அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
கோட்டாபயவின் வருகையும் ராஜபக்சாக்களின் எதிர்கால அரசியலும் September 10, 2022 —- ஸ்பார்ட்டகஸ் —- இலங்கையின் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் கடந்த ஜூலை 13 நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சரியாக 50 நாட்களுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை (செப்.2) இரவு திரும்பிவந்திருக்கிறார். தவறான ஆட்சியைச் செய்த அவரை மக்கள் ‘வீட்டுக்கு போ’ என்றுதான் கேட்டார்கள்; நாட்டைவிட்டு போகுமாறு கேட்கவில்லை. ஆனால், போருக்கு முடிவுகட்டி மக்களை பாதுகாப்பாக வாழ வழிவகுத்ததாக எப்போதும் பெருமையுடன் உரிமை கோரும் அவர் நாட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லையென்று உணர்ந்து நாட்டில் இருந்து வெளியேறினார். முதலில் மாலைதீவுக்கும் பிறகு சிங…
-
- 0 replies
- 260 views
-
-
கொலனித்துவ கால பீரங்கிகளும், யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கியும் – ஒரு வரலாறு திருகோணமலையில் உள்ள ஒஸ்ரென்பேர்க் கோட்டையானது வாய்திறந்து பேசுமேயானால், அது தான் இழந்து நிற்கும் தனது புகழைப் பற்றி பெருமையுடன் பேசும். அதாவது இங்கு இடம்பெற்ற போர்கள் மற்றும் இங்கிருந்து சுடப்பட்ட பீரங்கிகள் (கனோன்கள்) போன்றவற்றுக்கு இந்தக் கோட்டை சாட்சியமாக உள்ளது. இலங்கையை தமது கொலனித்துவத்தின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள் மற்றும் பிரித்தானியர்கள் தமது கொலனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கரையோரப் பாதுகாப்பை விட்டுக்கொடுக்கவில்லை. இதற்காக பல கோட்டைகளை இவர்கள் உருவாக்கினார்கள். இங்கு வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பீரங்கிகள் நிறுத்தி வைக்கப…
-
- 0 replies
- 582 views
-
-
'டம்மியை' நிறுத்துவாரா : மஹிந்த? -சத்ரியன் முதலில் கோத்தாபய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ ஆகியோரின் பெயர்கள் தான் அடிபட்டன. இவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அதேவேளை இப்போது ராஜபக் ஷ சகோதரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது, நிச்சயம் நாமல் தான் வேட்பாளர், பொறுத்திருந்து பாருங்கள் என்று ஊவா முதலமைச்சர் சாமர தசநாயக்க புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் டம்மியாக ஒருவரை நிறுத்தி வெற்றி பெற வைத்த பின்னர், அவரைப் பதவி விலகச் செய்து, ஜனாதிபதி ஆசனத்தில் மஹிந்தவினால் அமர முடியும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 526 views
-
-
அடுத்த முதலமைச்சராகவும் விக்னேஸ்வரன் வரவேண்டுமா? ‘வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சருக்கான விண்ணப்பம் மக்களினால் கோரப்பட்டுள்ளது. அடிப்படைத் தகுதி: அரச உயர் பதவி ஒன்றில் இருந்து ஓய்வு பெற்றவர் விரும்பத்தக்கது. தமது பதவிக்காலத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காதவர்கள், அரச இயந்திரத்திற்கு ஒத்து ஊதியவர்கள் விரும்பத்தக்கது. இவர்கள் பிறந்தது, கல்வி கற்றது மற்றும் நிரந்தர வசிப்பிடம் வடக்கு மாகாணத்தின் எப்பகுதியிலாயினும் இருத்தல் ஆகாது. இவரிற்கு கடந்த காலங்களில் பங்கர் வெட்டுதல், ஊர்வலங்கள், இடப் பெயர்வுகள், பாண், அரிசி என்பவற்றிற்கு வரிசையில் நின்றிருத்தல், சைக்கிளில் பயணம் செய்திருத்தல், மண்ணெண்ணெய் மற்றும் செக்கில் ஊற்றிய தேங்காய் எண்ணெயில் கல்வி …
-
- 0 replies
- 606 views
-
-
தேர்தலில் தாக்கத்தை செலுத்துமா முதலமைச்சரின் லண்டன் உரை? நிர்மானுசன் பாலசுந்தரம் படம் | TAMIL DIPLOMAT திம்புக் கோட்பாடு வெளிவந்து கடந்த ஜூலை 13ஆம் திகதியோடு முப்பது வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி, தமிழின அழிப்பின் ஒரு முக்கிய அங்கமான கறுப்பு யூலையின் முப்பத்தியிரண்டாவது ஆண்டு நினைவு. ஜூலை 29ஆம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருபத்தெட்டு வருடங்கள் நிறைவடைகிறது. இதேவேளை, ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இலங்கைத் தீவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் தமிழர் தேசத்துக்கும் தென்னிலங்கைக்கும் முக்கியமான ஒரு தேர்தலாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரியணையேறுவாரா? இலங்கை சுதந்திரக் கட்சி பலவீனமடையுமா? …
-
- 0 replies
- 242 views
-
-
மே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல் North East Coordinating Commitee on May 22, 2019 இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும் விமானக் குண்டு வீச்சுக்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தினமும் ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அவர்கள் அனைவர…
-
- 0 replies
- 813 views
-
-
மதில் மேற்பூனையின் வேடிக்கை Editorial / 2019 ஜூன் 06 வியாழக்கிழமை, மு.ப. 02:20 Comments - 0 -இலட்சுமணன் மீண்டும் ஒரு முறை, பேரினவாத நிகழ்ச்சி நிரல் நிறைவேறி இருக்கிறது. இந்தப் பேரினவாதத்துக்கு எதிரான நகர்வுகளுக்கான கோரிக்கைகள் வந்த வண்ணமிருந்தாலும் மிக வன்மையான கண்டனங்களும் பலபக்கங்களில் இருந்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட்டாக முன்னெடுத்த அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர் ஆகிய அமைச்சுகளிலிருந்து இராஜினாமாச் செய்தமை, சிறந்த இராஜதந்திர அணுகுமுறையாகப் பேசப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் எதிரொலி, இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் நிறைவேறியதோ இல்லையோ, எந்த ஒரு முஸ்லிம் அரசிய…
-
- 0 replies
- 466 views
-
-
மே 17 - கடக்க முடியா நிழல் அக்கினி துக்கத்தின் நினைவுகளைக் கடந்து செல்வது கடினம். மீள மீள வரும் 'அழியா நினைவுகள்' அவை. ஏனெனில் அவை 'மரண நனவுகள்'. பசியோடிருந்த வயிறுகளை, மரணக்குழியில் வீழ்ந்து கொண்டிருந்த கணங்களை, முடிவேயற்றிருந்த சாவோலத்தை, பார்த்துக்கொண்டிருக்கும்போதே வீழ்ந்து கொண்டிருந்த உயிர்களை, நம்பிக்கையூட்டுவதற்கு எந்த வார்த்தைகளுமே இல்லாதிருந்த கையறு நிலையை எந்த நிலையில் மறக்க முடியும்? மனித வரலாற்றில் இத்தகைய சிலுவையேற்றம் எத்தனை தடவை நடந்தாலும் இன்னும் முடியாத அவல நாடகம் அதிகார வெறியும் ஒடுக்குமுறையும். மனித மனம் உண்மையில் அத்தனை குரூரமானதுதானா? சட்டங்களும் அறமும் விழுமியங்களும் நீதியும் அன்பும் கருணையும் நம்பி…
-
- 0 replies
- 541 views
-
-
2025: தமிழ் மக்களின் ஆண்டுப் பலன்? - நிலாந்தன் adminJanuary 5, 2025 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ்ப் புத்திஜீவிகளில் சிலர் தமிழ்க் கிராம மட்டத்தில் விவசாய அமைப்புகளைச் சந்தித்து, விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் கடற் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரன் தமிழ்ப் பகுதிகளில் கடல் தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் பிடியைப் பலப்படுத்தி வருகிறார். கடந்த மாத இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தில், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான மற்றொரு குடிமக்கள் அமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. “மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம்” என்று அழைக்கப்பட்ட அந்த அமைப்பை “மாற்றத்துக்கான மக்கள் அமைப்பு” என்று சம்பந்தப…
-
- 0 replies
- 355 views
-
-
03 Aug, 2025 | 11:44 AM ஆர்.ராம் இந்திய எதிர்ப்புவாதத்துக்கு முன்னதாக ஜே.வி.பி. தமிழ் மக்களின் சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நிராகரித்துள்ளதோடு அதனை தொடர்ச்சியாகவும் பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பட்ட இராஜதந்திரியான கலாநிதி. தயான் ஜயத்திலக்க கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் பிற்போக்குத்தனமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்பின்னர் 1983ஜுலைக்குப் பின்னர் தெற்கு நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய ஒன்றோடொன்று இணைந்த ஆனால் வேறுபடுத்தக்கூடிய இரண்டு அரசியல் நிகழ்வுகள் இருந்தன. ஆதிலொன்ற…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
அமெரிக்க - தலிபான் சமாதான உடன்படிக்கை: ஆப்கானில் அமைதி? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மாதானம் ஏன் வருகிறது, யாருக்காக வருகிறது என்பது தெரியமுதலே சமாதான உடன்படிக்கைகள் கையொப்பமிடப்படுகின்றன. அதில் மக்கள் பங்காளிகளாவதும் இல்லை; அவர்கள் நலன்கள் பிரதிபலிக்கப்படுவதும் இல்லை. ஒரு யுத்தக் களத்தில் சமாதான உடன்படிக்கை, அமைதி, ஆரவாரம், பரிசுகள் என எதிர்பார்ப்புகளோடு விடிகிறது ஆப்கானியப் பொழுதுகள். கடந்தவாரம் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது. ஆப்கானுக்கு அமைதி திரும்புமா என்பதே எல்லோரினதும் கேள்வியாகும். ஆப்கானின் வரலாறு, பிராந்திய நலன்களாலும் பேராசைகளாலும் ஆதிக்க…
-
- 0 replies
- 288 views
-
-
யாரை நோக்கியது மைத்திரியின் நல்லிணக்க உரையாடல்? முரண்பாடுகளின் அனைத்து வடிவ இடர்பாடுகளையும் அழிவினையும் சந்தித்து நிற்கின்ற நாடொன்றின் முன்னோக்கிய பயணம், நீதி பரிபாலனம், பரஸ்பர நம்பிக்கை உள்ளிட்டவற்றினூடு கட்டமைக்கப்படும் நல்லிணக்கத்தினூடே சாத்தியமாகும். சுதந்திர இலங்கைக்கான பேச்சுக்கள் ஆரம்பித்த காலத்தில் தோற்றம் பெற்ற அரசியல் பிரச்சினைகளும் அது ஏற்படுத்திவிட்ட இனமுரண்பாடுகளும், இலங்கையை இன - மத- பிராந்திய ரீதியாகப் பிளவுபடுத்தி விட்டிருக்கிறது. அதுவே, பெரும் ஆயுத மோதல்கள் தோன்றுவதற்கும் காரணமாகியது. ஆயுத மோதல்களின் பெரும் அழிவுகளை எதிர்கொண்டு அல்லாடுகின்ற நாடொன்றின் முன்னோக்கிய பயணம் தொடர்பில், பாதிக்கப்பட்டவர்களும…
-
- 0 replies
- 401 views
-
-
இலங்கைத் தீவின் விதி நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய ‘எதிர்ப்பு வெளி” எனப்படுவதும் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனப்படுவது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தூலமான இருப்பைக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளாத அரசுக்கு எதிரான எல்லா சக்திகளுக்கும் அது ஒரு தூலமான, திட்டவட்டமான முன்னுதாரணமாகக் காணப்பட்டது. ஆனால், அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டபோது, அப்படிப்பட்ட ஓர் இயக்கமே தோற்கடிக்கப்படலாம் எனில் மற்றவை எல்லாம் எம்மாத்திரம் என்றதொரு நிலை தோன்றிவிட்டது. யுத்தத்தில் வெற்றிபெறுவதற்காக அரசாங்கம் ம…
-
- 0 replies
- 631 views
-
-
குளப்பிட்டிச் சம்பவம் -மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள் – நிலாந்தன் குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்;டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல. வானத்துக்கும் தரையில் மோட்டார்சைக்கிளில் சென்றவர்களுக்கிடையில் வித்தியாசம் தெரியாத மனோநிலையும் வெற்றிடத்திலிருந்து வந்ததல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கைத் தீவில் சுமார் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக நிலவி வந்த மிகக் குரூரமான ஒரு பாரம்பரியத்திலிருந்து உற்பத்தியாகிய ஒரு மனோநிலை அது. கடைசிக் கட்டப் போரில் நீரிலிருந்து…
-
- 0 replies
- 360 views
-
-
மாகாண சபைகள் விடயத்தில் இந்தியாவை நம்பி இருக்கலாமா? -எம்.எஸ்.எம். ஐயூப் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு, சிறுபான்மை மக்களைச் சீண்டாமல் இருக்கவே முடியாது. பெரும்பான்மை மக்கள் மத்தியில், தமக்கு இருக்கும் ஆதரவை, சரியாமல் தக்கவைத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை. கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வது, அதில் ஒரு முக்கிய அம்சமாகும். இப்போது உள்நாட்டில், பொதுஜன பெரமுன தவிர, ஏனைய சகல அரசியல் கட்சிகளும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருக்கும் இடதுசாரிக் கட்சிகளும் மருத்துவ சங்கங்களும், சீனா தவிர்ந்த ஏனைய சகல நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும் என, முழு உலகமுமே பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கொள்கை…
-
- 0 replies
- 489 views
-
-
2017 தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் என்ன?
-
- 0 replies
- 382 views
-
-
ஜெனீவாவில் மூளை சலவை செய்யப்பட்ட சர்வதேச சமூகம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை பற்றிய முடிவுகள், கால அவகாசம், சர்வதேச விசாரணை என்ற விவகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாரிய நெருக்கடிகளையும் விரிசல்களையும் முரண்பட்ட போக்குகளையும் உருவாக்கும் நிலையொன்று உருவாகியிருப்பதைக் காணமுடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது போருக்கு பின்னுள்ள நிலைமைகளில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுக்காணப்பட்டு வருகிறது என்பதை நிகழ்காலப் போக்குகளிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக சர்வதேச நாடுகள், சர்வதேச சமூகம் மற்றும் …
-
- 0 replies
- 552 views
-
-
தனது தாயாரின் நிலத்திலுள்ள தோட்டத்தில் பிளாஸ்ரிக் கதிரையொன்றில் ஜெனரல் அமர்ந்திருந்தார். இலங்கையைச் சேர்ந்த அமைதிகாக்கும் படைவீரர் ஒருவர் ஹெய்ட்டியைச் சேர்ந்த பதின்ம பராயத்தர் ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கதைத்தார். அங்கு வல்லுறவு இடம்பெறவில்லையென மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வலியுறுத்திக் கூறினார். 2013 சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஹெய்ட்டிக்கு அவர் அனுப்பப்பட்டிருந்தார். அந்தப் பணிக்கு அவர் சில சமயங்களில் சிறப்பான தெரிவாக அமைந்திருக்க முடியாது. உள்நாட்டு யுத்தத்தின் போது அவரின் சொந்த நாட்டில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்காக டயஸ் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. டயஸ் குற்றஞ்சாட்டியவருடன் கதைத்திருக்கவில்லை. அத்துடன…
-
- 0 replies
- 924 views
-
-
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போராட்டக்காரர்கள் பிடியில் ஜனாதிபதி செயலகம். சுதந்திர இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ராஜினாமா கடிதத்தை நேற்றைய தினம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்திருந்தார். இலங்…
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
இனத்தின் பயணம் வெற்றி அடைய நிதானித்த செயற்பாடு அவசியம் இனத்தின் பயணம் வெற்றி அடைய நிதானித்த செயற்பாடு அவசியம் மழை ஆரம்பித்துவிட்டால் காளான்கள் முளைக்கும். தேர்தல் ஆரம்பித்துவிட்டால் கட்சிகள் முளைக்கும். இது புதிதுமல்ல; புதினமுமல்ல. உலகின் எந்தவொரு நாட்டிலும் , சிறுபான்மையினத்தை பெரும்பான்மை இனம் நசுக்குவது என்பது வரலாற்றுப் பதிவுகளாகும். தேர்தல் காலங்களில், மேடைகளில் பீரங்கிப் பரப்புரைகளால் கிடைப்பது கொக…
-
- 0 replies
- 387 views
-
-
பேரினவாத கட்சிகளால் உருவாகின்றது பேராபத்து!! பேரினவாத கட்சிகளால் உருவாகின்றது பேராபத்து!! தமிழ் மக்களை வளைத்துப் போடுகின்ற முயற்சிகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தமிழர்களிடையே ஊடுருவியுள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியும் அந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. …
-
- 0 replies
- 433 views
-
-
கவனத்தில் கொள்ளவேண்டிய சர்வதேச சமூகத்தின் புதிய அணுகுமுறை காணாமல்போனோர் தொடர்பில் விசாரித்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து மந்தகதியில் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது சர்வதேசம் அதிகளவில் பேச ஆரம்பித்திருக்கிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை, புலம்பெயர் அமைப்புக்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புக்களும் இந்தக் காணாமல்போனோர் விவகாரத்திற்கு தீர்வு காணவேண்டுமென மிகவும் வலுவாக வலியுறுத்த ஆரம்பித்திருக்கின்றன. கடந்த காலம் முழுவதும் இவ்வாறு சர்வதேச சமூகம் காணாமல்போனோர் விவகா…
-
- 0 replies
- 418 views
-
-
பிரபாகரனை உயிர்ப்பித்தல் எனும் பித்தலாட்டம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறார். நீண்ட காலமாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நெடுமாறன், பொது நிகழ்வுகளில் பெரிதாக பங்கேற்பதில்லை. கடந்த திங்கட்கிழமை (13) தஞ்சாவூரில் அமைந்திருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர், பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வெளிப்படுத்தினார். இதன்போது, அவருக்கு அருகில் காசி ஆனந்தனும் அமர்ந்திருந்தார். தலைவர் பிரபாகரனின் மனைவி என்று, முகத்தை மூடி முக்காடு அணிந்த பெண்ணொருவரை அறிமுகப்படுத்தி, அண்மையில் சுவிஸில் …
-
- 0 replies
- 590 views
-
-
அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த ஒசாமா? பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை. பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார். 1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார். 1984 -தனது உல்லாச விடுதியை அமைத்து, (பாகிஸ்தான் எல்லை) அங்கிருந்து தன் கண்காணிப்புகளை ஆரம்பித்தார். ஆப்கானில் தனது முகாம்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர்களின் அரசியல் உரிமை நீக்கமும் சர்வதேச முதலீட்டாளர்களை அழைக்கும் உத்தியும் -பிராந்தியப் பாதுகாப்பை மையப்படுத்தி அமெரிக்க – இந்திய மற்றும் அவுஸ்தி ரேலிய அரசுகளுக்கு ரணிலின் அணுகுமுறை கோபத்தை ஏற்படுத்தினாலும் அதனை வர்த்தகச் செயற்பாடுகள் அல்லது கடன் திட்டங்கள், நிதி நன்கொடைகள் மூலம் இலங்கையை தமக்குரிய வாறு மாற்றிவிடும் வாய்ப்புகள் உண்டு- அ.நிக்ஸன்- சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகள் பெற்றுள்ள நிலையிலும், மேலும் கடனுதவிகளை எதிர்பார்க்கும் பின்னணியிலும் இலங்கை தமது வர்த்தகச் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டங்களை வகுத்து வருகின்றது. ஜெனீவா மணித உரிமைச் சபையில் இலங்கை குறித்த த…
-
- 0 replies
- 425 views
-