Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளா…

  2. தமிழ் - முஸ்லிம் உறவின் எதிர்காலம் போருக்குப் பின்னரான இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் பகைமறத்தல் பற்றியெல்லாம் பேசப்பட்டு வருகின்றது. சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் ஓர் ஆணைக்குழுவை நியமித்தது. இனங்களுக்கு இடையில் உறவைப் பலப்படுத்தும் விதத்தில் அமைச்சுளை உருவாக்கியது; அதிகாரிகளை நியமித்தது. இருப்பினும் நல்லிணக்கம் என்பது எதிர்பார்த்த அளவு ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். குறிப்பாக, நாட்டில் வாழ்கின்ற இரு சிறுபான்மை இனங்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சீர்குலைந்துள்ள உறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இவ்வி…

  3. ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர்- மல்கம் ரஞ்சித் ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்க எவ்வாறு திட்டமிடப்பட்டது தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் எவ்வாறு தடுக்கப்பட்டனர் என்பது உட்பட பல விடயங்கள் விரைவில் தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார். உண்மை வெளிவருவதை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஆண்டவன் உண்மையை வெளிப்படுத்துவதை எவராலும் தடுக்க முடியாது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில சக…

    • 0 replies
    • 304 views
  4. குடும்ப அரசியலின் புதிய பரிமாணங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 03 சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையில், அரசியல் கட்சிகளிடையே குடும்ப அரசியல் தவிர்க்கவியலாத ஒன்றாகியது. 1970களின் பின்னர், அது புதிய கட்டத்தை அடைந்தது. 1970களில் ஐக்கிய தேசிய கட்சியிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் இதேவகையிலான குடும்ப அரசியல், வெவ்வேறு வழிகளில் செல்வாக்குச் செலுத்தியது. இவை, இவ்விரு கட்சிகளின் இருப்புக்குமே ஆப்பு வைக்கும் நிலைக்கு, இறுதியில் சென்றுள்ளதை தற்போதைய அரசியல் நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன. சுதந்திரத்துக்குப் பிந்தைய ஏழு தசாப்தகால தேர்தல் அரசியலில், இருபெரும் மையங்களாக நிலைபெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா …

  5. கடந்து செல்லும் கொந்தளிப்பான ஆண்டு - நிலாந்தன் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் பல மாற்றங்கள் ஒன்றாக நிகழ்ந்து மிகக் கொந்தளிப்பான ஒரு ஆண்டு நம்மைக் கடந்து போகிறது. இந்த ஆண்டில்தான் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முப்பொழுதும் ஏற்பட்டிராத ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு எதிராக சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். அரகலய என்று அழைக்கப்பட்ட அப்போராட்டமானது உலகத்தின் கவனத்தை ஈர்க்குமளவுக்கு படைப்புத்திறன் மிக்கதாக காணப்பட்டது. போரை வெற்றி கொண்ட ஒரு குடும்பம் நாட்டின் கருவூலத்தை திருடிவிட்டது என்று சிங்கள மக்கள் குற்றம்சாட்டினார். போராட்டத்தை ஒடுக்குவதற்கு அக்…

  6. அதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆயினும் இல்லாமல் செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, பயங்கரவாதம் தலையெடுக்கின்றது. நாட்டில் பிரிவினைவாதம் உயிர்த்தெழுகின்றது என அச்சமூட்டி அரசியல் செய்கின்ற மோசமான அரசியல் பிற்போக்கு இப்போது தீவிரமடைந்திருக்கின்றது. குறிப்பாக ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஊழல்களை ஒழித்து, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், குடும்ப அரசியல…

  7. அமெரிக்காவை தனிமைப்படுத்தும் ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு - ஜனகன் முத்துக்குமார் கடந்த ஏழு தசாப்தங்களாக, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான செயற்பாடுகளை ஐக்கிய அமெரிக்காவே வகித்திருந்துள்ளது. அமெரிக்காவின் வழமையான இராணுவ வல்லமை மற்றும் கட்டமைப்பு, அணுசக்தி ஆயுதங்கள், மற்றும் அத்லாண்டிக் சமுத்திரத்தை சூழவும் அமைத்துக் கொண்ட இராணுவத் தளங்கள் மூலம் குறித்த பாதுகாப்புக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு உத்தரவாதமானது பெரும்பாலும் வொஷிங்டனுக்கும் இலண்டனுக்கும் இடையேயான உறவின் அடிப்படையில், குறிப்பாக 1949இல் நேட்டோவை உருவாக்குவதன் மூலம் தீர்மானிக்கப்பட்டத…

  8. சீனா – மஹிந்த கடன் பொறி சீனா­விடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொண்­ட­தாகக் கூறப்­படும் நிதி, என்­பது மிகவும் மோச­மான அர­சியல் நடத்­தை­யா­கவே பார்க்­கப்­படும். இதற்கு எதி­ராக, பொலிஸில் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்ட விசா­ர­ணை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விவ­காரம் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சி­னை­யாக மாற்­றப்­படும் வாய்ப்­புகள் உள்­ளன. இதனால் தான், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்த விவ­கா­ரத்தில் இருந்து தப்­பிக்க முடி­யாமல் திண்­டா­டு­கி­றது அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா எவ்­வாறு பெற்றுக் கொண்­டது? என்­பதை விவ­ரிக்கும் வகையில், நியூயோர்க் டைம்ஸ் கடந்த மாத இறுதி வாரத்தில் வெளி­யிட்ட கட…

  9. சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா? - யதீந்திரா படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில் கூட்டமைப்பிற்குள் என்னதான் நடைபெறுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு ஒரே புதிராக இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் கூட்டமைப்பு ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் இயங்கவில்லை என்பதை காணலாம். அண்மைக்காலமாக கூட்டமைப்பின் சார்பில் வெளிவரும் அறிக்கைகள் மேற்படி நிலைமையை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றன. …

  10. இலங்கை அரசியல் இனவாதத்தில் இருந்து மீளாதா? September 11, 2023 — கருணாகரன் — “இலங்கை அரசியல் இனவாதத்திலிருந்தும் இன அடையாளத்திலிருந்தும் மீளாதா? இனப்பிரச்சினைக்கு முடிவு வராதா? தீர்வு கிடைக்காதா? இனவெறிக் கூச்சல்கள் அடங்காதா…” என்று புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்த ஒரு இளைஞர் சில நாட்களுக்கு முன்பு கேட்டார். அவருடைய கண்களில் பெரிய ஏக்கம் நிறைந்திருந்தது. அவர் காண விரும்புவது வேறொரு இலங்கையை. வேறொரு அரசியற் களத்தையும் அரசியல் பண்பாட்டையும். இன சமத்துவமும் பல்லினத்தன்மைக்குரிய இடமும் ஐக்கியமும் அமைதியும் தேசத்தின் மீதான அக்கறையும் கொண்ட சூழலை அவர் விரும்புகிறார் என்பதை அவருடன் தொடர்ந்த உரையாடலின்போது உணர்ந்தேன். “உலகம் எப்படி மாறிக் கொண்டுள்…

  11. "வீச்சு" : The Reach !!! அதிகாரப்பகிர்வை நிராகரித்த கோட்டாபய ராஜபக்சவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70 ஆம் ஆண்டும். கருத்தாளர்கள் : பொன் பாலராஜன் நிக்ஸன் அமிர்தநாயகம் நெறியாளர் : உதயன் S. பிள்ளை

  12. ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம் September 7, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்த தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால், இலங்கைக்கு சொந்தமான ஒரு நிலப்பரப்புக்கு அதன் ஜனாதிபதி செய்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர உரையாடல்களில் ஒரு பேசுபொருளாக கச்சதீவை மாற்றியிருக்கிறது. இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால், இந்திய அரசியல் அரங்கி…

  13. காணாமற் போனோர் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவினால் கடந்த வாரம் விடுக்கப்பட்ட அறிக்கையானது போர்க் காலத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்ஸ்வெல்லின் அறிக்கையானது மனித உரிமை அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் கொத்தணிக் குண்டுகள் குற்றச்சாட்டு தொடர்பான மக்ஸ்வெல்லின் கருத்தானது ‘இவரது அதிமேதவித்தனத்தையே’ காண்பிப்பதாக வெளிவிவகார அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார். 2010 இற்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தவறல்…

  14. கஜனின் உரை: ஓரு இனமாகத் திரள்வது? http://www.nillanthan.com/wp-content/uploads/2020/12/Kajan-copy-2.jpg நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார் ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேச…

  15. ஒன்றிணைத்துப் பாதுகாப்பதே தலைமைத்துவம் இலக்கு மின்னிதழ் 141 இற்கான ஆசிரியர் தலையங்கம் சிறீலங்காவில் ஈழத் தமிழினத்தின் இருப்பையும், அடையாளத்தையும் இல்லாது ஒழிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் 1921 முதல் கடந்த ஒரு நூற்றாண்டாக தமது அரசியற் செயற் திட்டமாக முன்னெடுத்து வருகின்றன. பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் 1921இல் சட்டநிரூபண சபையில் சிங்களப் பெரும்பான்மை வழி சட்டவாக்கங்கள் நடைபெறுவதற்கு வழி செய்த ‘மன்னிங்’ அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக தமிழர்களுக்குத் தங்களது தாயகத்தில் தங்களது இறைமையை சிங்களவர்கள் மேலாண்மை செய்யும் நிலை வளரத் தொடங்கியது. நூறு ஆண்டுகளாக இலங்கையில் வாழ்விடம் கொண்ட ம…

  16. ஜெனீவா அமர்வுக்கு முதல் நாள் அநுராதபுரம் சிறைச்சாலையில் நடந்ததென்ன? –போர்க்குற்ற விசாரணையைத்தான் உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்களை ஜெனீவா நம்புகின்றது– நம்புவதுபோலக் காண்பித்துச் சேர்ந்து விளையாடுவது போலவும் தெரிகிறது. அதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் உடந்தையாகின்றன — -அ.நிக்ஸன்- வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது…

  17. ஜனாதிபதியின் அழைப்பும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமும் -நிலாந்தன். October 3, 2021 இது டயாஸ்பொறக்களின் காலம். அதாவது புலம்பெயர்ந்த சமூகங்களின் காலம். அல்லது நாடு கடந்து ஒரு தேசமாக அல்லது தேசத்துக்கு வெளியே ஓர் உளவியல் தேசமாக வாழும் மக்களின் காலம். புலப்பெயர்ச்சி என்பது பொதுவாக இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. முதலாவது போர். இரண்டாவது பொருளாதார காரணங்கள். ஈழத்தமிழர்களின் புலப் பெயற்சி பிரதானமாக இரண்டு அலைகளை கொண்டது. முதலாவது 1983க்கு முந்தியது. பெருமளவிற்கு கல்வி மற்றும் பொருளாதார காரணங்களுக்கானது. இரண்டாவது 83 ஜூலைக்கு பின்னரானது. அது முழுக்க முழுக்க போரின் விளைவு. எனினும் அதற்குள் போரை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு பொருளாதார காரணங்களுக்காக புலம் பெய…

  18. தலைமைகளின் பிளவு தமிழரின் ஆணையையே தோல்வியாக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- யுத்தமும் முரண்பாடுகளும் கொடியவை. அத்துடன் யுத்தத்திற்குப் பிந்தையை அமைதியும் இணக்கமும்கூட கொடியவைதான். 2002இல் மாபெரும் வெற்றிகளைக் குவித்த விடுதலைப் புலிகள் இயக்கம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தது. போருக்குப் பிந்தைய அமைதிக் காலத்தில், அதாவது இரண்டு வருடங்களுக்குள்ளேயே ரணில் – சந்திரிக்கா அரசால், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த கருணா பிரிக்கப்பட்டார். அப்படியானதொரு காலத்தைத்தான் தமிழ் மக்கள் இன்று சந்திக்கிறார்கள் போலவே இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைக்காகவும், சுய கௌரவத்திற்காகவும…

  19. தமிழ் மக்கள் பேரவை : பாதை மாறிய பயணம் அர­சியல் கட்­சி­யாக ஒரு­போதும் மாறாது என்ற முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் தெளி­வான வாக்­கு­று­தி­யுடன் உரு­வாக்­கப்­பட்ட தமிழ் மக்கள் பேர­வையை, எப்­ப­டி­யா­வது தேர்தல் அர­சி­ய­லுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்­பதில், அதன் அர­சியல் பங்­கா­ளிகள் தீவி­ர­மாக இருக்­கி­றார்கள். இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்­பா­ணத்தில் தொடங்­கப்­பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அது கடு­மை­யான சவா­லாக இருக்கும் என்றே கரு­தப்­பட்­டது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அவ்­வாறே கரு­தி­யது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான ஓர் அர­சியல் கூட்­ட­ணியை உரு­வாக்கும் நோக்கில் தான் இ…

  20. ஜெனீவா தீர்மானங்கள் சார்ந்து இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும் (பகுதி I) Photo, Japantimes “இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் ஜெனீவாவுக்கு வர வேண்டும்?” – காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட 2022 செப்டெம்பர் 16ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) தீர்மானம் குறித்த முறைசாரா கலந்துரையாடலில் பேசும்போது இவ்வாறு வினவினார். ஜெனீவாவில் உள்ள பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) தீர்மானத்துக்கு அமைய 2006 இல் அமைக்கப்பட்டது. இது இலங்கை உட்பட 193 ஐ.நா. உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது. இ…

  21. ஏமாற்றத்தின் உச்சக்கட்டம் ரொபட் அன்­டனி தேசிய அர­சி­யலில் நெருக்­கடி நிலை நீடிக்­கின்ற நிலையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் தமது கட்­சி­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­வதை காண முடி­கின்­றது. ஒரு­புறம் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்சி பல பிரி­வு­க­ளாக பிள­வு­பட்டு சித­றிக்­ கி­டக்­கி­றது. அதே­போன்று ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் உள்­ளக ரீதியில் பல்­வேறு நெருக்­க­டி­களை சந்­தித்­தித்து வரு­கி­றது. இவ்­வாறு தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் பாரிய நெருக்­க­டி­க­ளையும் சிக்­கல்­க­ளையும் அர­சியல் ரீதியில் எதிர்­நோக்­கி­யுள்ள நிலையில் எங்கே தமத…

  22. வசந்த முதலிகேயின் யாழ் விஜயம்! நிலாந்தன். கொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார். போராட்டத்தின்போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும்,போராட்டம் நடந்த பகுதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார். அவர் அவ்வாறு கூறுவது தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை பரிகசிப்பதற்காகத்தான். ஆனால் அவர் ஒரு பெரிய உண்மையை விழுங்கிவிட்டு கீழ்த்தரமான இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார். அப்பெரிய உண்மை என்னவென்றால், இலங்கைத்தீவின் இப்போத…

  23. ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு புருஜோத்தமன் தங்கமயில் இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவதற்கான அனுமதி, திங்கட்கிழமை (20) கிடைத்திருக்கின்ற நிலையில், ரணில் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை ரணில், ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டது முதல் மும்முரமாக முன்னெடுத்திருந்தார். குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்று நாட்டின் பொருளாதார சுமையை மக்கள் மீது …

  24. கிழக்கு விவகாரம்: நேர்மையான ஐக்கியத்திற்கு தமிழ்த் தரப்பு தயார் - முஸ்லிம் தரப்பு தயாரா? முத்துக்குமார் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழிகளினால் பெற்றிருக்கின்றது. புதிய முதலமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹாவிஸ் நஸீர் அகமட் பதவி ஏற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதனால் அம்மாவட்டத்திற்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. அம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெமீல் அதற்காக முயற்சி செய்தார். அது பலனளிக்கவில்லை. அவர் சாய்ந்தமருதில் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார். கட்சி நீக்க அறிவிப்பை தலைமை செய்தவுடன் அவர் அடங்கிவிட்டார். முஸ்லிம்களின் அரசியல் மையம் கிழக்கு ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.