அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எதிர்த்தரப்பா, கைகோர்ப்பா? Editorial / 2018 ஒக்டோபர் 25 வியாழக்கிழமை, மு.ப. 01:22 -அதிரன் புதிய தேர்தல் முறையில், பெரும்பான்மை பெறும் கட்சிகூட, ஆட்சியமைப்பதற்குக் கையேந்தும் சந்தர்ப்பங்கள் தான் அதிகம். கிழக்கில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில், எத்தனை கட்சிகள் போட்டியிடும், யார் யாரிடம் கையேந்துவார்கள் என்பது சுவாரசியமான விடயப்பரப்பு. கிழக்கைப் பொறுத்தவரையில், புதிதாக உருவான கட்சிகளாகட்டும், இடைக்காலத்தில், ஆரம்ப காலத்தில் இருந்து செயற்படும் கட்சிகளாகட்டும், ஒரு சிலவற்றைத் தவிர, எதற்குமே முழுமையான ஆதரவு (வாக்குத்தளம்) இருப்பதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி.டி.பி,…
-
- 0 replies
- 771 views
-
-
வடக்கு முதலமைச்சர் மீதான எதிர்பார்ப்பு…! நரேன்- தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் 2009 மே 18 இற்கு பின்னர் மீண்டும் ஒரு ஜனநாயகப் போராட்டமாக மாற்றமடைந்திருந்தது. முள்ளிவாய்கால் இழப்பினை மூலதனமாகக் கொண்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை வலுவாக முன்னுறுத்தி அவர்களது அபிலாசைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தானாகவே விழுந்திருந்தது. இன்று 9 ஆண்டுகள் கடந்த நிலையில் அதில் உள்ள முன்னேற்றம் குறித்து சிந்தித்து பார்ப்பதன் மூலம் கூட்டமைப்பின் பலம், பலவீனம் குறித்து அறிந்து கொள்ள முடியும். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு என்பதற்கு அப்பால் குறைந்த பட்சம் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவக…
-
- 0 replies
- 469 views
-
-
ஒரு முடிவில் பிறிதோர் ஆரம்பம் காரை துர்க்கா / 2018 ஒக்டோபர் 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:15 Comments - 0 வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஏற்கெனவே முடிவுக்கு வந்து, கொழும்பு, மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதியான ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. நாளை தொடக்கம், வடக்கு மாகாணத்திலும் இதே நிலைமை ஆரம்பிக்க உள்ளது. ஆக, அடுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் வரை, இரண்டு மாகாணங்களும் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்களின் ஆளுகைக்குள் அடங்கப் போகின்றன. தமிழர்களது பார்வையில், மாகாண சபை ஆட்சி முறையிலான நடைமுறை பல குறைபாடுகளைத் தன்னகத்தில் கொண்டுள்ளது. இந்த ஆட்சி முறைமை …
-
- 0 replies
- 521 views
-
-
தமிழர் அரசியலில் புதிய கட்சி உருவாக்கமும் தடம்மாறும் தலைமைகளும் Editorial / 2018 ஒக்டோபர் 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:50 Comments - 0 -க. அகரன் இன்றைய தமிழ்த் தரப்பு அரசியல் களமானது, பரபரப்புகளை மாத்திரம் கொண்டதாகவும் செயற்றிறன் அற்றிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயப்படுத்தல்களை முன்வைப்பதாகவுமே உள்ளது. பல்வேறு உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள், அவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களால் நம்பிக்கை வைக்கப்பட்ட தரப்புகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டித்தன்மைகளும் அரசியல் காழ்புணர்ச்சிகளும் பழிவாங்கல்களும் ‘தமிழரின் இழி நிலை’ என்ற வகிபாகத்துக்குக் கொண்டு செல்ல நீண்ட காலம் தேவையில்லை என்பதையே சுட்…
-
- 0 replies
- 788 views
-
-
றோ, சிறிசேன, சம்பந்தன் யதீந்திரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பு (Research and Analysis Wing – RAW) கொலை செய்வதற்கு சதிசெய்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தத் தகவல் இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் இந்த செய்தியை முக்கித்துவப்படுத்தி பிரசுரித்திருக்கின்றன. கடந்த செய்வாக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இந்தத் தகவலை முதல் முதலாக கொழும்பிலிருந்து வெளிவரும் எக்கநொமிநெக்ஸ்ட் (economynext.com) இணையத்தளமே வெளிப்படுத்தியிருந…
-
- 0 replies
- 684 views
-
-
அகிம்சை வழியிலான போராட்டம்- இந்த நாட்டுக்குப் பொருந்துமா? பதிவேற்றிய காலம்: Oct 20, 2018 அகிம்சை வழியிலான போராட்டங்களில் தமிழர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருந்தால் அவர்கள் தமது உரிமைகளைப் பெற்றிருக்க முடியுமெனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டிருக்கிறார். தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அகிம்சை தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டமை கவனத்துக்குரியது. மனித தர்மத்தில் அகிம்சைக்கு எப்போதுமே உயர்ந்த இடமுள்ளது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அகிம்சை வழியில் அதை அணுகும்போது பாதிப்புக்களுக்கு இடமிருக்காது. அகிம்சை வழியிலான போராட்டம் எனும்போது முத…
-
- 0 replies
- 487 views
-
-
அரசியற் கைதிகளை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை – நிலாந்தன் October 21, 2018 அரசியற் கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த வெள்ளிக்கு முதல் வெள்ளிக்கிழமை கைதடியில் மாகாணசபைக் கேட்போர் கூடத்தில் நடந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் பங்குபற்றினார். அதில் அவர் ஒரு விடயத்தைச் சொன்னார். கைதிகள் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய சில நாட்களில் அங்கு தான் போனதாகவும் அவர்களைக் கண்டு கதைத்தபின் அடுத்தடுத்த நாளே பிரதமரை சந்தித்ததாகவும், கதைத்ததாகவும் சொன்னார். பிரதமர் எல்லாவற்றையும் கேட்டபின் பொறுங்கள் சட்டமா அதிபர், நீதி அமைச்சர் போன்றோரோடு பேசிய பின் முடிவைச் சொல்கிறேன் என்று சொன்னாராம். சித்தார்த்தன் விடாமல் தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார். கைதிகள…
-
- 0 replies
- 366 views
-
-
பேரம் பேசுமா கூட்டமைப்பு? Editorial / 2018 ஒக்டோபர் 19 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:38 தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறையும் அவ்வாறு நடந்து கொள்ளுமா, என்ற கேள்வி, இப்போது பரவலாக எழுந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் விடுதலையை முன்வைத்து, பாதீட்டுத் திட்டத்தை ஆதரிப்பதற்குப் பேரம்பேச வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை தான், இந்தக் கேள்விக்கான மூல காரணம். அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தான், பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க, தமது விடுதலையை முன்னிறுத்தி, அரசாங்கத்துட…
-
- 0 replies
- 620 views
-
-
சம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:25 Comments - 0 “தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் உரையாற்றும் போதே, அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இது, தமிழர்களின் பெயரால், பல தமிழ் ஆயுதக் குழுக்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமை…
-
- 1 reply
- 780 views
-
-
கூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில் 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:12Comments - 0 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள். 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து வந்திருக்கின்றது. அதுவும், பாதீட்டுத் திட்டம் போன்ற, மிக முக்கிய நாடாளுமன்ற நடவடிக்கைக…
-
- 1 reply
- 478 views
-
-
அபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘வடக்கின் வசந்தம்’ அரசாங்கத்தின் காட்சித் திட்டங்களாயின. அன்றைய அரசாங்கத்தின் கொள்கை ப…
-
- 0 replies
- 406 views
-
-
நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி உலகில் அரசியல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் அரசுகள் தமது செல்வாக்கை பலப்படுத்தும் முகமாக பல்வேறு இதர அரசுகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வது சர்வதேச அரசியலில் ஒரு முக்கியமான அங்கமாக பார்த்து கொள்ளப்படுகிறது. இத்தகைய கூட்டுகள் அரசுககள் மத்தியில் ஏற்படக் கூடிய புரிந்துணர்வுகளின் அடிப்படையிலும், அரசுகள் ஒன்றுடன் ஒன்று மேவும் தன்மையும் உள்ள இடங்களில், தமது நலன்களை அடிப்படையாக வைத்து பிரதானமாக செய்து கொள்ளப்படுகிறது. கூட்டுகளில் பாத்திரம் வகிக்கும் அரசுகள் தம்மத்தியிலே உள்ள நடத்தைகளை ஒழுங்கமைப்பு செய்து கொள்ள வேண்டியதன் தேவையை உணர்ந்து, பொதுவான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக குறிப்பிட்ட …
-
- 0 replies
- 717 views
-
-
இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவில், 1980 களில் ஒரு நாடு மட்டும் அசுர வேகத்தில் ஒளிவீசத்தொடங்கியது. அந்த நாட்டின் பெயர் புர்கினா ஃபசோ (Burkina Faso). ஒளிவீச காரணம் கேப்டன் தோமஸ் சங்காரா (Thomas Isidore Noël Sankara). இன்று அவன் உயிருடன் இருந்திருந்தால், ஆபிரிக்காவில் முதல் அபிவிருத்தி அடைந்த நாடாக தோற்றம் பெற்றிருக்கும் புர்கினோ ஃபசோ. இளம் புரட்சிகர தலைவனாக, ஏகாபத்திய எதிர்ப்பாளனாக ஆபிரிக்க மக்களிடையே அடையாளம் காணப்பட்ட தோமஸ் சங்காராவுக்கு மூன்றாம் உலகம் சூட்டிய பெயர் ‘ஆபிரிக்காவின் சே குவாரா’. 1983ம் ஆண்டு இராணுவ புரட்சி நடவடிக்கை ஒன்றின் மூலம் Burkino Faso நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தோமஸ் சங்காரா கைப்பற்றினான். ஆட்சிக்கு வந்ததும் அவன் கொண்டுவந்த ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன நிலாந்தன் ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்டம் எனப்படுவது பிரதானமாக சிறைக்கு வெளியிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இது தொடர்பில் சிறைக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய தரப்புக்களோடு கைதிகள் தமது போராட்டத்தைக் குறித்து திட்டமிட்டவர்களா? இப்போராட்டம் ஏன் கடந்த ஆண்டு தோல்வியுற்றது என்பதைக் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதா? உணவை ஓர் ஆயுதமாக எத்தனை தடவைகள் பயன்படுத்தலாம்? கடந்த ஆண்டு கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கி போராட்டம் முடித்து வைக்கப்பட்ட போது அதிலிருந்து மாணவப்பிரதிநிதிகள் அவ்வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று என்பதைக் குறித்து ஆழமாக ஆராய்…
-
- 0 replies
- 532 views
-
-
இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கத்தின் பின்னணியில், பல தரப்புக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முதலாவதாக, இஸ்ரேலின் உருவாக்கத்தின்போது அரேபியர்கள் ஏமாற்றப்பட்டிருந்தார்கள். துருக்கியர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருந்தார்கள்... பின்னர் பலஸ்தீனர்கள் ஏமாற்றப்பட்டிருந்தார்கள்... இஸ்ரேல் விடயத்தில் சோவியத்தும்; ஏமாற்றம் அடைந்திருந்தது.. ஒரு சந்தர்ப்பந்தில் பிரித்தானியாவும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருந்தது.. இவர்கள் அனைவரையும் யார் ஏமாற்றினார்கள்? எப்படி ஏமாற்றினார்கள? ஏன் ஏமாற்றினார்கள்? இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: https://www.ibc…
-
- 0 replies
- 874 views
-
-
விஜயகலா கைது ஒரு அரசியல் நாடகமா? இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட குற்றத…
-
- 0 replies
- 770 views
-
-
இடைக்கால அரசாங்கக் கனவு கே. சஞ்சயன் / 2018 ஒக்டோபர் 12 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:00 Comments - 0 ‘நெருப்பில்லாமல் புகை வருமா?’ இதுதான், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு நடந்ததாக வெளியாகிய தகவல்கள் மறுக்கப்பட்ட போது, பலராலும் முணுமுணுக்கப்பட்ட பழமொழியாகும். முன்னாள் அமைச்சரும், நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு விலகி, திரிசங்கு நிலையில் இருக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான எஸ்.பி. திஸாநாயக்கவின் இல்லத்தில், கடந்த மூன்றாம் திகதி, ஓர் இராப்போசன விருந்து இடம்பெற்றிருந்தது. அதில், மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட…
-
- 0 replies
- 388 views
-
-
நீதி மறுத்து நீள்கின்ற காலமும்- நினைவழியாத சாட்சியங்களும்!! பிரம்படிப் படுகொலை – ஒக்.11 பதிவேற்றிய காலம்: Oct 10, 2018 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் பத்தாம் திகதி ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட் டத்தில் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த நாளாக அறியப்பட்டது. ‘இந்திய அமைதிப் படை’ எனும் பெயரில் ஈழத்தில் வந்திறங்கி, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடுகிறோம் என்ற பெயரில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழ் மக்களைக் கொன்று குவித்து, இங்கு இனப்படுகொலை யைத் திட்டமிட்டு அரங்கேற்றியமை உண ரப்பட்ட நாள் இது. இந்தியாவின் கபடத்த னத்தைத் தமிழ் மக்கள் வேதனையுடன் அறிந்து கொண்ட நாளாகும். இந்த நாளின் பிற்பகல் வேளை யில் இந்திய அமைதிப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்…
-
- 0 replies
- 689 views
-
-
பாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள் October 10, 2018 சு. கஜமுகன் (லண்டன்) பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமாராக பதவி ஏற்றுக்கொண்ட இம்ரான் கானின் புதிய அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் காத்திருக்கின்றன. ஜனநாயகத்தை காப்பாற்றுதல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களின் கடனை நீக்குதல் ,கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு வழங்குதல், மத அடிப்படை வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தல், இஸ்லாமிய நலன்புரி அரசை உருவக்குதல் என பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியைக் கைப்பற்றி உள்ள பி.ரி.ஐ கட்சியானது தனது உறுதிம…
-
- 0 replies
- 541 views
-
-
காபந்து அரசாங்கம் உண்மையா? சாத்தியமா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 10 புதன்கிழமை, பி.ப. 12:39 Comments - 0 அடுத்த ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வோர் அரசியல் கட்சியும், தத்தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகியுள்ளது. நாட்டின் பிரதான கட்சிகளான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய மூன்று கட்சிகளும், இந்த நிலையை எதிர்நோக்கியுள்ளன. ஐ.தே.கவினதும் ஸ்ரீ.ல.சு.கவினதும் எதிர்காலம் ஆபத்தான நிலையில் உள்ளதை, இவ்வ…
-
- 0 replies
- 581 views
-
-
விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஒக்டோபர் 10 புதன்கிழமை, பி.ப. 12:23Comments - 0 வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளோ, போராளிகளோ யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும்தான் மரியாதை. அதிகாரத்தை (அல்லது பதவியை) இழந்து “முன்னாள்” என்கிற அடையாளத்தைப் பெற்ற தருணத்திலிருந்து, அவர்களுக்கா…
-
- 1 reply
- 586 views
-
-
இரு பிரதான கட்சிகளும் இனிமேலும் ஆட்சியில் இணைந்து செயற்படுவதென்பது வெறும் பாசாங்கு அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களையடுத்து புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டம் காட்டியதற்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டரசாங்கத்தில் தொடர்ந்தும் சேர்ந்து செயற்படுவதென்பது உண்மையிலேயே ஒரு பாசாங்கு என்பதைத் தவிர வேறு ஒன்றுமாக இருக்கமுடியாது. இரு தரப்புகளுமே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.அதனால் 2015 ஜனவரியில் நிலவிய உற்சாகமான நாட்கள் ஒரு முடிந்த கதையாகிப்போய்விட்டன. …
-
- 0 replies
- 448 views
-
-
கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யாரோ? Editorial / 2018 ஒக்டோபர் 09 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:54 - அதிரன் கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார், போட்டியிடும் கட்சிகள் யாரை முதலமைச்சராக நியமிக்கும் அல்லது அறிவிக்கும் என்ற கேள்விகளுக்குப் பதில் காண்பதற்குரிய காலமாக, இதனைக் கொள்ள வேண்டும்; அதற்குத் துணிந்துமாக வேண்டும். 1987ஆம் ஆண்டு ஜூலை 29அம் திகதி கையெழுத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் படி, அதே ஆண்டின் நவம்பர் 14இல் இலங்கை நாடாளுமன்றம், அரசமைப்பில் 13ஆவது திருத்தம், மாகாண சபைச் சட்டம் ஆகியவற்றை அறிவித்திருந்தது. அதன்படி 1988ஆம் ஆண்டு பெப்ரவரியில், 9 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த மாகாண சபைகளில், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பட…
-
- 3 replies
- 900 views
-
-
இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு ஈழத் தமிழர்களின் திருகோணமலைத்துறைமுகம், வடக்கு- கிழக்குக் கடற் பிரதேசங்களை பிரதானமாகக் கருதி, இலங்கை இந்தியாவை மையமாகக் கொண்ட இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 11ஆம் 12ஆம் திகதிளில் இடம்பெறவுள்ள மாநாட்டில், இந்தியா, சீனா, ஜப்பான் அமெரிக்க, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளின் பிரதான இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவர். இந்தியப் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்த…
-
- 1 reply
- 726 views
-
-
இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு (கூர்மை தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் அனில் சூக்லால் மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவர் பீற்றர் தொம்சன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளனர். ஜப்பான் சார்பில் கொழும்பில் உள்ள தூதரக உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவார்கள். இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டை இலங்கை அரசு செய்துள்ளதாக ஊடகங்களுக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் அழுத்தங்களினால் இந்த மாநட்டை இலங்கை அரசு ஏற்பாடு செய்ததாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. …
-
- 0 replies
- 409 views
-