அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
திலீபன் மீது சத்தியம் செய்வோம் புருஜோத்தமன் தங்கமயில் / அஹிம்ஷையை ஆயுதமாக்கி மரணித்த ‘தியாகி’ திலீபனின் 31ஆவது நினைவு தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகின்றது. உயிரின் அடிப்படை இருத்தலே; பசியோடு சம்பந்தப்பட்டது. ‘பசி’ இல்லையென்றால் உயிர்கள் ஜனனிக்காது; வளராது; வாழாது. அப்படிப்பட்ட பசியையே, உரிமைகளுக்காக ஆயுதமாக்குவதும், அதன் வழியில் மரணிப்பதும் மிகப்பெரிய தியாகம். அதுவும், அஹிம்ஷையின் அடையாளமாக உலகம் கொண்டாடும் ‘காந்தி’ தேசத்திடமே, ஆயுதப் போராட்ட மரபுக்கு மாத்திரமல்ல, அஹிம்ஷைப் போராட்ட மரபுக்கும் ஈழத்தமிழ் மக்கள் சொந்தக்காரர்கள் என்று, உறுதி செய்து சென்றவன் தியாகி திலீபன். அப்படிப்…
-
- 0 replies
- 483 views
-
-
வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதப் போக்கின் செல்வாக்கு எம்.எஸ்.எம். ஐயூப் / “தற்போதைய தலைமை போய், மாற்றுத் தலைமை உதித்தால், மீண்டும் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குச் சாத்தியம் உள்ளது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாக, ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, “விக்னேஸ்வரனை இனி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவதில்லை” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் கூறி வருவதைப் போலவே, “இனி, கூட்டமைப்பின் கீழ், தேர்தலில் நிற்கப் போவதில்லை” என விக்னேஸ்வரனும் கூறுகிறார். …
-
- 0 replies
- 679 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஐநா உரை உணர்த்துவதென்ன? ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆற்றிய உரை இலங்கையின் அரசியல் மேடைகளில் ஆற்றிய உரைகளையே மீண்டுமாக நினைவுபடுத்தியது. ஒட்டுமொத்தமாக உற்றுநோக்கினால் புதிதாக எதனையும் அவர் முன்வைக்கவில்லை என்று முடிவிற்கு வரமுடியும்.கடும் எதிர்ப்புக்கள் வெளியாகிய நிலையில் ஜனாதிபதி ஐநாவிற்கு முன்வைக்கவுள்ள யோசனை விடயத்தினை மறுபரிசீலனை செய்கின்றார் என கடந்த வார ஆங்கில வார இதழொன்று தெரிவித்திருந்தது. ஜனாதிபதியின் உரையும் இதனையே புலப்படுத்துகின்றது இலங்கையில் போருக்குப் பிந்திய நிலைமைகளைக் கையாள்வது தொடர்பில் யோசனையொன்றை முன்வைக்கப்போவதாக சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மாளிக…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடும் !! சுமந்திரனின் கருத்தும்!!
-
- 0 replies
- 625 views
-
-
மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல் -சத்ரியன் ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜ பக்ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிரணி அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்ற விவகாரம் இப்போது முன்னையதை விடவும் சிக்கலானதாக மாறியிருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ தனது சகோதரர்களில் ஒருவரை போட்டியில் நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. குறிப்…
-
- 0 replies
- 775 views
-
-
வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல் காரை துர்க்கா / மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும். எனவே மகத்துவமான, உன்னதமான, பெறுமதியான இந்த வாழ்க்கையை, வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருகின்றதா, பிறரின் தயவிலும் பிறரை அனுசரித்தும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதா? இந்தக் கேள்விகளை எண்ணிப் பார்த்தால், அங்கு வாழும் மக்களின் நெருக்கடிகள், பிரச்சினைகளின் தாற்பரியங்கள் விளங்கும். வவுனியா மாவட்டத்தில், கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான முதல் எட்டு மாதங்களில், 36 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். அண்ணளவாக, ஒரு மாதத்துக்கு…
-
- 0 replies
- 520 views
-
-
இந்தியாவின் கனவைக் கலைக்கும் நேபாளம் வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பான பிம்ஸ்ரெக் இப்போது, சர்வதேச அரங்கில் பலம்பெற்று வரும், பிராந்திய நாடுகளின் மற்றொரு கூட்டமைப்பாக மாறத் தொடங்கியிருக்கிறது. இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாக அது பெரியளவில் இயங்கவில்லை. 2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்டது. இதற்குக் காரணம், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தோன்றிய பிரச்சினை. அதுவரை தெற்காசியப் பிராந்தியத்தின் வலுவான பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பாக சார்க் அமைப்புத் தான் இருந்தது. …
-
- 0 replies
- 702 views
-
-
தமிழகம் ஈழ விடுதலை போராட்டத்தை எவ்வாறு பார்க்கின்றது
-
- 0 replies
- 618 views
-
-
போர் குற்றச்சாட்டுகளில் இருந்து மீளல் என்.கண்ணன் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் நாளை மறுநாள் உரையாற்றும் போதும், ஐ.நா. பொதுச்செயலர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரைச் சந்தித்துப் பேசும் போதும், இலங்கைப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்கும் யோசனையை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறி வருகிறார். எனினும் முன்வைக்கப்போகும் யோசனை என்ன என்பதை அவர் இன்னமும் வெளியிடவில்லை. அதேவேளை, அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தகைய எந்த யோசனையும் முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியிடப்படவில்லை. இராணுவத்தினர் மீது சுமத்தப்படுகின்ற போர்க்குற…
-
- 0 replies
- 522 views
-
-
திசை மாறும் சட்டப் போராட்டம் -கபில் இன்னும் ஒரு மாதம் அமைச்சராக இருந்து டெனீஸ்வரன் எதனைச் சாதித்து விடப்போகிறார்- அல்லது டெனீஸ்வரனை இன்னும் ஒரு மாதம் பதவியில் இருக்க அனுமதிப்பதால் தான் விக்னேஸ்வரனுக்கு என்ன கெடுதல் வந்து விடப் போகிறது? இன்னும் ஒரு மாதத்துக்குப் பின்னர் வடக்கு மாகாணசபை செயலிழந்து போகும். அதற்குப் பின்னர் ஆளுநரின் கையில் அதிகாரம் வரப்போகிறது. அவர் அந்த அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவார் என்ற கேள்வி உள்ளது வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவடைந்தாலும் கூட, அதன் அமைச்சர் பதவியை முன்வைத்து தொடங்கப்பட்ட சட்டப் போராட்டம் ஓய்வுக்கு வரும் அறிகுறிகள் ஏதும் இருப்பதாகத…
-
- 0 replies
- 758 views
-
-
சுமந்திரனின் சமஷ்டி கடந்த சனிக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சுமந்திரன் சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவுப் பேருரை ஆற்றினார். சமஷ்டியின் விஸ்தீரணம் என்ற தலைப்பிலான அந்த உரையை அவர் அதிகம் சிரத்தையெடுத்து தயாரித்து வந்திருந்தார். தமிழ் அரசியல்வாதிகளில் தமது பேச்சை முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு வந்து பேசுபவர்கள் குறைவு. அப்படி தயாரித்துக் கொண்டு வந்திருந்தாலும் பலபேச்சுக்கள் அவையில் இருப்பவர்களை புத்திசாலிகளாகக் கருதி தயாரிக்கப்பட்டவை அல்ல. ஆனால் சுமந்திரன் தான் கூறவரும் கருத்தை தர்க்க பூர்வமாக முன்வைப்பவர் அது தொடர்பான தொடர்ச்சியான பகிரங்க விவாதங்களுக்கும் தயாராகக் காணப்படுபவர். சனிக்கிழமை அவர் ஆற்றிய உரைக்காக அவர் பல்வேறு நாடுகளின் …
-
- 0 replies
- 579 views
-
-
சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சீனாவின் இத்திட்டம் தொடர்பாக வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் பிரகாரம், சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது சிறிய மற்றும் வறிய நாடுகள் மீது பரந்தளவில் கடன் சுமையை உண்டுபண்ணுவதால், இந்த நாடுகளி…
-
- 0 replies
- 398 views
-
-
நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை – நிலாந்தன்… திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமைகோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமைகோரியது. முள்ளிவாய்க்கால் நிலத்துண்டு பிரதேசசபை எல்லைக்குள் அமைந்திருப்பதால் பிரதேசசபை அதை அனுஷ்டிக்கும் என்றும்பிரதேச சபை நிர்வாகம் மாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் நினைவு கூர்தலை மாகாணசபை நடத்தும் என்று ஒருவிளக்கம் தரப்பட்டது. அதுபோலவே கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லத்தை கரைச்சி பிரதேசசபை பொற…
-
- 0 replies
- 1.2k views
-
-
விக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா? யதீந்திரா சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் இன்னொரு புறமாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பிலும் புதுடில்லியில் பேசியிருக்கிறார். புதிய அரசியல் யாப்பொன்று வரும் என்பதில் சம்பந்தனுக்கு நம்பிக்கையிருப்பின் பின்னர் எதற்காக 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் பேச வேண்டும்? சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் புதுடில்லி சென்ற குழுவில் சம்பந்தன் மட்டுமல்ல ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றிருந்தார். நீண்ட காலத்திற்கு பின்னர் டக்ளஸ் தேவானந்தா புதுடில்லிக்கு அ…
-
- 0 replies
- 504 views
-
-
திசை திருப்பும் முயற்சி – பி.மாணிக்கவாசகம் நீறுபூத்த நெருப்பாக உள்ள அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் ஒரு முறை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல தடவைகள் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலைகளுக்குள்ளேயும், அவர்களுக்கு ஆதரவாக வெளியிலும் இந்த போராட்டங்கள் வலுவாக நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் அக்கறையற்ற விதத்திலேயே நடந்து கொண்டிருக்கின்றது. மேலோட்டமான பார்வையில் இதனை ஒரு சுரணையற்ற போக்கு என்றுகூட …
-
- 0 replies
- 483 views
-
-
மகிந்த அணியின் திட்டம்!! எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் கூட்டு எதிரணியினர்? எந்த வகையிலேனும் அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் கூட்டு எதிரணிக்கு எழுந்துள்ளது. மகிந்த தலைமையில் ஆட்சி அமையுமேயானால், பிரச்சினைகள் பலவற்றிலிருந்து தாம் தப்பித்துவிட முடியுமென இதில் அங்கம் வகிப்பவர்கள் நினைப்பதே இதற்கான முதன்மைக் காரணமாகும். கொழும்பில் மக்களைத் திரட்டி அரசுக்கு எதிரான பெரும் பேரணியொன்றைக் கூட்டு எதிரணி நடத்தியது. இதன் மூலமாக அரசை முற்றாகவே முடக்கப் போவதாக மகிந்த தரப்புக் கூறிய போதிலும், அவ்வாறு எதுவுமே இடம்பெறவில்லை. பேரணி தமக்குப் பெருவெற்றியென கூ…
-
- 0 replies
- 437 views
-
-
மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா? கே. சஞ்சயன் / அண்மையில், மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தியுடனான சந்திப்பு என்பன, ஒன்றிணைந்த எதிரணியை உற்சாகப்படுத்தி இருக்கின்றன. “புதுடெல்லியில் இந்திய அரசாங்கம், மஹிந்தவுக்கு இராஜ உபசாரத்தை அளித்தது. மஹிந்தவின் ‘கட்அவுட்’கள் கட்டப்பட்டு, வரவேற்பு அளிக்கப்பட்டது” என்று பெருமிதம் வெளியிட்டிருந்தார் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ். “பு…
-
- 2 replies
- 732 views
-
-
கொரிய தீபகற்பத்தில் சமாதானம் ; வலுப்படும் நம்பிக்கைகள் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே - இன்னும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் - உன்னும் தங்களுக்கிடையிலான மூன்று நாள் உச்சிமகாநாட்டின் இறுதியில் கடந்த வியாழக்கிழமை கொரிய தேசத்தின் பிறப்பிடம் என்று ஐதீகமாக நம்பப்படுகின்ற பேக்ரு மலையில் கைகோர்த்து ஏறியமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஐக்கியத்தை பறைசாற்றுகின்ற ஆற்றல்மிக்க காட்சியாக அமைந்திருந்தது என்று சர்வதேச அரசியல் அவதானிகள் வர்ணிக்கிறார்கள். வடகொரியாவில் இருக்கின்ற மலையில் நின்றவாறு ஜனாதிபதி மூன் தென்கொரியாவின் சாதாரண மக்களும் உல்லாசப் பிரயாணிகளாக அந்த மலைக்குவரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்பிக்கை வெளியிட்டார். அவரது நம்பிக்கை இரு நாடுகளுக்…
-
- 0 replies
- 403 views
-
-
மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா? முன்னாள் அரச தலைவர்என்ற மதிப்புடன் மகிந்தராஜபக்ச இந்தியாவுக்குச் சென்று தலைமை அமைச்சர் மோடி, முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸின் முக்கி யஸ்தர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் இன்றை சூழ்நிலையில் மகிந்தவின் இந்தியப் பயணம் முக்கி யத்துவம் பெறுகின்றது. சுமார் 10 ஆண்டுகாலம் அரச தலைவர் பதவியை வகித்தவர் என்ற பெருமை மகிந்தவுக்கு உள்ளது. அவர் மூன்றாவது தடவையும் அந்தப் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியபோதிலும் ஆட்சிக்கு வருவதில் உள்ள ஆர்வத்தை இன்னமும் கொண்டிருக்கிறார். இதனால் புதி…
-
- 0 replies
- 474 views
-
-
-
- 2 replies
- 821 views
-
-
முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்? ஆதித்தன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து முரண்பாடுகளை வளர்த்துச் சென்றதைத் தவிர வெறெதுவும் செய்யவில்லை என்கின்ற விமர்சனம் இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்ற நிலையில் அவர் நீதியரசர் என்ற நிலையிலிருந்தும் தன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வட மாகாணசபை உறுப்பினர் பா. டெனிஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை தவறானது எனத் தெரிவித்து தாக்கல் செய்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் எதிராளிகளாக விக்…
-
- 1 reply
- 675 views
-
-
செப்டெம்பர் நினைவுகள்: காலம் வரைந்த கோலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / எல்லா மாதங்களும் நினைவுகளைச் சுமந்துள்ளன. இருந்தபோதும், உலக அரசியலில் செப்டெம்பர் மாதம், கொஞ்சம் சிறப்பானது. செம்டெம்பர் நிகழ்வுகள், வரலாற்றின் திசைவழியில் முக்கியமான காலங்களை உள்ளடக்கியுள்ளன. அக்காலங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, எமக்குச் சில முக்கியச் செய்திகளைச் சொல்கின்றன. அச்செய்திகள் வலியன. எமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதைத் தீர்மானிக்க அவை உதவக்கூடும். சிலியில் செப்டெம்பர்: 45 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைக்கு 45 ஆண்டுகளுக்கு முன்னர், தென்னமெரிக்க நாடான சிலியில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி சல்வடோர்…
-
- 0 replies
- 650 views
-
-
சம்பிக்கவின் ஆபத்தான ‘சமாதானத் தூது’ Gopikrishna Kanagalingam / இலங்கை மத்திய அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சரொருவர், சமாதானத் தூதொன்றோடு வந்திருக்கிறார். கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டவரெனக் கருதப்படும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும், பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரியிருக்கிறார். பாடசாலைக் காலங்களில், இரண்டு மாணவர்களுக்கிடையில் ஏற்படும் பிடுங்குப்பாடுகளைத் தீர்க்கும் நோக்கத்துடன், அப்பகுதிக்கு வரும் ஆசிரியரொருவர், “சரி, இரண்டு பேரும் கைகுலுக்கி, சமாதானமாகிக் கொள்ளுங்கள்” என்று சொல்வதைப் போன்று தான், அமைச்…
-
- 0 replies
- 660 views
-
-
இந்திய –இலங்கை அரசுகளைத் தமிழர்கள் இனியும் நம்பலாமா? இலங்கையில் மீண்டும் போர் ஏற்படுவதற்கு இந்தியா அனுமதிக்கமாட்டாதெனவும், தாம் எப்போதும் தமிழர்களுக்கே ஆதரவாக இருக்கப் போவதாகவும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி, கூட்டமைப்பின் தலைவரிடம் உறுதியளித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய உறுதிமொழிகள் இலங்கைத் தமிழர்களுக்குப் புதிதானவையல்ல. இந்தியத் தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அவற்றை மறந்து விடுவதும் வழக்கமாகி விட்டது. தமிழர்களை அவர்கள் குறைவாக மதிப்பிடுவதையே இது எடுத்துக் காட்டுகி…
-
- 0 replies
- 567 views
-
-
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி – யாருக்கு அந்த அதிஷ்டம்? இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? என்ற கேள்விக்கு இன்னும் தெளிவற்ற பதில்களே கிடைக்கப்பெறுகின்றன. அன்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், மீண்டும் தாம் ஆட்சிக்கு வருவது உறுதி என்றும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தமது சகோதரன் ஒருவரே போட்டியிடுவார் என்றும். எனினும் இதுவிடயமாக கூட்டு எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் இந்தியாவின் ‘இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார். மகிந்த ராஜபக்சவின் இந்திய பயணத்தின்போது அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்சவையும் கூடவே அழைத்துச் ச…
-
- 1 reply
- 526 views
-