Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. நம்பிக்கை தரும் அமெரிக்கா 57 Views அமெரிக்காவின் இன்றைய அரச அதிபர் மதிப்புக்குரிய பைடன் அவர்கள் “அமெரிக்கா பழைய நிலைக்கு வருகிறது” என்னும் தலைப்பில் அமெரிக்கா மனிதஉரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் முன்பு போல உலகில் செயற்படும் என உறுதியளித்துள்ளது நம்பிக்கை தரும் உறுதி மொழியாக உள்ளது. இந்நேரத்தில் ஈழத்தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினை என்பது அவர்களுடைய தன்னாட்சி உரிமையுடன் தொடர்பானது. ஆகையினால் அதனைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் பேணல் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத் தமிழர்கள் அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும். குடியேற்றவாதத்திலிருந்து ஈழத்தமிழர்கள் சுதந்திரம் பெற்ற 73ஆவது ஆண்டு 04.02.2021இல் நிறை…

  2. தமிழ்நாட்டின் எழுச்சிகளும் கரிசனைகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாடு, அண்மைக் காலமாகவே, போராட்டக்களம் போன்று மாறியிருக்கிறது. அனேகமான தருணங்களில், ஓர் இடம் “போராட்டக்களம்” போன்று மாறியிருக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம், எதிர்மறையான கருத்தையே வெளிப்படுத்தும். தமிழ்நாட்டிலும் எதிர்மறையான சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும், அங்கு ஏற்பட்டுள்ள எழுச்சி, ஒரு வகையான புத்துணர்ச்சியைத் தருகின்றது என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணமும் அது ஏற்படுத்தியிருக்கும் ஒரு வகையான வெற்றிடமும் தலைமையற்ற உணர்வொன்றை, அம்மாநில மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது யதார்த்தமானது. ஜெயலலிதா மீதான விமர்சனங்களைத் …

  3. கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தீர்வு யோசனை May 1, 2021 தம்பியப்பா கோபாலக்கிருஸ்ணன் தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு 1989ஆம் ஆண்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்ட பிரகடனத்தின் அடிப்படையில்தான் தீர்வு இருக்க வேண்டும். எனினும் சுமார் முப்பது ஆண்டுகளின் பின்னர் மாற்றமடைந்துள்ள தற்போதைய களநிலை கருதி ஒரு சில மாற்றங்களைச் செய்யவேண்டும். 1989ஆம் ஆண்டில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்த பிரகடனத்தில், கல்முனை தமிழ்ப்பிரிவு என அழைக்கப்படும் கல்முனை வடக்குப் பிரிவில் பத்து கிராம சேவகர் பிரிவுகள் அடக்கப்பட்டன. அவையாவன கல்முனை 1, கல்முனை 2, கல்முனை 3, பாண்டிருப்பு 1, பாண்டிருப்பு 2, பெரியநீலாவணை…

  4. முள்ளிவாய்க்கால் இன்றும், தலைவர்களுக்கு ஓரு சோதனைக்களமா? நிலாந்தன்:- முள்ளிவாய்க்கால் நினைவு கூரலில் சம்பந்தர் அவமதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ‘குழப்பம் விளைவித்தவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாதது அவரது தகுதிக்கும், உயர்த்திக்கும் பொருத்தமானதாகத் தெரியவில்லை’. என்று மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது முகநூல்க் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார். விக்னேஸ்வரன் நினைத்திருந்தால் குழப்பத்தை தடுத்திருக்கலாம் என்று அவர் நம்புவதாகத் தெரிகின்றது. அன்றைய நாளில் எடுக்கப்பட்ட கானொளிகளை உற்றுக் கவனித்தால் ஒரு விடயத்தைக் கண்டுபிடிக்கலாம். சம்பந்தர் உரையாற்ற முன்…

  5. மாற்றம் எங்கு தேவை? கடந்த சில மாதங்களாக வரட்சி வானிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கையை, கடந்த 24ஆம் திகதியில் இருந்து பெய்துவரும் அடைமழை புரட்டிப்போட்டது. குறிப்பாக, தென்மாகாண மக்களை இந்த மழை, நிலைக்குலைய வைத்து, அந்த மாகாணத்தை மயான பூமியாகவே மாற்றிவிட்டதெனலாம். அடை மழை காரணமாக, ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில், 202 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 112 பேர் காயமடைந்தும், 99 பேர் காணாமலும் போயுள்ளனர். இதேவேளை, இந்த அனர்த்தங்களால், சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புகளானவை, முழு நாட்டையும் மாத்திரமன்றி உலக நாடுகளின் க…

  6. ஜெனீவாவை எவ்வளவு காலம் நம்பியிருப்பது? எம்.எஸ்.எம். ஐயூப் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மற்றோர் அமர்வு வருகிறது. இம்மாதம் இறுதிப் பகுதியிலிருந்து, சுமார் ஒரு மாத காலமாக அது நடைபெறும். இந்த நிலையில், அரசாங்கமும் தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்குத் தயாராகி வருகின்றன. இது, அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்தது முதல், நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும். போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் அதற்காக, மனித உரிமைகள…

    • 0 replies
    • 287 views
  7. முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ‘காமராஜ் திட்டமும்’ வீரகத்தி தனபாலசிங்கம் உள்ளூராட்சி தேர்தல்கள் வரும்போது இலங்கைத் தமிழர் அரசியலில் புதியதொரு கூட்டணி உருவாகும் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நீண்டகாலமாக அங்கத்துவம் வகித்துவருகின்றபோதிலும், அதன் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துடன் அண்மைக்காலமாக பெரிதும் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது சமகால நேச அணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வேறு சில அமைப்புகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சி…

  8. கொழுக்கட்டைவாய்கள் இலங்கையில் தமிழ்க் குடிமக்களுக்கெதிராக அவ்வரசு நடத்தி வரும் இனவழிப்புத் தாக்குதல்களைக் கண்டும் மௌனமாகவே இருக்கின்றன அனைத்துலக நாடுகள், முக்கியமாக இந்தியா. நம் அனைவரது மௌனமும் இலங்கையரசுக்கு நாம் செலுத்தும் சம்மதத் தலையசைப்பு. இலங்கை அரசத் தரப்பிலிருந்து ‘புலிகளின் வேலை’ என்ற சமிக்ஞை மாதிரி ஏதாவது கிடைத்ததுமே காத்திருந்தது போல வரிந்து கட்டிக் கொண்டு செய்தி பரப்பி நடுநிலையோடு பத்திரிகாதர்மம் காக்கும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும், கொலைகள் நடந்து 15 மணி நேரங்களாகி விட்ட நிலையிலும் ஒரு முக்கல் முனகல் கூட இல்லாமல் மடுமுழுங்கிகளாக இருப்பது புதிதில்லை என்றாலும், இன்னுமொரு தடவை இதைப் பதிந்தாக வேண்டி இருக்கிறது. வங்காலையில் இன்று நடந்திருக்கும் கொ…

  9. வாக்குச்சீட்டால் தலைவிதியை வெல்ல முடியுமா? பெரும் எதிர்பார்ப்புடன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 2018ம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. முடிவுகள் வெளியாகும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட எதிர்வு கூரல்களின் பெரும்பாலானவை, பொய்பிக்கப்பட்டு உள்ளனவென்றே கூறலாம். அதிர்ச்சி தரும் முடிவுகள், மகத்தான முடிவுகள், எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் என்றவாறான பல்வகையான முடிவுகளை, மக்கள் வழங்கியுள்ளனர். தற்போது நடைபெற்ற குட்டித் தேர்தல் முடிவுகள் மூலம், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது மக்களிடம் கொண்டுள்ள செல்வாக்குப் பற்றிய நாடித்துடிப்பை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. …

  10. யாழ்பாண அரசாங்க அதிபர், யாழ்பாணத்திற்கு உடனடித் தேவையாக, 5,500 மெற்றிக்தொன் உணவு மற்றும், அத்தியவசிய தேவைகள் தேவைப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார்! ஆனால், மகிந்த அரசு, மிகவும் அதைத் தாமதித்து, 4,5 நாட்கள் கழிந்த பின்னர், ஒரு கப்பலில், பொருட்களை அனுப்புவதாக வேண்டா,வெறுப்பாகச் செய்தது. அதுவும், சாமான் ஏத்துவதற்கு முன், மகிந்த தொடங்கி, அடிமட்ட, டக்ளஸ் வரைக்கும் படம் எடுப்பதற்காக 2 நாட்கள் தாமதம் செய்து தான் பொருட்கள் அனுப்பப்பட்டன! அந்தப் கப்பலில், 3500 தொன், அனுப்புவதாக கிட்டத்தட்ட, அமீர்அலி பிபிசிக்குச் சொன்னார். "அரசாங்க அதிபர் சொன்னதில் 85 அனுப்புகின்றேன் என்று!.அது சுத்தப் பொய்! அதில் கப்பலில் வெறும், 1500 தொன் வரை தான் அனுப்பப்பட்டிருக்கின்றன. …

  11. இலங்கையில் மாறிவந்த ஆட்சி தள்ளாடிக்கொண்டிருக்கிறது??

  12. கொழுந்து விடும் சமஷ்டி அர­சியல் -என்.கண்ணன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுடன் பகி­ரங்க அர­சியல் மோதலில் ஈடு­படும் துணிச்சல் கொண்­ட­வ­ராக சுமந்­திரன் தான் இருக்­கிறார். எனவே அவரை வறுத்­தெ­டுக்க கிடைத்­தி­ருக்­கின்ற வாய்ப்பை முத­ல­மைச்­சரின் தரப்­பி­லுள்­ள­வர்கள் நன்­றா­கவே பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள் காலியில் நடந்த, புதிய அர­சி­ய­ல­மைப்பு யோசனை குறித்து விளக்­க­ம­ளிக்கும் கூட்டம் ஒன்றில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் கருத்து பெரும் சர்ச்­சையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. தமிழ் மக்­க­ளுக்கு சமஷ்டி தேவை­யில்லை என்றும்,…

  13. Posted by: on Jul 24, 2011 சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றம் என அழைக்கப்படும் ஐ.சி.ஜே., 1946 ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சில சர்ச்சைகளை இவ் ஐ.சி.ஜே. தீர்த்து வருகிறது. இவ் ஐ.சி. ஜே. நிறுவப்படுவதற்கு முன்னர் 1899 ஆம் ஆண்டு சி.பி.ஏ. என்ற நீதி நிறுவனம் 1922 தல் சி.பி.ஐ.ஜே. என்ற சர்வதேச நீதி மன்றம் நாடுகளுக்கிடையேயான சர்ச்சைகளை பேச்சுவார்த்தை விசாரணை, மத்தியஸ்தம் ஆகிய முறைகள் மூலம் தீர்த்து வந்துள்ளன. சில ஆய்வாளர்கள் உட்பட பலர் ஐ.சி.ஜே.யையும் ஐ.சி.சி.யையும் ஒன்றாக எண்ணிவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதாவது உலக நீதிமன்றம் என்னும் சர்வதேச நீதிமன்றத்தை (International Court of Justice- I.C.J) என்பார்கள். இவ் ஐ.சி.ஜே. ந…

  14. கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 09 புதன்கிழமை, மு.ப. 10:52 “புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பு தொடர்பில், வெளிப்படுத்திவரும் நம்பிக்கைப் பேச்சுகள் எதை நோக்கியது?” என்று வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவர் இந்தப் பத்தியாளரிடம் கடந்த வாரம் கேட்டார். புதிய அரசமைப்புக்கான முயற்சிகள், கிட்டத்தட்ட முழுமையாகவே முடங்கிவிட்டன. மைத்திரியின் ‘ஒக்டோபர் 26’ சதிப்புரட்சிக்குப் பின்னராகப் பிறந்திருக்கின்ற 2019, தேர்தல்களின் ஆ…

  15. 20 MAY, 2024 | 02:46 PM (டி.பி.எஸ். ஜெயராஜ்) இலங்கையில் உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் பிரகாரம், இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் சனத்தொகையில் 74.9 சதவீதத்தினராக இருந்தனர். எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய இனத்தவர்களான இலங்கைத் தமிழர்கள் 11.1 சதவீதத்தினராக இருந்தனர். மூன்றாவது பெரிய இனத்தவர்களான இலங்கை முஸ்லிம்கள் 9.3 சதவீதத்தினராகவும் நான்காவது பெரிய இனத்தவர்களான 'மலையகத் தமிழர்கள்' என்று அறியப்படும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் 4.1 சதவீதத்தினராகவும் இருந்தனர். எண்ணிக்கையில் சிறுபான்மை இனத்தவர்களான இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் இந்திய தமிழர்களும் சனத…

  16. 'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism) 'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) என்னும் கட்டுரையினை 'சிலோன் டுடே' (Cedylon Today) பத்திரிகையில் அமா ஹெச். வன்னியராச்சி ( Ama H. Vanniarachchy) எழுதியிருக்க்கின்றார். நல்லதொரு கட்டுரை. தற்போதுள்ள சூழலில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை. இக்கட்டுரை சிங்களக் கவிஞை சந்திரசிறி சுதுசிங்கவின் (Sandarasee Sudusinghe ) புதிதாக வெளியான கவிதைத்தொகுதியான 'எரிந்த சிறகுகள்' ('ஹினி வான்டு பியாபத்' - Gini Wandu Piyapath) பற்றியது. இக்கவிதைகள் இலங்கையில் இன்னும்…

  17. எழுக தமிழ் – 2019: மக்கள் திரண்டாலும் கட்சிகள் திரளுமா? நிலாந்தன் “நமக்கிடையே இருக்கின்ற அரசியல் பேதங்களும் ஒற்றுமையீனங்களும் கருத்து மோதல்களும் எங்கள் இனத்திற்கு ஆபத்தாக முடியுமென்பதால், மீண்டும் மீண்டும் நாம் கேட்பது அரசியல் பேதங்களை மறந்து தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்றுபட்டு, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்பதாகும்.இந்த ஒற்றுமை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் பேரணியில் பேரலையாக ஒன்றுபட வைக்கும் என்பது எம் அசைக்க முடியாத நம்பிக்கை……… அன்பார்ந்த தமிழ் மக்களே! பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத் தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவ…

  18. ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவும் தமிழ்த்­த­ரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனா­தி­பதி தேர்தல் மூன்று நிலை­களில் அர­சியல் ரீதி­யான கொள்கை நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்த மூன்று நிலை­களும் தேர்தல் களத்தில் தீவி­ர­மாக முட்டி மோதி முடி­வு­களை வெளிப்­ப­டுத்தக் காத்­தி­ருக்­கின்­றன. அந்த முடி­வு­களும் அதன் பின்­ன­ரான விளை­வு­களும் இலங்­கையின் அடுத்த கட்ட அர­சியல் நிலை­மை­களில் பெரும் தாக்­கத்தைச் செலுத்தப் போகின்­றன. அதற்­கான அறி­கு­றி­களை தேர்­த­லுக்கு முன்­ன­ரான நிலை­மைகள் வெளிப்­ப­டுத்தியுள்­ளன. இந்தத் தாக்­கங்கள் நாட்டின் எதிர்­கால நிலை­மை­களைப் பிர­கா­ச­மாக்கும் என்று கூற முடி­யா­துள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள…

  19. அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனங்களை அனைத்துலக வர்த்தக அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கும் தமக்கான மூலோபாயத் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கும் உந்துசக்தியாக விளங்கும் Armitage International என்கின்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் றிச்சார்ட் ஆர்மிரேஜ். வியட்னாமுக்கு எதிரான யுத்தத்தின் போது இளமைத் துடிப்புள்ள வீரம்மிக்க ஒரு அமெரிக்க கடற்படை அதிகாரியாக பங்குகொண்டிருந்தார். அன்றிலிருந்து அவர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றார். இவரது வளர்ச்சியின் பெறுபேறாக, அமெரிக்க அதிபர் றொனால்ட் றீகனின் ஆட்சிக்காலத்தில் றிச்சார்ட் ஆர்மிரேஜ் அமெரிக்காவின் உதவிப் பாதுகாப்புச் செயலராகவும் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் ப…

  20. தேர்தல் களம் தமிழ்த் தேசிய அரசியலுக்கான பரீட்சைக் களமா? - யதீந்திரா நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் ஒரு பரிட்சைக்களமாகும். இந்தத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு தெளிவான செய்தியாகவும், சிலருக்கு அவர்களது அரசில் வாழ்வின் அஸ்தமனமாகவும் போகலாம். அது யார் – யார் என்பதை தேர்தல் முடிவுகள் கூறும். தேர்தல் களத்தை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு என்று பிரித்தே நோக்க வேண்டும். ஏனெனில் வடக்கையும் கிழக்கையும் தங்கள் வாக்குகளின் பலத்தால் இணைக்கக் கூடிய மாற்று கட்சிகள் எவையும் இல்லை. ஒப்பீட்டடிப்படையில் வாக்குகளால் வடக்கு – கிழக்கையும் இணைக்கக் கூடிய ஒரேயொரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மட்டும்தான். அவர்களுக்குத்தான் வடகிழக்கு என்னும் அடிப்படையில் ஒரு…

  21. தளம் 3: ஈழத் தமிழ் அரசியல் நேற்று - இன்று - நாளை ஈழத் தமிழர் அரசியல் பல்வேறு அரசியல் இயக்கங்களைத் தன்னகத்தே கொண்டது. வெளியிலிருந்து வரும் பேரினவாத ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய தலையீடுகள், வல்லரசுகளின் மேலாதிக்கம் முதல் தன்னுள்ளே இயங்கும் ஒடுக்குமுறைகள், சாதியம், பெண்ணடிமைத் தனம் என்பவற்றுடன் ஏனைய தேசிய இனங்களுடனான உறவும் முரணும் எனப் பலதரப்பட்ட, சிக்கலான அரசியல் இயக்கங்களை ஈழத் தமிழ் அரசியல் உள்ளடக்குகிறது. இந்த அரசியலின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய உரையாடலாக இன்றைய தளம் அமையும் என நிகழ்ச்சியின் மட்டுறுத்துநர் மு. மயூரன் வழங்கிய அறிமுகத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலில் சட்டத்தரணி என்.கே.அஷோக்பரன், சட்டத்தரணியும் யாழ், பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமா…

  22. பாகிஸ்தானிலும் சீனாவிற்கு அமெரிக்கா ஆப்புவைக்க முடியுமா? உலகின் எரி­பொருள் விநி­யோகம் தடை­யின்றி நடப்­ப­தற்கு பல­நா­டு­களும் தமது பாது­காப்புச் செலவில் பெரும்­ப­கு­தியை ஒதுக்­கி­யுள்­ளன. ஐரோப்­பிய ஒன்­றி­யமும் ஐக்­கிய அமெ­ரிக்­காவும் தமக்­கான எரி­பொருள் விநி­யோகம் தடை­யின்றி நடப்­பதை உறுதி செய்­துள்­ளன. உல­கி­லேயே எரி­பொருள் விநி­யோகத் தடையால் பெரிதும் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நாடு­க­ளாக ஆசிய நாடுகள் இருக்­கின்­றன. எரி­பொருள் பாவ­னையைப் பொறுத்த வரை சீனா உல­கி­லேயே இரண்­டா­வது பெரிய நாடாகும். சீனாவின் இருப்­பிற்கு தடை­யற்ற எரிபொருள் வழங்கல் முக்­கி­ய­மாகும். சீனாவின் மாற்று வழிகள் மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்­கடல் ஆகி­ய­வற்றில்…

  23. தொல்பொருள் போர்வையில் வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்க திட்டமா? வடக்கு கிழக்கில் உள்ள தொல்­பொருள் வல­யங்­களைப் பாது­காக்கப் போகிறோம் என்ற போர்­வையில் அர­சாங்கம் இன­வாத சக்­தி­களின் துணை­யுடன் பாரிய ஆக்­கி­ர­மிப்பு வேலைத்­திட்டம் ஒன்றைத் தொடங்­கி­யி­ருக்­கி­றதா எனும் சந்­தேகம் கடந்த சில வாரங்­க­ளாக வலுப்­பெற ஆரம்­பித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ, ஆரம்ப கைத்­தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர், மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் ஆகியோர் இது தொடர்பில் நடாத்­திய கூட்­டங்­களும் வெளி­யிட்ட கருத்­துக…

  24. முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் இழிநிலை -மொஹமட் பாதுஷா முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்த செயற்பாட்டையும் காத்திரமான அரசியல் நகர்வுகளையும் வேண்டி நிற்கின்ற ஒரு கால கட்டத்தில், முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான எதிர்ப்பு அரசியல் மிகவும் சிறுபிள்ளைத்தனமான வழித்தடத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. பெரிய புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு அறிவிலித்தனமான, பக்குவப்படாத வேலைகளை மேற்கொள்கின்ற அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள், கட்சி ஆதரவாளர்களின் செயற்பாடுகளால் முஸ்லிம் அரசியலானது ஓர் அடிகூட முன்நகராமல் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கின்றது. அத்துடன், முஸ்லிம் மக்களுக்கான அரசியலாக அது தம்மைப் புடம்போட்டுக் கொள்ளவும் இல்லை. முஸ்லிம்கள் இணக்க அரசியலுக்குப்…

  25. ஜெனிவா பிரேரணையும் இந்தியாவும் - யதீந்திரா கடந்த ஒரு சில மாதங்களாக ஜெனிவாவை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் முடிவுக்குவந்திருக்கின்றன. எதிர்பார்த்தது போன்று வாக்கெடுப்பில் பிரேரணை வெற்றிபெற்றிருக்கின்றது. வெற்றிபெறக் கூடிய நிலைமை இருந்ததால்தான், பிரித்தானியா பிரேரரணையை வாக்கெடுப்புக்கு சமர்ப்பித்திருந்தது. முதலாவது பார்வையில் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அதன் முதலாவது ராஜதந்திர தோல்வியை பதிவு செய்திருக்கின்றது. ஆனால் அரசாங்கம் ஒரே நேரத்தில் இரண்டு தோல்விகளை ஒரே களத்தில் சந்தித்திருக்கின்றது. பிரேரணையின் போதான வாக்கெடுப்பின் போது, இலங்கையின் உடனடி அயல்நாடும், பிராந்திய சக்தியுமான இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்திருக்கின்றது. இது ரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.