Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அண்மையில் அறுகம் குடா பகு­தியில் இஸ்ரேலிய சுற்­றுலா பய­ணிகள் மற்றும் அவர்­க­ளது தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் அச்­சு­றுத்தல் உள்ள­தாக உளவுத்தக­வல் ஒன்று கிடைக்கப்பெற்­றது. இந்நிலையில், அறுகம் குடா உள்ளிட்ட பல உல்லாச பயணிகளுக்கான விடுதிகளுக்கும் கூட தற்போது பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானமானது பெருமளவு உல்லாச பயணிகளின் வருகையிலேயே தங்கியிருக்கின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில சுற்றுலா தளங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் டொலரின் வருமானம் பாதிப்புக்குள்ளாகுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறிருக்கையில், அரசாங்கத்திலுள்ள அதிகாரிகளுக்கு குறித்த அச்சுறுத்தல…

  2. மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். மாவையை “தலைமைத்துவ ஆளுமையற்றவர்” என்று தொடர்ச்சியாகக் கூறி வந்த விக்னேஸ்வரன், திடீரென்று மாவையின் தலைமையில் கூட்டணி அமைப்போம் என்ற அறிவித்தலை விடுக்கிறார் என்றால், அதன் பின்னணியை ஆராய வேண்டி ஏற்படுகிறது. வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், விக்னேஸ்வரன் நேரடி அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு 10 ஆண்டுகளாகப் போகிறது. விக்னேஸ்வரன், …

  3. தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி அரசியல் பத்திகளில் கண்டிருப்பீர்கள். ஆனால், திரும்பிப் பார்க்கும்போது, இந்தச் சொல்லைத் தொடர்ந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்னும் கேள்வியே எழுகிறது. இது ஒரு சுய விமர்சனம் சார்ந்த கேள்விதான். அதேவேளை, இப்பத்தி ஒரு விடயத்தையும் அழுத்தி உரைக்க முயல்கிறது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அப்படியெல்லாம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி, இந்தியாவையோ அல்லது அமெரிக்காவையோ கையாளவும் முடியாது (இது கூ…

    • 0 replies
    • 480 views
  4. கூட்டமைப்பும் ராஜதந்திரப் போரும் - நிலாந்தன் 27 அக்டோபர் 2013 ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் ஸ்கண்டிநேவிய நாடொன்றிலிருந்து வந்த ஒரு டயஸ்பொறாத் தமிழர் சொன்னார், ''இப்போதிருக்கும் நிலைமைகளே தொடர்ந்தும் இருக்குமாயிருந்தால் அல்லது இவற்றின் இயல்பான வளர்ச்சிப் போக்கின்படி மாற்றங்கள் நிகழுமாயிருந்தால் டயஸ்பொறாவில் உள்ள தமிழர்கள் பொதுப் பணிகளிலிருந்து விலகி தனிப்பட்ட வாழ்வின் சுக துக்கங்களிற்குள் அதிகம் முழ்கத் தொடங்கிவிடுவார்கள்... அடுத்த வசந்த கால விடுமுறைக்கு எங்கே போகலாம். பிள்ளைகளை வேறெந்த உயர்தரமான பள்ளிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கலாம் அல்லது இப்போதிருப்பதை விட வேறெப்படி வசதியாக வாழலாம்... என்பவற்றைப் பற்றியே அதிகம் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள்' என்…

  5. சதுரங்க ஆட்டமாடும் இலங்கை தமிழரசுக் கட்சி முருகாநந்தன் தவம் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால், கட்சியின் செயற்பாடுகளை வழக்குகள் மூலம் ஒரு சில வருடங்களேனும் முற்றாக முடக்கி அதன் மூலம் தனது தோல்விக்கு பழிவாங்க கட்சிக்குள் ‘தோற்றுப்போன’ தரப்பு ஒன்று மேற்கொள்ளும் சதுரங்க ஆட்டமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான நீதிமன்ற வழக்குத் தாக்கல்கள் அமைந்துள்ளன. கடந்த ஜனவரி 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானது, செல்லுபடியற்றது. எனவே, குறித்த இரண்டு பொதுச…

    • 1 reply
    • 480 views
  6. 9/11: 19 ஆண்டுகளின் பின்னர் இலங்கை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 செப்டெம்பர் 11 , மு.ப. 09:12 - 0 - 38 AddThis Sharing Buttons இன்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், உலகையே புரட்டிப் போட்டது. அதன் பின்னரான உலக ஒழுங்கில், உருவான சொல்லாடல்கள் இன்னும் வலிமையானதாக இருக்கின்றன. அத்தாக்குதலின் பின்னர், அமெரிக்கா உருக்கொடுத்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற எண்ணக்கரு, உலகெங்கும் எதிரொலித்தது; விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தின்…

  7. பேச்சாளர் பதவியில் பிடிவாதம் ததேகூ இருந்து வெளியேற்றவா? அல்லது வெளியேறவா?

    • 0 replies
    • 480 views
  8. காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒருதீவு? நிலாந்தன்… February 8, 2020 காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்கவேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று இல்லை. ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய அதை கூறிவிட்டார். அவருக்கு முன் ரணில் விக்கிரமசிங்க அதைக் கூறிவிட்டார். சிங்களத் தலைவர்கள் மட்டுமல்ல சம்பந்தரும் அப்படித்தான் கூறுகிறார். ஆனால் அந்த உண்மையை கூறுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் தான் வேறுபாடு உண்டு. 2016ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று அதை ரணில் விக்ரமசிங்க கூறினார். ஆனால் காணாமல் போனவர்களில் பலர் வெளிநாடு சென்று இருக்கலாம் என்று அவர் சொன்னார். அதைத்தான் புதிய ஜனாதிப…

  9. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ என்ற பெயரில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புத்தகமொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த புத்தகத்தின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஸ, பௌத்த மேலாதிக்கத்தை நியாயப்படுத்தி, ஏனைய மதத்தவர்களை சூழ்ச்சிக்குள் உள்ளடக்கும் வகையில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து பிபிசி தமிழ் ஆராய்கின்றது. ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூ…

  10. சிங்கள தேசம் இனியாவது தந்தை செல்வாவை புரிந்துகொள்ளுமா? இன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு தசாப்தங்கள். தந்தை செல்வா என்று ஈழத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் பிரசித்தமான ஒரு வழக்கறிஞரும் ஆவார். யாழ்ப்பாணம் தொல்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்வநாயகத்தின் தந்தை ஒரு ஆசிரியராக இருந்து பின்னர் மலேசியாவுக்கு புலம்பெயர்ந்த காலத்தில் தந்தை செல்வா மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தார். அகில இலங்கை காங்கி…

  11. தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வருமா? பரபரப்பான அரசியல் காட்சிகள் திரைப்படத்தின் அந்த ‘க்ளைமாக்ஸ்’ காட்சி, தமிழக அரசியலில் அரங்கேறி விட்டது. சசிகலாவின் ஆதரவு பெற்ற 19 சட்டமன்ற உறுப்பினர்களை, ‘ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது’ என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஏழு தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் சபாநாயகர், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்படியான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்று, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தைத் தக்க வைத்து விட முடியுமா என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். …

  12. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மற்றும் தமிழ் அரசியலின் வகி பாகம் என்ன? October 5, 2024 — வி.சிவலிங்கம் — நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலும், அதன் முடிவுகளும் புதிய அரசியல் சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னதான அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அதிகார வர்க்கத்திற்கு அப்பால் அரசியல் அதிகாரம் கை மாற்றப்பட்டிருக்கிறது. அதுவும் சாமான்ய குடும்பத்தில் பிறந்து, அதிகாரம் என்பதை சுவைத்து அனுபவிக்காத குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் அதுவும் மிகவும் கொடுமையான ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்த அமைப்பினைச் சார்ந்த ஒருவர் மிக நீண்ட போராட்டத்தின் பின்னணியில் இன்று மக்களால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் பல சகாப்தங்கள் சளைக்கா…

  13. தாழ்ந்துவரும் தமிழ்ப் பேரம் பேசும் சக்தி? நிலாந்தன்:- 14 பெப்ரவரி 2016 விக்னேஸ்வரன் அரசியலில் இறங்கியபோது தயான் ஜெயதிலக அவரை மென்சக்தி என்று அழைத்திருந்தார். அவர் ஏன் அப்படி அழைத்தார்? இலங்கைத்தீன் நீதிபரிபாலன கட்டமைப்புக்குள் நீண்டகாலமாக உயர் பொறுப்புக்களை வகித்த ஒருவர் அந்த நீதிபரிபாலனக் கட்டமைப்பினால் பாதுகாக்கப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு விசுவாசமாகவே இருப்பார் என்றஓர் எதிர்பார்ப்பில் தான். விக்னேஸ்வரனும் ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஒப்பீட்டளவில் தீவிரத்தன்மை குறைந்தவராகவே காணப்பட்டார். ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின் அவர் தயான் ஜெயதிலகபோன்றவர்கள் எதிர்பார்த்திராதஒருவளர்ச்சிக்குப் போhய்விட்டார். தயான் ஜெயதிலக இப்பொழுதும் அவரை ஒரு மென்சக்தி…

  14. தமிழர் அரசியலும் சர்வதேச அழுத்தங்களும். -வ.ஐ.ச.ஜெயபாலன் கேள்வியும் பதிலும். . Segudawood Nazeer தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணில் விகரக் சிங்ஹ அவர்களுக்கு ஆதரவு வழங்கக் கோரும் சர்வதேச சமூகம் தமிழர்களின் இறுதி யுத்த கால கட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்ததையும் ,காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆதரவு போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஏன் என்று தெரியவில்லை. . Jaya Palan Segudawood Nazeer நண்பா, இலங்கையில் முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு பேரழிவுக்கு பின்னர் மூன்றாம் உலகின் எந்த சிறுபான்மையினமும் இத்தனை விரைவாக நிமிர்ந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் ரீதியாக சொந்த சின்னத்தில் தேர்தல் வென்று குறிப்பிடத்தக்க நிலத்தையும் மீட்டு அரசியலிலும் தாக்…

    • 0 replies
    • 479 views
  15. தவறவிடப்பட்ட வாய்ப்புகள் கே. சஞ்சயன் / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:38 கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில், பொதுத் தேர்தல் எப்படியோ அமைதியாக நடந்து முடிந்து விட்டது. ஆனால், வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில், வாக்களிப்பு கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஒன்பது மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், சிங்கள பௌத்த மக்கள் தனித்து, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக விழுந்தடித்துக் கொண்டு வாக்களித்து, அமோக வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்கள். ஆனால், இந்தப் பொதுத் தேர்தலில், அதிகம் சலித்துப் போயிருக்கிறா…

    • 0 replies
    • 479 views
  16. குர்திஷ் பொதுசன வாக்கெடுப்பு: தனிநாடு என்ற சூதாட்டம் ஒடுக்குமுறைக்காளாகிய சமூகங்கள் போராடுகின்றபோது, அதன் இறுதி இலக்காகத் தனிநாட்டைக் கொள்வது இயல்பு. இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்த, கொலனியாதிக்க விடுதலைப் போராட்டங்கள், பலநாடுகள் விடுதலையடையவும் புதிய நாடுகள் தோற்றம் பெறவும் உதவின. கெடுபிடிப்போரின் முடிவு, நாடுகள் பிரிக்கப்பட்டு, புதிய நாடுகள் பலவற்றின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. புதிய நாடு இவ்வாறுதான் தோற்றம் பெறவேண்டுமென்ற சூத்திரமெதுவும் இல்லை. கடந்த சில தசாப்தங்களாகப் பல்வேறு காரணங்களினால் நாடுகளில் இருந்து, பிரிந்து சென்று, புதிய நாடுகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. அதேவேளை, சில நியாயமான விடுதலைப் போராட்டங்கள்,…

  17. திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி என்.கே. அஷோக்பரன் எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, உதய கம்மன்பில தரப்பு சொல்லும் நியாயம் வினோதமானது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் எரிபொருள் விலையைவிட, இலங்கையில் எரிபொருள் விலை குறைவு என்பதாகும். இந்த அபத்தமான வாதம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில், இந்த விலையேற்றத்துக்கான உண்மை…

  18. இலங்கையின் அரசியல் குழப்பநிலையை சம்பந்தன் எவ்வாறு கையாள வேண்டும்? யதீந்திரா இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை தோன்றியதில்லை. இந்த நெருக்கடி நிலைக்கான விதை 2015 ஜனவரி 8இல் விதைக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ஆகியோரை அதிகாரத்திலிருந்து அகற்றும் நோக்கிலேயே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில், இலங்கையில் இரண்டு பிரதமர்களும், இரண்டு பிரதமர் அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. 2015இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றமும் வெளிநாட்டு சதியென்றுதான் வர்ணிக்கப்பட்டது. தற்போது மகிந்தவின் மீள்வருகையும் வெளிநாட்டு சதியென்றே கூறப்படுகிறது. சதிகளை நம்பி அரசியல் செய்தால் மீண்டும் மீண்…

  19. ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்­பட்ட தோல்வி, இலங்­கையில் ஒட்டு மொத்த நிர்­வாக கட்­ட­மைப்­பு­க­ளை­யுமே, மாற்­றி­ய­மைக்கும் நிலைக்குத் தள்­ளி­யுள்­ளது. காரணம், ஒன்­பது ஆண்­டு­க­ளாக, ஆட்சி செலுத்­திய மஹிந்த ராஜபக்ச தனது செல்­வாக்கை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக எல்லாக் கட்­ட­மைப்­பு­க­ளி­லுமே தனக்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளையும், விசு­வா­ச­மா­ன­வர்­க­ளையும் நிய­மித்­தி­ருந்தார். பாது­காப்புக் கட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில் எதிர்க்கேள்­விக்கு இட­மற்ற வகையில் அது ராஜபக்ச மய­மாக்­கப்­பட்­டது. 2010ம் ஆண்டு நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சரத் பொன்­சே­காவின் தோல்­வியை அடுத்து, அவ­ருக்கு நெருக்­க­மாக இருந்த மூத்த இரா­ணுவ அதி­கா­ரிகள் அனை­வரும் பதவி நீக்­கப்­பட்­டன…

  20. பூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்

    • 0 replies
    • 479 views
  21. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எந்தவொரு தேசிய விவகாரம் தொடர்பாகவும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முழு உரிமையும் உள்ளது. தமிழ் மக்கள் தொடர்பான எந்த விவகாரத்திலும் நிலைப்பாட்டை எடுப்பதற்கு அவர்களிற்கு விசேட கடப்பாடும் உரிமையுமுள்ளது. மாறுகின்ற நிலைவரங்களுக்கும் பின்புலங்களுக்கும் ஏற்ற முறையில் தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதற்கோ அல்லது திருத்தம் செய்வதற்கோ அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், பொறுப்பு வாய்ந்த தலைமைத்துவம் என்ற வகையில் ஒவ்வொரு விவகாரம் தொடர்பிலும் தாங்கள் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என மக்களுக்கு தெரிவிப்பதற்கான கடப்பாடு அவர்களுக்கு உள்ளது. இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச பிரகடனத்த…

  22. அனர்த்த நிவாரணம் என்னும் ஏமாற்றம் மே மாதம் 26 ஆம் திகதி அரசாங்கம் களனி கங்கை, களுகங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வள கங்கை ஆகிய ஆறுகள் பெருக்கெடுத்ததினால் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினாலும் பல மாவட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளினாலும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காகவும் உதவுமாறு, சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்தது. ஆனால், அன்றே அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு, சுகபோக வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக திறைசேரியிடமிருந்து 369 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம், நாடா…

  23. சீனாவை எதிர்கொள்ளல் இந்தியப் பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிரான சிங்கள அரசியல் கட்சிகளின் போராட்டங்களை ஜனநாயகமாகவும், சீனாவுக்கு எதிரான மென்போக்கு எதிர்ப்புகளை அன்பாகவும் சித்தரிக்கும் சிங்கள ஆட்சியாளர்கள், ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையைப் பயங்கரவாதமகக் காண்பிக்கும் அநியாயம் பற்றியும் உரத்துச் சொல்ல வேண்டும்.— -அ.நிக்ஸன்- இந்தியா- சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் செய்து கொண்ட சீக்கா எனப்படும் விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடானது (Comprehensive Economic Cooperation Agreement (CECA) தொடர்பாகக் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் பாராளுமன்ற்தில் இடம்பெற்ற விவாதத்தில் சூடான விவாதம் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.