அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சூழ்நிலைக் கைதிகளாக தமிழ்த் தேசியத் தலைவர்கள் February 14, 2023 — கருணாகரன் — தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் உடைந்து பல துண்டுகளாகச் சிதறிக் கிடப்பதையிட்டு போராளி ஒருவர் கவலையோடு சில விடயங்களைப் பேசினார். கூடவே சில கேள்விகளையும் எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகள் இதுதான். 1. தற்போது மேலும் பல துண்டுகளாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்துள்ளது. அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியேறி உள்ளது. உள்ளுராட்சித் தேர்தலில் பல அணிகள் போட்டியிடுகின்றன. இது தமிழரின் அரசியலை பலவீனப்படுத்தும் நடவடிக்கையல்லவா? 2. இப்படிப் பிரிந்தும் உடைந்தும் பல அணிகளாக நிற்பது தவறானது. இந்த நிலையானது ஒடுக்குகின்ற சிங்கள மேலாதிக…
-
- 0 replies
- 664 views
-
-
அதிருப்திக்கான காரணம் இன்றைய நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளை உருவாக்கவேண்டும். என்பது எமது முக்கிய நோக்கம். வடக்கு கிழக்கில் தற்போது நிலவும் நிலைமைகளை பார்க்கும்போது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கைகள் ஓங்கவேண்டும்.என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்தானது தென்னிலங்கை அரசியல் வாதிகளை கொதிதெழ வைத்திருப்பதுடன் இலங்கை பாராளுமன்றை கதிகலங்கவைத்துள்ளது. எதிரணியினரின் அகோர கோஷங்கள் ஒரு புறம் ஐக்கியதேசியக்கட்சியினர் பாராளுமன்றில் கொதித்தெழுந்துள்ளமை மறுபுறம். ஆளும் கட்சியினர் பாராளுமன்றை புரட்டிப்போடுமளவுக்கு கூச்சிலிட்டமை.இன்ன…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழ் மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆவிக்குரிய சபைப் போதகர் ஒருவரை பலாலி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் விசாரித்த பின் யாழ்ப்பாணத்துக்குள் வர அனுமதித்திருக்கிறார்கள். அவர் வியாபார விசாவில் வந்தபடியால் அதை மத நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதனால் குறிப்பிட்ட போதகர் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட அந்த மத நிகழ்ச்சியில் பங்குபற்றாமல் நாடு திரும்பிவிட்டார். இத்தனைக்கும் அவர் நேரடியாக இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை.கொழும்புக்கு வந்து அங்கே நான்கு நாட்கள் தங்கியிருந்த பின்னர்தான் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறார்.தமிழ்நாட்டி…
-
- 0 replies
- 704 views
-
-
விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்… யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். ‘முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் அதிகப்படியான வாக்கை பெற்றவர். அவரை அவமதிப்பது என்பது அவரைத்…
-
- 0 replies
- 436 views
-
-
இலங்கையின் எரிசக்தி துறையில் சீனாவின் ஆக்ரோஷம் இலங்கையில் எரிசக்தி செல்வாக்குக்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி இருதரப்பு உறவுகளுக்கு அப்பால் பரந்த தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளும் மூலோபாய மேலாதிக்கத்துக்காக போட்டியிடும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், இது புவிசார் அரசியல் போட்டியின் ஒரு பகுதியாகும். இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் அதன் எரிசக்தி வளங்கள் இந்த அதிகாரப் போராட்டத்துக்குள் சிக்கிவிடும் நிலை உள்ளது... இலங்கையின் எரிசக்தி துறையில் சீன…
-
- 0 replies
- 350 views
-
-
மொழியோடு புரிந்த போர்! January 10, 2019 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1964 ஜனவரி ஏழாம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் சந்திப்பு டில்லியில் இடம்பெற்றத…
-
- 0 replies
- 1.2k views
-
-
Published By: VISHNU 26 JUN, 2024 | 04:35 AM நடாஷா குணரத்ன அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்று, மிகவும் சிக்கலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. வேலையின்மை நிலை அதிகரித்து வருகின்றது, ஆனால் பணவீக்கம் அதனைவிட மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. தேசிய வங்கிகளில் வெளிநாட்டு நாணய இருப்பு வெறுமையாக உள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு இருப்புக்களும் அவ்வாறே உள்ளன. சர்வதேச நிதி நிறுவனங்கள் இதுபற்றி தட்டிக் கேட்டன. அ) நிதி உறுதியற்ற தன்மை அல்லது ஆ) பணம் செலுத்துவதில் உள்ள இயல்புநிலை இ) மேற்குறித்த இரண்டு விடயங்களாலும் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை குறித்து அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. தனிப்பட்ட கலந்துரையாடல்களில், அரசாங்கங்களின் அட…
-
- 0 replies
- 341 views
- 1 follower
-
-
நல்லவரா, கெட்டவரா? - முகாபே ஒரு சகாப்தம் 'நாயகன் படத்தில் ஒரு காட்சி. வேலுநாயக்கர் என்ற கதாபாத்திரம். அவரிடம் சிறுவயது மகள் கேட்பாள்' அப்பா, நீங்க நல்லவரா, கெட்டவரா?' அதற்கு வேலு நாயக்கர் பதில் அளிப்பார் 'தெரியலையே அம்மா!' சிம்பாப்வேயின் நீண்ட நாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயும் அதே மாதிரி தான். மக்களின் நேசத்தையும், வெறுப்பையும் சம்பாதித்த தலைவர். ரொபர்ட் முகாபே சிறந்த தலைவரா, மோசமானவரா என்று சிம்பாப்வே மக்களைக் கேட்டால், தெரியலையே என்று தான் பதில் கூறுவார்கள். காலணித்துவ ஆட்சியின் அடிமைத் தளைகளில் இருந்து தமது தேசத்திற்கு விடுதலை தேடித்தந்த தைரியமானதொரு தலைவன். அந்தத் தலைவன், தனது 95 வயதில் இறு…
-
- 0 replies
- 739 views
-
-
முஸ்லிம் சமூகத்தின் அடுத்த நகர்வு? மொஹமட் பாதுஷா / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:48 - 0 - 42 அதன்பின்னர், புதிய அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலுக்குச் செல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன. கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று, நாட்டின் ஜனாதிபதியாகியுள்ள நிலையில், உடனடியாக நாட்டின் எல்லா விதமான ஆளுகைக் கட்டமைப்பிலும் ‘மொட்டு’வின் ஆட்சியை உருவாக்குவதே, நீண்டகாலம் ஆட்சியில் கோலோச்சுவதற்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில், முன்னைய அரசாங்கத்தைப் போலன்றி, துணிந்து தேர்தல்களை நடத்த, புதிய அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது. அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ர…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) புருஜோத்தமன் தங்கமயில் / 2020 பெப்ரவரி 19 தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துவரும் அரசியல், இதைத்தான் உணர்த்துகிறது. அவ்வாறான கட்டத்தில் இருந்துதான், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களும் அதன் ஆதரவுத் தரப்பினரும், எதிர்வரும் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறார்கள். அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடத்துணியும் சமூகங்களிடம், விடுதலைக்கான சித்தாந்தமும் அதை அடிப்படையாகக் கொண்ட அரசியலும் அவசியமாகும். விட…
-
- 0 replies
- 904 views
-
-
அறிக்கை: அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் | காலச்சுவடு | தேசிய ஐக்கியம், சமாதான சகவாழ்வு, மதச் சகிப்புத்தன்மை, சமூக ஒருமைப்பாடு என்பன தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆதரவுக் குழுவான கண்டி மன்ற (Kandy Forum) உறுப்பினர்களான நாங்கள் அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கான அரசாங்கத்தின் முன்னெடுப்பை வரவேற்கின்றோம். போருக்குப் பிந்திய நல்லிணக்கம், இன நல்லுறவு, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கும், இலங்கையை ஒன்றிணைந்த ஒரு பன்மைத்துவ சமூகமாகக் கட்டி எழுப்புவதற்கும், அதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் மோதல்களும் யுத்தமும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இதன்மூலம் நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். யாப்புச் சீர்திருத்தத்தின் குறிக…
-
- 0 replies
- 338 views
-
-
இரண்டு வருடம் கடந்த போராட்டம் லக்ஸ்மன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் பொலன்னறுவை, மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப் பயிர்செய்கை செயற்பாடுகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த ஆட்சி காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். சிறிது சிறிதாக அத்துமீறிய செயற்பாடுகள் தணிக்கப்பட்டன. இருந்தாலும், இப்போதும் ஒருசிலர் அப்பிரதேசத்தில் தங்களது தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகின்றனர். அதற்கெதிரான போராட்டமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியானது, இதுவரையில் வர்த்தமானியில் வெளியிடப்படுத்தப்படாதிருப்பதே அதற்கான முக்கிய காரணம் என்பது கால்நடை பண்ணையாளர்களின் நிலைப்பாடு. இருந்தாலும் …
-
- 0 replies
- 171 views
-
-
போர்நிறுத்த ஒப்பந்தம் 2025 sudumanal image: Aljazeera காஸாவில் எஞ்சியிருந்த 48 பணயக் கைதிகளில் 20 பேரை கமாஸ் விடுவித்துவிட்டது. மிகுதி 28 பேரும் இஸ்ரேலிய குண்டுவீச்சின் போது இறந்துவிட்டார்கள் என கமாஸ் உறுதிப்படுத்திவிட்டது. அவர்கள் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களோடு இறந்த உடலங்களாக இடிபாடுகளின் கீழ் சிதைந்துபோயிருப்பார்கள். 24 பணயக் கைதிகளின் உடலங்களும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நான்கு உடலங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் எல்லோருமே உண்மையில் இறந்துவிட்டார்களா அல்லது கொஞ்சப் பேரை கமாஸ் வைத்திருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகவே எதிரிகளும் நம்புகிறார்கள். காஸாவே இடிபாடாகக் கிடக்கும்போத…
-
- 0 replies
- 155 views
-
-
உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அனுரகுமார அரசுக்கு குதிரைக் கொம்பாகவே இருக்கும் முருகானந்தம் தவம் பொருளாதார நெருக்கடிகள், எதிர்க்கட்சிகளின் குடைச்சல்களினால் அனுரகுமார அரசு ‘ஆயுசு நூறு நித்தம் கண்டம்’ என்ற வகையில் ஆட்சியை நகர்த்துகின்ற நிலையில், இயற்கையும் தன் பங்கிற்கு ‘டிட்வா’ புயலாக இலங்கையர்களை மட்டுமன்றி ஆட்சியாளர்களையும் புரட்டிப்போட்டு மரண அடி கொடுத்துள்ளது. ‘டிட்வா’ புயலும் அதன் விளைவான பெரு மழையும் இலங்கையில் ஆடிய கோரத் தாண்டவத்தினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளிலிருந்து நாடும் மக்கள் மட்டுமன்றி ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசும் தற்போதைக்கு மீண்டெழக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது. இலங்கையில் பதிவான வானிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்த…
-
- 0 replies
- 104 views
-
-
இந்த வளமும் எனதே, மண்ணும் எனதே! sudumanal வெனிசுவேலாவை சூழும் போர் மேகம் Thanks for image: deutschlandfunk. de இன்றைய இன்னொரு போர்ச் சூழல் கரீபியன் கடலில் தகிக்கத் தொடங்கி சில வாரங்களாகின்றன. வெனிசுவேலா மீது அமெரிக்கா சிலுப்பிக் காட்டுகிற போர் அரசியல்தான் அது. ட்றம்ப் இன் முதல் ஆட்சிக் காலகட்டத்தில் (2017-2021) வெனிசுவேலா மீதான ட்றம்பின் கழுகுப் பார்வை விழுந்தது. வெனிசுவேலாவுக்கு எதிரான பாரிய பொருளாதாரத் தடைகள் 2017 இல் அறிவிக்கப்பட்டன. வெனிசுவேலா பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியது. மீண்டும் ஏழ்மை பெரும் பகுதி மக்களை படிப்படியாக அழுத்தத் தொடங்கியது. அது பைடன் காலத்திலும் தொடர்ந்தது. இப்போ ட்றம்ப் இன் இரண்டாவது ஆட்சிக் காலம் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்பதுபோல், இன்…
-
- 0 replies
- 206 views
-
-
முன்னாள் போராளிகளை மலினப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பு ஆதரவுப் ”புலிகள்” தாயகன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இம்முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற பெயரில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் மாவீரர்,போராளிகள் குடும்பங்களையும் கடும் விசனமடைய வைத்துள்ளதுடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சார்பான கட்சிகள் மீது சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது இவ்வாறானதொரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தால் கூட அது வரவேற்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ,அதன்…
-
- 0 replies
- 472 views
-
-
‘அரசியலுக்குள் பெண்கள் புகுவதை ஆணாதிக்கமே முடக்குகிறது’ ஏ.எச்.ஏ. ஹுஸைன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல, மற்றுமுள்ள பல கட்சிகளும் பெண்களை அரசியலில் முன்னுக்குக் கொண்டுவருவதில் அக்கறை காட்டவில்லை. இது பெண்களின் பிழையல்ல. இது ஆணாதிக்கத்தின் ஒரு வடிவமேயாகும் என்று, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயசூரியன் சின்னம் இலக்கம் 6இல் களமிறங்கியுள்ள கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார். தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழ…
-
- 0 replies
- 648 views
-
-
“இலங்கை தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும், அவ்வாறு மாற்றினால் தான், இலங்கையின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று, கடந்த திங்கட்கிழமை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். எட்டாவது இந்திய - இலங்கை கூட்டுக்குழுக் கூட்டத்துக்காக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த திங்கட்கிழமை, புதுடெல்லிக்குப் புறப்பட்ட சமயத்தில் தான், இந்தப் பேட்டி ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. மிக முக்கியமான தருணமொன்றில் தான், சுரேஷ் பிரேமச்சந்திரனின் இந்தக் கருத்து வெளியானது. பிரதமநீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னணி, அதுபற்றி இந…
-
- 0 replies
- 750 views
-
-
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுத்தால், சீனாவிடம் போய் உதவி கேட்போம் என்று கடந்தவாரம் ஒரு மிரட்டலை விடுத்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் போதிய கவனம் எடுத்து, விசாரணைகளை நடத்தாத நிலையில், இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய பின்னணியில், அமெரிக்காவில் மேலதிகப் பயிற்சிக்காக இலங்கை இராணுவத் தலைமையகத்தால், தெரிவு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்து விட்டது. 53வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றினார் என்பதற்காகவே, அவரை பயிற்சித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அமெரிக்க…
-
- 0 replies
- 585 views
-
-
அப்பலோவில் முதல்வர் ஜெயா ; அரச பணிகளை கவனிக்க துணை முதல்வர்? தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண சுகமடைந்து கடமைக்குத் திரும்பவேண்டுமென்பதே தமிழக மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. முதல்வரை பார்க்க வேண்டும், அவரது உண்மை நிலையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் மத்தியில் இருக்கும் அவா அதைவிட அதிகம். ஆனால், உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியாமல் அ.தி.மு.க. தொண்டர்கள், அமைச்சர்கள் மட்டுமன்றி முழு தமிழக மக்களுமே திகைப்பில் இருக்கின்றனர். தமது இஷ்ட தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்வதும், நேர்த்திக்கடன் வைப்பதும், மண்சோறு சாப்பிடுவதும், காணிக்கை செலுத்துவதுமாக இருக்கின்றனர். அப்…
-
- 0 replies
- 500 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசை திருப்திப்படுத்த அச்சாப்பிள்ளை அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்ற சபா மண்டபத்தில் மாவீர்களுக்குத் தீபம் ஏற்றியதை மறந்துவிட்ட முன்னணியின் அரசியல் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத்…
-
- 0 replies
- 1k views
-
-
பழங்கள்ளின் போதைதர ‘பாட்டனார்’ இருக்கின்றார் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் பங்குபற்றிய, நிகர்நிலை கலந்துரையாடல் ஒன்று, சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. ‘தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற அமைப்பு நடத்திய இந்தக் கலந்துரையாடல், ‘இன்றைய பூகோள அரசியல் இயங்குநிலையில் ஈழத்தமிழரின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எரிக் சொல்ஹெய்ம், வி. உருத்திரகுமாரன், ஊடகவியலாளர் ஐயநாதன், பேராசிரியர் கிருஷ்ணா, நெறியாளராக பூகோள அரசியல் ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் பங்குகொண்டனர். இந்தக் கலந்துரையாடலை ‘யூடியூப்’பில் பார்வையிட முடியும். போர் முடிந்து, 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த ஒரு தசாப்த காலத…
-
- 0 replies
- 671 views
-
-
தலைவிரித்தாடும் இனவாதம் ! செல்வரட்னம் சிறிதரன் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும், சட்டத்தையும் ஒழுங்கையும் சீராக நிலை நாட்டுவதில் அரசாங்கம் பலவீனமான நிலையிலேயே காணப்படுகின்றது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும். சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துள்ள ஒரு நிலையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் வீரியமுள்ளதாக இருக்க முடியாது. சட்டத்தையும் ஒழுங்கையும் முறையாக நிலைநாட்டுவதன் ஊடாகவே நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். இரண்டும் இருவேறு விடயங்களாக …
-
- 0 replies
- 356 views
-
-
நினைவேந்தல் உள்ளதா உரிமை? -என்.கண்ணன் “உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது போனால், அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்றங்களை அல்லது சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தியிருக்க வேண்டும்” “திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்த பத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சரி, சட்ட விற்பன்னர்களான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, நினைவேந்தல் விவகாரத்தை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை” தியாகி திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர்நாள் நினைவேந்தலுக்காகவும் தொடர்ந்திருக்கிறது. மரணித்தவர்களை நினை…
-
- 0 replies
- 814 views
-
-
எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ? ரவிராஜ் கொலை வழக்கும் தீர்ப்பும் ஒரு பார்வை ஒருமுறை சர்வதேச பொலிஸார் அல்லது ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் என அழைக்கப்படும் பொலிஸார் இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிக்க இலங்கை வந்தனர். வரும்போது கூடவே 3 குதிரைகளையும் அவர்கள் கொண்டு வந்தனர். அக்குதிரைகளை அவர்கள் ஒரு காட்டில் விட்டனர். பின்னர் பயிற்சிகளை ஆரம்பித்த அவர்கள் முதலில் சாதாரண பொலிஸ் நிலைய பொலிஸாரை அழைத்து தாம் கொண்டுவந்த குதிரைகள் காட்டில் காணாமல் போய்விட்டதாகவும் அவற்றை கண்டு பிடிக்குமாறும் கூறியுள்ளனர். உடனே காட்டுக்குள் சென்ற பொலிஸார் 3 குதிரைகளின் கால்தடம் காட்டில் உள்ளதாகவும் அதன…
-
- 0 replies
- 488 views
-