அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
வடக்கு - கிழக்கில் இரு கட்சி ஜனநாயகச் சூழல்? “வடக்கு கிழக்கில் ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது. இரு கட்சி ஜனநாயகத்தை நோக்கி, தமிழ்ப் பரப்பு நகர்கிறது” என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சிரேஷ்ட அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம்- புதிய தேசியவாதம்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், தலைமையுரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே, நிலாந்தனின் கருத்து அமைந்திருந்தது. வட்டாரத் தேர்தல் முறையொன்று கொண்டிருக்கின்ற அம்சங்களையும் தேவைகளையும் அவர் கருத்தில் எடுத்துப்…
-
- 0 replies
- 458 views
-
-
ஜெனிவாத் தீர்மானமும் தமிழ்நாடும் Nillanthan மற்றொரு ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகள் மற்றும் நடுநிலை வகித்த நாடுகள் போன்றவற்றை தொகுத்து பார்த்தால் ஒரு விடயம் தெளிவாக தெரியும்.ஆதரித்த நாடுகள் தமிழர்களுக்காக அதை ஆதரித்தன என்பதை விடவும் தங்களுடைய பூகோள அரசியல் நோக்கு நிலைகளில் இருந்து தீர்மானத்தை அணுகியுள்ளன என்பது. இரண்டாவதாக தீர்மானத்தை எதிர்த்த நாடுகளை எடுத்துப் பார்த்தால் அவை பெருமளவுக்கு அமெரிக்க எதிர்ப்பு காரணமாக ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்திருக்கின்றன என்பது.எனவே தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்தன என்பதைவிடவும் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித…
-
- 0 replies
- 437 views
-
-
இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியமை மற்றும், சில வாரங்களுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவளித்தமை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட பேரணியின் போது காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நாடாளுமன்றில் கருத்துரைத்த போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இனத்தின் தலைவராக அல்லாமல் பல்கலைக…
-
- 0 replies
- 1k views
-
-
ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா? - யதீந்திரா ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றம் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் அவ்வாறானதொரு உரையாடல் இடம்பெறுகிறது. மேற்குலக இராஜதந்திர வட்டாரங்களும் இது தொடர்பில் கூர்ந்து அவதானிக்கின்றன. ஆனால், இப்படியாக கூர்ந்து நோக்கும், விவாதிக்குமளவிற்கு ஊவா தேர்தல் அப்படியென்ன ஆச்சரியமான பெறுபேறுகளை தந்துவிட்டது? இதற்கான பதிலை காணும் வகையில், முதலில் ஊவா தேர்தல் முடிவுகளை எடுத்து நோக்குவோம். ஊவா தேர்தலில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349,960 வாக்குகளை பெற்று 19 ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஜக்கிய தேசியக் …
-
- 0 replies
- 535 views
-
-
அச்சுறுத்தலை எதிர்கொள்ள தமிழர்கள் தயாரா? வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் தகவல் படி, போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் புதிதாக 131 பௌத்த விகாரைகள் அல்லது வழிபாட்டு இடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகபட்சமாக, 67 விகாரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. வவுனியாவில் 35, மன்னாரில் 20, யாழ்ப்பாணத்தில் 6, கிளிநொச்சியில் 3 என்று புதிய விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன திட்டமிட்ட குடியேற்றங்கள் வடக்கின் மிக முக்கியமான பிரச்சினையாக மாறியிருக்கின்றன. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தொடங்கிய இந்தப் புற்றுநோய் இப்போது யாழ்ப்பாணத்தையும் …
-
- 0 replies
- 484 views
-
-
ஜீ 20 மாநாட்டில் விட்டுக்கொடுக்காத வல்லரசுகள் தமிழர்களும் பலஸ்தீனியர்களும் ஒற்றையாட்சியுடன் ஒத்துப்போக வேண்டும் என்று மாத்திரம் போதனை ரசிய - உக்ரெயன் போரை இந்தியா இதுவரை பகிரங்கமாகக் கண்டிக்காத நிலையில், ஜீ இருபதின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இந்த மாதம் இரண்டாம் திகதி வியாழக்கிழமை மாலை வரை புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. தலைமைப் பொறுப்பை நரேந்திரமோடி ஏற்றதால் புதுடில்லியில் இடம்பெற்ற மாநாட்டில், உக்ரெய்ன் மீதான போரை நிறுத்த இந்தியா, ரசியாவுக்குப் புத்தி சொல்ல வேண்டும் என்ற இறுமாப்புடனேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பங்குபற்றியிருந்தன. வெள்ளிக்கிழமை வெளியான இந்த நாடுகளின் நாளிதழ்களி…
-
- 0 replies
- 676 views
-
-
சிங்கள இடதுசாரிகளும் பௌத்த மயமாக்கலும் -தென் அமெரிக்க நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனை மீட்சி பெறச் செய்யும் முயற்சியில் இடதுசாரிகள் கவனம் செலுத்த வேண்டிய தேவையிருந்தது. இதனாலேயே அங்கு இடதுசாரிகள் தொடர் வெற்றிகளைக் கண்டு வருகின்றனர். ஆனால் இலங்கை இடதுசாரிகள் வெறுமனே சோசலிச சமத்துவம் என்ற கோசத்தை மாத்திரம் முன்வைக்கின்றன. -அ.நிக்ஸன்- உலக அரசியலில் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்தவரும் நிலையில், இடதுசாரிகளின் செல்வாக்குகளும் ஆதரவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களில் இடதுசாரிகள் அட…
-
- 0 replies
- 511 views
-
-
ஒரு தனிநபருக்கு முன்னால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யதீந்திரா சுமந்திரன் தனது பேச்சுக்களாலும் செயலாலும் எப்போதுமே தமிழ் அரசியலில் சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வருகிறார். தனக்கு சரியென்பதை மட்டுமே பேசுவேன் என்பதை மிகவும் இறுமாப்புடன் மேற்கொள்ளும் ஒருவராகவே சுமந்திரன் இருக்கிறார். இதன் காரணமாக எழும் எந்தவொரு விமர்சனங்களைக் கண்டும் சுமந்திரன் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. பிறிதொரு வகையில் நோக்கினால் இதுவே சுமந்திரனின் பலமாகவும் இருக்கிறது. இப்போதும் சுமந்திரன் கூறியதாக சொல்லப்படும் ஒரு கருத்து தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அதற்கு சுமந்திரன் வழங்கியிருக்கும் பதில் மேலும் சர்ச்சைகளை ஏற்ப…
-
- 0 replies
- 2.1k views
-
-
2018 நொபெல் பரிசுகள்: காலம் கடந்த வாழ்வு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 04 வியாழக்கிழமை, பரிசுகளுக்கு ஒரு மரியாதை உண்டு. ஆனால், அது என்னென்றைக்குமானதல்ல. அது சாகித்திய விருது முதல் நொபெல் பரிசு வரை அனைத்துக்கும் பொருந்தும். நம்பகத்தன்மையைத் தக்கவைக்கும் விருதுகள், காலங்கடந்தும் நிலைக்கின்றன. நம்பகத்தன்மையை இழந்த விருதுகள், காலங்கடந்தும் வாழும் போதும், அதன் நிலை அவலமானது. நாடகத் தன்மையுடனும் சடங்காசாரங்களுடனும் அது தன்னைத் தக்க வைக்க முனைகிறது. காலங்கடந்த வாழ்வு, மனிதர்களுக்கு மட்டுமல்ல, பரிசுகளுக்கும் துன்பமானது. இக்கட்டுரையை, நீங்கள் வாசிக்கும்போது, சமாதானத்துக்கான பரிசும் இலக்கியத்துக்கான பரிசும் தவிர்த்து, ஏனைய துறைசார் நொபெல் பர…
-
- 0 replies
- 424 views
-
-
வடக்கு முதலமைச்சர் மீதான எதிர்பார்ப்பு…! நரேன்- தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் 2009 மே 18 இற்கு பின்னர் மீண்டும் ஒரு ஜனநாயகப் போராட்டமாக மாற்றமடைந்திருந்தது. முள்ளிவாய்கால் இழப்பினை மூலதனமாகக் கொண்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை வலுவாக முன்னுறுத்தி அவர்களது அபிலாசைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தானாகவே விழுந்திருந்தது. இன்று 9 ஆண்டுகள் கடந்த நிலையில் அதில் உள்ள முன்னேற்றம் குறித்து சிந்தித்து பார்ப்பதன் மூலம் கூட்டமைப்பின் பலம், பலவீனம் குறித்து அறிந்து கொள்ள முடியும். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு என்பதற்கு அப்பால் குறைந்த பட்சம் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவக…
-
- 0 replies
- 469 views
-
-
உலகில் விமானப்படைக் கொண்ட ஒரே இயக்கம் களமிறங்கியது, ‘வான்புலி’ப் படை விடுதலைப்புலிகளின் விமானப்படை ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கி விட்டது. மார்ச் 26, 2007 - தமிழின வரலாற்றில், நீங்கா இடம்பெற்ற நாளாகும். உலகிலேயே எந்த ஆயுதம் தாங்கிப் போராடும் விடுதலை இயக்கமும் விமானப்படையைக் கொண்டிருக்கவில்லை. தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் மட்டுமே இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஏற்கனவே தரைப்படையும், கடல்படையும் தம்மிடம் கொண்டுள்ள விடுதலைப்புலிகள் இப்போது ‘வான்புலி’களையும் களத்தில் இறங்கியிருப்பது சிங்களப் பேரினவாத ஆட்சியை நிலை குலையச் செய்து விட்டது. உலகமும், வியந்து பார்க்கிறது. வன்னியிலிருந்து புறப்பட்ட புலிகளின் இரண்டு போர் விமானங்கள், கொழும்பிலிருந்து 23 கிலோ மீட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
18 SEP, 2023 | 05:27 PM சுகுமாரன் விஜயகுமார் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை பற்றி இப்போது பலரும் கதைத்து வருகின்றனர். கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசிப்பதற்காக 20 பேர்ச்சஸ் அல்லது அதற்கு அதிகமான அரசக் காணிகள் சட்ட ரீதியாக உரித்துடன் வழங்கப்படுகின்றன. எனினும் மலையக மக்களுக்கு வசிப்பதற்காக 1995ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை ஒரு குடும்பத்துக்கு 7 பேர்ச்சஸ் அளவு காணியே வழங்கப்பட்டுள்ளது. அவையும் சட்ட உரித்து அற்றவைகளாகும். 1972 ஆம் ஆண்டு 01ஆம் இலக்க காணி சீர்திருத்த ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 3(3) இன் பிரகாரம் பெருந்தோட்டங்களில் லயன் வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களுக்க…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
ஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? நிலாந்தன் February 3, 2019 அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதையடுத்து அப்பொழுது வெளிவந்துகெண்டிருந்த ‘சரிநிகர்’ பத்திரிகை அதன் முன்பக்கத்தில் குகமூர்த்தி காணாமல் போய் இத்தனை நாட்களாயிற்று என்ற செய்தியைத் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தது. சில ஆண்டுகளின் பின் சரிநிகரும் நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின் குகமூர்த்தியைப் பற்றி ஆங்காங்கே யாராவது அவருடைய நண்பர்கள் அல்லது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஏதும் எழுதுவார்கள் அல்லது பேசுவார்கள். ஆனால் குகமூர்த்தியைத் தமிழ்ச்சமூகம் மறந்து இன்றோடு 19 ஆண்டுகளாகி விட்டது. க…
-
- 0 replies
- 746 views
-
-
மே18.2024 – நிலாந்தன்! மீண்டும் ஒரு நினைவு நாள் தமிழ் மக்களைக் கூட்டிக் கட்டியிருக்கிறது திரட்டி யிருக்கிறது.இம்முறையும் ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கித் திரண்டிருக்கிறார்கள்.விசேஷமாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அங்கே காணப்பட்டார்.கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தமிழ் அதிகாரி ஒருவரும் அங்கே காணப்பட்டார்.சுமந்திரனும் உட்பட செல்வம் அடைக்கலநாதன்,சித்தார்த்தன்,சிறீரீதரன்,கஜேந்திரன் முதலாய் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள்.மதகுருக்கள்,சிவில் சமூகப் பிரதிநிதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஈழத் தமி…
-
- 0 replies
- 408 views
-
-
நினைவு கூர்தலில் பல்வகைமை – நிலாந்தன். “ஈழ விடுதலை இலட்சியத்திற்கான போரில் இன்னுயிர் நீத்த அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம்” என்று நோர்வையில் வசிக்கும் ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அதற்குப் பலமான எதிர்ப்புக் கிளம்பியது. மாவீரர்களின் நினைவுகளையும் ஏனைய இயக்கங்களின் தியாகிகளின் நினைவுகளையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது என்று ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். மாவீரர் நாள் எனப்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தியாகிகளை நினைவு நாள். அதேசமயம் விடுதலைப் புலிகள் அல்லாத ஏனைய இயக்கங்கள் தங்களுக்கென்று தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றன. எனவே அவரவர் தங்கள் தங்கள் தியாகிகள் தினத்தைக் கொண்டாடுவதுதான் சரி. இதில் மாவீரர்…
-
- 0 replies
- 391 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்: தமிழர் தலைமைகளின் நிலைப்பாடுகள் என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 04 , மு.ப. 02:32 எதிர்பார்த்தது போலவே, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உந்துதலின் பெயரில், ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து சமர்ப்பித்த 13 அம்சக் கோரிக்கைகளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தப் பிரதான வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜே.வி.பி சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறது; ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பை முற்றாக நிராகரித்து இருக்கிறது. கோட்டா, மேலோட்டமாகக் குறித்த கோரிக்கைகளை நிராகரித்திருக்கிறார் என்று செய்திக்குறிப்புகள் மூலம் தெரிகிறது. சஜித், இதுபற்றி வாய்திறக்கவே இல்லை. இந்தச் சூழலில், குறித்த 13 அம்சக் கோரிக்…
-
- 0 replies
- 531 views
-
-
தமிழ் அரசியல் கட்சிகளை பொதுவான தீர்வு நிலைப்பாடு ஒன்றுக்காக ஒன்றிணைக்கவேண்டிய காலம் இது லோ. விஜயநாதன் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவை பிழையான முடிவாக காட்டுவதற்கு சிலர் முனைகின்றனர். இந்த தேர்தல் முடிவை சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது போலவும் சிலர் காட்ட முற்பட்டுள்ளனர். ஆனால் இவை தவறான அர்த்தப்படுத்தல்கள். சிங்கள பெளத்த தேசியவாதத்தின் எழுச்சி நிலையை மையப்படுத்தி தேர்தல் முடிவுகளை ஆராயாமல் தமிழ் தேசிய நிலையிலிருந்து தேர்தல் முடிவுகளை நோக்கும்போது தமிழ் மக்கள் மிகவும் சரியான முடிவையே எடுத்திருந்தனர் என்பதை உணர முடியும். நடந்து முடிந்த தேர்தல் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஒரு …
-
- 0 replies
- 1.1k views
-
-
சாள்ஸ் அன்ரனியும் யோசித ராஜபக்சவும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித மீதான ஆணைக்குழுவின் விசாரணை சுட்டிநிற்கிறது. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. டிசம்பர் 2006ல் சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொண்ட மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச கடந்த பத்தாண்டில் எவ்வாறான பதிவுகளைக் கொண்டுள்ளார் என்பதை இங்கு பார்க்கல…
-
- 0 replies
- 757 views
-
-
சமஷ்டியும் சர்வதேச விசாரணையும் ஊடகப் பரபரப்பும் சமஷ்டியை, ஏன் தென்னிலங்கை இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கின்றது?' என்று கனடாவிலிருந்து வந்திருந்த ஊடகத்துறை நண்பரொருவர் என்னிடம் கேட்டார். 'இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 'சர்வதேச விசாரணை' முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற தமிழ் மக்களின் கோரிக்கை, ஒரு கட்டத்துக்கு மேல் மெல்ல மெல்ல வலுவிழந்தமைக்கான காரணிகளில் ஒன்றுதான், தென்னிலங்கையின் 'சமஷ்டி' எதிர்ப்புக்குமான காரணி' என்றேன். நண்பர் கொஞ்சமாக கண்களைச் சுருக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார். கீழ் கண்டவாறு நான் பதில் கூறத் தொடங்கினேன், இலங்கையில், 'சர்வதேச விசாரணை' என்கிற சொல்லாடல் ஆளுமை பெறுவதற்கு …
-
- 0 replies
- 484 views
-
-
அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி: தேர்தல் களத்துக்கான புதிய வழிகாட்டி எம். காசிநாதன் நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியின் மூலம், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அரசியலில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, கெஜ்ரிவால் எடுத்த முயற்சிகளுக்கு, விவரமுள்ள வாக்காளர்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவு, இந்தியாவில் மாற்று அரசியலைக் கொடுக்க முனைபவர்கள் மீதும், மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியிருக்கிறது. கடந்த காலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும், தேசிய…
-
- 0 replies
- 380 views
-
-
ஹரிணிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன். பிரதமர் ஹருணி மீதான தாக்குதல்கள்,முதலாவதாக கட்சி அரசியல் வகைப்பட்டவை. இரண்டாவதாக, பண்பாட்டு வகைப்பட்டவை. மூன்றாவதாக பெண்களுக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கும் (LGBTQ) எதிரானவை. ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் ஹரிணிக்குப் பெரிய பங்குண்டு.தேசிய மக்கள் சக்தியின் பிரகாசமான லிபரல் முகமாக அவர்தான் வெளியே தெரிய வந்தார்.அதனால் அவருக்கு இரண்டு முனைகளில் எதிர்ப்பு இருந்தது. முதலாவது முனை, அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே உண்டு. கட்சியின் அடித்தளமாக இருக்கும் ஜேவிபியின் கடும்போக்காளர்கள் அவருடைய பிரபல்யத்தையும் எழுச்சியையும் ரசிக்கவில்லை.அவர்கள் அவருடைய இடத்துக்கு ஒரு ஜேவிபியின் கடும்போக்கு உ…
-
- 0 replies
- 172 views
-
-
சாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டால், தேசம் என்பதைக் கட்டியெழுப்ப முடியுமா? இலங்கையின் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் நின்று கொண்டு மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அது ஒவ்வொரு கட்சிகளுக்குமான வெவ்வேறு தளங்களிளான ஆதரவாகவே மாறும். இந்த ஆதரவுத் தளங்கள், சிங்கள ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்குச் சாதகமாக அமையும்- -அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு அதுவும் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளின் ஊடான தேர்தல் அரசியலில் மாத்திரம் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காண முடியும் என்ற கேள்விகள் எழுவது இயல்பானது. எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஈழத்த…
-
- 0 replies
- 383 views
-
-
சவாலை எதிர்கொள்வதற்கு தயாராகும் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு பூர்வாங்க வரைவு நவம்பரில் வரவு- – செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களின் அங்கீகாரத்தை அரசாங்கம் பெறவேண்டும். அத்தகைய வாக்கெடுப்பில் மக்கள் புதிய அரசியலமைப்பு வரைவை நிராகரிப்பார்களாக இருந்தால், அதுவே அரசாங்கத்தின் வாட்டர்லூவாக இருக்கலாம். புதிய அரசியலமைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்தும்…
-
- 0 replies
- 442 views
-
-
தலைவர்களுக்காக முஸ்லிம் அரசியல் நலிவடைகிறது இலங்கை முஸ்லிம்கள் தங்களது அரசியல் நடவடிக்கைகளை மீளமைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர் . முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அரசியல் இலாபங்களை மாத்திரம் கணக்கில் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. இதனால்தான், முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு இனவாதிகளினாலும், அதிகாரத்தில் உள்ளவர்களினாலும் மேற்கொள்ளப்படுகின்ற அதிரடி நடவடிக்கைகளையும், பிறசெயற்பாடுகளையும் தடுத்து நிறுத்துவதற்கு முடியாத அவலத்தில் முஸ்லிம் சமூகம் இருக்கின்றது. எனவே, முஸ்லிம் தலைவர்கள் தங்களது அரசி…
-
- 0 replies
- 733 views
-
-
வட மாகாண சபையின் கல்வி மீளாய்வு வழங்கும் படிப்பினைகள் வடமாகாண கல்வி அமைச்சு 2014 ஆம் ஆண்டில் ஒரு பிரதான பணியைச் செய்தது. இத்தகைய ஒரு பணியை ஏனைய மாகாண சபைகள் எதுவும் செய்யவில்லை. அதிகாரப் பரவலாக்கல் செயற்பாட்டின் காரணமாக அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தின்படி கல்வி தொடர்பான பல அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் வழங்கப்பட்டன. 350 தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய 9700 பாடசாலைகளும் மாகாண சபைகளின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன. மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை, பாடசாலைக் கலைத் திட்டம், பாடநூல்கள் போன்ற பலவற்றுக்குப் பொறுப்பு வகித்தாலும் மாகாணங்களின் கல்வி முன்னேற்றம் மாகாண சபைகளுடைய பொறுப்பாக உள்ளது. …
-
- 0 replies
- 1.1k views
-