அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
எதிர்க்கட்சிகள் பதவிக்கு வந்தால் பிரச்சினைகள் தீருமா? எம்.எஸ்.எம். ஐயூப் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, “தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நாம் பொறுப்பல்ல” எனக் கூறினார். அதேவேளை, “இந்த நெருக்கடிகளைத் தோற்றுவித்த காரணிகளில் சில, எமது கட்டுப்பாடுக்கு அப்பாலானவை” என்றும் கூறினார். ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வாக்களித்த மக்களின், அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில், அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதே ஜனாதிபதியின் உரை…
-
- 0 replies
- 455 views
-
-
தந்தை செல்வநாயகம் அவர்களின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது. தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் 'தமிழ்த் தேசிய இனம்' என்ற வார்த்தைப் பிரயோகம், தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில் இருந்தே பாவனையிலிருந்து வருகின்றது. 18.12.1949அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் முதலாவது கூட்டத்தில் கட்சியின் அமைப்புத் தீர்மானத்தை பிரேரித்துப் பேசிய தந்தை செல்வநாயகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''நாட்டின் ஒற்றுமைக்குப் பாதகமற்ற முறையில் இந்த அடிப்படைப் பிரச்சினைகளை நீதியாகவும் ஜனநாயக ரீதியாக…
-
- 0 replies
- 455 views
-
-
ஜனாதிபதியின் அழைப்பும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமும் -நிலாந்தன். October 3, 2021 இது டயாஸ்பொறக்களின் காலம். அதாவது புலம்பெயர்ந்த சமூகங்களின் காலம். அல்லது நாடு கடந்து ஒரு தேசமாக அல்லது தேசத்துக்கு வெளியே ஓர் உளவியல் தேசமாக வாழும் மக்களின் காலம். புலப்பெயர்ச்சி என்பது பொதுவாக இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. முதலாவது போர். இரண்டாவது பொருளாதார காரணங்கள். ஈழத்தமிழர்களின் புலப் பெயற்சி பிரதானமாக இரண்டு அலைகளை கொண்டது. முதலாவது 1983க்கு முந்தியது. பெருமளவிற்கு கல்வி மற்றும் பொருளாதார காரணங்களுக்கானது. இரண்டாவது 83 ஜூலைக்கு பின்னரானது. அது முழுக்க முழுக்க போரின் விளைவு. எனினும் அதற்குள் போரை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு பொருளாதார காரணங்களுக்காக புலம் பெய…
-
- 0 replies
- 455 views
-
-
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இலங்கைத் தீவை நோக்கி விரைந்தன. இறுதியாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைத் தீவுக்கான மூன்று நாள் (நவம்பர் 22-24) பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஆறு தசாப்த காலங்களுக்கு மேற்பட்ட இலங்கையின் இராஜதந்திர உறவுகள் வரலாற்றில், குறுகிய காலப் பகுதிக்குள் (சுமார் பத்து மாதங்கள்) அமெரிக்காவின் அதிஉயர் மட்ட அதிகாரிகள் அதிகமான பயணங்களை இலங்கைத் தீவுக்கு மேற்கொண்டமை இதுவே முதற்தடவை. இது, பூகோள அரசியல் – பொருளாதாரத்தில்…
-
- 0 replies
- 455 views
-
-
இனவாத நிலைப்பாடு நாட்டுக்கு நன்மை தரப் போவதில்லை இனவாத நிலைப்பாடு நாட்டுக்கு நன்மை தரப் போவதில்லை “அரச தலைவர் அவர்களே! மிகச் சிரமமானதொரு வேலையை நாம் மேற்கொண் டோம். ரொட்டி சுடும் கல்லைச் சூடாக்க நாங்கள் வருடக் கணக்கான நாள்களை புகையில் கழித்தோம். அவ்விதம் அந்தக் கல்லை, ரொட்டி சுடுவதற்காகவே நாம் சூடாக்கிக் கொடுத்தோம். ஆனால் தற்போது பார்க்கும்போது அது தீப்பற்றி மூண்டெரிகிறது. நாங்கள் அதனை ரொட்டி சுடுவதற்காகத்தான் தயார் செய்தோம். ஆனால் அந்த ரொட்டி தற்போது கருகிச் சாம்பராகிப் போயுள்ளது.’’ 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம்…
-
- 0 replies
- 455 views
-
-
ஜெனீவாவுக்குப் பின்னரான நெருக்கடிகள் -மொஹமட் பாதுஷா இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை, நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. அரசாங்கம் இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும், இம்முறை ஜெனீவா அமர்வில், ‘பிடி’ இறுகப் போகின்றது என்பது பரவலாகவே எதிர்வுகூறப்பட்ட விடயம்தான். இப்பிரேரணைக்கு 22 நாடுகள் ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன. 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறாமல் செயற்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு, இது நல்லதோர் ஆரம்பப் பாடம் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதேநேரம், இலங்கையர் என்ற அடிப்படையில் நோக்கினால், இது நமக்…
-
- 0 replies
- 455 views
-
-
தொடரும் அக்கறையற்ற போக்கு பி. மாணிக்கவாசகம் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கான கடப்பாட்டை ஏற்றுள்ள அரசாங்கம் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்று பரவலாகக் குறை கூறப்படுகின்றது. சாதாரண குறை கூறுதலாக இல்லாமல், அழுத்தமான குற்றச்சாட்டாகவே அந்த அதிருப்தி முன்வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. பொறுப்புக்கூறும் விடயத்தில் முக்கியமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கடப்பாட்டை நிறைவேற்றுகின்ற பொறுப்பை அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது என்பது முக்கியமானது. இந்தச் சட்டத்தை இல்லாமற் செய்வதற்கு அரசாங்கத்திற்கு…
-
- 0 replies
- 455 views
-
-
அரசியலில் வெகுஜனங்களும் புலமைத்தளமும் -என்.கே. அஷோக்பரன் பிரபல எழுத்தாளரான ஐசக் அசிமொவ், அமெரிக்க ஜனநாயகம் அடைந்து வரும் மாற்றத்தை அவதானித்து, “புலமைத்துவ எதிர்ப்பு என்பது, நமது அரசியல், கலாசாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழ்க்கையில், ஒரு நிலையான அம்சமாக இருந்து வருகிறது. ‘எனது அறியாமையும் உங்கள் அறிவும் ஒன்று’ என்ற தவறான கருத்தியலால், ஜனநாயகம் தவறான வழியில் வளர்க்கப்படுகிறது”என்று கருத்துரைத்திருந்தார். ‘மக்கள் மயப்படுத்துகிறோம்; மக்களிடம் கொண்டு செல்கிறோம்’ என்ற போர்வையில், புலமைத்தளத்தின் பங்களிப்பை நிராகரித்து விட்டு, ஜனநாயகத்தை கொண்டு நடத்துவதானது, தோல்வியிலேயே முடியும். வீதியில் இறங்குவதும், கூச்சல் கூப்பாடு போடுவதும், அதன் மூலம் அரசியல் சாதனைகளைப் பு…
-
- 0 replies
- 455 views
-
-
மசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அதிகாரத்துக்கான ஆடுகளங்கள் தொடர்ந்தும் மாறுவன. மாறுகின்ற உலக ஒழுங்கு புதிய சவால்களை உருவாக்குகின்றது; புதிய அரங்காடிகளைத் தோற்றுவிக்கிறது. புதிய அதிகாரச் சமநிலையும் புதிய கூட்டணிகளும் உருப்பெறுகின்றன. இதன் பின்னணியில், பூகோள அரசியல் அரங்கில், புதிய களங்கள் உருவாகவும் உருவாக்கவும்படுகின்றன. புவியியல்சார் ஆதிக்கத்துக்கான அவா புதிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தோற்றுவிக்கின்றது. அவ்வாறு தோற்றம்பெறுவன அதிகாரத்துக்கான புதிய ஆடுகளமாகின்றன. மசிடோனியாவின் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற வன்முறை, ஊடக…
-
- 0 replies
- 455 views
-
-
தமிழர் தாயகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முத்துக்குமார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தமிழர் தாயகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துச் சென்றுள்ளது. சென்ற தடவை சிங்கக் கொடியேற்றி சிங்கள அரசியலுக்குள் தமிழ்த் தேசிய அரசியலைக் கரைக்கத் தயார் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த அழைத்துச் சென்றனர். சம்பந்தன் ரணிலுடன் சேர்ந்து சிங்கக்கொடியேற்றி கரைக்கும் கைங்கரியத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தடவை தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் ஒரு மீட்பராக ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துச் சென்றனர். இங்கு ஐக்கிய தேசியக் கட்சி தானாகச் செல்லவில்லை. கூட்டமைப்பின் அழைப்பின் பேரிலேயே சென்றது. சம்பந்தன் எதிர்க்கட்சிகளின் கூட்டில் கையொப்பமி…
-
- 0 replies
- 454 views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்த பாதுகாப்புத் துறையின் முன்னாள் செயலர் கோத்தபய ராஜபக்ச அதிபர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார். ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவருடைய உறவுக்கார பெண்மணி, ``எங்களுக்கு கோத்தபய வேண்டும், கோத்தபய வேண்டும்'' என்று முழக்கமிட்டார். இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்த, போர்க்காலத்தில் பாதுகாப்புத் துறையில் செயலராக இருந்த கோத்தபய ராஜபக்சவைதான் அந்தப் பெண்மணி அவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்கள் அவரை வெறுக்கிறார்கள்…
-
- 0 replies
- 454 views
-
-
எல்லோரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நடைபெறவுள்ள தேர்தல், இலங்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற மாயை, ஊடகங்களால் கட்டியெழுப்பபட்டுள்ளது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும், இவ்வாறான ஆலவட்டங்கள் கட்டப்படுவதுண்டு. இறுதியில், எதிர்பார்ப்புகள் காற்றுப்போன பலூன் போலாவதும் பின்னர், அடுத்த தேர்தலில் நம்பிக்கை வைப்பதுமெனத் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலும், அதற்கு விலக்கல்ல. இப்போது எல்லோரின் கவனமும் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், யாருக்கு யார் ஆரவு தருவார்கள் போன்ற கேள்விகளிலேயே குவிந்து…
-
- 0 replies
- 454 views
-
-
புலிகளை வைத்து 'வாக்கு யாசகம்' உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரங்களில் வழக்கம்போலவே, விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை காலமும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தான், விடுதலைப் புலிளையும் அவர்களின் எழுச்சிப் பாடல்களையும் தேர்தல் பிரசாரங்களின் போது பயன்படுத்தி வந்தன. இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட, விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி- அவர்களின் பாடல்களை ஒலிக்க விட்டு வாக்கு கேட்கின்ற நிலைக்கு வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் அற…
-
- 0 replies
- 454 views
-
-
அரசின் மீதான அழுத்தத்தை பயன்படுத்த தவறும் கூட்டமைப்பு நிலைமாறு கால நீதியை நிலைநாட்டி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை அரசாங்கம் உளப்பூர்வமாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வகையில் அரசாங்கம் செயற்படத் தவறியிருக்கின்றது. அதன் காரணமாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அரசு சிக்கல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அங்கு எழுப்பப்படுகின்ற பல்வேறு வினாக்களுக்கு ஆக்கபூர்வமாகப் பதிலளிக்க முடியாமல் தடுமாற நேர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறுவதில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ப…
-
- 0 replies
- 454 views
-
-
கடன் வலை: இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைப்பது சீனாவா? மேற்குலக நாடுகளா? ரங்க சிறிலால் பிபிசி சிங்கள மொழி செய்தியாளர், கொழும்பிலிருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீன் அதிபர் ஷி ஜின்பிங்: கோப்புப்படம் ராஜிய உறவு உலகில் அண்மை காலமாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக ''சீன கடன் பொறி" காணப்படுகின்றது. ''சீனாவின் கடன் பொறியில்" இலங்கை சிக்கியுள்ளதாக பல காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா, கடனை வழங்கி அந்நாடுகளின் பொருளாதார மையங்களை சீனா கையகப்படுத்துவதாக மே…
-
- 0 replies
- 454 views
- 1 follower
-
-
இராணுவத்தினர் மீதான முதலமைச்சரின் குற்றச்சாட்டும் யதார்த்த நிலையும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினரின் ஆதிக்கம் தொடர்ந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். படையினர் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும் வியாபார செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. அப்பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான பெருமளவான நிலங்களில் படையினர் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன் ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இராணுவத்தினரின் இத்த…
-
- 0 replies
- 454 views
-
-
கிழக்கு மாகாணத் தேர்தலை நோக்கிய சம்பந்தனின் நகர்வு இணைந்த வடக்கு, கிழக்கில் படித்த, பக்குவமான முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக, இரா.சம்பந்தன் மீண்டும் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மன்னாரில் இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவது தொடர்பில் மூத்த அரசியல் தலைவராக சம்பந்தன், கடந்த காலங்களிலும் அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். குறிப்பாக, கடந்த (2012) கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர், எந்த…
-
- 0 replies
- 454 views
-
-
அழைத்து வந்தவர்கள் அணைத்துச் சென்றால் என்ன? இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, இடர்பாடுகள் பலவற்றுக்கு மத்தியில், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் ஊடாக, மாகாண சபை முறைமையிலான அரசியல் பொ(றி)தி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் மக்களது அபிலாஷைகளுக்கு (யானைப்பசிக்கு) சோளப்பொரி போட்டது போலவே, தீர்வு அமைந்தது. ஆனாலும், பிராந்திய வல்லரசின் சொல்லுக்கும் செயலுக்கும் மறுப்புத் தெரிவிக்க முடியாத நிலை, இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தரப்புக்கும் ஏற்பட்டது. மாகாண சபை முறைமையில் பல குறைகள் காணப்பட்டாலும் வடக்கு, கிழக்கு இணைந்த ஆட்சிமுறை, பெரு…
-
- 0 replies
- 454 views
-
-
ஒரு அரசியல்வாதியின் தகுதியை தீர்மானிப்பது யார்? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்தொன்று, அவரது தகுதியை, அவரே பரிகசிப்பதாக அமைந்திருந்தது. தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடக்கு மகாண முதலமைச்சராவதற்கு தகுதியற்றவர் என்றும் – அவர் தகுதியற்றவர் என்பதால்தான், இரா.சம்பந்தன் தன்னை தெரிவு செய்ததாகவும், விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். விக்கினேஸ்வரனின் மேற்படி அபிப்பிராயம், அவரை தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலேயே விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. பொதுவாக விக…
-
- 0 replies
- 454 views
-
-
இலங்கை மீது குவிகிறதா ட்ரம்பின் கவனம்? அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப், கடந்த 20ஆம் திகதி பதவியேற்ற போது, அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றது. டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்வு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்பது போலவே, யுஎஸ்எஸ்.ஹொப்பரின் இந்தப் பயணமும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று தான். அமெரிக்காவில் ஜனாதிபதி ஒருவர் பதவியேற்கின்ற போது, கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று தரித்து நின்ற முதல் நிகழ்வாக இது அமைந்திருந்தது. இலங்கைக்கும் அமெரிக்காவு…
-
- 0 replies
- 454 views
-
-
வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? 2013ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட தற்போதைய வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடியவுள்ள நிலையில் அடுத்த மாகாண சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் மீது அனைவரதும் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிந்து விட்ட நிலையிலும், அவற்றுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை திருத்தும் யோசனை பாராளுமன்றத்தில் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் அதனை முன்னெடுப்பதா, இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் வரும் ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாண சபையின் ஆயுள் முடிந்த பின்னர் உடனடியாக அதற்குத் தேர்தல் நடத்துவதற்கான…
-
- 0 replies
- 454 views
-
-
சீனா: பொருளாதார அரசியலும் மேலாதிக்க விஸ்தரிப்பும்! பகுதி 1 கொரோனா நெருக்கடி என்பது இந்த நூற்றாண்டின் முதலாவது உலகளாவிய பேரிடர். இதற்கு முந்தைய உலகளாவிய நெருக்கடிகள் என இரண்டு உலகப்போர்களும் கணிப்பிடப்படக்கூடியவை. இன்னொரு வகையில் சொல்வதானால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குள் மூன்று நெருக்கடிகள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உயிரழிவுகள், பொருளாதார வீழ்ச்சி சார்ந்தவற்றைப் பொதுவான பாதிப்புகளாகச் சுட்டமுடியும். தவிர உலகமயமாக்கலின் தன்மைகள், உலக அமைதிக்குப் பங்கம், நாடுகளுக்கிடையிலான உறவுகளில் இந்நெருக்கடிகள் விளைவுகளை ஏற்படுத்தின. புதிய இயல்பு அல்லது புதிய வழமை கொரோனா நெருக்கடியின் விளைவுகள் உலகளாவிய மாற்றத்திற்குரிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.…
-
- 0 replies
- 454 views
-
-
கேழ்வியும் பதிலும்..SA Jothi to Jaya Palan கூட்டமைப்புக்கு சொந்தமாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இருக்கிறதா?ஜெயபாலன்..Jaya Palan to SA Jothi ஒரு நாய் யாருக்கு வாலாட்டுகிறது என்பது முக்கியமல்ல நண்பா அது தன் எசமானை காப்பற்றுதா என்பதுதான் முக்கியம். எங்கள் நாயகர்கள் உலகம் முழுக்க வாலாட்டியும் எங்கள் எசமான்கள் இன்னும் கொடுஞ்சிறையில். இனியும் பட முடியாது இத்துயரம்.
-
- 0 replies
- 454 views
-
-
என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- நம் கிராமங்களையும் நகரங்களையும் மறுவரையறுப்போம் உலகின் பழமையான விவாதம் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெறுகிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீடித்த நிம்மதியான வாழ்க்கைக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ் பாவ்லோ, மும்பை என்று மனித குலம் நம்பும் கனவு நகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்காகி இருப்பதும், நகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்கள் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற ஆர்வத்தோடு இருப்பதாகச் சொல்கிறார்கள். குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து விளிம்புக்கு, புற…
-
- 0 replies
- 454 views
-
-
ஜப்பானைத் தனிமைப்படுத்தும் சிங்கப்பூர் சந்திப்பு - ஜனகன் முத்துக்குமார் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான அண்மைக்காலத்து சமாதான இணக்கப்பாடுகளைத் தொடர்ந்து, வடகொரியத் தலைவருக்கும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறவிருக்கும் நிலையில், குறித்த இரண்டு விடயங்களிலும் தனது பங்கு இல்லாமல் போனமை குறித்து, ஜப்பான் கவலை தெரிவித்துள்ளமை, சர்வதேச விவகாரங்களில் மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்பட வேண்டியதாகவும். தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கருத்துத் தெரிவித்த ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, ஐ.அமெரிக்க - வடகொரிய பேச்சுவார…
-
- 0 replies
- 454 views
-