அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
மேலெழும் இனவாதம் அம்பாறையிலும் உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான ஒரு நிலைமையைத் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். சிரியாவிலும் பலஸ்தீனத்திலும் நடைபெறுகின்ற திட்டமிட்ட இனஅழிப்புகள், வார்த்தைகளுக்குள் அடங்காத பெரும் சோகத்தையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்க, இலங்கையில் மீண்டும் இனவாத சக்திகள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தம்மைத் தயார்படுத்தி இருக்கின்றன. இதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டும் விதத்தில், அம்பாறை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சர்வதேச ரீதியாக, முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஆயுத பலப்பிரயோகத்துக்குப் பின்னால், அமெரிக…
-
- 5 replies
- 676 views
-
-
பேய்க் கூத்தும் கூஜாவும் சிறிது காலம் மலையேறியிருந்த இனவாதப் பேய்கள், மீண்டும் கொட்டு முழக்கங்களோடு களம் திரும்பியிருக்கின்றன. இனவாதப் பேய்களுக்கு மூக்கணாங்கயிறுகள் இல்லாமலிருக்க முடியாது. ஆனாலும், அவை - ஆட்சியாளர்களின் கைகளில் இல்லையோ என்கிற சந்தேகமும் ஒருபுறமுள்ளது. பேய்களைப் பிடித்து கூஜாவுக்குள் அடைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், பேய்களோடு சேர்ந்து நடனமாடத் தொடங்கி விட்டார்களோ என்கிற அச்சம், எல்லா மட்டங்களிலும் எழத் தொடங்கியுள்ளன. அம்பாறை நகரில் கடந்த வாரம் திங்கட்கிழமை (26), பேய்களின் இனவாதக் கூத்துகள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன்போது, அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள…
-
- 0 replies
- 361 views
-
-
மாகாண சபையை வைத்தே உள்ளூராட்சி ஆட்சியமைப்பு - அதிரன் எல்லோரும் அரசியல்வாதிகள். ஆனால், இன்னமும் எதுவும் முடிந்தபாடில்லை. அரசியலில் இலங்கை முழுவதுமே இப்போது பெரும் அமளி துமளியாக இருக்கிறது. யாருக்கு அமைச்சுப்பதவி போகும்; யாருக்கு வரும், பிரதமர் இருப்பாரா இல்லையா. நாடாளுமன்றம் கலையுமா என்பதே அந்த அமளிதுமளி. இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்றே தெரியவில்லை. இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் ஆட்சியமைக்க முடியவில்லை. பல சபைகளில் பெரும்பான்மை உறுப்பினர்களை வென்றுள்ள கட்சிகளுக்குக்கூட வேறு கட்சிகள், நபர்களின் ஆதரவுகள் தேவை என்ற நிலை இருக்கிறது. அதற்கு விட்டுக்கொடுப்புகளுடனும், நிபந்தனைகளுடனும் ஆதரவ…
-
- 0 replies
- 322 views
-
-
பேரம் பேசும் சக்தி இல்லாமல்போகும் தமிழர் அரசியல் - க. அகரன் சாண் ஏற முழம் சறுக்கும் நிலைமையே அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ளது என்பதைத் தற்கால அரசியல் நகர்வுகளில் அவதானிக்க முடிகின்றது. கடந்து வந்த கடினமான பாதைகளைப் பொறுத்தாண்ட தமிழினம், தமக்கான நல்ல தீர்வு ஏற்படும் என்ற எண்ணவோட்டத்தில் இருந்த நிலையிலேயே, அண்மைய அரசியல் சலசலப்புகள், ஏமாற்றம் நிறைந்த களச் சூழலைப் பிரதிபலிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்துக்காக இதயபூர்வமான ஒத்துழைப்பை வழங்கியிருந்த தமிழர்களின் அரசியல் பலமாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு விடயத்தில், இன்று அடுத்தகட்ட நகர்வைக் கொண்ட…
-
- 0 replies
- 475 views
-
-
சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஒன்றுபடுவோம் தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்களும் தமிழ்கட்சிகளும் ஒன்றுபட்டு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றை ஒருமுகமாக முன்வைத்து போராடுவதற்கு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள் வழிவகுத்துள்ளன. தென் இலங்கையிலும் அரசியல் மாற்றம் ஏற்படவுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் 70 வீதமான சிங்கள மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி சிங்கள மக்களையும் சிங்கள நாட்டையும் முன்னேற்றி வருவதையும் தமிழ் மக்கள் எல்லா வழிகளிலும் இனரீதியாக ஒதுக்கப்பட்டு வருவதையும் அறிவீர்கள். எமது அடிப்படை உரிமைகளைப் ப…
-
- 0 replies
- 572 views
-
-
கொசோவோ: விடுதலையின் விலை விடுதலையின் விலை குறித்த கேள்விகள் தவிர்க்க இயலாதவை. விடுதலைக்காகப் போராடும் அனைவரும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தவறியவர்களை, வரலாறு பாரபட்சமின்றித் தண்டித்திருக்கிறது. அதற்கு நாமும் விலக்கல்ல என்பதை இங்கு நினைவூட்டல் தகும். விடுதலைகள் வெல்லப்பட வேண்டியவையே ஒழிய, இரந்து பெறும் ஒன்றல்ல. வெல்லப்படாத விடுதலைகள் புதிய மேலாதிக்கவாதிகளுக்கு அடிமையாக வழிசெய்துள்ளன. எனவே, விடுதலை வெல்லப்படுவது எவ்வளவு முக்கியமானதோ, அதேயளவு முக்கியமானது, அது எவ்வாறு வெல்லப்படுகிறது என்பதாகும். கொசோவோ, தனிநாடாகத் தன்னை அறிவித்து, பத்து ஆண்டுகள் நிறைவைக் கடந்தவாரம் கொண்டா…
-
- 0 replies
- 553 views
-
-
இலங்கை இஸ்லாமியர்களின் அரசியல் பலம் தமிழர்களுக்கு இணையானதாக வளர்ந்து வருகிறது
-
- 0 replies
- 336 views
-
-
மஹிந்த அலையைத் தடுக்க அரசாங்கத்தால் முடியுமா? உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து, ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, ஒருவாறு தணிந்து வருகிறது. நல்லாட்சி என்று கூறிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டரசாங்கத்திடமிருந்து தொடர்ந்தும் நல்லாட்சி என்பதை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், கூட்டாட்சியை மட்டும் தொடரச் சம்பந்தப்பட்ட இரு பிரதான கட்சிகளும் அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கியுள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே, அரசாங்கத்திலுள்ள இரு பிரதான கட்சிகளான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிற…
-
- 0 replies
- 373 views
-
-
கொலை களமாக சிரியா : இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது.? ஆர்.யசி ஒரு சில நாட்களில் ஏன் ஒரு சில மணித்தியாலங்களைக் கூட ஒப்பந்தத்தை மீறிய அடுத்த போராட்டங்கள். இதனிடையில் 2018. 02.24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடி 30 நாட்கள் போர் நிறுத்தத்தை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்கின்றது. பல ஆண்டுகளாக களத்தில் குருதி கண்ட அமெரிக்கா 30 நாட்கள் ஓய்வை விரும்புகின்றது. ஆனால் புதிய நண்பனான ரஷ்யா ஓய்வை விரும்பவில்லை. ஒரு நாளைக்கு ஐந்து மணிநேர போர் நிறுத்தம் போதும் என்ற நிபந்தனையில் தொடர்ச்சியாக யுத்தத்தை நடத்தி வருகின்றது. ஒரு நாட்டின் அரசியலை யுத்தங்களே தீர்மானிக்கின்றன. அரசியல்வாதிகள் யுத்தங்களை தீர்மானிப்பதும்,யுத்தங்கள் அரசியல…
-
- 3 replies
- 673 views
-
-
வடக்கு - கிழக்கில் இரு கட்சி ஜனநாயகச் சூழல்? “வடக்கு கிழக்கில் ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது. இரு கட்சி ஜனநாயகத்தை நோக்கி, தமிழ்ப் பரப்பு நகர்கிறது” என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சிரேஷ்ட அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம்- புதிய தேசியவாதம்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், தலைமையுரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே, நிலாந்தனின் கருத்து அமைந்திருந்தது. வட்டாரத் தேர்தல் முறையொன்று கொண்டிருக்கின்ற அம்சங்களையும் தேவைகளையும் அவர் கருத்தில் எடுத்துப்…
-
- 0 replies
- 474 views
-
-
அம்பாறையில் இனவாத தாக்குதல் முஸ்லிம் அரசியல்வாதிகள் முடிவுகளை எடுப்பதற்கு முன்னமே முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தார்கள். முஸ்லிம்கள் மைத்திரிபால சிறிசேனவின் மீது கொண்ட இரக்கத்தினால் அல்ல. மாறாக மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் மதவிழுமியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற வேண்டுமாயின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டுமென்று முஸ்லிம்கள் எண்ணினார்கள். முஸ்…
-
- 1 reply
- 435 views
-
-
இந்தியா தனக்குத்தானே வெட்டிய குழி! மத்தல விமான நிலையத்தின் மீது சில உரிமைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை விமானப்படையின் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டிருக்கிறது. அவசர தேவைகளின் போதும், தேசிய பாதுகாப்பு பயன்பாடுகளுக்காகவும், மத்தல விமான நிலையத்தின் ஓடுபாதையைப் பயன்படுத்துவதற்கு தமக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பது விமானப்படை விடுத்துள்ள முதலாவது கோரிக்கை. தேவைப்பட்டால் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கென, விமான நிலையத்தில், ஒரு பகுதி நிலத்தை தமக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்பது விமானப்படை முன்வைத்துள்ள இரண்டாவது கோரிக்கை. தேசிய பாதுகாப்பு நலன்களைக்…
-
- 2 replies
- 695 views
-
-
ஐ.நா. மனித உரிமை: இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க தேவையான அணுகுமுறை என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஐக்கிய நாடுகளால் இலங்கை மீது அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 2014 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. படத்தின் காப்புரிமைREUTERS அதன்படி 2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது. இந்த தீர்மானத்தில் …
-
- 0 replies
- 342 views
-
-
தீர்வைத்தருமா காணாமல் போனோர் பணியகம்? ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பித்து இரண்டு நாட்கள் கழித்து, காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனங்களை வழங்கியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த பணியகத்தின் உறுப்பினர்களாக, ஜெயதீபா புண்ணியமூர்த்தி, கணபதிப்பிள்ளை வேந்தன், மிராக் ரகீம்,மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ், கலாநிதி சிறியானி நிமல்கா பெர்னாண்டோ, சுமணசிறி லியனகே, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காணா…
-
- 0 replies
- 282 views
-
-
அடுத்த முதல்வரும் விக்னேஸ்வரன்தானா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜனின் பிரியாவிடை விருந்துபசாரம் இடம்பெற்றிருந்தது. இதில் வழமைபோல் அரசியல் தலைவர்களும் ஏனைய பிரமுகர்களும் பங்குகொண்டிருந்தனர். இதன்போது நடராஜன் தெரிவித்திருந்த ஒரு அபிப்பிராயம் அங்கிருந்த கூட்டமைப்பின் தலைவர்கள் உட்பட ஏனையவர்கள் மத்தியிலும் முணுமுணுப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபம் அடுத்த ஆண்டு நிறைவடையும், அதன் திறப்பு விழாவின் போது பார்வையாளர் வரிசையில் நானும் இருப்பேன். அப்போதும் வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்களே அதனை திறந்து வைப்பார் என்று நடராஜன் கூறிய விடயம்தான் மேற்படி முணுமுணுப்ப…
-
- 0 replies
- 432 views
-
-
சோவியத் யூனியனின் உடைவும் அதன் அதிர்வுகளும் உலகின் நவீன வரலாற்றில் இரண்டு வல்லரசுகள் ஆதிக்கம் செலுத் தியமையும், உலகநாடுகள் ஏதோ ஒருவல்லரசுக்கு ஆதரவாக, ஒருவல்லரசின் பக்கம் சார்ந்து செயற்பட்டமையும், இராணுவ கட்டமைப்புக்களில் இணைந்து செயலாற்றியமையும், முக்கியமான காலப் பகுதியாகவும் இந்த இரண்டு வல்லரசுகளும், ஒன்றுடன் ஒன்று நேரடியாக போர் புரியவில்லை. ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போர்களில் தகராறுகளில் இரண்டு வல்லரசுகளுமே ஏதோ ஒரு தரப்புக்கு அரசியல், இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கி வந்தன. ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் யூனியனுமே மேற்குறிப்பிட்ட இரண்டு வல்லரசுகளாகும். இவ்வல்லரசுகள் ஏனைய நாடுகளுக்கு உதவிகளை வழங்கி, முரண்பாடுகளை உக்கிரமாக்கிய நில…
-
- 0 replies
- 8.7k views
-
-
விக்னேஸ்வரனின் கணக்கு? நிலாந்தன்… உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது.உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் பேரவையில் பங்காளிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கு தலைமை தாங்க கூடிய தகுதியும் பொறுப்பும் பேரவைக்கே இருந்தது. ஆனால் பேரவை அதை செய்யவில்லை.அதனால் அவ்விரு கட்சிகளும் தனித்தனியாக இருவேறு கூட்டுக்களைஅமைத்தன. இதனால் தமிழ் வாக்குகள் சிதறின.தனது பங்காளி கட்சிகளுக்கு உரிய நேரத்தில் உரிய வழிகாட்டலை செய்யத் தவறிய காரணத்தால் பேரவையான…
-
- 0 replies
- 409 views
-
-
புதிய அரசியலமைப்பு முன்னெடுப்புகளை முடக்கியுள்ள அரசியல் கொந்தளிப்பு புதிய அரசியலமைப்பின் அவசியத்தினை நாட்டு மக்கள் உணர்ந்திருந்தனர். புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் இவர்கள் எதிர்பார்த்திருந்தனர். மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரிடையே இந்த எதிர்பார்ப்பானது சற்று அதிகமாகவே காணப்பட்டமையும் தெரிந்த விடயமாகும். சிறுபான்மை மக்கள் இந்நாட்டில் இனவாதிகளினால் ஓரம் கட்டப்பட்ட அல்லது நெருக்கீடுகளுக்கு உள்ளான வரலாறே அதிகமாக காணப்படுகின்றது. போதாக்குறைக்கு கடந்தகால மற்றும் சமகால அரசியலமைப்புகளும் இந்நிலைமை…
-
- 0 replies
- 453 views
-
-
தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் தலைமையும் 2015 ஆம் ஆண்டு சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. கடந்த மஹிந்த அரசாங்கம் தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்காக போராடிய விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியை நாடியிருந்தது. அந்த நாடுகளின் துணையுடன் இந்த நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தத்தை முடிவுக்கும் கொண்டு வந்திருந்தது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக சீனாவுடனான தனது தொடர்புகளை வலுப்படுத்தியது. பிராந்திய நலனை மையப்படுத்தி தமது நகர்வுகளை மேற்கொண்ட இந்தியாவுக்கும், சர்வதேச சம…
-
- 0 replies
- 291 views
-
-
இலங்கையை இறுக்கும் இனவாதம் இந்நாட்டின் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லெண்ணம் கொண்ட சகல மக்களும் சகவாழ்வுடன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றனர். ஆனால், இனவாதமும் மதவாதமும் இம்மக்களின் சமாதான, சகவாழ்வுக்குத் தொடர்ச்சியாக சவால் விடுத்துக்கொண்டிருப்பதை வரலாற்று நெடுகிலும் அவதானிக்க முடிகிறது. அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளுவதை இலக்காகக் கொண்டு செயற்படும் கடும்போக்காளர்கள் முஸ்லிம்களின் மத, கலை, கலாசார, பண்பாட்டு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களில் போலியான குற்றச்சாட்டுக்களை தாக்குதல்களை மேற்கொணடு வர…
-
- 0 replies
- 309 views
-
-
புதிய பொறிமுறையை வலியுறுத்தவுள்ள ஹுசேன் ரொபட் அன்டனி ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இம்முறை இலங்கை நிலைமை பாரிய சூடுபிடிக்கும் நிலையில்காணப்படுகின்ற சூழலில் பல்வேறு தரப்பினரும் இலங்கை விவகாரம் குறித்து அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடர் நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும். இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளன. முதல் கட்டமாக மார்ச் மாதம் 15ஆம் திகதி இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் ஜெனிவா கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளத…
-
- 0 replies
- 380 views
-
-
கானல் நீராகியிருக்கும் கூட்டமைப்பின் நம்பிக்கை மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பார்கள். அதுபோல, உள்ளூராட்சி தேர்தல் முடிந்த பின்னரும், தேர்தல் காலத்து, எதிரணிகள் மீதான கருத்து பரப்புரைகள் இன்னும் முடிவடையவில்லை. கட்சி அரசியலை முதன்மைப்படுத்தும் போக்கில் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள். உள்ளூராட்சி சபைகளுக்குரிய பிரச்சினைகளிலும் பார்க்க, தேசிய மட்டத்திலான பிரச்சினைகளுக்கே இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இந்த கலப்பு தேர்தல் முறையில் முன்னிலை பெற்றிருந்த கட்சிகளை முதன்மைப்படுத்தும் போக்கில் இருந்து கட்சித் தலை…
-
- 0 replies
- 337 views
-
-
http://www.kaakam.com/?p=1066 புதிய கடமைகளின் உடனடித் தேவையை உணர்த்தி நிற்கும் புதிய நிலைமைகள்-அருள்வேந்தன்- March 3, 2018 Admins கட்டுரைகள் 0 நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அமளிகளுக்குள் எந்தவொன்றையும் அறிவார்ந்து உரையாடும் வெளியைத் திறக்க முடியவில்லை. மக்களின் சமூக-பொருளியல்-அரசியல் வாழ்வு பற்றி அறிவார்ந்து அக்கறை கொள்வது பயன் இல என்றாற் போலவே அக்காலத்தில் ஊடகங்கள் முதல் வாக்குப் பொறுக்கும் பரப்புரையாளர்கள் வரை கட்சித் தொண்டாற்றி அதற்குத் தமிழ்த் தேசிய முலாமிடுவதில் பரபரப்பாக இருந்தார்கள். பொருளறியாமலும் அதன் அடியாழம் புரியாமலும் அதனை உள்ளூர உணராமலும் “தமிழ்த் தேசியம்” என்ற உயிர்மைக் கருத்தியல் பலரது அறியாமையை மறைக்கவும் அவர்கள் தம்மைப் புனிதர்க…
-
- 0 replies
- 404 views
-
-
தமிழ் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுமா ஐ.நா…? நரேன்- ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதவுரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை தொடர்பான ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரின் அறிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையையும், சர்வதேச நாடுகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே கடந்த 2015 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி எடுக்கப்பட்ட எச்.ஆர்.சி 30- 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் பெற்றிருந்தது. அந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் இலங்கை அரசாங்கம் குறிப்பி…
-
- 0 replies
- 325 views
-
-
ஐ.அமெரிக்கா-துருக்கி முறுகல் நிலைமை - ஜனகன் முத்துக்குமார் ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு குழு தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் மீள்வளர்ச்சியைத் தவிர்க்கும் காரணமாக, ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பிலில் இருந்து, மத்திய தரைக்கடல் வரை, பாதுகாப்பு வளையமொன்றை உருவாக்கப்போவதாக, ஐக்கிய அமெரிக்கா அறிவித்திருந்தது. குறித்த விடயம் தொடர்பில், ஐ.அமெரிக்காவின் தலைமையில் 30,000 இராணுவத்தினர், எல்லைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் எனவும், இக்கருமத்தில் சிரியாவை சேர்ந்த குர்திஷ் போராளிகளும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும், ஐ.அமெரிக்கா தெரிவித்திருந்தது. …
-
- 0 replies
- 366 views
-