அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
எழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும் - நிலாந்தன்:- தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது. தமிழ்த்தரப்பு மேற்கொள்ளும் ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தரப்பும் வெளித்தரப்புக்களும் பதில்வினையாற்றும் நிலைமை அப்பொழுது காணப்பட்டது. இவ்வாறு தமிழ்த் தரப்பானது பதில்வினையாற்றும் ஒரு தரப்பாக மட்டும் சுருங்கிக் காணப்படுவது என்பது கடந்த ஏழாண்டுகளாக மட்டும்த்தான் …
-
- 0 replies
- 476 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ; முடிவுகள் சொல்லும் செய்திகள் சில மாதங்களுக்கு முன்பு வரை கொழும்பில் பணியாற்றிய இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரியொன்றின் செய்தியாளரான நண்பர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முதல்நாளான கடந்த திங்கட்கிழமை முகநூலில் பதிவொன்றைச் செய்திருந்தார். ‘அபிப்பிராய வாக்கெடுப்புகள் பலவற்றில் டொனால்ட் ட்ரம்பை விடவும் ஹிலாரி கிளின்டனே முன்னணியில் நிற்பதாகத் தோன்றினாலும் மக்கள் செல்வாக்கில் இருவருக்கும் இடையிலான வெளி குறுகிக்கொண்டே வருகின்றது. 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால், ஹிலாரி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்…
-
- 0 replies
- 476 views
-
-
எச்சரிக்கை மணி ! தமிழ் மக்கள் தமது நீண்ட காலப் போராட்டத்தில் சமஷ்டி என்ற தீர்வை நோக்கியே நகர்ந்து வந்துள்ளனர். இடையில் ஏற்பட்ட ஆயுதப் போர் காலத்தில் தனி ஈழம் என்ற தீவிரப்போக்கு உண்டாக்கியதற்கான அடிப்படைக் காரணம் சமஷ்டி மறுக்கப்பட்டதன் எதிர்விளைவே. இன்றைய சூழ்நிலையில் அவற்றிலிருந்து இறங்கிவந்து பிளவுபடாத பிரிக்கப்படாத நாட்டுக்குள் (ஒருமித்த) அதிகாரப்பகிர்வை வேண்டி நிற்கின்ற போதும் அவற்றையும் இல்லாது ஆக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கை சமூகம் மும்முரம் காட்டுவது ஆத்திரத்தை ஊட்டுகிறது. புதிய அரசியல் யாப்பு இலங்கைக்கு ஆபத்தை கொண்டு வரவிருக்கிறது. நாடு பிரிந்து செல்வதற்குரிய வழிசமைத்துக் கொடுக்கப்போகிறது. மக்…
-
- 0 replies
- 476 views
-
-
இலங்கை குறித்த இந்திய வெளியறவு கொள்கையில் மாற்றம் வருமா? –ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி மேலும் மேலும் அதிகரிக்கும். ஆனால் இதற்குத் தீர்வு 13 அல்ல என்பதை புதுடில்லி புரிந்துகொள்ளாதவரை, இலங்கையின் துணிச்சலும் இந்தியாவைப் புறக்கணித்துச் செயற்படும் தன்மையும் மேலும் கையோங்கும்– -அ.நிக்ஸன்- இலங்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகக் காலம் கடந்து இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்தியில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான சுப்பிரமணியன் சுவாமியின் கொழும்பு வருகை ஆரோக்கியமான உறவை உருவாக்குமெனக் கூறமுடியாது. ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய ந…
-
- 0 replies
- 476 views
-
-
Wednesday, January 16, 2013 ஒபாமாவும் சித்திரவதையும் Obama and torture ஒபாமா நிர்வாகம் அதன் தாராளவாத மற்றும் “இடது” ஆதரவாளர்களின் முற்போக்கான நடவடிக்கைகளுக்கான சாத்தியப்பாடுகள் பற்றிய ஊகங்களுடன் தன் இரண்டாம் பதவிக்காலத்தினை ஆரம்பிக்க தயாரிக்கையில், மீண்டும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தனக்கு முன் பதவியில் இருந்தவருடைய குற்றங்களைத் தொடர்வதுடன் தீவிரப்படுத்துவதையும் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. முதல் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்தில் ஒபாமாவும் அவருடைய தலைமை அரசாங்க வழக்குத்தொடுனருமான எரிக் ஹோல்டரும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் CIA ஆல் நடாத்தப்பட்ட சித்திரவதை மற்றும் பிற குற்றங்கள் நடத்தப்பட்டவற்றை குறித்த அனைத்து விசாரணைகளையும்…
-
- 0 replies
- 476 views
-
-
இலங்கைத் தீர்மானத்தின் மீதான மனிதவுரிமைச் சபை உறுப்பு நாடுகளின் நிலைப்பாடும் அதன் இறுதி உள்ளடக்கமும் 84 Views எதிர்வரும் வாரங்களில் இலங்கைத் தீர்மானத்தின் மீதான மனிதவுரிமைச் சபை உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பொதுவாக உறுப்பு நாடுகள் பிற நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் குறித்து எவ்வாறு தமது முடிவுகளை எடுக்கவுள்ளார்கள் என்பதனை அறிந்துகொள்வது அவசியமானது. இம்முறையும் மனித உரிமைச் சபையில் கடந்தகாலங்களைப் போலவே இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புத் தொடர்பான விடயத்தில் நாடுகள் கொள்கையளவிலும், பூகோளப்பிராந்திய அளவிலும் வேறுபட்டு நிற்கின்றன. பொதுவாக நாடுகள் தொடர்பான …
-
- 0 replies
- 476 views
-
-
புதிய அரசு செல்லப்போகும் பாதையும் சிறுபான்மையின மக்களின் கேள்வியும் August 14, 2020 பொது ஜன பெரமுன அரசாங்கம் பதவியேற்றுக்கொண்ட இரண்டு தினங்களுக்குள்ளாகவே அது எந்தத் திசையில் பணயிக்கப்போகின்றது என்பது அதன் ஒவ்வொரு செயற்பாடுகளின் மூலமாகவும் தெளிவாகியிருக்கின்றது. அமைச்சரவையில் இரண்டே இரண்டு சிறுபான்மையினர். அமைச்சரவைப் பதவியேற்பின் போது சிறுபான்மையினருக்கான அடையாளங்கள் அகற்றப்பட்ட சிங்கக்கொடி. பதவியேற்பு நிகழ்வில் பௌத்த மதத் தலைவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டமை. காணி, காவல்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கப்போவதில்லை என்ற அதற்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் அறிவிப்பு. அமைச்சுக்களின் செயலாளர்கள் அனைவருமே ச…
-
- 0 replies
- 476 views
-
-
சிதறிப்போகும் நிலையிலுள்ள சுதந்திரக்கட்சியை கட்டிக் காக்க முயலும் அரச தலைவர்!! அரச தலைவராகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவுமிருக்கும் மைத்திரிபாலவினால் சுதந்திரக் கட்சியை ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க இயலாமற் போய்விட்டது. 1980 களில் சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும், மைத்திரிபால சேனநாயகவுக்குமிடையில் முறுகல் நிலைதோன்றிய போதிலும், பின்னர் அது நேர்சீர் …
-
- 0 replies
- 476 views
-
-
இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு அரசியல்- இந்தியாவும் 13 ஆவது திருத்தச் சட்டமும் இலங்கை அரசுக்கு ஈழத்தமிழர்கள் தொல்லை கொடுக்கக் கூடாதென்பது இந்தியாவின் நிலைப்பாடு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு (Maritime Domain Awareness--MDA) நடவடிக்கைகளை சில நாட்களுக்குள் இலங்கை ஆரம்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கின்றார். இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சனைக்குத் தீர்வாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட 1…
-
- 0 replies
- 476 views
-
-
இனங்களிடையே நல்லிணக்கத்தை கொண்டு வருவேன் என்று உறுதி கூற வேட்பளார் எவருமில்லை. இதுவரை அளிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார உறுதி மொழிகளை கணக்கிட்டுப் பார்த்தால் இத்தேர்தலுக்காக வழங்கப்பட்டுள்ள உறுதி மொழிகளே பெருமளவினதாக உள்ளன. ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களுமே ஏனைய வேட்பாளர்களை விட அதிகமான உறுதி மொழிகளை வாக்காளர்களிடம் வழங்க உறுதி கொண்டுள்ளமையினை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்க்கும் போது தெரிய வருகிறது. ஒரு வேட்பாளர் நெல் உற்பத்திக்கு தேவையான பசளைகளை இலவசமாக தருவேன் என்றால் இன்னொருவரோ அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்குமே இலவசமான பசளையை நான் பதவிக்கு வந்தால் தருவேன் என்கிறார். தொழிலாளர் வகுப்பினரது வேதனங்களை நான் அதிகரிப்பேன் என்று ஒருவர் கூறினால் இன்னொருவரும் இன்னும் அதிக…
-
- 0 replies
- 476 views
-
-
வடக்குப் பெண்களும் சமூக மாற்றமும் Ahilan Kadirgamar / சிவப்புக் குறிப்புகள் போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் தினசரி வாழ்க்கை, பிரச்சினைகளிலிருந்து பிரச்சினைகளுக்கு, கடனிலிருந்து துஷ்பிரயோகத்திலிருந்து வன்முறைக்கு என, நகர்ந்து செல்கிறது. இந்த நெருக்கடிகளின் பாதிப்புகளை, பெண்களே எதிர்கொள்கின்றனர்: அவர்களது உழைப்பும் நேரமும் சுரண்டப்படுகிறது; அவர்களுடைய சொற்ப உழைப்பும், கடன் சுறாக்களால் உறிஞ்சப்படுகின்றன; அவர்களுடைய குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியவர்களாக அவர்கள் இருக்கின்றனர்; அவர்களுடைய உடல்கள், கட்டுப்பாட்டுக்குள்ளேயே காணப்படுகின்றன. இருந்த போதிலும், தமிழ்த் தலைமைத்துவமும் அ…
-
- 0 replies
- 475 views
-
-
தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது! July 5, 2023 – கருணகரன் – “கரும்பு இனிக்குமா? கசக்குமா?” என்ற விவாதம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சூடுபிடித்துள்ளது. அரசியல், ஊடகப் பரப்புடன் தொடர்ச்சியான அவதானிப்புக் குறைந்தவர்கள், “அதென்ன கரும்புக் கதை?” என்று ஆச்சரியமாகக் கேட்கக் கூடும். அந்தக் கதை இதுதான். வடக்கில் – வவுனியா மாவட்டத்தில் – கரும்பு ஆலையை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதியைக் கேட்டிருக்கிறது வெளிநாட்டு நிறுவனமொன்று. இது நடந்தது 2018 இல். அது நல்லாட்சி அரசாங்கக் காலம். 2018 ஜூலையில் தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்ஓசா, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்தார…
-
- 2 replies
- 475 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் செல்வரட்னம் சிறிதரன் வடமாகாண சபைக்கான தேர்தலில் வாக்களித்துள்ள மக்கள் பல விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அதுகுறித்து அரசியல் விமர்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்த மக்கள் வலியுறுத்தியுள்ள முக்கியமான ஒரு விடயம் உடனடியாகத் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது. அரசாங்கம் கூறுகின்ற அல்லது வலியுறுத்துகின்ற அபிவிருத்தியை இலக்காக வைத்து அவர்கள் வாக்களிக்கவில்லை. வீதிகள் போடவேண்டும் என்றோ, பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றோ, மேலும் பல பகட்டான வசதிகள் வாய்ப்புக்களை வடபகுதிக்குக் கொண்டு வரவேண்டும் என்றோ அவர்கள் கோரவில்லை. அவர்கள் கேட்…
-
- 0 replies
- 475 views
-
-
கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 02:22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கூட்டமைப்போ, அதன் தலைமையோ கிஞ்சித்தும் கவனத்தில் கொண்டதில்லை; எதிர்வினை ஆற்றியதுமில்லை. ஆனால், அண்மையில் கூட்டமைப்பின் உருவாக்கமே விடுதலைப் புலிகளுடனான ‘டீலின்’ அடிப்படையிலானது என்று கே. சயந்தன் தெரிவித்த கருத்தொன்று, யாழ். மய்யவாத அரசியல் அரங்கில், பேசு பொருளாகி இருக்கின்றது. அரசியலில், கூட்டுகளும் கூட்டணிகளும் புரிந்துணர்வு, இணக்கப்பாடு, இலாபம் உ…
-
- 0 replies
- 475 views
-
-
நம்பிக்கை இழந்ததுக்கு என்ன காரணம்? தமிழர் விடுதலை கூட்டணியின்..... திரு. அரவிந்தன்
-
- 0 replies
- 475 views
-
-
பதின்மூன்றை வைத்துச் சுத்துவது? நிலாந்தன். 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி தமிழ் கட்சிகளின் யோசனைகளை கேட்டிருக்கிறார். தமிழ்க்கட்சிகள் தமது யோசனைகளை வழங்கி வருகின்றன. 13ஆவது திருத்தம் எனப்படுவது யாப்பில் இருப்பது, கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக அது யாப்பில் இருந்து வருகிறது, ஆனால் நடைமுறையில் முழுமையாக இல்லை. அதாவது கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்த இலங்கை அரசாங்கங்கள் யாப்பை முழுமையாக அமல்படுத்தவில்லை என்று பொருள். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், கடந்த 36 ஆண்டுகளாக யாப்பு மீறப்பட்டு வந்துள்ளது. இப்பொழுதும் அதை முழுமையாக அமல்படுத்த ஜனாதிபதி தயாரில்லை. போலீஸ் அதிகாரங்களைக் கழித்து விட்டுத்தான் 13ஆவது திரு…
-
- 0 replies
- 475 views
-
-
சமூக செயல்பாட்டாளர் ராகவன் அவர்களுடன் கதைப்பமா ...
-
- 0 replies
- 475 views
-
-
பொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 22 பொதுத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், அந்தத் தேர்தலுக்கான அரங்கு, நாடு பூராகவும் களைகட்டத் தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுகள், வேட்பாளர் தெரிவு இழுபறிகள், சமூக ஊடகங்களில் சண்டை சச்சரவுகள் என்று, ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் அடங்குவதற்குள், மீண்டுமொரு தேர்தல் பரபரப்புக் காட்சிகள். அதுவும், தென் இலங்கையைக் காட்டிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு என்பது, முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு என்பது, அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தல்களில் முதன்மையானது பொதுத் தேர்தலாகும். ஜனாதிபதித்…
-
- 0 replies
- 475 views
-
-
மாற்றுத்தலைமையை ஏற்பாரா விக்னேஸ்வரன்? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-17#page-5
-
- 1 reply
- 475 views
-
-
இன்றைய ஆளும் அதிகாரத்தரப்பில் பதவி வகிக்கும் ஒரு கட்சியின் தலைவர் இந்நாட்டில் தமிழர்களுக்கு எதுவித பிரச்சினைகளும் இல்லை என்பதே தனது கணிப்பு என்று அண்மையில் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின. "இல்லை பிரச்சினைகள் பலவுள்ளன. தீர்க்கப்பட வேண்டிய அவை தீர்க்கப்பட்டாலேயே நாட்டில் சமத்துவம் கட்டிக்காக்கப்படும். தமிழர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். முடிவுகட்டப்பட வேண்டும்' என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துக்காட்டி, தமது நியாயத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்புக்கு உள்ளது. அது தமிழர் தரப்பால் உரியபடி ஆற்றப்படுவதாக இல்லை. இலங்கையின் அரசியலரங்கை ஆராயும்போது, பேரினவாத அரசியல்வாதிகளுக்கும் தமிழரல்லாத மற்றைய சிறுபான்மையினத்து அரசியல்வாதிகளுக்கும…
-
- 0 replies
- 475 views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினை அனைத்துலக நீதியே பிரச்சினைக்கான தீர்வாகும் 38 Views ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 46ஆவது அமர்வு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் ஈழத்தமிழர் அனைத்துலகப் பிரச்சினைக்கு அனைத்துலக நீதி வழங்கு முறைமை எந்த அளவுக்குச் செயற்படுத்தப்படப் போகிறது என்பது உலகெங்கும் உள்ள மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான மக்களதும், அமைப்புக்களதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது சிறீலங்காவில் அரசாங்கம் அனைத்துலக சட்டங்களுக்கு, – மனித உரிமைகள் மரபுசாசனம் உட்பட – தனது ஆட்சிப்பரப்பு எல்லைக்குள் தான் கட்டுப்படப் போவதில்லை என்கிற உறுதியான முடிவில் இறுக்கமாக உள்ளது. அப்படியான…
-
- 0 replies
- 475 views
-
-
கரையேற முடியாத துறைமுகம் - முகம்மது தம்பி மரைக்கார் பொறுமையிழக்கும் நிலையில்தான் போராட்டங்கள் நிகழ்கின்றன. மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபோது, பொறுப்புத்தாரிகளுக்கு எதிராக அவர்கள் வெகுண்டெழுகின்றனர். அநேகமான போராட்டங்கள், நம்பிக்கையிழப்பின் கடைசிப் புள்ளியில்தான் தொடங்குகின்றன. அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, கடந்த 14ஆம் திகதியன்று வீதி மறியல் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். தங்கள் தொழில் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தடையினை நீக்கித் தருமாறு, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை காது கொடுத்து யாரும் கேட்கவில்லை என்கிற கோபமும் ஏமாற்றமும் அவர்களை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளின…
-
- 0 replies
- 475 views
-
-
-
- 0 replies
- 475 views
-
-
13வது திருத்தத்தை தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? December 30, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால் தான் இலங்கையின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை 37 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை. அண்மையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அவருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு புதுடில்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதின்மூன்றாவது திருத்தம் குறித்து எதையும் கூறிப்பிடத் தவறியதை அடுத்து அது குறித்து ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஊடகங்களும் அரசியல் அவதானிக…
-
- 0 replies
- 475 views
-
-
13 படும்பாடு January 25, 2023 ♦️வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கை அரசாங்கத் தலைவர்கள் வழமையாக கூறுகின்ற ஆனால், தவறாமல் மீறி வந்திருக்கின்ற ஒரு உறுதிமொழியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் தைப்பொங்கல் விழாவில் வழங்கியிருந்தார். “அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை ஒரிரு வருடங்களில் கட்டங்கட்டமாக அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும். வடக்கில் மாத்திரமல்ல, தெற்கிலும் முதலமைச்சர்கள் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார்கள்” என்று அவர் கூறினார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு கடந்த மாதம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டிய விக்கிரமசிங்க அதன் முதற்சுற்றையடுத…
-
- 1 reply
- 474 views
-