அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
முஸ்லிம்களை நெருங்கும் ராஜபக்ஷாக்கள்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினர் அண்மைக் காலமாக முஸ்லிம் சமூகத்துடனான தமது உறவை மீள்புதுப்பிக்க ஆரம்பித்திருப்பதை பகிரங்கமாகவே அவதானிக்க முடிகிறது. முஸ்லிம் அமைப்புகளைச் சந்தித்தல், முஸ்லிம்களின் பொது நிகழ்வுகளில் பங்கேற்றல், இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வுகளை நடத்துதல் என பல வகைகளில் இந்த உறவு புதுப்பித்தல் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. கோத்தபாய ராஜபக்ஷ 'எளிய' அமைப்பை ஆரம்பித்து 2020 ஆம் ஆண்டை நோக்கிய தனது அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற ந…
-
- 0 replies
- 428 views
-
-
மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம் வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்த வாரத் தொடக்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின் போது, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவர், அரச அதிகாரிகள், படை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருடன், கலந்துரையாடல்களை நடத்தினார். இந்தச் சந்திப்புகளில், வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன. திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை, நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், இந்தக் கலந்…
-
- 0 replies
- 498 views
-
-
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் -சுபத்ரா ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத போதிலும், இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகள் ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்தவாரம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியில், அமெரிக்க - இலங்கை உறவுகள் பலமடைந்து வருவது பற்றிக் கூறியிருந்தார். ஜெனீவாவில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றவில்லை என்றும், அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்…
-
- 0 replies
- 545 views
-
-
தமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும் – நிலாந்தன்… சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன. இது இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் உரிய பூமி என்றும் இவ்விரு மதப்பண்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற தொனிப்படவும் அவர் உரையாற்றியிருக்கிறார். சட்ட விரோதமாக மாடுகளைப் பிடிப்பது, கொல்வது என்பது ஒரு பிரச்சினைதான். அது ஒரு சட்டப்பிரச்சினை. ஆனால் அதை மத நோக்கு நிலையிலிருந்து வியாக்கியானம் செய்வதையும், அது தொடர்பில் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவிப்பதை…
-
- 0 replies
- 236 views
-
-
20 ஆவது திருத்த யோசனையும் அரசியல் எதிர்காலமும் இதில் உறுதியான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தார்கள். இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க மக்களிடம் ஆணையைக்கேட்டு அதை சாதுரியமாக பெற்றும் கொண்டார்.அதை மாற்றியமைப்பதற்கான அரசியல் நிர்ணய சபையாக பாராளுமன்றை மாற்றியதுடன் உபகுழுக்கள் வழிப்படுத்தல் குழு என குழுக்களை அமைத்த விவகாரங்களும் நடந்தேறியுள்ளன.ஆனால் எல்லாமே குறைப்பிரசவம் கொண்டவையாகவே ஆகியிருக்கின்றன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது இலங்கைத்தீவில் பல நெருக்கடி நிலைகளை உருவாக்கியதுடன் ஜனநாயக நிறுவனங்கள…
-
- 0 replies
- 322 views
-
-
ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்? (நிலா)விடுதலைப் புலிகளின் பிளவு மட்டக்களப்பில் வசித்த இரண்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்திருந்தது. அதில் ஒருவர் கொழும்பில் இருந்து செயற்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்கள் அடுத்தது மட்டக்களப்பில் இருந்து பணியாற்றிய ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன். இருவரும் எந்த மக்களின் விடுதலைக்காக தங்களது ஊடகப் பணியை அர்ப்பணித்தார்களோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யாருடன் கூடுதலான உறவு வைத்திருந்தார்களோ அவர்களாளேயே இவர் கொல்லப்பட்டார்கள் என்பதே கசப்பான உண்மைகள். விடுதலைக்கான பயணத்தில் இருந்து விலகியவர்கள் முதலில் பயந்தது துப்பாக்கிகளுக்கு அல்ல தங்களுடன் கூடவே இருந்த பேனாக்களுக்கே . என்னதான் தங்களத…
-
- 3 replies
- 892 views
- 1 follower
-
-
கற்ற பாடம் எங்கே பெற்ற இணக்கம் எது? யுத்தத்தை வென்று சமாதானத்தை ஏற்படுத்திய முப்படையினரின் தியாகத்தைப் பாராட்டி நினைவுகூரும் இச்சந்தர்ப்பத்தில் யுத்த காலத்தில் உயிரிழந்த பொதுமக்களையும் நினைவுகூர வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். மே மாதம் 18ஆம் திகதி பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு யுத்தத்தில் வென்ற நாளாகும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதாலேயே சமாதானம் உருவானது எனவும் கூறியுள்ளார். உண்மையில் முப்படையினர் தற்கொலை சார்ந்த கொரில்லா போர் முறையை முறியடித்து நாட்டை அமைதிப்படுத்தியிருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இவர்கள் எல்லோர் மீதுமே போர்க்குற்றம் சுமத்தவும் மு…
-
- 1 reply
- 580 views
-
-
விஸ்வரூபம் எடுக்கும் ஜனாதிபதி ரொபட் அன்டனி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு திகதியொன்றை குறித்துக்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின்போது தெரிவித்ததாக சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினர் குறிப்பிட்டிருந்தனர். எனினும் சுதந்திரக் கட்சி சார்பாக தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 23 பேர் கொண்ட அணியினர் ஜனாதிபதி அவ்வாறு கூறவில்லையென தெரிவித்திருந்தனர்.இந்த விடயத்தில் சுதந்திரக் கட்சியின் இரண்டு தரப்பினருக்கும் மத்தியில் கடும் போட்டியும் முரண்பாகளும் நிலவின. இதனால் ஜனாதிபதி அ…
-
- 0 replies
- 542 views
-
-
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இருந்தாலென்ன ஒழித்தாலென்ன? இலங்கை அரசியல்வாதிகள் தாம், தமது இனத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொண்டே, அரசியலில் காரியம் சாதிக்கிறார்கள். வடபகுதி அரசியல்வாதிகள், எதை எடுத்தாலும் மற்றவர்கள் செய்வதெல்லாம் தமிழர்களைப் பாதிக்கும் என்றும், தாம் செய்யும் அனைத்தும் தமிழர்களுக்குச் சாதகமானது என்றும் கூறி வருகின்றனர். சிங்கள அரசியல்வாதிகளும் இதேபோல், தாம் செய்வது அனைத்தும் சிங்களவர்களுக்குச் சாதகமானது என்றும், மற்றவர்கள் செய்வதெல்லாம் நாட்டைத் தமிழர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் செயல் என்றுமே கூறி வருகின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகளும், இதைதான் அ…
-
- 0 replies
- 458 views
-
-
அரசியல் வெற்றிடம் – பி.மாணிக்கவாசகம்… அனைத்துத் தரப்பினரையும் ஆளுமையுடன் கூட்டிணைத்து, செயல் வல்லமையுடன் வழிநடத்திச் செல்லத்தக்க தலைமைக்கு, தமிழர் அரசியலில் வெற்றிடம் நிலவுவதைப் போலவே, நாட்டின் தேசிய மட்டத்திலும் அரசியல் தலைமையில் ஒரு வறுமை நிலை காணப்படுகின்றது. இது, சிலவேளைகளில், சிலருக்கோ அல்லது பலருக்கோ மிகைப்படுத்தப்பட்ட ஒரு பார்வையாகத் தோற்றலாம். ஆனால் அரசியல் உரிமைகளுக்காக பல தசாப்தங்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்ற பாதிக்கப்பட்ட தேசிய சிறுபான்மை இனம் ஒன்றின் அரசியல் நோக்கில் இந்த அரசியல் வறுமையைக் காண முடியும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் பல வடிவங்களில் இடம்பெற்றிருந்தன. சாத்வீகப் போராட்டமும…
-
- 0 replies
- 459 views
-
-
விக்கினேஸ்வரனின் எதிர்காலம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் காட்டியுள்ளார். மீண்டும் முதலமைச்சர் வேட்பாளாராக தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்துவதற்கான சாத்தியம் குறைவு என்று கூறியுள்ளார். அவ்வாறு அழைக்காத பட்சத்தில் ஒரு மாற்று அணியை உருவாக்கி மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேட்பாளராக தான் தயார் என்றும் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கும் படி தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகள் விக்னேஸ்வரனை பல காலமாக வருந்தி அழைத்திருந்தனர். இப்பங்காளிக் கட்சிகளில் தமிழ் தேசிய கூட்டமை…
-
- 0 replies
- 496 views
-
-
-
இந்துத் தேசியமும் இலங்கையின் யதார்த்த அரசியலும். சுயாந்தன் Labels: இந்துத் தேசியம் May 05, 2018 வடமாகாணத்தில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களைச் சுற்றிப் பயணம் மேற்கொண்டவன் என்ற முறையிலும், அங்குள்ள மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்ற அபிலாஷையையும் கொண்டு இந்துத் தேசியம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களின் இலங்கைக்கான தேவை பற்றிய சில பதிவுகளைக் கடந்த காலங்களில் எழுதியிருந்தேன். அதனைத் தமிழகக் கட்சி அரசியல் மனநிலையிலும் இந்து என்பதே இல்லை என்ற தற்குறி மனநிலையிலும் அணுகிய பலரைக் காணமுடிந்தது. இன்னொருசாரார் இந்து-முஸ்லிம் ஒற்றுமை இலங்கையில் சாத்தியம் என்றும் பகற்கனவு காண்கின்றனர். அப்படிக் கனவு காண்பவர்கள் யாரென்று பார்த்தால் தமது புத்தகங்கள் அதிகளவில…
-
- 5 replies
- 1.2k views
-
-
பாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பாகும் பிணக்குகள் க. அகரன் பல்வேறு இனக்குழுமங்களுக்கு இடையிலான அரசியல் என்பது, நீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டு செல்வது போன்றதாகும். இத்தகைய அரசியல் செயற்பாட்டையே இன்றைய அரசியலாளர்கள் பல்வேறு கோணங்களில் செயற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றங்களும், அதனூடாக உருவெடுத்த இனரீதியான கருத்தியலும் இன்று மேலோங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டேயாக வேண்டும். வடபுலத்து அரசியலுக்கு அப்பால், கிழக்கிலங்கையில் மையம் கொண்டுள்ள இனரீதியான அரசியல்போக்குகள், ஆரோக்கியமற்றதும் இனரீதியான விரிசலைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டனவாகவுமே காணப்படுகின்றன.…
-
- 0 replies
- 793 views
-
-
சிதறிப்போகும் நிலையிலுள்ள சுதந்திரக்கட்சியை கட்டிக் காக்க முயலும் அரச தலைவர்!! அரச தலைவராகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவுமிருக்கும் மைத்திரிபாலவினால் சுதந்திரக் கட்சியை ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க இயலாமற் போய்விட்டது. 1980 களில் சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும், மைத்திரிபால சேனநாயகவுக்குமிடையில் முறுகல் நிலைதோன்றிய போதிலும், பின்னர் அது நேர்சீர் …
-
- 0 replies
- 476 views
-
-
ஒற்றுமை ஓங்கியதால் ‘ஒப்பாரி ஓலம்’ உலக வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், பல நாடுகள் தங்களது சுதந்திரத்தைப் பல தியாகங்கள், இழப்புகளுக்கு மத்தியிலேயே பெற்றுள்ன. அதிர்ஷ்டவசமாக இலங்கை அஹிம்ஷை வழியில் தனது சுதந்திரத்தைப் பெற்றது. ஆனாலும், துரதிர்ஷ்டமாக பல்லின மக்கள் வாழும் நாட்டில், பன்முகக் கலாசாரத் தன்மை பறிபோய்விட்டது. நாட்டின் ஓரினம், பிறிதோர் இனத்தைப் பல வழிகளிலும் அடக்கி ஒடுக்கி, கடை நிலைக்குக் கொண்டு சென்றது. இன உரிமைப் போருக்கு, உலகிலுள்ள எல்லா அரசாங்கங்கள் போலவே, பயங்கரவாதம் என்று பெயர்சூட்டப்பட்டது. போர் தொடுத்தது; வெற்றி கண்டது. ஈற்றில், மிகப்பெரிய மனித அவலங்களுடன் முள்ளிவாய்க்காலில் மௌனம் கண்டது. …
-
- 0 replies
- 395 views
-
-
தூத்துக்குடிப் படுகொலைகள்: நின்றும் அன்றும் கொல்லுதல் ஜனநாயகம் தன் உண்மை முகத்தைக் காட்டும் போது மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். எதை ஆண்டாண்டு காலமாக, ஆதரித்துக் காத்து வந்தார்களோ, அதுவே அவர்களைக் குறிவைக்கும் போது, பாரபட்சமின்றிக் கொன்றொழிக்கும் போது, மக்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்தத் திகைப்பிலிருந்து அவர்கள் வெளிவரும் முன்னர், அவர்களது எண்ணங்கள் மடை மாற்றப்படுகின்றன. அதிகாரத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் மக்கள் சிந்திப்பது ஆபத்தானது. மக்கள் சிந்திப்பதையும் செயற்படுவதையும் ஒன்றிணைவதையும் அனுமதிப்பதன் விளைவுகளை அவர்கள் அறிவார்கள். இதனால்தான், அறிவால் அல்லது ஆயுதத்தால் மக்களது சிந்தனைக…
-
- 0 replies
- 386 views
-
-
அதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆயினும் இல்லாமல் செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, பயங்கரவாதம் தலையெடுக்கின்றது. நாட்டில் பிரிவினைவாதம் உயிர்த்தெழுகின்றது என அச்சமூட்டி அரசியல் செய்கின்ற மோசமான அரசியல் பிற்போக்கு இப்போது தீவிரமடைந்திருக்கின்றது. குறிப்பாக ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஊழல்களை ஒழித்து, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், குடும்ப அரசியல…
-
- 0 replies
- 355 views
-
-
மாட்டிறைச்சியை முன்வைத்த பிணக்குகள் மாட்டிறைச்சிக்கு எதிரான மனநிலையை, தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பும் முயற்சியொன்று கடந்த சில வருடங்களாக மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. மாட்டிறைச்சியை முன்னிறுத்திய மத அடிப்படைவாதம், இந்தியா போன்று, இலங்கைக்கும் புதியதல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதற்காக பௌத்த அடிப்படைவாதிகளும், அதுசார் நிறுவனங்களும் மாட்டிறைச்சி விவகாரத்தை, தென் இலங்கையில் அவ்வப்போது, தூசி தட்டித் தூக்கிப் பிடிப்பதுண்டு. அவ்வாறானதொரு நிலையை, தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி, மத அடிப்படைவாதத்தை மேல் மட்டத்தில் பேணுவதற்காகச் சில தரப்புகள் ஒன்றிணைந்திருக்கின்றன. …
-
- 1 reply
- 2.3k views
-
-
பூமராங் பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும். ‘இலங்கையானது பௌத்த, இந்து மக்களின் பூமியாகும். அது வேறந்த மக்களுக்கும் சொந்தம் கிடையாது’ என்று, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தமை பற்றி அறிவீர்கள். அது குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர், தனது ‘பேஷ்புக்’ பக்கத்தில் எழுதியுள்ள குறிப்பொன்று கவனத்துக்குரியது. ‘சச்சிதானந்தன் சொன்ன கருத்து தொடர்பாக, சிங்கள நண்பர் ஒருவர், தன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது…
-
- 0 replies
- 462 views
-
-
இலங்கையில் நீதித்துறை இதுவரை பொறுப்பாக நடந்துக்கொண்டதில்லை
-
- 0 replies
- 497 views
-
-
விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசத்தால் உருவாக்கப்பட்ட விசேட படை! என்ன நடந்தது? ஸ்ரீ லங்காவின் விசேட அதிரடிப் படை (STF) பிரிவானது தற்பொழுது பிரமுகர்களின் பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நாட்டில் தோன்றுகின்ற எந்தவொரு கலவரங்கள் கிளர்ச்சிகள் என்பனவற்றை முறியடிக்கவேண்டிய நிலையில் இருந்து செயற்படுகின்றது. பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்குவதால் விசேட அதிரடிப்படை (STF) ஒன்றும் பொலிஸார் கிடையாது. இராணுவத் தளபாடங்களோடு இயங்குவதால் விசேட அதிரடிப்படை ஒன்றும் இராணுவமும் கிடையாது. ஆனால் இராணுவத்தின் சில முக்கியமான அதிகாரங்களும் பொலிஸாரின் முக்கியமான அதிகாரங்களும் ஒருங்கே பெற்ற ஒரு துணை இராணுவக் குழு என்றே சொல்லமுடியும். அவற்றை வைத்து சந்தர்ப்பத…
-
- 0 replies
- 691 views
-
-
தமிழர் தேசிய உணர்வுடன் கிழக்கில் ஓரணிக்கான வாய்ப்பு? - இலட்சுமணண் ‘அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதுபோல், கிழக்கு மாகாணத் தமிழர்கள், தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய அரசியல் பொறிமுறைக்கான அடித்தளத்தை, இட்டுக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். எவ்வாறிருந்தாலும், வடக்கில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும், அங்கு தற்போதைய முதலமைச்சரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதா, அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதா, இல்லாவிட்டால் புதியவர் ஒருவரைக் கொண்டு வருவதா என்கிற போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், கிழக்கின் நிலைப்பாட்டைப் பொற…
-
- 0 replies
- 526 views
-
-
கறைகளைக்கழுவ முற்படுகிறதா பிரித்தானியா? சுபத்ரா இலங்கையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் முளைவிடத் தொடங்கிய 1978 - –1980 காலகட்டத்தில், புலிகள் மற்றும் இலங்கையில் பிரித்தானியாவின் எம்.ஐ 5 மற்றும் எஸ்.ஏ.எஸ். அமைப்புகள் பயிற்சிகளை அளித்தமை தொடர்பான, 200 ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்ட தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ கடந்த வாரம் அம்பலப்படுத்தியிருக்கிறது. தேவையற்ற ஆவணங்கள் என்று, கூறி, இலங்கை தொடர்பான – முக்கியமாக இந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் தமிழ்ப் புலிகள் மற்றும் தமிழ்ப் புலிகளின் ஆயுதப் போராட்டத்த…
-
- 1 reply
- 681 views
-
-
மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க்கும் முன்னாள் UNP உறுப்பினர் மதிராஜ்
-
- 0 replies
- 339 views
-