வருகைய வரவேற்கிறேன்.ஒஸ்லோ பிரதி மேயர் மாண்புமிகு கம்சாயினி கிழக்குமாகாணத்துக்கு வருகைதந்ததையும் மட்டகளப்பு மாநகர தலைவரை சந்திதமையும் வரவேற்று வாழ்த்துகிறேன். இது ஒரு நல்ல முன் உதாரணமாகும். . பொதுவாக வடமாகானத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள் இலங்கை செல்லும்போது உதவும்போது கிழக்கு மாகாணம் செல்வதோ உதவுவதோ குறைவு. மாண்புமிகு கம்சாயினி நாகரீகமான விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல. எனினும் நோர்வீஜிய அரசியல் தலைவரான அவர் தனது பதவியின் இராசதந்திர மரபுகளை கடைப்பிடிப்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்…

  2. ஜனாதிபதித் தேர்தல் உடனடிச் சாத்தியமா? கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 11 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:34 இலங்கை அரசியலில், 52 நாள்கள் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்த பின்னர், தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. முறைப்படி மாகாணசபைத் தேர்தல்கள் தான், முதலில் நடத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஆறு மாகாணசபைகளின் பதவிக்கால‍ங்கள் ஏற்கெனவே முடிந்து விட்டன. ஆனாலும், உடனடியாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் திட்டத்தில், அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை. முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இழுத்தடித்தது. இப்போது, மஹிந்தவின் நிழலில் உள்ள பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ள சுதந்திரக் கட்சி, மாகாணசபைத் தேர…

  3. தமிழ் - முஸ்லிம் உறவு: பிட்டும் தேங்காய்ப்பூவும் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 11 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:50 பல்லினங்களும் வாழ்கின்ற ஓர் ஆட்புலத்தில், எவ்வாறு சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்வது என்ற பாடத்தை, இலங்கையில் இனவாதிகள் மட்டுமன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களில் சிலரும், இன்னும் பட்டறிந்து கொள்ளவில்லையோ என்ற வலுவான சந்தேகத்தை, அண்மைக்கால சம்பவங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டு இனங்களைச் சேர்ந்த நபர்களுக்கு இடையில் நடக்கின்ற எல்லா விடயங்களும், இரு இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளாக உருவேற்றப்படுவதையும் சிறிய சம்பவங்கள் ஊதிப் பெருப்பிக்கப்படுவதையும் வெளிப்படையாகவே காணமுடிகின்றது. தேச…

  4. சமயோசித செயற்பாட்டின் அவசியமும் அவசரமும் – பி.மாணிக்கவாசகம்… January 11, 2019 குழப்பத்திற்குள் குழப்பம். அந்த அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்து குழம்பிப் போக முடியாது. அதில் இருந்து மீள்வது எப்படி என்பதுதான் கேள்வி. ஒக்டோபர் 26 இல் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடி என்பது முதலாவது குழப்பம். ஐம்பத்திரண்டு நாட்கள் நீடித்த அந்தக் குழப்பத்திற்கு, அக்டோபர் 26 ஆம் திகதிக்கு முந்திய அரசியல் நிலைமையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காய் நகர்த்தல்களை மேற்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் ஒரு முடிவேற்பட்டது. இரண்டு பிரதமர்கள், இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற இரட்டை நிலையில், நாட்டில் அரசாங்கமே இல்லை என்ற விநோதமானதோர் …

  5. பெப்ரவரி நான்குக்கு முன் புதிய அரசமைப்பு: முடியுமா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 09 புதன்கிழமை, மு.ப. 11:05 Comments - 0 “அடுத்த வருடம் தைப் பொங்கலுக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதற்கு முன்னர் ஓரிரு முறை கூறியிருந்தது. ஆனால், அதையடுத்துப் பல தைப்பொங்கல்கள் வந்து போய்விட்டன. அதேபோல், எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், உத்தேச புதிய அரசமைப்பு, கொண்டு வரப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் கூறியிருக்கிறார். இது சாத்தியமா? “இல்லை” என்றே கூற வேண்டும். பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன…

  6. கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 09 புதன்கிழமை, மு.ப. 10:52 “புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பு தொடர்பில், வெளிப்படுத்திவரும் நம்பிக்கைப் பேச்சுகள் எதை நோக்கியது?” என்று வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவர் இந்தப் பத்தியாளரிடம் கடந்த வாரம் கேட்டார். புதிய அரசமைப்புக்கான முயற்சிகள், கிட்டத்தட்ட முழுமையாகவே முடங்கிவிட்டன. மைத்திரியின் ‘ஒக்டோபர் 26’ சதிப்புரட்சிக்குப் பின்னராகப் பிறந்திருக்கின்ற 2019, தேர்தல்களின் ஆ…

  7. மொழியோடு புரிந்த போர்! January 10, 2019 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1964 ஜனவரி ஏழாம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் சந்திப்பு டில்லியில் இடம்பெற்றத…

  8. இறுகும் சுறுக்கு, இறுகுமா இன்னும்? 2007ம் ஆண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, சண்டே லீடர் பத்திரிகையில், 'மிக் டீல்' என பின்னாளில் அழைக்கப்பட்ட, ஒரு மோசடி மிக்க ஆயுத கொள்வனவு குறித்த விபரங்களை வெளியிட்டார். உக்ரைன் நாட்டில், இயக்கமில்லாத நிலையில், வைக்கப் பட்டிருந்த மிக் விமானங்களை வாங்கிய வகையில், அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸேவின் தொடர்புகள் குறித்து பல விபரங்களை, வெளியிட்டிருந்த இந்த கட்டுரையினை தொடர்ந்து, சண்டே லீடர் பத்திரிகை மீது, மான நஷ்ட வழக்கு ஒன்றினை ஆரம்பித்திருந்தார் அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸே . லசந்தவின் நண்பர்களும், உறவினர்களும், இந்த கட்டுரைகளும்,வழக்கும், அவரது உயிரினை காவு கொண்டது என நம்புகின்றனர். ப…

    • 5 replies
    • 1.2k views
  9. இலங்கை அரசியலில் சர்வதேச சக்திகள் January 7, 2019 34 . Views . பாராளுமன்ற நெருக்கடி, யாப்பு நெருக்கடி எனப் பல்வேறு நெருக்கடிகள் இலங்கையின் அரசியல் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந் நெருக்கடிகளின் பின்னால் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் தமது அழுத்தத்தை பிரயோகிப்பது மட்டுமல்லாமல், இதனைப் பயன்படுத்தி இலங்கை மண்ணில் தமது காலை வலுவாக ஊன்ற முயற்சிக்கின்றன. இவ்வாறு சர்வதேச சக்திகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முனைவதன் பின்னணி அரசியலை ஆராய்கின்றது இக்கட்டுரை. சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் இலங்கையின் கடனை அதிகரித்தும், தனியார்மயமாக்களை அதிகரித்துமே தமது ஆட்சியை மேற்கொள்கின்றன. அரசியல் பொருள…

  10. பல்லினப் பண்பாடு: இணங்கியே வாழ்வோமா? Editorial / 2019 ஜனவரி 08 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:11 - ஜெரா நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்வி, ஆங்காங்கே வெளிப்படத் தொடங்க, இலங்கை வாழ் இனங்களுக்கிடையில் பல்லினப் பண்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மேற்குலக நாடுகளது பணத்தில் பணிபுரியும் தொண்டு நிறுவனதாரர்கள், பல்கலைக்கழக புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், இக்கருத்தைப் பரவலாகப் பேசிவருகின்றனர். இலங்கை போன்று இனச்சிக்கலைக் கொண்ட நாடுகளுக்குப் பல்லினப் பண்பாட்டுச் சூழல் வாழ்க்கை முறையைப் போதிக்க முன்னர், அக்கோட்பாடு அறிமுகமாகிய நாடுகளில் அது வெற்றிகண்டுள்ளதா, என்னென்ன வகையில் தோல்வியடைந்துள்ளது என்பதை ஆராய…

  11. ஜனநாயக அரசியலில் வெற்றிக்கனியைப் பறிப்பாரா சுமந்திரன்? காரை துர்க்கா / 2019 ஜனவரி 08 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:51 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னர், ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என, கடந்த டிசெம்பர் (2018) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து உள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது, ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் புலிகளினதும் தேவைப்பாடுகள் ஒரு நேர்கோட்டில் சந்தித்தன. அதனால்தான், ஜனநாயக ரீதியில் அரசியல் செய்ய, புலிகள் அனுமதித்தனர்” என, அ…

  12. கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும் வெறுப்பும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 08 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:25 அரசியல் நெருக்கடியில், ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டம் பற்றிக் கடந்த வார பத்தியில் எழுதியிருந்தோம். மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனங்கள், இரண்டாம் கட்ட ஆட்டத்தை, இன்னும் சூடேற்றி இருக்கின்றன. அரசமைப்பின் கோடுகளைத் தாண்டாமல், புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டு, மைத்திரி ஆடத் தொடங்கியிருக்கும் இரண்டாம் கட்டம், எதிராளிகளுக்குக் கொஞ்சம் கிலேசத்தை ஏற்படுத்தி இருப்பதையும் காண முடிகிறது. மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உரியது. மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகளாவர். ஜனாதிபதிக்கு அரசமைப்பு வழங்…

  13. கடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தையும் முன்னுரிமையையும் எந்தவிதத்திலும் மாற்ற மாட்டோம் என்றார். ரணில் பௌத்த பிக்குமாரை மதிப்பதில்லை என்கிற விமர்சனம் நீண்டகாலமாகவே இருந்துவந்தது. ஆனால் கடந்த ‘ஒக்டோபர் 26’ சதிகளுக்குப் பின்னர் அவர் சாஷ்டாங்கமாக அவர்களை நமஸ்காரம் செய்கிறார். அடிக்கடி பௌத்த விகாரைகளுக்கும், பௌத்த நிகழ்வுகளுக்கும் செல்வதாகக் காட்டிக்கொள்கிறார். தான் ஏனைய பௌத்தர்களுக்கு சளைத்தவனல்ல என்பதை நிரூபிக்கப் படாது பாடு படுவதைக் காண முடிகிறது. ரணிலின் இத்தகையை போக்கின் ஒரு அங்கம் தான் மேற்படி உத்தரவாதம். இன்று ஜனாதிபதி திப…

  14. வேறு வழி இன்றி ரணிலை மீண்டும் பிரதமராகிய மைத்திரி, மகிந்தவின் வழிகாட்டுதலில் ரணிலுக்கு பல வழிகளில் நிறைவேற்று அதிகாரம் மூலம் ஆப்படிப்பதன் மூலம் வேறு வழி இன்றி தேர்தலுக்கு இணங்க வைக்க முயல்கின்றார். மாகாண ஆளுனர்களை மாத்தியது, அமைச்சு செயலாளர்களை, அமைச்சர்கள் கோரிக்கைக்கு அமையாது, தான் விரும்பியவர்களை மட்டும் நியமித்தது, அமைச்சர்களுக்கு, வேண்டுமென்றே, திணைக்களங்களை மாறி கொடுத்தது போன்ற பல ஆப்புக்கள் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்ததும், 30 அமைச்சர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதும் ஒரு வகை ஆப்பு தான். இதன் முதல் படியாக தான் சார்ந்த ஐக்கிய ஜனநாய முன்னணியினையும் தேசிய அரசில் இருந்து விலக செய்து, தனது சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்து…

  15. அவர்களின் கடவுளர்கள்: எங்கள் மீதான வல்வளைப்பின் குறியீடுகள்- செல்வி- தொன்மையான வாழ்வியல் மரபைக் கொண்ட தமிழர்களின் நிலங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வல்வளைப்புச் செய்யப்பட்டு, தேசிய இனத்தின் அடிப்படைக் கூறான நிலத்தின் தொடர்ச்சியையும் நாம் இன்று இழந்துகொண்டிருக்கிறோம். நில ஆக்கிரமிப்பு என்பது வெறுமனே சடப்பொருளொன்று தன் அதிகாரத்தை இழப்பது என்பதல்ல. அது தேசிய இனத்தின் பொருண்மிய, பண்பாட்டு, மரபுகளை வல்வளைப்புச் செய்வதன் கண்ணுக்கு புலனாகின்ற வடிவம். மரபுவழித் தொன்மையினடியாக வந்த நாங்கள் ஒருவர் என்ற உள இயல்பின் பின்னல்களின் கட்டமைக்கப்பட்டிருக்கும் தேசிய இனத்தின் தேசமாக வாழ்தலுக்கான அவாவினை மரபு வல்வளைப்பின் மூலம் அழித்துவிடலாம் என மனப்பால் குடித்துக்கொண்டு, …

    • 0 replies
    • 660 views
  16. காட்சியறை அரசியல்? நிலாந்தன் January 6, 2019 1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிநொச்சி இலங்கைத்தீவில் இரண்டவாது ராஜீய மையமாக எழுச்சி பெற்றது. இக் காலகட்டத்தில் கிளிநொச்சி சமாதானத்தின் காட்சி அறையாகத் துலங்கியது. அதன்பின் நாலாங்கட்ட ஈழப்போரின்போது கிளிநொச்சி ஆட்களற்ற பேய் நகரமாக மாறியது. 2009ற்குப் பின் அது ஒரே நாடு ஒரே தேசம் என்ற கோஷத்தின் காட்சி அறையாகவும் நல்லிணக்கத்தின் காட்சி அறையாகவும் மாறியது. இப்பொழுது வன்னி வெள்ளத்தின் பின் அது மறுபடியும் வெள்ள நிவாரண அரசியலின் காட்சி அறையாக மாறியிருக்கிறது. வெள்ள அனர்த்தத்தின் பின் எல்லாத் தென்னிலங்கைக் கட்ச…

  17. நுண்மாண் நுழைபுலம் அற்றுப்போகும் தமிழினத்தின் கல்விமுறைமை -தழலி- தேசிய இனமொன்று தொடர்ச்சியான தனது இயங்கியலை நிலைநிறுத்துவதற்கு பல காரணிகள் இருப்பினும் அச்சமூகத்தின் அறிவுடைமையும் முதன்மைக் காரணிகளிலொன்றாக இருக்கின்றது. அந்த இனத்தின் அறிவு, பண்பாடு, மொழி, இலக்கியம், வாழ்வியல் முறைமை என அனைத்தையும் தலைமுறைகளுக்கு கடத்தி, இனத்தின் இருப்பைக் கொண்டு செல்வதில் கல்வியும் முதன்மையானது. இனத்தின் அறிவு வளர்ச்சியும் அதன் சிந்தனை மரபும் அந்த இனத்தின் கல்வியின் தரத்திலேயே தங்கியிருக்கின்றன எனலாம். தமிழர்களைப் பொறுத்தவரையில் அறிவுமரபு என்பது, வரலாற்றினைக் கூறுவதாக இருக்கும் அதேவேளை வரலாற்றைக் காவுகின்ற காவியாகவும் தொழிற்படுகின்றது. எழுமைக்கும் ஏமாப்புடைத்து வரும் கல்வ…

  18. “இந்தியாவின் மகிந்த ராயபக்ச” என்ற மறக்கக் கூடாத உண்மையை சீனப் பூச்சாண்டிப் பரப்புரை மறக்கடிக்குமா? –மறவன்- தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவதை தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒரு போதும் ஏற்காது. அத்துடன் தமிழர்களின் மீதான ஆரியமாயையான இந்தியாவின் வரலாற்றுப் பகை என்பது எச்சான்றும் குறைத்து மதிப்பிட இயலாது. அண்டை நாடுகள் மீது தனது மேலாண்மையைச் செலுத்த நேரு காலத்திலிருந்து இந்தியா துடியாய்த் துடித்து வருகிறது. தேசிய இன விடுதலையை அடியொட்ட வெறுத்து இந்தியாவைக் காப்பது என்பதையும் தாண்டி அண்டை நாடுகளின் மீதான தனது மேலாதிக்கம் மூலம் அகன்ற பாரதக் கனவில் அன்றிலிருந்து இன்று வரை இந்தியா வெறித்தனமாக வேலை செய்து…

    • 0 replies
    • 621 views
  19. 2018 – தமிழர்களுக்கான அரசியல் படிப்பினைகள்? யதீந்திரா வரலாற்றிலிருந்து நாம் எதனை கற்றுக் கொள்கின்றோம் என்றால் எதனையுமே அல்ல – என்று ஒரு கூற்றுண்டு. வரலாற்றில் இது எந்ததெந்த சமூகங்களுக்கெல்லாம் பொருந்துமென்று நாம் அறியாது விட்டாலும் கூட, நிச்சயமாக தமிழர்களுக்கு பொருந்துமென்று, அழுத்தம் திருத்தமாக குறிப்பிடலாம். அந்தளவிற்கு தமிழர்கள் எதனையுமே அவர்களின் கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ளவதில்லை. நான் இங்கு தமிழர்கள் என்று குறிப்பிடுவது சாமானிய தமிழ் மக்களை அல்ல, மாறாக, அந்த சாமானிய மக்களுக்காக இயங்குவதாகவும் சிந்திப்பதாகவும் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும் புத்திஜீவிகளையும்தான். 2015இல் பெருமெடுப்பில் ஆரம்பித்த ஜனநாயகத்திற்கான பயணம் அதன…

  20. சிங்கள பௌத்தர்களின் வாக்குகள் யாருக்கு ? உச்ச நீதிமன்ற தீர்ப்பானது நாட்டில் உருவாகிய அரசியல் நெருக்கடிகளை ஓரளவுக்கே தணிக்க உதவியது என்று தான் கூற வேண்டியுள்ளது. ஏனென்றால் ஜனாதிபதியும் அவரது புதிய நம்பிக்கையான மஹிந்தராஜபக்ஷ மற்றும் அவரது அணியினரும் கூறி வரும் கருத்துக்கள் நாட்டு மக்களை அந்த வகையிலேயே சிந்திக்க தூண்டியுள்ளன. உண்மையைக்கூறப்போனால் நாட்டில் இன்னும் அரசியல் நெருக்கடிகள் முற்றாக தீரவில்லை.என்ன தான் நீதித்துறை ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் வண்ணம் செயற்பட்டாலும் கூட அதிகார வர்க்கத்திலிருந்தே பழக்கப்பட்டு விட்ட அரசியல் பிரமுகர்கள் அதை மீறி செயற்படும் தந்திரோபாயத்திலிருந்து எப்போதும் விலகிச்செல்ல மாட்டர். நான்கரை வருடங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தை கலைத்தது…

  21. தாக்குப் பிடிப்பாரா மைத்திரி? கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 04 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:50 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எப்படி வழிநடத்துவது என்று தெரியாமல், அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது குழம்பிப் போயிருக்கிறார். 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டார். சிறிசேனவின் முயற்சியால், அந்தப் பதவி அவரது கைக்கு வரவில்லை. சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரின் முயற்சியால் தான், கட்சியின் தலைமைப் பதவி மைத்திரிபால சிறிசேனவின் கைக்கு வந்தது. மிகஇலகுவாக, கட்சித் தலைமைப்…

  22. ஐ.அமெரிக்காவின் சிறிசேன தான் ட்ரம்ப் Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 03 வியாழக்கிழமை, மு.ப. 01:24 கடந்தாண்டின் நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில், இப்பத்தியாளரால், “இலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன” என்ற தலைப்பில் பத்தியொன்று பிரசுரிக்கப்பட்டது. இருவருக்குமிடையிலான ஒற்றுமைகள் குறித்தும் அதிகாரவய ஆட்சி குறித்தும், அதில் அலசப்பட்டது. ஆனால், அப்பத்தி பிரசுரிக்கப்பட்டுச் சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேலுமதிகமான குழப்பங்களை ஏற்படுத்தி, குழப்பங்களை விளைவிக்கும் தலைவர்களில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறார். இச்சூழ்நிலையில், “ஐக்கிய அமெரிக்காவின் சிறிசேன தான் ட்ரம்ப்” என்று இப்போது சொல்லக்கூடியதாக இருக்கிறது. …

  23. எதிர்பார்த்துக் காத்திருத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 03 வியாழக்கிழமை, மு.ப. 12:52 இன்னோர் ஆண்டு எம்முன்னே விரிகிறது. எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைந்ததாக அது இருக்கிறது. நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும். எதிர்காலத்தை எதிர்வுகூற விளையும் ஒவ்வொரு தடவையும் இந்தச் சொற்றொடரை நினைத்துக் கொள்வது உண்டு. எதிர்காலத்தைக் கணிப்பது கடினம். அதிலும், அரசியலில் எதிர்காலத்தைக் கணிப்பது இன்னமும் சிரமம். நிச்சயமின்மைகளால் நிரம்பி வழியும் ஒன்றன் திசைவழிகள் குறித்து, நிச்சயமாகச் சொல்வது சவால் மிக்கது. ஆனால், அது முடியாத காரியமுமல்ல. சாத்தியங்களையும் சாத்தியமின்மைகளையும் கணிக்கவியலும்; ஆய்வறிவாளனின் கலையும் திற…

  24. எரித்திரியா தேசிய விடுதலை ஆப்பிரிக்க கண்டத்தில், எந்தவொரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. 1896 ம் ஆண்டு, காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், எத்தியோப்பியப் படைகளிடம் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை ஏந்தியிருந்த இத்தாலி இராணுவம், வாள், அம்பு-வில், போன்ற புராதன கருவிகளேந்தி போரிட்ட எத்தியோப்பியர்களிடம் தோல்வியுற்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இந்த சரித்திர உண்மையை நம்பித் தான் ஆக வேண்டும். இப்போதே உங்களால் நம்ப முடியவில்லை என்றால், அன்று இந்த செய்தி ஐரோப்பாவில் எத்தகைய அதிர்வலைகளை தோற்றுவித்திருக்கும்? ஐரோப்பியர்கள் அந்த காலனியப…

  25. கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 02:22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கூட்டமைப்போ, அதன் தலைமையோ கிஞ்சித்தும் கவனத்தில் கொண்டதில்லை; எதிர்வினை ஆற்றியதுமில்லை. ஆனால், அண்மையில் கூட்டமைப்பின் உருவாக்கமே விடுதலைப் புலிகளுடனான ‘டீலின்’ அடிப்படையிலானது என்று கே. சயந்தன் தெரிவித்த கருத்தொன்று, யாழ். மய்யவாத அரசியல் அரங்கில், பேசு பொருளாகி இருக்கின்றது. அரசியலில், கூட்டுகளும் கூட்டணிகளும் புரிந்துணர்வு, இணக்கப்பாடு, இலாபம் உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.