அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஜெனிவாவை எதிர்கொள்ளல் - நிலாந்தன்- 16 பெப்ரவரி 2014 அண்மையில் லண்டனில் வசிக்கும் சமூகச் செயற்பாட்டாளரான ஒரு நண்பர் கேட்டார். தமிழ்நாட்டிலுள்ள தீவிர தமிழ்த்தேசிய இயக்கங்களும், கட்சிகளும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அதேசமயம், கூட்டமைப்புக்கு எதிராகவும் கருத்துக்களைக் கூறி வருகின்றன. தாய் தளத்தில் துலக்கமான மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் ஒரு கட்சியை கடுமையாக விமர்ச்சிப்பதற்குரிய உரிமையை இவர்கள் எப்படிப் பெற்றார்கள்? என்று.... ''அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு' என்று நான் சொன்னேன். ஒன்று கூட்டமைப்பின் கையாலாகாத் தனம் அல்லது அதன் அரை இணக்க அரசியல் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தி. இரண்டாவது தமிழ் டயஸ்பொறாவிலுள்ள தீவிரமான தரப்புக்களுடனான உறவு. இவை இரண்டின் காரணமாகவு…
-
- 4 replies
- 884 views
-
-
ஜெனிவாவை கையாள்வது எப்படி? குழப்பமும் விளக்கமும்.
-
- 0 replies
- 511 views
-
-
ஜெனிவாவை தணிக்கும் தீவிர முனைப்பில் அரசாங்கம் ரொபட் அன்டனி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இலங்கையின் வரவு செலவுத்திட்ட சம்பிரதாயங்களுக்கும் வழமைக்கும் மாறான முறையில் வித்தியாசமான அணுகுமுறையுடனான வரவு செலவுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது பொது மக்களை திருப்திப்படுத்துவதற்கான நிவாரணங்கள் குறைந்த அதேவேளை பொருளாதார ரீதியில் வர்த்தகர்களை ஊக்குவிக்கின்ற, முதலீடுகளை அதிகரிக்கின்ற, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளை முன்னேற்றுகின்ற வகையில் பல்வேறு பரிந்துரைகளுடன் வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மிகவும் வித்தியாசமான ஒரு அணுகுமுற…
-
- 0 replies
- 360 views
-
-
ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள் – நிலாந்தன். September 12, 2021 கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில் 14 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு “மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்” என்பதாகும். வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐநா கூட்டத்தொடரையொட்டித் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் அரசாங்கம் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது. முதலாவதாக அனைத்துலக விசாரணை மற்றும் அனைத்துலக தகவல் சேகரிப்பு பொறிமுறைகள் தொடர்பாக பின்வருமாறு கூறப்பட்டு…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு? நிலாந்தன் January 24, 2021 வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தரப்பில் இவ்வாறு ஒரு ஆவணம் உருவாக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை. குறிப்பாக கடந்த எட்டு ஆண்டு காலப்பகுதிக்குள் ஜெனிவாவில் தமிழ்மக்கள் எதைக் கேட்க வேண்டும் என்பது குறித்து நீண்ட ஆலோசனைகளின்பின் உருவாக்கப்பட்ட ஓர் ஆவணம் இது.இம்முயற்சிகளின் தொடக்கம் தமிழ் டயஸ்போறாதான். லண்டனை மையமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்பு ஒன்று முதன்முதலாக அப்படி ஒரு ஆவணத்தை உருவாக்கி சுமந்திரனுக்கு வழங்கியதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை பக்கமுடை…
-
- 0 replies
- 775 views
-
-
ஜெனிவாவை நோக்கி மூன்று கடிதங்கள் ? நிலாந்தன்! தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கைச்சாத்திட்ட ஒரு பொதுக் கடிதம் நேற்று ஐநாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஐநா கூட்டத் தொடரையொட்டி இப்படி ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும் என்று டெலோ இயக்கம் முன்னெடுத்த முயற்சிகளின் விளைவாக இப்படி ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் கடந்த பல மாதங்களாக டெலோ இயக்கம் ஈடுபட்டு வந்தது. அம் முயற்சிகளை முதலில் தொடங்கியது மாவை சேனாதிராசாதான். அம்முயற்சிகளில் அவர் ஒரு கட்டத்தில் மதத்தலைவர்களையும் ஒருங்கிணைத்தார்கள் . Covid-19 சூழலுக்குள் மாவை சேனாதிராசாவின் மேற்ப…
-
- 1 reply
- 549 views
-
-
ஜெனிவாவை நோக்கித் தமிழ்த் தரப்பை ஒன்றிணைக்க முடியுமா? நிலாந்தன்… January 3, 2021 கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட அச்சந்திப்பின் நோக்கம் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கித் தமிழ்த் தரப்பு எப்படி ஒரே அணியாக அணுகலாம் என்பதற்குரிய வழிவகைகளை கண்டுபிடிப்பதே. திருமலை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரான நோயல் இமானுவேல் அடிகளார் ;மதகுருக்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவர்களோடு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் அழைப்பு…
-
- 0 replies
- 407 views
-
-
ஜெனிவாவைக் கையாளும் வித்தை - கே. சஞ்சயன் ஜெனிவாவில் அரசாங்கத்துக்குக் காலஅவகாசத்தை அளிக்கும் விவகாரம் தொடர்பாகத் தமிழ் அரசியல் தலைமைகள் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சூழலில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மிகச் சாவகாசமாகத் தனது உரையை நிகழ்த்தியிருக்கிறார். மங்கள சமரவீரவின் உரையில் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சில விடயங்களை அவர் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றத் தவறியிருப்பது பற்றிய பதற்றம் கொஞ்சம் கூட இல்லாமல், வெளிவிவகார அமைச்சர் மங…
-
- 0 replies
- 477 views
-
-
ஜெனீவாவும் தமிழர் தரப்பும் கபில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதங்கள் இரண்டு இம்முறை இருப்பதால், ஜெனீவாவை நோக்கிய தமிழர் தரப்பின் ஓட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களின் கவனத்தை ஈர்க்கின்ற பல்வேறு போராட்டங்களும், பக்க அமர்வுகளும் நடத்தப்பட்ட போதிலும், போருக்குப் பின்னர் தான், ஜெனீவா நோக்கிய தமிழர் தரப்பின் நகர்வுகளும், ஓட்டங்களும் கூர்மையடைந்தன. போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் போராட்டங்கள் ஜெனீவா களத்…
-
- 0 replies
- 368 views
-
-
ஜெனீவா -2018 – என்ன காத்திருக்கிறது? நிலாந்தன்…. ஜெனீவாக் கூட்டத்தொடர்களில் தமிழ்த்தரப்பானது மைய நிகழ்வில் பங்குபற்றுவதில்லை. மாறாக பக்க நிகழ்வுகளில் (side events) தான் பங்கேற்பதுண்டு என்ற ஒரு விமர்சனம் எள்ளளோடு முன்வைக்கப்படுவதுண்டு. ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழ்த்தரப்பிற்கு மைய நிகழ்வில் பெரியளவு முக்கியத்துவம் கிடைக்காதுதான். பதிலாக பக்க நிகழ்வுகளில்தான் தமிழ் மக்கள் தமது குரலை வலிமையாகவும், உரத்தும் ஒலிக்க முடியும். பக்க நிகழ்வுகள்,நிழல் அறிக்கைகள்(shadow reports) போன்றவை அரசற்ற தரப்புக்கள் தமது நியாயத்தை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள்தான். கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் தமது பயங்களையும், சந்தேகங்களையும், நியாயங்களையும் மேற்படி …
-
- 0 replies
- 358 views
-
-
ஜெனீவா – ஏமாற்றமா? சுபத்ரா மீண்டும் ஒருமுறை இலங்கை பற்றிய விவாதங்கள், ஜெனீவாவில் நடந்து முடிந்திருக்கின்றன. கடந்த வாரத்துடன் நிறைவடைந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், 37 ஆவது கூட்டத்தொடரில், கடந்த 19ஆம் திகதியும், 21ஆம் திகதியும் இலங்கை பற்றிய இரண்டு விவாதங்கள் இடம்பெற்றன. மார்ச் 19ஆம் திகதி நடந்தது, பூகோள கால மீளாய்வு அறிக்கை தொடர்பானது. அது அவ்வளவு முக்கியத்துவம் அற்றது. ஆனால், மார்ச் 21ஆம் நாள் நடந்த விவாதம் அப்படிப்பட்டதல்ல. அது ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தான், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர்கள் சரத் அமுனுகம, பைசர் முஸ்தபா என்று …
-
- 0 replies
- 320 views
-
-
ஜெனீவா 2019 – நிலாந்தன்… March 31, 2019 ‘மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து வதற்கான எந்த அதிகாரமும் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும் எதிராக 70 வரையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கும் ஒரேயொரு நாடு இலங்கையாகும்.’ இவ்வாறு கூறியிருப்பவர் கலாநிதி பாலித்த கோகன்ன. வியத்மக அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த சனிக்கு முதற்சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அதில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். கலாநிதி பாலித்த கோகன்ன ஒரு புத்திஜீவி. முன்னாள் ராஜதந்த…
-
- 0 replies
- 640 views
-
-
ஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? நிலாந்தன் February 3, 2019 அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதையடுத்து அப்பொழுது வெளிவந்துகெண்டிருந்த ‘சரிநிகர்’ பத்திரிகை அதன் முன்பக்கத்தில் குகமூர்த்தி காணாமல் போய் இத்தனை நாட்களாயிற்று என்ற செய்தியைத் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தது. சில ஆண்டுகளின் பின் சரிநிகரும் நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின் குகமூர்த்தியைப் பற்றி ஆங்காங்கே யாராவது அவருடைய நண்பர்கள் அல்லது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஏதும் எழுதுவார்கள் அல்லது பேசுவார்கள். ஆனால் குகமூர்த்தியைத் தமிழ்ச்சமூகம் மறந்து இன்றோடு 19 ஆண்டுகளாகி விட்டது. க…
-
- 0 replies
- 746 views
-
-
ஜெனீவா 2022 – நிலாந்தன். March 13, 202 கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளைத் திரட்டும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்பதே அது. அவ்வாறு ஜெனிவா தீர்மானத்தில் அப்பொறிமுறையை இணைப்பதற்காக தொடக்கத்திலிருந்தே உழைத்தது பி.ரி.எஃப் எனப்படும் பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு ஆகும். மியான்மர் மற்றும் சிரியாவில் உருவாக்கப்பட்ட பொறிமுறைகள மனதில் வைத்து பிரிஎப் உழைத்திருந்தாலும் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது அப்படிப்பட்ட ஒரு பொறிமுறை அல்ல என்ற ஒரு விமர்சனம் உண்டு. மேலும் அது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி …
-
- 0 replies
- 496 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்க ஜெனீவா 30/1 தீர்மானத்திற்கு மீண்டும் சாயம் பூச முற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கோட்டாபய தன்னைச் சிறந்த தலைவராக நிறுவலாம் என்கிறார் ஜெகான் பெரேரா கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மாற்றுக்கொள்கை மையம் (Centre for Policy Alternatives-CPA) மற்றும் தேசிய சமாதானப் பேரவை (National Peace Council-NPC) போன்ற சில தன்னார்வ நிறுவனங்கள் சர்வதேச சக்திகளோடு சேர்ந்து 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சிங்கள அரசியல்வாதிகள் பலர் அவ்வாறு…
-
- 0 replies
- 697 views
-
-
ஜெனீவா அமர்வுக்கு முதல் நாள் அநுராதபுரம் சிறைச்சாலையில் நடந்ததென்ன? –போர்க்குற்ற விசாரணையைத்தான் உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்களை ஜெனீவா நம்புகின்றது– நம்புவதுபோலக் காண்பித்துச் சேர்ந்து விளையாடுவது போலவும் தெரிகிறது. அதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் உடந்தையாகின்றன — -அ.நிக்ஸன்- வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது…
-
- 0 replies
- 304 views
-
-
ஜெனீவா அரங்கில் இலங்கையை தக்கவைத்தல் புருஜோத்தமன் தங்கமயில் இந்த ஆண்டின் இறுதி ஜெனீவா அரங்காற்றுகை, தற்போது நிகழ்த்தப்படுகின்றது. வழக்கத்துக்கு மாறாக, தென் இலங்கையில் இருந்தும் பிரதான எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிங்கள பெரும்பான்மை எண்ணங்களை பிரதிபலித்து வருகின்ற தரப்புகள் சிலவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை நாடிச் சென்றிருக்கின்றன. ராஜபக்ஷர்களுக்கு எதிரான தென் இலங்கையின் கிளர்ச்சிப் போராட்டங்களுக்குப் பின்னரான நாள்களில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், கடத்தல்கள் பற்றி முறையிடுவதற்காக, சிங்களத் தரப்புகள் ஜெனீவாவில் நடமாடி வருகின்றன. இலங்கையில் இடம்பெற்று வரும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்,…
-
- 0 replies
- 330 views
-
-
ஜெனீவா அரங்கோடு கரைதல் புருஜோத்தமன் தங்கமயில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், எதிர்வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரை முன்வைத்து, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையில் வாதப் பிரதிவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் புதிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அக்கறை கொண்டிருக்கின்றது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், கூட்டமைப்பின் புதிய தீர்மானத்துக்கான முன்மொழிவு என்பது, மீண்டும் இலங்கைக்குக் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டது என்று விமர்சித்திருக்கின்றன. இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், போ…
-
- 0 replies
- 980 views
-
-
ஜெனீவா அறிக்கை அரசாங்கத்துக்கே சாதகமாகும்- பிரபல ஊடகவியலாளர் தகவல் ‘தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் முன்னைநாள் ஊடகவியலாளரான அந்தப் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் கருத்து வெளியிட்டுள்ளார்- மறைந்த மங்கள சமரவீரவின் அணுகுமுறையைக் கையாண்ட பீரிஸ்’. அ.நிக்ஸன் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சராகக் கொண்டியங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிநாட்டமைச்சு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கடந்த 27ம் திகதி தான் சமர்ப்பித்த மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமு…
-
- 0 replies
- 509 views
-
-
ஜெனீவா இன்னொரு முறை ஏமாறுவோமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மீண்டுமொருமுறை இலங்கை அரசியலில், ஜெனீவா அமர்வுகள் கவனம் பெறுகின்றன. கடந்த ஒரு தசாப்தகாலமாக, ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஒரே களமான இருப்பது, ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையாகும். குறிப்பாக, இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக, அதனூடு தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுவிட முடியும் என்ற திசைவழியில், தமிழர் அரசியல் பயணித்திருக்கிறது. ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ கதையாகிப் போன இந்த முயற்சியின் மீது, இப்போதும் அளவற்ற நம்பிக்கை சூழ்ந்து இருக்கிருக்கிறது. தமிழருடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, அவர…
-
- 0 replies
- 642 views
-
-
ஜெனீவா எதிர் கொழும்பு: மீண்டும் ஆரம்பித்த மோதல் எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையுடன் மீண்டும் மோத ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசாங்கமாக இருந்தாலும் அது, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவின் அரசாங்கம் என்பதாலேயே, இந்த நிலைமை உருவாகியிருக்கிறது. கடந்த வருடம், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பான ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அந்த இணை அனுசரணையை இம்முறை வாபஸ் பெற்றுக் கொண்டது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2012, 2013, 2014 ஆகிய …
-
- 0 replies
- 438 views
-
-
ஜெனீவா ஏமாற்று வித்தை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஏப்ரல் 03 புதன்கிழமை, பி.ப. 08:53 Comments - 0 Views - 20 மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், அப்பேரவை விடயத்தில் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக சிங்கள மக்களுக்கும் உண்மையைக் கூறுவதில்லை. தாம், மனித உரிமைகள் பேரவையின் முன் மண்டியிடுவதில்லை என, அவ்வரசாங்கங்களின் தலைவர்கள், சிங்கள மக்களிடம் கூறி வருகிறார்கள். அதேவேளை, அவர்கள், மனித உரிமைகள் விடயத்தில், பொறுப்புக் கூறல் தொடர்பில் பல நடவடிக்கைகளைத் தாம் எடுத்து வருவதாக, மனித உரிமைகள் பேரவையிடம் கூறி வருகிறார்கள். உண்மைநிலை என்னவென்றால், அவர்கள், மனித உரிமைகள் பேரவையின் நெருக்குவாரத்தின் க…
-
- 0 replies
- 907 views
-
-
ஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு? ஜெனிவாவில் அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 23 ஆம் திகதி வரை தொடரப்போகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இடம்பெறப் போகிறது. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்ற நாடு எது என்பது தெளிவாகத் தெரியாது போனாலும் தீர்மானம் வரப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் இதனை அமெர…
-
- 0 replies
- 814 views
-
-
ஜெனீவா கால அவகாசம் ஜெனீவாவில் அடுத்தவாரம் கூடவிருக் கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில், ‘காலஅவகாசம்’ கோருவதற்கான முயற்சிகளில் அர சாங்கம் இறங்கியிருக்கின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கே, அரசாங்கம் மேலும் காலஅவகாசம் கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங் கள சமரவீர கூறியிருந்தார். எனினும், எவ்வளவு காலஅவகாசத்தை அரசாங்கம் கோரவுள்ளது என்ற தகவலை அவர் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால், 18 மாத காலஅவகாசம் கோருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியி…
-
- 0 replies
- 603 views
-
-
ஜெனீவா காலத்திலும் அரசாங்கத்தின் விடாப்பிடியான நிலைப்பாடு -மொஹமட் பாதுஷா நாட்டில், கடந்த ஒரு வருட காலமாக கொவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புபட்ட நெருக்கடிகள் பற்றியே, பேசிக் கொண்டிருக்கின்றோம். கொரோனா வைரஸ் தொற்றாமல் பாதுகாப்பது, தொற்றியவர்களுக்கு சிகிச்சையளிப்பது ஆகியவற்றைத் தாண்டி, பேசப்பட்ட ஒரேயொரு விடயம் ஜனாஸா எரிப்பு விவகாரமாகும். ஆனால், மேற்குறிப்பிட்ட எந்த நெருக்கடியும் இதுவரை முடிவுக்கு வரவில்லை. வைரஸ் பரவலோ, மரணங்களோ முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. எல்லா விடயங்களிலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றும் இலங்கை, ‘உடல்களை அடக்கம் செய்யவும் முடியும்' என்ற வழிகாட்டலை மட்டும் பின்பற்றவில்லை. ஒரு நாடு என்ற அடிப்படையில், இலங்க…
-
- 0 replies
- 538 views
-