அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு தீர்வுதான் என்ன? ரொபட் அன்டனி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி அமர்வுகள் பரபரப்பாக இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக ஆரம்ப உயர்மட்ட அமர்வுகளில் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் உரையாற்றியிருந்தனர். தற்போதைய நிலைமையில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரையும் பிரித்தானியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் ஆற்றிய உரைகளுமே முக்கியத்துவமிக்கதாக அமைந்திருக்கின்றன. காரணம் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான பிரேரணையை ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்திருந்…
-
- 0 replies
- 488 views
-
-
கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம் தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது. ஆனால், போராட்டங்களை உரிமை மறுப்பாளர்களும் அநீதியின் கொடுங்கரங்களும் என்றைக்குமே இரசிப்பதில்லை; அனுமதிப்ப தில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்துவிட்ட தமிழ் மக்களின் உரிமை மீட்புப் போராட்டங்கள், நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் தாண்டியும் நீண்டு வருகின்றன. கொழும்பு, காலி முகத்திடலில் பெரும் இராணுவ அணிவகுப்புடன் வெற்றி…
-
- 0 replies
- 488 views
-
-
எங்கெல்லாம் போராட்டங்கள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் கிளர்ச்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் புரட்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் போர்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் கருப்பையில் பிள்ளைகளைச் சுமந்த தாய்மார்களின் இதயங்கள் நெருப்பை சுமக்கும் துயரம் நிகழும். ஆதலாற்தான் போர்ச்சூழலை பிரதிபலிக்கும் இலக்கியங்கள், சிந்தனைகள் என்பன தாய்மாரை தலையாய பாத்திரங்களாக சித்தரிக்கத் தவறுவதில்லை. ரஷ்ய புரட்சியின் போது மாக்கியம் கொக்கி எழுதிய “தாய்” என்ற நாவல் இதற்கு நல்லதொரு உதாரணம். ஈழப் போராட்டக் காலத்தின் ஆரம்பத்தில் திரு.ரஞ்சகுமார் எழுதிய “கோலைசலை” என்ற சிறுகதையும் இந்த வகையில் இலக்கியவாதிகளால் நல்லுதாரணமாய்க் கூறப்படுவதுண்டு. இந்தவகையில் தாய்மார்களின் துயரங்களைப் பற்றிப் பேசாமல…
-
- 0 replies
- 488 views
-
-
தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு..?: சூடு பிடிக்கும் தேர்தல் களம் ஆட்சி மாற்றத்துக்காக 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அளித்திருந்த ஆதரவின் மூலம் நன்மைகள் விளை வதற்குப் பதிலாகக் குழப் பகரமான நிலைமையை உருவாக்குவதற்கே வழியேற்ப டுத்தி இருந்தது. அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கியிருந்த உறுதியான – நிபந்தனை யற்ற ஆதரவு விழலுக்கு இறைத்த நீராகி உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது? யார் தமிழ் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படுவார்கள்? யாரைத் தெரிவு செய்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்? என்ற கேள்விகள் சாதாரண வாக்காளர்களின் மனங்களைக் குடைந்து கொ…
-
- 0 replies
- 488 views
-
-
அன்பினாலும் மனச்சாட்சியினாலும் அமைதிக்கான பண்பாட்டை உருவாக்குங்கள்’ – ஐக்கிய நாடுகள் சபை அழைக்கிறது – சூ.யோ.பற்றிமாகரன் 69 Views அனைத்துலக மனச்சாட்சித் தினம் – 05.05.2021 (இவ்வழியில் உழைத்த ஈழத்தவர் இருவரின் நினைவுகள்) மார்டின் லூதர்கிங் வழியில் உழைத்த தந்தை செல்வநாயகம் ஏப்ரல் 4ஆம் திகதி அனைத்துலக கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான அனைத்துலகத் தினங்களைத் தொடங்கும் ஐக்கிய நாடுகள் சபை; ஏப்ரல் 5ஆம் திகதி அனைத்துலக மனச்சாட்சித் தினத்தைக் கொண்டாடுகிறது. அனைத்துல கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்தில் மனிதர்களினதும், உயிரினங்களிதும் வாழ்வினை அழிக்கும் இத்தகைய ஆயுதங்களைச் செய்யாது பாதுக…
-
- 1 reply
- 488 views
-
-
-ஹரிகரன் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகள் சிலவற்றையாவது, இந்தியாவிடம் இருந்து மீளப் பெற்று விடுகின்ற முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்தியாவின் புதிய தூதுவராக பொறுப்பேற்ற கோபால் பாக்லே இலங்கை அரசாங்கத் தரப்புடன் அதிகாரபூர்வ சந்திப்புகளை நடத்த ஆரம்பித்துள்ள நிலையில், இந்த விவகாரமும் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடிய போது, இலங்கையின் பொருளாதாரத்தை துரிதமாக மீளமைப்பதற்கான வழிகள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன்போது, குறைந்து போயுள்ள இலங…
-
- 0 replies
- 488 views
-
-
எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ? ரவிராஜ் கொலை வழக்கும் தீர்ப்பும் ஒரு பார்வை ஒருமுறை சர்வதேச பொலிஸார் அல்லது ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் என அழைக்கப்படும் பொலிஸார் இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிக்க இலங்கை வந்தனர். வரும்போது கூடவே 3 குதிரைகளையும் அவர்கள் கொண்டு வந்தனர். அக்குதிரைகளை அவர்கள் ஒரு காட்டில் விட்டனர். பின்னர் பயிற்சிகளை ஆரம்பித்த அவர்கள் முதலில் சாதாரண பொலிஸ் நிலைய பொலிஸாரை அழைத்து தாம் கொண்டுவந்த குதிரைகள் காட்டில் காணாமல் போய்விட்டதாகவும் அவற்றை கண்டு பிடிக்குமாறும் கூறியுள்ளனர். உடனே காட்டுக்குள் சென்ற பொலிஸார் 3 குதிரைகளின் கால்தடம் காட்டில் உள்ளதாகவும் அதன…
-
- 0 replies
- 488 views
-
-
கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்? - யதீந்திரா படம் | OMLANKA கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்ந்தும் ஒரு சிக்கலான விவகாரமாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இதுதான் நிலைமை. இதில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்படும் அல்லது ஏற்படலாம் என்பதற்கு அப்பால், கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. இறுதியான தகவல்களின்படி முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பசீர் சேகுதாவுத் என்பவர், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு ஒரு கடித்தத்தை அனுப்பி வைத்திருக்கின்றார். எஞ்சியுள்ள இரண்டரை வருட காலத்தை இரு தரப்பினரும் ஆட்சி செய்வதற்கு ஏற்றவாறான ஒரு ஆலோசனையை த…
-
- 0 replies
- 488 views
-
-
பொலிகண்டிக்குப் பிறகு என்.கே. அஷோக்பரன் பெப்ரவரி 3, 2021 கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் இருந்து, ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி தொடங்குகிறது. பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினம். ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பதாக, தமிழ் பேசும் மக்கள் கூட்டமொன்று, கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் இருந்து வட மாகாணத்தின் பொலிகண்டி வரை, ஒரு நீண்ட ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்திருந்தது. அரச இயந்திரம், வழமைபோலவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கருவிலேயே சிதைக்கும் கைங்கரியங்களை, பொலிஸ் கட்டமைப்பினூடாக முன்னெடுக்கத் தொடங்கியது. நீதிமன்றுகளில் பொலிஸார் ஆர்ப்பாட்டத்துக்கான தடை உத்தரவுகளைக் கோரினார்கள். ‘கோவிட்-19’ நோய் பரவுகை அச்சம், ஆர்ப்பாட்டத் தடைக்கான காரணமாகப் பொலிஸாரால் முன்வைக்கப்…
-
- 0 replies
- 488 views
-
-
வேலைவாய்ப்பின்றி இருக்கும் முன்னாள் போராளிகள் – அமந்த பெரேரா சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகிய போதிலும், பெரும்பாலான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போதும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கின்றனர். இவர்கள் வாழும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவர்கள் தமக்கான தொழிலைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னாள் தமிழ்ப் புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி மற்றும் தொழிற் பயிற்சிகள் தொடர்பான கட்டாய ‘புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தில்’ சிவலிங்கம் ருவேந்திரதாசும் மூன்று ஆண்டுகள் பயிற்சிகள் பெற்…
-
- 0 replies
- 488 views
-
-
சில்கொட் அறிக்கை ஒரு கண்துடைப்பு ஈராக்குக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகள் இணைந்து நடத்திய போரில் பிரிட்டனின் பங்கைப் பற்றி சேர் ஜோன் சில்கொட் தலைமையில் பிரித்தானியா அரசாங்கம் நியமித்த குழுவின் அறிக்கை, அக்குழு நியமிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் கடந்த வாரம் வெளியாகியது. அது பிரித்தானியா அரசாங்கத்துக்கும் முன்னாள் பிரித்தானியா பிரதமர் டொனி பிளயருக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்கள் ஒரு விசாரணையின் பின்னர் ஊர்ஜிதமாகியுள்ளதேயோழிய அவை எதுவும் புதியன அல்ல. போர் நடக்கும் காலத்திலேயே சாதாரண அறிவுள்ள மக்களும் கூட அவற்றை அறிந்திருந்தனர். ஈராக்குக்கு எ…
-
- 0 replies
- 488 views
-
-
ராஜபக்ஷர்களின் வீழ்ச்சியில் கற்க வேண்டியது புருஜோத்தமன் தங்கமயில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போது, தென் இலங்கையில் சில இடங்களில் வெடி கொளுத்தி மக்கள் ஆர்ப்பரித்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சித் தலைவர் ஒருவர் மரணித்த போது, இவ்வாறான சம்பவங்கள் அதற்கு முன்னர் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அப்படியானதொரு நிலை தனக்கு என்றைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடிக்கடி கூறுவாராம். புலிகளிடம் இருந்து நாட்டை சிங்கள மக்களுக்கு மீட்டுக் கொடுத்த தலைவராக தான் என்றைக்குமே மகா வம்சத்தில் அடையாளம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவ…
-
- 3 replies
- 488 views
-
-
இலங்கை அபிவிருத்தியும் சீனாவின் நலன்களும் – மானுவேல் மங்களநேசன் January 26, 2021 52 Views 1948 வரை இலங்கை பிரித்தானியாவின் கீழ் காலனித்துவ நாடாக இருந்துள்ளது. இலங்கை உலகலாவிய வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது பலரது கண்களை குத்தவே செய்கிறது. அந்த நோக்குடன் சீனாவும் இலங்கை ஊடாக உலக வர்த்தகத்தை விஸ்தரிக்க விரும்பியே இந்த அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என ஊகிக்கலாம். ஆனால் அது இலங்கையின் அபிவிருத்தியும் முன்னேற்றமும் என்ற வெளித்தோற்றமாகவே சொல்லப்படுகிறது. சீனா இலங்கையுடன் பல திட்டங்களை நிறைவேற்றுகிறது. இவ்வாறு சீனாக்கும் இலங்கைக்கும் இடையே உருவாக்கப்பட்ட திட்டங்கள் 1. அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்…
-
- 0 replies
- 488 views
-
-
இலங்கைக்குக் கிடைத்த ‘நிதஹஸ்’ இலங்கையின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு, இலங்கையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கிரிக்கெட் தொடரைத் தெரிந்திருக்கலாம். இலங்கையின் 70ஆவது சுதந்திர நிறைவைக் கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அத்தொடரில், இலங்கை, இந்திய, பங்களாதேஷ் அணிகள் பங்குகொண்டன. ஒப்பீட்டளவில் பலமான அணிகளான இந்தியாவும் இலங்கையும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் என்பது தான் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இறுதியில், இந்தியாவும் பங்களாதேஷும் தான் தகுதிபெற்றன. அத்தொடரில் இலங்கையின் மோசமான பெறுபேறுகளுக்கு என்ன காரணம் என்பதெல்லாம், கிரிக்கெட் நிபுணர்கள் ஆராய வேண்டியது. ஆனால், இலங்கையின் அண்மைக்கால நடப்புகளை…
-
- 0 replies
- 488 views
-
-
வடமாகாண சபையின் எதிர்காலம்? வடக்கு அரசியல் களத்தில் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றங்களும் திருப்பங்களும், வடக்கு மாகாணசபையின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. 2013 செப்டெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது. மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பெரும்பான்மை பலத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்காக மக் கள் ஆணை வழங்கப்பட்டிருந்தது. இப்போது வடக்கு மாகாண அரசிய லில் ஏற்பட்டுள்ள உள்ளக குழப்பங்கள், வடக்கு மாகாணசபையின் ஆட்சியின் எதிர்காலத்தை கேள்விக்கு…
-
- 0 replies
- 488 views
-
-
இலண்டன் (ப)ரகசிய சந்திப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்) தோல்வி மனநிலையிலிருந்து விடுபட்டு இராஜதந்திரக் களங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டத்தில் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராஜதந்திர களமாடுதலில் ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தது இல்லை. அது(வும்)தான், ஆயுதப் போராட்டத்தை(யும்) அடியோடு அழித்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போக்கில் தற்போது விரிந்துள்ள புதிய இராஜதந்திரக் களம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்தோடு அது, விரைவாக எம்மை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றது. இல்லாவிட்டாலும், சில காலத்துக்குப் பின்னர் …
-
- 0 replies
- 488 views
-
-
முஸ்லிம்கள் குறித்த ரீட்டாவின் கரிசனையை அரசாங்கம் செவிமெடுக்குமா? அண்மைக் காலமாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரமுகர்கள் பலர் இலங்கைக்கு விஜயம் செய்வது வழக்கமாகிவிட்டது. 2015 ஆட்சி மாற்றத்திற்குப் பிற்பாடு தேசிய அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஐ.நா. உட்பட சர்வதேச நாடுகளுடன் கடைப்பிடிக்கும் நெகிழ்வுத் தன்மையான போக்கே இதற்குக் காரணமாகும். இதன் தொடரில் தான் சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த 10 நாட்களாக இலங்கையில் தங்கியிருந்த அவர் பல்வேறு சிறுபான்மை தரப்புகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய நிலையில் நேற்று முன்தினம் க…
-
- 0 replies
- 488 views
-
-
வடக்கு ‘கடல் அன்னை’ மீதான அச்சுறுத்தலைத் தடுப்பது தலையாய கடமை புருஜோத்தமன் தங்கமயில் வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டு இருக்கின்றது. இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை வாரத்தில் இரண்டு நாள்களுக்கு, வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதைச் செயற்படுத்தும் வேலைகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றார். இதன் ஒருகட்டமாக கடந்த நாள்களில், பாரதிய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மீன்பிடித்துறை பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து, டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்புகளை நடத்தி இருக்கிறார்க…
-
- 0 replies
- 488 views
-
-
குழப்பங்களுக்கு காரணம் யார்? கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த போது, கூறிய விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும், தமிழர் தரப்பில் பிளவு காணப்படுகிறது. எனவே ஒற்றுமை முக்கியமானது” என்று திரும்பத் திரும்பக் கூறியிருந்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்படக் கூடிய பிளவுகள், இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் கூட ஆபத்தை ஏற்படுத…
-
- 0 replies
- 487 views
-
-
அமெரிக்காவின் கடல்சார் மூலோபாயம் கடல் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்கா பல்வேறு கடல் சார் நெருக்கடிகளுக்குப் பதிலளித்து வருவதுடன், எமது பாதுகாப்பு அல்லது எமது கூட்டாளி நாடுகளின் நாடுகளின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதுடன் எமது எல்லைகளை நெருங்கக்கூடிய பல்வேறு தொலைதூர புவிசார் அச்சுறுத்தல்களிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கின்றது. கடல்சார் பாதுகாப்பானது கடல்சார் மூலோபாயம் தேவை என்பதை வலியுறுத்துகிறது. தேசிய வளங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், பாதுகாப்புச் செயற்பாடுகளை நிதி மற்றும் கப்பல் கட்டுமானங்கள் போன்றவற்றுடன் தொடர்புபடுத்துவதற்கான சிறந்த தெரிவுகளை மேற்கொள்வதற்கான மூலோபாயம் ஒன்றை உருவாக்க வேண்…
-
- 0 replies
- 487 views
-
-
சீனாவின் கடன் பொறியும் குளோபல் கேட்வே திட்டமும் http://www.samakalam.com/wp-content/uploads/2021/10/Nixon-150x150.png–சீனாவின் கடன் பொறிக்குள் இருந்து இலங்கையை மீட்க அமெரிக்க- இந்திய அரசுகளுக்கு முடியுமா இல்லையா என்பதைவிட, இலங்கை எந்தத் திட்டத்தையும் தனக்குச் சாதகமாக்கி ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்காக நீக்கம் செய்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகரித்து வருகின்றன– -அ.நிக்ஸன்- இலங்கை போன்ற குறைந்த வளர்ச்சியுடைய நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்குண்டு இருப்பதாக மேற்கத்தைய ஊடகங்கள் விமர்சித்து வரும் நிலையில், அந்தக் கடன் பொறியில் இருந்து இந்த நாடுகளை மீட்கும் நோக்கில், குளோபல் கேட்வே (Global Gatewa…
-
- 1 reply
- 487 views
-
-
இலங்கையின் பயங்கரவாதத்துக்கு பலிக்கடா தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகம் 'FB' என்ற சஞ்சிகையில் ஆங்கிலத்தில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. இலங்கையில் தமிழர்களின் அரசியல் நிலைவரங்களை அம்பலப்படுத்தும் கட்டுரைகளை வரைந்தமைக்காக இருபது ஆண்டு காலச் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸநாயகம் 2010 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் வாஷிங்டனில் அஞ்ஞாதவாசம் புரிந்துவருகின்றார். தமிழாக்கம் :- வி.சிவராம். தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் துணைத் தூதரகங்களைத் தாக்கும் இலக்குடன் சதித்திட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று கருதப்படும் இலங்கையர் இருவர் இந்தியாவிலும் மலேசியாவிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்டமையை அடுத்து, இந்தியாவைத…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழ் மக்கள் புதிய தலைமையொன்றை தேடுகின்றார்களா? - யதீந்திரா கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தக் கட்டுரை எழுதப்படும்வரையில் அவ் அதிர்வுகள் குறையவில்லை. எது ஆளும் கட்சி, எது எதிர்க்கட்சி, எது மகிந்த தரப்பு – என்று பிரித்தறிய முடியாதளவிற்கு 'எழுக தமிழை' எதிர்ப்பதில் அனைவருமே ஓரணியில் திரண்டிருக்கின்றனர். பொதுபல சேனாவின் தலைவர் ஞானராச தேரர் தொடங்கி தங்களை இடதுசாரியினராக காண்பித்துவரும் ஜனதா விமுக்தி பெரமுன வரையில் வடக்கில் மீண்டும் இனவாதம் தோன்றிவிட்டதாகவும், புலிகள் விட்டுச்சென்ற இடத்தை விக்கினேஸ்வரன் பிடிக்க முயற்சிக்கின்றார் என்றவாறும் ஆவேசமாக பேசி வருக…
-
- 0 replies
- 487 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வீசிய ராஜபக்ச பெருஞ்சூறாவழியில் முதலில் தூக்கிவீசப்பட்டவர் ரணில் விக்ரமசிங்கதான். இனி அவருக்கு மீட்பே இல்லை, தன் சொந்தத் தொகுதியில்கூட வெல்ல முடியாத நிலைக்கு அரசியலில் சரிவைச் சந்தித்துவிட்டார் எனக் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இந்தச் சரிவோடு அவரோடு ஒட்டியிருந்த பலரும் கட்சி மாறினார்கள். இவ்வாறு தனித்துவிடப்பட்டிருந்தவருக்குக் கட்சிக்குக் கிடைக்கவேண்டிய தேசியப்பட்டியல் என்ற ஓர் அதிர்ஷ்டம் கிடைத்தது. ரணிலின் ஆளுமை தேசியப்பட்டியலின் மூலம் மிகவும் தாமதமாக நாடாளுமன்றத்திற்குள் ந…
-
- 1 reply
- 487 views
-
-
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மைக்கு ஓர் பெரும் சோதனை தேர்தலாகவே கணிக்கப்பட்டது. ஆம் இந்த தேர்தலில் சிறுபான்மையின மக்கள் என்ன நடந்தாலும் நடக்கட்டுமே என்ற தோரணையில் தமிழ் அரசியல்வாதிகளை புறந்தள்ளியதோடு தனி முடிவாக இதயத்தின் அடி மனதில் தோன்றியதை வெளிகாட்டினர். இதை அரசியல் தலைமைகள் யாரும் உரிமை கோர முடியாது. ஒவ்வொரு அரசியல் தலைமைகளும் அன்று ஆண்ட ராஜபக்ஷவிடம் எந்தவொரு வழியிலாவது பயனை அடைந்தவர்களே. இதை அவர்கள் மறுத்துக் கூறினால் இந்த கட்டுரையை எழுதியவன் என்ற முறையில் நான் அவர்களை பொதுவான இடத்தில் சந்திக்க தயாராகவும் அவர்கள் நன்மை பெற்ற விதத்தினை கூறவும் தயக்கம் இன்றி தெரிவிக்கின்றேன்.(ஒரு சிலரை தவிர) இதிலும் சில உண்மையானவர்கள் இருந்தார்கள். இந்த சிறுபான்மை அ…
-
- 0 replies
- 487 views
-